அப்சல் குறித்த சர்ச்சையும்...

அப்சல் குறித்த சர்ச்சையும்...

அப்சல் குருவிற்கு ஆதரவாக இன்று வைக்கப்படும் சில வாதங்களுக்கு உச்ச நீதி மன்ற தீர்ப்பில்பதிலிருக்கிறது. அவர் தீவிரவாதக் குழுவின் உறுப்பினர் இல்லை என்பதை ஏற்கும் நீதிபதிகள் அவர்அந்த சதித் திட்டத்திற்கு எப்படி உடந்தையாக இருந்தார் என்பதையும் விளக்குகிறார்கள். மேலும்அவருக்கு எதிராக உள்ள சாட்சியங்களையும் விரிவாக அலசியிருக்கிறார்கள்.அந்த சாட்சியங்கள்வெறும் தொலைபேசி உரையாடல்(கள்) மட்டுமல்ல.அதே போல் அவருக்கு நீதி மறுக்கப்பட்டது என்பதையும் அவர்கள் ஏற்கவில்லை.அதற்கான விளக்கமும் தீர்ப்பில் இருக்கிறது. ஆனால் சிலவலைப்பதிவாளர்கள் மீண்டும் மீண்டும் உச்ச நீதிமன்றம் நிராகரித்த வாதங்களையே முன்வைக்கிறார்கள். அது மட்டுமின்றி உச்ச நீதி மன்றம் சந்தேகத்தின் பலனை யாருக்குத் தந்தது,யாரை எந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளி(கள்) என்று தீர்மானித்தது என்பதை அவர்கள் குறிப்பிடுவதேயில்லை.

இப்படி விவாதிப்பவர்கள், அடிப்படை உண்மைகளைக் கூட புரிந்து கொள்ள முயற்சிக்காமல்பிறரை குற்றம் சாட்ட முயல்பவர்களின் பொது புத்தி எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதுஅவர்களின் பதிவுகளையும், அவர்கள் இட்டுள்ள பின்னூட்டங்களையும் படித்தால் தெரிகிறது.

காவல் துறை கை காட்டுபவர்களையெல்லாம் குற்றவாளிகள் என்று நீதிமன்றங்கள் தீர்மானிப்பதில்லை என்ற மிக எளிய அடிப்படை உண்மையைக் கூட புரிந்து கொள்ளாமல் ஒருவர் எழுதுகிறார்.சித்திரவதை போன்றவற்றிற்காக காவல் துறை மீது வழக்குத் தொடரப்பட்டு நீதிமன்றங்கள் நட்ட ஈடு வழங்கியுள்ளன (e.g.Saheli V. Commissioner of Police,Nilabati Behra V. State of Orissa) .காவல் துறை சித்திரவதை மாற்றும் கொடுமைகளைக் குறிப்பிடும் கிலானி இதை முன்னுதாரணம் காட்டி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.

அரசியல் சட்ட டார்ட் (constitutional tort) என்பது இந்தியாவில் இருக்கிறது.அரசன்/அரசு தவறு செய்யாது என்ற கோட்பாடு இந்தியாவில் நிராகரிக்கப்பட்டு பலஆண்டுகள் ஆகி விட்டன. (தேவையானால் இது குறித்து பின்னர் எழுதுகிறேன், வழக்குகளைஉதாரணம் காட்டுகிறேன்). இதையெல்லாம் பல வலைப்பதிவர்கள் கருத்தில் கொண்டதாகவே தெரியவில்லை. நான் கூறுவது தவறு, இந்தியாவில் constitutional tort இல்லை, அந்தக் கோட்பாடு இங்கு செல்லதக்கது அல்ல என்று கருதுபவர்கள் தங்கள் கருத்துக்களை முன் வைக்கலாம்.விவாதிக்க நான் தயார்.

ஒரு வகையில் இதையெல்லாம் எழுதுவது கூட வீண் என்றே தோன்றுகிறது. பல பதிவுகளைப் படித்த பின் சலிப்பும், ஏமாற்றமுமே மிஞ்சியது. என் கருத்துக்களை ஏற்கனவே எழுதிவிட்டேன். மீண்டும் அடுத்த வாரம் என் கருத்துக்களை எழுதுகிறேன்.

4 மறுமொழிகள்:

Blogger ravi srinivas மொழிந்தது...

1 2 3 testing

10:32 AM  
Anonymous குழலி மொழிந்தது...

அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. எல்லாரும் நேர் ரூட்டுலே போனா நாங்க கிராஸா தான் போவோம். அப்போ தானே எங்களை எல்லாரும் பார்ப்பாங்க. இல்லாவிடில் யாராவது எங்களை சீண்டுவாங்களா

10:59 AM  
Blogger enRenRum-anbudan.BALA மொழிந்தது...

Ravi,
The comment above seems to have not been written by "original" kuzhali !!!

1:48 AM  
Blogger சீனு மொழிந்தது...

//ஒரு வகையில் இதையெல்லாம் எழுதுவது கூட வீண் என்றே தோன்றுகிறது. பல பதிவுகளைப் படித்த பின் சலிப்பும், ஏமாற்றமுமே மிஞ்சியது.//

அதே தான் சார். யாரும் நேர்மையாக ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ இல்லை.

//அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. எல்லாரும் நேர் ரூட்டுலே போனா நாங்க கிராஸா தான் போவோம். அப்போ தானே எங்களை எல்லாரும் பார்ப்பாங்க. //

அப்டி போடு.

12:31 PM  

Post a Comment

<< முகப்பு