இட ஒதுக்கீடு இன்றைய பதிவு

அரசு அமைத்த அறிவுக் கமிஷனின் இரண்டு உறுப்பினர்கள் விலகிவிட்டனர். 8 உறுப்பினர்களில்இருவர் மட்டுமே இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக இருக்கின்றனர்.இருவர் விலகிய பின் கமிஷனின்உறுப்பினர் எண்ணிக்கை ஆறாக குறைந்து விட்டது. விலகி இருக்கும் இருவரும் கூறியிருக்கும்காரணங்கள் முக்கியமானவை. இட ஒதுக்கீட்டினை ஜாதி அடிப்படையில் செய்வதை இருவரும்ஏற்கவில்லை. அந்தேரே பெத்ல் இந்தியாவின் தலை சிறந்த் சமூகவியலாளர்களில் ஒருவர்.சமூக சமச்சீர்யின்மை குறித்து எழுதியிருக்கிறார். பானு மேத்தா பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருந்தவர்.கமிஷனின் தலைவர் சாம் பித்ரோதா 80களில் இந்தியாவின்தகவல் தொலைதொடர்பு புரட்சிக்கு அடிகோலியவர். இட ஒதுக்கீட்டினை ஆதரிக்கும்புஷ்பா பார்கவாவும் அதை நிரந்தரத் தீர்வாக, கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை. இட ஒதுக்கீட்டினை ஒரு மீள்பார்வை செய்வது அவசியம் என்பதைக் கூட அர்ஜூன் சிங்ஏற்கத் தயாரில்லை.

தலித் முரசில் ரவீந்தர நாத் என்பவர் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாகவழக்கமான வாதங்களையே வைத்துள்ளார். தமிழ் நாட்டில் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்செய்திருக்கிறார்கள் தங்கள் நலன்களுக்கு பாதிப்பு வரும் என்று அவர்கள் கருதிய போதெல்லாம்.மருத்துவக் கல்லூரிகளை தனியார் ஆரம்பித்தது குறித்து நானறிந்த வரையில் இரண்டு முறைவேலை செய்திருக்கிறார்கள். குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்யப்பட்ட ஒருவர் மரணமடைந்ததால் அரசு மருத்துவர்களின் பொறுப்பு குறித்து விதிகளை கொண்டுவரக் கூடும் என்று தெரிந்த உடன் மருத்துவர்கள் எதிர்த்து வேலை நிறுத்தம் செய்தனர். தனியார் மருத்துவ நிலையங்களை அரசு நெறிப்படுத்த திட்டமிடுகிறது என்ற அறிவிப்பு வந்தவுடன் கடும் எதிர்ப்பு வந்தது, மருத்துவர்களிடமிருந்து. இவைதான் இவர்களுக்கு சமூக அக்கறைக்கு சில எடுத்துக்காட்டுக்கள்.Correct me, If I am wrong.

தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டால் பிற்பட்ட ஜாதியினர்தான் மருத்துவக் கல்லூரிகளில் மிகப்பெரும்பான்மையான இடங்களைப் பிடிக்கின்றனர்.அப்படிப்பட்டவர்கள் இட ஒதுக்கீட்டினைஆதரிப்பது சுய நலம்தானே ஒழிய சமூக நீதி குறித்த அக்கறையினால் அல்ல. இங்கு சமூகநீதி என்பது இட ஒதுக்கீடு என்று அர்த்தப்படுத்தப்பட்ட பின் இந்த ஆதரவினை நியாயப்படுத்துவதா கடினம்.

அர்ஜூன் சிங்குடனான இந்த உரையாடலைப் படியுங்கள். அவரால் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடிவதில்லை, எது சரியான தகவல் என்பதைக் கூட அறுதியிட்டுக் கூற முடியவில்லை. இன்றையதினமணியில் வெளியாயிருக்கும் நீரஜா செளத்ரியின் கட்டுரையையும் படியுங்கள்.

இரண்டு பதிவுகளை இட்டேன். இட ஒதுக்கீடு ஆதரவாளர்கள் அறிவார்ந்த விவாதத்திற்குதயாராக இருப்பார்கள் என்று நினைத்தேன். அவர்களால் அதைச் செய்ய முடியாது என்பதற்கு ஒரு உதாரணம் இது. சுந்தரமூர்த்தி நான் என்ன எழுதியிருக்கிறேன்என்பதை புரிந்து கொள்ளாமல் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறேன் என்கிறார்.

அரசியல் சட்டம் இணையத்தில் இருக்கிறது. அதன் ஷரத்துக்களைப் புரிந்து கொள்ள நீதிமன்றங்கள், குறிப்பாக உச்ச நீதிமன்றம் அவற்றை இப்படி அர்த்தப்படுத்திக் கொண்டுள்ளன,அரசியல் சட்டத்தின் ஆதார அம்சங்கள் என்ன, அரசியல் சட்டம் முன்னிறுத்தும் விழுமியங்கள்என்ன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் குருடர்கள் யானையைப்பார்த்த கதை போலாகி விடும். சுருக்கமாகச் சொன்னால் இட ஒதுக்கீடு ஒரு விதிவிலக்கு,அது விதியல்ல, கட்டுப்படுத்தும் ஆதார விதியாகவோ, கோட்பாடாகவோ இருக்க முடியாது.

பாராளுமன்றம் அரசியல சட்டத்தினை அடிப்படையை மாற்ற முடியாது, அதற்கான உரிமைஇல்லை என்று கேசவானந்த பாரதி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது.அதாவது இட ஒதுக்கீட்டினைப் பொறுத்த வரை அந்த விதி விலக்கினை விதியாக மாற்றமுயல்வது அரசியல் சட்டத்தின் அடிப்படையை மாற்றுவதாக அமையும்.

பாராளுமன்றத்திற்குஅதற்கு அதிகாரம் இல்லை. இதற்கு காரணம் அண்ணல் அம்பேத்கர். அவர் முன்னின்றுஉருவாக்கிய அரசியல் சட்டம்தான் பாராளுமன்றத்திற்கு வரம்பற்ற அதிகாரம் தரவில்லை,உச்ச நீதிமன்றத்திற்கு முக்கியமான அதிகாரங்களையும், பொறுப்புகளையும் தந்துள்ளது.
எனவே திட்டுவதானால் அவரைத் திட்டுங்கள்.

5 மறுமொழிகள்:

Blogger ravi srinivas மொழிந்தது...

As I am unable to read comments
posted in this blog from my email
account there is a delay in
reading and moderating them.

11:25 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

Dear Ravi

I vehemently disagreed with you on so many other issues. But in this issue, I could not agree anything more with you. If the Govt implements this reservation policy, by any means can the Supreme court question that move if approached by any affected party?

Your posts are very ionformative and make lot of sense. Dont worry about personal attacks, go ahead with your articles. More in next

Regards
Rajan

9:42 PM  
Blogger srishiv மொழிந்தது...

அருமையான ஒரு பதிவு நண்பரே, ஏற்கனவே இருக்கும் இட ஒதுக்கீட்டை முதலில் நடைமுறை படுத்தச்சொல்லுங்கள் ஐயா, அப்புறம் புதிதாக இட ஒதுக்கீட்டினைக்கொடுப்பது பற்றி யோசிக்கலாம், இன்று இந்த அரசு தமிழக அளவிலேயே இடஒதுக்கீட்டை எந்த லட்சணத்தில் தந்துகொண்டிருக்கின்றது என்று கீழ்காணும் சுட்டியைக்கண்டால் விளங்குமென்று நினைக்கின்றேன், நன்றி
ஸ்ரீ...
http://www.keetru.com/literature/essays/sevagan.html

10:15 PM  
Blogger மு. சுந்தரமூர்த்தி மொழிந்தது...

ரவி,
//இரண்டு பதிவுகளை இட்டேன். இட ஒதுக்கீடு ஆதரவாளர்கள் அறிவார்ந்த விவாதத்திற்குதயாராக இருப்பார்கள் என்று நினைத்தேன். அவர்களால் அதைச் செய்ய முடியாது என்பதற்கு ஒரு உதாரணம் இது. சுந்தரமூர்த்தி நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதை புரிந்து கொள்ளாமல் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறேன் என்கிறார்//

இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீங்கள் முன்வைக்கும் ஒவ்வொரு வாதத்திற்கும், ஆதரவு நிலையிலிருந்து என்னால் எதிர்வாதம் வைக்கமுடியும். ஒரு நாளுக்கு இரண்டு பதிவுகள் எழுதக்கூடிய சொகுசு எனக்கில்லை. எனக்கிருக்கும் நேர நெருக்கடிக்கு வாரத்திற்கு ஒன்று மிஞ்சிப்போனால் இரண்டு பதிவுகள் எழுத முடிந்தாலே பெரிய காரியம். நான் எழுதும், எழுதப்போகும் பதிவுகளில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக பல திசைகளிலிருந்து வரும் வாதங்களுக்கு பொதுவான எதிர்வாதமாக இருக்குமேயன்றி உங்கள் தனியொருவரை எதிர்க்கும் செயலாக இருக்காது.

//அரசியல் சட்டம் இணையத்தில் இருக்கிறது. அதன் ஷரத்துக்களைப் புரிந்து கொள்ள நீதிமன்றங்கள், குறிப்பாக உச்ச நீதிமன்றம் அவற்றை இப்படி அர்த்தப்படுத்திக் கொண்டுள்ளன,அரசியல் சட்டத்தின் ஆதார அம்சங்கள் என்ன, அரசியல் சட்டம் முன்னிறுத்தும் விழுமியங்கள்என்ன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் குருடர்கள் யானையைப்பார்த்த கதை போலாகி விடும். சுருக்கமாகச் சொன்னால் இட ஒதுக்கீடு ஒரு விதிவிலக்கு,அது விதியல்ல, கட்டுப்படுத்தும் ஆதார விதியாகவோ, கோட்பாடாகவோ இருக்க முடியாது.//

முந்தைய ஒரு பதிவில், 93வது அரசியல் சட்டத் திருத்தத்தினை ஆங்கிலத்தில் கொடுத்துவிட்டு அதற்கு கீழே எழுதியிருந்த உங்கள் "இதில் பிற்பட்ட ஜாதி என்ற சொல் இல்லை" என்ற வரியினை மேற்காட்டி இருந்தேன். உங்கள் அகராதியில் "socially and educationally backward classes" என்பதன் பொருள் என்ன?

//அரசியல் சட்டம் இணையத்தில் இருக்கிறது. அதன் ஷரத்துக்களைப் புரிந்து கொள்ள நீதிமன்றங்கள், குறிப்பாக உச்ச நீதிமன்றம் அவற்றை இப்படி அர்த்தப்படுத்திக் கொண்டுள்ளன,அரசியல் சட்டத்தின் ஆதார அம்சங்கள் என்ன, அரசியல் சட்டம் முன்னிறுத்தும் விழுமியங்கள்என்ன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் குருடர்கள் யானையைப்பார்த்த கதை போலாகி விடும்.//

அரசியல் சட்டம் கல்லூரிக்கல்வி கற்ற சராசரி மனிதர்களால் புரிந்துகொள்ளும் மொழியில் தான் எழுதப்பட்டுள்ளது. நீங்கள் மேற்கோள் காட்டியுள்ள Indian Express கட்டுரையில் OBC என்பதைப் பற்றிய மட்டையடிகள் தான் செய்யப்பட்டுள்ளது. OBC என்பது அரசியல் சொல்லாடலில் பயன்படுத்தப்படுகிற வார்த்தை, அதாவது அட்டவணை ஜாதிகள், அட்டவணை பழங்குடியினர் அல்லாத பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்கிற அர்த்தத்தில். இதே மட்டையடியை Harijan, Girijan, Dalit என்று அரசியல் சொல்லாடலில் பயன்படுத்தப்படும் சொற்களையும் வைத்து செய்யலாம். இந்த சொற்களும் அரசியல் சட்டத்தில் எங்கும் பயன்படுத்தவில்லை. நான் குறிப்பிட்ட நான்கு அரசியல் பிரிவுகளில் உள்ள "socially and educationally backward classes" என்கிற சொற்றொடருக்கு (அட்டவணை ஜாதிகள், அட்டவணைப் பழங்குடியினர் அல்லாத) பிற பின்தங்கிய வகுப்பினர் (OBC) என்பது அர்ஜுன் சிங்கின் அல்லது பிற இடஒதுக்கீட்டு ஆதரவாளர்களின் திரிப்பு என்றால் அதற்கு உங்கள் அகராதியிலும், நீதிமான்களின் பேரகராதிகளிலும் என்ன பொருள் என்று விளக்குங்களேன்.

Indian Express மேற்கோள் காட்டும் வழக்குகள் கர்நாடகம்/மாகாராஷ்டிர மாநிலங்களில் சிறுபான்மை/தனியார் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள். நடுவண் அரசு நிறுவனங்களில் OBCக்கு இடஒதுக்கீடு கோரி அல்லது அதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்குகள் அல்ல. அப்படிப்பட்ட வழக்குகளில் உச்ச நீதிமன்றம் பின் தங்கிய சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பின் தங்கிய வகுப்பினரை அங்கீகரித்துள்ளது.. அடிக்கடி குறிப்பிடப்படும் creamy layer ஐ வரையறுத்த Indira Sahany vs. Union of India வழக்கிலும் OBC ஐ அங்கீகரித்துள்ளது.

மற்றபடி யானையைப் பார்த்த குருடராக இருப்பதில் பிரச்சினையேதுமில்லை. கண்பார்வையுள்ளவர்கள் பார்க்க மறுத்து கண்களை மூடிக்கொள்வதைவிட தொட்டுப் பார்த்து புரிந்துகொள்ள முயல்வது அவ்வளவு மோசமில்லை.

//சுருக்கமாகச் சொன்னால் இட ஒதுக்கீடு ஒரு விதிவிலக்கு,அது விதியல்ல, கட்டுப்படுத்தும் ஆதார விதியாகவோ, கோட்பாடாகவோ இருக்க முடியாது.//

என்ன சொல்லவருகிறீர்கள் என்று புரியவில்லை. எது விதி, எது விதிவிலக்கு, எதெல்லாம் கட்டுப்படுத்தும் ஆதாரவிதி, கோட்பாடு என்பதை அவரவர் வசதிக்கேற்ப திரித்துக்கொள்ளலாம்.

10:50 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

I thank Sundaramoorthy.I will respond to Sundaramoorthy's
comments either as a post in this
blog or as an article.

1:01 PM  

Post a Comment

<< முகப்பு