பிளவுண்ட மனிதாபிமானமும், பகுத்தறிவும்?

ஈழத் தமிழர் நிலை குறித்து பல வலைப்பதிவாளர்கள் எழுதியுள்ளனர்.
இந்திய அரசும், ஊடகங்களும் மெளனம் சாதிப்பதை விட்டுவிட்டு
மனிதாபின அடிப்படையிலேனும் அரசு வன்முறையை கண்டிக்க வேண்டும் ,பாதிக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் மீதான தாக்குதல் தொடரக்கூடாது என்று கோர வேண்டும். இதை செய்வதற்கு மனிதாபிமானம் போதும். இதைக் கூடச் செய்யாமல் வாளாவிருந்தால் அது நியாயம் அல்ல.

தமிழகத்தில் உள்ள கட்சிகளும் தங்கள் குரலை உயர்த்த வேண்டாமா, கண்டனத்தினை தெரிவிக்க வேண்டா. ஈராக்கிலும், வேறு எங்கிலும் அமெரிக்க படுகொலைகளைக் கண்டிக்கும் இடதுசாரிகள் வாயே திறக்காமல் இருப்பது வெட்கக்கேடு. துரதிருஷ்டவசமாக தமிழகத்தில் ஈழப்பிரச்சினை உதை பந்தாகப் பயன்படுகிறது. அகதிகள் நிலை குறித்து யாருக்குமே அக்கறை இல்லையா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார், ரவிக்குமார், சட்ட மன்றஉறுப்பினர். ஒரு சட்ட மன்ற உறுப்பினர் சொல்லித்தான் இதையெல்லாம் தெரிந்து கொள்ளும்நிலையில் அரசு இருக்கிறது. எது எப்படியாயினும் இனியாவது செய்ய வேண்டியதை செய்து அவர்களை கெளரவமாக நடத்தி அவர்களது நியாயமான கோரிக்கைகளை அரசு பூர்த்திசெய்ய வேண்டும்.

ஈழத் தமிழர் போல் காஷ்மீர் பண்டிட்களின் நிலையும் மோசமானது. உள்நாட்டில் பண்டிட்கள்அகதிகளாக வாழ்கிறார்கள். அவர்கள் இந்துக்கள் என்ற ஒரே காரணத்திற்காக இஸ்லாமியதீவிரவாதிகள், பிரிவினைவாதிகளால் தாக்கப்பட்டு உயிருக்கு பயந்து ஒட வேண்டியதாயிற்று. இதை எப்படி அணுக வேண்டும் ,மனிதாபிமானத்துடன். ஆனால் அவர்களை பகுத்தறிவாளர்கள் என்றுசொல்லிக் கொள்பவர்கள் எப்படி அணுகுகிறார்கள். ஈழத்தமிழர் பிரச்சினைக்கும் அவர்களுக்கும்என்ன தொடர்பு, ஒன்றுமில்லை. இருந்தாலும் ஈழத்தமிழர்களுக்காக ஆதரவு கொடுப்போர் சோக்களை விமர்சிப்பதுடன் நிற்கவில்லை, பண்டிட்கள் உண்மையில் ஆபத்தானவர்கள் என்று பேசியிருக்கிறார்கள், கூட்டத்தில் அதற்கு கைதட்டல் கிடைத்திருக்கிறது.

"காஷ்மீரிலிருந்து சிறீநகர், ஜம்மு பகுதியிலிருந்து நிறைய பண்டிட்கள் அகதிகளாக வந்திருக்கிறார்களே அவர்கள் எல்லாம் ஆபத்தானவர்கள் என்று வர்ணிப்பதற்கு `சோ’க்-கள் தயாராக இருக்கிறார்களா? உண்மையில் ஆபத்தானவர்கள் அவர்கள்தான்! (கைதட்டல்)."


உண்மையில்ஈழத் தமிழர்களுக்காக இரங்கும் நெஞ்சங்கள் அவர்கள் நிலைக்காகவும் இரங்க வேண்டாமா. எந்தபயங்கரவாதத்தினையும் கண்டிப்போம் என்று நிலைப்பாடு எடுக்க வேண்டாமா. ஏன் அப்படி ஒருநிலைப்பாடு எடுக்க மறுக்கிறார்கள். குஜராத்தில் முஸ்லீம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டால்கண்ணீர் விடும் பகுத்தறிவாதிகள், எந்த அடிப்படையில் காஷ்மீர் பண்டிட்களை ஆபத்தானவர்கள் என்று கூறுகிறார்கள்.

ஒரே அடிப்படைதான் பச்சையான ஜாதி வெறுப்பு, ஒரு குறிப்பிட்ட ஜாதியின்மீது இவர்கள் கொண்டுள்ள துவேஷம்தான் இங்கு வெளிப்படுகிறது. அறிவுமதிகளும், சீமான்களும்,வீரமணிகளும் தங்கள் பார்ப்பன துவேஷத்தினை காட்ட ஈழத்தமிழர் பிரச்சினையையும் ஒரு காரணமாக பயன்படுத்துகிறார்கள் என்றால் அவர்களது பகுத்தறிவு எப்படிப்பட்டது.

ஈழத்தமிழர் பிரச்சினையாகட்டும், காஷ்மீரில் இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதலாகட்டும்,குஜராத்தில் ஏவி விடப்பட்ட இந்த்துவ பயங்கரவாதமாகட்டும் - எதுவாயினும் மனிதாபினஅடிப்படையில், அனைத்து மனிதர்களும் சமம் என்ற அடிப்படையில் நிலைப்பாடுகளைஎடுப்பது கடினமா - பகுத்தறிவுள்ளோரே யோசியுங்கள். இங்கு நிலவும் பிளவுண்ட மனிதாபிமானமும், போலி பகுத்தறிவும் நிராகரிக்கப்பட வேண்டியவை.

எனவே சோவையும் விமர்சிக்க வேண்டும்,வீரமணியையும் விமர்சிக்க வேண்டும்.

2 மறுமொழிகள்:

Blogger -/பெயரிலி. மொழிந்தது...

Dear Ravee Sreenivos you raised a valid point. Kashmiri Pandits currently live under deplorable conditions. Only because many of the Kashmiri Hindus are Brahmins, Veeramani & Co do not like them. I do not know the same reason can be applied to you for why you care about Kashmiri Hindus. I read your posts in your blog. I see a sort of metamorphism in process.

Yet I do not see Kashmiri issue totally as a result of Islamic fundamentalism. As you might have known it well, Kashmir is a divided state, and Kashmiri muslims' problem is more of a self determination issue than an islamic fundamentalism. I have to point this out here as I know few bloggers in Tamil blog domain thrive only by connecting every ill they see to islamic fundamentalism. You will sure see their congradulatory statements for your post. Interestingly it can be easily seen on blogs that they are yet to shed a single tear drop for Sri Lankan Tamils.

Now you have posted this at this very juncture, and you will see many Sri Lankan Tamil haters use this post to distract the bloggers from the pathetic situation of Sri Lankan Tamils by flaming and blaming. When I agree with you about Kashmiri Pandits' living conditions, as a Sri Lankan Tamil the timing of this post also worries me. You may find this moment appropriate for pointing out Veeramani & Co's hypocracy, but ironically this very post will help some Sri Lankan Tamil haters, who unnecessarily equates hating Sri Lankan Tamils to showing their Indian patriotism and kicking the asses of Dravida parties, to crawl out of their hiding places with a free picky packing on your back.

9:59 AM  
Blogger மு. சுந்தரமூர்த்தி மொழிந்தது...

//"காஷ்மீரிலிருந்து சிறீநகர், ஜம்மு பகுதியிலிருந்து நிறைய பண்டிட்கள் அகதிகளாக வந்திருக்கிறார்களே அவர்கள் எல்லாம் ஆபத்தானவர்கள் என்று வர்ணிப்பதற்கு `சோ’க்-கள் தயாராக இருக்கிறார்களா? உண்மையில் ஆபத்தானவர்கள் அவர்கள்தான்! (கைதட்டல்)."//

"ஆபத்தானவர்கள்" என்று பண்டிட்டுகளைச் சொல்கிறாரா அல்லது 'சோ'க்களைச் சொல்கிறாரா? அது பண்டிட்டுகளை குறிப்பிடுகிறதென்றால் அதற்கு கடும் கண்டனத்தையும், சோக்களைக் குறிப்பிட்டு சொல்லியிருந்தால் முழு ஆதரவையும் தெரிவிக்கிறேன்.

மற்றபடி, பண்டிட்டுகள் இந்திய அரசின் அரவணைப்பில், இந்தியாவிற்குள்'அகதிகளாக' இருப்பதற்கும், ஈழத்தமிழர்கள் அரச பயங்கரவாதத்திற்கு பயந்து பிற நாடுகளுக்கு அகதிகளாக செல்வதற்கும் பெருத்த வேறுபாடு உண்டு என்பதை உணர்வீர்கள் என்று நினைக்கிறேன்.

"முகங்கள் சிதைந்து
யோனிகள் கிழிந்து
சவக்குழிகளிலும்,
திருகப்பட்ட முலைகளோடும்,
நசுக்கப்பட்ட விதைகளோடும்
முழங்காலிட்டு
சொந்த மண்ணிலும்,

குட்டப்பட்டு
தலைகுனிந்த அகதிகளாக
உலகத் தெருவிலும்
ஏன் எங்களுக்கு இவ்விதம் எழுத்து
ஏன் எம் நெஞ்சில் இத்தனை நெருப்பு?"

- வ. ஐ. ச. ஜெயபாலன்

10:32 AM  

Post a Comment

<< முகப்பு