மரண தண்டனையா, மன்னிப்பா ?

மரண தண்டனையா, மன்னிப்பா ?

முகமது அப்சல் குருவின் மரண தண்டனையினை நிறுத்தக் கோரியும், அவருக்கு கருணைகாண்பித்து தண்டனையினை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரியும் சில கட்சிகள்,தனி நபர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.அவரைதூக்கிலிட்டால் அது இந்திய-பாகிஸ்தான் அமைதி நடவடிக்கைகளை பாதிக்கும் என்றும்கூறப்பட்டுள்ளது. காஷ்மீரில் உள்ள இந்திய கம்யுனிஸ்ட் கட்சி(மார்க்ஸிட்)யின் மூத்ததலைவரும் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டாம் என்று கூறியுள்ளார். இன்னும்சிலர் அவரது விசாரணை முறையாக நடக்கவில்லை என்ற வாதத்தினை முன் வைக்கின்றனர்.அவர் தீவிரவாத இயக்கத்தினைச் சேர்ந்தவர் அல்ல என்பதால் அவருக்கு இந்த தண்டனைதரக்கூடாது என்பது இன்னொரு கருத்து.

ஆனால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பினைப் படித்தால் மேற்க்கூறிய வாதங்கள் வலுவற்றவைஎன்பதைப் புரிந்துகொள்ளலாம். அன்று தீவிரவாதிகள் செய்ய நினைத்தது என்ன? பாராளுமன்றத்தினை தாக்கி பிரதமர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை கொல்வது அதன் மூலம் நாட்டில் பதற்றத்தினையும், குழப்பத்தினையும் ஏற்படுத்துவது. இது சாதாரணமான செயலா இல்லை தேசத் துரோகமா என்பதை முடிவு செய்வதில் எந்த தயக்கமும் தேவையில்லை. இச்செயல் இந்தியக் குடியரசிற்கும், அதன் குடிமக்களுக்கும் எதிரான வன் செயல். ஒரு தேசத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற பிரதிநிதிகளையும் கொல்லும் முயற்சிக்கு ஒருவர் உதவுகிறார் என்றால் அவரை எப்படி நடத்த வேண்டும், என்ன செய்ய வேண்டும். அன்று போராடி உயிர் நீத்த காவலர்கள் 11 பேர். அவர்களின் அளப்பரிய தியாகத்தினை நாம் மதிக்க வேண்டுமா இல்லை அதை அர்த்தமற்றதாக்கும் வகையில் , ஒரு கொடுஞ்செயலுக்கு உதவியவருக்கு, பொது மன்னிப்பு வழங்க வேண்டுமா. பொது மன்னிப்பு வழங்கினால் எந்த முகத்துடன் தீவிரவாதத்தினை எதிர்த்து போராடுங்கள் என்று ராணுவத்தினரையும், காவலர்களையும் நோக்கி ஆட்சியில் இருப்பவர்கள் கூற முடியும். இந்த வழக்கில் மரண தண்டனை ஏன் நியாயமானது என்பதை உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும் வழக்கில் குற்றம் சாட்டபட்ட அனைவருக்கும் மரண தண்டனை வழங்கப்படவில்லை. ஒருவருக்கு மட்டுமே மரண தண்டனை வழங்கப்படுள்ளது. முறையான விசாரணை நடத்தப்பட்டு, மூன்று நீதிமன்றங்கள் விசாரித்த வழக்கு இது.

மனித உரிமைகள் என்ற பெயரில் தீவிரவாதிகளுக்கும், தேசத்துரோகிகளுக்கும், நாட்டின்ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் எதிராக செயல்பட்டு கொலைகள் செய்வோரைஆதரிப்பது மனித உரிமைகள் தத்துவத்திற்கே விரோதமானது. ஏனெனில் மனித உரிமைகள்அனைவருக்கும் உண்டு. ஒரு சிலர் ஒரு பெரிய சதிதிட்டத்தினை தீட்டி, பாராளுமன்றத்தினைதாக்குவார்கள், அவர்களுக்கு மன்னிப்பு தர வேண்டும் என்றால் அது கேலிக்கூத்து. இந்தமனித உரிமை ஆர்வலர்களுக்கு சராசரி இந்தியரின் மனித உரிமைகள், உயிர்களை விடதீவிரவாதிகளின் உரிமைகளும், உயிர்களும் அதிக முக்கியத்துவம், மதிப்பு வாய்ந்தவைஎன்றால் அதை வெளிப்படையாகத் தெரிவித்துவிடலாம்.

அரிதினும், அரிதாக வழங்கப்படும் மரண தண்டனை இந்த வழக்கில் பொருத்தமான தண்டனைதான்.இதை நிறைவேற்றுவதே சரியான முடிவு. மன்னிப்பு வழங்குவது என்பது இந்தியாவைத் தாக்குங்கள்,இந்தியர்களை கொல்லுங்கள், நாட்டில் குழப்பம் விளைவியுங்கள், சேதம் ஏற்படுத்துங்கள் என்றுதீவிரவாதிகளுக்கு அழைப்பு விடுவதற்கு சமம்.

24 மறுமொழிகள்:

Blogger ஜயராமன் மொழிந்தது...

கட்சி வித்தியாசம் பாராமல் காஷ்மீரில் அத்தனை முஸ்லிம்களும் இந்த மாதிரி தேசத்துரோகிகளுக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுப்பது வெட்கக்கேடு. இதில் காஷ்மீர் முதலமைச்சரே அடக்கம் என்னும்போது இந்த இன மக்களிடை இந்த மனநோய் எத்தனை முற்றியிருக்கிறது என்று புரிகிறது.

இரண்டாவது, இம்மாதிரி தேசதுரோகிகளுக்கு ஆதரவு கொடுப்பதை எந்த ஒரு இஸ்லாமியர்களும் வெளிப்படையாக எதிர்க்கவில்லை. அதனால், மறைமுகமாக தங்கள் மௌனத்தினால் ஆதரவே தருகிறார்கள் என்பது தெரிகிறது. அதனால், முழு சமுதாயமே இம்மாதிரி தேசவிரோத சக்திகளுக்கு ஆதரவு என்பது தெரிகிறது.

மூன்றாவது, அவர்கள் சொல்லும் காரணம் - அவரை தூக்கில் இட தேர்வு செய்த மாதம் புனிதமானது. நாள் புனிதமானது என்று. இம்மாதிரி தீவிரவாதம் செய்பவன் முஸ்லிம் அல்ல. அவனை அல்லாஹ் நரகத்தில் தள்ளுவார் என்றெல்லாம் சொல்லும் இஸ்லாமியர்கள், அவன் மார்க்கத்திலிருந்து விலகியவன் என்றால், இப்போது அவனை புனிதமாதத்தில் தூக்கிலிட்டால் என்ன?

மேலும், ரமதான் புனித மாதத்தில் போர் நிறுத்தம் செய்யலாம் என்று இதே காஷ்மீர் முதலமைச்சர் போன மாசம் காஷ்மீர் தீவிரவாதிகளிடம் கெஞ்சினதும், அதற்கு அவர்கள் மறுத்துவிட்டதும் நினைவு கொள்ளத்தக்கது. அதாவது, அப்பாவி மக்களை போரில் சாய்க்க ரமதான் தேவலையாம். ஆனால், மூன்று லெவலில் நீதி விசாரணை நடந்து தீர்ப்பளிக்கப்பட்டவனை புனித மாத்த்தில் தூக்கில் போடக்கூடாதாம்.

நான்காவது, அவன் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டுமாம். திருடினால் கையை வெட்டு, கொலை செய்தால் தலையை வெட்டு என்று நவீன சமுதாயத்துக்கு ஒவ்வாத ஷரீய்யத் சட்டங்களை "இது மிகவும் அவசியம்" என்று சொல்லும் இதே இஸ்லாமிய சமுதாயம், தூக்கு தண்டனை நவீன ஜனநாயகத்துக்கு விரோதம் என்று சொல்வது வினோதம். சரியான சந்தர்ப்பவாதம். இப்படி சொல்பவர்கள், ஷரீய்யத் சட்டங்களும் புறக்கணிக்க வேண்டியவை என்று சொல்ல துணிவார்களா?

ஆக மொத்தம், என் கணிப்பில், இதில் வெளியானது, இந்த சமுதாயத்தின் தேசத்துரோக ஆதரவும், மேலும் அவர்கள் சந்தர்ப்பவாதமும்தான்.

தங்கள் பதிவுக்கு நன்றி

10:46 AM  
Blogger கால்கரி சிவா மொழிந்தது...

இவர்களின் மரணதண்டனையை ரத்து செய்ய கோரும் பதவியில் இருக்கும் அரசியல் வாதிகள் மிக அபாயகரமானவர்கள். அவர்களை பிடித்து உள்ளே வைக்கவேண்டும்

11:41 AM  
Blogger Boston Bala மொழிந்தது...

---அரிதாக வழங்கப்படும் மரண தண்டனை இந்த வழக்கில் பொருத்தமான தண்டனைதான்.---

ஆமாம்.

12:10 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

இணையத்தில் வரிந்து கட்டிக் கொண்டு தீவிரவாத செயல்களுக்கு கண்டனம் தெரிவித்து பதிவு போட்டு ... குற்றம் நிரூபிக்கப்பட்டால் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என உதார் விட்டுக்கொண்டு...தனது இந்திய தேசபக்தியை நிருபிக்க பதிவு போட்டதுகள் எல்லாம் இப்போது வாய் மூடி மெளனம் காப்பது ஏன்?உதார் விடும் போது எந்தத் தீர்ப்பும் வெளியாகவில்லை..எஸ்.எஸ் சந்திரன் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காரும்...டூ வீலரும் தருகிறோம் என உதார் விடுவது போலத்தான்......இந்த இணையப் பொறுக்கிகளே மறைமுகமாக அப்ஸலுக்கு மன்னிப்பு வேண்டி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினாலும் எழுதுவார்கள்....கண்ணாடியில் பார்த்துக்கொண்டு "மானங்கெட்டதுகள் " என்று பதிவு போடுகிறார்கள்..

தூ..இதெல்லாம் ஒரு பிழைப்பு

12:31 PM  
Blogger செல்வன் மொழிந்தது...

பாபாஜியை வழிமொழிகிறேன்.

தேசத்தின் பாராளுமன்றத்தையே தாக்கியவனுக்கு மன்னிப்பெல்லாம் எதுக்கு?

தீவிரவாதத்தை ஒழிப்பதில் சுணக்கம் காட்டவே கூடாது.அது ராணுவ வீரர்களுக்கு தவறான சிக்னல் தந்து என்கவுண்டர்களை அதிகரிக்க வைத்துவிடும்.

11:46 PM  
Blogger ஜடாயு மொழிந்தது...

சரியான நிலைப்பாடு ரவி அவர்களே. அரசியல் சித்தாந்தச் சார்புகளைத் தாண்டி இந்தக் கருத்தைச் சொன்னதற்கு பாராட்டுக்கள்.

அப்ஸல் போன்ற தேசத்துரோகிகளூக்கு ஆதரவு தருபவர்கள் மநித உரிமை வாதிகள் அல்ல, அரக்க உரிமை வாதிகள். அரக்கர்கள் மனிதர்க்ளைக் கொன்று குவிப்பதைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஒன்றிரண்டு அரக்கர்களை நாம் பிடித்துத் தண்டனை கொடுக்கும்போது குயோ முறையோ என்று கத்துவார்கள்.. வெட்கம்! வெட்கம்!

காஷ்மீர் இஸ்லாமியர்கள் இந்த மரண தண்டனையை எதிர்ப்பதன் காரணங்களை ஜயராமன் புட்டுப்புட்டு வைத்திருக்கிறார். வலிமையான வாதங்கள் அத்தனையும். நல்ல பின்னூட்டம் ஜயராமன் அவர்களே.

5:38 AM  
Blogger Nakkiran மொழிந்தது...

யாரெல்லாம் அஃப்சலுக்கு மன்னிப்பு கேட்கிறார்களோ, ஒரு நிமிடல் யோசிக்கட்ட்டும்.. இறந்த 11 பேரில் ஒருவர் உங்கள் அண்ணன் தம்பி, அப்பா, சகோதரி (இறந்தவர்களில் பெண்களும் அடங்கும்) யாக இருந்தால் இவ்வாறு கோரிக்கை விடுப்பார்களா?

மானங்கெட்ட அரசியல்வாதிகள்... அறிவுகெட்ட மதவாதிகள்...

1:27 PM  
Anonymous ரமணா மொழிந்தது...

மன்னிப்பு, எனக்கு டமில்ல புடிக்காத வாத்த...

3:21 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

I accept Jeyaraman's view.
i never reject Muslims. but i donot want to accept Islamic Bombs.

Ex Muslim

3:33 PM  
Blogger Vajra மொழிந்தது...

சார்,

இந்த பயங்கரவாதிய தூக்கு போடக்கூடாதுன்னு சொல்றதுக்கு கஷ்மீர் முதலமைச்சரல்லாம் வந்துகிறானுங்க...இதை எங்கே சொல்லி முட்டிக்க..?

//
காஷ்மீரில் உள்ள இந்திய கம்யுனிஸ்ட் கட்சி(மார்க்ஸிட்)யின் மூத்ததலைவரும் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டாம் என்று கூறியுள்ளார்
//

அப்ப அந்த தீவிரவாதிக்கு பதிலா இவருக்கு சுறுக்கு கயிற மாட்டிவுடவேண்டியது தான்...

இப்பல்லாம் வர வர இந்த கம்யூனிஸ்டு பேச்சக்கேட்டாலே கத்தியெடுத்துக் குத்திரணும்னு ஆத்திரம் வருது...

மர மண்டைங்க...எவனுக்கு வக்காலத்து வாங்குறதுன்னு தெரியாமலா இருக்காங்க...இல்ல தெரிஞ்சே பண்றானுங்களா?

இவர்கள் இருப்பதற்கு இல்லாமலே இருக்கலாம்... நாட்டில் அமைதி நிச்சயம் நிலவும்.

4:07 PM  
Blogger koothaadi மொழிந்தது...

பொதுவாக என்னுடய நிலைப்பாடு தூக்குத் தண்டனைக்கு எதிரானது .அது இந்த கேஸிலும் பொருந்தும் .

அதே சமயம் காஷ்மீரில் நடக்கும் போராட்டங்களும் குலாம் நபி ஆசாத் போன்றவர்கள் கூறும் காரணங்களும் முட்டாள்த் தனமானது .அவர்கள் தூக்குத் தண்டனைக்கு எதிராக நிலைப்பாடு எடித்தால் பாராட்டலாம் ,ஆனால் அவர் முஸ்லீமாக இருந்தால் மட்டுமே other side நியாயத்தைப் பார்ப்பதும் benefit of doubt யை கொடுப்பதும் அபாயகரமானது .

ஜயராமன் சொல்வது சரியே ரமதானுக்கும் தீவிரவாதிக்கும் என்ன சம்பந்தம் ..

நம் இணய இஸ்லாம் நண்பர்கள் யாராவது இதைப் பற்றி எழுதுவார்கள் என காத்திருக்கிறேன்

4:54 PM  
Blogger கால்கரி சிவா மொழிந்தது...

அறிசீவிகள் இவன் தீவிரவாதி ஆக காரணமே நம் பார்லிமெண்ட் தான் என சொன்னாலும் சொல்லுவார்கள். அவன் விரும்பும் அரசாட்சியை அமைத்து அவன் விரும்பும் ஆளை அரசனாக வைத்திருந்தால் அவன் தீவிரவாதி ஆகியிருப்பானா?
மெஜாரிட்டி எல்லாம் சேர்ந்து ஜனநாயகம் என்ற புரட்டை கையில் எடுத்து மைனாரிட்டிகளை நசுக்குவதால் வந்த வினை தான் இது.

மானம் என்று ஒன்று இருந்தால் இந்த அப்பாவியை விட்டுவிட்டு நம் நாட்டின் பிரதமர் சொந்தமாக தூக்கு போட்டுக் கொள்வதுதான் ஒரு மைனாரிட்டிக்கு இந்த தேசம் காட்டும் நல் வழியாகும்

பி.கு. : மைனாரிட்டி = தீவிரவாதிகள்

இந்தியாவில் தீவிரவாதிகள் மைனாரிட்டி. தீவிரவாதிகளாக இல்லாதோர் மெஜாரிட்டி

5:50 PM  
Blogger Hariharan # 26491540 மொழிந்தது...

தீவிரவாதி இஸ்லாமிய மார்க்கத்தைச் சார்ந்தவன் என்றதும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற மதசார்பற்ற கட்சிகள் தங்களது "மத சார்பின்மை"யை
இம்மாதிரி கருணை மனுக்கு ஆதரவான அறிக்கைகள் விட்டு மீண்டும் நிலை நிறுவுகின்றார்கள்.

All muslims are not terroists. Every terrorist is a Muslim (in this case specifically)

கொலை வெறிகொண்ட மனித மிருகங்களை என்ன செய்யலாம் ஒன்று களத்திலேயே வேட்டையாட வேண்டும், அல்லது பிடித்துப் பத்திரமாக கூண்டில் வைத்துப் பலி போட வேண்டும் - சமூக அமைதிக்காக!

இம்மாதிரி கொலைவெறி மிருகங்களுக்குக் கருணை காட்டினால் "மானங்கெட்டதுகளா"வது நாம் தான்!

அன்புடன்,

ஹரிஹரன்

5:21 AM  
Blogger செந்தழல் ரவி மொழிந்தது...

யாரையுமே தூக்கிலிட வேண்டாங்க...அவர்கள் கொல்வதற்க்காக நாமும் கொன்றால், அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் ?

தூக்கிலிட்டால் அடுத்த நிமிடம் உயிர் பிரிந்துவிடும்...

இருந்து பார்க்கட்டும்...

5:32 AM  
Blogger ஜடாயு மொழிந்தது...

ரவி, தயவு செய்து இந்த online campaign பற்றீய செய்தியை (முடிந்தால் பதிவிலேயே) போடவும்.

நன்றி.

Muslim Separatist groups in Kashmir including the politicians have initiated nationwide signature campaign to show support for mercy to Mohammed Afzal, which will be an insult to the Nation and the sacrifice of the Jawans.

All citizens of this country must oppose these efforts. Hence an online e-letter cum signature drive has been started to support the verdict of Supreme Court. It sends an automated e-letter to the President of India and the Prime Minister.

Please participate in this drive and spread the message as soon as possible.

Link of protest drive:
http://www.hindujagruti.org/nation/kashmir/

Vande Mataram !

6:20 AM  
Blogger மனதின் ஓசை மொழிந்தது...

விசாரனை நியாயமாக நடந்திருக்கும் பட்சத்தில் (அவ்வாறே இருக்கும் என நம்புகிறேன்) மரண தண்டனை வழங்குவதே சரியானது..

நாட்டின் இறையான்மைக்கு ஊறு விளைவிக்க நினைப்பவர்களை சரியான முறையில் தண்டிக்க வேண்டும்.

மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கும் இன்னும் அதிக தண்டனை கொடுத்து இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.

//அன்று போராடி உயிர் நீத்த காவலர்கள் 11 பேர். அவர்களின் அளப்பரிய தியாகத்தினை நாம் மதிக்க வேண்டுமா இல்லை அதை அர்த்தமற்றதாக்கும் வகையில் , ஒரு கொடுஞ்செயலுக்கு உதவியவருக்கு, பொது மன்னிப்பு வழங்க வேண்டுமா. பொது மன்னிப்பு வழங்கினால் எந்த முகத்துடன் தீவிரவாதத்தினை எதிர்த்து போராடுங்கள் என்று ராணுவத்தினரையும், காவலர்களையும் நோக்கி ஆட்சியில் இருப்பவர்கள் கூற முடியும். //

நியாயாமான வாதம்... தேவையான கோபம்..

கண்மூடித்தனமாக மதத்திற்காக ஆதரிப்பவர்களையும், அதே காரணத்திற்காக ஒரு சமுதாயத்தின் உள்ள அனைவரின் மீதும் பழி சுமத்த காழ்புனர்ச்சியுடனிருப்பவர்களுக்கும் என் கண்டனத்தை இங்கே பதிவு செய்கிறேன்.

1:19 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

How many of you believe in 'an eye for an eye' policy?

A nation who lectures the world on 'Ahimsa' does not believe when it has a change to prove that it truly believes in it.

Killing someone as a punishment for his crime doesn't reflect the severity of his crime. Rather, it reflect the civility of the nation that carry out the punishment.

1:39 PM  
Blogger மற்றவர் மொழிந்தது...

//All muslims are not terroists. Every terrorist is a Muslim (in this case specifically)//
oh ravi, ravi, ravi, Y don't u say something to this bullshit atleast?!

5:54 AM  
Blogger மிதக்கும் வெளி மொழிந்தது...

if u say absal is terrorist, then who is the bastard narendramodi? shall v give death penalty to modi, who is the main reason 4 killing 3000 muslims in kujarat?

8:03 AM  
Blogger enRenRum-anbudan.BALA மொழிந்தது...

Ravi,
My views here:
http://balaji_ammu.blogspot.com/2006/10/blog-post_07.html

3:27 PM  
Blogger Dharumi மொழிந்தது...

i concur totally with this post.

2:01 AM  
Blogger மற்றவர் மொழிந்தது...

எனது பிறிதொரு பின்னூட்டத்தைக் காணவில்லையே ரவி? உங்களுக்கு அது மட்டும் கிடைக்காமற் போய்விட்டதா?

3:59 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

http://dharumi.blogspot.com/2006/10/179.html
//நிச்சயமாக நான் பொறுமையிழந்து தான் இதை எழுதியுள்ளேன்//
//தேவையில்லாத நேரத்தில், தேவையில்லாத ஒரு மனிதனுக்கு தேவையில்லாத வீண் விவாதங்கள் நடத்துவதாகத் தோன்றியதால் ஏற்பட்ட ஒரு ஆதங்கம். //

அன்புள்ள தருமி ஐயா,

வழக்கமாக மிகவும் ஆராய்ந்து எழுதும் நீங்கள் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு விட்டதாக நினைக்கிறேன். அதனால் தான் இது வரை உங்கள் பதிவைப் பாராட்டக் கூட வராத நான் பின்னூட்டமிடுகிறேன் :-). தற்பொழுது அப்சலின் மரணதண்டனையையொட்டி வரும் அனைத்துப் பதிவுகளையும் படித்ததில்லை. படித்த ஒரு சிலவற்றில் பின்னூட்டமிட்டது ரோச வசந்த் மற்றும் செல்வநாயகியின் பதிவுகள் மட்டும்தான். செல்வநாயகியின் பதிவு அப்சலின் மரணதண்டனை பற்றி நேரடியாகக் கருத்துச் சொல்லாமல், அதோடு தொடர்புடைய மற்ற விசயங்களை பொதுவாக விவாதித்தது.

ரோச வசந்தின் பதிவு அப்சலுக்கு மரணை தண்டனை வழங்கியே தீர வேண்டும் என்ற பொதுப்புத்தியை விமர்சித்து முக்கியமான இரண்டு விசயங்களை முன் வைத்தது. ஒன்று, மனித நாகரீக வளர்ச்சியடிப்படையில் மரணதண்டனை ஒரு கற்கால வழிமுறை என்ற அவதானிப்பால் மரண தண்டனைக்கேயான எதிர்ப்பு. நீங்கள் அதை பின்னால் பேசிக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டீர்கள். சரி ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அதில் அவரது கயமைத்தனம் என்னவென்று தெரியவில்லை.

ரோசா வசந்தின் இரண்டாவது காரணம் - இராஜீவ் கொலை வழக்கு மற்றும் கிலானி வழக்குகளை வைத்து மரண தண்டனை தவறுதலாக வ்ழங்கக் கூடிய சாத்தியம் இருப்பதால், தண்டனை வழங்கியபின் அதில் பின்னோக்கிச் செல்ல முடியாது என்ற ஆதங்கத்தில் அப்சல் முக்கியமான குற்றவாளி என்று திட்ட வட்டமான ஆதாரங்களின் அடிப்படையில் உறுதி செய்யப் படாத நிலையில் எதிர்க்கிறார். மதுரையைச் சேர்ந்த உங்களுக்கு கோவலன் கதையை நினைவுறுத்த வேண்டியதில்லை. இந்த இரண்டாவது காரணத்திலும் என்ன கயமைத்தனம் இருக்கிறது என்று தெரியவில்லை. நீங்கள் அந்த காரணத்தைப் பற்றி எந்தக் கருத்தையுமே வைக்க வில்லை.

கிலானி கொலை வழக்கு சம்பந்தமான மூன்று பழைய இந்துப் பத்திரிகைச் சுட்டிகளை அளிக்கிறேன். நீங்களே முடிவு செய்துங்கள்.

1. To see how easily an innocent man can be misunderstood and suspected by circumstantial evidences and sentenced to death. -- Kashmiri Pandit's key role in Geelani's acquittal

2. After getting acquitted, Mr. Geelani said his experience at the hands of the system, which had targeted him "as a Kashmiri", had made him "stronger... to stand against oppression and to fight for the rights of the people of Kashmir." -- Will fight oppression: Geelani
ஒரு அப்பாவியைத் தண்டிக்க முனைந்ததின் விளைவு எப்படியிருக்கும் என எண்ணுங்கள்.

3. இரகு என்ற தேசபக்தி மிக்க மேதாவியின் கயமைத்தனமான வாசகர் கடிதம் இங்கே: Sir, — Before criticising the criminal justice system after his release from jail, Mr. Geelani should have remembered that he is free because of the same system which requires strict proof of guilt. - S. Raghu, Chennai


இவரைத் தூக்கிச் இரண்டு நாட்கள் மட்டுமே (இரண்டு ஆண்டெல்லாம் வேண்டாம்) சிறையில் போட்டுச் சித்திரவதை செய்திருந்தால் இந்த மாதிரி புத்திமதியை கிலானிக்கு வழங்குவாரா?

இவரைப்போல் எழுதும் வஜ்ராக்கள்-இரவி ஸ்ரீனிவாஸ்கள்- செல்வன்களின் வாதங்களை கயமைத்தனம் என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது?

நன்றி - சொ. சங்கரபாண்டி

சொன்னவர்: சுடலை மாடன் | 10/11/2006 03:33:00 AM

11:57 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

Sudalai Madan aka Sankara Pandi simply tries to distort my views.
Perhaps that is his style of responding to points raised by me.

12:33 PM  

Post a Comment

<< முகப்பு