மேய்ச்சல்

மேய்ச்சல்

இஸ்லாமும், ஐரோப்பாவும்

பாட நூல்கள்,வரலாறு

இஸ்லாமியப் பெண்கள் சட்ட வாரியம்

பாக்தாத்தில் வாழ்க்கை: ஒரு மருத்துவரின் அனுபவம்

பெரியார், சாரு நிவேதிதா,பிரேம்-ரமேஷ்

பெரியார், சாரு நிவேதிதா,பிரேம்-ரமேஷ்

முந்தைய பதிவில் எழுதியதை விரிவாக விளக்கி சாரு நிவேதிதாவும்,பிரேம்-ரமேஷும் எழுதியிருப்பது எவ்வளவு அபத்தமானவை,ஆகவே நகைப்புக்குரியவை என்று காட்டத் தேவையில்லை என்று நினைக்கிறேன். ஒரளவு விஷயம் தெரிந்தவர்களுக்கு அவை அபத்தமானவை என்பது எளிதில் விளங்கும்.தேவை என்று கருதினால் விரிவாக எழுதுவதில் எனக்குத் தயக்கமில்லை. ஆனால் அதில் அவ்வளவு ஆர்வமில்லை. ஏனெனில் ஒருவர் ஒரு வாக்கியம் அபத்தமாக எழுதினால் அது எவ்வளவு அபத்தம் என்பதை விளக்க நான் பத்து வாக்கியம் எழுத வேண்டும். இப்படி ஒருவர் எவ்வளவுதான் எழுத முடியும் அல்லது எழுத வேண்டும். இங்கு எழுதுபவர்கள் அடிப்படைகளைக் கூட புரிந்து கொள்ளாமல் எழுதினால் அல்லது பெயர்களை உதிர்த்து ஜல்லியடித்தால் அதை நான் எழுதித்தான் பிறர் புரிந்து கொள்ள வேண்டுமா. படிப்பவர்களும் கொஞ்சம் யோசிக்கலாமே. பெரியார் குறித்து விரிவாக எழுதும் எண்ணம் இப்போது இல்லை. அதை விட முக்கியமான, சுவாரசியமான வேலைகள் எனக்கு இருக்கின்றன. பெரியாரிய பகுத்தறிவு குறித்து திண்ணையிலும், பெரியார் குறித்து பல பதிவுகளில் பின்னூட்டங்களும் எழுதியிருக்கிறேன். அதுவே தற்சமயத்திற்கு போதுமானது என்று கருதுகிறேன்.

பெரியார் பற்றி

பெரியார் பற்றி

பெரியார் பிறந்த நாளாம் இன்று உங்கள் பார்வைக்கு
பெரியார் குறித்து

ரமேஷ்-பிரேம் தந்துள்ள பதில்

சாரு நிவேதிதாவின் கட்டுரை

சாருவின் கட்டுரை திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள
பெரியார்பிறந்த நாள மலரில் இடம் பெற்றுள்ளதாக
அறிகிறேன்.இரண்டையும் படித்து சிரித்து ரசிக்கலாம்.

வந்தே மாதரம்- சில கேள்விகள்

வந்தே மாதரம்- சில கேள்விகள்

இன்று வந்தே மாதரம் பல பள்ளிகளில், கல்விக்கூடங்களில் பாடப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பாராக்கள் மட்டுமே பாடப்படவேண்டியவை என்ற முடிவு இப்போது எடுக்கப்பட்டதல்ல. காங்கிரஸ் இயக்கமும் முழுப் பாடலைபாட வேண்டும் என்று சுதந்திரப் போராட்டத்தின் எல்லாக் கட்டங்களிலும் கோரவில்லை. அதாவது இப்பாடல்குறித்த காங்கிரசின் நிலைப்பாடு முஸ்லீம்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு மாற்றம் கண்டிருக்கிறது. இதை வந்தேமாதரம் சர்ச்சை குறித்து எழுதியுள்ள வலைப்பதிவாளர்களில்எத்தனை பேர் சுட்டிக்காட்டியுள்ளனர். ஏன் வந்தேமாதரம் குறித்த சர்ச்சையின் ஒரு பகுதிமறைக்கப்படுகிறது. ஏன் விடுதலையில் கூட சில உண்மைகள் மறைக்கப்பட்டு செய்தி வெளியாகிறது.கீற்று இணையதளத்தில் கற்பக விநாயகம் எழுதியுள்ள கட்டுரையும் சில உண்மைகளை முன் வைப்பதில்லை.

இப்படி அரை உண்மைகளையும், பொய்களையும் கலந்து எழுதும் வலைப்பதிவாளர்கள், கற்பகவிநாயகம், அறிக்கை விடும் கி.வீரமணி இதன் மூலம் யாரைத் திருப்திப்படுத்த நினைக்கிறார்கள். இந்த சர்ச்சையை வேறு கோணங்களில் அணுகியிருக்க முடியும்.ஆனால் இவர்களைப் பொறுத்தவரை உண்மையே முக்கியமில்லை என்றான பின்பு அப்படியெல்லாம் அணுகியிருப்பார்கள்என்று எதிர்பார்ப்பது வீண்.