ஒரு வலைப்பதிவின் மரணமும்,இன்னொன்றின்...?

ஒரு வலைப்பதிவின் மரணமும்,இன்னொன்றின்...?

சிந்தனை என்ற பெயரில் ஒரு வலைப்பதிவில் நான் பதிவுகளை இட்டு வந்தது வலைப்பதிவர்களில் சிலருக்கு அல்லது சிலருக்காவது நினைவிருக்கலாம். நான் படித்த புத்தகங்கள், கட்டுரைகள் குறித்த வலைப்பதிவு அது.பின்னர் மேய்ச்சல் என்ற பெயரில் கண்ணோட்டம் பதிவில் கட்டுரைகளுக்கு சுட்டிகளை கொடுத்து வந்தேன்.சிந்தனை வலைப்பதிவினை தூசி தட்டி, புதுப்பித்து புதிதாக இடுகைகள் இட நினைத்தேன். அப்போது அடப்பலகையை மாற்ற நினைத்து நான் செய்த சில சொதப்பல்களால் வலைப்பதிவே போய்விட்டது.தவறு என்னுடையது, பிளாக்கரைச்சொல்லிக் குற்றமில்லை. இப்போது முடியாவிட்டாலும் சில வாரங்கள் கழித்தாவது மீண்டும் சிந்தனைஎன்ற பெயரில் அல்லது வேறொரு பெயரில் நான் பரிந்துரைக்கும்/படிக்கும்/படித்த கட்டுரைகள், நூல்கள் குறித்த குறிப்புகள்,சுட்டிகளை தரும் வலைப்பதிவினை துவங்க இருக்கிறேன்.

Labels:

1 மறுமொழிகள்:

Blogger Boston Bala மொழிந்தது...

உங்களின் பதிவுகளை எங்காவது (wordpress.com) மாதிரி backup எடுத்து வைத்து விட்டு, விளையாடுங்களேன் :-)

11:45 PM  

Post a Comment

<< முகப்பு