வேணுகோபாலும், அன்புமணியின் அடாவடித்தனமும்

வேணுகோபாலும், அன்புமணியின் அடாவடித்தனமும்

அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் இயக்குனர் வேணுகோபல் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.மத்திய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்தால்இது நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.அவருக்கு உங்களை ஏன் பதவி நீக்கம்செய்யக்ககூடாது என்று விளக்க கடிதம் அனுப்பபடவில்லை.அவர் இடை நீக்கமும்செய்யப்படவில்லை.அக்கழகத்தின் பிரச்சினைகள் குறித்து அமைக்ககப்பட்ட குழுவும்தன் பணியைத் தொடரவில்லை.இந்நிலையில் அவர் இப்படி பணியிலிருந்து நீக்கப்படுவதுஅடாவடித்தனம். இதை எதிர்த்து மாணவர்கள்,மருத்துவர்கள்,ஆசிரியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியரசுத் தலைவர் தலையிடக் கோரி இந்திய மருத்துவசங்கம் கோரியுள்ளது. கிட்டதட்ட 48 ஆண்டுகள் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்துடன்தொடர்பு உடையவர் வேணுகோபல்.மருத்துவர் என்ற ரீதியில் சாதனைகள் புரிந்தவர்.அறிவியல்ஆய்வுகளிலும் ஈடுபட்டிருப்பவர்.இப்படிப்பட்ட ஒரு மூத்த மருத்துவர்,ஆராய்ச்சியாளரை இந்தஅரசு இப்படி நடத்தும் என்றால் இந்த அரசு எத்தகைய அரசு.ஒரு அமைச்சரின் தனிப்பட்டவிருப்பு வெறுப்புகளுக்காக இப்படி செய்வது எந்த விதத்தில் நியாயம்.
வேணுகோபால் செய்தது தவறு என்றே வைத்துக்கொண்டாலும் கூட அவருக்கு என்ன தவறுசெய்தீர்கள் என்று அறியத்தந்து அவர் தரப்பு வாதத்தினை கேட்ட பிறகல்லவா மேல் நடவடிக்கைஎடுக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஜெயலலிதாவின்நடவடிக்கைக்கும், அன்புமணி செய்திருப்பதற்கும் என்ன வேறுபாடு.இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டால் அவர்தரப்பு நியாயத்தினை விளக்க அவருக்கு வாய்ப்பேதும் தராமல் இப்படி நீக்குவது சரியா.ஊழல்குற்றச்சாட்டிற்கு ஆளானவர்கள் அமைச்சரவையில் இருக்கிறார்கள். ஒரு மருத்துவ நிபுணர் ஒரு அமைச்சரின் தனிப்பட்ட வெறுப்பு காரணமாக பதவியிலிருந்து நீக்கப்படுகிறார்.

அவர் ஆந்திர பார்ப்பனர் என்று குறிப்பிட்டு எழுதிய விடுதலை, அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றது.இதே விடுதலைதான் ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான லாலுவிற்கு வக்காலத்துவாங்கியது.

இதுதான் இட ஒதுக்கீடு ஆதரவாளர்களின் சமூக நீதி,அதாவது சாதிக்கொரு நீதி.

20 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

Venugopal never worked as politician rather than Doctor. I was there in AIIMS for 7 years, I know him very well. He is more than a politician. I welcome Anbumanis move on this.

11:38 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

The father and son (Ramadoss and Anbumani) want to make AIIMS an
OBC dominated institute.Anbumani
has appointed a close relative to
a key post in health sector.Venugopal is an expert
but as he is a brahmin he has to
pay the price for that.

9:09 AM  
Blogger Sivabalan மொழிந்தது...

Mr. ரவி,

நீங்கள் சொல்லுவது போல் வேணுகோபாலுக்கு தன்னிலை விளக்கம் தர ஒரு வாய்ப்பு தந்திருக்கலாம்.

// இதுதான் இட ஒதுக்கீடு ஆதரவாளர்களின் சமூக நீதி,அதாவது சாதிக்கொரு நீதி. //

ஆனால் இவ்வாறு கூறுவது வருத்தமாக உள்ளது.

நன்றி.

11:30 AM  
Blogger Vajra மொழிந்தது...

ரவி ஸ்ரீனிவாஸ்,

அன்புமணியின் ஜாதி அரசியலால் பிரதமர் மன்மோஹன் சிங்குக்கு கெட்ட பெயர்.

பா. ம. க தன் தேவையை பூர்த்தி செய்து கொள்ள என்னவேண்டுமானாலும் செய்யும். NDA விலிருந்து விலகி சுய லாபத்திற்காக UPA வில் சேர்ந்த போதே அதை அடக்கி வைத்திருக்க வேண்டும். அமைச்சர் பதவி எல்லாம் கொடுத்தால்...இப்படித் தான் தமிழ் நாட்டு brand பிராமண வெறுப்பை தேசிய அளவில் முன்னேற்றியிருக்கிறார் அன்புமணி. அவர்களுக்கு வெட்கமில்லாமல் கொடித்தூக்கும் ஜாதி வெறியர்கள்.

11:14 AM  
Blogger குழலி / Kuzhali மொழிந்தது...

http://kuzhali.blogspot.com/2006/07/1.html

2:47 AM  
Blogger Vajra மொழிந்தது...

Delhi HC stays Venugopal Dismissal

AIIMS back to normal with Venugopal

இப்பொழுது அரவாணர்கள் தலையை தொங்கப் போட்டுக்கொண்டு போகவேண்டுமா? அபிமன்யூவுக்கு மிருத்யுஞ்சய மந்திரம் ஓதி விட்டது தில்லி உயர் நீதிமன்றம்....

1:14 PM  
Blogger ஜயராமன் மொழிந்தது...

எங்கள் மரியாதைக்குறிய அண்ணன், பாட்டாளி சிங்கம், ராம ராஜ்யம் வழங்கும் ராமதாசு அவர்களின் திடீர் மந்திரி புதல்வன், மரங்களின் காவலன் சின்ன அய்யா அவர்களின் ராஜியத்தில் தன் குடிநாடான AIIMS க்குக்காக அவர் ஆற்றிய தொண்டுகள் நீதிமன்றத்தில் பட்டியல் இடப்பட்டன. அவற்றில் சில;

சுப்ரீம் கோர்டில் ஸ்ட்ரைக் செய்த டாக்டர்களை பழி வாங்க மாட்டோம் என்று வாக்கு கொடுத்துவிட்ட ஸ்டைரைக்கு ஆதரவாக இருந்தார் என்பதற்காக இயக்குனரை அவமானப்படுத்தி திடீர் டிஸ்மிஸ்.

அண்ணனின் முன்னாள் காரியதரிசி OSD ஒரு போலிஸ் இன்ஸ்பெக்டரை பதவி உயர்வு கொடுத்து OSD ஆக ஆக்கி அவரை பதவி முடிந்தவுடன் சம்பளம், வீட்டு அலவன்ஸ் எல்லாம் AIIMS கணக்கில் எழுதியது.

எங்கள் சின்ன ஐயா திடீர் அரசியல்வாதி அவர்களின் தற்போதைய காரியதரிசி OSD அவர்கள் AIIMS கெஸ்ட் ஹவுஸில் நிரந்தர வாசம் செய்து வருகிறார். அவர் AIIMS நிர்வாக விழயங்களில் தன் 'அன்பு அறிவுரை' கூறி இயக்குனரை சரியாக நடத்திச் செல்கிறார்.

இதற்கெல்லாம் பதிலாக ஐயா அவர்கள் கோர்ட்டில் போட்ட குண்டில் கட்டிடமே அதிர்ந்தது. அதாவது, இந்த வேணுகோபால் தானாகவே பதவி விலகினால் நாங்கள் தயை செய்து அவரை டிஸ்மிஸ் செய்ய மாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். எல்லாரும் சிரித்து இடுப்பு சுளுக்கிக்கொண்டது.

இதைவிட பல கலக்கல்களை எங்கள் மரங்களின் காவலன் சின்ன ஐயா அவர்கள் செய்து காட்டியிருக்கிறார். எங்கள் திடீர் ஐயா அவர்கள் போட்ட ஒரு உத்தரவால் சினிமா சமுதாயமே கலங்கியது. சிகரெட் காட்சிகள் சினிமா, டிவியில் வரக்கூடாது என்று. அது எப்போது படம் எடுத்ததாக இருந்தாலும் சரி. 1962 தேவ் ஆனந்த் ஹம்-தோனா வாக இருந்தாலும் சரி அதை இப்போது ஒளிபரப்ப முடியாது என்று. டிவிக்கார்ர்களும், சினிமாக்கார்ர்களும் சிரித்ததில் சீரியலின் அழுகை சத்தம் நின்றது.

அவர் கரங்களை வலுப்படுத்தி இன்னும் பலப்பல 'ராம' ராஜ்ஜியங்களை எதிர்பார்ப்போம்.

நன்றி

2:11 AM  
Anonymous செல்வமணி மொழிந்தது...

அரசின் கொள்கை முடிவின் படி 27%சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து AIIMS வளாகத்திலேயே சாமியானா அமைத்து, FAN மற்றும் AIR-COOLER(இதற்க்கான மின் செலவை யார் கொடுப்பது?) பயன்படுத்தி போராட அனுமதி கொடுத்த ஒரெ காரணத்திற்க்காக வேணுகோபாலை கைது கூட செய்திருக்கலாம்.ஒரு அரசின் கொள்கையை உனக்கு பிடிக்கவில்லையென்றால் மக்கள் மத்தியில் அதை விளக்கி,போராட்டம் பண்ணி ஆட்சி மாற்றம் கொண்டுவந்து உன் கொள்கையை சட்டமாக்கு. அதை விட்டுவிட்டு AIIMS வளாகத்தை தன் ஜாமீன் சொத்தாக நினைத்து மருத்துவர்களை தூண்டிவிட்டதை தண்டித்தே ஆகவேண்டும். அரசிடம் சம்பளம் வாங்கிக்கொண்டே அரசின் ஒரு கொள்கையை எதிர்த்ததுமல்லாமல் மற்றவர்களையும் போராட தூண்டியது இயற்கையாகவே அவர் ரத்தத்தில் கலந்திருக்கும் 'அந்த' திமிர்தான்.அவர் ஒரு திறமையான மருத்துவராக இருக்கலாம்.தவறு செய்தால் அவரும் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும்.

ஒருவர் 100 உயிர்களை காப்பாற்றியவர் என்பதற்க்காக ஒரிரு கொலைகளை செய்ய அவரை நாம் அனுமதிக்கமுடியுமா?

வக்கிர.. ஸாரி..வஜ்ரா சங்கர்...இப்பொது கொடுக்கபட்டிருப்பது STAY...இது எப்போது வேண்டுமானாலும் விலக்கிக் கொள்ளப்படலாம். சாமி...இதெல்லாம் உங்களுக்கு நன்னாவே தெரியுமே, அதற்க்குள் ஏன் அவசரபடுரேள்?

3:15 AM  
Blogger ஜயராமன் மொழிந்தது...

செல்வமணி,

AIIMS இயக்குனர் பதிவி ஒன்றும் ரோட்டோரம் கிடக்கும் மரம் இல்ல. நினைத்த போது வெட்டி சாய்ப்பதற்கு.

இவ்வளவு வீரம் இருந்தால், சுப்ரீம் கோர்ட்டிடம் 'ஸ்ட்ரைக் செய்தவர்களை பழிவாங்க மாட்டோம்' என்று வாக்குறுதி கொடுப்பானேன். அப்புறம் இந்த வீரம் ஏன். அந்த வாக்குறுதியை வாங்கிக்கொண்டுதானே சுப்ரீம் கோர்ட் டாக்டர்களுக்கு ஆர்டர் போட்டு ஸ்ட்ரைக்கை திரும்பச்செய்தது.

நீங்கள் நடத்தும் போராட்டங்கள் எல்லாம் நீங்கள் சொல்வது போல நடக்கிறது. கவர்ண்மெண்ட் நிலத்தில், கவர்ண்மெண்ட் செலவில், கவர்ண்மெண்ட் மரத்தை எடுத்து நடத்தி தானே பல வீரப்புண்களை ஐயா பெற்றிருக்கிறார். தனக்கு ஒரு நியாயம்...

வேணுகோபால் செய்தது நியாயமா என்பதே விஷயமில்லை. இதற்கு சாதி கலர் பூச ரொம்ப ட்ரை பண்ணி தங்கள் விகாரத்தை கடையேற்ற வேண்டாம்.

AIIMS இயக்குனர் பதவி ஒன்றும் மந்திரி பதவி மாதிரி திடீர் பல்டியில் வருவதில்லை. இது ஐயா அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அந்த ஆளு ரொம்ப நாளா அங்க சேவை செய்தவர்தான். எல்லாரையும் நடத்த தெரிய வேண்டும். நடத்தய பத்தி... அதுசரி... அத பத்தி இவங்க கிட்ட என்னத்த பேச...


நன்றி

p.s please remove word verification option while posting comments. this is a big nuisance

6:13 AM  
Blogger Dharumi மொழிந்தது...

ஆமாம் ரவி நீங்கள் சொல்வது முற்றிலும் சரி...//சமூக நீதி,அதாவது சாதிக்கொரு நீதி.// - இது மிக மிகத் தவறல்லவா..? உங்கள் மனசாட்சியின் குரலுக்கு என் வாழ்த்துக்கள்.

6:36 AM  
Blogger சரவணகுமார் மொழிந்தது...

"""அரசின் கொள்கை முடிவின் படி 27%சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து AIIMS வளாகத்திலேயே சாமியானா அமைத்து, FAN மற்றும் AIR-COOLER(இதற்க்கான மின் செலவை யார் கொடுப்பது?) பயன்படுத்தி போராட அனுமதி கொடுத்த ஒரெ காரணத்திற்க்காக வேணுகோபாலை கைது கூட செய்திருக்கலாம்."""

அப்ப நாம மரம் கட்டிங்...கட்டிங் போராட்டம்.....போர்டு பெயின்டிங்..பெயின்டிங் போராட்டம்....சினிமா போஸ்டர் கிழிச்சு... படப்பெட்டி தூக்கிட்டு ஓடிப் போய் அன்பான மிரட்டல் விட்டு பண்னதெல்லாம்...அரசாணையை மதித்து காப்பாத்தவாங்கண்ணா........

இதுக்கெல்லாம் ஒரு தூக்கு தண்டனை கொடுக்கலாமா...அடடா மந்திரி பதவில்ல கொடுத்துருக்கு...... சனநாயகம்...

""""ஒரு அரசின் கொள்கையை உனக்கு பிடிக்கவில்லையென்றால் மக்கள் மத்தியில் அதை விளக்கி,போராட்டம் பண்ணி ஆட்சி மாற்றம் கொண்டுவந்து உன் கொள்கையை சட்டமாக்கு. அதை விட்டுவிட்டு AIIMS வளாகத்தை தன் ஜாமீன் சொத்தாக நினைத்து மருத்துவர்களை தூண்டிவிட்டதை தண்டித்தே ஆகவேண்டும்.""""

மேலே சொன்ன பதிலே ""ர்ர்ரிப்பீட்டு"

///////அரசிடம் சம்பளம் வாங்கிக்கொண்டே அரசின் ஒரு கொள்கையை எதிர்த்ததுமல்லாமல்/////

ஸ்டாப்...ஸ்டாப் இது அரசின் கொள்கையா இல்லை அரிப்பெடுத்த ""அன்பான"" மந்திரியின் ""மணியான"" கொள்கையாண்ணா ??

/////மற்றவர்களையும் போராட தூண்டியது இயற்கையாகவே அவர் ரத்தத்தில் கலந்திருக்கும் 'அந்த' திமிர்தான்."////

கிச்சு கிச்சு மூட்டாதிங்கண்ணா ... இதெல்லாம் நம்ம காப்பி ரைடுங்கண்னா...ஆதாயத்துக்காக திருமாவை தூண்டுரது அப்புரம் கழட்டி வுடுரது....இப்படி.....
அப்புரம் எங்க வூட்டுல யாராவது பதவில இருந்தா சவுக்கால அடிங்க அப்படீன்னு படா சோக்கா சொல்லிட்டு அப்புறம்...மந்திரியாகுற தகுதி டாக்டர் புள்ளைக்கு மட்டும்தான் இருக்குது அப்படீன்னு திரிக்கிற "அந்த" மாதிரி புத்தியெல்லாம் நம்ம காப்பி ரைட்டுங்கண்னா.....

///////இப்பொது கொடுக்கபட்டிருப்பது STAY...இது எப்போது வேண்டுமானாலும் விலக்கிக் கொள்ளப்படலாம். சாமி...இதெல்லாம் உங்களுக்கு நன்னாவே தெரியுமே, அதற்க்குள் ஏன் அவசரபடுரேள்?/////

இதேதாங்கண்ணா...ஆட்சி கலைஞ்சுட்டா ஆட்டிக்கிட்டு இருக்குறதை சுருட்டி மடக்கி உள்ளார வச்சுக்கிட்டு வந்துர வேண்டியதுதான்...அட வாலை சொன்னேம்ப்பா....
அது சரி வேணுவாவது பதவி இல்லையினா இதய ஆப்பரேசன் செய்து பொழைப்பார்...இவரு என்னா செய்வாய்...இருக்கவே இருக்கு மரத்துக்கு "ஆப்பு"ரேசன்...""ஒரு அரசின் கொள்கையை உனக்கு பிடிக்கவில்லையென்றால் மக்கள் மத்தியில் அதை விளக்கி,போராட்டம் பண்ணி ஆட்சி மாற்றம் கொண்டுவந்து உன் கொள்கையை சட்டமாக்கு. """

ஆஹா...வந்துட்டாங்கையா...வந்துட்டாங்கையா....ஜனநாயக முட்டை பொரிச்ச குஞ்சுங்க....
1.நாம ஜனநாயக அறப்போராட்டம் பண்ண மரமெல்லாம் வெட்டி ரோடுல போட்டோமே அதெல்லாம் நம்ம அப்பா வச்ச மரங்களாண்னா..அல்லது வச்சதெல்லாம் நம்ம அப்பா.. அப்படீங்குற கணக்கிலயா....
2.எலக்ஸனுக்கு மீட்டிங் போடும்போது நாம பொரிச்ச பகுத்தறிவு குஞ்சு..அதாங்க ஏமாந்த சோணகிரி என்கிற கட்சி தொண்டன் கபால்னு கப்பத்துல ஏறி கனக்சன் குடுத்து லைட்டு..மைக்குனு கனக்சன் குடுத்து விடிய விடிய அசத்துரோமே அது எந்த மாமனார் வீட்டு ஜாமின் சொத்துங்கண்ணா ?

6:39 AM  
Blogger நன்மனம் மொழிந்தது...

சரவணகுமாரு....

கிச்சு கிச்சு காப்பிரைட்ட எடுத்துக்கிட்டாங்கனு இவ்வளவு கோவம் ஆகாதுங்க :-))

இதெல்லாம் நேற்று நடந்தது, இன்று நடக்கும், நாளை நடத்துவோம். இன்னிக்கு தமிழக அரசு நடவடிக்கை முந்தய அரசுக்கு சரியா இருக்கு அத கேளுங்க... 5 வருசம் அவங்க பண்ணாங்க நாங்களும் பண்ணுவோம் வேணும்னா அடுத்த எலக்சன்ல தூக்குங்க.... யாரு தடுக்கறா ஆனா நாங்க மட்டும் தான் சமூக நீதி பத்தி பேசுவோம்.... வேற யாராவது பேசினா அவ்வளவுதான்...

8:12 AM  
Blogger ENNAR மொழிந்தது...

//ஜெயலலிதாவின்நடவடிக்கைக்கும், அன்புமணி செய்திருப்பதற்கும் என்ன வேறுபாடு.//
ஒற்றுமை
அனுபவமின்மை அவசரம்

8:30 AM  
Anonymous செல்வமணி மொழிந்தது...

வந்துட்டாங்ய்யா 'பாயிண்ட் பலராமன்கள்'....அன்புமணி செய்தால் என்ன வேணுகோபால் செய்தால் என்ன..தவறை யார் செய்தாலும் சுட்டிக் காட்ட தயங்கவேண்டியதில்லை.யார் சொன்னது மரத்தை வெட்டியது நியாயம் என்று? அப்படி யாராவது நியாயபடுத்தினால் அது அயோகியத்தனம். வேணுகோபால் செய்ததும் அதே தனம்தான்.

ஜயராமன்...ஜாதி கலர் பூசுவது பற்றி நீங்கள் பேசுவது ஆச்சரியமாக உள்ளது.'இட்லி வடையில்'(இலங்கை பிரச்சனையில்) நீங்கள் இட்ட பின்னோட்டம் ஜாதி வர்ணம் போகாமல் தான் உள்ளது.போய் பார்க்கவும்.அங்கு ஜாதி பெருமை பேசுவது....இங்கு பெரிய புரட்சிவாதி மாதிரி பேசவேண்டியது...ஏன் வேசம் போடுகிறீர்? இந்த விசயத்தில் வஜ்ரா சங்கரை பாராட்டலாம்...தான் இந்த வர்ணம் என்பதை ஒவ்வொரு நிமிடமும் காட்டிக் கொண்டேயிருப்பார்.


AIIMS இயக்குனர் பதவி என்ன...எந்த பதவியிலும் யார் வேண்டுமானாலும் அமரலாம்.

சரவணகுமார் அண்ணே...நல்லா காமடியா எழுதுறீங்க...சிரிப்பு சிரிப்பா வருது... இதே போல் தப்பு பண்ணும் எல்லோரையும் கண்டித்து சிரிப்பு சிரிப்பா எழுதுங்க...இதுல reservation வேண்டாம்னே...

தலையிலிருந்து பிறந்ததாக சொல்லப்படும் சிலருக்கு விஷேச உரிமைகள் தரவேண்டிய அவசியமில்லை...சில உரிமைகளை பிடுங்கவும் வேண்டியுமிருக்கிறது.அங்கேயே பிறந்து அவைகளினாலேயே மிதிபட்டு காலம்காலமாய் அவதிபடும் சிலருக்கு சில சலுகைகள் கொடுப்பது காலத்தின் கட்டாயம்.

சமுக மாற்றத்தை இரு கை கொண்டு நிறுத்திவிடலாம் என மடையர்கள் நினைப்பதுண்டு.வேணுகோபாலும் இப்படித் தான் நினைக்கிறார் போலும்.

1:33 PM  
Blogger Vajra மொழிந்தது...

Ramadoss said 13-3 in AIIMS board voted to sack Venugopal, seven say they don’t agree

1,2,3: Under this, Ramadoss chose himself, his sister’s father-in-law Dr A Rajashekaran and his Secretary P K Hota, all of whom backed the resolution to sack Venugopal. For Rajashekaran, a urologist, this is his second term on the board. He was in the previous body as well, appointed by then Health Minister T Shanmugham, of the same PMK party as Ramadoss.

4: The “non-medical” Science Congress representative was Prof B P Chatterjee, biochemistry professor at the Indian Association for the Cultivation of Science, Kolkata. When contacted by The Sunday Express, Chatterjee, said: “I told them I can’t vote in favour of the resolution. We requested that the issue be settled amicably. There was no voting so there is no question of my voting for it.”

5: Nilima Kshirsagar, Dean of Mumbai’s KEM hospital: Absent. Declined to comment.

Four representatives of medical faculties of Indian universities nominated by Ramadoss:

6: K K Talwar, PGI, Chandigarh, Director, who is considered to be in the running for Venugopal’s post: Opposed Venugopal, declined to comment.
7:: Kartar Singh, Director, Sanjay Gandhi institute in Lucknow: “Nobody voted for anybody there. I asked for the issue to be settled mutually. How can I vote against Dr Venugopal? He is my friend, he did my operation.”
8: R Surendran, professor of gastroenterology at Chennai’s Stanley Hospital: Declined to comment
9: S S Agarwal, chief, Central Drug Research Institute, Lucknow: “Dr Venugopal is a highly respectable, talented and decorated medical professional who has dedicated his life to his patients. He should have got an appropriate chance to explain.”
10: Dr S K Srivastava, Director General Health Services (ex-officio member), backed the resolution: ‘‘Court is supreme they must have looked into the merit of the case.’’
11: Raghuveer Singh, Finance Ministry nominee: Unavailable for comment.
12: Dr Karan Singh Yadav, Congress MP (nominated by party): ‘‘It’s an unfortunate episode and I wouldn’t like to comment. All I can say is courts are supreme and we have to respect them.’’
13: R K Dhawan, Congress MP (nominated by party): “The Health Minister did not ask us one by one. All I can say I was for reconciliation and an honourable settlement by both sides.”
14: Delhi University Vice Chancellor Deepak Pental (ex-officio member): Opposed the resolution: “Dr Venugopal needs to be given a chance to explain.”
15: V K Malhotra, BJP MP (party nominee): “We told the Minister that the procedure he is following can’t stand in court of law. Now the court has to probe how he bullied the members by taking the Prime Minister’s name. We have sent a letter to the PM signed by former PM A B Vajpayee and L K Advani.”
16: Sudeep Banerjeee, HRD nominee: Absent; unavailable for comment.
17: P Venugopal (nominated by law): asked to step out of the meeting.

Hurdles cleared for Papa doc

His ‘‘great Vanniyar dream’’ of a deemed university complex on 180 acres is steamrolling protests and rules—an unauthorised bridge over a PWD-owned water channel, ‘‘grabbing’’ a local burial ground and some peremboke (government-owned) land as well.

...


‘‘When completed, it will be the first-ever deemed university complex in the country covering the entire educational gamut—a law college, paramedical institute, medical college and management Institutes, besides the existing training institute for IAS/IPS aspirants,’’ PMK spokesperson, Jothi Mani told Sunday Express


இத்ல் எப்படி, வன்னியர்களுக்கு 100% இட ஒதுக்கீடா?

10:22 AM  
Blogger சரவணகுமார் மொழிந்தது...

////சரவணகுமார் அண்ணே...நல்லா காமடியா எழுதுறீங்க...சிரிப்பு சிரிப்பா வருது... இதே போல் தப்பு பண்ணும் எல்லோரையும் கண்டித்து சிரிப்பு சிரிப்பா எழுதுங்க...இதுல reservation வேண்டாம்னே...//////
நல்லா சிரிச்சுக்குங்க....அன்புமணி கூட்டம் மற்றும் திராவிட கட்சிகள் என்று சொல்லிக் கோண்டு திரிபவர்களது கொள்(ளை)கை விளக்கமெல்லாம் எழுதினால் இன்னும் தப்பு தப்பா இருக்கும்...... சிரிப்பு தாங்காம கீழ விழுந்துடுவீங்க....
நமக்கு எழுதுரதுல எந்த ரிசர்வேசனும் கிடையாதுங்கோ....நாம ஆதரிக்கிர ஒரே ரிசர்வேசன் உண்மையில் ஒடுக்கப்பட்ட...தாழ்த்தப்பட்ட....மற்றும் சமூகத்தில் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு மட்டும் தாங்கோ...அவங்அளுக்கு ரிசர்வேசன் இல்லைங்கோ..முழு கோட்டாவையும் கூட குடுக்கலாமுங்கோ...ஆனா நடுவுல cirtificate...வாங்கி வச்சுக்குட்டு அடாவடி பண்ற கும்பலுக்கு ரயில்ல கூட ரிசர்வேசன் தர சப்போர்ட் பண்ண மாட்டோமுங்க....

அப்புறமா...இன்னிக்கு ஒண்ணாங்க்ளாஸ் குழந்தையை கேட்டாக்கூட பாப்பா எங்கிருந்து பொறக்கும் அப்படீன்னு புட்டு புட்டு வைக்கும்ணா...அதுக்கு தெரிஞ்சது கூட நமக்கு தெரியலையாண்ணா...எவனோ தலையிலேருந்து பிறந்தான் அப்படீன்னு சொன்னா நம்பிடுறதா..:))

அது சரிங்கண்ணா....பாப்பானெல்லாம் தலை...தாழ்த்தப்பட்டவரெல்லாம் அங்கேயிருந்து பிறந்து அங்கேயே மிதி படுபவர்கள்...நடுவுல சர்டிபிகேட் வச்சிக்கிட்டு தலைல ஒக்காந்து ஆடுராங்களே அவங்கள்ளாம் என்ன சிசேரியன்...கேசுங்களா ?? :))

1:17 PM  
Blogger பாலசந்தர் கணேசன். மொழிந்தது...

ஒரு தவறை வைத்து இன்னோர் தவறை நியாயபடுத்தி விட முடியாது. அன்பு மணியை எதிர்ப்பவர்களும், வேணுகோபாலை எதிர்ப்பவர்களும் குறைந்த பட்சம் இந்த பின்னூட்டங்களிலாவது நேர்மையாக இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இட ஒதுக்கீட்டை எதிர்த்து வேணுகோபால் போரட்டத்தில் ஈடுபட்டது முற்றிலும் தவறே.

9:52 AM  
Blogger ஜயராமன் மொழிந்தது...

செல்வமணி ஐயா,

தங்களின் பின்னூட்டத்தை பார்த்தபிறகு இட்லிவடையாரின் பதிவுக்கு சென்று பார்த்தேன்.

பார்த்த எனக்கு அதிர்ச்சி.

என் பெயரில் போலி போட்ட ஆபாசமான ஒரு கருத்து.

அந்த பின்னூட்டத்தின் லிங்கை பார்த்தாலே அது நான் அல்ல, போலி போட்டது என்று புரியும்.

அதை தாங்கள் கவனிக்காது என்னை வைது பின்னூட்டமும் இட்டுள்ளீர்கள்.

மேலும் சிலரும் இந்த தவறை செய்திருக்கிறார்கள்.

இட்லிவடையாரின் அந்த பதிவில் நான் மறுப்பு பதிந்திருக்கிறேன்.

தாங்கள் இதனால் என்னை தவறாக நினைக்கவேண்டாம்.

இம்மாதிரி இழிவான பின்னூட்டம் என் பெயரில் வந்துள்ளது தங்களின் பின்னூட்டத்தால் தெரிந்து கொண்டேன். அதற்கு மிக்க நன்றி.

இம்மாதிரி அறுவெறுப்பான கருத்துகளை நான் பதிய மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்.

குழப்பம் தெளிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

நன்றி

10:27 AM  
Blogger enRenRum-anbudan.BALA மொழிந்தது...

ரவி,
தேவையான பதிவு.

http://balaji_ammu.blogspot.com/2006/07/blog-post_07.html

1:18 PM  
Anonymous செல்வமணி மொழிந்தது...

ஜயராமன்...தங்கள் விளக்கத்தை படித்து புரிந்துகொண்டேன்.தங்கள் புகைப்படத்துடன் ஒரு பின்னோட்டம் வருகிறது...அதற்கு நான் ஒரு பதில் பின்னோட்டம் இட்டேன்...அவ்வளவுதான். நான் எங்கு தங்களை வைதேன்?? ஒரு கருத்து...அதற்கு ஒரு மாற்று கருத்து என்ற ரீதியில் எடுத்துக் கொள்ளவும். கருத்துக்கள் மோதும்போதுதான் புதிய கருத்துக்கள் உருவாகின்றன.

பாலசந்தர்...அந்த குறைந்த பட்ச நேர்மை என்ன என்று சொல்லியிருக்கலாம்...ஜாதியை உள் வைத்து விசயங்களை எழுத உண்மையிலேயே எரிச்சலாக இருக்கிறது. சிலருக்கு அந்த ஜாதி என்ற ஆயுதத்தை மறைத்து பயன்படுத்த தெரிந்திருக்கிறது.அதனால்தான் நாமும் அந்த கருமத்தை பயன்படுத்தவேண்டியிருக்கிறது.என்ன செய்வது...எதிரிதான் நம் ஆயுதத்தையும் தீர்மானிக்கிறான்.

7:10 AM  

Post a Comment

<< முகப்பு