இடைக்காலத் தடை

இடைக்காலத் தடை

தமிழக அரசு கொண்டு வந்த அவசரச்சட்டத்தின் ஒரு பிரிவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது. அரசு 23 மே 2006ல் ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது.அந்த ஆணை என்னைப் பொருத்தவரை சரியான ஆணை அல்ல. அது எந்த சட்டத்தின் கீழ் அரசிற்கு இந்த முடிவினை அதாவது அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆகலாம் என்று உத்தரவிடும் அதிகாரம் இருக்கிறது என்பதை தெளிவாக்கவில்லை.

1972ல் சேஷம்மாள் வழக்கில் உச்ச நீதிமன்றம் ஆகம விதிகளை அரசு பின்பற்ற வேண்டும் என்று தெளிவாகக் கூறியுள்ளது.2002ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு கேரளாவில் பிராமணல்லாதவர் பூசை செய்வதைக் குறித்தது. இரண்டு வழக்குகளுக்கும் சில முக்கியமான வேறுபாடுகள் உண்டு.கேரளாவில் அனைத்து சாதியினருக்கும் உரிய பயிற்சி அளிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, அவ்வாறு பயிற்சி பெற்றவர்களில் ஒருவர் பூசை செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்த போது உச்ச நீதிமன்றம் தந்த தீர்ப்பு இது.

சேஷம்மாள் வழக்கில் சில பகுதிகள் அரசுக்கு சாதகமாக இருந்தாலும், ஆகம விதிகளைபின்பற்றுவது என்று வரும் போது அரசின் நோக்கம் நிறைவேறாமல் போயிற்று. ஆபரேஷன்வெற்றி, நோயாளி மரணம் என்ற கதைதான். உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதுஅதன் அதிகாரத்திற்குட்பட்டதே. அடிப்படை உரிமைகள் குறித்த சட்டம், வழக்குகளை முதலில்உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும், மேல் முறையீடு என்ற போது மட்டுமே உச்ச நீதிமன்றத்தினை அணுக வேண்டும் என்று எந்த விதியும் இல்லை. நேரடியாக உச்ச நீதிமன்றத்தினைநாட முடியும்.அவ்வழக்கினை உயர் நீதிமன்றம் முதலில் விசாரிக்கட்டும் என்று உச்ச நீதிமன்றம்கட்டளையிடலாம் அல்லது தானே விசாரிக்கலாம். எனவே இந்த வழக்கில் மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தினை அணுகியதும், அதை ஏற்று உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தும் சரியே.

3 மறுமொழிகள்:

Blogger குழலி / Kuzhali மொழிந்தது...

//ஆகம விதிகளைபின்பற்றுவது என்று வரும் போது அரசின் நோக்கம் நிறைவேறாமல் போயிற்று. ஆபரேஷன்வெற்றி, நோயாளி மரணம் என்ற கதைதான். உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதுஅதன் அதிகாரத்திற்குட்பட்டதே. அடிப்படை உரிமைகள் குறித்த சட்டம், வழக்குகளை முதலில்உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்,
//

http://ravisrinivas.blogspot.com/2006/02/blog-post_25.html லில் இருந்து சில வரிகள் கீழே...

இத்தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ளது, தீர்ப்பின் கடைசிப் பகுதியில் சில விளக்கங்கள் தரப்படுகின்றன.மரபா, அரசியல் சட்டமா என்ற கேள்வி எழும் போது அரசியல் சட்டமே நீதிமன்றத்தின் கண்ணோட்டத்தில் எது சரி என்பதை தீர்மானிக்க மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. மரபு என்ற பெயரில் அரசியல் சட்டத்தின் விதிகள், நெறிகளுக்கு முரணான உரிமைகளை கோர முடியாது என்பதை இத்தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.

இந்த பதிவையும் நீங்கள் சில மாதங்களுக்கு முன் எழுதிய பதிவையும் படிக்கும் போது ரவி எதற்கும் பதிவெழுதுவதற்கு முன் தன் முந்தைய பதிவுகளை மீண்டும் பார்ப்பது ஷேமமாயிருக்கும்.

10:41 AM  
Blogger PRABHU RAJADURAI மொழிந்தது...

அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டாலொழிய தனிமனிதர்கள் நேரிடையாக உச்ச நீதிமன்றத்தினை அணுக முடியாது! எனவே ரிட் மனுக்களைப் பொறுத்தவரை உயர் நீதிமன்றங்களின் அதிகார வரம்பு அதிகம். மற்றபடி காவிரி பெரியார் அணை போன்ற இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்னை உச்ச நீதிமன்றத்தில்தான் தீர்க்கப்பட முடியும்.

2:32 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

குழலி, முதலில் நான் எழுதியதைப் படித்துப்புரிந்து கொள்ளுங்கள். 1972ல் தரப்பட்ட தீர்ப்பு,2002ல் தரப்பட்ட தீர்ப்பு இரண்டையும் குறிப்பிட்டிருக்கிறேன்.எந்தப் பதிவில் எதைப்பற்றி எழுதியிருக்கிறேன் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் குழம்பியிருக்கிறீர்களோ இல்லையோ பிறரை குழப்ப முயற்சி செய்கிறீர்கள். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம்
பேய் என்பது போல் உங்களுக்கு இட ஒதுக்கீடு அமுல் செய்யப்படும் இடங்களில் எல்லாம்
சதிகள் நடப்பது போல் தோன்றுகிறது.

அடிப்படை உரிமைகள் அரசின் சட்டத்தினால் அல்லது ஆணையால் பாதிக்கப்படுகின்றன என்று ஒருவர் கருதினால் அவர் உச்ச நீதிமன்றத்தினை நேரடியாக நாட முடியும்.உச்ச நீதிமன்றம் வழக்கினை ஏற்கலாம் அல்லது முதலில் உயர் நீதிமன்றத்தினை அணுகவும் என்று உத்தரவிடலாம். இந்த வழக்கில் இடைக்காலத் தடைதான் வழங்கப்பட்டுள்ளது.அரசு பதில் மனு தாக்கல் செய்யலாம்,
பின் அத்தடையை நீக்க கோரலாம். எந்தச் சட்டமும் நீதிமன்றங்களின் பரீசலனைக்குட்ப்பட்டவைதான்.

9:28 AM  

Post a Comment

<< முகப்பு