காவிரிப் பிரச்சினையும், தேசிய இனங்களும்

காவிரிப் பிரச்சினையும், தேசிய இனங்களும்

காவிரி நதி நீர்பங்கீடு குறித்த பிரச்சினையை இரு தேசிய இனங்களுக்கிடையே உள்ள பிரச்சினையாக அல்லது முரண்பாடாக சித்தரிப்பது சரியல்ல.திருமாவளவன் (குமுதத்திலும்),பூங்காவின் இந்தவாரத் தொகுப்பிலும் தேசிய இனக் கண்ணோட்டத்தில் இப்பிரச்சினைவிவாதிக்கப்பட்டுள்ளது.

இதை இந்தியக் குடியரசில் உள்ள இரு மாநிலங்களுக்கிடையேயானநதி நீர்பங்கீடு குறித்த ஒரு பிரச்சினையாகக் காண்பதே தீர்வினை அடையவும், குழப்பங்களை குறைக்கவும் உதவும். இந்தியாவில் பல மாநிலங்களுக்கிடையே நதி நீரினைப் பகிர்ந்து கொள்வதில் பிரச்சினைகள் உள்ளன.ஆந்திராவிற்கும், கர்நாடாகாவிற்கும் கிருஷ்ணா நதி நீரினைப் பகிர்ந்துகொள்வதில் பிரச்சினை இருக்கிறது. பல ஆறுகள் இரண்டிற்கும் மேற்பட்ட மாநிலங்களின்வழியே ஒடிச்சென்று கடலில் கடக்கின்றன. உதாரணம் நர்மதா.ஆனால் இத்தகைய பல ஆறுகளின் நதி நீர்களைப் பகிர்ந்து கொள்வது பிரச்சினையாக இல்லை.

இந்தியாவில் தேசிய இனம் என்ற கோட்பாட்டினை பயன்படுத்துவதில் பல குழப்பங்கள் உள்ளன. கர்நாடகாவில் கன்னடம் தவிர பிற மொழிகளை தாய்மொழிகளாகக் கொண்டவர்களும் உள்ளனர்,இந்தி பேசுவோர், தாய் மொழியாகக் கொண்டவர்கள் பல மாநிலங்களில் உள்ளனர்.இந்தி பெருவாரியாகப் பேசப்படும்/புழக்கத்தில் உள்ள மாநிலங்களில் மைதிலி, போஜ்புரி போன்றமொழிகளும் பேசப்படுகின்றன.வங்க மொழியைத் தாய் மொழியாகக் கொண்டோர் மேற்கு வங்கத்திலும் உள்ளனர், வங்க தேசத்திலும் உள்ளனர். தேசிய இனம் என்று சொல்லும் போதுஇனம் என்ற ஒன்று தேசியத்துடன் ஒட்டிக் கொள்கிறது. ஒரே தேசத்தில் ஒரே இனத்தினைச் சேர்ந்தவர்கள் மொழி,பண்பாட்டு ரீதியாக வேறுபட்டாலும் தேசியம் என்ற அடையாளத்தில்,குடியுரிமை என்பதைக் கொண்டு ஒரே மைய அரசின் கீழ் பல்வேறு மாநிலங்களில் ஒரு அரசியல்சட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு வாழ முடியும். இந்தியாவில் இதுதான் நிலவுகிறது.

இந்த நதி நீர்ப்பங்கீட்டுப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும், பிரச்சினை சிக்கலாக இருந்தாலும்கூட. தேசிய இனம் என்ற கண்ணோட்டம் தீர்வு தராது, தேவையற்ற குழப்பத்தினையும், பரஸ்பரபகைமையை வளர்க்க உதவும். இந்தியாவில் வளங்கள் இந்திய குடியரசிற்கு , இயற்கை வளங்கள்மீதான நிரந்தர இறையாண்மை என்ற கோட்பாட்டின் கீழ், இந்தியக் குடியரசின் கட்டுப்பாட்டில்இருப்பவை. எந்த மாநிலத்தில் ஒரு நதி உற்பத்தியாகிறதோ அல்லது எவற்றின் வழியே அது பாய்கிறதோ அம்மாநிலங்களுக்கு அந்த நதி நீர் முற்றிலும் சொந்தம் என்று சட்டப்படி இல்லை.

தேசிய இனங்களின் உரிமை என்று மூலவளங்கள் மீதான இறையாண்மையைப் புரிந்து கொண்டால் அது சரியல்ல. ஏனெனில் இந்திய அரசியல் சட்டம் எங்கும் தமிழ் தேசிய இனம், கன்னட தேசியஇனம், தெலுங்கு தேசிய இனம், மராட்டி(ய) தேசிய இனம் என்று எதையும் அங்கீகரிக்கவில்லை. இப்போதிருக்கிற அரசியல் அமைப்புச் சட்டம், சட்ட விதிகள், தாவாக்களை தீர்வு காணும்முறைக்ளைக் கொண்டு பல நதி நீர் பங்கீடு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன, பல பெரியநதி நீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே இந்தியாவில் இப்பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்று கருத முடியாது. இதைக் கூடப் புரிந்து கொள்ளாமல் தேசியஇனங்கள் குறித்த கோட்பாட்டின் மூலம் இதை தீர்க்க முடியும் என்பது வீண் கனவு.

தமிழ்த் தேசியம், தமிழ் தேசிய இனம் என்று பேசுபவர்கள் பதற்றத்தினை அதிகரிக்காமல்இருந்தால் போதும்.தேசிய இனம் என்பதை இங்கு புகுத்தி குட்டையை குழப்பாமல் இருந்தால்போதும்.

6 மறுமொழிகள்:

Blogger சாணக்கியன் மொழிந்தது...

ம்... சரிதான்.
ஆனால் இன்னொரு விசயம், இதில் மத்திய அரசை மட்டும் நம்பிப் பயனில்லை. அவர்கள் காவிரி நீர் தரமறுத்தல் நாம் வேரு ஏதாவது ஒன்றை மறுக்கவேண்டும்...

9:15 AM  
Blogger ஜடாயு மொழிந்தது...

ரவி,

பூங்கா தொகுப்பாசிரியரின் அந்தக் கருத்தைப் பார்த்ததும் இதே தான் நான் சொல்ல எண்ணியது. உடனடியாகப் பதிவிட்டதற்கு நன்றி.

மேலும், "இது காலகாலமாக வரலாற்றில் வந்து கொண்டிருக்கும் தேசிய இன மோதல்" என்றெல்லாம் பூங்கா எழுதியிருப்பது விஷமத் தனமானது. இன்றைய கர்னாடகப் பகுதியை அப்போது ஆண்ட மன்னர்கள் கட்டிய சிறுசிறு அணைகள் தங்கள் பகுதிகளில் நீர்ப்பாசனத்திற்கு ஏற்பாடு செய்யத் தானே அன்றி வேறு எந்த உள்நோக்கத்துடனும் அல்ல.

19ஆம் நூற்றாண்டில் பொறியியல் மேதை சர், எம். விஸ்வேஸ்வரய்யாவின் வடிவமைப்பில் கிருஷ்ணராஜ சாகர் அணை உருவானது தான் கர்நாடகத்தின் முதல் பெரிய அளவிலான அணைக் கட்டு முயற்சி. அப்போது கூட இது பிரசினையே அல்ல. மக்கள் தொகைப் பெருக்கம், பெருநகரங்களின் பிரமாண்ட வளர்ச்சி காவிரி நீரை எதிர்பார்த்திருத்தல், ஒவ்வோர் ஆண்டும் பூச்சாண்டி காட்டும் பருவமழைகள் இவை தான் இந்தப் பிரசினையைப் பெரிதாக்கி உள்ளன.

இந்திய தேசியம், அரசியல் சட்டம் மற்றும் இந்திய நீதித்துறை இந்த சவாலான பங்கீட்டு பிரசினையைத் தீர்த்துவைக்கும் என்ற நம்பிக்கை இரு மாநில மக்களூக்கும் உள்ளது.

12:09 PM  
Blogger க.அருணபாரதி மொழிந்தது...

வணக்கம் தோழரே...

தாங்கள் தேசிய இனப் பார்வையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணக் கூடாது என்பதை நான் மறுக்கிறேன்...

ஐயாயிரம் வருடமாக தமிழர்கள் வாழ்ந்த நம் தமிழ் மக்கள் சுதந்திரம் பெறுவதற்காக இணைந்து போராடி பின் பிரியாமல், வெறும் 200 ஆண்டுகளாக தான் 'இந்தி' ஆதிக்க இந்திய தேசிய இனத்திற்க்குள் அடைபட்டு கிடக்கிறான் என்கிற உண்மையை தாங்கள் ஏற்கிறீர்களா ?

'இந்தியன்' என்ற இனம் என்றாவது இருந்தததுண்டா ?? அவருக்கு என்ன மொழி ? என்ன பண்பாடு ? தேசிய இனங்களைப் பற்றி படிக்கும் போது எங்காவது இந்தியன் என்று படித்திருக்கீறீரா ? இந்தியா ஒரு துணைக் கணடம் அவ்வளவே...

இந்தியன் என்று தமிழனையும் மற்ற தேசிய இனத்தவரையும் எப்படி அழைக்க முடியும்..? மொழி, பண்பாடு போன்ற அனைத்திலும் வேறுபடுகிறார்கள்.. ஆனாலும் அவர்களை சுரண்ட வடநாட்டு இந்தி ஆதிக்க கும்பல் கண்டுபிடித்த ஆயுதம் தான் இந்தியன் என்கிற சொல்லாடல்..

தமிழர்கள் தனித்த தேசிய இனம்.. அவர்களை இல்லாத இந்திய தேசிய இனத்திற்குள் அடைப்பது மிகப்பெரும் தவறு.. தமிழர்கள் பெற்றிருப்பது வெறும் இந்தியத் துணைக்கண்டத்தின் குடியுரிமை தான்..

தமிழர்கள் மராட்டியத்தில் கூலி வேலைக்கு சென்ற போது மராட்டியர்கள் அடித்து விரட்டினர்...
.அவர்கள் மும்மையில் எந்நிலைமையில் வாழ்கிறார்கள் என்று உங்களுக்கு தெரிந்த மும்பை வாசிகளிடம் விசாரிக்கவும்.. அங்கிருந்து இங்கு பிழைக்க வந்த மும்பை மராட்டிய குசராத்தி சேட்டுகள் இங்கு எப்படி வாழ்கிறார்கள் என ஒப்பிட்டு பார்க்கவும்...

இரண்டும் இந்தியா தானே... அவர்கள் ஏன் எங்களை விரட்ட வேண்டும்.. அவர்களிடம் இல்லாத தேசிய உணர்வு தமிழர்களிடம் மட்டும் இருக்க வேண்டும் என்று நினைப்பது அடிமைத் தனமே அன்றி வேறில்லை...

கன்னடர்களுக்கும் தெலுங்கர்களுக்கும் மலையாளிகளுக்கும் இருக்கின்ற உணர்வுகள் சிறிதும் இன்றி தமிழன் எல்லோரிடத்தும் அடிபட்டு வாழ்வதை நீங்கள் எந்த கல்நெஞ்சத்தோடு ஏற்கிறீர்கள் ?? ஒருவன் மட்டும் அடிபடுவது தான் இந்திய தேசியமா ?? உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுதலித்த கேரள குர்னாநடக அரசுகளை தண்டிக்க வக்கற்ற மத்திய 'இந்தி'ய அரசு எந்த முகத்தை வைத்துக் கொண்டு நெய்வேலி மின்சாரத்தை சுரண்டி மற்ற மாநிலங்களுக்கு விற்கிறது ,??

கொடுங்கள் என்று உரிமையைக் கேட்க அச்சப்படும் தமிழர்கள் இருக்கும் வரை உரிமைகளை நாம் இழந்து கொண்டு தானிருப்போம்..
இதற்கு தாங்கள் விதிவிலக்கல்ல...

மத்திய அரசு என்கிற பெயரால் மாநிலங்களை சுரண்டி வாழுவதை முதலில் தடை செய்ய வேண்டும்.. மாநிலங்களுக்கு தம்மைத் தானே ஆளும் தன்னாட்சி அளிக்க வேண்டும்.. தமிழைக் கல்வி மொழியாக்க இந்திக் காரனிடம் தான் கையேந்தவிருக்கிறது.. முதலில் உரிமையை மாநிலங்களுக்கு கொடுக்கட்டும்..

தமிழக மின்சாரம் தன் கட்டுப்பாட்டில் இருந்தால் நாம் ஏன் நீருக்கு கையேந்த வேண்டும்.....

4:52 AM  

தமிழக மின்சாரம் தன் கட்டுப்பாட்டில் இருந்தால் நாம் ஏன் நீருக்கு கையேந்த வேண்டும்.....?

4:56 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

Indian the word came from people live near Indus river.

There is no relationship with Hindi. MR.க.அருணபாரதி,donot talk in Thiravida tamilan view. If you are not like to be indian,, then donot expect anything free from other states...You can trade for water.

If you are Indian, you have a rights to talk. There is no north indian invloved in Cavery Water dispute. Most of the southern states have water problems so this problems arises. You want talk about "Hindi-Tamil" So try to use this as option.

yes we have a rights for Cavery, If no politicians, agriculture people can fix this issues...Now its completly politized like you people (utilizing situations to favour of talking...like Hindi-Tamil, annada-Tamil, North South etc)

Nothing else to say...

4:57 PM  
Blogger ¸ñ½ý ÌõÀ§¸¡½õ மொழிந்தது...

"தமிழ் தேசீய இனம்" என்று சொல்கிறீர்களே அதற்கான விஞ்யான-பகுத்தறிவு அடிப்படை என்ன. இது ஒரு 'இனம்' எங்கே யாரால் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. அப்படியானால் 'திராவிட இனம்' என்னவாயிற்று?

சரி, நீங்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்வோம். ஆறு கோடி தமிழர்களின் இதய நாதம், முத்தமிழ் வித்தகர், தமிழாகவே வாழ்பவர் என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிற, மத்திய அரசையே வழி நடத்தும், கட்டுப்படுத்தும் சக்தியுள்ள திரு. கருணாநிதி ஏன் காவேரி தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடும்படி இன்று வரை பேச்சே எடுக்கவில்லை? தமிழர்களின் தளபதி மானமிகு. வீரமணியும் மற்றும் உள்ள தமிழ் தேசீய இன வாதிகளும் இது குறித்து ஆறு கோடி தமிழர்களின் 'இதய நாதத்தை' மீட்டவில்லையே ஏன்.

பெங்களுரு சென்று ஞானஸ்நானம் பெற்று 'இனம்' மாறி விட்டார்களோ!

இது இப்படியிருக்க, மாற்றானின் சதி என்பது போல் பேசுகிறீர்களே என்ன 'பிராண்ட்' பகுத்தறிவு இது?

மராட்டியத்தில் தமிழர்கள் துரத்தப்படுகிறார்கள் என்றால் இங்கு மலையாளிகளின் 'டீ' கடைகளை நொறுக்கினீர்களே, இன்றளவும் வடவர்கள் இங்கே சுரண்டுகிறார்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே, இது என்ன மனப்பான்மை.

அது போகட்டும், தமிழர்கள் பர்மாவில் போய் என்ன செய்தார்கள்,எப்படி வாழ்ந்தார்கள், ஏன் துரத்தப்பட்டார்கள்?

சுயநலமும் சுரண்டல் எண்ணமும் மனித குலத்தின் பொது சொத்து, எந்த இனத்தினுடைய பிரத்தியேக சொத்தல்ல என்று உங்கள் பகுத்தறிவுப் பகலவர்கள் உங்களுக்கு சொல்லித்தரவில்லையா!

கண்ணன்கும்பகோணம்.

11:10 PM  

Post a Comment

<< முகப்பு