க்ரீமி லேயரும்

க்ரீமி லேயரும்

க்ரீமி லேயர் குறித்து பூங்காவில் சில கருத்துக்கள் தொகுப்பாளரால் முன் வைக்கப்பட்டுள்ளன.க்ரீமி லேயரை உச்சநீதிமன்றம் இந்த்ரா ச்வ்கானி வழக்கில் முன் வைத்தது.9 நீதிபதிகளில் 8 பேர்அதை ஆதரித்து தீர்ப்பு வழங்கினர்.இதை ஏற்க மறுத்த நீதிபதி ரத்தின வேல் பாண்டியன்.

மண்டல்கமிஷன் பரிந்துரையின் பேரில் பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் போது பிற்பட்டோரில்முற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது என்பதை இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்ஸிட்)ஆதரித்தது.நீதிபதிகள் க்ரீமி லேயரை ஏன் விலக்க வேண்டும் என்பதை தீர்ப்பில் விளக்கியுள்ளனர்.மத்திய அரசும்,மாநில அரசுகள் பலவும் அத்தீர்ப்பின் அடிப்படையில் க்ரீமி லேயரை வரையரைசெய்து இட ஒதுக்கீட்டினை அமுல் செய்துள்ளன.ஆனால் இது எளிதாக நடந்துவிடவில்லை.இந்த்ரா சவ்கானி 2 வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்சினையை விரிவாக அலசியது,இது குறித்தும் கேரளத்தில் இதை அமுல் செய்வதில் எழுந்த சர்ச்சை குறித்தும் இங்கு தகவல்கள்உள்ளன.
க்ரீமி லேயரை அமுல் செய்வது எளிதாக இல்லை.இருப்பினும் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புகள் காரணமாக பல மாநிலங்கள் அதை விரும்பியோ விரும்பாமலோ அமுல் செய்தன. தமிழ் நாட்டில் அது அமுல் செய்யப்படவில்லை.

இங்குதான் சமூக நீதி என்ற பெயரில் ஆதிக்க சக்திகளை திருப்தி செய்வதை நியாயப்படுத்துவதை அனைத்து கட்சிகளும் ஆதரிக்குமே. இட ஒதுக்கீடு இங்கு ஒரு புனிதப் பசு. அதைக் கேள்வி கேட்பது, 69% இட ஒதுக்கீட்டினை விமர்சிப்பது போன்றவற்றைச் செய்ய உச்ச நீதி மன்றத்திற்கே அதிகாரம் கூடாது, கிடையாது என்று பேசும் 'பகுத்தறிவாளர்கள்'
இங்கு பலருண்டு, தமிழ் நாட்டிற்கு சாதகமாய் தீர்ப்பு தந்தால் சரி, இட ஒதுக்கீட்டினை கேள்வி கேட்டால் நீதிபதியின் சாதியைப் பேசுகின்ற கும்பலுக்குப் பெயர் பகுத்தறிவாளர்கள் என்றால்அதை விட அபத்தம் வேறில்லை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள், கருத்துக்கள் விமர்சிக்கப்ட்டுள்ளன. மிகவும் கடுமையானவிமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.மேலும் உச்சநீதிமன்றம் தீர்ப்புகளில் கூறிய கருத்துக்களும்அலசி ஆராயப்பட்டு விமர்சிக்கப்பட்டுள்ளன.அறிவார்ந்த விமர்சனத்திற்கும், வெற்று கூச்சலுக்கும்வேறுபாடு உண்டு.அரைகுறையாக புரிந்து கொண்டு அல்லது புரிந்து கொள்ளாமலே உச்சநீதிமன்றம்குறித்து கூச்சல் போடுவது அறிவார்ந்த விமர்சனமாகாது.அப்படிச் செய்வதும், அது போல் எழுதுவதும்எளிது.அதன் மூலம் சில அரிப்புகளை சொரிந்து கொடுக்கலாம்.

பூங்கா தொகுப்பாளர் சில அடிப்படை உண்மைகளையும், இட ஒதுக்கீடு குறித்த சட்டம், தீர்ப்புகளையும் புரிந்து கொள்ளாமல் எழுதியிருக்கிறார் என்பது என் கருத்து.

5 மறுமொழிகள்:

Blogger சாம்பார் மொழிந்தது...

Mr. Ravi,

What's your opinion about these Legal Experts


Creamy layer verdict draws flak from legal experts

4:57 PM  
Blogger BadNewsIndia மொழிந்தது...

ரவி ஸ்ரீநிவாஸ், நல்ல கேள்விகள்.

இப்பொழுதுதான் பூங்காவில் அந்த பதிப்பை படித்தேன். இணையத்தை நடத்தும் அவர்களுக்கு இந்த ஒருதலைப் பட்ட கருத்து இருந்தால், அங்கு தேர்வும் செய்யும் பதிவுகளும் அப்படித்தான் இருக்கும்.
----------
ஒரு கப்பல் மூழ்கும் நிலையில் இருக்கிறது. 100 பேர் இருக்கும் கப்பலில் 50 life-jacket தான் இருக்கிறது.
50 பேர் life-jacket மாட்டி தண்ணீரில் குதிக்கிறார்கள்.
மீதி 50 பேர், life-jacket இல்லாமல் தண்ணீரில் தத்தளிக்கிறார்கள்.
life-jacket அணிந்த 50 பேர் கரை சேர்கிறார்கள்.

தண்ணீரில் தத்தளிக்கும் 50 பேர் கரை ஏறியவர்களைப் பார்த்து "ஐயா கணவான் மார்களே. கரை தான் ஏறிட்டீங்களே, உங்க கிட்ட இருக்கற 50 life-jacket கழட்டி தூக்கி போடுங்க, நாங்களும் பொழச்சுக்கறோம்" என்று கூக்குரலிடுகிறார்கள்.

இதைக்கேட்டு கரை ஏறிய ஆட்கள் "அதெல்லாம் தர முடியாது. life-jacket நல்ல வெலைக்கு பக்கத்து ஊர்ல வாங்கிக்கராங்களாம். எங்களுக்கு நல்ல பணம் கெடைக்கும். நீங்க எக்கேடோ செத்து ஒழிங்க. நாங்க போறோம்" என்று சொன்னார்கள்.

பாவம், 50 பேரும் தண்ணீரில் மூச்சு திணறி மரிப்பார்கள்.
----------

க்ரீமி லேயர், define பண்ண தெரியாமல் இருப்பது ஒரு காரணம் என்பதெல்லாம் ரொம்ப அபத்தம் இல்லியா?

10:05 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

இந்தியர்களுக்கே கிரீமிலேயர் பற்றி தெரியவில்லை. பேத்துகிறார்கள். இலங்கைக்காரருக்கு எப்படி தெரியும்? போனாப் போகிறார் விட்டுவிடுங்கள்

11:13 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

சாம்பார்,

//What's your opinion about these Legal Experts//

அவர்கள் "சில அடிப்படை உண்மைகளையும், இட ஒதுக்கீடு குறித்த சட்டம், தீர்ப்புகளையும் புரிந்து கொள்ளாமல்" பேசியிருக்கிறார்கள்.

-ரசம்

9:49 PM  
Blogger bala மொழிந்தது...

//இதைக்கேட்டு கரை ஏறிய ஆட்கள் "அதெல்லாம் தர முடியாது. life-jacket நல்ல வெலைக்கு பக்கத்து ஊர்ல வாங்கிக்கராங்களாம். எங்களுக்கு நல்ல பணம் கெடைக்கும். நீங்க எக்கேடோ செத்து ஒழிங்க. நாங்க போறோம்" என்று சொன்னார்கள்.

பாவம், 50 பேரும் தண்ணீரில் மூச்சு திணறி மரிப்பார்கள்//

BNI அய்யா,

நீங்க ஒட்டு மொத்தமா Creamy Layer OBC களைப் பத்தி இப்படி சொல்வது சரியில்லை. நம்ம இணையத்தில் வளைய வரும் க்ரீமி லேயர்கள் அந்த லைஃப் ஜச்கெட்டை குறைந்த விலையில் நம்ம ஊர்லியே நேர்மையா வித்துடுவாங்க..அப்புறம் reservation முறையில் இன்னும் ஒரு life jacket ஓசியில் வாங்குவாங்க. இப்படி செஞ்சாக்கதான் அவங்க பெயர்
Creamy Layer OBC.

பாலா

12:23 AM  

Post a Comment

<< முகப்பு