மட்டையடிக்க சில மகாவாக்கியங்கள்

மட்டையடிக்க சில மகாவாக்கியங்கள்

வலைப்பதிவர்கள் சிலர் மட்டையடிக்க மிகவும் சிரமப்படுகிறார்கள்.அவர்களுக்கு உதவும் பொருட்டு
சில மகா வாக்கியங்கள் கீழே.
1,இன்றைய சரி நாளை தவறாக இருக்கலாம்.நாளைய தவறு நேற்று சரியாகவும், இன்று சரியில்லாமலும் இருக்கலாம்.எது சரி என்று யார் சொல்ல முடியும்.எனவே அப்சலுக்குமரண தண்டனை கூடாது

.2, நீதிமன்றங்கள் தரும் தீர்ப்பு சட்டப்படி சரியாக இருந்தாலும், அற நோக்கில் அநீதியாக இருக்கலாம். எதையும் வெறும் சட்டக் கண்ணோட்டத்திற்கு அப்பால் புரிந்துகொள்ள வேண்டும். அறக்கணோட்டம் திராவிட அறக் கண்ணோட்டம் என்று பொருள் கொள்க.திராவிட அறக்கண்ணோட்டம் இன்றைய நிலவரப்படி மரணதண்டனைக்கு எதிரானது.எனவே அப்சலை தூக்கில் போடுவது தவறு

.3,மரண தண்டனை சட்டத்தின் தீர்ப்புதான், சமூகத்தின் தீர்ப்பல்ல.சமூகம் சட்டத்தினை விடஉயர்ந்தது.சமூகத்திற்காக சட்டமே, அன்றி சட்டத்திற்காக சமூகம் இல்லை

4,வரலாறுதான் எது சரி, தவறு என்று தீர்மானிக்கும். எனவே அப்சல் குறித்து வரலாறு தீர்மானிக்கட்டும். சட்டமோ,நீதிமன்றமோ தீர்மானிக்க வேண்டாம்

5,தேசத்துரோகம் என்று கூறுவது தவறு, இந்தியா ஒரு தேசமாக உருவாகவே இல்லை,இது சாதிய சமூகமாக இருக்கிறது, அப்படி இருக்கும் போது தேசத்துரோகம் எப்படிசாத்தியமாகும்.

6,பாரளுமன்றம் ஒரு கட்டிடம்தான்.காலனிய ஆட்சியின் போது கட்டப்பட்ட காலனியத்தின்குறியீடான பாராளுமன்றத்தினை தகர்ப்பதா தவறு.

7,கொல்லாமையே திராவிடர் அறம், மரண தண்டனையை புகுத்தியது ஆர்ய வந்தேறிகள்.மரண தண்டனை திராவிட,தமிழர் நாகரித்திற்கு முரணானது.எனவே அப்சலை தூக்கிலடக்கூடாது.

தேவைப்பட்டால் இன்னும் வரும்....

11 மறுமொழிகள்:

Blogger bala மொழிந்தது...

இன்னும் ஒரு மகா வாக்கியம்..

"வஞ்சகம் பேசி ராவணனைக் கொன்ற ராமனை தூக்கில் போட துப்பில்லாத ஆரியம் இன்று "அஃப்சல்க்கு தூக்கு "என்று இரட்டை நிலை எடுப்பது புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றே."

8:43 AM  
Blogger PKS மொழிந்தது...

ரவி,

சீரியஸாக எழுதுகிற உங்களால் பகடியாக எழுத முடியுமா என்ற கேள்வி எனக்குள் இருந்தது. முடியும் என்பதை இந்தப் பதிவு காட்டுகிறது. அப்பப்போ இப்படிப் பகடியாகவும் எழுதுங்கள். :-)

- பி.கே. சிவகுமார்

8:54 AM  
Blogger Boston Bala மொழிந்தது...

:-) கலக்கல் என்பதைத் தவிர வேறெதுவும் சொல்லவரவில்லை.

2:23 AM  
Blogger Muse (# 5279076) மொழிந்தது...

ரவி,

ரஸிக்கிறேன்.

5:42 AM  
Blogger CT மொழிந்தது...

:-))

6:41 PM  
Blogger Nambi மொழிந்தது...

Few more:

1. If one can demolish Masjid why not parliament?

2. Make some comments,when asked for explanation run away saying that I am sooooo busy.

-Nambi

12:44 AM  
Blogger செந்தழல் ரவி மொழிந்தது...

:))))))))))))

3:04 AM  
Blogger ROSAVASANTH மொழிந்தது...

ரவி, எங்கோ இடிக்கிரதே, எதற்கு இத்தனை சிரமம்? உங்கள் வலைப்பதிவிற்கு ஒரு லிங்க் போதுமே!?

3:57 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

மருதநாயகம்் அவர்கள் பதிவில் இறைஅடியான் பின்னூட்டத்தை பாருங்கள்

http://maruthanayagam.blogspot.com/2006/10/blog-post.html

4:27 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

As I am on travel there will be delays in publishing comments.

5:53 AM  
Anonymous R Gopu மொழிந்தது...

தூக்கிலிட்டு தீவிரவாதியை கொல்லலாமா? அவனுக்கு சிலை வைத்து பூசை செய்ய வேண்டும் (சந்தனம் பூசினால் அவர்களுக்கு மரண தண்டணை கொடுக்கலாம்.முதலில் "ஆரிய நரி" காந்திக்கும் செருப்பு மாலைப்போட வேண்டும். "பெரியார்" சிலையை மெக்காவில் வைக்க வேண்டும். நல்லவேளை தூயத்தமிழர் கட்டிய ஜார்ஜ் கோட்டையிலாவது திராவிட ஆட்சி நடக்கிறதே!

2:55 AM  

Post a Comment

<< முகப்பு