வந்தே மாதரம்- சில கேள்விகள்

வந்தே மாதரம்- சில கேள்விகள்

இன்று வந்தே மாதரம் பல பள்ளிகளில், கல்விக்கூடங்களில் பாடப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பாராக்கள் மட்டுமே பாடப்படவேண்டியவை என்ற முடிவு இப்போது எடுக்கப்பட்டதல்ல. காங்கிரஸ் இயக்கமும் முழுப் பாடலைபாட வேண்டும் என்று சுதந்திரப் போராட்டத்தின் எல்லாக் கட்டங்களிலும் கோரவில்லை. அதாவது இப்பாடல்குறித்த காங்கிரசின் நிலைப்பாடு முஸ்லீம்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு மாற்றம் கண்டிருக்கிறது. இதை வந்தேமாதரம் சர்ச்சை குறித்து எழுதியுள்ள வலைப்பதிவாளர்களில்எத்தனை பேர் சுட்டிக்காட்டியுள்ளனர். ஏன் வந்தேமாதரம் குறித்த சர்ச்சையின் ஒரு பகுதிமறைக்கப்படுகிறது. ஏன் விடுதலையில் கூட சில உண்மைகள் மறைக்கப்பட்டு செய்தி வெளியாகிறது.கீற்று இணையதளத்தில் கற்பக விநாயகம் எழுதியுள்ள கட்டுரையும் சில உண்மைகளை முன் வைப்பதில்லை.

இப்படி அரை உண்மைகளையும், பொய்களையும் கலந்து எழுதும் வலைப்பதிவாளர்கள், கற்பகவிநாயகம், அறிக்கை விடும் கி.வீரமணி இதன் மூலம் யாரைத் திருப்திப்படுத்த நினைக்கிறார்கள். இந்த சர்ச்சையை வேறு கோணங்களில் அணுகியிருக்க முடியும்.ஆனால் இவர்களைப் பொறுத்தவரை உண்மையே முக்கியமில்லை என்றான பின்பு அப்படியெல்லாம் அணுகியிருப்பார்கள்என்று எதிர்பார்ப்பது வீண்.

4 மறுமொழிகள்:

Blogger ஜடாயு மொழிந்தது...

சரியாகக் கேட்ட்டீர்கள் ரவி - யாரைத் திருப்திப் படுத்த நினைக்கிறார்கள் என்று. "இஸ்லாமிஸ்டுகளை" என்றால் அது ஒருபோதும் நடக்காது - ஏன்?

வந்தே மாதரம் பற்றிய என் கட்டுரையின் கடைசி பகுதி -

// பாரதம் போன்ற ஷரியத் சட்டம் நடைமுறையில் இல்லாத ஒரு சுதந்திர நாட்டில், இஸ்லாமிஸ்டுகளை உண்மையில் கோபப் படுத்துவது நம் கருத்துக்களோ, நடைமுறைகளோ அல்ல. அந்தக் கருத்துக்களையும், நடைமுறைகளையும் அடக்கி, ஒடுக்கி, அழிக்கும் அதிகாரம் தம்மிடம் இல்லை என்பது தான்! ஏனென்றால், இஸ்லாமிஸ்டுகளின் உண்மையான நோக்கம் ஷரியத் சட்டப்படி இயங்கும் ஒரு அரசை உருவாக்கி அதில் அதிகாரம் செலுத்துவது. அப்படி ஆனவுடன் எதைத் தடை செய்யலாம், எதை அனுமதிக்கலாம் என்பதை அவர்களே முடிவு செய்யும் அதிகாரம் வரும், அப்போது மட்டுமே அவர்கள் திருப்தியடைவார்கள்.

The real gripe Jihadi Islamists have in non-Muslim countries isabout power, not any matters of religious belief or custom. //

கட்டுரை:
http://jataayu.blogspot.com/2006/09/blog-post_115735972528194365.html

தேச துரோகிகளுக்குத் துணை போகும் இந்த திராவிட ஆசாமிகள் கண்டனத்திற்குரியவர்கள்.

9:13 AM  
Anonymous இறையடியான் மொழிந்தது...

யாரை குற்றம் சொல்க்கிறீர்கள்?

11:09 AM  
Blogger Boston Bala மொழிந்தது...

From Today's Dinamani op-ed pages: Vande Matharam - National Song’s 100th Anniversary « Bala’s Blog

2:08 PM  
Blogger Vajra மொழிந்தது...

//
இப்படி அரை உண்மைகளையும், பொய்களையும் கலந்து எழுதும் வலைப்பதிவாளர்கள், கற்பகவிநாயகம், அறிக்கை விடும் கி.வீரமணி இதன் மூலம் யாரைத் திருப்திப்படுத்த நினைக்கிறார்கள்.
//

யாரைத் திருப்திபடுத்தவேண்டும்? நேராகச் சொல்லவேண்டியது தானே...நீங்க தானே politically incorrect என்று மார்தட்டிக் கொண்டது!!?


Half truths are more dangerous than lies...! indian version of "secularism" survives on these half truths!

10:14 PM  

Post a Comment

<< முகப்பு