மாற்றமும், ஒரு அறிவிப்பும்

இவ்வலைப்பதிவின் முகப்பில் This is a 'Politically Incorrect' Blog, not a blog that reflects the bland 'left', 'secular' and 'progressive' views and cliches என்பதைச் சேர்த்திருக்கிறேன்.
' பொலிடிகலி கரெக்ட்' பதிவுகளை எதிர்பார்த்து யாரும் ஏமாந்துவிட வேண்டாம் என்பதை தெளிவாக்கவே இதைச் செய்திருக்கிறேன். பொலிடிகலி கரெக்ட் என்ற பெயரில் வழக்கமானஇடதுசாரி, முற்போக்கு என்று அறியப்படும் கருத்துக்களை பதிவு செய்ய விரும்பவில்லை.அந்தப் பெயர்களில் முன் வைக்கப்படும் கருத்துக்களை விமர்சிக்கவும், கேள்விக்குட்படுத்தவும்விரும்புகிறேன்.

உதாரணமாக அமெரிக்க வெறுப்பு என்பது கண்மூடித்தனமாக பலரால் முன் வைக்கபடுகிறது.இதற்கு ஒரு உதாரணம் எஸ்.வி.ராஜதுரை எழுதியுள்ள கட்டுரை. எனக்கு இத்தகைய கண்மூடித்தனமான வெறுப்ப்டன் உடன்பாடு இல்லை. கடுமையான விமர்சனம் என்பதுவேறு, சகட்டுமேனிக்கு எதிர்ப்பது, மிகைப்படுத்தி எழுதுவது என்பது வேறு. இன்னொருஉதாரணம் உலக வர்த்தக அமைப்பு. இங்கு பலரும் (இடதுசாரிகள், வலதுசாரிகள்) இதைமிக கடுமையாக விமர்சிக்கிறார்கள், சிலர் இதை ஏகாதிபத்தியத்தின் கருவி என்று கூடஎழுதுகிறார்கள். அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாமல் சேவைகள் குறித்த பொதுஒப்பந்தம், வர்த்தகம் தொடர்புடைய அறிவுசார் சொத்துரிமைகள் குறித்த ஒப்பந்தங்கள்மீது விமர்சனங்கள் வைக்கபடுகின்றன. இவற்றின் மீது எனக்கும் விமர்சனம் உண்டு. ஆனால்அது வெறும் எதிர்ப்பல்ல, ஆதாரமற்ற வெறுப்பல்ல.

உதாரணமாக இங்கு வெளி நாட்டு கல்விநிறுவனங்கள்,பல்கலைகழகங்கள் வளாகங்கள் அமைப்பதை, கிளைகள் ஏற்படுத்துவதைஇடதுசாரிகள் உட்பட பலர் எதிர்க்கின்றனர். இந்த எதிர்ப்பு ஒரளவு நியாயமானதே,அதே சமயம் அந்த எதிர்ப்பு இதில் உள்ள சாதகங்களை கருத்தில் கொள்வதில்லை அல்லதுகுறைத்து மதிப்பிடுகிறது. நிபந்தனைகளுக்கு உட்பட்டு, சில ஒழுங்கு முறைகளின் அடிப்படையில்அவை இங்கு செயல்படுவதை நான் வரவேற்ப்பேன்.சேவைகள் குறித்த பொதுஒப்பந்தம் நமக்கு சில அனுகூலங்களைத் தருகிறது, சில துறைகளில் இந்தியா உலகவர்த்தகத்தில் இதை மிக சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் இதற்குவிலையாக நாம் சில துறைகளில் அந்நிய முதலீட்டினை, நிறுவனங்களை அனுமதிக்கவேண்டியிருக்கும். அது சில எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். அவற்றைகுறைக்க அரசு சிலவற்றை செய்ய வேண்டியிருக்கும். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது நமக்கு நன்மைகள் விளையும் என்றால் இவ்வொப்பந்தத்தினை அதற்கு உதவிடும்வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது என் கருதுகோள்.

உதாரணமாகஉயர் கல்வியில் அந்நிய நாட்டுப் பல்கலைகழகங்கள் இங்கு வளாகங்களை அமைத்து,ஆராய்ச்சிக்கும், பயிற்சிக்கும் முக்கியத்துவம் தரும் போது அது பல நல்ல விளைவுகளைஏற்படுத்தும். இங்குள்ள மானுட ஆற்றலை இன்னும் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளமுடியும். அமெரிக்காவில் மின்னணுவியல், உயிரியல் தொழில்நுட்பம்,அதி நுண் தொழில் நுட்பம்,தகவல் தொடர்பு போன்ற துறைகளில் பல்கலைகழகங்கள், ஆய்வு நிலையங்களில் செய்யப்பட்டகண்டுபிடிப்புகள், புதியன உருவாக்கம் மிகப் பெரும்பங்காற்றியுள்ளன. இதை இந்தியாவில்செய்ய முடியுமா, அதற்கு பிற நாட்டுப் பல்கலைகழகங்களுடான கூட்டு ஆய்வுகள், அவைஇங்கு வளாகம் அமைப்பது உதவுமா என்பது போன்ற கேள்விகள் இருக்கின்றன. ஆனால்கண்மூடித்தனமான எதிர்ப்பு என்ற நிலைப்பாடு எடுக்கும் போது இந்த சாத்தியப்பாடுகள் குறித்துநாம் யோசிப்பதில்லை. இங்கு அயல்நாட்டுப் பல்கலைகழகங்கள் வந்தால் அவற்றை எப்படிநெறிப்படுத்துவது , எப்படி பயன்படுத்திக் கொள்வது என்று யோசிக்காமல் அந்த ஒப்பந்தமேநமக்கு எதிரானது என்ற நிலைப்பாட்டினைத் தான் இங்கு பலர் முன் வைக்கின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில் ஒருவன் வழக்கமான இடதுசாரி, முற்போக்கு என்று சொல்லப்படுகின்றநிலைப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு யோசிக்க வேண்டியிருக்கிறது. எது பிரச்சாரம். எது உண்மைஎன்பதை அறிய வேண்டியிருக்கிறது.

எப்போதும் நான் கிட்டதட்ட அப்படித்தான் யோசித்தும்,எழுதியும் வந்துள்ளேன். உதாரணமாக 2004ல் உலக வர்த்தக அமைப்பு குறித்து நான் எழுதியசிறு நூலில் கூட இதை எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதுதான் நம் முன் உள்ள சவால்,இதிலிருந்து விலகுவது என்பது பதில் அல்ல என்ற ரீதியில் எழுதியிருந்தேன்.

பெரியார் ஆகட்டும், உலகமயமாக்கலாகட்டும், இட ஒதுக்கீடாகட்டும் என்னுடைய கருத்துக்கள்,கருதுகோள்கள், நிலைப்பாடுகள் வித்தியாசமாக இருப்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஒரளவேனும் அறிந்து கொண்டு, படித்துக் தெரிந்து கொண்டு, யோசித்து, தகவல்களைச் சேகரித்தபின்னரே நான் எழுதுகிறேன், அல்லது குறைந்தபட்சம் இதுதான் நான் சொல்ல வருவது என்றாவதுகுறிப்பிடுகிறேன். பல நேரங்களில் விரிவாக எழுத நேரமில்லாத போது நான் இதைப் படித்தேன், நீங்களும் படித்துப் பாருங்கள் என்று சுட்டிகளைத் தந்து விடுகிறேன். இதுதான் என்னால் செய்ய முடிகிறது. இதுதான் முடிந்த முடிபு, மாறாதது என்று ஒரே கருத்தினை காலாகாலத்திற்கும் கொண்டிருப்பதை விட முடிந்த அளவு திறந்த மனதுடன் அணுகுவது, தன் நிலைப்பாடுகளைசுய விமர்சனத்திற்கு உட்படுத்தி போன்றவை தேவையான அணுகுமுறைகள் என்று கருதுகிறேன்.

மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமுல்படுத்துவது குறித்த சர்ச்சை எழுந்த போது அவ்வாறுசெய்வதை நான் ஆதரித்தேன். ஆனால் கடந்த பத்தாண்டுகளில் இட ஒதுக்கீடு குறித்த என்கண்ணோட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன. இதற்கு காரணம் நான் இது குறித்து தொடர்ந்துபடித்ததும், இது நடைமுறையில் எப்படி செயல்படுகிறது என்பதை அறிய முயன்றதும்தான்.இன்னும் அறிய வேண்டியவை பல உண்டு என்பது எனக்குத் தெரியும். எந்த ஒரு புள்ளியிலும்நான் இது போதும், இதற்கு மேல் இதில் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை என்று நினைத்ததில்லை. ஆகவே ஒரு மீள் பார்வையில் பார்க்கும் போது இட ஒதுக்கீடு குறித்துமுன்பு போல் ஒரு ஆதரவான நிலைப்பாட்டினை எடுக்க முடியவில்லை. இட ஒதுக்கீடுதான்ஒரே வழியா, இந்தியச் சூழலில் ஜாதி ஒன்றினை மட்டுமே அளவுகோலாக வைக்க முடியுமா,அமெரிக்க உதாரணங்கள் இங்கு எந்த அளவு பொருந்தும் என்றெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கிறது.

எனவே இனி வரும் பதிவுகள் மிகவும் வித்தியசமான, 'பொலிடிகலி இன்கரெக்ட்' நிலைப்பாடுகளை முன் வைத்தால் அதிர்ச்சி அடையாதீர்கள், கொஞ்சமேனும் வழக்கமான இடது சாரி, முற்போக்குநிலைப்பாடுகளுக்கு அப்பாற்பாட்டு சிந்திப்பது அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

5 மறுமொழிகள்:

Blogger -/பெயரிலி. மொழிந்தது...

or is it the dawn of trasnsformation to a neo-con? ;-)
On the trail of Krystal to Hitchens....

just kidding.

1:31 PM  
Blogger SK மொழிந்தது...

அப்டிப் போஉங்க அருவாளை!

ஓ,ஓ, இதை நான் சொன்னதால எதுனாச்சும் பிரச்சினை வருங்களா!?

There is asying called "thinking outside the box" and that's the need of the hour at anytime!
Only by that, man has progressed!

1:39 PM  
Blogger Vajra மொழிந்தது...

//
This is a 'Politically Incorrect' Blog, not a blog that reflects the bland 'left', 'secular' and 'progressive' views and cliches
//

இது மாற்றமா, தடுமாற்றமா?

என் பதிவில் நீங்கள் இட்ட சில பின்னூட்டங்களிலிருந்து நீங்கள் சரியான " leftist" "secularist" "Progressive" JNU ஜோல்னாப்பை கோஷ்டி என்று நினைத்திருந்தேன்...!! ..பரவாஇல்லை அபிப்ராயத்தை மாற்றிக் கொள்கிறேன்.

அதற்குள் உங்களை ஒருவர் Neo-con என்று கூறிவிட்டார்...!!

இதே ரேஞ்சில் யோசித்தீர்கள் என்றால் கூடிய விரைவில் ஹிந்துத்வாவாதி, அடிப்படைவாதி பட்டமும் கிடைத்துவிடும்...பார்த்து எழுதுங்கள்?

ஷங்கர்.

4:41 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

உதாரணமாக 2004ல் உலக வர்த்தக அமைப்பு குறித்து நான் எழுதியசிறு நூலில் கூட இதை எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதுதான் நம் முன் உள்ள சவால்,இதிலிருந்து விலகுவது என்பது பதில் அல்ல என்ற ரீதியில் எழுதியிருந்தேன்.

1994, not 2004

12:23 PM  
Blogger TAMIL ELECTRONICS DATASHEETS மொழிந்தது...

தமிழ் தரவுத்தாள் தளம்
www.tamildata.co.cc
தமிழின் முதல் மின்னணுவியல் கருவூலம்

10:44 PM  

Post a Comment

<< முகப்பு