சல்மா, பதர் சயீத்

இந்தத் தேர்தலில் சல்மா தோற்றுள்ளார்.பதர் சயீத் வென்றுள்ளார். வென்றுள்ளனர். சல்மா வெற்றி பெறுவார் என்று நினைத்தேன். அவர் மருங்காபுரியில் 2532 வாக்குள் வித்தியாசத்தில் தோற்றுள்ளார்.

சல்மா, பதர் சயீத் இருவருக்கும் எதிராக செய்யப்பட்ட எதிர்மறைப் பிரச்சாரம் அவர்கள் போட்டியிட்ட கட்சியின் கொள்கைகள் என்பதற்கு அப்பாற்பட்டு அவர்கள் மீதான தனி நபர் எதிர்ப்பு பிரச்சாரமாக இருந்திருக்கிறது. இதையும் மீறி பதர் சயீத் வென்றுள்ளார். சல்மாதோற்க இந்த எதிர்மறைப் பிரச்சராமும் ஒரு காரணம் என்று தோன்றுகிறது, இருவரும் இங்கு வரம்பு மீறியவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

சல்மாவின் எழுத்துக்கள் சிலருக்கு அதிர்ச்சிஅளித்திருக்கலாம், அவர் எழுதியது இலக்கியமல்ல என்று கூட சிலர் கருதலாம். ஆனால் இந்தப்பிரச்சாரம் அவரை இஸ்லாத்தின் எதிரியாக, இஸ்லாத்தின் எதிரிகளின் கைக்கூலியாக சித்தரித்துசெய்யபட்டுள்ளது. இது எந்த அளவு கேவலமாக செய்யப்படுள்ளது, கீழ்த்தரமான தனி நபர்தாக்குதலாக என்பதை படிப்பவர்கள் முடிவு செய்து கொள்ளலாம். மத அடிப்படைவாதிகள்எந்தக் காரணங்களுக்காக தஸ்லீம நஸ்ரீனை வெறுக்கிறார்களோ அதே காரணங்களின் அடிப்படையில் சல்மா மீதும் வெறுப்புக் காட்டப்பட்டுள்ளது. சல்மா எழுதுவது இலக்கியமாஇல்லையா என்ற கேள்விக்கு அப்பால் இந்த வெறுப்பு கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது.பெண்கள் எதை எழுதலாம், எப்போது எழுதலாம், எங்கு எழுதலாம் என்பதை நாங்கள்தான்தீர்மானித்து தீர்ப்பளிப்போம் என்று கொக்கரிக்கும் மத அடிப்படைவாதிகளின் எதிர்ப்பினையும்மீறி சல்மா தொடர்ந்து எழுத வேண்டும், செயல்பட வேண்டும். அவர் தேர்தலுக்காக சமரசம்செய்து கொண்டாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. எது எப்படியாயினும் அவர்தொடர்ந்து எழுதுவார், அரசியலிலும் தொடர்வார் என்று எதிர்பார்க்கிறேன்.

பதர் சயீத் மத அடிப்படவாதிகளுக்கு எரிச்சலூட்டுகின்றன. அவர் தலைக்கு முக்காடு அணிவதில்லை என்பதில் துவங்கி அவர் மீதான எதிர்மறைப் பிரச்சாரம் அவரையும் ஒரு மார்க்க நெறிகளை மீறிய பெண்ணாகசித்தரிக்க முயல்கிறது. பொது வாழ்வில் பெண்கள் எத்தனையோ விமர்சனங்களை சந்திக்க நேர்ந்தாலும் இது போன்ற விமர்சனங்களின் ஒரு நோக்கம் பிற பெண்கள் இத்தகைய பெண்களைஆதரிக்கக் கூடாது என்பது. இங்கு தனிப்பட்ட நபர் தவிர, அவரது பெண்ணியமே மார்க்கத்திற்குவிரோதமாக சித்தரிக்கப்படுகிறது. அணியும் உடை கூட விமர்சனத்திற்கு தப்பவில்லை. 'பொது இடங்களில் அநாகரிகமாக உடையணிந்து' என்று விமர்சனம் செய்யப்படுகிறது. இந்த விமர்சனம்வைப்பவர்கள் அவர் வக்பு வாரியத் தலைவராக இருந்து என்ன செய்தார், முறையாக செயல்பட்டாராஇல்லையா என்பதைக் கூறுவதில்லை. பொது வாழ்வில் செயல்படும் பெண்களின் செயல்பாட்டினைவிட அவர்களின் உடைக்கும், அவர்கள் கூறும் கருத்துக்களின் அடிப்படையில் அவர்களை விரோதிகளாக சித்தரிப்பது எளிது. ஜெயலலிதா ஆட்சியில் இவர் கூடுதல் அட்வகேட் ஜெனரலாகஇருந்திருக்கிறார். இப்படி ஒரு முக்கியமான பொறுப்பினை இவருக்கு தரப்பட்டுள்ளதும், வக்புவாரியத்தின் தலைமைப் பொறுப்பில் இவரை ஜெயலலிதா நியமித்ததும் ஜெயலலிதா இவர்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு சான்று என்று கொள்ள முடியும். இத்தகைய எதிர் பிரச்சாரத்தினையும் மீறி இவர் சுமார் 2700 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது. இது அதிமுகவின் வெற்றி மட்டுமல்ல, மத அடிப்படைவாதிகளின் விமர்சனத்திற்கு உள்ளான ஒரு பெண்ணின் வெற்றியும் கூட. அந்த அளவில் இது மகிழச்சிதருகிறது, வரவேற்க்கப்பட வேண்டியது.

8 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

http://tmpolitics.blogspot.com/Saturday, May 06, 2006

த.மு.மு.க.வின் ஓட்டு சல்மாவிற்கா?"

**************************************************************
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்புள்ள வாசகர்களே .,
இந்த தீய பெண்ணியம் பேசும் சீக்கு பிடித்த விபச்சாரி சல்மாவின் எழுத்துக்கள் மொத்த சமுதாய பெண்களின் (முஸ்லிம் - முஸ்லிமல்லாத) பெண்மையையே கேளவிக்குறியாக்குகின்றது. இவளைப்போன்ற சமுதாயத்தை பீடித்திருக்கின்ற நோயைத்தான் கருணாநிதி திமுக வின் முஸ்லிம் வேட்பாளாராக அறிவித்திருக்கின்றார் . இதை ஆமோதித்து த.மு.மு.க வும் அதன் உயர் மட்ட தலைவர்களும் இந்த விபச்சாரிக்கு 'முஸ்லிம் வேட்பாளர்' என்ற அடைமொழியுடன் ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். 6 மாதங்களுக்கு முன் த.மு.மு.க வின் மக்கள் உரிமையில் சமுதாய வரோதியாக , காஃபிராக சித்தரிக்கப்பட்ட இந்த சல்மா இன்று முஸ்லிமானது எப்படி?? இவளுக்காக ஜவாஹிருல்லாவும் , ஹைதர் அலியும் மற்ற பேராசிரியர்களும் ஓடி , ஓடி பிரச்சாரம் செய்வது ஏன்? த.மு.மு.க விளக்குமா ? இவளின் உண்மை முகத்தை அறியாதவர்கள் நம்முள் மிக அதிகம் பேர் இருப்பதால் இங்கு இவளின் இரன்டாம் ஜாமங்களின் கதைக்கு (http://www.tamiloviam.com/rumi/page.asp?folderID=1&ID=48 ) நாகூர் ரூமி ( ruminagore@gmail.com ) அவர்கள் எழுதிய விமர்சனத்தை அப்படியே மறுபதிவு செய்கின்றேன்.

என்றும் அன்புடன்
முகவைதமிழன்

11:21 AM  
Blogger -/பெயரிலி. மொழிந்தது...

உங்களின் இட ஒதுக்கீடு தொடர்பான கருத்துகளோடு ஒத்துப்போகமுடியவில்லை என்பதால், குறுகிய காலத்துக்குப் பிறகு உங்களோடு ஒத்துக்கொள்ள ஒரு விடயம்;-) கேள்விகள் எழுப்பிக்கொள்ளாமல் 'புனித நூல்களை' ஒழுகும் மத அடிப்படைவாதமும் மார்க்சிய அடிப்படைவாதமும் ஒன்றே. சல்மாவுக்கெதிராக நீண்ட நாட்களாக இவ்வகையான தாக்குதல்கள் தொடர்கிறன.

/This is a 'Politically Incorrect' Blog, not a blog that reflects the bland 'left', 'secular' and 'progressive' views and cliches./
அய்யோ ;-))))

1:18 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

முகவைதமிழனின் பிரச்சனை என்னவோ?

1:56 PM  
Blogger Vajra மொழிந்தது...

//
கேள்விகள் எழுப்பிக்கொள்ளாமல் 'புனித நூல்களை' ஒழுகும் மத அடிப்படைவாதமும் மார்க்சிய அடிப்படைவாதமும் ஒன்றே.
//

Arthur Koestler சொன்ன கருத்து...பெயரிலி வாழ்க...!!

ரவி ஸ்ரீனிவாஸ், உங்கள் பதிவுகள் எந்த எழுத்துருவில் எழுதுகிறீர்கள்? ஒரே "க ு ழ ப்ப மா க" "தார ு மாறாகத்" தெரிகின்றன.

ஒரு தலைப்பு வைக்கக் கூடாதா? எல்லாமே Untitled ஆகவே இருக்கிறதே...?!!

நன்றி,
ஷங்கர்.

4:30 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

http://tmpolitics.blogspot.com/

Saturday, May 13, 2006
சல்மாவின் தோல்வி சமூக வெற்றி

பிஸ்மில்லாஹ்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


Assalamu Alaikkum,

Dear Brother Raisudeen,

It is a good reply mail, which reflects all our feelings and questions.

Fighting against SALMA’s writing is more important for our BELOVED PARTY LEADERS…both TMMK and TNTJ…..!

If they do not take any action against RUTHLESS ROKKIAH……….both these parties will be considered as accepting her writings.

For sure TMMK will not rub the shoulder with SALMA at the moment….due to her DMK background influence.

Atleast TNTJ can act on this………to bring the truth out…….make sure SALMA does not write anything in future against ISLAM….and it is OUR OVERALL responsibility to do that…..we just cannot blame TMMK and TNTJ and keep quiet….we can collectively enforce our power against SALMA……..and STOP her writings.

Now we have created awareness about SALMA ….and we should not miss this chance to MAKE her ZERO…..by ALMIGHTY’s Grace and allah has answered our prayers by defeating her in the election….or ELSE it will be more difficult to talk against MLA ROKKIAH alias SALMA

LET US NOT LOOSE THIS CHANCE……….!

Wassalam,

Your Brother, Abdul Rahman


சகோ. அப்துல் ரஹ்மான் அவர்களின் கருத்துக்கு நன்றி , சல்மா என்ற போலி பெண்ணியம் பேசும் அந்தரங்க எழுத்தாளரின் தோல்வி திமுக-வின் தோல்வியாகவோ அதிமுக-வின் வெற்றியாகவோ கருதபடபட மாட்டாது. மாறாக அது இப்பெண்ணால் பாதிக்கப்பட்டு வீறுகொன்டெழுந்த ஒரு சமுதாயத்திற்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகின்றது (நன்றி : செய்தி அலைகள் )

நம்மில் பலர் வலைப்பதிவின் மூலமும் இணைய மின்னஞ்சல் குழுமங்களின் மூலமும் என்ன சாதிக்க இயலும் என்று நினைத்து வந்தனர். சல்மாவின் தோல்வி அதை மாற்றியமைத்துள்ளது. நம்முடைய ஒற்றுமையின் மூலம் இன்னும் பல வெற்றிகளை கொண்டு வரலாம். கருத்துள்ள கட்டுரைகளின் மூலம் உறங்கி கிடக்கும் நமது சமுதாயத்தை விழிப்படையச் செய்யலாம். சல்மா போன்ற இஸ்லாத்தின் எதிரிகளை அடையாளங்காட்டி கவனமடையச் செய்யலாம். இதன் மூலம் நமது சமுதாயத்தின் மத்தியில் திணிக்கப்படும் தீய கருத்துக்களை தோற்கடிக்க முடியும். (இறைவன் நாடினால்).

நான் எழுதியது போல் சல்மாவின் தோல்வியை கண்டு திமுக கவலை கொன்டதாக தெரியவில்லை. மாறாக சங்பரிவார கும்பலும் அமெரிக்க அடிவருடிகளும் சல்மாவின் தோல்வியால் ஆத்திரத்தில் கொக்கரித்து வருகின்றார்கள் இதை நாம் முக்கியமாக கவனித்து பாடம் கற்க வேன்டும். கண்னோட்டம் வலைப்பதிவில் எழுதியுள்ளதை பாருங்களேன்.


""இந்தத் தேர்தலில் சல்மா தோற்றுள்ளார். பதர் சயீத் வென்றுள்ளார். வென்றுள்ளனர். சல்மா வெற்றி பெறுவார் என்று நினைத்தேன். அவர் மருங்காபுரியில் 2532 வாக்குள் வித்தியாசத்தில் தோற்றுள்ளார்.

சல்மா, பதர் சயீத் இருவருக்கும் எதிராக செய்யப்பட்ட எதிர்மறைப் பிரச்சாரம் அவர்கள் போட்டியிட்ட கட்சியின் கொள்கைகள் என்பதற்கு அப்பாற்பட்டு அவர்கள் மீதான தனி நபர் எதிர்ப்பு பிரச்சாரமாக இருந்திருக்கிறது. இதையும் மீறி பதர் சயீத் வென்றுள்ளார். சல்மாதோற்க இந்த எதிர்மறைப் பிரச்சராமும் ஒரு காரணம் என்று தோன்றுகிறது, இருவரும் இங்கு வரம்பு மீறியவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

சல்மாவின் எழுத்துக்கள் சிலருக்கு அதிர்ச்சிஅளித்திருக்கலாம், அவர் எழுதியது இலக்கியமல்ல என்று கூட சிலர் கருதலாம். ஆனால் இந்தப்பிரச்சாரம் அவரை இஸ்லாத்தின் எதிரியாக, இஸ்லாத்தின் எதிரிகளின் கைக்கூலியாக சித்தரித்துசெய்யபட்டுள்ளது. இது எந்த அளவு கேவலமாக செய்யப்படுள்ளது, கீழ்த்தரமான தனி நபர்தாக்குதலாக என்பதை படிப்பவர்கள் முடிவு செய்து கொள்ளலாம். மத அடிப்படைவாதிகள்எந்தக் காரணங்களுக்காக தஸ்லீம நஸ்ரீனை வெறுக்கிறார்களோ அதே காரணங்களின் அடிப்படையில் சல்மா மீதும் வெறுப்புக் காட்டப்பட்டுள்ளது. சல்மா எழுதுவது இலக்கியமாஇல்லையா என்ற கேள்விக்கு அப்பால் இந்த வெறுப்பு கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது.பெண்கள் எதை எழுதலாம், எப்போது எழுதலாம், எங்கு எழுதலாம் என்பதை நாங்கள்தான்தீர்மானித்து தீர்ப்பளிப்போம் என்று கொக்கரிக்கும் மத அடிப்படைவாதிகளின் எதிர்ப்பினையும்மீறி சல்மா தொடர்ந்து எழுத வேண்டும், செயல்பட வேண்டும். அவர் தேர்தலுக்காக சமரசம்செய்து கொண்டாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. எது எப்படியாயினும் அவர்தொடர்ந்து எழுதுவார், அரசியலிலும் தொடர்வார் என்று எதிர்பார்க்கிறேன்.""

~கண்ணோட்டம்~

"கவிஞர் சல்மாவிற்கு எதிராக செய்யப்பட்ட தனி நபர் எதிர்ப்பு பிரச்சாரங்களும் அவரை இஸ்லர்மிய எதிரியாகவும் சமுதாய விரோதியாகவும் (உதாரனம் : விபச்சாரி சல்மாவும் த.மு.மு.க வும் , திமுக வேட்பாளர் சல்மாவும் இஸ்லாமும் - தமிழ் முஸ்லிம்களின் அரசியல் மேடை ) சித்தறித்து செய்யப்பட்ட இறுதி நேர பிரச்சாரங்களும் முஸ்லிம்களின் மணதில் சல்மாவை பற்றிய வெறுப்பை ஏற்படுத்தின" -இதிலிருந்து நாம் அறிய வருவது என்னவென்றால் எதிரிகள் இஸ்லாத்திற்கு எதிராக செயல்படுபவாகளுக்கு எவ்வளவு ஆதரவளிக்கின்றார்கள் என்பதே. இதை நாமும் நமது சமுதாய இயக்கங்களும் உணர வேண்டும். முக்கியமாக "மதம் விரோதத்தை வளர்க்கின்றது" என்று முஸ்லிம் பெயர்களிள் இலக்கியம் பேசித்திரியும் படித்த பருப்புக்கள் உணர்ந்து திருந்த வேண்டும். இனணய மின்னஞ்சல் குழுமங்களிள் பெண் உருப்பினர்களின் கவனத்தை கவர்வதற்காக கவிதை எழுதுகின்றேன் என்றும் பெண்ணியத்திற்கு ஆதரவளிக்கின்றேன் என்றும் இஸ்லாமிய விரோத கருத்தை சுய லாபங்களுக்காக வெளியிட்டு ஹீரோக்கலாக வளம் வரும் இந்த ரோமியோக்கள் தானாக திருந்தவேண்டும். இல்லையேல் இஸ்லாமிய கருத்துக்களை இவர்களுக்கு புரியவைத்து இவர்களை நாம் திருத்த முயற்சி செய்ய வேண்டும். மெத்தப்படித்த மேதாவிகளாக தங்களை நினைத்து கொன்டு "சுதந்திரம்" பேசி வரும் சில பெண் எழுத்தாளர்களுக்கும் நமது சகோதரர்கள் உண்மையை உணர்த்த வேண்டும். அவர்கள் மனதில் இஸ்லாம் கூறும் பெண்ணுரிமைகள் பற்றிய கருத்துக்களை விதைத்து தவறான புரிதல்களிள் இருந்து மீட்க வேண்டும். இல்லையேல் எதிர்காலங்களிள் பல சல்மாக்களையும் மனுஷ்ய புத்திரன்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டிவரும்.

நமது யுத்தம் இத்துடன் நின்று விடக்கூடாது. இஸ்லாத்திற்கு எதிராக கருத்து யுத்தம் நடத்திவரும் ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணுக்கு எதிராக போராட வேன்டும் அவர்களை இந்த சமுதாயத்திற்கு அடையாளப்படுத்துவதன் மூலம் நமது சமுதாயத்தை கவனமாக என்றும் முனைப்புடன் இருக்கசெய்ய வேன்டும்.

இதுவே நாம் நமது சமுதாயத்திற்கு செய்யும் உண்மை சேவகமாகும். முக்கியமாக நமது சமுதாயத்திற்கு நேர்ந்த அவலங்களையும் அநியாயங்களையும் இணையத்தில் நாளைய சமுதாயத்தினருக்கு குறிப்புக்களாக பதிவு செய்யுங்கள். இணையத்தில் இலக்கியம் பேசி வெட்டித்தனமாக திரியும் படித்த பருப்புக்களை ஒதுக்கித்தள்ளி சமூகம் பேச வாருங்கள். இல்லையேல் நாளைய நமது சந்ததிகள் மீது சல்மா போன்றோரின் கருத்துக்கள் இலக்கியமாக திணிக்கப்படுவதற்காகன வாய்ப்புக்கள் அதிகம்.

இறைவன் நாடினால், நாளைய நமது சந்ததியினருக்கு நாம் உண்மையான கருத்துக்களையும் இஸ்லாம் பற்றிய எழுச்சிமிகு சிந்தனைகளையும் நமது காலச்சுவடுகளாக இணையத்தில் பதியவைப்போம். நமக்கு எதிராக தொடுக்கப்பட்டு காலங்காலமாக நடந்து வரும் இந்த இஸ்லாத்திற்கெதிரான கருத்து யுத்தத்தில் இஸ்லாம் வெற்றி பெற நம்மாளான பணிகளை நாம் செய்வோம்.

ஆதரவளித்து கொன்டிருக்கும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நன்றி.. நன்றி..

வஸ்ஸலாம்
சகோதரன் முகவைதமிழன்

6:59 AM  
Blogger -/பெயரிலி. மொழிந்தது...

ஷங்கர்நாராயண்,
நான் சொன்னது இஸ்ரேலிய ஸினோஸ்டுகளுக்கும் பொருந்தும் என்பதையும் கருத்திலே கொள்ளவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

1:26 PM  
Blogger Vajra மொழிந்தது...

//
நான் சொன்னது இஸ்ரேலிய ஸினோஸ்டுகளுக்கும் பொருந்தும் என்பதையும் கருத்திலே கொள்ளவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
//

zionist களைத் தானே சொல்கிறீர்கள். இருக்கலாம்..
Arthur Koestler zionist களை ஏனோ சொல்லவில்லை. நீங்கள் பட்டியலில் புதிதாகச் சேர்திருக்கிறீர்கள்.
Zionist கள் புனித நூல் என்ன? சத்தியமாக எனக்குத் தெரியாது..டோரா (Torah) என்றால் மத குருக்கள் அடிக்கவந்துவிடுவார்...


//
அவரது பெண்ணியமே மார்க்கத்திற்குவிரோதமாக சித்தரிக்கப்படுகிறது.
//

ரவி ஸ்ரீனிவாஸ்,

அவர்களது மார்கத்திற்கு எது தான் விரோதமில்லாதது?

நன்றி,
ஷங்கர்.

1:24 AM  
Blogger -/பெயரிலி. மொழிந்தது...

ஷங்கர் ஸியோனிஸம் மத அடிப்படைவாதமென்றா சொன்னேன்? நியூ யோர்க்கிலே வந்து பாருங்கள் மத வாதத்தின் அடிப்படையிலேயே இஸ்ரேலின் அமைப்பினை எதிர்க்கும் பல யூதர்களைக் காணலாம். (நீங்களும் குறிப்பிட்டிருந்தீர்கள்). நோம் ஸோம்ஸ்கியின் தந்தையும் அதே வகைக்குள்ளே இஸ்ரேல் அமையும்போது எதிர்த்த ஒருவர்தான். போன ஆண்டு சலூன்.கொம்மிலும் ஒரு பழமைவாத யூதரின் கட்டுரை வந்திருந்தது. நான் சொல்லும் 'கேள்வி கேளாமல்' ஒழுகுகிறவர்களே இவர்களும் அடங்கலாம். அதே சந்தர்ப்பத்திலே, ஸியோனியக்கொள்கைகளை அடிப்படையாக்கி ஒழுக நூலொன்று தேவையில்லை. அந்தக்கொள்கையே அடுத்தவரை அழுத்துமளவுக்குக் கெடுதலானதுதான் என்பதே என் கருத்து. (இஸ்ரேலின் அமைப்பினை அடிப்படைவாத கிறீஸ்துவத்தின்வழி முழுக்க முழுக்க ஆதரிக்கின்ற கிறீஸ்துவ அமைப்புகளே இஸ்ரேல் தாங்கி நிற்க பெரிதான காரணம்)

2:00 PM  

Post a Comment

<< முகப்பு