பெரியார், சாரு நிவேதிதா,பிரேம்-ரமேஷ்

பெரியார், சாரு நிவேதிதா,பிரேம்-ரமேஷ்

முந்தைய பதிவில் எழுதியதை விரிவாக விளக்கி சாரு நிவேதிதாவும்,பிரேம்-ரமேஷும் எழுதியிருப்பது எவ்வளவு அபத்தமானவை,ஆகவே நகைப்புக்குரியவை என்று காட்டத் தேவையில்லை என்று நினைக்கிறேன். ஒரளவு விஷயம் தெரிந்தவர்களுக்கு அவை அபத்தமானவை என்பது எளிதில் விளங்கும்.தேவை என்று கருதினால் விரிவாக எழுதுவதில் எனக்குத் தயக்கமில்லை. ஆனால் அதில் அவ்வளவு ஆர்வமில்லை. ஏனெனில் ஒருவர் ஒரு வாக்கியம் அபத்தமாக எழுதினால் அது எவ்வளவு அபத்தம் என்பதை விளக்க நான் பத்து வாக்கியம் எழுத வேண்டும். இப்படி ஒருவர் எவ்வளவுதான் எழுத முடியும் அல்லது எழுத வேண்டும். இங்கு எழுதுபவர்கள் அடிப்படைகளைக் கூட புரிந்து கொள்ளாமல் எழுதினால் அல்லது பெயர்களை உதிர்த்து ஜல்லியடித்தால் அதை நான் எழுதித்தான் பிறர் புரிந்து கொள்ள வேண்டுமா. படிப்பவர்களும் கொஞ்சம் யோசிக்கலாமே. பெரியார் குறித்து விரிவாக எழுதும் எண்ணம் இப்போது இல்லை. அதை விட முக்கியமான, சுவாரசியமான வேலைகள் எனக்கு இருக்கின்றன. பெரியாரிய பகுத்தறிவு குறித்து திண்ணையிலும், பெரியார் குறித்து பல பதிவுகளில் பின்னூட்டங்களும் எழுதியிருக்கிறேன். அதுவே தற்சமயத்திற்கு போதுமானது என்று கருதுகிறேன்.

2 மறுமொழிகள்:

Blogger Nambi மொழிந்தது...

"படிப்பவர்களும் கொஞ்சம் யோசிக்கலாமே. பெரியார் குறித்து விரிவாக எழுதும் எண்ணம் இப்போது இல்லை. அதை விட முக்கியமான, சுவாரசியமான வேலைகள் எனக்கு இருக்கின்றன"

Ravi,
don't think that you are a geniuos and the rest are fools. You are the one commented and you have to explain why you said that. If not, just Shut your's.

Nambi

1:47 AM  
Blogger ஜயராமன் மொழிந்தது...

சரியான முடிவு.

பதிலுக்கு பதில் சொல்லி அந்த பதிலின் தரத்தை நிறுத்த முயல்வது வீண். அம்மாதிரி விவாதங்கள் தானாகவே தங்களின் நேர்மையின்மையில் மூழ்கிப்போகும். இதற்கு மறுப்புகள் வீண்.

நன்றி

2:16 AM  

Post a Comment

<< முகப்பு