பூங்காவும் அப்சல் தண்டனை குறித்த சர்ச்சையும்

பூங்காவும் அப்சல் தண்டனை குறித்த சர்ச்சையும்

இந்த வார பூங்காவில் மரண தண்டனைக்கு எதிரான கட்டுரை, அப்சல் தண்டனையில் அப்சலுக்கு ஆதரவாக மூன்று கட்டுரைகள், எதிராக ஒரு கட்டுரை என்று வலைப்பதிவுகளிலிருந்து எடுத்து இட்டிருக்கிறார்(கள்). தொகுப்பாளர் குறிப்பே அவர்(கள்) எந்த கருத்திற்கு ஆதரவாக இருக்கிறார்கள்என்பதை காட்டுகிறது. அப்சலுக்கான தண்டனை குறித்து நான் பதிவுகள் இட்டிருக்கிறேன்.பிற வலைப்பதிவாளர்கள் தராத தகவல்களையும் கொடுத்திருக்கிறேன். திண்ணையில் எழுதிய கட்டுரையையும் வலைப்பதிவில்
இட்டிருக்கிறேன். பிரபு ராஜதுரை இரண்டு பதிவுகள் எழுதியிருக்கிறார்.
இது போல் வேறு சில பதிவுகளையும் என்னால் குறிப்பிட முடியும்.
பூங்காவில் இவற்றிலிருந்து ஒன்று கூட இடம் பெறவில்லை.

ஒரு பக்க சார்பாக மூன்று , இன்னொரு பக்க சார்பாக ஒன்று என்று கொடுத்திருப்பதன் மூலம்எதை அவர்(கள்) நிரூபிக்க முயல்கின்றார்(கள்). பூங்கா இந்த சர்ச்சையில் என் பதிவுகளிலிருந்து ஒன்றைக் கூட,தெரிவு செய்யாததன் மூலமும், ராஜதுரையின் ஒரு பதிவினைக் கூட தெரிவு செய்யாதன் மூலமும், வேறு சில பதிவுகளை தவிர்த்திருப்பதன் மூலமும் சில கருத்துக்களுக்கு பூங்காவில் இடம் இல்லை என்று சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது. என் பதிவுகள் தவிர திண்ணையிலும் என் கருத்துக்கள் உள்ளன.

எனவே எப்படி பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடாதோ அது போல் பூங்கா சில கருத்துக்கள் இல்லாதது போல் தொகுத்துக் கொடுத்தால் அவை இல்லாமல் போய்விடமாட்டா.

5 மறுமொழிகள்:

Blogger ravi srinivas மொழிந்தது...

test 1 2 3

11:37 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

//இந்தவாரப்பூங்காவில் தொகுக்கப்பட்ட மரணதண்டணை குறித்த ரோசாவசந்த, தமிழ்சசி, செல்வநாயகி போன்றவர்களின் கட்டுரைகளை வாசிக்கும்போது வலைப்பதிவினூடாக ஒரு அறிவுச்சூழல் உருவாகும் என்ற நம்பிக்கை வருகின்றது.///

அதற்கு மாற்றாக அறிவுகெட்ட சூழல் உருவாகும் பதிவுகளை எல்லாம் போட முடியுமா ரவி? எதிர்பார்த்தது தானே. அடுத்த பதிவில் பாருங்கள் இன்னும் வேடிக்கைகளை. :)))

11:58 AM  
Blogger PRABHU RAJADURAI மொழிந்தது...

திரு.ரவி
எனது கருத்துக்கு தாங்கள் அளித்த முக்கியத்துவத்துக்கு நன்றி. ஆனால் அது பூங்காவின் தவறாக இருக்க முடியாது. ஏனெனில் எழுதியவர்கள் அனுமதித்தாலே அவர்கள் வெளியிடுகிறார்கள். இரண்டாவது நான் எழுதிய பதிவு ஒன்றுதான். இரண்டு அல்ல...

1:20 PM  
Blogger ungal cram மொழிந்தது...

Hi

I welcome you to my startup's new launch, www.pdstext.com. It is an online Tamil text editor in Unicode. You can also search Google, Yahoo! and MSN in Tamil from within the site.

I look forward to your feedback and suggestions. Please spread the word if you like the service.

Regards

C Ramesh

9:38 AM  
Blogger ROSAVASANTH மொழிந்தது...

பூங்கா இதற்கு விளக்கம் அளித்துள்ளதை தொடர்ந்து, அந்த விளக்கத்தில் பிரச்சனை இருந்தால் ரவி அதை எழுத வேண்டும். அல்லது தனது அவசர குடுக்கைத்தனத்திற்கு ரவி மன்னிப்பு கேட்கவேண்டும். ரவியின் விவேகம் எந்த அளவு என்பது அடுத்த சில நாட்களில்தான் தெரியவரும். (ரவி என்ன வகை விவேகத்தை காட்டுவார் என்பது எனக்கு தெரியும் என்றாலும்..)

5:48 AM  

Post a Comment

<< முகப்பு