அர்ச்சகர்-அரசு முடிவு- ஒரு அவசரப் பதிவு

இன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகர ஆக வழி செய்யும் ஆணைப் பிறப்பிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வலைப்பதிவுகளிலும் இது பற்றி விவாதம் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து நான் பல இடங்களில் எழுதியிருக்கிறேன். 2002ல் உச்ச நீதிமன்றம் அளித்ததீர்ப்பு இந்த உரிமையை தந்துள்ளது என்பதையும் குறிப்பிட்டிருக்கிறேன். 1970களில் கருணாநிதிமுதல்வராக இருந்த போது இதற்கான முயற்சியை எடுத்தார்.ஆனால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அதை செயல்படுத்த முடியாதபடி செய்துவிட்டது. ஆணை செல்லாது என்று அது சொல்லவில்லை, ஆனால் ஆகம விதிகளின்படித்தான் பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.ஆகம விதிகளும், காலங்காலமாக பின்பற்றப்பட்ட விதிமுறைகளும், (சைவ, வைணவ கோயில்களில்) அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை சாத்தியமற்றதாக்கிவிட்டிருந்தன. இதனால் அரசின் முயற்சிதோற்றது. அதற்குப் பின்னர் இன்று வரை என்ன நடந்தது என்பது பெரிய கதை, சுவாரசியமான'கதை

இதை விரிவாக எழுத இப்போது இயலாது.இந்த வார இறுதிக்குள் எழுத முயல்கிறேன்.ஒருவேளைஅடுத்த வாரம் எழுதலாம். பெரியாரின் கடைசி ஆசைகளில் ஒன்று இப்போதுநிறைவேறியிருக்கிறது. இது முன்னரே நிறைவேறியிருக்கும் அவரது சீடர்கள் முயன்றிருந்தால்.இதை சாத்தியமாக்கியிருப்பது, தி.கவும், பெரியார் திகவும் வசை பாடும் உச்ச நீதிமன்றம்.ஆம் 'இந்த நீதிமன்றங் களில் பார்ப்பனர்களும், உயர்சாதிக் காரர்களுமே நீதிபதிகளாக இருப்பதால் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்' அந்த உயர் நீதிமன்றம்(கேரளா),உச்ச நீதிமன்றம்தான் இதை சாத்தியமாக்கியிருக்கிறது. எந்த அரசியல் சட்டத்தினை இவர்கள் எதிர்தார்களோ, எதை பெரியார் தன் ஆயுள் முழுதும் வசை பாடினாரோ அதன் பிரிவுகளின் அடிப்படையில்தான் இது இன்று சாத்தியமாயிருக்கிறது. 1970 களில் சாத்தியமில்லாத ஒன்று பின்னர் எப்படி சாத்தியமாயிற்று -விரிவாக விளக்குகிறேன், எழுதவுள்ள கட்டுரையில்

கலைஞர் 1970களில் செய்த முயற்சிகளுக்காக அவரைப் பாராட்டுகிறேன். ஆனால் அவர் மீண்டும்ஆட்சியில் இருந்த காலங்களில் (1989- 91, 1996 - 2001) இது குறித்து அவர் ஒன்றும் செய்த மாதிரித் தெரியவில்லை.1972ல் தீர்ப்பு வந்த போது மேல் முறையீடும் செய்யப்படவில்லை. இவற்றையும் கருத்தில் கொள்வது அவசியம். கருணாநிதியைப் பாராட்டுகின்றன அதே வேளையில் உண்மையில் என்ன நடந்தது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஜெயலலிதா அரசிற்கு பெண்களையும் அர்ச்சகர் ஆக்கும் எண்ணம் இருந்திருக்கிறது என்பதையும்இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

1 மறுமொழிகள்:

Blogger ROSAVASANTH மொழிந்தது...

//இதை சாத்தியமாக்கியிருப்பது, தி.கவும், பெரியார் திகவும் வசை பாடும் உச்ச நீதிமன்றம்.ஆம் 'இந்த நீதிமன்றங் களில் பார்ப்பனர்களும், உயர்சாதிக் காரர்களுமே நீதிபதிகளாக இருப்பதால் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்' அந்த உயர் நீதிமன்றம்(கேரளா),உச்ச நீதிமன்றம்தான் இதை சாத்தியமாக்கியிருக்கிறது. எந்த அரசியல் சட்டத்தினை இவர்கள் எதிர்தார்களோ, எதை பெரியார் தன் ஆயுள் முழுதும் வசை பாடினாரோ அதன் பிரிவுகளின் அடிப்படையில்தான் இது இன்று சாத்தியமாயிருக்கிறது. //

என்ன ஒரு அறிவார்ந்த வரிகள்? தர்க்கம் என்றால் இதுதான்! சரி, விரிவாக எழுதுவது என்பதற்கு என்ன அர்த்தம் என்று இனி வரும் வாரங்கள் பார்ப்போம்!

5:49 AM  

Post a Comment

<< முகப்பு