விளையாட்டிலும் இட ஒதுக்கீடு

இட ஒதுக்கீட்டினை விளையாட்டிலும் கொண்டு வருவார்கள் என்று சிலர் கிண்டல் செய்த போது இட ஒதுக்கீடு ஆதரவாளர்களுக்கு கோபம் வந்தது.ஆனால் யதார்த்தம் கற்பனையை விட நம்ப இயலாதபடி உள்ளது. உத்தர பிரதேச அரசு விளையாட்டிலும் ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டினை கொண்டு வர உத்தேசித்துள்ளது. தமிழில் இச்செய்தி வெளியாகவில்லை போதும்.

வெளியாகியிருந்தால் வீரமணி,ராமதாஸ், நல்லக்கண்ணு,வரதராஜன் எனப் சர்வக்டசிப் பிரமுகர்களும் இது போன்ற ஒன்றினை தமிழ் நாட்டிலும் அமுல் செய்யக் கோரியிருப்பார்கள்.வலைப்பதிவுகளில் திராவிடத் தமிழர்கள் அது போன்ற கோரிக்கையை முன் வைத்திருப்பார்கள்.

ஞாநி,காலச்சுவடு,அனந்த கிருஷ்ணன் என்று பல் வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகியிருக்கும்.வன்ன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வேண்டும் என்று ராமதாஸும், முஸ்லீம்களுக்கு ஒதுக்கீடுவேண்டுமென்று அ.மார்க்ஸும் கோரிக்கை எழுப்பியிருப்பார்கள். விளையாட்டும், உடல் பயிற்சியும்தலித், பிற்பட்டோருக்கு சொந்தம் என்றும், விளையாட்டில் பெயரும் புகழும்,பணமும் கிடைக்கும் என்பதால் பிராமணர்கள் அதைக் கைப்பற்றினர் என்றும் வாதங்கள் முன் வைக்கப்படிருக்கும்.அது மட்டுமா பள்ளிகளில் துவங்கி, அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்கும்அணிகளில் 69% இட ஒதுக்கீட்டினை (50% பிற்பட்டோர், 18% தலித்கள், 1% பழங்குடியினர்)உடனே கொண்டு வர வேண்டுமென விடுதலையில் தலையங்கம் வெளியாகியிருக்கும்.

இப்போதும் இப்படியெல்லாம் நடக்காது என்று உறுதியாக யாரால் சொல்ல முடியும்.

இட ஒதுக்கீடு - வலைப்பதிவு

இட ஒதுக்கீடு குறித்த ஆங்கில வலைப்பதிவு இந்த முகவரியில்.வருக, உங்கள் கருத்துக்களை இடுக.

இனி இங்கேயும் - ஆங்கிலப் பதிவு

இனி இங்கேயும் - ஆங்கிலப் பதிவு

ஒரு வழியாக ஆங்கிலத்தில் வலைப்பதியத் துவங்கிவிட்டேன்.
வாருங்கள். உங்கள் கருத்துக்களை அங்கு இடுமாறுக் கேட்டுக்
கொள்கிறேன்

சில அறிவிப்புகள்

1, மறு அறிவிப்பு வரும் வரை இவ்வலைப்பதிவில் புதிய இடுகைகள் இரா. இணையத்தில்அல்லது வேறிடங்களில் எழுதினால் அதற்கான சுட்டி அல்லது எழுதப்பட்டது இங்குஇடப்படும்.

2, பிறர் பதிவுகளில் மறு அறிவிப்பு வரும் வரை பின்னூட்டங்கள் இடப்போவதில்லை.

மேற்கூறிய இரண்டு அறிவிப்புகளுக்காக கேக் வெட்டி, கிடா வெட்டி, பீர் குடித்து அல்லது இன்ன பிற வழிகளில் நேர்த்தி கடன் செலுத்துவோர்
விபரம் அறிவித்தால் அதை இங்கு இடுவதில் பிரச்சினை இல்லை :)

3, இட ஒதுக்கீடு குறித்த ஆங்கில வலைப்பதிவு- விரைவில் முழுவிபரம் தரப்படும்

மேய்ச்சல்

வலைப்பதிவாளர்கள் பார்வையில் ஈராக்

எண்ணத்தினை வார்த்தைகளாக - அறிவியலாளார் முயற்சி

இட ஒதுக்கீடு குறித்து சுமந்தா பானர்ஜி

இட ஒதுக்கீடு குறித்து பேரா.ராதாகிருஷ்ணனுடன் ஒரு பேட்டி

பிளவுண்ட மனிதாபிமானமும், பகுத்தறிவும்?

ஈழத் தமிழர் நிலை குறித்து பல வலைப்பதிவாளர்கள் எழுதியுள்ளனர்.
இந்திய அரசும், ஊடகங்களும் மெளனம் சாதிப்பதை விட்டுவிட்டு
மனிதாபின அடிப்படையிலேனும் அரசு வன்முறையை கண்டிக்க வேண்டும் ,பாதிக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் மீதான தாக்குதல் தொடரக்கூடாது என்று கோர வேண்டும். இதை செய்வதற்கு மனிதாபிமானம் போதும். இதைக் கூடச் செய்யாமல் வாளாவிருந்தால் அது நியாயம் அல்ல.

தமிழகத்தில் உள்ள கட்சிகளும் தங்கள் குரலை உயர்த்த வேண்டாமா, கண்டனத்தினை தெரிவிக்க வேண்டா. ஈராக்கிலும், வேறு எங்கிலும் அமெரிக்க படுகொலைகளைக் கண்டிக்கும் இடதுசாரிகள் வாயே திறக்காமல் இருப்பது வெட்கக்கேடு. துரதிருஷ்டவசமாக தமிழகத்தில் ஈழப்பிரச்சினை உதை பந்தாகப் பயன்படுகிறது. அகதிகள் நிலை குறித்து யாருக்குமே அக்கறை இல்லையா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார், ரவிக்குமார், சட்ட மன்றஉறுப்பினர். ஒரு சட்ட மன்ற உறுப்பினர் சொல்லித்தான் இதையெல்லாம் தெரிந்து கொள்ளும்நிலையில் அரசு இருக்கிறது. எது எப்படியாயினும் இனியாவது செய்ய வேண்டியதை செய்து அவர்களை கெளரவமாக நடத்தி அவர்களது நியாயமான கோரிக்கைகளை அரசு பூர்த்திசெய்ய வேண்டும்.

ஈழத் தமிழர் போல் காஷ்மீர் பண்டிட்களின் நிலையும் மோசமானது. உள்நாட்டில் பண்டிட்கள்அகதிகளாக வாழ்கிறார்கள். அவர்கள் இந்துக்கள் என்ற ஒரே காரணத்திற்காக இஸ்லாமியதீவிரவாதிகள், பிரிவினைவாதிகளால் தாக்கப்பட்டு உயிருக்கு பயந்து ஒட வேண்டியதாயிற்று. இதை எப்படி அணுக வேண்டும் ,மனிதாபிமானத்துடன். ஆனால் அவர்களை பகுத்தறிவாளர்கள் என்றுசொல்லிக் கொள்பவர்கள் எப்படி அணுகுகிறார்கள். ஈழத்தமிழர் பிரச்சினைக்கும் அவர்களுக்கும்என்ன தொடர்பு, ஒன்றுமில்லை. இருந்தாலும் ஈழத்தமிழர்களுக்காக ஆதரவு கொடுப்போர் சோக்களை விமர்சிப்பதுடன் நிற்கவில்லை, பண்டிட்கள் உண்மையில் ஆபத்தானவர்கள் என்று பேசியிருக்கிறார்கள், கூட்டத்தில் அதற்கு கைதட்டல் கிடைத்திருக்கிறது.

"காஷ்மீரிலிருந்து சிறீநகர், ஜம்மு பகுதியிலிருந்து நிறைய பண்டிட்கள் அகதிகளாக வந்திருக்கிறார்களே அவர்கள் எல்லாம் ஆபத்தானவர்கள் என்று வர்ணிப்பதற்கு `சோ’க்-கள் தயாராக இருக்கிறார்களா? உண்மையில் ஆபத்தானவர்கள் அவர்கள்தான்! (கைதட்டல்)."


உண்மையில்ஈழத் தமிழர்களுக்காக இரங்கும் நெஞ்சங்கள் அவர்கள் நிலைக்காகவும் இரங்க வேண்டாமா. எந்தபயங்கரவாதத்தினையும் கண்டிப்போம் என்று நிலைப்பாடு எடுக்க வேண்டாமா. ஏன் அப்படி ஒருநிலைப்பாடு எடுக்க மறுக்கிறார்கள். குஜராத்தில் முஸ்லீம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டால்கண்ணீர் விடும் பகுத்தறிவாதிகள், எந்த அடிப்படையில் காஷ்மீர் பண்டிட்களை ஆபத்தானவர்கள் என்று கூறுகிறார்கள்.

ஒரே அடிப்படைதான் பச்சையான ஜாதி வெறுப்பு, ஒரு குறிப்பிட்ட ஜாதியின்மீது இவர்கள் கொண்டுள்ள துவேஷம்தான் இங்கு வெளிப்படுகிறது. அறிவுமதிகளும், சீமான்களும்,வீரமணிகளும் தங்கள் பார்ப்பன துவேஷத்தினை காட்ட ஈழத்தமிழர் பிரச்சினையையும் ஒரு காரணமாக பயன்படுத்துகிறார்கள் என்றால் அவர்களது பகுத்தறிவு எப்படிப்பட்டது.

ஈழத்தமிழர் பிரச்சினையாகட்டும், காஷ்மீரில் இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதலாகட்டும்,குஜராத்தில் ஏவி விடப்பட்ட இந்த்துவ பயங்கரவாதமாகட்டும் - எதுவாயினும் மனிதாபினஅடிப்படையில், அனைத்து மனிதர்களும் சமம் என்ற அடிப்படையில் நிலைப்பாடுகளைஎடுப்பது கடினமா - பகுத்தறிவுள்ளோரே யோசியுங்கள். இங்கு நிலவும் பிளவுண்ட மனிதாபிமானமும், போலி பகுத்தறிவும் நிராகரிக்கப்பட வேண்டியவை.

எனவே சோவையும் விமர்சிக்க வேண்டும்,வீரமணியையும் விமர்சிக்க வேண்டும்.

இட ஒதுக்கீடு-ஞாநி-என் பதில்

ஆனந்த விகடனில் இட ஒதுக்கீட்டினை நியாயப்படுத்தி ஞாநி எழுதியதன் மீதான விமர்சனத்தினை கீற்றில் காணலாம். இதை வெளியிட்ட கீற்றின் ஆசிரியருக்கு என் நன்றிகள்.இதற்கு ஞாநி பதில் தருவார்என்ற நம்பிக்கை எனக்கில்லை. இது போன்ற ஒரு விமர்சனத்தினை விகடனும்வெளியிட வாய்ப்பிருப்பதாக நான் நினைக்கவில்லை. எனினும் விமர்சனத்தினைபதிவு செய்வது அவசியம் என்பதால் அதை எழுதினேன்.

ஏன் இவ்வளவு எதிர்ப்பு?, ஏன் இந்த கோரிக்கைகள்?

மத்திய அரசு ஐ.ஐ.டிகள், ஐஐஎம்கள் மற்றும் மத்திய அரசின் கீழ் வரும் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்பட்டோர் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள பிற்பட்ட ஜாதிகளை சேர்ந்தவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு தர முடிவு செய்துள்ளது. இதனை மருத்துவர்கள், மாணவர்கள் உட்பட சமூகத்தின் பல பிரிவினர் விமர்சித்துள்ளனர், எதிர்த்துள்ளனர். இந்த இட ஒதுக்கீட்டினை நியாயப்படுத்த அரசு, அரசியல் கட்சிகள் முயல்கின்றன. இன்னொரு புறம் பத்திரிகையாளர்கள் பலரும் இதை நியாயப்படுத்த முயல்கின்றனர். இவ்வாறு நியாயப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக ஞாநி எழுதியுள்ளதை எடுத்துக் கொள்கிறேன். அவர் கேள்வி பதில் வடிவத்தில் தன் கருத்துக்களை முன் வைத்துள்ளார். ஞாநி எழுதியுள்ளது ஒரு தலைப்பட்சமாக இருக்கிறது. (1) மேலும் அவர் மாணவர்கள் வைத்துள்ள கோரிக்கைகள், போராட்டத்தின் நியாயங்களை கொச்சைப்படுத்தி எழுதியிருக்கிறார்.வி.பி.சிங் தலைமையிலான அரசு கவிழக் காரணம் பா.ஜ.க அளித்த ஆதரவினை விலக்கிக் கொண்டது, மண்டல் கமிஷன் சிபாரின் அடிப்படையிலான அரசு ஆணை எதிர்ப்பு போராட்டங்களால் அல்ல. காங்கிரஸ் அப்போது எதிர்கட்சி வரிசையில் இருந்தது. பா.ஜ.க வெளியிலிருந்து ஆதரவு தந்தது. தேசிய முண்ணனி அரசினை இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (மார்கஸிஸ்ட்) ஆதரித்தது. அத்வானியின் ரத யாத்திரை தடை செய்யப்பட்டது, பா.ஜ.கவின் இந்த்துவா நிலைப்பாடுகளை ஆதரிக்க தேசிய முண்ணனி மறுத்தது ஆகிய காரணங்களால் பா.ஜ.க ஆதரவினை விலக்கிக் கொண்டது. காங்கிரஸ் அப்போது வி.பி.சிங் அரசு பிற்பட்டோருக்கு மத்திய அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு தருவதை எதிர்த்தது.இந்த இட ஒதுக்கீடு 93வது அரசியல் சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் செய்யப்படுகிறது. இனாம்தார் வழக்கில் அரசிற்கு, அரசிடம் இருந்து நிதி உதவி பெறாத கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கோர உரிமையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பினால் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்கவே இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த இட ஒதுக்கீடும் இதன் அடிப்படையில் செய்யப்படுகிறது. மண்டல் கமிஷன் பரிந்துரை அடிப்படையில் இந்த முடிவு என்றால் அதற்கு ஒரு அரசாணை போதும், அரசியல் சட்டத் திருத்தம் தேவையில்லை. மேலும் இத்தகைய இட ஒதுக்கீட்டினை அதனடிப்படையில் செய்து இருந்தால் இதற்குள் செய்திருக்கலாம். இந்த சட்ட திருத்ததில் சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிலையங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது எந்த விதமான இட ஒதுக்கீட்டினையும் அக்கல்வி நிறுவனங்கள் செய்யத் தேவையில்லை. உண்மையில் பிற்பட்டோர் இட ஒதுக்கீடுதான் அரசின் குறிக்கோள் என்றால் எதற்காக இந்த விலக்கு அவைகளுக்கு தரப்பட வேண்டும். ஞாநி இந்த உண்மைகளைக் குறிப்பிடவே இல்லை. பழைய மண்டல் கமிஷன் கதையைக் கூறுகிறார்.இந்த இட ஒதுக்கீடு செய்யப்பட உள்ள மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பணம் கொடுத்து இடம் பெற முடியாது. மேலும் இங்கு இப்போது தலித், பழங்குடியினருக்கு 22.5% இட ஒதுக்கீடு இருக்கிறது. 27% இட ஒதுக்கீட்டினையும் சேர்த்தால் இது 49.5% ஆகிறது. அதாவது ஜாதி அடிப்படையிலேயே 50% இட ஒதுக்கீடு என்றாகிறது. இது தங்கள் வாய்ப்பினை பாதிக்கும் என்பதால் மாணவர்கள் எதிர்க்கின்றனர். ஒருவரின் ஜாதிதான் ஒருவர் உயர்கல்வி பெறுவதை தீர்மானிக்க வேண்டுமா என்பதே கேள்வி. இவ்வொதுக்கீடு அனைத்து நிலைகளிலும் வரும் என்றாகும் போது மிகக்குறைவான எண்ணிக்கையில் உள்ள மருத்துவ மேற்படிப்பில் பிற்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் மிகவும் பயன் பெறுவர், முற்பட்ட ஜாதிகள், இட ஒதுக்கீட்டின் கீழ் வராதோருக்கு இடம் கிடைப்பது மிகவும் கடினம் என்றாகி விடும்.27% இட ஒதுக்கீடு தவிர பொதுப்பிரிவில் பிற்பட்ட ஜாதிகளைப் சேர்ந்தவர்கள் இடம் பிடிக்க முடியும் என்பதையும் நினைவில் கொள்க. இட ஒதுக்கீட்டினை இப்படி அனைத்து கல்விப் பிரிவுகளிலும் விரிவுபடுத்த என்ன நியாயம் இருக்கிறது. எம்.பி.பி.எஸ், பி.ஈ போன்றவற்றை முடித்த பின்னரும் ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தேவையா. ஞாநி இந்தக் கேள்விக்கு பதில் சொல்வாரா?இட ஒதுக்கீட்டினை எதிர்ப்பவர்கள் பணக்காரர்கள் பணம் கொடுத்து இடம் பிடிப்பதை எதிர்க்கவில்லை என்பது தவறு. அரசு நிர்வாக இட ஒதுக்கீட்டினை தடை செய்யவில்லையே, மேலும் சிறுபான்மையினர் கல்வி நிலையங்களுக்கு இட ஒதுக்கீட்டிலிருந்து முற்றிலும் விலக்களித்துள்ளதே. ஆகவே அரசுதான் கல்வி வியாபாராமவதை ஊக்குவித்துள்ளது, ஊக்குவிக்கிறது. போராடும் மாணவர்கள் அல்ல. இட ஒதுக்கீட்டினை ஆதரிக்கும் கட்சிகள் நிர்வாக இட ஒதுக்கீட்டினை, கல்வி வியாபாரமவதை எதிர்த்து ஏதாவது செய்திருக்கின்றனவா. அவைதானே மத்தியிலும், மாநிலங்களிலும் ஆள்கின்றன. இதை விமர்சிக்காமல் ஞாநி மாணவர்கள் மீது பழி போடுவது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சி. மேலும் தனியார் கல்வி நிறுவனங்கள் மிக அதிகமாக உள்ள தென்னிந்திய மாநிலங்கள் நான்கிலும், மகாராஷ்டிராவிலும் அவற்றை நடத்துவது யார், நடத்தும் அமைப்புகள் எவை - பிற்பட்ட ஜாதிகள், சிறுபான்மையினர் அல்லது அவர்களின் அமைப்புகள்தானே. அப்படியிருக்கும் போது மாணவர்கள் எதிர்க்கவில்லை என்ற வாதத்தில் அர்த்தமில்லையே. மாணவர்கள் மத்திய அரசின் உயர்கல்வி நிலையங்களிலும் ஜாதி அடிப்படையில் 27% இட ஒதுக்கீடு என்பதை பிரதானமாக எதிர்க்கிறார்கள்.மண்டல் கமிஷன் பரிந்துரையின் பேரில் இடப்பட்ட ஆணை குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பிற்பட்டோரில் முற்பட்டோர் (creamy layer) என்பதை ஆய்ந்து, அந்த விலக்கு ஏன் தேவை என்பதையும் குறிப்பிட்டுள்ளது. நடைமுறையில் இது இல்லாத மாநிலம் தமிழ்நாடு. இங்கு பிற்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர் எவ்வளவு பணக்காராக இருந்தாலும், கல்வி, சமூக ரீதியாக முன்னேறியிருந்தாலும் அவர் இட ஒதுக்கீட்டால் பயனடைவார். அதே சமயம் முன்னேறிய ஜாதியைச் சேர்ந்தவர் எவ்வளவு வறியவராக இருந்தாலும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருந்தாலும் அவருக்கு இட ஒதுக்கீடு கிடையாது. இதைத்தான் ஞாநி ஆதரிக்கிறார்.அதாவது பணக்காரன் பலன் பெறலாம், ஏழை பலன் பெறக்கூடாது. வேறு வார்த்தைகளில் சொன்னால் முற்பட்ட வகுப்பினைச் சேர்ந்த ஏழை செத்தாலும் பரவாயில்லை, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தராதே. பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தவிர வேறு பல சலுகைகள், வாய்ப்புகள் அரசால் தரப்படுகின்றன. இத்துடன் ஒப்பிடுகையில் பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள முற்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் என்று பார்த்தால், கிட்டதட்ட எதுவும் இல்லை என்றே கூற வேண்டும். பிற்பட்டோருக்கு வேலை வாய்ப்பில், விண்ணப்பிக்க வயது உச்சவரம்பில் விதி விலக்கு உண்டு. அதே போல் கல்வியில் இட ஒதுக்கீடு தவிர பல சலுகைகள் உள்ளன. எனவே இட ஒதுக்கீடு தவிர பிற்பட்ட ஜாதிகளுக்கு உள்ள சலுகைகள், முன்னுரிமைகளையும் சேர்த்துப் பார்த்தால் ஜாதிய அடிப்படையிலான பல ஏற்றதாழ்வுகள் அரசால் உருவாக்கப்பட்டுள்ளன என்பதுதான் உண்மை.ஒரு புறம் முற்பட்ட ஜாதிகளில் உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடே கிடையாது, அவர்களில் ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு கிடையாது, இன்னொரு புறம் பிற்பட்ட ஜாதிகளில் உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு, கல்வி, வேலைவாய்ப்பில் பல சலுகைகள் என்று அரசு செயல்படுவது என்ன நியாயம். முற்பட்ட ஜாதிகளில் உள்ள ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் என்ன. ஞாநியின் வாதப்படி இட ஒதுக்கீடு கூடாது, வேறு திட்டம் வேண்டுமாம், அது என்ன திட்டம்.பிற்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் மொத்த ஜனத்தொகையில் எத்தனை % என்பது கேள்விக்குறி. இது குறித்து முழுமையான புள்ளிவிபரங்கள் இல்லை. சில கணக்கெடுப்புகள் இவர்கள் மொத்த மக்கள் தொகையில் 28% முதல் 33% வரை இருப்பதாக கூறுகின்றன. எப்படியாயினும் வட இந்தியாவில் முற்பட்ட ஜாதிகள் மொத்த மக்கள் தொகையில் 10%த்தினை விட அதிகம். மாநிலங்களைப் பொறுத்து இது 30% அல்லது 40% இருக்கலாம். தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடின் வருவோரின் சதவீதம் 88% என்று கொள்ள முடியும். இட ஒதுக்கீட்டில் வராதோரின் சதவீதம் 12% , 5% அல்ல. குறைந்தது 10% இட ஒதுக்கீட்டின் கீழ் வருவதில்லை என்று கூறலாம். இது குறித்து ஞாநி குறிப்பிடும் தகவல்கள் தவறானவை.சமூகத்தில் ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் மட்டும்தான் உள்ளனவா, வேறு ஏற்றத்தாழ்வுகள் இல்லையா. பாலின ரீதியாக, வர்க்க ரீதியாக, பொருளாதார ரீதியாக என்று பலவித ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் போது ஜாதி ஒன்றினை மட்டும் எப்படி முற்பட்ட, பிற்பட்ட என்பதை வகுக்க அளவுகோலாக எடுத்துக் கொள்ள முடியும். அமெரிக்காவில் இனம் என்ற ஒற்றை அளவுகோலின் அடிப்படையில் சம உரிமைக்கான செயல்திட்டங்கள் வகுக்கப்படவில்லை. அவை வேறு அளவு கோல்களையும் (உ-ம்: பாலினம், சிறுபான்மை) கணக்கில் கொள்கின்றன. ஞாநி உட்பட இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக உள்ளோரில் பெரும்பான்மையோர் ஏன் ஜாதி தவிர பிற பாகுபாடுகளை கண்டுகொள்ள மறுக்கிறார்கள். ஏன் பிற்பட்டோரில் வசதி படைத்தவர்கள் பயனடைந்தாலும் சரி, ஆனால் முற்பட்ட வகுப்பில் உள்ள ஏழைகளுக்கு இட ஒதுக்கீடே கூடாது என்கிறார்கள். எந்த வர்க்கத்தின் நலனை இவர்கள் ஆதரிக்கிறார்கள், பிற்பட்ட ஜாதிகளில் உள்ள பணக்கார வர்க்கத்தின் நலனைத்தான் என்பது வெளிப்படை. இங்கு சமூக நீதி என்பது இட ஒதுக்கீட்டினால் ஏற்பட்ட ஏற்றதாழ்வுகளை மறைக்கவும், புதிய ஏற்றதாழ்வுகளை நியாயப்படுத்த உதவும் கருத்தாக இருக்கிறது. இதை சமூக அநீதி என்று சொல்வதே சரியாகும்.ஐஐஎம்களில் மாணவர்கள் செலுத்தும் கட்டணத்தினை அரசு முயன்ற போது கல்வியாளர்கள் உட்பட பலர் எதிர்த்தனர்.அதற்கு காரணம் ஐஐஎம் மில் சேரும் மாணவர்கள் படிப்பு முடித்த உடன் பெரும் சம்பளத்தில் வேலையில் அமர்கிறார்கள். அவர் பெறும் துவக்க நிலை சம்பளத்துடன் ஒப்பிட்டால் கூட அவர்கள் செலுத்தும் கல்விக்கட்டணம் மிக குறைவு. மேலும் ஐஐஎம்களில் சேர்வோருக்கு வங்கி கடன்கள் மிக எளிதாகக் கிடைக்கின்றன, நிதி உதவி, கல்விக்கான தொகையில் சலுகை பெற பல வாய்ப்புகள் உள்ளன. எனவே அவர்களுக்கான கல்விக் கட்டணத்தினை குறைப்பதில் அர்த்தமில்லை என்று வாதிடப்பட்டது. அதாவது அரசு அவர்களுக்கு தரும் கல்விக்கான மான்யத்தினை குறைப்பதில் தவறில்லை. ஐஐஎம் களில் நுழைவுத்தேர்வு எழுதி, நேர்முகத்தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் எவ்வளவு ஏழையாக இருந்தாலும் படிப்பினை தொடர தேவையான நிதி உதவி/கடன் நிச்சயம் கிடைக்கிறது. ஆகவே பணம் உள்ளவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலை அங்கு இல்லை. ஞாநிக்கு ஒன்று இந்த உண்மை தெரியவில்லை, அல்லது தெரிந்தே இதைத் திரித்துக் கூறுகிறார்.பிற்பட்ட ஜாதிகள் உண்மையில் இன்று இட ஒதுக்கீடு பெற வேண்டிய நிலையிலா உள்ளன. இவற்றில் எத்தனை ஜாதிகள் உண்மையிலேயே சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தங்கியுள்ளவை என்று கருத வேண்டிய நிலையில் உள்ளன. இத்தனை ஆண்டுகள் அமுலில் உள்ள இட ஒதுக்கீடு முறையை ஆராய்ந்து, அதனை சீர்படுத்தினால் என்ன. எந்த வித ஆய்வும் இல்லாமல் இதை விரிவாக்க வேண்டிய தேவை என்ன. இட ஒதுக்கீடு வெற்றிகரமாக அமுல் செய்யப்பட்ட தமிழ்நாட்டில் இதன் முழுப்பயனைப் பெற்றவர்கள் பிற்பட்ட ஜாதிகள். பாதிக்கப்பட்டவர்கள் இட ஒதுக்கீட்டின் கீழ் வராதோர், குறிப்பாக அவர்களில் ஏழைகள், பெண்கள்.தலித்கள் இட ஒதுக்கீடு தங்களுக்கு முழுப்பயனும் தரும் வகையில் அமுல் செய்யப்படவில்லை, பாரபட்சம் உள்ளது, பிற்பட்ட ஜாதியினரே மிக அதிகமாக பலன் பெறுகின்றனர் என்று கூறுகின்றனர்(2). இப்படி இருக்கும் போது இந்த இட ஒதுக்கீடு முறையை எந்த ஒரு ஆய்விற்கும் உட்படுத்தாமல் விரிவுபடுத்துவதை மாணவர்கள் எதிர்த்தால் அதை எப்படி தவறு என்று சொல்ல முடியும்.இட ஒதுக்கீட்டினை எதிர்க்கும் மாணவர்கள் தங்கள் கோரிக்கைகள் என்னென்ன என்பதை தெளிவாகக் எடுத்துரைத்திருக்கிறார்கள்.அவற்றை கீழ்க்கண்ட இணைய முகவரிகளில் காணலாம்

http://www.youth4equality.org/charter-of-demand.jsp http://www.youth4equality.org/expert-commission.jsp

இதிலிருந்து மாணவர்கள் எதை எதிர்க்கிறார்கள், எதை ஆதரிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். ஞாநி மாணவர்களின் நிலைப்பாடுகளைக் குறித்து எழுதியிருப்பது எந்த அளவு உண்மை என்பதை படிப்பவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.

(1) http://www.keetru.com/dheemtharikida/index.html
(2) http://www.keetru.com/dalithmurasu/mar06/kanakamuthu.html
செவந்தி நினானின் கட்டுரையும், தி இந்துவும்

இந்தக் கட்டுரை குறித்து வலைப்பதிவுகளில் விவாதம் நடைபெறுகிறது.இக்கட்டுரையைஇந்து வெளியிட மறுத்தது வியப்பளிக்கவில்லை. ஏனெனில் அதில் உள்ள சில வாக்கியங்களை சுட்டிக்காட்டி சன் டி.வி அல்லது அதன் சார்பாக அல்லது மாறன் சகோதர(ர்கள்) வழக்குத்தொடர் வாய்ப்பிருக்கிறது. சிலவற்றை நிரூபிப்பது கடினம், எழுதுவது எளிது. அக்கட்டுரையில்சில தகவல் பிழைகளும் உள்ளன. சன் டி.வி குழுமத்தின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்படவேண்டும். ஊடகங்களில் ஒரு குழுமத்தின் ஆதிக்கம், பங்கு, ஒரே குழுமம் பல்வேறு ஊடகங்களில் ஈடுபடுவது, முதலீடு செய்வது - இவை குறித்து நிச்சயம் விவாதிக்கப்பட வேண்டும். அந்த வகையில் இது போன்ற கட்டுரைகள் துவக்கப் புள்ளிகளாக இருக்க முடியும்.

அமெரிக்காவில், உலகளவிலும் ஊடக வணிகத்தில்/தொழிலில் கடந்த 20/25 ஆண்டுகளாக பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளில் முன்பிருந்த தடைகள் தளர்த்தப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன.எனவே முர்டோக் போன்றவர்களால் உலகளாவிய அளவில் ஊடக சாம்ராஜ்யங்களை கட்டமைக்க முடிகிறது. இந்தப் போக்குகளை எப்படி புரிந்து கொள்வது, உள்ளூர்/பிராந்திய/தேசிய ஊடகசாம்ராஜயங்களுக்கும், உலகளாவிய சாம்ரஜ்யங்களுக்கும் உள்ள நட்பு/பகை முரண்கள், உறவுகள் என்ன, சர்வதேச மூலதனம் இதில் என்ன பங்கு வகிக்கிறது என்பதையெல்லாம் பேசியாக வேண்டும். மாறன்கள் ஒழிக, முர்டோக்குகள், டாட்டாக்கள் வாழ்க என்பதா நம் நிலைப்பாடு என்பதையும் தெளிவுபடுத்திடல் அவசியம். தமிழ்/ஆங்கில வலைப்பதிவுகளில் யாராவது இந்தக் கோணங்களில்அணுகி விவாதிக்கிறார்களா என்பதை நானறியேன். இந்து இக்கட்டுரையை சில மாற்றங்கள் (கட்டுரையாசிரியர் ஒப்புக்கொண்டால்) வெளியிட்டிருக்கலாம். தேர்தல் முடிந்த பின் அவ்வாறு வெளியிடுவதில் அவர்களுக்கு என்ன பிரச்சினை என்பது எனக்குப் புரியவில்லை. இந்தக் கட்டுரை இன்னும் அதிக தகவல்களுடன், அலசல்களுடன் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது என் கருத்து.
டாவின்சி கோட்டினை முன் வைத்து - 1

டாவின்சி கோடு திரைப்படம் மீதான தடையைக் கண்டித்து பலர் எழுதியிருக்கின்றனர். பராசக்திக்கு வசனம் எழுதிய கலைஞர் கருணாநிதி இப்படி ஒரு தடை விதித்திருப்பது முறையா என்றெல்லாம் எழுதப்பட்டுள்ளது. கலைஞர் இதற்கு முன்பும் முதல்வராக இருந்திருக்கிறார். அப்போதெல்லாம் தமிழ் நாட்டில் கருத்து சுதந்திரத்திற்கு தமிழ் நாட்டில் தடையே இருந்ததில்லையா என்ற கேள்வியை எழுப்பிவிட்டு இப்போது தடை விதித்திருப்பதைப் பற்றி எழுதுவதே பொருத்தமாக இருக்கும். 1947க்குப் பின் தமிழ் நாட்டில் எத்தனை முறை எந்தெந்த நூல்கள், திரைப்படங்கள், நாடகங்கள், மற்றும் கலைப்படைப்புகள் எந்தெந்த காரணங்களுக்காக தடை செய்யப்பட்டுள்ளன என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த தடை முதன்முறையாக இப்போது அமுல் செய்யப்படவில்லை, இதுவே கடைசி முறையாக இருக்கும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை.

தமிழக அரசு தடையை காலனிய ஆட்சி பயன்படுத்திய முறையைக் கொண்டு அமுல் செய்துள்ளதுஎன்கிறது அவுட்லுக்கில் வெளியான கட்டுரை. இந்த தடை குறித்து எழுதும் போது நானறிந்தவரை தமிழில் ஒரே ஒரு கிராமத்திலே படம் குறித்த வழக்கு குறித்து யாரும் எழுதவில்லை. இது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. இந்த தடைக்கும் அந்த படம் வெளியாவது குறித்த சர்ச்சைக்கும் சில பொதுவான அம்சங்கள் உள்ளன. கருத்து சுதந்திரம், திரைப்படங்களுக்கு தடை குறித்து உச்சநீதி மன்றம் இவ்வழக்கில் கூறியுள்ளவை மிக முக்கியமானவை. இத்தீர்ப்பு சர்வதேச அளவில்சுட்டிக் காட்டப்படுகிறது. இவ்வழக்கு (S. RANGARAJAN ETC v. P. JAGJIVAN RAM [1989] INSC 106; [1989] 2 SCR 204; [1989] 2 SCC 574 (30 March 1989) குறித்த விபரத்தினையும், தீர்ப்பினையும் இங்கு காணலாம்.

"Freedom of expression which is legitimate and constitutionally protected cannot be held to ransom by an intolerant group of people. The fundamental freedom under Article 19 (1) (a) can be reasonably restricted only fo rhte purposes mentioned in Arficle 19 (2) and the restrictions must be justified on the anvil of necessity and not the quicksand of concveneience or expediency. Open criticism of government policicies and operation is not a ground for restricting expression. We must practice tolerance to the views of others. Intolerance is as much dangerous to democracy as to the person himself”.

இந்த தீர்ப்பு சர்ச்சைக்குரிய கருத்து என்ற காரணத்தினை காட்டி ஒரு திரைப்படத்தினை தடைசெய்யக் கூடாது என்று குறிப்பிட்டுகிறது. மேலும் ஒரு திரைப்படத்தினை திரையிட்டால் சட்டஒழுங்கு சீர்கெடும் அல்லது பிரச்சினை ஏற்படும் என்ற காரணத்தினை காட்டி தடை செய்வதை நிராகரிக்கிறது.

2002ல் குஜராத்தில் ஏற்பட்ட மதக்கலவரம் குறித்த ஆவணப் படத்தினை மத்தியதணிக்கைக் குழு திரையிட அனுமதி மறுத்த போது, நீதிமன்றம் அந்த ஆணையை ரத்து செய்தது.அத்தீர்ப்பும் சில மிக முக்கியமான கருத்துக்களை சுட்டிக்காட்டுகிறது. மேற்கூறிய இரு தீர்ப்புகளும்இப்போதைய சூழலில் மிகவும் உன்னிப்பாக படிக்கப்பட வேண்டியவை. பானாவாக இருந்தாலும் சரி,டாவின்சி கோடாக இருந்தாலும் சரி மிரட்டல்கள் மூலம் திரையிடுவதை தடை செய்வது, அரசு தடை செய்வது ஆகியவை கண்டிக்கப்பட வேண்டியவையே.

நானறிந்த வரை தமிழ் நாட்டில் டாவின்சி கோடு தடை செய்யப்பட்டதை இந்திய கம்யுனிஸ்ட் கட்சிகள், தி.க, பா.ம.க, உட்பட எந்த கட்சியும் (பாஜக தவிர) கண்டிக்கவில்லை; இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (மண்டல் அதாவது மார்க்ஸிஸ்ட்)பானா குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது, ஆனால் டாவின்சி கோட் திரைப்படம் தடைசெய்யப்பட்டது குறித்து எதுவும் கூறவில்லை. ஆர்.எஸ்.எஸ் என்ன நிலைப்பாடு எடுத்திருக்கும்என்பதை ஊகிப்பது கடினமல்ல.

இது போன்ற விஷயங்களை மொண்ணையாக கருத்து சுதந்திரம் என்று விவாதிப்பதைத் தாண்டியசொல்லாடல் தமிழில் இல்லையோ என்று தோன்றுகிறது. அந்த கருத்து சுதந்திரம் என்பதன்தத்துவ, அரசியல் பரிமாணங்கள், மனித உரிமை பரிமாணங்கள் குறித்தெல்லாம் பேசாமல் மொண்ணையாக கருத்து சுதந்திரம், அரசு, தடை என்று பேசுவது பொருந்தாது. இத்தடையில்சிவில் சமூகத்தின் பங்கு என்ன, மத அடிப்படைவாதிகளின் பங்கு என்ன என்பதையும் பார்க்கவேண்டும். கிறித்துவ,இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகள் இதில் கை கோர்த்திருப்பதையும்,பாகிஸ்தானிலும் இப்படம் தடை செய்யப்பட்டுள்ளதையும் கவனிக்கவேண்டும். சிவில் சமூகத்தில் உள்ள கருத்து சுதந்திரத்திற்கு எதிரான சக்திகளுக்கும், அரசிற்கும்இடையே உள்ள தொடர்பை நாம் கவனிக்க வேண்டும். டென்மார்க் கேலிச்சித்திரங்கள் விவகாரத்தில் மத்திய அரசு எந்த நிலைபாடு எடுத்தது, இப்போது என்ன நிலைப்பாடு எடுத்துள்ளதுஎன்பதையும் ஆராய்ந்தால் சில ஒற்றுமைகள் புலப்படும்.

மத சார்பற்ற என்று சொல்லிக்கொள்ளும் கட்சிகள், இயக்கங்கள் கருத்து சுதந்திரம் என்று வரும்போது மதரீதியாக சிறுபான்மையினராக உள்ள சமூகங்களில் உள்ள சில சக்திகளுடன் கைகோர்த்துக் கொள்வது இது முதன் முறையல்ல. கடைசி முறையாகவும் இருக்கப் போவதில்லை.தஸ்லீம நஸ்றீனின் நாவலை தடை செய்தது மேற்கு வங்க அரசு, கூறப்பட்ட காரணத்தினை ஊகிப்பது கடினமல்ல. சிவாஜி குறித்த ஒரு நூலையும், பின்னர் ஒரு மொழி பெயர்ப்பு நூலையும்தடை செய்த போது ஆளும் கட்சி, எதிர் கட்சி என்ற பேதம் என்றி காங்கிரஸ், பாஜக,சிவசேனா ஒரே நிலைப்பாட்டினை எடுத்தன. சில விஷயங்கள் பேசப்படக் கூடாதவை என்றமனோபாவத்தின் வெளிப்பாடே இது. இப்படி இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் சில விஷயங்கள்,சில நபர்கள் (இப்போது சில திட்டங்கள்) எந்த விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டவை என்ற போக்கு பரவி வருகிறது. இந்த திரைப்படத்தின் மீதான தடை அதன் விளைவுதான்.

அடையாள அரசியல் என்பது முக்கியத்துவம் பெறும் போது சில அடையாளங்களும் அதன்மூலம் முன்பிருந்ததை விட அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த அடையாளங்களைவிமர்சிப்பது அல்லது கேள்விக்குட்படுத்தும் போது அது அந்த அடையாள அரசியலையேஎதிர்ப்பதாக அதை திசை திருப்புவது எளிதாகிறது. சிவாஜி , ஒரு மாவீரன் அல்லது மன்னன் என்ற புரிதலைத் தாண்டி மராட்டியம் அல்லது மராட்டியர் என்பதன் அடையாளமாக மாறும்போது அந்த அடையாளம் குறித்த மாற்றுப் பார்வைகள்/புரிதல்கள் சர்ச்சைக்குள்ளானாலும்,அதற்கும் அப்பாற்பட்டு அவற்றை தடை செய்ய வேண்டும், அதுவே அந்த இன உணர்வு அல்லதுஅடையாளத்திற்கு காட்டப்பட வேண்டிய மரியாதை என்றாகிவிடுகிறது.

எனவே இங்கு ஒருகுறுகிய கண்ணோட்டத்தில் வரலாறும், ஆளுமைகளும் முன்னிறுத்தப்படுகிறார்கள்.அது போன்ற சந்தரப்பங்களில் உண்மை, புனைவு, கற்பனை எதுவானால் என்ன, அது இந்த சட்டகத்திற்கு அப்பாற்பட்டு இருந்தாலும் அதை எதிர்க்க வேண்டும், தடை செய்ய வேண்டும்என்ற எண்ணம் வலியுறுத்தப்படுகிறது. இங்கு பெருங்கதையாடல்கள் மோசம், அவற்றிற்கு மாறாக சிறு கதையாடல்கள், வெவ்வேறு இனக்குழுவினரின் கதையாடல்கள் முன்னிறுத்தப்படவேண்டும் என்ற வாதத்தின் பலவீனங்கள் தெளிவாகின்றன. கட்டமைக்கப்படும் எந்த அடையாளமும் விமர்சனமின்றி முன்னிறுத்தப்படும் போது அல்லது விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாக கருதப்படும் போது , வெளியிலிருந்து/உள்ளிருந்து வரும் மாற்றுக் குரல்கள், கதையாடல்கள்அடையாளத்தினை, அதை முன்னிறுத்திச் செய்யப்படும் அரசியலை ஏற்கும் வரை அனுமதிக்கப்படும் என்றாகிறது.

தொடரும்
அரசியல் சட்டமும்,அதன் அடிப்படை அமைப்பும்

இன்றைய எகனாமிக் டைம்ஸில் 93வது சட்டத்திருத்தம் குறித்து மூன்று கட்டுரைகள்வெளியாகியுள்ளன. பிரசாந்த் பூஷணின் கட்டுரை முன் வைக்கும் நிலைப்பாட்டினைநான் ஏற்கவில்லை. பானு பிராதாப் மேத்தா, ஜெய்வீர் சிங் முன் வைக்கும் கருத்துக்களுடன்பெருமளவு ஒத்துப்போகிறேன்.

இந்த வார EPW வில் ராமசாமி ஐயர் எழுதிய கட்டுரையும் அரசியல் சட்டம் குறித்ததே.ஐயர் உச்சநீதி மன்றத்தின் வரம்பு, அரசியல் சட்டத்தின் அடிப்படை அமைப்பினைமாற்றுவது குறித்தும் அலசுகிறார்.

93வது சட்டத்திருத்தம் குறித்து சுதிர் கிருஷ்ணஸ்வாமியின் கட்டுரை இது. சுதிர் இச்சட்டத்திருத்த்தினை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும் என்று கருதுகிறார்.

இட ஒதுக்கீடு குறித்த பிரச்சினையாக மட்டும் இதை கருதத் தேவையில்லை. கல்வி நிறுவனங்களில் அரசு இட ஒதுக்கீடு கோருவது தொழில் செய்யும் அடிப்படை உரிமையில் தலையிடுவதாகும். இனாம்தார் வழக்கில் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு அரசுக்கு அந்த உரிமை இல்லைஎன்கிறது.
இது பொது நன்மைக்கு என்று வாதிடப்பட்டாலும், பொது நன்மை என்ற பெயரில் அரசு தனி நபர்உரிமைகளில் எந்த அளவு தலையிட முடியும் என்ற கேள்வி எழுகிறது. படிப்போ அல்லது வேலையோ- இட ஒதுக்கீடு என்ற பெயரில் அரசு எந்த அளவு தலையிட முடியும் என்ற கேள்விஎழுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொழிலாளர் பணிபுரியும் போது ஆபத்துக்களிலிருந்துபாதுகாக்கப்பட வேண்டியது போன்றவை அனைவருக்கும் பொதுவானவை. ஆகவே அவற்றைசட்ட ரீதியாக கடைப்பிடிக்குமாறு கோருவதற்கும், இட ஒதுக்கீட்டிற்கும் வேறுபாடுகள் உண்டு.பின்னது ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் நலனை பாதுகாக்க அரசு நடைமுறைப்படுத்தும் கொள்கை.இதால் பிறரின் உரிமைகள் பாதிப்படையும் போது இட ஒதுக்கீடு எந்த அளவு இருக்கலாம்என்பதை தீர்மானிக்கும் உரிமையும், கடமையும் உச்ச நீதிமன்றத்திற்கு உண்டு. மேலும் இடஒதுக்கீடு 50%த் திற்கு மேலாக இருக்கும் போது அது சம வாய்ப்பு, சமத்துவம் போன்றவற்றைகேள்விக்குள்ளாக்குகிறது. இட ஒதுக்கீடு ஒரு விதிவிலக்காக இருக்க முடியும், அதுவேவிதியாக மாற முடியாது.

எது எப்படியாயினும் இது குறித்த புரிதல் தேவை. அதை இப்பதிவில் சுட்டப்பட்டுள்ள கட்டுரைகள்தரும் என்று நம்புகிறேன்.
தலித்கள், தமிழக அரசு, இட ஒதுக்கீடு

கீழே உள்ள கட்டுரை தலித் முரசில் வெளியானது. தமிழக அரசில் பிற்பட்டோர் எப்படி இடஒதுக்கீட்டின் முழுப் பயனையும், அதற்கு மேலும் அனுபவித்து வருகின்றனர், தலித்கள் இந்தவிஷயத்தில் எப்படி பாரபட்சத்துடன் நடத்தப்படுகின்றனர் என்பதையும் கட்டுரை எடுத்துரைக்கிறது.பிற்பட்டோர் இட ஒதுக்கீடான 50% தவிர பொதுவிலும் குறிப்பிடத்தகுந்த அளவு சதவீததினைப்பெறுவதையும், தலித்களுக்கு இருக்கிற இட ஒதுக்கீடு கூட ஒழுங்காக கிடைக்கவில்லைஎன்பதையும் இக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. இதை நான் சொன்னால் மறுப்பீர்கள், தலித்கள்சொன்னால் என்ன செய்வீர்கள். திராவிடத் தமிழர்கள், தருமி, பிரபு ராஜதுரை போன்றவர்கள்இக்கட்டுரை குறித்து என்ன சொல்லப் போகிறார்கள். இட ஒதுக்கீட்டினை ஆதரித்து எழுதியவர்கள்,ஏதோ உயர் ஜாதியினர், குறிப்பாக பார்ப்பனர் ஆதிக்கம் நிலவுவதாக எழுதியவர்கள் இக்கட்டுரைகாட்டும் புள்ளி விபரங்களை எப்படி எதிர் கொள்ளப் போகிறார்கள். விகிதார பிரதிநிதித்துவதிற்குவக்காலத்து வாங்கியவர்கள் தலித்கள் எழுப்பும் கேள்விகளுக்கு என்ன சொல்லப் போகிறார்கள்.
1967க்குப் பின் தமிழ் நாட்டினை ஆள்வது திராவிட கட்சிகள்தான். எனவே பார்ப்பனர் ஆதிக்கம்,சதி, உயர்ஜாதியினர் ஆதிக்கம் என்றெல்லாம் நைந்து கிழிந்து போன,காலாவதியான சொத்தைகாரணங்களை சொல்லாதீர்கள். படியுங்கள், யோசியுங்கள்.நான் இதையெல்லாம் சொன்னால்கேணத்தனம் என்று புறந் தள்ளிப் போவோரே , இதை சொல்வது தலித்கள். அதற்காகவேனும் இதை படியுங்கள்.


இடங்களைக் கைப்பற்றுவோம்!அரசியல் கட்சிகளின் நாணயத்தைப் பரிசோதிக்க ஓர் அரிய வாய்ப்பு

- த. கனகமுத்து

தேர்தல் நெருங்கிவிட்டது. அணி சேர்க்கைகளும் முடிந்து விட்டன. தேர்தல் அறிக்கைகளை வெளியிடக் கட்சிகள் தயாராகின்றன. ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள ஆளும் கட்சியும், இழந்த ஆட்சியைக் கைப்பற்ற எதிர்க்கட்சியும், ரத்தம் சிந்தவும் தயார் தான். ஆனால், மக்களின் வாக்குகளைக் குறிவைத்து வாக்குறுதிகளை மேடைகளில் அள்ளித் தெளிப்பவர்கள் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளில் ஏற்கனவே உறுதியளித்தவற்றை நிறைவேற்றி இருக்கிறார்களா என்றால், இல்லை என்ற பதிலே மேலோங்கி நிற்கிறது. ஆனால், புதிய தேர்தல் வாக்குறுதிகளுக்கு மட்டும் பஞ்சம் இருக்காது.தலித் இயக்கங்களும் அமைப்புகளும் பல ஆண்டுகளாக தங்களுக்குரிய சட்ட ரீதியான இடஒதுக்கீடு அரசுப் பணியிடங்களில் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பாத நாட்களே இல்லை. ஆனால், தலித் கட்சிகளுக்கு சில சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைக் கொடுப்பது என்பதைத் தவிர வேறு எதையும் அரசியல் கட்சிகள் செய்வதில்லை. ஜனநாயகத்தின் இன்னொரு முக்கிய தூணாகக் கருதப்படும் அரசு நிர்வாக எந்திரத்தில், போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படும்போதுதான் அரசியல் அதிகாரம் முழுமை பெறுகிறது. எனவேதான் அரை நூற்றாண்டுக்கும் மேலாக, ஆளும் வகுப்பினர் இத்துறையில் இடஒதுக்கீடு அளிப்பதற்கு அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொள்வதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். இடஒதுக்கீடு கோரிக்கைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு அதுகுறித்த முதன்மையான செய்திகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டே வருகின்றன. இருப்பினும், மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடுவது இன்றியமையாத கடமையாகின்றது. இந்நாட்டு மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு வகிக்கும் தலித் மக்கள், தங்களுக்கான தனித்த உரிமைகளை சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் முன்வைக்கப் போதுமான வாய்ப்பு இல்லாத நிலையில், அவர்கள் தங்கள் கோரிக்கைகளை மக்கள் மன்றத்தில் முன்வைக்கின்றனர். தலித்துகள் தனித்ததொரு அரசியல் சக்தியாகப் பரிணாமம் பெறாதவரை சட்டமன்றம்/ நாடாளுமன்றம் தவிர்த்த அரங்குகளில்தான் உரிமைக் குரல் எழுப்ப முடியும். அரசியல் கட்சிகள் தலித்துகளுக்கு தேர்தலில் இடங்கள் ஒதுக்காததைச் சுட்டிக் காட்டும் பத்திரிகைகள் அவற்றை முதன்மைச் செய்தியாக்கி கட்சிகளுக்கு நிர்பந்தம் கொடுக்கும் பத்திரிகைகள், அரசு நிர்வாகத்தில் புறக்கணிக்கப்படும் தலித் மக்கள் நிலைகுறித்துப் போதிய கவனம் செலுத்துவதில்லை.இந்நிலையில், ஒரு முன் முயற்சியாக ‘அம்பேத்கர் அனைத்துலகப் பணியாளர் சங்கக் கூட்டமைப்பு' ‘அம்பு', அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைத்து வரலாற்றில் முதல்முறையாக சென்னையில் 25.2.2006 அன்று மாபெரும் மாநாட்டை நடத்தியது. இம்மாநாட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மு.வீரபாண்டியன், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரதராஜன், ம.தி.மு.க. வைச் சார்ந்த மல்லை சத்யா, பா.ம.க. சார்பில் செங்கை சட்டமன்ற உறுப்பினர் திருக்கச்சூர் கி. ஆறுமுகம், காங்கிரஸ் கட்சியின் சார்பில் கோபண்ணா, தாம்பரம் நாராயணன், ஜெயக்குமார், பா.ஜ.க. சார்பில் ஜி. குமாரவேலு ஆகியோர் பங்கேற்றனர். முக்கிய அரசியல் கட்சிகளான தி.மு.க.வும், அ.தி.மு.க. வும் இதில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.வரலாற்றுச் சிறப்புமிக்க இம்மாநாட்டை கிறித்துதாசு காந்தி, நெறியாள்கை செய்தார்; அய்.ஏ.எஸ். அதிகாரிகளான ஜி.ஏ. ராஜ்குமார், பி. சிவகாமி, குத்சியா காந்தி, சிவசங்கரன், சிதம்பரம் (அய்.எப்.எஸ்.) சிறப்புரை நிகழ்த்தினர். ‘அம்பு' நிர்வாகிகளான ஏ. ஞானசேகரன், ரா. தயாளன், பி. மணிவண்ணன் மற்றும் ஜி. அரவிரிந்தன் முன்னிலை வகித்தனர். இம்மாநாட்டில் பங்கேற்ற அனைத்துக் கட்சியினரும் தலித் மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கையின் நியாயத்தை வெகுவாக ஆதரித்துப் பேசினர். பழைய வரலாறுகளைச் சொல்லி தலித்துகளை சொந்தம் கொண்டாடினர். ‘அம்பு' முன்வைத்துள்ள கோரிக்கைகளை தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் சேர்ப்பதாக உறுதி அளித்தனர். ‘அம்பு' முன்வைத்துள்ள மிக முக்கியமான கோரிக்கைகளை, இக்கூட்டத்தில் பங்கு பெறாத கட்சிகளின் பார்வைக்காகவும், பொதுமக்களின் சீரிய சிந்தனைக்காகவும் இக்கோரிக்கைகளை முன்வைத்து தலித் இயக்கங்கள் போராடுவதற்காகவும் அப்படியே வெளியிட்டுள்ளோம். தமிழக அரசுப் பணியில் நிரப்பப்படாத 17,314 தலித் பணி இடங்களை நிரப்ப வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது (ஆணை எண் : wp-16087 of 1999 dt. 4.1.2000). ஆனால், ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு முழுவதும் நிரப்புவோம் எனக்கூறி, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது சம்பந்தமாக பணி நிரப்பக் கோரி கேட்டால், பணி நிரப்பும் வேலை தடை செய்யப்பட்டுள்ளது என்ற காரணத்தையே சொல்லி வருகின்றனர். ஆனால் இந்த ஆணை, நிரப்பப்படாத பணிகளுக்குப் பொருந்தாது என்பது, அவர்களுக்கு இன்றளவும் உரைக்கவில்லை.1. தமிழ் நாட்டில் அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு முழுமையாகச் செய்து தந்த சமூக நீதியைப் போன்று பட்டியல் இனத்தவருக்கும், பழங்குடியினருக்கும் முழுமையான இடஒதுக்கீடு நீதியைப் பெற்றுத் தர, அரசியல் கட்சிகள் உறுதி அளிக்குமா?2. அரசியல் சட்டத்தில் அடிப்படை உரிமையாக வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை தமிழ் நாட்டில் மட்டும் பட்டியல் இனத்தவர்க்கும், பழங்குடியினருக்கும் வழங்கப்படாத அநீதியை வேரறுத்து, பதவி உயர்வில் ஒதுக்கீடு வழங்குவதற்கு, ஒவ்வொரு கட்சியும் என்ன நடவடிக்கை மேற்கொள்ளும்?3. சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. ஆயினும், இன்னும் தமிழ் நாட்டு அரசுப் பணிகளில் பட்டியல் இனத்தவருக்கும் பழங்குடியினருக்கும் 20 சதவிகித நிறைவு கிட்டவில்லை. பின்னடைவுப் பணியிடங்களுக்குச் சிறப்பு நியமனங்கள் மேற்கொள்ள இதுவரை நான்கு முறை அரசாணைகள் மட்டும் வெளியிடப்பட்டு, 10 - 15 நியமனங்கள்கூட செய்யப்படாமல், பட்டியல் இனத்தவர்/பழங்குடியினர் கடந்த 21 ஆண்டுகளாக ஏமாளியாக்கப்பட்டு வந்துள்ளனர். இனியும் பட்டியல் இனத்தவர்/பழங்குடியினரை ஏமாற்றாமல் பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவதற்கு, சிறப்பு நியமனங்களை செய்ய கட்சிகள் என்ன உடனடித் திட்டங்களைத் தரும்?4. பட்டியல் இன அலுவலர் சங்கங்களுக்கு ஏற்பளிப்பை வழங்க மறுத்து, 60 ஆண்டுகளாக நிர்வாகிகள் கடைப்பிடித்து வரும் தீண்டாமையை ஒழித்து, பட்டியல் இன அலுவலர் சங்கங்களுக்கு ஏற்பளிப்பை வழங்க கட்சிகள் உறுதி வழங்குமா?5. தமிழ் நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பட்டியல் இன / பழங்குடி இன உறுப்பினர்களே நியமிக்கப்படவில்லை. தமிழ் நாடு வரலாற்றில் இதுவரை பட்டியல் இனத்தவர் நிதிச் செயலராக நியமிக்கப்படவில்லை. கல்வித் துறை இயக்குநராக (பள்ளி, கல்லூரி, தொழில்நுட்ப இயக்குநர்கள் எவரும்) இதுவரை பட்டியல் இனத்தவர் அமர்த்தப்படவில்லை. இதுபோன்ற மறுக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் துறைத் தலைமைப் பணியிடங்களில் பட்டியல் இனத்தவரை அமர்த்த, கட்சிகள் எத்தகைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கும்?6. அண்டை மாநிலமான கர்நாடகாவில் அமைச்சரவையில் 8 பட்டியல் இனத்தவர் அமைச்சராகி உள்ளனர். ஆந்திராவிலும் அப்படியே. உள்துறை, நிதி போன்ற செம்மாந்த அமைச்சர் பதவிகளைப் பட்டியல் இனத்தவர் வகித்து வருகின்றனர். ஆனால், தமிழ் நாட்டு வரலாற்றில் இதுவரை ஒப்புக்கு ஒருவர் இருவர் என்று மட்டுமே பட்டியல் இனத்தவர் அமைச்சராக்கப்படுகின்றனர். தமிழ் நாட்டிலுள்ள, ஆதி திராவிடர், தேவேந்திரர், அருந்ததியர் ஆகிய முப்பெரும் பிரிவினர்க்கிடையே போட்டியையும், பொறாமையையும் உருவாக்கும் வகையில் ஏதாவது ஒரு பிரிவினருக்கு மட்டும் அமைச்சர் பதவியைத் தருவது ஒரு தந்திரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த முப்பெரும் பிரிவினர்க்கும், இவர்களைச் சாராத பிற பட்டியல் இனப் பிரிவினர்க்கும், பழங்குடியினர்க்கும் ஒவ்வொருவராக 5 பேருக்கும் குறையாமல் பட்டியல் இன/பழங்குடியினரை தமிழக அமைச்சரவையில் அமர்த்தி, பட்டியலினத்தினரிடையே ஒப்புரவை வளர்க்கும் பாங்கை கட்சிகள் தங்களுடைய குறிக்கோளாக அறிவிக்குமா?7. தமிழ் நாட்டுப் பொறியியற் கல்லூரிகளில் 75,000 இடமுண்டு. ஒவ்வோராண்டும் 70,000 பேருக்கும் மேலான பட்டியல் இனத்தவர் +2 தேறி வருகின்றனர். ஆனால், பொறியியல் கல்லூரியில் 6 சதவிகிதத்திற்குக் குறைவாக, அதாவது 5000 இடங்களுக்குக் குறைவாகவே பட்டியல் இனத்தவருக்கு இடம் கிடைக்கிறது. இதற்கு மூலகாரணமே பட்டியல் இனத்தவருக்கு உரிய உதவித் தொகை கிட்டாமையே. பட்டியல் இனத்தவரின் தொழிற்கல்வி உட்பட, மேல்நிலைக் கல்விக்கு ரூ. 200 கோடிக்கும் குறையாத கல்வி உதவித் திட்டம் கொண்டுவரத் தங்களது கட்சி உறுதியான திட்டம் கொண்டு வருமா?8. சிறப்பு உட்கூறுத் திட்டத்தையும் (special component plan), பழங்குடியினர் துணைத் திட்டத்தையும் (Tribal sub plan), பட்டியல் இன/பழங்குடியினரின் வாழ்க்கை ஆதாரமாக, உயிர் நாடியாகக் கருதுகிறோம். தமிழ் நாட்டிலும் சரி, மய்ய அரசிலும் சரி, சிறப்பு உட்கூறுத் திட்டம் கால் பங்குகூட நிறைவேற்றப்படவில்லை. தமிழ் நாட்டில் சிறப்பு உட்கூறுத் திட்டத்தில் வரவேண்டிய ரூ. 2000 கோடிக்குப் பதிலாக ரூ. 400 கோடிக்குக் கீழாகவும், மய்ய அரசில் வரவேண்டிய ரூ. 40,000 கோடியில் கால் மடங்கிற்குக் கீழாகவும் ஆண்டுத் திட்ட நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. ஆதி திராவிடர் நலத்துறை உட்பட அனைத்துத் துறை அதிகாரிகளும், திட்டக் குழுவும் சிறப்பு உட்கூறுத் திட்டம் என்பதைப் பற்றி ஏதும் அறியாமலும், அறிந்திருந்தாலும் அறியாதது போலவும் கண்மூடி இருந்து வருகின்றனர். நிதித் துறையும், திட்ட வளர்ச்சித் துறையும் எதிர்மறையாகவே செயல்பட்டு வருகின்றன.பட்டியல் இன/பழங்குடியினரை மதிப்பதற்கு அடையாளமாகச் சிறப்பு உட்கூறுத் திட்டத்தையும்/பழங்குடியினர் துணைத் திட்டத்தையும் பற்றிய ஆண்டு ஆய்வரங்கத்தையும் அரசியல் கட்சிகள் நடத்துமா? அரசு அளவிலும், திட்டக்குழு அளவிலும் இத்திட்டங்களை முழுமையாக நிறைவேற்றும் வண்ணம் தொடர்கூட்டங்களை நடத்த, தங்கள் கட்சி அழுத்தம் தருமா? சிறப்பு உட்கூறுத் திட்டத்தில் ஒதுக்கப்பட வேண்டிய தொகையை முழுமையாக அளிக்கவும், இந்த சிறப்பு உட்கூறுத் திட்ட ஒதுக்கீடு, பிற துறைகளின் ஒதுக்கீட்டை வெட்டிவிடும் என்ற விதண்டாவாதத்தைக் கைவிடவும் கட்சிகள் பட்டியல் இனத்தவருக்கு வாக்கு அளிக்குமா?9. பட்டியல் இனத்தாருக்கான பெரும்பாலான திட்டங்கள் சேவகத் தன்மையை பட்டியல் இனத்தார் மீது தொடர்ந்து சுமத்துவதாகவும், அவர்களைக் கையேந்த வைப்பதாகவுமே இருக்கின்றன. அமெரிக்காவில் கருப்பர்களுக்கான திட்டத்தில், அவர்களை நிறுவனங்களின் தலைவராக்குதல், அமைச்சராக்குதல், செல்வக் கோடீஸ்வரராக்குதல், உடைமையாளராக்குதல் போன்ற ஆளுமை செறிந்த அணுகுமுறைகள் கையாளப்படுகின்றன. அதுபோல, பட்டியல் இனத்தார் முன்னேற்றத்திற்குத் தற்போதுள்ள திட்டங்களின் அடுத்த முன்னேற்றமாக பெருந்தொழில் முதலீடு, கல்வி நிறுவனத்திற்கான முதலீடு, ஒப்பந்ததாராக்குதல், பேருந்து உரிமம் வழங்கல், வீடு கட்டுமானத் தொழில் முதலீடு போன்ற பெருந்திட்டங்களை வகுக்கத் தங்கள் கட்சி முனைந்து செயல்படுமா?10. நாடாளுமன்றத்திலுள்ள பட்டியல் இன நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சிப் பாகுபாடின்றி பல பொதுச் செயல்பாடுகளுக்காக ஒன்றிணைந்து செயல்படுகின்றனர். டாக்டர் கே.ஆர். நாராயணன் அவர்கள் குடியரசுத் தலைவராவதற்கு இவர்கள் காட்டிய ஒருங்கிணைப்பைத் தலைமையாகச் சுட்டிக் காட்டலாம். ஆனால், தமிழ் நாட்டுச் சட்டமன்ற பட்டியல் இன உறுப்பினர்கள், ஒரு கருத்தரங்கில்கூட அவ்வாறு ஒன்று கூடுவதைக் கட்சித் தலைமைகள் தடை செய்கின்றன என இக்கட்சி உறுப்பினர்கள் வாய்மொழியாகவே அறிகிறோம். மேலும், சட்டமன்றத்தில் பட்டியல் இனம் பற்றிய கேள்விகளை எழுப்பவோ, உண்மை நிலையை எடுத்துப் பேசவோ இவர்களைக் கட்சிக் கொரடாக்கள் ஊக்குவிப்பதில்லை என்றும் கட்சிப் பொது/செயற்குழுக் கூட்டங்களிலும் இவர்களுக்குப் பேச வாய்ப்புகள் வழங்கப்படுவது இல்லை எனவும் அறிகிறோம்.கட்சியின் பொதுச் செயலராகவோ, மாவட்டச் செயலராகவோ பட்டியல் இனத்தவரைக் காண்பது, குதிரைக் கொம்பாக இருக்கிறது. இந்நிலைகளை மாற்றி, பட்டியல் இன உறுப்பினர்களை வாய்பேசாத மடந்தையாகவோ, வெறும் வாய்ப் பேச்சாளராகவோ ஆக்காமல் அவர்களை வாயுள்ளவராக, ‘வாய்ஸ்' உள்ளவர்களாகத் தங்கள் கட்சி உருவாக்கி உயர்வு தருமா?சில முக்கிய விளக்கக் குறிப்புகள்இனம் 1 : அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோரின் பங்கேற்பு, தற்போதைய ஒதுக்கீட்டு அளவான 50 சதவிகிதத்திற்கு மேல் 90 சதவிகிதம் வரை உள்ளது. அதாவது, பட்டியல் இனம், பழங்குடியினர் பங்கீட்டுக்குப் போக வேண்டிய 19 சதவிகிதத்தைக் கழித்தால், மீந்திருக்க வேண்டிய 81 சதவிகிதப் பணியிடங்களுக்கும் மிகையாகக்கூட பல பணிகளில் பிற்படுத்தப்பட்டோர் நிறைந்துள்ளனர். பொதுப்பிரிவிற்கென்று விடப்படும் 31 சதவிகித இடங்களில், 20 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரை பிற்படுத்தப்பட்டோருக்குப் போகின்றன. தேர்வாணைய உறுப்பினர், பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள், தேர்தல் ஆணையர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சிப் பொறுப்பாளர்கள், பேருந்து உரிமம் பெறுவோர், பற்பல தொழில் வணிக நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள் போன்ற பல்வேறு நிலைகளிலும், துறைகளிலும் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீடு, அளவிற்கு மேல் காணப்படுகின்றனர். ஆனால், ஒதுக்கீட்டு அளவிற்கு உட்பட்டாவது பட்டியல் இனத்தவரையோ, பழங்குடியினரையோ காண முடிவதில்லை. 50 சதவிகிதத்திற்கு மேல் மொத்த ஒதுக்கீடு கூடாது என உச்ச நீதிமன்றம் உரைத்த பின்னும், பிற்படுத்தப்பட்டோரின் ஒதுக்கீட்டைப் பாதுகாக்க, 60 சதவிகித ஒதுக்கீட்டைச் சட்டமாக்கியது தமிழ் நாட்டு அரசியல். ஆனால், 1990 கணக்கெடுப்பின்படி, பட்டியல் இனத்தாருக்கு 18 சதவிகிதத்திலிருந்து 19 சதவிகிதமாக உயர்த்த வேண்டிய ஒதுக்கீட்டை இதுவரை மறுத்து வருகிறது தமிழ் நாட்டு அதிகாரி வர்க்கமும், அரசியலும். மத்திய அரசுத் துறைகள் தமிழ் நாட்டில் பட்டியல் இனத்தாருக்கு 19 சதவிகிதம் வழங்கி வருகிறது என்பது அனைவர்க்கும் தெரிந்ததே.இனம் 2 : அனைத்து மத்திய அரசுத் துறைகளிலும், பொது நிறுவனங்களிலும், மேல் மட்டப் பணியிடங்கள் தவிர, பிற எல்லா பணியிடங்களுக்கும் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பதவி உயர்வில் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 1995இல் 16(4அ) அரசியல் சட்டப் பிரிவும், பின்னர் அரசியல் சட்டம் 16 (4ஆ)வும் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆயினும் பத்து ஆண்டுகளுக்கு மேல் தமிழ் நாட்டில் இவை கடைப்பிடிக்கப்படுவதில்லை (6 பதவிகள் தவிர). 1995க்குப் பிறகு பிற்படுத்தப்பட்டோர்க்கு அரசியல் சட்ட வழியாகப் பதவி உயர்வில் ஒதுக்கீடு வழங்க வகையில்லை என்றபோதும், 2004 வரை தமிழ் நாட்டில் பிற்படுத்தப்பட்டோர்க்கு இது சலுகையாக வழங்கப்பட்டது. ஆனால், பட்டியல் இனத்தாருக்கு அரசியல் சட்ட அடிப்படை உரிமையாக அமைந்துள்ள இந்தப் பதவி உயர்வில், இடஒதுக்கீட்டை அனைத்துத் துறைகளிலும் வழங்க தலைமைச் செயலர் முதற்கொண்டு பல அதிகாரிகள் மறுத்து எதிர்வாதம் செய்து வருகின்றனர். 1996இல் ஆட்சியை இழக்கும் முன்னும், 2001இல் மீண்டும் ஆட்சிக்கு வரும் முன்னும் பதவி உயர்வில் பட்டியல் இனத்தவர்க்குப் பதவி உயர்வு அளிக்க அ.தி.மு.க. கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்தது. 1998இல் ஆட்சியில் இருந்த தி.மு.க. கட்சி முதல்வர், இதே உரிமை வழங்கப்படும் என்று வெளியிட்ட அறிவிப்பு செய்தித் தாள்களில் வந்தது. ஆனால், இதுவரை பட்டியல் இனத்தவர் இந்தப் பலனைப் பெற்றாரில்லை. பிற்படுத்தப்பட்டோர்க்குப் பதவி உயர்வில் ஒதுக்கீடு அளிக்க முடியாது என 2004இல் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்டதால், பட்டியல் இன/பழங்குடியினருக்கு மட்டும் இந்த உரிமையை வழங்குவதை இரண்டு ஆண்டுகளாக அரசு நிறுத்தி வைத்துள்ளது (கடித எண். 3624-BCC 2005 - 2 நாள் : 12.4.2005).இனம் 3 : இதுவரை பின்னடைவுப் பணியிடங்களை நிறைவேற்றுவது குறித்து வெளியிடப்பட்டு, அதிகாரிகளால் செயல்படுத்தப்படாத ஆணைகள் : 1989இல் அரசு ஆணை 1352 (ஆதிந) நாள் : 27.7.1989 . 1993இல் அரசு ஆணை 167 (ஆதிந) நாள் : 20.7.1993 . அரசு ஆணை எண். 2 (ஆதிந) நாள் : 2.1.1997 . அரசு ஆணை எண். 44 (ஆதிந) நாள் : 20.5.1998 . அரசு ஆணை எண். 91 . அரசு ஆணை எண். 1352 (ஆதிந) நாள் : 27.7.1989 . அரசு ஆணை எண். 162 (ஆதிந) நாள் : 21.9.1999 . அரசு கடித எண். 56752/R/993 நாள் : 28.10.1999 தற்போதைய மத்தியிலுள்ள கூட்டணி அரசு, பட்டியல் இன/பழங்குடியினருக்குச் சிறப்பு நியமனங்கள் வழங்க கொள்கை முடிவு எடுத்து நடைமுறைப்படுத்தியும் வருகிறது. ஆனால், கூட்டணியிலுள்ள தமிழ் நாட்டுக் கட்சிகள் தமிழ் நாட்டில் இதை நடைமுறைப்படுத்துவதற்கு இதுவரை வலுவான குரல் கொடுக்கவில்லை.இனம் 4 : மத்திய அரசிலுள்ள பல துறைகளில் பட்டியலினப் பணியாளர் சங்கங்களுக்கு முறையான சங்க ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது. சங்கமாக ஏற்பளிப்பு வழங்கப்படா இடங்களிலும், இச்சங்கங்கள் முறையாக நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அழைக்கப்படுகின்றன. பெரும்பாலான துறைகளில் இச்சங்கங்களுக்குக் கட்டட வசதி, விடுப்பு வசதி, பயண வசதி ஆகியவை செய்து தரப்பட்டுள்ளன. தமிழ் நாட்டில் தமிழ் நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம், தமிழ் நாடு தகவல் தொகுப்பு விவர மய்யம் ஆகிய இரு துறைகளைத் தவிர, வேறெங்கிலும் பட்டியலினப் பணியாளர் சங்கங்களுக்கு முறையான ஒப்பளிப்பு வழங்கப்படவில்லை.பட்டியலினம் என்ற பெயரிலோ, அம்பேத்கர் என்ற பெயரிலோ உருவாக்கப்பட்ட கூட்டுறவுச் சங்கங்களுக்கும், பதிவு சங்கங்களுக்கும் அந்தப் பெயரில் பதிவு செய்யப்பட மறுக்கப்பட்ட கொடுமைகள், தமிழகத்தில் அரங்கேறியுள்ளன. இன்னும் பல இடங்களில் இது தொடர்கிறது. நூற்றுக்கணக்கில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு பணியாளர் சங்கங்களுக்கு நிலம், கட்டடம், அலுவலக அறை போன்ற வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், பட்டியல் இனச் சங்கங்களுக்கு என்று எந்த ஒரு துறையிலும் இதுவரை இந்த வசதிகள் அளிக்கப்படவில்லை. பட்டியல் இனச் சங்கங்கள் நடத்தும் கூட்டங்களுக்கு 1975க்குப் பிறகு எந்தவொரு தலைமைச் செயலரும், பட்டியல் இனம் அல்லாத செயலரும், ஒரு சிலர் தவிர பிற பட்டியல் இனச் செயலரும், மாவட்ட ஆட்சித் தலைவர்களும் கலந்து கொண்டதில்லை. தலைமைச் செயலகத்திலோ, துறைத் தலைவர் அலுவலகங்களிலோ, ஆதி திராவிடர் நலச் செயலர்/இயக்குநர் அலுவலகங்களிலோ, திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் தவிர்த்த பிற மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களிலோ, அண்ணல் அம்பேத்கர் படத்தை வைக்கக்கூட இசைவளிக்கப்படவில்லை.இனம் 6 : அமைச்சரவையில் கையாளப்படும் மதிப்புரு வரிசையில், இதுவரை எந்தவொரு பட்டியலின அமைச்சரும் முதல் அய்ந்து இடங்களுக்குள் வந்ததில்லை. கடந்த 25 ஆண்டுகளாக கடைசி மூன்று இடங்களுக்கு மேல் எந்தவொரு பட்டியல் இன அமைச்சருக்கும் இடம் தரப்படவில்லை. இதுவரை எந்தவொரு பழங்குடியினரும் அமைச்சராக்கப்படவில்லை.இனம் 7 : சிறப்பு உட்கூறுத் திட்டம் பற்றி எந்தவொரு அரசியல் கட்சியும் இதுவரை சிந்தித்து அறிக்கை வெளியிட்டதில்லை. பட்டியல் இனத்தவருடன் எந்தவொரு ஆட்சியும் இதுகுறித்து ஆய்வு நடத்தவோ, கலந்துரையாடவோ, குழு அமைக்கவோ முன்வரவில்லை. ஒரே மாநிலத்தில் மட்டும் ஒரே அய்ந்தாண்டுத் திட்டத்தில் பட்டியல் இனத்தாருக்கு வராமல் போகும் திட்ட ஒதுக்கீடு, சில ஆயிரம் கோடி ரூபாய்களைத் தாண்டும். மத்திய அரசின் ஒதுக்கீட்டு இழப்போ சில லட்சங்களைத் தொடும்.
திராவிட தமிழர்களுக்கு ஒரு பதில்

உங்கள் வலைப்பதிவில் தருமி எழுதிய கட்டுரையையொட்டி சில தகவல்களைக் கொடுத்து, அவர் முன் வைத்திருந்த கருத்துக்களை மறுத்திருந்தேன். 1990களிலும்,பின்னரும் பல காரணங்களால்மத்திய அரசில், பொதுத்துறையில் வேலைவாய்ப்புகள் குறைந்திருந்தாலும் பிற்பட்டோருக்கு27% இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டு விட்டதால் வாய்ப்புகளுக்கான கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டன என்று வாதிடுவது தவறு என்று எழுதியிருந்தேன். தருமி இதைப் பற்றிப் பேசாமல் சிறுபிள்ளைத்தனமான சில கேள்விகளை முன் வைத்திருக்கிறார்.

அவை படிக்க வேடிக்கையாயிருக்கின்றன. பிளஸ் 2 மாணவர்கள் எப்போதுமே பரீட்சைகளில் கட்டுரை, சுருக்கி வரைதல் போன்றவற்றை எதிர் கொண்டதேயில்லையா. அவர்களிடம் வெறும் பதிலை தெரிவு செய்யும் கேள்விகளைத்தான் தர வேண்டுமா. கொஞ்சம் யோசியுங்கள்.வங்கிகள் தேர்வு முறையில் மாற்றம் செய்தால் அது எல்லோருக்கும்தான். மத்திய அரசு ஊழியர் ஒய்வு பெறும் வயது 60 ஆகப் பட்டதற்க்கும் இட ஒதுக்கீட்டிற்கும் என்ன தொடர்பு.பிற்பட்டோர் வேலை வாய்ப்பிற்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்டுவிட்டது என்றால் முத்து போன்றவர்கள் எப்படி வங்கிகளில் நுழைந்தனர். 2001ல் தான் பிஎஸ் ஆர் பி கலைக்கப்பட்டது. அப்போது மத்திய அரசில் மதிமுக,திமுக,பாமக அங்கம் வகித்தன.இந்த நடவடிக்கை பிற்பட்டோருக்கு எதிரானது என்றால் அவர்கள் எதிர்த்து குரல்கொடுத்திருப்பார்களே, ஏன் கொடுக்கவில்லை. மேலும் வங்கிகள் தனித்தனியே வேலைகளுக்குஆட்களை தெரிவு செய்யும் விளம்பரங்களில் இட ஒதுக்கீடு குறித்து குறிப்பிடுகின்றனவே. இதைவிட வேறு என்ன வேண்டும். தேர்வுகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும் 27% இட ஒதுக்கீடுஇருக்கிறதே. அதை இல்லை என்று மறுக்க முடியுமா.

தருமி நான் பின்னூட்டத்தில் இட்டதை மறுக்க முடியாமால் சுற்றி வளைத்து தான் சொன்னதையேசொல்கிறார். இதை பெரிதாக எடுத்துக்கொண்டு நான் விரிவாக பதில் எழுதி என் நேரத்தைவீணாக்க விரும்பவில்லை. கேள்விகள் புத்திசாலித்தனமாக இல்லை, முட்டாள்த்தனமாகஇருக்கின்றன. அது ஒரளவு விபரம் அறிந்தவர்களுக்கும் விளங்கும்.

எனவே உங்களிடம் சரக்கு இல்லாத போது இப்படி பதில் எழுதினால் அதை தோலுரிப்பதுஎனக்கு எளிது. அம்பலப்பட்டுப் போவது நீங்கள்தான். கிரிமி லேயர் குறித்து அவர் எழுதியிருக்கும்உளறல் ஒன்றை எடுத்து நான் எழுதினால் போதும். குழலி இப்படித்தான் ஐஐடி குறித்து ஒருபதிவு எழுதினார், அதில் நான் எழுப்பிய கேள்விகளுக்கு இன்னும் பதில் இல்லை. யோசிக்காமல் பரபரப்பாக தலைப்பிட்டு எதையாவது எழுதினால் அப்படித்தான் ஆகும்.

உங்களால் முடிந்தால் வலுவான சான்றுகளுடன்,ஆதாரங்களுடன் எழுதுங்கள், கேள்விகளுக்குபதில் சொல்ல முயலுங்கள். குறைந்த பட்சம் படிப்பவர்கள் எப்படியெல்லாம் எதிர் கேள்விகள்எழுப்புவார்கள் என்பதையாவது ஒரு பதிவை இடும் முன் யோசியுங்கள். நீங்கள் எத்தனை பேர் என்பதை விட என்ன எழுதுகிறீர்கள், எப்படி எழுதுகிறீர்கள் என்பது முக்கியம்.

சுருக்கமாகச் சொன்னால் Try to grow up.
மேய்ச்சல்

இணையத்தின் எதிர்காலம்?

இந்திய இட ஒதுக்கீடும், அமெரிக்க அப்ர்மேடிவ் ஆக்ஷனும்

இப்படி வாழ்வதற்கு சாகலாம் ?

சைகோன் - மதம்,அறிவியல் குறித்த ஜர்னல்-இலவச இதழ்(பதிப்பகங்கள் சில சமயங்களில் இப்படி ஜர்னல்களின் ஒர் இதழை இலவசமாக மாதிரிக்காக இடுவதுண்டு. சைகோன் மதம், அறிவியல் குறித்த ஜர்னல்.இத்துறையில் வெளிவரும் மிக முக்கியமான ஜர்னலும் கூட)

சீனாவில் தொழிலாளர் வர்க்கம்
சவால்- அறைகூவல்

இப்பதிவு பெயர் வெளியிடவிரும்பாத ஒருவர் இட்ட பின்னூட்டத்திற்கான பதில்.அப்பின்னூட்டம்இதோ

"சுந்தர ராமசாமியின் 'சவால்' கவிதையை பிகே சிவக்குமார் தன் பதிவில் போட்டு, அதை முன்வைத்து தனது சிந்தனைகளாக கொஞ்சம் கதைத்திருந்தார். ரவி ஸ்ரீனிவாஸ் அதற்கு எதிர்வினையாக தன் வறலாற்று ஞானத்தை முன் வைத்திருந்தார். இந்த சண்டையை பற்றி என் கருத்துக்களை எல்லாம் எழுதத் தொடங்கினால், நட்சத்திர வாரத்தின் துவக்கத்திலேயே 'அமங்கலமாய்' கதைப்பதாக விடும். அது குறித்து பேசுவதல்ல என் நோக்கம். இதை முன்வைத்து, பசுவய்யா, பிரமீள் பற்றி ஸ்வீப்பிங்காக (அதாவது ரொம்ப விளக்கம் தராமல்) என் கருத்துக்களை முன்வைப்பது மட்டுமே. (ஆனால் தப்பித்து போகாமல் இந்த சண்டை பற்றி மொட்டையாய் சொல்வதென்றால், அது சிவக்குமார் சார்பாகத்தான் இருக்கிறது. சிவக்குமார் நா.முத்துசாமி எழுதியதை அடிப்படையாக வைத்து எழுதிய அளவில், அப்படி (குறிப்பிட்டு விட்டு) எழுதலாம் என்ற அளவிலும், நா.முவின் கருத்தை திரிக்கவில்லை என்ற அளவிலும் அவர் தவறாக எதுவும் எழுதியதாக தெரியவில்லை. ரவி எழுதியதில் வழக்கம் போல, தன் வறலாற்று அறிவை பறை சாற்றும் முனைப்பும், வழக்கமான அவசரமும் தெரியும் அளவிற்கு, தகவல்களை தெளிவாக்கும் நோக்கம் முதன்மையாக தெரியவில்லை. பதிலுக்கு பிகேஎஸ் கேட்ட கேள்விகளுக்கும் வழக்கம் போல பதில் இல்லை.) அது எப்படியும் போகட்டும்."

http://rozavasanth.blogspot.com/2006/05/blog-post_114889342633956081.html

'ரவி சீனிவாசன், பி.கெ.சிவக்குமார் எழுதிய பதிலிற்கு உங்கள் பதிலை எழுதவில்லையே.அப்படியானால் ரோசா வசந்த் சொல்வது சரிதான்.'
-------------------------------------------------------------------------------------

சுந்தர ராமசாமி எழுதிய சவால் கவிதை குறித்து பி.கே.சிவக்குமார் தன் பதிவில் எழுதியிருந்தார்.அதற்கு நான் ஒரு பதிலை என் பதிவில் இட்டிருந்தேன், பி.கே.சிவகுமார் தன் பதிவில் எதிர்வினையாற்றியிருந்தார்.

அதற்கு நான் பதில் எழுதவில்லை. என்னிடம் புதிய சான்றுகள் இல்லாத நிலையில்,மீண்டும் கூறியதை கூற விரும்பாததாலும், படிப்பவர்கள் முடிவு செய்து கொள்ளலாம்என்று கருதியதாலும், சர்ச்சையை வளர்ப்பதில் ஆர்வமில்லாததாலும் சிவகுமார் எழுதியஇரண்டாவது பதிவிற்கு பதில் பதிவு இடவில்லை.

சுந்தர ராமசாமி தம்மிடம் கூறியதாக நா.முத்துசாமி தெரிவித்தை அடிப்படையாகக் கொண்டுபி.கே.சிவகுமார் தன் வாதத்தினை முன் வைக்கிறார். பிரமீள் அதே கவிதை குறித்து எழுதியகட்டுரையை அடிப்படையாகக் கொண்டு நான் என் தரப்பினை முன் வைக்கிறேன். மேலும்அந்த கவிதை எழுதப்பட்டக் காலத்தில் சுந்தர ராமசாமியும், பிரமீளும் நட்பாக இருந்தனர்என்பதையும் நான் குறிப்பிட்டுள்ளேன். அறைகூவல் கவிதை குறித்தும் பிரமிள் தன் கட்டுரையில்குறிப்பிடுகிறார். இதில் எந்த ஆதாரங்கள் வலுவானவை, எந்த அளவு நம்பகமானவை என்பதைபடிப்பவர்கள் முடிவு செய்து கொள்ளலாம். இது குறித்து உயிர்மைக்கோ அல்லது வேறு எங்கோ எழுதும் எண்ணம் எனக்கு இல்லை. உயிர்மையை நான் அவ்வப்போதுதான் பார்க்கிறேன். தொடர்ந்துபடிப்பதில்லை. மேலும் உயிர்மையில் வெளியாகும் தகவல்கள், சர்ச்சைகள் குறித்து எனக்கு பெரியஅக்கறை ஏதுமில்லை. நான் பார்த்த இரண்டு,மூன்று இதழ்களில், ஒன்றில் ஜெயமோகன் காப்காதற்கொலை செய்துகொண்டார் என்று எழுதியிருந்தார், அடுத்த இதழில் ஒரு வாசகர் அதை மறுத்திருந்தார், அவர் நோயுற்று இறந்தார் என்று எழுதியிருந்தார். இதற்கு ஜெயமோகனின் பதில் என்ன (ஏதாவது இருப்பின்) என்பது எனக்குத் தெரியாது.தெரிந்து கொள்வதில் அக்கறையும் இல்லை.

அது போல் பிரமிள் கட்டுரை குறித்து யாரவது உயிர்மைக்கு எழுதியிருக்ககூடும், யாருமே எழுதாமலிருந்திருக்கக் கூடும். இன்று பிரமீள் கட்டுரைகள், கவிதைகள் முழுமையாகக்கிடைக்கின்றன. சவால் எப்போது எழுதப்பட்டது என்பதையும் வாசகர் அறிவது எளிதுதான்.பி.கே.சிவக்குமார் எழுதியதை நான் அவர் வலைப்பதிவில் படித்தேன்.அவர் வேறெங்காவது எழுதியிருந்து அது என் கவனத்திற்கு வராமலே கூடப் போயிருக்கலாம். அதே போல் வானமற்ற வெளியின் பிரதி என்னிடம் அப்போது இருந்தது. அது இல்லாமல்இருந்திருந்தால் என்னால் இவ்வளவு தெளிவாக பிரமீளே எழுதியிருக்கிறார் என்று சொல்லமுடியாது. பிரமீள் அப்படி எழுதியதாக நினைவு என்று மட்டுமே சொல்லியிருந்திருக்கமுடியும். இப்போது
அதிகபட்சமாக, உயிர்மையில் இது வரை யாரும் பிரமீள் எழுதியகட்டுரையை சுட்டிக்காட்டி எழுதியிருக்கவில்லையென்றால், ஒரு கடிதம் மூலம்இப்படி ஒரு கட்டுரையை பிரமீள் எழுதியிருக்கிறார், அதில் இதைத் சொல்லியிருக்கிறார்என்பதை சுட்டிக்காட்ட முடியும். அதற்கு யார் என்ன பதில் சொல்வார்கள் என்பதை தொடர்ந்துஅறிந்து கொள்ளவும் முடியாது, அதில் எனக்கு அக்கறையும் இல்லை.

சவால் கட்டுரை குறித்து எழுதும் போல் பிரமீள் எழுதுகிறார்

'இக்கவிதையைப் படித்த போது. அதன் உக்கிரமே என்னுள் புகுந்து அறைகூவல் என்ற கவிதையை எழுத வைத்தது'

இது எந்த அளவு உண்மை என்பதை சவால், அறைகூவல் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்துபடிப்பவர்கள் முடிவு செய்துகொள்ள முடியும்.

சுந்தர ராமசாமி,பிரமிள் இருவரும் நம்மிடையேஇல்லை. அவர்களின் எழுத்துக்கள் இருக்கின்றன.இறந்தவர்களில் ஒருவர் தம்மிடம் கூறியதாகஇப்போது இருப்பவர் ஒருவர் கூறியது, இறந்தவர்களில் ஒருவர் எழுதிய கட்டுரை,அதுவும் அந்தக் கவிதை குறித்து, அது எழுதப்பட்ட போது அவர்கள் நட்பாக இருந்தார்கள்என்ற ஒரு தகவல். இவற்றுள் எதற்கு எந்த அளவு நம்பகத்தன்மை/சான்றாக இருக்கும் வலுஅதிகம் என்பதை படிப்பவர்கள் முடிவு செய்துகொள்ளலாம்.

சர்ச்சையை வளர்ப்பதில் எனக்கு ஆர்வமில்லை. எனவே இது குறித்து இன்னொரு முறை எழுதுவதை தவிர்க்க நினைக்கிறேன். அதே சமயம் வேறு புதிய சான்றுகள்,ஆதாரங்கள்முன் வைக்கப்பட்டால் அதை/அவற்றை கருத்தில் கொள்வதில் தயக்கமில்லை.