இட ஒதுக்கீடு ஒரு புதிய பார்வை

இட ஒதுக்கீடு ஒரு புதிய பார்வை

அன்பரசன் (எ) மு.நாராயணசாமி

(இக்கட்டுரை உண்மை இதழில் வெளியானது).

இட ஒதுக்கீடு ஏன் வேண்டும் என்பதை அறிவதற்கு, மனித செல்களின் செயல் பாடுகள் எவ்வாறு அமைந்து இருக்கிறது என்பதை அறிவது அவசியமாகும். செல்களின் செயல்பாடுகளை ஒருவன் அறிந்து கொண்டால் இட ஒதுக்கீடு என்பது எவ்வளவு அவசியமானது என்பதை அவன் அறிந்து கொள்ள முடியும்.

ஒருவன் அறிவு மிகுந்தவனா கவும், வலிமை உள்ளவனாகவும் இருப்பதற்கு அடிப்படையான காரணம் அவர்களுடைய மூதா தையர்களின் கல்வி, தொழில், பண்பாடு ஆகியவைகள் அவர் களின் செல்களில் பதிவாகி உள்ளதே காரணமாகும்.இந்திய நாட்டில் கி.பி. 1500ஆம் ஆண்டு முதல் கி.பி. 1900ஆம் ஆண்டு வரை வாழ்ந்த மக்கள் தொகை சுமார் 20 கோடியை விட குறைவாகவே இருந்து வந்துள்ளது. கிராமங் களிலோ, பெரிய ஊர்களிலோ போதிய கல்விக் கூடங்கள் இல்லை. ஆங்காங்கே திண் ணைப் பள்ளிக் கூடங்களில் ஒரு சிலரே கல்வி கற்றனர். தொழில் கல்வி என்பது எங்கோ அரிதாகக் காணப்பட்டன. அந்தக் காலத் தில் தந்தை தொழிலை மகன் கற்றான். தொழிலின் பெயரே சாதியின் பெயராக அமைந் திருந்தன. ஒவ்வொரு சாதியி னரும் ஏதோ ஒரு குறிப்பிட்ட தொழிலை செய்து வந்தனர். ஆகவே, சில குறிப்பிட்ட சாதி யினர், தொடர்ந்து பொருளா தாரத்திலும் சத்துக் குறைவு நோய்களாலும் பாதிக்கப்பட்டு, அந்த சாதியினரின் செல்களில் விஞ்ஞானப்பூர்வமான பதிவுகள் ஏற்பட்டு அந்த சாதியினர் தாழ்த்தப்பட்டவர்களாகவும், பிற்படுத்தப்பட்டவர்களாகவும் ஆக்கப்பட்டு உள்ளதை எந்த மருத்துவர்களும் மறுக்க முடியாது. மனித செல்களில் ஏற்பட்ட பழங்கால பதிவுகளை அகற்றாவிட்டால் சமத்துவ சமுதாயத்தை ஏற்படுத்துவது எந்தக் காலத்திலும் இயலாத ஒன்றாகவே அமைந்துவிடும்.

செல்களின் செயல்பாடு அல்லது கருவமைப்பு என்றால் என்ன?நமது உடலானது எலும்பு, சதை, ரத்தம், தோல் ஆகிய வற்றால் உருவானது போல தோன்றினாலும் கோடிக்கணக் கான செல்களின் தொகுப்பே நமது தோற்றத்திற்குக் கார ணமாகும். “மைக்ரோ°கோப்” கருவி மூலமாக மட்டுமே பார்க்கக் கூடிய ஒவ்வொரு செல்லிலும் “உட்கரு” உள்ளது.

உட்கருவில் 23 ஜோடி “குரோமோசோம்” எனப்படு பவை இருக்கின்றன. ஒவ்வொரு குரோமோசோமிலும் மிகவும் நுட்பமான 5 அடி நீளம் கொண்ட ரிப்பன் போன்ற அமைப்பு உள்ளது. அதுவே “டிஎன்ஏ” (னுசூஹ) என்று கூறப் படுகிறது.இந்த “டிஎன்ஏ” என்பதில் தான் நமது உடலின் ரகசியங்கள் அடங்கிய ஜீன் என்பது உள்ளது. ஒவ்வொரு டிஎன்ஏ சுருளிலும் 320 கோடி ரகசிய குறியீடுகள் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். டிஎன்ஏ-ல் உள்ள ஜீன் என்ற படி போன்ற அமைப்பில் “ஏ-டி” மற்றும் “சி-ஜி” என்று ஜோடி சேர்ந்துள்ள 4 வித ரசாயன குறியீடுகள் மாறி, மாறி இடம் பெறுவதால் அதற்குத் தக்கபடி ஒருவரது உடல் அமைப்பு, குணநலன், செயல் பாடுகள் மற்றும் அனைத்தும் நிர்ணயிக்கப்படுவதாக விஞ் ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

சிலர் குண்டாகவும், சிலர் ஒல் லியாகவும், சிலர் சாந்தமாகவும், சிலர் சிடுமூஞ்சிகளாகவும், சிலர் மேதைகளாகவும், சிலர் முட் டாள்களாகவும் இருப்பதற்குக் காரணம் டிஎன்ஏ-ல் உள்ள பதிவுகளே என்று விஞ்ஞானம் தெரிவிக்கிறது.ஜீன்களில் உள்ள ரகசிய குறியீடுகளில் 85 சதவீதம் துல்லியமாக கண்டுபிடிக்கப் பட்டுவிட்டதாகவும் மீதி குறியீடுகளையும் விரைவில் கண்டுபிடித்து விடுவதாகவும் விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார்கள். இந்தக் கண்டுபிடிப்பை அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்°, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் “ஹியூமன் ஜினோம் புராஜக்ட்” என்ற திட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் திறமையாக செயல்பட்டு இந்த அரிய கண்டுபிடிப்பை கி.பி. 2000ஆம் ஆண்டில் வெளியிட் டுள்ளார்கள்.

சாதி செல்களின் செயல்பாடு களை மாற்றி விட்டன!

மனித செல்களின் செயல் பாடுகளிலிருந்து மனிதனின் உருவம், குணங்கள், செயல் பாடுகள் தோன்றுகின்றன என்ப தும், குணம், செயல், தொழில் காரணமாக செல்கள் மாற்றம் பெறுகிறது என்பதும் உண்மை யாகும்.பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட சாதியினர் ஒரு குறிப்பிட்ட தொழிலை செய்த காரணத்தா லும், அந்த தொழிலின் அடிப் படையில் சில தனிப்பட்ட பழக்க வழக்கங்களை கடைப்பிடித் ததாலும் அவர்களின் குறைந்த பொருளாதாரத்தில் அவர்களின் உணவும், சுகாதா ரமும் முறையாக இல்லாததாலும் அவர்களின் செல்களில் சிறிது சிறிதாக குறைவு பெற்று அவர் களின் உருவம், குணம், நிறம், செயல்பாடுகள் அனைத்தும் மாற்றம் பெற்றிருப்பதை அல்லது குறைவுபட்டிருப்பதை நாம் உணர முடியும்.

ஆகவே, தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு இன்னமும் இட ஒதுக்கீடு என்பது மிகவும் அவசியமானதாகும். அதன் மூலமாகவே ஒரு சமத்துவ சமுதாயத்தை நாம் உருவாக்க முடியும். இது ஒரு சமூக நீதியும் தர்மமுமாகும்.

3 மறுமொழிகள்:

Blogger Vajra மொழிந்தது...

//
இக்கட்டுரை உண்மை இதழில் வெளியானது
//

oxymoron

10:01 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

Ravi,

I appreciate your good work in bringing to light various facets of the reservation issue.

Many Tamil bloggers take "Unmai" to be the absolute truth. After all, Sundaravadivel gave lot of publicity to "Unmai's" article on the TAMBRAS convention. As if no other caste has a convention in Tamil Nadu! They accepted whatever "Unmai" said then. I wonder if they are ready to accept this nonsense that it has published now!

9:55 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

dear Ravi,
Please continue your nice work of brining truth to the world.
Unmaiyil unmai thavira ellam undu.

4:26 PM  

Post a Comment

<< முகப்பு