அயோத்தி- அர்த்தமற்ற எதிர்ப்பு

அயோத்தி- அர்த்தமற்ற எதிர்ப்பு

அயோத்தியில் ராமர் விக்கிரகம் உள்ள இடத்தில் பாதுகாப்பினை மேம்படுத்தஉத்தேசித்துள்ள மத்திய அரசு இரும்பு அரண் ஒன்றை அமைக்க நீதிமன்றத்தின்அனுமதியினைக் கோரியுள்ளது. இதற்கு சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்புத்தெரிவித்துள்ளன. இது தேவையற்றது.

அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்த வழக்கு நிலைவில் உள்ளது. டிசம்பர்6,1992ல் பாப்ரி மசூதி இடிக்கப்பட்ட பின் மத்திய அரசு அங்கு சர்சைக்குரிய நிலத்தினைகையகப்படுத்தி விட்டது.இப்போது அந்த நிலம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ராமர் விக்கிரகம் இருப்பதை ஒரு முழுக் கோயிலாக மத்திய அரசு மாற்ற முயற்சிக்கவில்லை.மேலும் அரசு செய்ய உத்தேசித்துள்ள நடவடிக்கை பாதுகாப்பு ஏற்பாடுதான், இதற்கும் வழிபாட்டிற்கும்எந்த தொடர்பும் இல்லை. இங்கு கூட இந்த நடவடிக்கை ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான்.

கடந்த காலத்தில் அங்கு தாக்குதல் முயற்சி நடந்ததையும் நாம் கவனிக்க வேண்டும். இப்பாதுகாப்புஅரண் பாதுகாப்பினை இன்னும் வலுப்படுத்தும். இப்போது மூன்று கட்ட பாதுகாபு உள்ளது. இதையும்மீறி உள்ளே நுழைந்து தாக்க முயற்சிகள் செய்யப்பட்டது. இந்த பாதுகாப்பு அரண் எனவே தேவையாகிறது. அங்குள்ள விக்கிரகம் தாக்கப்பட்டால் அல்லது அதற்கு பாதிப்பு ஏற்பட்டால்கலவரங்கள் உருவாக வாய்ப்புண்டு. அதுதான் தீவிரவாதிகளின் விருப்பமாக இருக்கலாம்.

வாரணாசியிலும், வேறு இடங்களிலும் இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களில் தாக்குதல்கள்னடந்துள்ளது. எனவே பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதே. இதில் நீதிமன்ற அனுமதியை அரசு கோரியுள்ளது. இதை நீதிமன்றம் ஏற்கும் என்று எதிர்பார்க்கிறேன். இதை எதிர்க்கத் தேவையில்லை. அரசின் நோக்கம் நியாயமானதே.இது ஒரு பாதுகாப்பு ஏற்பாடு மட்டுமே.

இது யாருடைய உரிமையையும் பாதிக்காது.நிலுவையில் உள்ள வழக்கையையும் இது பாதிக்காது. அரசு தன்னிச்சையாக வழிபாட்டிற்கான இடத்தினை அதிகப்படுத்தி, மேலும் சில விக்கிரகங்களை வைத்தால் அல்லது கோயிலை மறைமுகமாக விஸ்தரிக்க நினைத்தால் அதை எதிர்க்கலாம்.

நரசிம்ம ராவ் அரசு கொண்டு வந்த சட்டப்படி வழிப்பாட்டுத் தலங்களில் ஆகஸ்ட் 15,1947ல்இருந்த நிலை நீடிக்க வேண்டும். மாறுதல்கள் செய்யக் கூடாது (சில விதிவிலக்குகள் தவிர).உதாரணமாக வழிப்பாட்டுத்தலத்தில் உள்ள ஒரு சன்னதியை இன்னொரு இடத்திற்கு மாற்றக்கூடாது. இதைக் கொண்டு வந்ததன் முக்கிய காரணம் இன்னொரு வழிபாட்டுத் தலம் இடிக்கப்படக் கூடாது, மாநிலங்களில் தங்களுக்குள்ள பெரும்பான்மையினைக் கொண்டு எந்த கட்சியும்வழிப்பாட்டுத் தலங்களில் மாறுதல் செய்கிறேன் என்ற பெயரில் இடிப்பது, தகர்ப்பது, இடம்பெயர்ப்பது போன்றவற்றைச் செய்யக் கூடாது என்பதே. சர்ச்சைக்குரிய பகுதியைப் பொறுத்தவரை நீதிமன்ற ஆணைகளின் படியே அரசு செயல்பட்டு வந்துள்ளது. கோயில் கட்டஇந்த்துவ அமைப்புகள் செய்த திட்டங்கள் நிறைவேறவில்லை.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும் போது அரசு செய்ய உத்தேசித்துள்ள நடவடிக்கை சரியானதே. இதை எதிர்க்கத் தேவையில்லை. நீதிமன்ற பரிசீலித்து தீர்ப்புக் கூறட்டும் என காத்திருப்பதே விவேகமானது.

2 மறுமொழிகள்:

Blogger ravi srinivas மொழிந்தது...

test

11:23 AM  
Blogger Vajra மொழிந்தது...

அயோத்தி ராமர் கோவில் இருந்ததாக சரித்திர சான்றுகள் கண்டுபிடிக்கப் பட்டதே...மற்றும் பாபர் மசூதி ஒரு மசூதியே அல்ல சிதிலமடைந்த பயன் படுத்தப் படாத ஒரு கட்டிடம் என்றும் சொல்கிறார்களே...அதைப் பற்றி ஏதும் பதித்திருக்கிறீர்களா..இருந்தால் சுட்டவும்.

ஏன் என்றால் அது உண்மையாக இருக்கும் நிலையில், பாபர் "மசூதி" இடம் யாருக்குச் சொந்தம் என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்...!!

4:36 AM  

Post a Comment

<< முகப்பு