உச்ச நீதிமன்றம்- 69% இட ஒதுக்கீடு

உச்ச நீதிமன்றம்- 69% இட ஒதுக்கீடு

உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்டப் பென்ச் தமிழ் நாடு அரசு நிறைவேற்றிய 69% இட ஒதுக்கீடு, அதை 9ம் அட்டவணையில் சேர்த்தது இரண்டும் செல்லதக்கனவையா என்பதை அக்டோபரில் விசாரிக்க இருக்கிறது. கிட்டதட்ட 12 ஆண்டுகளாக இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தின் முன் இருந்து வருதுகிறது. ஆண்டு தோறும் ஒரு இடைக்கால உத்தரவினை உச்ச நீதிமன்றம் வழங்குகிறது. இது மருத்துவம், பொறியியல் மாணவர் சேர்க்கையில் 50% இட ஒதுக்கீட்டிற்கு வழி செய்கிறது.

பாராளுமன்றம் 9வது அட்டவணையில் சேர்த்தாலும், உச்ச நீதிமன்றம் அப்படி சேர்த்ததை கேள்விக்குள்ளாக்க முடியும். எந்த சட்டமும் நீதிமன்றங்களின் ஆய்விற்கும், பரீசலனைக்கும்அப்பாற்பட்டவை அல்ல.அப்படி செய்ய வழிவகுக்கும் 9ம் அட்டவணையில் சேர்த்ததாலேயேஅச்சட்டம் நீதிமன்றத்தின் ஆய்விற்கு அப்பாற்பட்டது என்று ஆகி விடாது. உச்ச நீதிமன்றம் கோலக் நாத் வழக்கு, கேசவானந்த பாரதி வழக்கில் கையாண்ட அரசியல் சாசனத்தின் அடிப்படைஅமைப்பு/ அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சங்கள் என்ற கோட்பாட்டினை இங்கு நினைவுகூர வேண்டும். இதன்படி நீதிமன்றம் சட்டத்தினை ஆய்வது, அதாவது அது செல்லதக்கதா இல்லையாஎன்று தீர்மானிப்பது அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்று. இந்த அடிப்படை அம்சத்தினை குறைக்க,நீக்க, மாற்ற பாராளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. அதாவது 368ம்பிரிவின் கீழ் பாராளுமன்றத்திற்கு இருக்கும் அதிகாரம் ஒரு வரம்பிற்குட்பட்டதுதான்.
இந்த அடிப்படையில்தான் இந்த பெஞ்ச் அமைக்கப்பட்டிருப்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இனி நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ள 27% இட ஒதுக்கீடு சட்டத்தினை 9ம் அட்டவணையில்சேர்த்தாலும், அப்படி சேர்த்ததையும், அந்த சட்டத்தினையும் ஆராய, செல்லுமா, செல்லாதா என்றுகூறும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு உண்டு.

மேய்ச்சல்

மேய்ச்சல்

கேலி செய்வதற்கான உரிமை

நர்மதை- புனர்வாழ்வு என்னும் கானல் நீர்

ஜூன் 4 1989- ஜூன் 4 2006

பெரியார் - ஒரு மறுவாசிப்பு

குழந்தை-பாலினத்தெரிவு- சட்டம்

இட ஒதுக்கீடு மசோதா

இட ஒதுக்கீடு மசோதா
சமூக நீதி என்ற பெயரில் ஒரு அநீதியை நியாயப்படுத்தும் முயற்சியாகவே மத்திய அரசு கொண்டுவந்துள்ள மசோதாவை நான் கருதுகிறேன்.பிற்பட்டோரில் முற்பட்டோர் என்பதைகைவிட்டதன் மூலம் இதன் முக்கிய நோக்கம் பணக்காரர்களும், நிலச்சுவான் தார்களும்,அரசியல் வாதிகளும், உயர் அதிகாரிகளும் பிற்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்றகாரணத்தினைக் கொண்டு பலன் பெறுவதே என்பது தெளிவாகிறது.தலித்களுக்கு சிறுபான்மையோர் நடத்தும் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு கிடையாது, ஏன் எந்த வித இட ஒதுக்கீடும் தரத்தேவையில்லை என்பது இந்த சமூக நீதி என்ற கோஷம் எவ்வளவு கேலிக் கூத்தானது என்பதைக் காட்டுகிறது. பானு மேத்தாவின் கட்டுரையை ப் படிக்குமாறு பரிந்துரைக்கிறேன்.

இடைக்காலத் தடை

இடைக்காலத் தடை

தமிழக அரசு கொண்டு வந்த அவசரச்சட்டத்தின் ஒரு பிரிவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது. அரசு 23 மே 2006ல் ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது.அந்த ஆணை என்னைப் பொருத்தவரை சரியான ஆணை அல்ல. அது எந்த சட்டத்தின் கீழ் அரசிற்கு இந்த முடிவினை அதாவது அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆகலாம் என்று உத்தரவிடும் அதிகாரம் இருக்கிறது என்பதை தெளிவாக்கவில்லை.

1972ல் சேஷம்மாள் வழக்கில் உச்ச நீதிமன்றம் ஆகம விதிகளை அரசு பின்பற்ற வேண்டும் என்று தெளிவாகக் கூறியுள்ளது.2002ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு கேரளாவில் பிராமணல்லாதவர் பூசை செய்வதைக் குறித்தது. இரண்டு வழக்குகளுக்கும் சில முக்கியமான வேறுபாடுகள் உண்டு.கேரளாவில் அனைத்து சாதியினருக்கும் உரிய பயிற்சி அளிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, அவ்வாறு பயிற்சி பெற்றவர்களில் ஒருவர் பூசை செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்த போது உச்ச நீதிமன்றம் தந்த தீர்ப்பு இது.

சேஷம்மாள் வழக்கில் சில பகுதிகள் அரசுக்கு சாதகமாக இருந்தாலும், ஆகம விதிகளைபின்பற்றுவது என்று வரும் போது அரசின் நோக்கம் நிறைவேறாமல் போயிற்று. ஆபரேஷன்வெற்றி, நோயாளி மரணம் என்ற கதைதான். உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதுஅதன் அதிகாரத்திற்குட்பட்டதே. அடிப்படை உரிமைகள் குறித்த சட்டம், வழக்குகளை முதலில்உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும், மேல் முறையீடு என்ற போது மட்டுமே உச்ச நீதிமன்றத்தினை அணுக வேண்டும் என்று எந்த விதியும் இல்லை. நேரடியாக உச்ச நீதிமன்றத்தினைநாட முடியும்.அவ்வழக்கினை உயர் நீதிமன்றம் முதலில் விசாரிக்கட்டும் என்று உச்ச நீதிமன்றம்கட்டளையிடலாம் அல்லது தானே விசாரிக்கலாம். எனவே இந்த வழக்கில் மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தினை அணுகியதும், அதை ஏற்று உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தும் சரியே.