சாந்தி, பாலினம், பால்

சாந்தி, பாலினம், பால்,அறிவியல்

சாந்தி வென்ற வெள்ளிப் பதக்கம் திரும்பப் பெறப்படும் என்று செய்திகள் வந்துள்ளன.அவர் முந்தைய போட்டிகளில் எப்படி பெண்களில் பிரிவில் பங்கேற்று ஒடினார், அப்போது இந்தப் பிரச்சினை எழவில்லையா என்ற கேள்விகள் எழுகின்றன.1988 ஒலிம்பிக் போட்டியிலும் இது போன்ற பிரச்சினைஎழுந்தது, பதக்கம் வென்ற மரியா பட்டினோ பெண் அல்ல என்று முடிவு செய்யப்பட்டு பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதாயிற்று.அவர் தளரவில்லை. மீண்டும் தான் பெண் என்று நிரூபிக்க விரும்பினார்.பின்னர் செய்யப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் அவர் பெண்கள் பிரிவில் பங்கேற்க்க அனுமதிக்கப்பட்டார். இது போன்ற சர்ச்சைகளை விரிவாக அலசியிருக்கிறார் ஆனி பாஸ்டோ ஸ்டெர்லிங் என்ற அறிவியலாளர், பெண்ணியவாதி. பெண் என்று எந்த அடிப்படையில், எந்தச் சோதனைகளைக் கொண்டு முடிவு செய்வது. அறிவியலால் 100% பெண் இவர் என்று கூறப்படும் போது அதன் பொருள் என்ன. இது போன்ற பல கேள்விகளை எழுப்பியிருக்கிறார் அவர்.

இதையெல்லாம் அறிந்தவர்களுக்கு, பெண்ணிய அறிவியலுடன் பரிச்சயம் உடையவர்களுக்குஇந்த சர்ச்சையைப் புரிந்து கொள்ள முடியும். பால், பாலினம் குறித்த வேறுபாட்டினையும் இங்குகுறிப்பிட வேண்டும்.சாந்தியோ அல்லது அவர் சார்பிலோ இந்தச் சோதனைகள் குறித்து கேள்வி எழுப்பபட வேண்டும். அவை ஒன்றேதான் ஆணா அல்லது பெண்ணா என்பதை முடிவு செய்யஒரே வழியா என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டும். சாந்தி விஷயத்தில் பத்திரிகைகள் கிடைத்த தகவல்களை வெளியிடுகின்றன.ஆனால் மருத்துவ, அறிவியல் ரீதியாகவும், இது போன்ற முந்தைய சர்ச்சைகளின் அடிப்படையிலும், பால் குறித்த பெண்ணிய கருத்துக்களையும், ஆனி போன்றவர்கள்செய்துள்ள ஆய்வுகளையும் தொகுத்து அலசினால் ஒரு புரிதல் கிட்டலாம். தமிழில் இதைச் செய்யப்போவது யார்.

ஒரு காலத்தில் எனக்கு பெண்ணியம்,அறிவியல் குறித்து மிகுந்த ஆர்வம் இருந்தது.அப்போது பலவற்றை தேடிப் பிடித்துப் படித்தேன். சில நண்பர்கள் அதற்கு உதவி புரிந்தனர். ஒரு அறிமுக கட்டுரையாக பெண்ணியம்,அறிவியல் குறித்து புறப்பாட்டில் எழுதினேன். சில க்ட்டுரைகளின் பிரதிகளைக் கோரி அவருக்கு எழுதினேன். ஆனி பாஸ்ட் ஸ்டெர்லிங்கின் கட்டுரைகளகளும், நூலும் அவரிடமிருந்து எனக்கு கிடைத்தன. அவை ஒரு புதிய வெளிச்சத்தினைத் தந்தன. இது போல் பலருடைய எழுத்துக்களை அப்போதுபடித்தேன். இந்த செய்தியைப் படித்த உடன் என் நினைவிற்கு வந்த பெயர் அவருடையதுதான். இன்று பெண்ணியம் அறிவியல் குறித்து ஆர்வம் இருந்தாலும் என் முன்னுரிமை அதற்கு இல்லை. மேலும் இதில் தேடிப் பிடித்து,படித்து எழுதுவதில் இப்போது ஆர்வமும் இல்லை. எனவே நான் இந்த சர்ச்சை குறித்து எதையாவது விரிவாக எழுதிவிடுவேன் என்று பயப்பட வேண்டாம் :)

8 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

பால்,பாலினம் அப்படின்னா என்னாங்க.ஒன்னுமே புரியல

9:54 AM  
Blogger Boston Bala மொழிந்தது...

---ஆனி பாஸ்டோ ஸ்டெர்லிங் என்ற அறிவியலாளர்,---

can you give some more details? How to spell her name...

Thanks in anticipation

10:59 AM  
Anonymous johan -paris மொழிந்தது...

அப்பாடா!
நீங்களாவது இப்பெண்ணைத் துயிலுரியாமல் விட்டீர்களே!!
நன்றி
யோகன் பாரிஸ்

11:07 AM  
Blogger மு. சுந்தரமூர்த்தி மொழிந்தது...

Bala,
//can you give some more details? How to spell her name...//

Here is the website of Anne Fausto-Sterling

http://bms.brown.edu/faculty/f/afs/afs.html

12:34 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

Thanks Sundaramurthy.I was about to give the link.

8:32 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

பால்,பாலினம் அப்படின்னா என்னாங்க.ஒன்னுமே புரியல

பால் = sex,பாலினம்=gender

8:33 AM  
Blogger ரியோ மொழிந்தது...

//அப்பாடா!
நீங்களாவது இப்பெண்ணைத் துயிலுரியாமல் விட்டீர்களே!!
நன்றி
யோகன் பாரிஸ் //
அதாவது, ஆண் தன்மை மிகுந்துள்ள சாந்தி பந்தயத்தில் கலந்து கொண்டதால் மற்ற பெண்களுக்கு பாதிப்பா என்று ஆராய்ந்தால், சாந்தியை துகிலுறிந்ததாக அர்த்தாமாமாம்

10:14 AM  
Blogger SK மொழிந்தது...

இது முழுதும் பெண்களுக்கான ஒரு போட்டி.
இதில் சாந்தியை, பந்தய விதிகளின் படி பெண் எனக் கருதப்பட முடியாத ஒருவரை, கலந்து கொள்ளச் செய்து, அவரை ஊக்குவித்து, எப்படியவது பதக்கம் பெற வேண்டும் என சதி செய்த துச்சாதனா இந்திய விளையாட்டு சங்க நிர்வாகிகளையே நாம் சாட வேண்டும்.

அப்பாவி சாந்தி எனும், தான் யார் என இன்னும் அறியமுடியாத, அப்பாவி சாந்தியை அல்ல!

11:51 AM  

Post a Comment

<< முகப்பு