இட ஒதுக்கீடு எதிர்ப்பும்

இட ஒதுக்கீட்டிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள் மீது வன்முறைத் தாக்குதலை ஏவி விட்டிருப்பது கண்டிக்கதக்கது. எதிர்ப்பவர்கள் வேலை நிறுத்தம் செய்வதால் பொதுமக்கள் பாதிக்கபடுவதால் எதிர்ப்பாளர்களின் கோரிக்கையில் உள்ள நியாயங்கள் புரிந்து கொள்ளப்படாமல்போகலாம். பொதுமக்கள் அதிருப்தி அவர்கள் மீதான் எதிர்ப்பாக மாறலாம். எனவே காலவரையற்றவேலை நிறுத்தம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

அர்ஜுன் சிங் அறிவு கமிஷன் அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்டது அல்ல என்று கூறியிருக்கிறார்.அவரும் அப்பாற்பட்டவர் அல்ல என்பதை அவர் நினைவில் கொள்வது நல்லது. அரசியல் சட்டத்தினை உருவக்கியவர்கள் முதலில் தாழ்த்தப்பட்ட, ப்ழங்குடியினருக்குத் தான் இட ஒதுக்கீடுசெய்தனர். பின்னர் ஒரு திருத்தம்தான் பிற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு செய்ய வழி வகுத்தது. இப்போது அண்மையில் செய்யப்பட்ட அரசியல் சட்ட திருத்தம் இதற்கு வழி வகுப்பதாக கூறப்பட்டாலும், சமீபத்திய திருத்தம் உச்ச நீதிமன்ற தீர்ப்பு செல்லாது என்று கூறியதை நிராகரித்து இட ஒதுக்கீட்டிற்கு வகை செய்யவே கொண்டு வரப்பட்டது. எனவே இதைக் காட்டி பிரச்சினையை திசை திருப்புகிறார்கள். இந்தத் திருத்தமும் கூட உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ப்பட்டால் செல்லுமா என்பது கேள்விக்குறி.

இது போன்ற கேள்விகளைத் தவிர்க்கத்தான் நீதிமன்றங்கள் இட ஒதுக்கீட்டில் தலையிடக் கூடாது என்று சில புதுமனு வாதிகள் கோரிக்கை வைக்கிறார்கள். அம்பேதக்ர் பெயரைக் சொல்லிக் கொண்டே அவர் உருவாக்க உதவிய அரசியல் சட்டத்தின் அடிப்படைகளான சம வாய்ப்பு, பாரபட்சமினை, பிறப்படிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது போன்றவற்றை குழி தோண்டிபுதைக்க முயலும் யாரும் எதிர்க்கப்பட வேண்டியவர்கள்.

நீதிமன்றங்கள் பாராளுமன்றம் அரசியல்சட்டத்தின் அடிப்படை அமைப்பினை மாற்ற முடியாது, அதற்கான உரிமை இல்லை என்பதைதெளிவாகச் சொல்லுகின்றன. இட ஒதுக்கீடு ஒரு விதிவிலக்குதான், அதுவே பிரதான விதியாகமுடியாது. ஜாதிய அடிப்படையில் சமூகத்தில்பிளவு உருவாக்கி சிறுபான்மையோர், பிற்பட்ட ஜாதிகள் கூட்டணி கொண்டு பிறர் உரிமைகளைப்பறிக்க நினைக்கும் கும்பல் ஒன்றினை புரிந்து கொள்ள வேண்டும்.1990ல் இருந்த நிலை வேறு, இப்போதைய நிலை வேறு.

இட ஒதுக்கீடு என்ற பெயரில் அரசு எதைச் செய்தாலும் பார்த்துக் கொண்டிருப்பார்கள், அதிக பட்சம்பத்திரிகைகளில் எழுதுவார்கள்,புத்தகம் எழுதுவார்கள் என்று நினைக்க வேண்டாம். இட ஒதுக்கீடு என்ற பெயரில் ஏற்றதாழ்வுகளை அதிகரிக்கும் முயற்சிகளுக்கான எதிர்ப்பு அரசியல் சட்டம் தந்துள்ள உரிமைகளையும், அதன் அடிப்படைக் கோட்பாடுகளையும் பாதுகாக்கும் முயற்சியும்கூட. எனவே இது வெறும் இட ஒதுக்கீடு மட்டும் குறித்த பிரச்சினை அல்ல. தனியார் துறையில் இட ஒதுக்கீடு, நீதிமன்றங்களில் (உயர்,உச்ச) ஜாதி ரீதியாக ஒதுக்கீடு என்று இட ஒதுக்கீட்டினை நீட்டித்து சமூகத்தினை ஜாதி ரீதியாக பிரித்து சிலரை அதிக சமம் ஆக்கும் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும். இவை எல்லாம் அதிகாரம் பிற்பட்ட ஜாதிகளிடம் மட்டுமே என்பதை நிறுவச் செய்யப்படும் முயற்சிகள். அரசு எல்லா இடங்களிலும் தலையிட்டு நாட்டாமை செய்ய வழிவகுக்க உதவும் முயற்சிகள். தனி நபர் உரிமைகள், அரசியல் சட்டம் தரும் உரிமைகளைகுறைக்க, நிராகரிக்க செய்யப்படும் இம்முயற்சிகள் எந்தப் பெயரில், எந்த வடிவில் வந்தாலும்எதிர்க்கப்பட வேண்டியவையே.

1 மறுமொழிகள்:

Blogger Vajra மொழிந்தது...

நல்ல பதிவு,

//
சமூகத்தினை ஜாதி ரீதியாக பிரித்து சிலரை அதிக சமம் ஆக்கும் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும். இவை எல்லாம் அதிகாரம் பிற்பட்ட ஜாதிகளிடம் மட்டுமே என்பதை நிறுவச் செய்யப்படும் முயற்சிகள்.
//

Divide and rule (வெள்ளைக்காரன் செஞ்சது தானே!!) and ruin என்பது இதில் நான் சேர்ப்பது.

How reservations fracture Hindu society

ராஜீவ் ஸ்ரீனிவாசன் கட்டுரை. இவரை ஹிந்து அடிப்படைவாதி என்று முத்திரை குத்துவதற்கு முன்னால் எழுதியதைப் படித்துப் பார்த்தல் நலம்.

நன்றி,
வஜ்ரா ஷங்கர்

4:12 PM  

Post a Comment

<< முகப்பு