என் தேவனே உம்மிடம்

என் தேவனே உம்மிடம்

என் தேவனே உம்மிடம் ஒன்று கேட்பேன்
என் தேவியின் பொன்முகம் என்று பார்ப்பேன்
நீரல்லவோ தந்தது இந்த வாழ்க்கை
நீர் காட்டினால் போகிறேன் அந்தப் பாதை

என்று துவங்கும் இப்பாடல் இது இவர்களின் கதை என்ற படத்தில் ஏ.எம்.ராஜா பாடியது.இது அநேகமாக 70களின் இறுதி அல்லது 80களின் துவக்கத்தில் வெளிவந்த(?) படமாகஇருக்கலாம். இசை ஏ.எம்.ராஜாவா அல்லது சங்கர்-கணேஷா என்று நினைவில்லை.இது தவிர நேற்று என்னைப் பார்த்த நிலா என்று துவங்கும் பாடல் (ஏ.எம்.ராஜா பாடியது)உட்பட வேறு சில பாடல்களும் இப்படத்தில் உண்டு என்பதாக ஞாபகம்.

1960 களின் துவக்கத்தில் தமிழில் பாடுவதை, இசை அமைப்பதை நிறுத்திய ஏ.எம்.ராஜா மீண்டும் 70களின் துவக்கத்தில் பாடத் துவங்கினார். ரங்க ராட்டினம் படத்தில் இடம் பெற்ற முத்தாரமே உன் ஊடல் என்னவோ (எல்.ஆர்.ஈஸ்வரியுடன் சங்கர்-கணேஷ் இசை அமைப்பில்)அப்படிப் பாடிய முதல் பாடல் என்று நினைக்கிறேன். தொடர்ந்து அவர் பாடினாலும் அவர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை குறைவுதான். அதிகபட்சம் முப்பது இருக்கும்என்று நினைக்கிறேன்.

இணையத்தில் இப்பாடல்கள் கேட்க/தரவிறக்க உள்ளனவா. தெரிந்தவர்கள் தகவல் தரலாம். நன்றி

2 மறுமொழிகள்:

Blogger சுந்தரவடிவேல் மொழிந்தது...

http://music.coolgoose.com/music/song.php?id=209666

அங்கே முத்தாரமே இருக்கிறதெனத் தெரிகிறது. தரவிறக்கவில்லை. இன்றைக்கு முழுக்க அது மனதில் ஓடிக்கொண்டிருக்கப் போகிறது!

7:26 AM  
Blogger Hari மொழிந்தது...

bollywoodmusic.com

இந்த பக்கத்தின் இறுதியில், "Tamil" என்ற லிங்க இருக்கும். அதை கிள்க்குங்கள், தமிழ் பாடல்களின் அமுதசுரபி அது.

1:40 AM  

Post a Comment

<< முகப்பு