இட ஒதுக்கீடு - இன்றைய பதிவு

ஐஐஎம் களின் மாணவர் சங்கங்கள் இட ஒதுக்கீடு குறித்த முடிவினை விமர்சித்துள்ளன, அதுதேவையற்றது என்று கண்டித்துள்ளன. டைம்ஸ் ஆப் இந்தியாவில் செய்தி வெளியாகியுள்ளது.அவர்கள் பத்திரிகைகளுக்கு விடுத்த அறிக்கையிம் பிரதியை இணையத்தில் இட முயற்சிக்கிறேன்.ஆறு ஐஐஎம்களின் மாணவர் சங்கங்களின் தலைவர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை இது.

வீரமணி அமெரிக்காவிலும் இட ஒதுக்கீடு இருக்கிறது. காண்டி ரைஸ் அதால் பயன் பெற்றார்என்று பேசியிருக்கிறார். அமெரிக்காவில் ஜாதி ரீதியான இட ஒதுக்கீடு இல்லை. இருப்பது பல்வேறு தரப்பாருக்கும் உரிய இடம் கிடைக்க வகை செய்யும் திட்டம். இதில் பெண்களுக்கும்இடம் உண்டு. ஜாதி ரீதியாகவே இட ஒதுக்கீடு கோரும் வீரமணியோ அல்லது இட ஒதுக்கீட்டிற்குஆதரவாக குரல் எழுப்புவோரோ பெண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று எழுப்பவில்லையே,அது ஏன். லாலு, முலாயம், வீரமணி மற்றும் ஜாதி ரீதியாக இட ஒதுக்கீடு கோருவோர் பெண்கள்இட ஒதுக்கீடு தங்களின் ஆதிக்கத்தினை பாதிக்கும் என்பதை அறிந்தே ஜாதி ஜாதி என்றுகூறுகின்றனர். முதல் பிற்பட்டோர் கமிஷன் பெண்களுக்கும் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்றுகூறியது. அரசு அதன் அறிக்கையை ஏற்கவில்லை. இட ஒதுக்கீட்டிற்காக போராடியவர்கள்பிற்பட்ட ஜாதிகளுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடினார்கள். பெண்களுக்கானஇட ஒதுக்கீடு வெறும் கனவானது. இன்றும் கூட மத ரீதியாக இட ஒதுக்கீடு கோருகிறார்களேஒழிய பெண்களுக்கு இட ஒதுக்கீடு கோருவதில்லையே, ஏன். ஏனென்றால் எல்லாப் பெண்களுக்கும்இட ஒதுக்கீடு என்று வந்துவிட்டால், பெண்களும் சம வாய்ப்பு பெற்று விடுவார்கள், ஆணாதிக்கம் அடிப்பட்டுவிடும். அதானால் தான் ஜாதியை முன் வைக்கிறார்கள். எத்தனை ஆண்டுகளாக சட்டசபைகளிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு திட்டம் வெறும்பேச்சளவில் இருக்கிறது. அதில் உள் இட ஒதுக்கீடு கேட்டு அதை தடுத்திருப்பது யார், யார்-பிற்பட்ட ஜாதிகளின் தலைவர்களாக தங்களைக் காட்டிக் கொள்வோர் என் உள் ஒதுக்கீட்டினைகோருகிறார்கள். அவர்களுக்கு பெண்கள் மூன்றில் ஒரு பங்கு இடம் பெறுவது அச்சம் தருகிறது.27% ஒதுக்கீட்டிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் அதற்கு ஏன் தரப்படுவதில்லை.இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி என்றால் பெண்களுக்கு என்று வரும் போது அது ஏன்தவிர்க்கப்படுகிறது அல்லது மறைமுகமாக எதிர்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஒராண்டு என்று காலக்கெடு விதித்திருந்தாலும் அதற்குள் என்ன நடக்கும்என்பதைப் பார்க்கலாம். அதிக நிதியை இப்போது ஒதுக்கும் அரசு இட ஒதுக்கீடு இல்லாமல்இடங்களைக் கூட்டியிருக்கலாமே. மூன்று , நான்கு ஆண்டுகளில் வசதிகளையும் அதிகப்படுத்தி,இடங்களையும் கூட்டியிருக்கலாமே.ஐஐடி,ஐஐம் போன்றவற்றில் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டினை மொத்தமாக நிராகரிக்க வேண்டும். இடங்களைக் கூட்டுவது, அதுவும் இப்படிஅவசர அவசரமாகக் கூட்டுவது சரியல்ல. அது ஒரு கண் துடைப்பு.

தமிழ் நாட்டில் மத ரீதியான சிறுபான்மையினருக்கும் இட ஒதுக்கீடு என்று அறிவிக்கப்பட்டு:ள்ளது.இதை எப்படி செய்கிறார்கள் என்று பார்க்கலாம். கிறித்துவர்களை எந்த அடிப்படையில் கல்வி,மற்றும் சமூக ரீதியாகப் பின் தங்கியவர்கள் என்று ஒட்டுமொத்தமாக கூறுவார்கள் என்று தெரியவில்லை.கல்வி ரீதியாக அவர்கள் பின் தங்கியவர்கள் கிடையாது, சமூக ரீதியில் அவர்க்ள்எப்படி பின் தங்கியவர்கள் ஆவர்கள்.
அவர்கள் சமூகத்தில் எந்த விதத்திலும் பார்பட்சமாக நடத்தப்படுவதில்லை.கிறிஸ்துவர்களும் பின் தங்கியவர்கள் என்றால் அனைத்து இந்து ஜாதிகளும்பின் தங்கியவை என்று அறிவிப்பது பொருத்தமாக இருக்கும்.

சிறுபான்மையினருக்கும் இட ஒதுக்கீடு என்றால் தமிழக மக்கள் தொகையில் கிட்டதட்ட 90%பின் தங்கிய வகுப்புகளைச் சேர்ந்தவர்கள். 10% பேர்தான் முற்பட்டோர். அதாவது 90% மக்கள்கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பிற்பட்டவர்கள், அரசின் இட ஒதுக்கீட்டின் படி.அப்படியானால் தமிழ் நாட்டை மிகவும் பின் தங்கிய மாநிலம் என்று அறிவித்து விடலாமே.

ஒரு வலைப்பதிவில் கடந்த இரண்டு நாட்களாக என்னுடைய பின்னூட்டங்க்ள் இடம் பெறவில்லை.நான் பின்னூட்டம் இட்ட பின் இடப்பட்டவை இடம் பெற்றுள்ளன.ஏன் இடம் பெறவில்லை என்றுஇட்ட பின்னூட்டங்களுக்கு இதுவரை பதில் இல்லை.இன்னும் இரண்டு நாட்களுக்குள் இதற்குசரியான விடை கிடைக்காவிட்டால் இனி அந்த வலைப்பதிவில் பின்னூட்டம் இடப் போவதில்லை.

6 மறுமொழிகள்:

Blogger Boston Bala மொழிந்தது...

----வீரமணி அமெரிக்காவிலும் இட ஒதுக்கீடு இருக்கிறது----

இது குறித்து இணையத்தில் நிறையவே விவரங்கள் கிடைக்கும். சிறு வியாபாரிகளுக்கு வருமான வரி சலுகை, பெண்களை முதலாளியாகக் கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு மிக எளிதில் தாராளமான கடன் கொள்கை + வருமான வரிச் சலுகை, சிறுபான்மையினரின் நிறுவனங்களுக்கு துவக்கத்தில் வருமான வரி சலுகை போன்றவை உண்டு.

பள்ளிக்கூட வகுப்புகளில், கல்லூரிகளில் முடிந்த மட்டும் பரவலாக சிறுபான்மையினரை நிரவி அமைக்கிறார்கள். கல்லூரியில் கூட, இந்தியர்கள் சிறுபான்மையினர் என்பதால் சீட் கிடைக்க வாய்ப்புண்டு. அதுவே, எம்.ஐ.டி. போன்ற ஐவி லீக் கல்லூரியில் ஆசியர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பதால் லத்தீனோக்களும் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களும் நிறைந்த பள்ளிகளுக்கு சென்று தங்கள் கல்லூரிக்கு வருமாறு அழைப்பு விடுப்பதுண்டு.

இனம், மொழி போன்றவை கல்லூரியில் சேரும் வாசற்படிக்குக் கொண்டு சென்றாலும், என்னுடைய பார்வையில் அவற்றுக்கு நிகராக கீழ்க்கண்டவை மிகுந்த முக்கியத்துவமானது:

* பள்ளியில் கிடைத்த கிரேட்
* SAT, போன்ற பொது நுழைவுத் தேர்வு மதிப்பெண்
* பெற்றோர் அந்தக் கல்லூரியில் படித்தவர்களா?

* விளையாட்டுத் தேர்ச்சி, சாதனைகள்
* அமெரிக்காவின் எந்த மாகாணத்தில் இருந்து வருகிறார்?

* எந்தப் பூர்வகுடியை சேர்ந்தவர் (caucasian ஆகவே இருந்தாலும் இத்தாலியனா, அயர்லாந்தா, என்று பரவலான சேர்க்கைக்கு முயற்சிப்பார்கள்; ஆப்பிரிக்க அமெரிக்கர் என்றால் சோமாலியா, சியரா லியோன்...?)
* தொண்டு நிறுவனங்களில் பங்களிப்பு

* பொழுதுபோக்காக, வாழ்க்கையை ரசிப்பதற்காக என்ன செய்கிறார்?
* கல்லூரியின் புரவலர்களுடன் ஆன தொடர்புகள்

* கல்லூரியில் சேர்வதற்காக எழுதும் நீள் கட்டுரையின் தரம்
* ரெஃபரன்ஸ் - எந்தப் பெருந்தலைகளிடம் இருந்து தன்னுடைய திறத்தை மதிப்பிட்டு சான்றிதழ் கட்டுரைப் பெற்றிருக்கிறார்? அவர்கள் மதிப்பீட்டில் இவர் எந்த திறமையைக் கொண்டிருக்கிறார்? அது இந்தக் கல்லூரியின் திறங்களுடன் ஒத்துப் போகிறதா?

* எவ்வளவு சீக்கிரம் அப்ளிகேஷன் போட்டார்?
* எத்தனை முறை நேரடியாக கல்லூரிக்கு வருகை தந்து, தேர்ந்தெடுக்கும் அதிகாரிகளுடன் உரையாடினார்? அவருக்கு இந்தக் கல்லூரியில் சேர்வது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எப்படி நேர்மையாக நம்மிடம் வெளிப்படுத்தினார்?

இவை அனைத்தும் முக்கியம். கல்லூரிக்கு கல்லூரி வித்தியாசப்பட்டாலும், ஹை ஸ்கூல் முடிப்பதற்கு இரண்டாண்டு இருக்கும்போதே வேட்டையைத் துவக்கி, தங்கள் பல்கலை தேடலை ஐந்துக்குள் அடக்கிக் கொண்டு, அவை ஐந்திற்கும் நேரடியாக வருகை புரிந்து, சேர்வதற்கு முயற்சிக்கிறார்கள்.

இட ஒதுக்கீடு என்று இவ்வளவையும் ஒற்றைப் பரிமாணத்தில் அடக்கி விட முடியாது.


பதிவுக்குப் பொருத்தமில்லாத ஆலோசனைகள்:
1. வேறு டெம்பிளேட்டுக்கு மாறி விடலாம். உங்கள் பதிவின் தலைப்புகள் (நோ டைட்டில்) என்றுதான் எங்கும் தெரிகிறது. (நீங்கள் தலைப்புக் கொடுத்திருந்தாலும், தலைப்புகள் வருவதில்லை.)

2. வோர்ட் வெரிஃபிகேஷன், மட்டுறுத்தல் இரண்டும் ஒருங்கே தேவை இல்லையே?! மட்டுறுத்தல் மட்டுமே போதுமானது என்று நினைக்கிறேன் :-)

11:09 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

Boston Bala
Thanks.I have read about it
and know how it works.The system
in US is comprehensive and parents
have to do lot of 'home work' for
collge admissions.Nobody gives you
admission just like that without
assessing you.It is a process by itself.We can take some aspects
of it and try in India.

I would like to change the
template.In fact as I want to
start another blog exclusively
for reservations issue, i need
two different templates.Any
suggestions on this can be
posted here or emailed to me.
I will try to remove word verification.

11:21 AM  
Blogger Boston Bala மொழிந்தது...

-----i need
two different templates----

தமிழ்மணம் தயவில்......

16 வயதினிலே
நாயகன்
3
4
5
6
7
8
9

11:36 AM  
Blogger PKS மொழிந்தது...

//´Õ ŨÄôÀ¾¢Å¢ø ¸¼ó¾ þÃñÎ ¿¡ð¸Ç¡¸ ±ýÛ¨¼Â À¢ýëð¼íìû þ¼õ ¦ÀÈÅ¢ø¨Ä.¿¡ý À¢ýëð¼õ þð¼ À¢ý þ¼ôÀð¼¨Å þ¼õ ¦ÀüÚûÇÉ.²ý þ¼õ ¦ÀÈÅ¢ø¨Ä ±ýÚþð¼ À¢ýëð¼í¸ÙìÌ þÐŨà À¾¢ø þø¨Ä.þýÛõ þÃñÎ ¿¡ð¸ÙìÌû þ¾üÌºÃ¢Â¡É Å¢¨¼ ¸¢¨¼ì¸¡Å¢ð¼¡ø þÉ¢ «ó¾ ŨÄôÀ¾¢Å¢ø À¢ýëð¼õ þ¼ô §À¡Å¾¢ø¨Ä.//

Hi Ravi,

I dont know whom you mean here. I dont want to know either. I have not written anything now on reservation during this reservation debate. I am sure you know that too. However, I have been accused of so many things now-a-days. So, I just want to register here that I have checked my blog and email and I dont have any pending feedbacks from you. You also know it. However, to clear my name from any "suspicious lists" that others generate themselves, I request you to kindly publish this.

Thanks and regards, PK Sivakumar

11:38 AM  
Anonymous CT மொழிந்தது...

Hi ravi,
As Mr.Bala said there are lot of things in US and what he says is true.I studied here in US and also I am working as a Adjunct faculty in a university.
From what I know , I never come across a situation where people say that we didn't get admission because we are from certain race.Also universities encourage diversities, it doesn't mean seats are reserved... Any one who is elligible always gets through.Not like India.
I am against the fact that reservation can bring up the state of the people.In the whole world all the countries have rich and poor(India is not the only country), there is discrimination...It is very important that government should come up with a game plan where all the players should be equally strong and should play in the same field with same rules.Government doesn't have guts to encourage these people to earn their own bread.

--CT
P.S (Please delete)
Don't care if others don't publish your reviews.It only shows that they lost the war. You did a good thing by telling that here......I don't want to see you get hurted.There is long way to go......

7:08 PM  
Blogger Vajra மொழிந்தது...

ravi srinivaas, I guess the problem with your title not picked up by thamizmanam is you have not pasted the "karuvippattai" code in proper place. please check it.

sankar.

p.s., this is not relevant to the post so please do not publish.

8:01 AM  

Post a Comment

<< முகப்பு