எதேச்சதிகாரத்திற்கு தடையிடும் ஒரு தீர்ப்பு

எதேச்சதிகாரத்திற்கு தடையிடும் ஒரு தீர்ப்பு

ஒன்பதாம் அட்டவணையில் சேர்க்கப்பட்ட சட்டங்கள் செல்லுமா, அத்தகைய சட்டங்களை பரிசீலிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டா என்பது உட்பட சில முக்கியமான கேள்விளுக்கு உச்சநீதி மன்றம் தன் சமீபத்திய தீர்ப்பில் பதில் தந்துள்ளது.
(Civil Appeal Nos. 1344-45 of 1976 with WP (C) Nos. 242 of 1988, 751 of 1990, 259, 454 and 473 of 1994, 238 of 1995, 35 of 1996 and 408/03, CA Nos. 6045 and 6046 of 2002 and SLP (C) Nos. 14182, 14245, 14248, 14249, 14940, 14946, 14947, 14949, 14950, 14965, 14993,15020, 15022, 15029, 26879, 26880, 26881, 26882, 26883, 26884, 26885 and 26886 of 2004Decided On: 11.01.2007
Appellants: I.R. Coelho (Dead) By LRs.
Vs.
Respondent: State of Tamil Nadu and Ors.
Hon'ble Judges: Y.K. Sabharwal, C.J., Ashok Bhan, Arijit Pasayat, B.P. Singh, S.H. Kapadia, C.K. Thakker, P.K.Balasubramanyan, Altamas Kabir and D.K. Jain, JJ.)

இத்தீர்ப்பு முற்றிலும் புதிதான புரட்சிகரமான கருத்துக்களை கூறவில்லை. ஏற்கனவே தரப்பட்டுள்ள தீர்ப்புகளில் கூறப்பட்டவற்றின் அடிப்படையில் பாராளுமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தின் எல்லை, அரசியல் சாசனத்தின் அடிப்படை அமைப்பு/அடிப்படை அம்சங்கள், ஒன்பதாம் பிரிவில் சேர்க்கப்பட்டதாலேயே அச்சட்டங்கள் நீதிமன்றப் பரிசீலனைக்கு அப்பாற்பட்டவையா, இல்லையா என்பவை குறித்து ஒரு தெளிவான தீர்ப்பினை ஆணித்தரமான வாதங்களுடன் தந்துள்ளது. கிட்டதட்ட 34 பக்கமே உள்ள இத்தீர்ப்பு பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது என்ற விதத்திலும், 9 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் ஏகமனதாக இதை வழங்கியுள்ளது என்பதாலும் ஒரு மைல்கல்லாகக் கருதத்தக்கது. இது இந்திய குடிமக்களின் முக்கியமான அடிப்படை உரிமைகளை சட்டங்கள் மூலம் பாராளுமன்றம் குறைக்க,இல்லாமல் ஆக்க,சிதைக்க முயன்றாலும் அதை உச்சநீதி மன்றம் ஏற்றுக்கொள்ளும் என்று கருதிட இடமில்லை என்பதை தெளிவாக்கியிருக்கிறது.

கேசவானந்தபாரதி வழக்கில் முன் வைக்கப்பட்ட அடிப்படை அமைப்பு/அம்சங்கள் குறித்த கருத்து பின்னர் பல வழக்குகளில் உறுதி செய்யப்பட்டு இத்தீர்ப்பில் இன்னும் தெளிவாக வலியுறுத்தப்படுகிறது. சுருக்கமாகக் கூறினால் அரசியல் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வர, சட்டங்கள் இயற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.ஆனால் அரசியல் சாசனத்தின் அடிப்படை அமைப்பினை/அம்சங்களை குறைக்க, சிதைக்க,நீக்க, வலுவிழக்கச் செய்ய பாராளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. ஏகமனதாக பாராளுமன்றம் தீர்மானித்தாலும் அந்த அதிகாரம் கிடையாது. வேறு வார்த்தைகளில் சொன்னால் (உபேந்திர பக்ஷி கூறியதை அடியொற்றி) அரசியல் சட்டத்தில் மாறுதல் கொண்டு வரலாம், அரசியல் சட்டத்தினையே மாற்றும் அதிகாரம் இல்லை. கேசவானந்த பாரதி வழக்கில் இந்த அடிப்படை அம்சம் கருத்தாக்கம் முதன் முதலில் உச்ச நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த விதத்தில் கே.கே.நம்பியார், நானி பல்கிவாலா ஆகியோர் முன்வைத்த வாதங்கள் சிறப்பானவை. இந்திய அரசியல் சட்டத்தினை பாராளுமன்றம் உருவாக்கவில்லை, அதை உருவாக்கியது அரசியல்சாசன வரைவுக் குழு. இந்த அரசியல் சாசனம் பாராளுமன்றத்தின் அதிகாரங்களை வரம்பற்றது என்றோ, பாராளுமன்றம் எதை நிறைவேற்றினாலும் அதை நீதிமன்றங்கள் ஏற்க வேண்டும் என்றோ கூறவில்லை. மாறாக சட்டங்கள் செல்லதக்கவையா என்பதை தீர்மானிப்பது, அரசியல் சாசனப் பிரிவுகளை பொருள் கொள்ளுவது ஆகியவற்றில் இறுதி அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கே என்று கூறியிருக்கிறது. மேலும் அடிப்படை உரிமைகளைப் பொருத்த வரை அவை மீறப்படும் போது நீதிமன்றங்களை அணுகி நியாயம் கேட்கும் உரிமையையும் அது மக்களுக்கு தந்துள்ளது. எனவே பாரளுமன்றம் அல்லது நிர்வாக அமைப்பிற்கு கட்டற்ற அதிகாரங்கள் உண்டு என்ற அடிப்படையில் அரசியல் சட்டம் அமையாத போது, பாராளுமன்ற ஜனநாயகம் நிலவினாலும் அது வரையரையற்றது அல்ல. இந்த அடிப்படையில் நாம் நோக்கினால் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் அரசியல் சாசனம் தந்துள்ள உரிமைகளுக்கும், பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் வலுச்சேர்ப்பதாக அமைவதைப்புரிந்து கொள்ள முடியும்.
அடிப்படை அம்சங்களை எவை என்பதையும் தீர்ப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. உதாரணமாக மதசார்பின்மை,அடிப்படை உரிமைகள், நீதிமன்ற ஆய்வு, கூட்டாட்சி (FEDERAL STRUCTURE) அடிப்படை அம்சங்களாக ஏற்க்கப்பட்டுள்ளன. அடிப்படை அம்சங்கள் என்பவை இவைதான் என்று பட்டியல் தருவதை விட அக்கருத்தின் முக்கியத்துவம் என்ன என்பதை கவனிக்க வேண்டும். இந்த அம்சங்களுக்கு பாதகம் ஏற்பட்டால் அரசியல் சாசனத்தின் அடிப்படையே சேதமடைந்து விடும் என்பதால் இவற்றை பாதுக்காக்க வேண்டும். உதாரணமாக இந்திரா காந்தி அரசு சில அரசியல் சட்டத்திருத்தம் மூலம் சில பதிவிகளில் இருப்பவர்களின் தேர்தல் குறித்து ஆராயக் கூடாது என்று ஒரு மாற்றத்தினைக் கொண்டு வந்தது. இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் இப்படி செய்வது அரசியல் சட்டத்தின் அடிப்படை அமைப்பினை மாற்றுவதாகும் என்று கூறி விட்டது. இப்படி ஒவ்வொரு அரசும் நினைத்த படி அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்து கொண்டே போய் அதை நீதிமன்றங்களும் ஏற்றுக் கொண்டால் என்ன ஆகும். ஒரு நாள் பாராளுமன்றத்தில் உச்ச நீதிமன்றமே தேவையில்லை என்று கூட அரசியல்சட்டத்திருத்தம் கொண்டு வரப் படலாம். ஒரு அரசு மிருகப் பெரும்பான்மையினைக் கொண்டு மதச்சார்பின்மை என்பதை நீக்கி ஒரு மதத்தினை அல்லது கருத்தியலை தேசிய மதமாக அல்லது கருத்தியலாக அறிவிக்கலாம். வேறொரு அரசு தேர்தல் அமைப்பினை, முறையை முற்றிலுமாக மாற்றி அமைக்கலாம். இன்னொரு அரசு மத்திய அரசு,மாநில அரசுகள் என்பதை மாற்றி வலுவான மத்திய அரசு, அதன் கீழ் அதால் நிர்வகிக்கப்படும் மாநிலங்கள் என்று அரசியல் சட்டத்திருத்தம் கொண்டு வரலாம். இத்தகைய ஆபத்துக்களைத் தவிர்க்க, அரசியல்சாசனத்தில் கொண்டு வரப்படும் மாற்றங்களின் வரையரைகளை வகுப்பது தேவை. இதைத்தான் உச்ச நீதிமன்றம் செய்துள்ளது. அவசர நிலையின் போது அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டதையும், சகட்டு மேனிக்கு அரசியல் சாசனத்தினை மாற்ற இந்திரா காந்தி அரசு முயன்றதையும் நாம் மறக்ககூடாது. அப்போது அடிப்படை உரிமைகள் குறித்து உச்சநீதி மன்றம் தந்த தீர்ப்பு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது சரிதான். அதே சமயம் அரசின் அனைத்து சட்ட மீறல்களையும் உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்து, தீர்ப்புகள் வழங்கியது. 1977க் குப்பின் அடிப்படை உரிமைகள் குறித்து உச்ச நீதிமன்றம் தந்த தீர்ப்புகள் அடிப்படை உரிமைகளின் வரம்பினையும், குடிமக்கள்உரிமைகளையும் விரிவாக்கின. குறிப்பாக மேனகா காந்தி வழக்கில் தந்த தீர்ப்பு அரசு தன்னிச்சையாக செயல்படும் அதிகாரத்தினை கேள்விக்குட்டபடுத்தியது. கடந்த (கிட்டதட்ட) முப்பதாண்டுகளாக அடிப்படை உரிமைகள் குறித்து தரப்பட்டுள்ள தீர்ப்புகள் தகவல் அறியும் உரிமை உட்பட பலவற்றில் புதிய பாதைகளைக் காட்டியுள்ளன, புதிய வெளிச்சத்தினைப் பாய்ச்சியுள்ளன. ஆகவே அரசியல் சாசனம் தந்த அடிப்படை உரிமைகளை இன்னும் வலுவுள்ளவையாகவும், விரிவானவையாகவும் ஆக்கிட உச்ச நீதிமன்றம் உதவியுள்ளது. இன்று அடிப்படை உரிமைகள் அரசு போடும் பிச்சையல்ல, குடிமக்களுக்கு அரசியல் சாசனமும், மனித உரிமைகள் குறித்த சர்வதேசபிரகடனங்கள்,ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் தந்துள்ள உரிமைகள். இவற்றை பாராளுமன்றம் குறைக்க, பறிக்க, சிதைக்க உரிமை தருவது எந்த விதத்திலும் ஏற்க இயலாத ஒன்று. எனவே மனித உரிமைகள், அடிப்படை உரிமைகளில் உண்மையாக அக்கறையுடையவர்கள் இந்த தீர்ப்பினை பாராட்டுவார்கள்.

9ம் அட்டவணையில் சட்டங்களை சேர்க்கும் அதிகாரம் உண்டு, அதற்கு வகை செய்யும் 31A,B பிரிவுகள் செல்லும், ஆனால் அந்த சட்டங்கள் செல்லத்தக்கவையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு உண்டா, அந்த சட்டங்கள் செல்லுமா என்பதற்கு என்ன உரைகல், அப்படி செல்லாது என்றால் அவை மீண்டும் ஒன்பதாம் அட்டவணையில் சேர்க்கப்பட்டால் நீதிமன்ற பரிசீலனை அவற்றிற்கு கிடையாது என்று வாதிட முடியுமா. இது போன்ற கேள்விகளுக்கும் இத்தீர்ப்பு விடையளிக்கிறது.
இத்தீர்ப்பு கூறுகிறது கேசவானந்தபாரதி வழக்கில் தீர்ப்புக் கூறப்பட்ட பின் ஒன்பதாம் அட்டவணையில் சேர்க்கப்பட்ட சட்டங்களை ஆராய்ந்து செல்லுமா, செல்லாத என்று தீர்ப்பளிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உண்டு. அவை ஒன்பதாம் அட்டவணையில் சேர்க்கப்பட்டவை என்பதாலேயே அவை நீதிமன்ற ஆய்விற்கு அப்பாற்பட்டவை அல்ல. நீதிமன்றம் செல்லாது என்று தீர்ப்பளித்த சட்டங்களை இவ்வட்டணையில் சேர்த்தாலும் அவற்றை பரிசீலிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உண்டு. மேலும் அவ்வாறு ஆராயும் போது அச்சட்டங்கள் அரசியல் சாசனத்தின் பிரிவுகள் தரும் அடிப்படை உரிமைகளை பாதிக்கின்றவா, அவ்வாறு பாதிப்பது அவ்வுரிமைகளை குறைக்கிறதா, அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சத்தினை பாதிக்கிறதா என்பதை நீதிமன்றம் கருத்தில் கொண்டு ஆராயும்.

(The object behind Article 31B is to remove difficulties and not to obliterate Part III in its entirety or judicial review. The doctrine of basic structure is propounded to save the basic features. Article 21 is the heart of the Constitution. It confers right to life as well as right to choose. When this triangle of Article 21 read with Article 14 and Article 19 is sought to be eliminated not only the 'essence of right' test but also the 'rights test' has to apply, particularly when Keshavananda Bharti and Indira Gandhi cases have expanded the scope of basic structure to cover even some of the Fundamental Rights. The doctrine of basic structure contemplates that there are certain parts or aspects of the Constitution including Article 15, Article 21 read with Article 14 and 19 which constitute the core values which if allowed to be abrogated would change completely the nature of theConstitution. Exclusion of fundamental rights would result in nullification of the basic structure doctrine, the object of which is to protect basic features of the Constitution as indicated by the synoptic view of the rights in Part III.)

சுருக்கமாகக் சொன்னால் இந்தப் பிரிவுகள் தரும் அடிப்படை உரிமைகள் அதி
முக்கியமானவை என்பதால் அவற்றை குறைக்கும், செல்லத்தகாதவை, பறிக்கும், வலுவிழக்கும் எந்தச் சட்டமும் ஒன்பதாம் அட்டவணையில் இருந்தாலும் நீதிமன்றம் அவற்றை ஆராய்ந்து தீர்ப்பளிக்க உரிமை உண்டு. இந்த அடிப்படையில் இந்தச சட்டங்கள் குறித்து விசாரிக்கயுள்ள மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச எப்படி அதை அணுக வேண்டும் என்பதையும் இத்தீர்ப்பு கூறுகிறது.

எனவே இந்த தீர்ப்பினை இட ஒதுக்கீடு குறித்த சர்ச்சையின் அடிப்படையில் புரிந்து கொள்வதை விட ஒரு பரந்த அடிப்படை உரிமைகள், அரசியல் சாசனக் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்வது இன்னும் பொருத்தமாகஇருக்கும்.

பிற்குறிப்புகள் :
1, இயன்ற அளவிற்கு எளிமையாக,சுருக்கமாக இதை எழுத முயன்றுள்ளேன். அதனால் அடிப்படை அமைப்பு என்ற கருத்து குறித்தும், அரசியல் சாசனத்தின் பல்வேறு பிரிவுகள், தொடர்புடைய வழக்குகள் குறித்தும் இதில் விரிவாக எழுதவில்லை. தீர்ப்பு இணையத்தில்முழுதுமாக கிடைக்கிறது அவுட்லுக் வார இதழின் இணையதளத்திலும் (www.outlookindia.com), http://judis.nic.in/supremecourt/qrydisp.asp?tfnm=28469 என்ற முகவரியிலும். அவுட்லுக் தளத்தில் பகுதிகளாக அச்சிட்டு படிக்க வசதியாக இருக்கிறது. ttp://judis.nic.in/supremecourt/qrydisp.asp?tfnm=28469 என்ற முகவரியில் தீர்ப்பு முழுதாக இருந்தாலும் அதை அச்சிட்டு படிப்பது எளிதாக இல்லை. தீர்ப்பு குறித்த எதிர்வினைகளின் அடிப்படையில் இதைப் புரிந்து கொள்வதை விட தீர்ப்பினை படித்துவிடுவதே நல்லது.

2, இந்த தீர்ப்பிற்கும், இட ஒதுக்கீடு குறித்த வழக்குகள்,சட்டங்கள் குறித்து வெளியான கருத்துகளில் பல தீர்ப்பு குறித்து தவறான புரிதலையே தருகின்றன. வீரமணி தமிழக 69% இட ஒதுக்கீடு சட்டம் 31சி பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டது, இத்தீர்ப்பு 31பி குறித்து கூறுகிறது என்ற வாதத்தினை முன் வைத்துள்ளார். அவர் விரிவாக எழுதினால் பதில் தரலாம். அடிப்படை உரிமைகளையும், வழிகாட்டு நெறிகளையும் ஒத்திசைவாக படித்துப் பொருள் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. வழிகாட்டு நெறிகள் என்ற பெயரில் அடிப்படை உரிமைகளை அர்த்தமற்றதாக்கும் அல்லது வெகுவாக பாதிக்கும் சட்டங்கள் 9ம் அட்டவணையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நீதிமன்ற ஆய்விற்குட்பட்டவையே. மேலும், 31 சி பிரிவு தமிழக 69% இட ஒதுக்கீட்டு சட்டத்திற்கு இதிலிருந்து விதிவிலக்கோ அல்லது பாதுகாப்போ பெற்றுத் தராது. வழிக்காட்டு நெறிகளை நிறைவேற்றக் கோரி வழக்குத் தொடர்ந்தாலும் அவற்றை நிறைவேற்றும் வண்ணம் சட்டம் இயற்ற வேண்டும் அல்லது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிடும் என்று எதிர்பார்க்க முடியாது. பொது சிவில் சட்டம் குறித்த வழக்குகள் இதை தெளிவாக்கியுள்ளன. 69% இட ஒதுக்கீடு குறித்த சட்டங்களோ அல்லது இட ஒதுக்கீட்டு சட்டங்களோ நீதிமன்றங்களின் ஆய்விற்கு அப்பாற்பட்டவை என்று இனியும் கூறிக் கொண்டிருக்க முடியாது. அவ்வாறு செய்யும் முயற்சிகளுக்கும் இத்தீர்ப்பு சாவு மணி அடித்திருக்கிறது.

தீர்ப்புக்குத் தீர்ப்பு வழங்கப்படும்!


கீழே விடுதலையில் வெளியான தலையங்கம். இதை எழுதியவருக்கு இந்திய அரசியல் சட்டம் குறித்து எதுவும் தெரியாதா, நீதித்துறை என்பது அரசின் அங்கமல்ல, நீதிபதிகள் வெறும் சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் என்று அரசியல் சட்டம் கருதவில்லை என்பதெல்லாம் தெரியாதா இல்லை தெரிந்து கொண்டும் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது. விடுதலையைப்பொறுத்த வரை இட ஒதுக்கீட்டு விஷயத்தில் அறிவார்ந்த நேர்மை என்பது கொஞ்சம் கூடக் கிடையாது. 1973ம் ஆண்டுதான் கேசவானந்தா பாரதி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. எனவே தான் அந்தத் தேதி முக்கியமாகிறது. அதற்கு முன்,பின் என்று பிரித்து பார்க்க வேண்டியதிற்கு. இது மிகவும் அடிப்படையான ஒன்று. இதை விடுதலை எப்படித் திரிக்கிறது என்பதைப் படித்துப் புரிந்து கொள்ளுங்கள். அரசியல் சட்டம் இட ஒதுக்கீடு குறித்து வரம்பு விதிக்கவில்லையாம்.ஆனால் அது இட ஒதுக்கீட்டினை எந்தப் பிரிவின் கீழ் வைத்திருக்கிறது, அது குறித்து என்ன கூறியிருக்கிறது என்பதை முழுமையாக வெளியிடும் தைரியமும், நாணயமும் விடுதலைக்கு உண்டா.இட ஒதுக்கீடு குறித்த விவாதத்தின் போது அதன் வரம்பு குறித்து அம்பேத்கர் கூறியது என்ன என்பதை விடுதலைவெளியிடுமா. இந்த தீர்ப்பினை விமர்சிக்கட்டும். தீர்ப்பினைப் புரிந்து கொண்டு விமர்சிக்கட்டும். தீர்ப்பினை, அது பதிலளித்துள்ள கேள்விகளைப் புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொண்டாலும் இது போல் எழுதும் விடுதலைக்கு சாதியை மீறி சிந்திக்கத் தெரியாது என்பது இன்னொரு முறைநிரூபணமாகியுள்ளது. ஒய்வு பெறும் முன் தான் விசாரித்த வழக்குகளின் தீர்ப்பினை வழங்கிவிட்டு ஒய்வு பெறுவது மரபு. இவ்வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பரில் நடந்த வாத-பிரதிவாதங்களுக்குப் பின் ஜனவரியில் தீர்ப்பு வந்துள்ளது. இதைக் கூட திரிக்கும் விடுதலையின்கேவலமான புத்தியை என்னவென்று சொல்வது. சுருக்கமாகச் சொன்னால் இந்தப் பகுத்தறிவாதிகளுக்கும் பகுத்தறிவிற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. இவர்களை பகுத்தறிவாதிகள் என்பது பகுத்தறிவிற்கு அவமானம் செய்வதாகும்.
விடுதலையின் ஆத்திரத்திற்கு 9 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச ஏகமனதாக தீர்ப்பளித்துள்ளதாகும் ஒரு முக்கிய காரணமென்று தோன்றுகிறது. அந்த தீர்ப்பினை சட்ட அறிவினையும், அரசியல் சட்டம் குறித்த புரிதலையும் கொண்டு எதிர்கொள்ளாமல் சாதி சாதி என்று புலம்பும் விடுதலை உண்மையில் தைரியம் இருந்தால் அம்பேதகர் தலைமையில் உருவான அரசியல் சட்டத்தில் தவறு இருக்கிறது, அது உச்ச நீதிமன்றத்திற்கு அளவற்ற அதிகாரங்களை தந்துள்ளது என்று கருத்து சொல்லுமா.

தீர்ப்புக்குத் தீர்ப்பு வழங்கப்படும்!

(Viduthalai Editorial 12th Jan 2007)

ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்று வெகுமக்கள் மத்தியில் பெரும் புயலைக் கிளப்பப் போகிறது.இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஒன்பதாவது அட்டவணை என்பது 1951 இல் உருவாக்கப்பட்டது.நாடாளுமன்றம் மக்கள் நலன் கருதி நிறைவேற்றும் சில சட்டங்களைச் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லும் நிலையில், நீதிமன்றத்தின் தலையீட்டிலிருந்து பாதுகாப்புச் செய்யும் ஏற்பாடுதான் இந்த ஒன்பதாவது அட்டவணையாகும்.நில உச்சவரம்பு சட்டத்திலிருந்து, நிலக்கரிச் சுரங்கங்கள் நாட்டுடைமை என்று தொடங்கி, தமிழ்நாட்டின் 69 சதவிகித இட ஒதுக்கீடு பாதுகாப்பு உள்பட இந்த ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்துத்தான் பாதுகாக்கப்பட்டுள்ளன.எந்த நோக்கத்துக்காக அரசமைப்புச் சட்டத்தில் இந்த ஒன்பதாவது அட்டவணை கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கத்தின் ஆணி வேரையே வெட்டும் வேலையைத் தான் உச்சநீதிமன்றம் செய்திருக்கிறது.மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளவர்கள் மக்கள் பிரதிநிதியான நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான். அவர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று முடிவு எடுக்கவேண்டிய நிலையில் உள்ளவர்களும் அவர்கள்தான். நீதிபதிகள் என்பவர்கள் அரசின் சம்பளம் வாங்கும் ஊழியர்கள்தான். இந்த நிலையில் மக்களுக்குத் தேவையானவற்றை நாடாளுமன்றம் நிறைவேற்றும்போது, அதில் குறுக்கிடும் அதிகாரம் இன்னொன்றுக்கு இருக்கவே முடியாது - கூடாது!தம் எல்லையை மீறி உச்சநீதிமன்றம் நடந்துகொண்டதன்மூலம் நாடாளுமன்றமா, நீதிமன்றமா - எது அதிக அதிகாரம் படைத்தது என்கிற கேள்வி மக்கள் மன்றம்முன் இப்பொழுது எழுந்துள்ளது. இந்தக் கேள்விக்கு விடை சொல்லும் அதிகாரம், சக்தி படைத்தது மக்கள் மன்றம்தான்!அடிப்படை உரிமைகள் என்பதெல்லாம் கூட காலத்திற்கேற்ப மாறக் கூடியவைதான்; விபச்சாரத் தடுப்புச் சட்டம் வந்தபோதுகூட, தங்கள் ஜீவாதார உரிமை பாதிக்கப்படுகிறது என்று அந்தத் தொழிலில் சம்பந்தப்பட்டவர்கள் கூறவில்லையா?தீண்டாமை என்பது கூட தங்களின் ஜாதி உரிமை என்று வாதாடலாமே! வரையறையின்றி சொத்துகளைக் குவிக்க எங்களுக்கு உரிமை உண்டு என்று பணத் திமிங்கலங்கள் திமிர் முறிக்கலாமே!உச்சநீதிமன்றமாக இருந்தாலும் சரி, தங்களுக்கு முன் வரும் வழக்குப்பற்றி மட்டும் தீர்ப்புக் கூறலாமே தவிர, உலகத்தில் நடக்கும் சகலத்திற்கும் தாங்கள்தான் பொறுப்பாளி என்கிற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளக் கூடாது.1973 ஏப்ரலுக்குப் பிறகு ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டவை எல்லாம் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படுமாம்! அது என்ன 1973 ஆம் ஆண்டு எல்லைக்கோடு! ஆம், அதற்குப் பிறகுதான் சமூக ரீதியான பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன! தமிழகத்தின் 69 சதவிகித இட ஒதுக்கீட்டின் 76 ஆவது திருத்தமும் இதில் அடங்கும்.இட ஒதுக்கீடு, சமூகநீதி என்று வருகிறபோதெல்லாம் நீதித்துறை கூர்மையாக வாளினைத் தீட்டிக் கொண்டு பாய்வதை அனுபவத்தில் பார்க்க முடிகிறதே!50 சதவிகிதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்று அரசமைப்புச் சட்டத்தில் எந்த மூலையிலாவது முணுக்கென் றாவது காணப்படுகிறதா? பொருளாதார அளவுகோல்பற்றி (கிரீமி லேயர்) எங்காவது அரசமைப்புச் சட்டம் சிணுங்கியுள்ளதா? இவற்றை யெல்லாம் எல்லை மீறித் திணித்தது உச்சநீதிமன்றம்தானே? இல்லை என்று மறுக்க முடியுமா?மத்தியில் சட்டத்துறை அமைச்சராக இருக்கக் கூடியவரும் ஒரு பார்ப்பனர். உச்சநீதிமன்றமோ உச்சிக்குடுமி மன்றமாக இருக்கிறது. மக்கள் தொகையில் 52 சதவிகிதம் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு ஓர் இடம்கூட அங்கு கிடையாது. இந்த நிலையில், இதுபோன்ற தீர்ப்புகள் தானே வரும்?இந்தத் தீர்ப்பின் மூலம் பெறப்படுவது என்ன? நீதித் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்பதுதானே? ஏற்கெனவே அதற்கான குரலை, திராவிடர் கழகம் கொடுத்து வந்திருக்கிறது. அதில் உள்ள நியாயத்தின் அருமையை இந்தியா முழுவதும் உள்ள 90 சதவிகிதத்திற்கு மேலான ஒடுக்கப்பட்ட மக்கள் உணரக் கூடிய ஒரு நிலையை உச்சநீதிமன்றம் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது.இந்த சமூகநீதிப் போரில் திராவிடர் கழகம் தலைமை தாங்கும் - போராடும் - வெற்றி பெறும் என்பதில் அய்யமில்லை.

உச்ச நீதி மன்றத்தின் முக்கியமான தீர்ப்பு

உச்ச நீதி மன்றத்தின் முக்கியமான தீர்ப்பு

இன்று உச்ச நீதிமன்றம் 9ம் அட்டவணையில் ஒரு சட்டம் சேர்க்கப்பட்டாலும் அதைசெல்லுமா என்று பரிசீலிக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு உண்டு என்றும், ஏப்ரல்24, 1973க்குப் பின் அவ்வாறு சேர்க்கப்பட்ட சட்டங்களுக்கும் இது பொருந்தும் என்று தீர்ப்பளித்துள்ளது. 9 உறுப்பினர் கொண்ட பெஞ்ச் இதை ஒரு மனதாகக் கூறியிருப்பதுகுறிப்பிடத்தக்கது. தீர்ப்பின் முழு விபரங்கள் இன்னும் தெரியவில்லை. இதன்படி 9ம்அட்டவணையில் சேர்க்கப்பட்ட ஒரு சட்டம் அடிப்படை உரிமைகளைபாதிக்கிறதா, அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை மீறுகிறதா என்பதை விசாரிக்கும், பரிசீலனை செய்யும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு உண்டு. வேறு வார்த்தைகளில்சொல்வதானால் 9ம் அட்டவணை என்பதை பயன்படுத்திக் கொண்டு பாராளுமன்றம் எந்தசட்டத்தினையும் இயற்றலாம், அந்த சட்டத்தினை விசாரிக்கவே முடியாது என்ற வாதத்தினைஉச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது. மிக முக்கியமான அரசியல் சட்டப் பிரச்சினைஒன்றிற்கு உச்ச நீதிமன்றத்தின் 9 உறுப்பினர் பெஞ்ச தந்துள்ள தீர்ப்பினை , கிடைத்த செய்திகளின்அடிப்படையில் பார்க்கும் போது வரவேற்க்கவே தோன்றுகிறது. முழுத் தீர்ப்பினையும் படிக்கும்போதுதான் வேறு சிலவற்றைக் குறித்து விரிவாக புரிந்து கொள்ள முடியும்.என் உடனடி கருத்து இதுதான். இதன் மூலம் உச்ச நீதிமன்றம் அரசியல் சட்டத்தினைவலுப்படுத்தியிருக்கிறது. மிருகத்தனமான பெரும்பான்மையினைக் கொண்டு எதை வேண்டுமானாலும்சட்டமாக்கலாம், அதை 9ம் அட்டவணையில் சேர்த்துவிட்டு நீதிமன்றங்கள் அதை கேட்க இயலாதபடி செய்துவிடலாம் என்ற கருத்திற்கு உச்ச நீதிமன்றம் சாவு மணி அடித்திருக்கிறது.கேசவானந்த பாரதி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினைப் போலவே இதுவும் முக்கியமானது.இது இப்படித்தான் இருக்கும், ஆனால் ஒரிரு நீதிபதிகள் மாற்றுக் கருத்துக் கொண்டிருக்கக்கூடும் என்று எதிர்பார்த்தேன், அதற்கான வாய்ப்புகள் குறைவு என்றாலும். ஆனால் 9 பேர்கொண்ட பெஞ்ச இப்படி ஏகமனதாக கூறியிருப்பது ஒரு மிக நல்ல செய்தி.

இந்தியாவில் பிறந்தவன் என்ற முறையிலும், இந்திய அரசியல்சட்டத்தினை மதிப்பவன் என்ற முறையிலும், அடிப்படை உரிமைகள், சமத்துவம் ஆகியவை காக்கப்பட வேண்டியவை என்றுகருதுபவன் என்பதால் இந்த தீர்ப்பினை தந்த உச்ச நீதிமன்றத்தினை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

அவர்கள் தரப்பு வாதம்

அவர்கள் தரப்பு வாதம்

பெரியார் சிலை உடைப்பினைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில்நடைபெற்ற வன்முறை தாக்குதல்கள் குறித்து ஒரு கட்டுரை, ஒரு பேட்டியைஇங்கே இடுகிறேன்.வன்முறைகளை நியாயப்படுத்தும் முயற்சிகள்தான் இவை.தாங்கள்தான் உண்மையான பெரியாரியவாதிகள் என்பதை 'நிரூபிக்கும்' முயற்சிகளாகவும் இதைப் புரிந்து கொள்ளலாம்.

பெரியார் சிலை உடைப்பு: மண்டைச் சுரப்பை உலகு தொழும்!

மானமிழந்தால் மதவெறியில் தமிழகமும் விழும்!!

டிசம்பர் 6, பாபர் மசூதி இடிக்கப்பட்ட கருப்பு நாளன்று சிறீரங்கம் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்பதுதான் பார்ப்பன இந்து மதவெறியர்களின் திட்டம். ""டிசம்பர் 6 இந்தியாவின் அடிமைச் சின்னம் அகற்றப்பட்ட நாள்! இந்துக்களின் வெற்றித்திருநாள்!'' என்று அறிவிக்கும் சுவரொட்டிகள் முன்னெப்போதும் இல்லாத அளவு திருச்சியைச் சுற்றிலும் ஒட்டப்பட்டிருந்தன. இது ஒரு வகையில் சிலை இடிப்புக்கு எதிரிகள் வழங்கிய முன்னறிவிப்பு.

1973இலேயே சிறீரங்கம் நகரமன்றம், பெரியார் சிலைக்காக 144 சதுர அடி நிலத்தை ஒதுக்கிக் கொடுத்து, அந்த இடம் பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் பெயரில் பட்டா செய்யப்பட்டுள்ள போதிலும், 33 ஆண்டுகளாக அங்கே சிலை நிறுவப்படவில்லை. இந்த 33 ஆண்டுகளில் பெரியாரின் பெயரில் டஜன் கணக்கிலான நிறுவனங்கள் பல நூறு ஏக்கர் பரப்பில் தமிழகமெங்கும் எழும்பியிருக்கின்றன. ஆனால், இந்த 144 சதுர அடியில் பெரியார் சிலை மட்டும் எழும்பவில்லை. இந்தத் தாமதத்திற்கு பகுத்தறிவு சார்ந்த விளக்கம் எதுவும் நமக்குப் புலப்படவில்லை.

ஆனால், சிலை எழும்பவிருக்கிறது என்று தெரிந்ததும் பார்ப்பனக் கும்பல் ஒரு கணமும் தாமதிக்கவில்லை. நவம்பர் 28ஆம் தேதியன்று, திருவரங்கத்தின் புனிதம் காப்போர் கூட்டமைப்பு என்ற பெயரில் பார்ப்பன இந்து மதவெறி அமைப்புகள் ஒன்றிணைந்தன. டிசம்பர் 5ஆம் தேதியன்று கோவையில் பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்த இந்து ஆசார்ய சபாவின் தலைவர் தயானந்த சரஸ்வதி, ""பெரியார் சிலைக்கு ஸ்ரீரங்கம் பாதுகாப்பான இடம் அல்ல'' என்று பகிரங்கமாக மிரட்டினார். டிசம்பர் 6ஆம் தேதி பின்னரவில் கோவையிலிருந்து அனுப்பப்பட்ட இந்துமதவெறிக் காலிகள் பெரியார் சிலையை உடைத்தனர்.

இதற்குப்பின் அங்கே நடைபெற்ற சம்பவங்கள், பெரியாருக்கு எதிரிகள் செய்த அவமதிப்பைக் காட்டிலும் கொடிய அவமதிப்பாக இருந்தன. சிலை உடைப்பு பற்றிய செய்தி கேள்விப்பட்டு, திருச்சி நகரத்திலிருந்து மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்களும் புரட்சிகர மாணவர் இளைஞர் அணித் தோழர்களும் சிறீரங்கத்திற்கு வந்து சேர்ந்தபோது சிறீரங்கம் இயல்பாக இயங்கிக் கொண்டிருந்தது. விபத்து நடந்த இடத்தைப் போல ஒரு கூட்டம் பெரியார் சிலையைச் சுற்றி நின்று கொண்டிருக்க, கருப்புச் சட்டைத் தொண்டர்கள் நடந்ததை விளக்கிக் கொண்டிருந்தார்கள். மகிழ்ச்சியை மறைத்துக் கொண்டு முகத்தில் அதிர்ச்சியைத் தேக்கியவாறு நின்று கொண்டிருந்த பார்ப்பனர்களும் கேதம் கேட்க வந்த இந்தக் கூட்டத்தில் அடக்கம்.

இந்த மானக்கேட்டைக் காணப்பொறுக்காத ம.க.இ.க. தோழர்கள், தி.க. தொண்டர்களைக் கடிந்து கொண்ட பிறகுதான் சாலை மறியல் தொடங்கியது. கடைகள் அடைக்கப்பட்டன. சாலை மறியலைத் திமிர்த்தனமாக மீற முயன்ற சில தனியார் பேருந்துகள் நொறுக்கப்பட்டன. ""ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறி அமைப்புகளைத் தடைசெய்! சிலை உடைப்பைத் தூண்டிய அதன் தலைவர்களைக் கைது செய்!'' என்று முழங்கியபடி ம.க.இ.க. மாவட்டச் செயலர் தோழர் இராமதாசு தலைமையில் கோயில் ராஜகோபுரத்திலிருந்து ஊர்வலம் புறப்பட்டது. தி.க., தி.மு.க. அணிகளும் பொதுமக்களும் ஊர்வலத்தில் இணைந்து கொண்டனர்.
போராட்டம் பரவத் தொடங்குகிறது என்று அறிந்தவுடனே தி.மு.க., தி.க. கரை வேட்டிகள் களத்தில் இறங்கினார்கள். ""நடப்பது நம்ம ஆட்சி. சிலை உடைத்தவர்கள் கைது செய்யப்பட்டு விட்டனர். இந்தச் சிலை இல்லாவிட்டால் வேறு சிலை. எல்லாவற்றையும் கலைஞர் பார்த்துக் கொள்வார்'' என்று சொல்லி, கருஞ்சட்டைத் தொண்டர்களைக் கலைத்துவிட்டார்கள். மானக்கேடான சகஜநிலை மீண்டும் திரும்பியது.
எனினும், பெரியார் சிலையை திருட்டுத்தனமாக உடைத்த பார்ப்பன மதவெறியர்களுக்கான பதிலடி அன்று மாலையே பகிரங்கமாகக் கொடுக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்இன் தேசிய நாயகனான இராமனின் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து, செருப்பால் அடித்தபடியே, சிறீரங்கம் பேருந்து நிலையத்திலிருந்து பெரியார் சிலையை நோக்கி ஊர்வலமாக முழக்கமிட்டு வந்தார்கள் ம.க.இ.க., பு.மா.இ.மு. தோழர்கள். பெரியார் பற்றாளர்கள் பலர் தாமாகவே ஊர்வலத்தில் இணைந்து கொண்டனர். இருபுறமும் நூற்றுக்கணக்கான மக்கள் நின்று இந்தக் காட்சியைத் தரிசித்தனர். பரவசமடைந்த ஒரு முதிய தி.க. தொண்டர் தம் கால் செருப்பைக் கழற்றி அடித்து இராமபிரானுக்கு அஞ்சலி செலுத்தினார்.
வருணாசிரமத்தின் பாதுகாவலான இராமனின் படத்தை, சேதமடைந்த பெரியார் சிலையின் காலடியிலேயே தீ வைத்துக் கொளுத்தினார்கள் தோழர்கள். படத்தைப் பிடுங்க முயன்ற போலீசை நெருங்கவிடாமல் தடுத்தார்கள் தி.க. இளைஞர்கள். தோழர்களைக் கைது செய்தவுடனே விடுதலை செய்யக் கோரி விண்ணதிர முழங்கினார்கள். பிரச்சினை பெரிதாகிவிடும் என்று உணர்ந்து கொண்ட போலீசு தோழர்களை அன்றிரவே விடுவித்தது.
""உங்களுக்கெல்லாம் ரொம்ப நன்றிம்மா, நீங்களாவது மானத்தக் காப்பாத்தினீங்க'' என்று பெண் தோழர்களிடம் நா தழுதழுக்க நன்றி கூறினார், ஒரு முதிய தி.க. தொண்டர். திராவிடர் கழகத்தின் மாநில நிர்வாகியோ, ""தயவு செய்து இதற்கு மேலும் எதையாவது செய்து சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை உருவாக்கி விடாதீர்கள்'' என்று தோழர்களைக் கைக்கூப்பிக் கேட்டுக் கொண்டார். சொரணையுள்ளவர்களால் இந்தக் கோரிக்கைக்கு செவி சாய்க்க முடியாதென்பதால் போராட்டம் தொடர்ந்தது. மாநிலமெங்கும் கண்டனச் சுவரொட்டிகள் அன்றிரவே ஒட்டப்பட்டன.
மறுநாள் ஓசூரில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தின் எதிரில் இராமனின் படத்தைத் தீக்கிரையாக்கினார்கள் பு.ஜ.தொ.மு. தோழர்கள். நூற்றுக்கணக்கான மக்கள் பார்த்து நிற்க, நகரின் மையப்பகுதியில் நடைபெற்றது இந்தப் போராட்டம். போராட்டம் முடிந்து அரைமணி நேரத்துக்குப்பின், பா.ஜ.க.வின் மாநிலப் பொருளாளர் நரேந்திரன் தலைமையிலான 20 பேர் கொண்ட கும்பல், அந்த வழியே தன் மனைவி குழந்தையுடன் சென்று கொண்டிருந்த பு.ஜ.தொ.மு.வின் செயலர் தோழர் பரசுராமனை சுற்றி வளைத்துக் கொண்டது. ""இவனைக் கொலை செஞ்சாத்தாண்டா நாம் நிம்மதியா இருக்க முடியும்'' என்று கூச்சலிட்டுக் கொண்டே அவரை உருட்டுக் கட்டைகளால் தாக்கியது. ஆர்.எஸ்.எஸ். பேடிகள் நடத்திய இந்தக் கோழைத்தனமான தாக்குதலைத்தான் ""இந்துக்களின் கோபம்'' என்று பொய்யாகச் சித்தரித்தன சில நாளேடுகள்.
மண்டை பிளந்து மயங்கி விழுந்த பரசுராமனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார் அவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. ஒரு மணி நேரத்திற்குள் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் கூறவே, ஆம்புலன்சில் தருமபுரிக்கு அவரைக் கொண்டு செல்ல முயன்றபோது வழிமறித்து அனைவரையும் கைது செய்தது போலீசு. இரவு முழுவதும் தோழர் பரசுராமனையும் அவரது மனைவியையும் ஆம்புலன்சிலேயே பூட்டி வைத்தது. பொதுச் சொத்துக்கு சேதம் விளைத்தார், சதி செய்தார் என்று பல பிரிவுகளில் பொய்வழக்கு பதிவு செய்து, விடிந்ததும் சேலம் சிறைக்குக் கொண்டு சென்றனர். கடும் போராட்டத்துக்குப் பின்னர்தான் சேலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அங்கேயும் கால்களில் விலங்கு மாட்டி வைத்தனர். கொலைவெறித் தாக்குதல் நடத்திய பா.ஜ.க.வினர் கைது செய்யப்படவில்லை என்பதுடன், பரசுராமனைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறை வைக்கப் போவதாக அறிவித்திருக்கிறார், மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் தேன்மொழி.
இதேபோல, சிவகங்கையில் சிலை உடைப்புக்கு எதிராகக் கண்டனச் சுவரொட்டி ஒட்டியதற்காகத் தோழர் எழில்மாறன், சுவரொட்டியை அச்சிட்ட அச்சக உரிமையாளர், வழக்குரைஞர் ஆகியோர் மீது வகுப்பு மோதலைத் தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. திருச்சியில் கண்டனச் சுவரொட்டி ஒட்டிய இளம் தோழர் கார்க்கி ஒரு வாரம் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.

பெரம்பலூர், சங்கராபுரம், ஈரோடு போன்ற பல இடங்களில் பூணூல் அறுப்பு, சாமி சிலை உடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகப் பெரியார் தி.க.வைச் சேர்ந்த தொண்டர்கள் பலர் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். சென்னை அயோத்தியா மண்டபத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக பெரியார் தி.க.வினர் மீது பொய் வழக்கு போடப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் பெரியார் சிலை உடைப்பை எதிர்த்த நடவடிக்கைளில் ஈடுபட்டதற்காக சிறையில் இருப்பவர்கள் ம.க.இ.க.வைச் சேர்ந்த தோழர்களும் பெரியார் தி.க. தோழர்களும் மட்டுமே.

16.12.06 அன்று சிறீரங்கத்தில் வெண்கலத்தினாலான பெரியார் சிலை திறக்கப்பட்டு விட்டது. அந்த நிகழ்ச்சியில் பேசிய தி.க. பொதுச்செயலர் வீரமணி, எதிர்த்துப் போராடிக் கைது செய்யப்பட்ட தோழர்களை விடுவிக்க வேண்டுமென வாய்தவறிக் கூடப் பேசவில்லை. கலைஞர் ஆட்சியை காப்பாற்றும் விதத்தில் போராட்டம் ஏதும் செய்யாமல் அமைதி காத்த தொண்டர்களுக்கு மட்டும் நன்றி கூறினார்.

பெரியார் சிலை உடைப்பின் நோக்கம் என்ன? கலைஞர் அரசுக்கு களங்கம் கற்பிப்பதும், நெருக்கடி கொடுப்பதும்தான் இந்தச் சிலை உடைப்பின் நோக்கமாம். வீரமணி, திருமா போன்றோரின் கண்டுபிடிப்பு இது. சிலையை உடைத்தால் கட்டுப்பாடில்லாத பெரியார் தொண்டர்கள் பூணூல் அறுப்பு, இராமன் எரிப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களாம். இதைக் காட்டி நம்மாளின் ஆட்சியைக் கலைத்து விடலாம் என்று திட்டம் போட்டுத்தான் அவாள் சிலையை உடைத்தார்களாம்.

கேட்பதற்கே கேவலமாக இருக்கும் இந்த விளக்கத்தைச் சொல்வதற்கு தி.க., தி.மு.க.வினர் கூச்சப்படவில்லை. 2000 முஸ்லிம்களின் ஈரக்குலையறுத்த மோடியின் ஆட்சியே கலையவில்லையே, கேவலம் பத்தாம் நம்பர் நூலை அறுத்தால் ஆட்சி கவிழ்ந்துவிடுமா என்ற கேள்வி அவர்களுடைய பகுத்தறிவுக்கு எட்டவில்லை போலும்!

இவர்களுடைய விளக்கத்தின்படி நம்மாளின் ஆட்சியைக் காப்பாற்ற வேண்டுமானால், அவாளின் பூணூலையும் இராமபிரானையும் காப்பாற்றியாக வேண்டும். அதற்கு கருப்புச் சட்டைகளைத்தான் காவலுக்கு நிறுத்த வேண்டும். கிட்டத்தட்ட அதுதான் நடந்தது. பூணூல் அறுப்பும் இராமன் எரிப்பும் நடக்கத் தொடங்கிய பின்னர்தான் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பற்றிப் பேச ஆரம்பித்தார் டி.ஜி.பி. பெரியார் சிலை உடைப்புக்குச் சதித்திட்டம் தீட்டித் தூண்டிவிட்ட தயானந்த சரஸ்வதி மீது வழக்கு இல்லை. ஓசூர் தோழர் பரசுராமன் மீது 120 ஏ சதிவழக்கு. பாபர் மசூதி இடிப்பைக் கொண்டாடி சுவரொட்டி ஒட்டிய ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்மீது வழக்கு இல்லை. பெரியார் சிலை உடைப்பைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டிய சிவகங்கைத் தோழர்கள் மீது வகுப்பு மோதலைத் தூண்டியதாக வழக்கு!

""பெரியார் ஆட்சி''யின் நடவடிக்கையைப் பார்ப்பனக் கும்பலின் நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்! ""பெரியார் சிலையைச் சட்டபூர்வமான முறையில்தான் அகற்றியிருக்க வேண்டும். சட்டவிராதமான முறையில் உடைத்திருக்கக் கூடாது'' என்று பாபர் மசூதி இடிப்புக்கு அத்வானி வருத்தம் தெரிவித்த அதே தோரணையில், பார்ப்பனக் கும்பலைச் சேர்ந்த அனைவரும் சொல்லி வைத்தாற்போல அறிக்கை விட்டனர்.

பாபர் மசூதியை இடித்தபின், ""சர்ச்சைக்குரிய இடம்' என்று அதற்கு ஆர்.எஸ்.எஸ். பெயர் மாற்றம் செய்ததைப் போல, ""சர்ச்சைக்குரிய பெரியார் சிலை'' என்று எழுதத் தொடங்கியது தினமலர். பெரியார் சிலைக்கு இரும்புக் கூண்டு போடச் சொன்னார் இராம. கோபாலன். ""இராமன் எரிப்பையும் பூணூல் அறுப்பையும் தூண்டுவதே கருணாநிதிதான்'' என்று மிரட்டினார் எச்.ராஜா. வைகுந்த ஏகாதசிக்கு சிறீரங்கம் வரும் பக்தர்கள் பெரியார் மீது கல்லெறிந்து காறித் துப்புமாறு தலைமறைவாய் இருந்தபடியே அறிக்கை விட்டார் அர்ஜூன் சம்பத். ""சிலை உடைப்பைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் சமூக நல்லிணக்கத்தைக் கெடுத்துவிடும்'' என்று கவலை தெரிவித்தார் கார்ப்பரேட் பார்ப்பான் ரவிசங்கர்ஜி. ""பெரியார் சிலையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்'' என்று கூறி வெளிப்படையாகவே களம் இறங்கினார் ஜெயலலிதா. திண்டுக்கல்லில் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை, தூத்துக்குடியில் தார்பூச்சு, பட எரிப்பு... என ஆங்காங்கே இந்து வெறியர்கள் மேலேறித் தாக்கினர்.

பெரியாரின் தொண்டர்கள் என்று கூறிக் கொள்வோர் என்ன செய்தார்கள்? ""இனி பொறுப்பதற்கில்லை; நெருப்புடன் விளையாடதே'' என்று 2 நாள் கழித்து அறிக்கை விட்டார் வைகோ. இதேநிலை தொடர்ந்தால் நாடு தழுவிய போராட்டம் என்று 3 நாள் கழித்து அறிக்கை விட்டார் திருமா. பூணூல் அறுப்பு, இராமன் எரிப்பு போன்ற நடவடிக்கைகளைப் பற்றி பெரிதும் கவலைப்பட்ட "மார்க்சிஸ்டு' கட்சி கவனத்துடன் செயல்படுமாறு காவல்துறையைக் கேட்டுக் கொண்டது. ""இந்து பாசிச அமைப்புகுள் தலைதூக்குகின்றன. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்'' என்று பயமுறுத்தியது வலது கம்யூனிஸ்டுகளின் கலை இலக்கியப் பெருமன்றம். இதுதான் பெரியார் பிறந்த மண்ணின் யோக்கியதை! பெரியாரிஸ்டுகள் எனப்படுவோர் சோளக்கொல்லைப் பொம்மைகளாக இருக்கும்போது, பெரியாரை வெண்கலத்தில் உருக்கி வார்த்து என்ன பயன்?

சிலையை உடைத்ததன் மூலம் பெரியாரைத் தமிழகம் முழுவதும் கொண்டு செல்வதற்கான ஒரு அற்புதமான வாய்ப்பைத் தங்கத்தட்டில் வைத்து வழங்கினார்கள் இந்து மதவெறியர்கள். உடைக்கப்பட்ட பெரியாரின் தலையை தமிழகம் முழுவதும் ஒரு வெடிகுண்டைப் போல ஏந்திச் சென்றிருக்கலாம். தன் வாழ்நாள் முழுவதும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து மறைந்த அந்தக் கிழவனை, இன்னொரு முறை மக்கள் மத்தியில் பிரச்சாரப் பயணம் அழைத்துச் சென்றிருக்கலாம். ""மண்டைச் சுரப்பை உலகு தொழும்'' என்று பாவேந்தர் பாடினாரே, அந்தத் தலையிலிருந்து தோன்றிய சிந்தனையை இளம் தலைமுறையினர் மத்தியில் தீயைப் போலப் பற்ற வைத்திருக்கலாம். சாதி ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு, இந்து தேசிய எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணடிமை எதிர்ப்பு எனப் பன்முகம் காட்டிய அந்தத் தலையை பார்ப்பன மதவெறிக்கெதிரான விடுதலையின் வித்தாய் தமிழகமெங்கும் விதைத்திருக்கலாம்.

பேசாத கல்லையும், களிமண்ணையும் வைத்து அரசியல் நடத்தும் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு, பகுத்தறிவுக் கல்லைப் பேச வைத்துக் காட்டியிருக்கலாம். இரும்புக் கூண்டுக்குள் பதுங்க வேண்டியவர் பெரியார் அல்லர். இராம.கோபாலன்தான் என்பதை அந்தப் பார்ப்பனக் கும்பல் பட்டுத் தெரிந்து கொள்ளுமாறு விட்டிருக்கலாம். சிறீரங்கம் கோயிலென்ன, எல்லாக் கோயில் வாசல்களிலும் சாதியையும் மடமையையும் வழிமறிக்கும் தடையரணாகப் பெரியாரின் சிலையை நிறுவியிருக்கலாம்.

இவையனைத்தும் கொள்கை உறுதி கொண்டவர்களின் செயல்முறைகள். ஆட்சியைக் காத்துக் கொள்ளவும் அதன் உதவியுடன் சிலையைக் காப்பாற்றிக் கொள்ளவும் சிந்திப்பவர்கள், கான்கிரீட்... வெண்கலம்... இரும்பு என்று உலோகத்தை உறுதிப்படுத்தும் திசையில்தான் சிந்திக்க முடியும். இறுதியில் அது இரும்புக் கூண்டில் தான் போய் முடியும்.

டிசம்பர் 7ஆம் தேதியன்று பெரியார் சிலையைப் பாதுகாக்கத் தவறிய பரிதாபத்துக்குரிய 4 போலீசுக்காரர்களைக் கடமை தவறிய குற்றத்துக்காகத் தற்காலிக நீக்கம் செய்திருக்கிறது தமிழக அரசு. தங்கள் கடமையிலிருந்து தவறிய பெரியாரின் தொண்டர்கள் எனப்படுவோருக்கு யார் தண்டனை விதிப்பது?

இதோ, தண்டனையை எதிர் கொள்வதற்குத் தன்னந்தனியாக அங்கே அமர்ந்திருக்கிறார் பெரியார். அவரது சிலையை சட்டபூர்வமாகவே அகற்றுவதற்கான வழக்கைத் தக்க தருணத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதி மன்றம் கூறியிருக்கிறது. பக்தர்கள் என்ற போர்வையில் கும்பலோடு கும்பலாகச் சேர்ந்து சிலையின் மீது கல்லெறிய தக்க தருணத்திற்காகக் காத்திருக்கிறார்கள் பார்ப்பன இந்து வெறியர்கள். சுயமரியாதை இயக்கத்தின் துவக்கக் காலத்தில் தன்னந்தனியாக சாதி, மத எதிர்ப்புப் பிரச்சாரம் செய்து கல்லடியும் சொல்லடியும் வாங்கி, மாபெரும் மக்கள இயக்கத்தைத் தமிழகத்தில் உருவாக்கி நிலைநிறுத்திய பின்னரும், அந்தோ, பெரியார் இன்றும் தனியாகத்தான் அமர்ந்து கொண்டிருக்கிறார், சிறீரங்கம் கோயிலுக்கு எதிரே அரங்கநாதனுக்கு சவால்விட்டபடி!

அலிக்ன்="ஜுச்டிfய்" cலச்ச்="ச்ட்ய்லெ2">அறுப்பதும் எரிப்பதும்தான் வன்முறையா?

""ஆத்திகர்கள் திரளும் கோயில் வாசலில் ஒரு நாத்திகரின் சிலையை வைக்கலாமா?'' — இது பெரியார் சிலைக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்.இன் முக்கியமான வாதம். ஆத்திகர்கள் திரளும் இடத்தில் நாத்திகம் பேசக்கூடாது என்று கூறுவது கருத்துரிமையை மறுக்கும் பாசிசம். ""குடி குடியைக் கெடுக்கும்'' என்று சாராயக் கடை வாசலில் எழுதி வைக்காமல், சர்பத் கடை வாசலிலா எழுதிப் போட முடியும்? ஆத்திகர்கள் கூடுமிடத்தில் நாத்திகப் பிரச்சாரம் செய்வதுதான் பொருத்தமானது. சிறீரங்கம் கோயிலைச் சுற்றி பிராந்திக் கடைகளும், ஆபாசப் பத்திரிகைகளும், நீலப்பட வியாபாரமும் நடக்கிறதே, அவையெல்லாம் ஆத்திகப் பிரச்சார நடவடிக்கைகளா என்ன?

மேலும், பெரும்பான்மை என்பதனாலேயே ஒரு கருத்து நியாயமாகிவிடாது. பாப்பாபட்டியில் ""தலித்துகள் ஊராட்சித் தலைவராகக் கூடாது'' என்று தடுத்தவர்கள் கூடப் பெரும்பான்மை பலத்தைக் காட்டித்தான் தங்கள் சாதிவெறியை நியாயப்படுத்தினார்கள். ""பெரும்பான்மை இந்துக்கள் வாழும் இடத்தில் சர்ச், மசூதி கட்டக்கூடாது'' என்ற ஆர்.எஸ்.எஸ்.இன் வாதத்திற்கும், ""பெரியார் சிலை கூடாது'' என்பதற்கும் அடிப்படையில் எவ்வித வேறுபாடும் இல்லை. இது ஆத்திக வேடம் போடும் பார்ப்பன மதவெறி, இறைநம்பிக்கை உள்ள பெரும்பான்மை தமிழக மக்கள், பிள்ளையாரையும், பெருச்சாளியையும் காட்டிக் கட்சி நடத்தும் பா.ஜ.க.வை நிராகரித்திருக்கும்போது, தன்னைப் பெரும்பான்மையின் பிரதிநிதியாகக் கூறிக் கொள்வதற்கு அவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை.

""தமிழ் வழிபாடு கூடாது, பார்ப்பனரல்லாதார் அர்ச்சகராகக் கூடாது'' என்று பெரும்பான்மை மக்களை அவமதிக்கும் இந்து முன்னணிக் கும்பல், பெரும்பான்மை ஆத்திகர்களுக்காகக் கவலைப்படுவுது போல நடிக்கிறது. ஆனால், பெரும்பான்மையான சூத்திரபஞ்சம சாதி மக்களைக் கோயிலுக்குள் விடமறுத்த இந்த பார்ப்பன, சாதிவெறியர்களை எதிர்த்துக் கோயில் நுழைவு உரிமைக்காகப் போராடியவர் பெரியார். அவர் சிலையை எல்லாக் கோயில் வாசல்களிலும் வைக்கவேண்டும். அதுதான் பொருத்தம்.

""சர்ச் வாசலில் பெரியார் சிலை வைப்பதுதானே!'' என்கிறார் இராம.கோபாலன். ஆசையிருந்தால் அவரே வைக்கட்டும். பெரியார் சிலைக்குக் கீழே இந்துக் கடவுள் இல்லை என்றா எழுதியிருக்கிறது? எந்தக் கடவுளும் இல்லை என்றுதான் சொன்னார் பெரியார். எனவே, எந்தக் கடவுளும் இல்லாத ஒரு தூணையோ துரும்பையோ இராம.கோபாலன் காட்டட்டும். அங்கே சிலை வைத்து விடுவோம்.

""பெரியார் சிலையை உடைத்தால் அதற்காக இராமபிரானின் படத்தை ஏன் கொளுத்துகிறார்கள்? அதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?'' என்று கேட்கிறார் இராம.கோபாலன். இராமன் எல்லா இந்துக்களுக்குமான கடவுளல்ல. பார்ப்பன உயர் வருணத்தினரின் சாதிச்சங்கத் தலைவன். இதற்கு ஆதாரம் வால்மீகி இராமாயணம். வருணதருமத்தை நிலைநாட்டும் இராமராச்சியத்தை நடத்தியதற்காகத்தான் அவன் கொண்டாடப்படுகிறான்.

மேலும், இராமன்ஜி என்பவர் அத்வானிஜி, வாஜ்பாயிஜி ஆகியோரைக் காட்டிலும் மூத்தவர். எல்லாத் தேர்தல்களிலும் தாமரைச் சின்னத்துக்கு ஓட்டு வேட்டையாடும் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர். இராமன் தேசிய நாயகன் என்பதால் முஸ்லிம்களும் அவனை வணங்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்.இன் நிலைப்பாடு. எனவே, அவர்கள் கூற்றுப்படியே இராமன் இந்துக் கடவுள் அல்ல என்று ஆகிறது. பெரியாரின் சிலையை அவாள் உடைக்கும்போது, அவாளுடைய கட்சித் தலைவரின் படத்தைச் செருப்பால் அடித்துக் கொளுத்துவதுதான் பொருத்தமான எதிர்ப்பு நடவடிக்கையாக இருக்க முடியும். இராமனைக் கடவுளாகக் கருதும் பக்தர்கள் ஒருவேளை மனம் வருந்தினால், சாதியைப் பாதுகாக்கும் இந்தக் கடவுளைக் கைவிட்டு விடுமாறு அவர்களுக்கு நாம் புத்தி சொல்லலாம். புத்தி வந்தால் பக்தி தானே போய்விடும்.

""பூணூலை அறுப்பது தனிநபரின் உரிமையையும் மத உரிமையையும் மீறும் வன்முறை'' என்று அலறுகிறது. பாரதிய ஜனதாக் கும்பல். அறுப்பதும் எரிப்பதும் எதிர் வன்முறைதான். பூணூல் அணிவதுதான் முதல் வன்முறை. பூணூல் என்பது அவரவர் விருப்பப்படி அணியும் கலர் சட்டையோ, அல்லது ஒரு மதத்தினர் அனைவரும் அணியும் சிலுவை போன்ற சின்னமோ அல்ல. பூணூல் பெரியாரின் மொழியில் சொன்னால், ஒரு தெருவில் ஒரேயொரு வீட்டுக் கதவில் ""இது பத்தினி வீடு'' என்று எழுதிப் போட்டுக் கொள்வதற்கு ஒப்பான நரித்தனம். பெயருக்குப் பின்னால் இருந்த சாதிவாலை நறுக்கியவர் பெரியார். அய்யர், அய்யங்கார் என்ற பட்டங்களை ஃபாஷனுக்காகத் துறந்தவர்கள், பூணூலையும் துறந்துவிட்டால் அவர்களை நாகரிப்படுத்தும் வேலை மிச்சம்!

சூரியன்
----------------------------------------------------------------------------------------------

"பாபர்மசூதியைக் கட்டிக்கொடுத்துவிட்டு பெரியார் சிலை பற்றிப் பேசட்டும்"
கொளத்தூர்மணி

பேட்டி-சுகுணா திவாகர்-பூங்காவிற்கா

தஞ்சைநிலப்பரப்பிற்கும் சாதியமைப்பின் இயங்கியலுக்கும் பாரிய தொடர்புகள் உள்ளன. நந்தனாரின் ரத்தம் படிந்த சரித்திரம் அதைச்சொல்லும். வெண்மணியின் ஓலமும் அதை எதிரொலிக்கும். சாணிப்பால், சவுக்கடி போன்ற தீண்டாமை வன்கொடுமைகளுக்கெதிராக பி.சீனிவாசராவ் போன்ற தோழர்கள் களமிறங்கியதும் இங்குதான். இப்போது அந்த வரிசையில் தற்போது திருச்சி மாவட்டத்திலிருக்கும் சிறீரங்கத்தில் சாதியொழிப்பிற்காய்த் தன் வாழ்நாளை அர்ப்பணித்த அய்யா பெரியாரின் சிலை இந்துமத வெறியர்களால் சிதைக்கப்பட்டிருக்கிறது. இதற்கெதிராக பூணூல் அறுப்பு, சிலை உடைப்பு, சென்னை அயோத்தியாமண்டபத்தின் மீது குண்டுவீச்சு போன்ற எதிர்வினைகள் நடந்திருக்கும் சூழலில் இவற்றுக்கெல்லாம் காரணமாகக் குற்றம்சாட்டப்படும் பெரியார்திராவிடர்கழகத்தலைவர் தோழர்.கொளத்தூர்மணியைச் சந்தித்தோம்.
பெரியார் சிலை உடைப்புக்காக இவ்வளவு கடுமையான சம்பவங்கள் நிகழவேண்டுமா? முதலில் நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். இப்போது நடந்தவைகள் எதிர்வினைகள்தான். முதல்வினையைத் தொடங்கிவைத்தவர்கள் இந்துத்துவவாதிகள்தான். நாகையில் பெரியார்சிலைக்கு செருப்புமாலை போட்டார்கள். காஞ்சியில் காவி வேட்டி கட்டினார்கள். போரூரில் திராவிடர்கழகம், த.மு.எ.ச ஆகிய அமைப்புகள் நடத்திய கூட்டங்களில் கலாட்டாசெய்தார்கள். திண்டுக்கல்லில் பெரியார் சிலைக்கு சந்தனப்பட்டை அணிவித்தார்கள். இப்படித் தொடர்ந்த வினைகளின் எதிர்வினையாகவே இப்போதைய சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
எப்போதும் வன்முறையை ஆரம்பித்துவைப்பவர்கள் அவர்கள்தான். ஆனால் அதற்கெதிராக எதிர்வினை நிகழும்போது மட்டும் அவர்களைப் பயங்கரவாதிகளாக்கிவிடுவார்கள். இப்படித்தான் முஸ்லீம்கள் 'பயங்கரவாதி'களாக்கப்பட்டார்கள். இப்போது நாங்கள்.
மேலும் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட செய்தி வந்தவுடனே பார்ப்பனர்களும் இந்துத்துவவாதிகளும் பல இடங்களில் இனிப்பு வழங்கி மகிழ்ந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட இடங்களில்தான் இதுமாதிரியான எதிர்வினைகள் நிகழ்ந்திருக்கின்றன. காந்தியார் கொல்லப்பட்டபோதும் இந்துமத வெறியர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ந்தார்கள் என்பதை நாம் நினைவுபடுத்திக்கொள்ளலாம்.
பெரியார்சிலை என்பது வெறும் கல்தானே, அதற்காக பகுத்தறிவுவாதிகள் உணர்ச்சிவசப்படலாமா என்ற கேள்வி எழுகிறதே? பெரியார் சிலை வழிபாட்டிற்குரியதல்ல, அது வழிகாட்டுவதற்குரியது. ஆனால் இந்துத்துவவாதிகள் சாதிக்கும் பார்ப்பனீயத்திற்கும் இந்துத்துவத்திற்குமெதிரான அடையாளமாக உள்ள பெரியார் சிலையை உடைத்து மகிழ்கிறார்கள். தங்கள் சுயமரியாதையை உறுதி செய்த, தங்களுக்காய்ப் போராடிய தங்கள் தோழருக்காக, ஒரு மாபெரும் போராளிக்காக காட்டப்படும் அன்பு, மரியாதை ஆகியவற்றின் விளைவாகவே எதிர்வினைகள் நிகழ்ந்திருக்கின்றன.
ஆனால் பெரியார் சிலையை உடைக்கும்போது அவர்கள் கருப்புச்சட்டை அணிந்துவந்து நயவஞ்சகமாக சிலையை உடைத்திருக்கிறார்கள். ஆனால் எங்கள் தோழர்களோ வெளிப்படையாகவே செயல்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய முதல்வினை வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்தது. எங்களுடைய எதிர்வினையோ அறச்சீற்றத்தின் விளைவாய் எழுந்தது.
"ஏன் கோயில் ராஜகோபுரத்தின்முன் பெரியார்சிலையை வைக்கவேண்டும், மசூதி சர்ச்களின் முன் இவர்கள் வைப்பார்களா என்கிற கேள்வியை பார்ப்பனர்களும் இந்துத்துவவாதிகளும் முன்வைகிறார்களே? 1975லேயே பெரியார்சிலைக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. பிறகுதான் ராஜகோபுரம் வந்தது. எனவே இந்த கேள்வியே அர்த்தமற்றது.
மேலும் தமிழ்நாட்டில் தெருவுக்குத் தெரு கோயில் இருந்துகொண்டுதானிருக்கும். அதையெல்லாம் பார்த்துக்கொன்டு இருக்கமுடியாது. இங்கேயுள்ள பல இந்துக்கோயில்கள் புத்த விகாரங்களையும் சமண வழிபாட்டிடங்களையும் அழித்து உருவானவைதான். எனவே இந்த கேள்வியை எழுப்புவதற்கு இந்துத்துவவாதிகளுக்கு சிறிதும் தகுதி இல்லை. பாபர்மசூதியை இடித்தவர்களுக்கு இதைப்பற்றிக் கேள்வி எழுப்ப என்ன யோக்கியதை இருக்கிறது? முதலில் பாபர்மசூதியைக் கட்டிக்கொடுத்துவிட்டு அவர்கள் பெரியார் சிலை பற்றிப் பேசட்டும்.
இப்போது எங்கள் தோழர்கள் பலர் தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பெரியார் சிலையை உடைத்தவர்களும் கூட தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டிருக்கிறர்கள். கைது நடவடிக்கைகளுக்கு சாதாரண சட்டப்பிரிவுகளே போதுமானவை. தேசியப் பாதுகாப்புச் சட்டம் போன்ற கருப்புச்சட்டங்கள் தேவையில்லை. பெரியார் சிலையை உடைத்தவர்களுக்கும் சேர்த்துத்தான் இதைச் சொல்கிறோம்" என்கிறார் கொளத்தூர்.மணி. இசைஞானி இளையராஜா சிறீரங்கம் ராஜகோபுரம் கட்டுவதற்காக லட்சக்கணக்கான பணம் அளித்தும் அவரைக் குடமுழுக்கில் கலந்துகொள்ள அனுமதி மறுத்து அவமானப்படுத்தியது பார்ப்பனியம். 90களில் நடைபெற்ற கருவறை நுழைவுப்போராட்டத்தின்போது அரங்கநாதன் சிலை மீது அம்பேத்கர், பெரியார் படங்களை வைத்து கணக்கு தீர்த்தார்கள் ம.க.இ.க தோழர்கள். இப்போது பெரியார் சிலையை வஞ்சகமாய் உடைத்ததற்கான விலையையே பார்ப்பனர்களும் இந்துமத வெறியர்களும் தமிழ்நாடு முழுக்க தந்துகொண்டிருக்கிறார்கள் என்பதே பெரும்பான்மைத் தமிழ்மக்களின் கருத்து.

சந்திப்பு : கவிஞர் சுகுணா திவாகர்பூங்காவிற்கான தனித்த பேட்டி.
.

படிக்க சில

படிக்க சில

அப்சல் குரு, நல்லவர்கள், கெட்டவர்கள்,வில்லன்கள் - சுமந்தா பானர்ஜியின் கட்டுரை. தமிழ்நாட்டில் உள்ள அப்சல் குரு ஆதரவு அறிவு ஜீவிகள் இப்படியெல்லாம் எழுதமாட்டார்கள் என்பதால் இதை குறிப்பிட்டு பரிந்துரைக்கிறேன்.

பிற்பட்டோர்,உயர் கல்வி,இட ஒதுக்கீடு - தேசிய மாதிரி கணக்கெடுப்பு ஆய்வின் அடிப்படையில் கிடைத்த புள்ளிவிபரங்களை ஆதாரமாகக் கொண்டு கே.சுந்தரம் எழுதியுள்ள கட்டுரை.

இந்தியாவில் உழைப்போருக்கு சமூக பாதுகாப்பு குறித்த கட்டுரைகள்/விவாதம்-செமினார் இதழ்

அறிவியலாளர்கள், மதமும்

போலியோ திரும்புகிறது உ.பியில் அதிகமாக, ஏன்

அரசியல் வாழ்வு- பெரியார்

அரசியல் வாழ்வு- பெரியார்

பெரியார் எழுதியவை, பேசியவை அவ்வப்போது விடுதலையில் இடப்படுகின்றன.இன்று 1971ல் பெரியார் எழுதிய தலையங்கம் ஒன்று தரப்பட்டுள்ளது. அதைக் கீழே தந்துள்ளேன்.

இதில் சிப்பாய் கலகம் குறித்தும், காந்தி குறித்தும் பெரியார் எழுதியுள்ளதை கவனியுங்கள். "தொழிலாளர் தொல்லை", "கூலிக்காரர் தொல்லை" என்றெல்லாம் எழுதும் பெரியாரின் குரல் இங்கு யாருக்கு ஆதரவான குரலாக இருக்கிறது. யாருடைய நலனைப் பற்றி பெரியார் பேசுகிறார். அரசியலில் காலித்தனம் புகுத்தப்பட்டது முதல் முதலில் சிப்பாய் கலகத்தின் போது என்று எழுதுவதன் மூலம்பெரியார் சிப்பாய் கலகம் குறித்து எத்தகைய மதிப்பு வைத்திருந்தார் என்பது தெரிகிறது. பெரியாரின் எழுத்தில் பேசப்படும் ஒழுங்கு, பொது ஒழுக்கம் என்பதை கட்டுடைக்காமலே புரிந்து கொள்ளலாம் - பெரியார் ஒரு பழமைவாதியாக, தொழிலாளர் விரோதியாக, சொத்துடையோர் சார்பாக இதை எழுதியிருக்கிறார் என்று. மேலும் காந்தி எப்போதும் வன்முறையை ஆதரித்ததில்லை. செளரிசெளராவில் வன்முறை ஏற்பட்டதும் போராட்டத்தை விலக்கிக் கொண்டார். ஆனால் பெரியார்என்ன எழுதியிருக்கிறார் என்று பாருங்கள்.

திரு என்ற பதிவாளர் தன்னை தொழிற்சங்கவாதி என்று காட்டிக்கொள்கிறார்.ஆனால் கீழ்வெண்மணியில் நடந்த படுகொலைகளை பெரியார் கண்டிக்கவில்லை என்பதையும், அவர்அது குறித்து பழியை யார் மீது போடுகிறார் என்பதையும் , திரு விமர்சித்து எழுதவில்லை. வலைப்பதிவுகளில் பார்பனீயம்,ஏகாதிபத்தியம் என்று எதற்கெடுத்தாலும் பேசித்திரியும் 'இடதுசாரி' களும், பெரியார் சிப்பாய் கலகம் குறித்து எழுதியிருப்பதை விமர்சிப்பார்களா இல்லை மெளனம் சாதிப்பார்களா என்பதை பார்க்க வேண்டும்.

1970 களில் சிம்சன் குழுமத்தில் தொழிற்சங்கங்கள் குறித்த பிரச்சினையில் திமுக தொழிற்சங்கத்திற்கும், பிற தொழிற்சங்கம்/சங்களுக்கும் இடையே கடுமையான போட்டியும், மோதலும் ஏற்ப்பட்டது. அப்போது பெரியார் என்ன எழுதினார், யாரை ஆதரித்தார் என்பது தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், எப்படி கீழ்வெண்மணி கொலைகள் குறித்து பெரியார் எழுதியது ஒரு அதிர்ச்சியை கொடுத்ததோ அது போல் பல சமயங்களில் அவரின் நிலைப்பாடுகளை ஆராய்ந்தால் பெரியார் குறித்த புனித பிம்பங்கள் உடைந்து விடும்.

இப்போதே சிலர் தலித் கண்ணோட்டத்தில் பெரியாரை கேள்விக்குட்படுத்தி பெரியார் அபிமானிகளின் பொய் பிரச்சாரங்களை விமர்சித்து வருகிறார்கள் (உ-ம் புதிய கோடங்கி டிசம்பர்2006ல் ஸ்டாலின் ராஜாங்கம் எழுதியுள்ள கட்டுரை). இந்தப் போக்கு தொடருமானால் இன்னொரு பத்தாண்டுகளில் பெரியார் குறித்த கட்டுக்கதைகள் அம்பலமாகி விடும். அந்த உண்மையான கட்டுடைப்பு இன்று கட்டுடைப்பு என்ற பெயரில் கதை விட்டுக் கொண்டிருக்கும் சிலருக்கு பிடிக்காது போகலாம், ஆனால் அது காலத்தின் கட்டாயம்.
----------------------------------------------------------------------------------------------

அ ர சி ய ல் வா ழ் வு

அரசியல் வாழ்வு நாளுக்கு நாள் மனிதப் பண்பைக் கெடுத்துவருகிறது. அரசியல் போட்டி என்பது மிகமிகக் கீழ்த்தரத்திற்கே போய்க் கொண்டிருக்கின்றது.இவை நம் பின் சந்ததி-களைப் பாழாக்கி விடும் போலத் தெரிகிறது.சட்டம் ஒழுங்கு மீறுதல், பலாத்கார செயலில் ஈடுபடு-தல் முதலிய காரியங்கள் நம் நாட்டில் முதல் முதல் அரசி-யலின் பேரால் தான் தொடக்கமானதாகத் தெரி-கிறது. இதற்குக் காரண°தர்-கள் பார்ப்பனர் என்று தான் சொல்ல வேண்டும். பார்ப்-பனர்களுக்குத் தூண்டுகோல் மனுதரும சா°திரம் தான்.பார்ப்பன ஜாதி என்பதாக ஒரு வகுப்பு நாட்டில் இருக்-கும் வரை சட்டம், ஒழுங்கு, அமைதி, பலாத்காரமற்ற தன்மை முதலியவை இருப்-பது என்பது முடியாத காரி-யமாய்த் தான் இருந்து வரும். பொதுவாகச் சொல்லப்படு-மானால் அரசியலில் காலித்-தனம் புகுத்தப்பட்டது, முதல் முதலில் சிப்பாய்க் கலகத்தின் போது என்றாலும், நாம் அறிய வங்காளப் பார்ப்பனர்-களால் தான் என்று சொல்ல வேண்டும். அதற்குப் பிறகு அரசியல் காலித்தனம் பொது மக்கள் செயலாக ஆக்கப்பட்டது காந்தியால் தான் என்று சொல்லாம்.சட்டசபைகளில், காலித்-தனம் என்பது சத்தியமூர்த்தி அய்யர், மோதிலால் நேரு முதலிய பார்ப்பனர்களா-லேயே ஆகும். சட்டசபை-யின் கவுரவமும் ஒழிக்கப்பட்ட-தற்குக் காரணம் காங்கிர° பக்தர்கள் (காலிகள்) என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலைமை வளர்ச்சிக்கு, உற்சாகம் கொடுத்தவர்கள் பார்ப்பன பத்திரிகைக்காரர்-களே ஆவார்கள்.பொது வாழ்வில் பார்ப்-பனர்களுக்கு உள்ள ஆதிக்கம் குறைந்ததுடன் அவர்கள் காலித் தனத்தை வளர்த்து, நாட்டில் அமைதியையும், பொது ஒழுக்கத்தையும் பாழாக்கிவிட்டார்கள். பார்ப்பனர்கள் தங்களுக்குப் பார்ப்பனர் அல்லாதார்-களின் மானம், ஒழுக்கம், நேர்மை ஆகியவற்றில் பற்-றும், அருகதையும் உள்ள பெரிய மனிதர்கள் என்பவர்-களின் ஆதரவு இல்லை என்று தெரிந்தவுடன், அயோக்கியர்கள், காலிகள், பொறுப்பற்ற கீழ்மக்கள் ஆகியவர்களையே பெரிதும் வேட்டையாடி- விளம்பரம் கொடுத்து, உண்மையில் பெருமையும் கவுரவமுள்ள பெரியவர்கள் என்பவர்களை எல்லாம் மூலையில் ஒடுங்-கும்படி செய்து விட்டார்கள். நல்ல பாரம்பரியத்தின் மதிப்பை எல்லாம் கெடுத்து விட்டார்கள்.நபர்களின் தன்மையைப் பற்றிக் கவலைப்பட வேண்டி-யதில்லை என்றாலும், பண்-பைப் பற்றிக் கவலைப்பட வில்லையானால் மனித சமுதாயத்திற்குப் பாதுகாப்பு எப்படி இருக்க முடியும்?சமதர்மம் பேசுகிறோம். எப்படிப்பட்ட சமதர்மம் ஏற்-பட்டாலும் நம் சமுதாயமாக-வும்,- பொது நாடும், பொது உடைமை சமுதாயமாகவும், பொது உடைமை நாடாகவும் ஆகும். வரையில் ஏழை, பணக்காரன் இருந்து தான் தீருவான். மற்றும் முதலாளி, தொழிலாளி இருந்து தான் தீருவார்கள். எஜமான்,- வேலைக்காரன் இருந்து தான் தீருவார்கள். இந்த நிலை இருக்குமானால் இருக்கும் வரை ஒரு கட்டுத் திட்டம், ஒழுங்குமுறை இருந்தால் தானே மனித வாழ்வும், காரிய நடப்பும் சரிவர நடந்-தேற முடியும்? மனிதனுக்கு இன்று சொத்துரிமை இருக்-கிறது; இதில் மற்றவன் தனது பலாத்காரத்தைப் பயன்-படுத்தி உரிமை பெறுவது என்றால், கையில் வலுத்த-வன் பயனடைவது என்றால், மனித சமுதாயத்தில் அமைதி-யும், சமாதானமும் ஆன வாழ்வு எப்படி இருக்க முடியும்? காந்தி பார்ப்பா-னுக்குக் கையாளாகவும், பணக்காரனுக்குக் கூலியாக-வும், பொறுப்பற்ற மனிதனாக-வும் இருந்ததால் சட்டம் மீறுதல், உரிமையை ஒழித்தல், சண்டித்தனம் செய்தல் முதலிய காரியங்களைத் தூண்டி விடுவதில் உற்சாக-மாக இருந்து விட்டார். இன்றையத் தினம் அறிவில்-லாமல் காந்தியைப் புகழ்ந்து கூறிப் பெருமை அடைகி-றார்களே ஒழிய பலாத்காரம், சமாதான பங்கம், காலித்-தனம் ஆகிய காரியங்களுக்கு யார் காரணம் என்பதைப் புகழ்கிறவர் எவரும் சிந்திப்-பதே இல்லையே.கட்டுப்பாடும், சமாதான-மும் அந்தத் தன்மையைச்- சத்திய சோதனை என்னும் பேரால் உண்டாக்கிவிட்டு, ஜனநாயகத்தையும் ஏற்படுத்தி விட்டால் எந்தக் குணம், எந்தத் தன்மை கொண்ட மக்கள் பெருவாரியாய் இருக்-கிறார்களோ, அந்த மக்கள் ஆட்சி தான் நிலவும். “தொழி-லாளர் தொல்லை”, “கூலிக்-காரர்கள் தொல்லை”, இவர்-களைத் தூண்டிவிட்டு வாழும் காலிகள் தொல்லை என்றால், நாட்டில் இந்த இனம் தானே மெஜாரிட்டி-யாக உள்ளனர்.இந்த நிலையில் சமதருமம், ஜனநாயகம் என்றால் நாடும் மனித சமுதாயமும் எக்கதி ஆகும் என்பதைச் சிந்திக்க வேண்டாமா? ஆகவே நமது “அரசியல் வாழ்வு” என்ப-தைப் பொதுவுடைமை வாழ்-வாக ஆக்கிக் கொண்டால் தான், மக்கள் சமுதாயம் கவலையற்றுச் சாந்தியும், சமாதானமும் பெற்று வாழ முடியும். இல்லாவிட்டால் மக்கள் சித்திரவதைக்கு ஆளாகத்தான் நேரும்.
(17-7-1971 ‘விடுதலை’யில்தந்தை பெரியார் அவர்கள் தலையங்கம்)

"தேர்வு இல்லை; ஆனால்... ''

"தேர்வு இல்லை; ஆனால் நுழைவு உறுதியா?''

அ.கி. வேங்கடசுப்ரமணியன் Dinamani 3rd Jan 2007

மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்பிற்கான நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்வதற்கான சட்ட மசோதாவை அண்மையில் தமிழ்நாடு சட்டப் பேரவை நிறைவேற்றியுள்ளது.
இந்த மசோதாவை தாக்கல் செய்யும்போது, உயர் கல்வித்துறை அமைச்சர் ""கிராமப்புறத்தில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களுக்கும், நகர்ப்புறத்தைச் சார்ந்தவர்களுக்கும் இடையே ஒரு சம ஆடுதளம் (Level playing field) உருவாக்குவதற்காக நுழைவுத் தேர்வை ரத்து செய்வது அவசியமாகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

கிராமப்புற ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தொழிற்கல்வி பயில்வதை எளிதாக்க வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. ஆனால் நுழைவுத் தேர்வை ரத்து செய்து விட்டதாலேயே இது நிறைவேறி விடுமா என்பது கேள்விக்குரியதாக இருக்கிறது.
மேல்நிலைப் பள்ளியிறுதித் தேர்வு எழுதும் மாணவர்களிடையே கிராமப்புற நகர்ப்புற வேறுபாட்டைத் தவிர அரசு சார்ந்த பள்ளிகள், அரசு சாராத பள்ளிகள் என்ற வகையில் பெருத்த வேறுபாடு உள்ளது.
அரசு, நகராட்சி, ஆதிதிராவிட நலத்துறை, கள்ளர் சீரமைப்புத் துறை, சமூக நலத்துறை, வனத்துறை போன்ற அரசு சார்ந்த பொதுத்துறை பள்ளிகள் உள்ளன. இதைத் தவிர அரசு உதவி பெறும் மற்றும் பெறாத தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் போன்றவையும் உள்ளன.
கிராமப்புறத்தில் அரசு சார்ந்த பள்ளிகளில் மேல்நிலைப் பள்ளியிறுதித் தேர்வு எழுதியவர்கள் சுமார் 1.5 லட்சம். தனியார் பள்ளியில் 1.01 லட்சம். நகர்ப்புறத்தில் அரசுப் பள்ளியில் தேர்வு எழுதியவர்கள் 0.82 லட்சம். தனியார் பள்ளியில் 1.76 லட்சம். கிராமம், நகரம் இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் ஏறத்தாழ 45 சதவீத மாணவர்கள் அரசு சார்ந்த பொதுப் பள்ளிகளில் படித்து தேர்வு எழுதியுள்ளனர்.

பள்ளியிறுதி வகுப்பில் தேறியவர்களின் சதவீதம், கிராமப்புற, நகர்ப்புறப் பள்ளிகளுக்கு இடையில் சிறிதும், அரசு சார்ந்த மற்றும் அரசு சாராத பள்ளிகளுக்கு இடையில் பெரிதும் வேறுபடுகிறது.

2006ஆம் ஆண்டு இவ்வகையில் தேர்ச்சி சதவீதம் 2006ஆம் ஆண்டு மேல்நிலைப்பள்ளி தேர்வில் வெற்றி பெற்றவர் சதவீதம் கிராமப்புறம் பொதுத்துறை பள்ளிகள் 61. 14 சதவீதமும், தனியார் பள்ளிகள் 83.71 சதவீதமும், நகர்ப்புறம் பொதுத்துறை பள்ளிகள் 62.70 சதவீதமும், தனியார் பள்ளிகள் 85.76 சதவீதமும் பெற்றுள்ளன.

கிராமமோ, நகரமோ இரண்டிலுமே பொதுத் துறை பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் தனியார் பள்ளிகளைவிட பெரிதும் குறைவாக உள்ளது. இதற்கு ஒரு முக்கியக் காரணம் பொதுத்துறை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் மிகப் பெரும்பான்மையினர் ஏழை எளிய குடும்பங்களில் இருந்து வருபவர்கள்தான். வசதி உள்ள குடும்பத்தில் தாயோ, தந்தையோ அல்லது இருவருமோ படித்திருப்பார்கள். குழந்தைகளின் படிப்பிற்கும் வீட்டுப் பாடத்திற்கும் உதவி செய்வார்கள்.

ஆனால் பொதுத்துறை பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களே பெற்றோராக இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வு அதிகம் தேவைப்படுகிறது. இந்தப் பள்ளிகளின் அடிப்படை வசதிகளும் குறைவு. அதைப் பற்றி சமூகத்தின் ஆர்வமும் அக்கறையும் குறைவு.

பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரியில் நுழைவதற்கு தேர்ச்சி மட்டும் போதாது. வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டில் பயன் பெறுபவர்களும் அவர்களுக்கு என வரையறுக்கப்பட்ட மதிப்பெண்கள் பெற வேண்டும். இந்த மதிப்பெண்கள் பெறுபவர்கள் பெரும்பாலும் நகர்ப்புறப் பள்ளிகளில் படித்துத் தேறியவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

2006ஆம் ஆண்டில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் 200க்கு 194 மதிப்பெண்கள் பெற்ற 6300 மாணவர்களில், 5600க்கும் மேற்பட்டவர்கள் நகர்ப்புறங்களில் இருந்து வந்தவர்கள்தான். இவர்களில் எத்தனை பேர் நகர்ப்புற அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை.

மொத்தம் பள்ளியிறுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் சுமார் 3.84 லட்சம் பேரில் முதல் 10 சதவீதம் அதாவது முதல் 38400 இடங்களில் எத்தனை கிராமப்புற / நகர்ப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளனர் என்பது தெரியவில்லை.
நுழைவுத் தேர்வை ரத்து செய்தாலும் இடங்களை ஒதுக்கினாலும், கிராமப்புற அரசுப் பள்ளியில் இருந்து தேர்ச்சி பெறும் சுமார் 93 ஆயிரம் மாணவர்கள், நகர்ப்புறத்தில் உள்ள அரசு சாரா பள்ளிகளில் இருந்து தேர்ச்சி பெறும் சுமார் 1.52 லட்சம் மாணவர்களுடன் தர வரிசையில் போட்டியிட்டு வெற்றி பெற்றால்தான் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் நுழைய முடியும். இதற்கு என்ன செய்ய முடியும்?

முதலில் கிராமம் மற்றும் நகர்ப்புறத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும். இந்தப் பள்ளிகளுக்கு அனைத்து அடிப்படை வசதிகள், நூலகங்களில் தேவையான புத்தகங்கள், ஆய்வுக் கூடத்துக்கு அவசியமான கருவிகள், ஆசிரியர்களை ஊக்கப்படுத்த சிறப்புத் திட்டங்கள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மாநகராட்சியும் தான், வசூலிக்கும் கல்வி வரியை முழுவதுமாக கல்விக்காகச் செலவிட்டால், நிச்சயமாகச் சிறந்த தனியார் பள்ளிக்கு இணையாக பொதுத்துறை பள்ளிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்க முடியும்.
கிராமப்புற அரசு மேல்நிலைப் பள்ளிகளில், அரசே தனிக் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை உடனடியாகச் செய்து கொடுப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்தப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

மேலே கூறியவற்றைத் தவிர, வேறு ஒரு முக்கியப் பிரச்சினையும் உள்ளது. மேல்நிலைப் பள்ளி தேர்வு எழுதுபவர்கள் பெரும்பாலும் 17 வயது நிரம்பியவர்கள். தமிழ்நாட்டில் இவர்களது எண்ணிக்கை 2006-ஆம் ஆண்டு சுமார் 11.91 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு மாநில பாடத்திட்ட மேல்நிலைத் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 5.22 லட்சம்தான். மைய பாடத்திட்டத்தை (சி.பி.எஸ்.இ.) எழுதியவர்கள் சுமார் 4500 பேர். எனவே 17 வயது நிரம்பியவர்களில் பாதிப்பேருக்கு மேல் பள்ளியிறுதித் தேர்வை எழுதவில்லை. இவர்களில் பெரும்பாலோர் கிராமப்புறத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள்தான்.

கிராமப்புற மக்கள்தொகை நகர்ப்புற மக்கள்தொகையைவிட சுமார் ஒன்றரை மடங்கு அதிகம் இருந்தாலும், கிராமப்புறங்களில் பள்ளியிறுதித் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை நகர்ப்புறத்தைவிட குறைவாக உள்ளது. இதற்கு ஒரு முக்கியக் காரணம் பள்ளிப் படிப்பை இறுதி வரை தொடராமல் இடையிலே விடுபடுதல்.

எனவே கிராமப்புறங்களில் தொடக்கக் கல்வி மேம்படுத்தப்பட வேண்டும். கிராமப்புறத்தில் உள்ள தன்னார்வ நிறுவனங்கள், ஓய்வு பெற்ற அலுவலர்கள், இளைஞர் அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள் இவை அனைத்தும் ஊராட்சியுடன் இணைந்து இந்தப் பணிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் கிராமப்புறத்திலிருந்து மேல்நிலைப் பள்ளி இறுதித் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை, மக்கள் தொகையில் கிராமப்புற மக்கள் இருக்கும் விகிதத்திற்கு இணையாக இருக்க வேண்டும். அதேபோல் அரசுப் பள்ளியில் இருந்து தேர்வு பெறும் மாணவர்களின் சதவீதத்துக்கும், தரவரிசையும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக உயர வேண்டும்.

இவை இரண்டையும் செய்யாவிட்டால் நுழைவுத் தேர்வு ரத்து ஆனாலும், இட ஒதுக்கீடு இருந்தாலும், கிராமப்புற ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, மருத்துவம் மற்றும் தொழிற்கல்வியைப் பொருத்தமட்டில் ""நுழைவுத் தேர்வு இல்லை. ஆனாலும் நுழைய முடியவில்லை'' என்ற நிலையே தொடரும்.