தேர்தல் கணிப்புகள்-கூட்டணி ஆட்சி நோக்கி?

இப்போது வெளியாகியுள்ள கணிப்புகள் திமுக கூட்டணி பெரும் வெற்றி பெறும் என்று கூறிகின்றன.ஆனால் திமுகவிற்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்கிறது இந்து-ஐபின் கணிப்பு.இது விஜயகாந்த் கட்சி 10% ஒட்டுக்களைப் பெறும் என்கிறது. மே 11 அன்றுஇவையெல்லாம் எந்த அளவு உண்மை என்பது தெரிந்து விடும்.

விஜயகாந்த் கட்சி 10% ஒட்டுக்களைபெறாவிட்டாலும் 6% ஒட்டுக்களைப் பெற்றால் கூட அது சாதனைதான். கூட்டணி அரசு ஏற்படுமாஇல்லை பிற கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு தர திமுக ஆட்சி அமைக்குமா என்பது தெரியவில்லை. தேர்தல் கூட்டணிக்கும் ஆளும் கூட்டணிக்கும் வேறுபாடு உண்டு. ஆட்சியில்பங்கேற்காவிட்டாலும் ஆதரவு காண்பித்து வேண்டியதைப் பெறும் திறன் பெற்ற கட்சிகள்எப்படி நடந்து கொள்ளும் என்பதைப் பார்க்க வேண்டும். சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் ஆட்சியில் பங்கு பெறவில்லை, ஆனால் பாஜக கூட்டணியில் அதற்கு முக்கியமானஇடம் இருந்தது, பெரும் செல்வாக்கு இருந்தது. இதை பயன்படுத்தி அவர் ஆந்திராவிற்குமத்திய அரசிடமிருந்து நிதி உதவி, நிவாரண உதவிகளை பெருமளவில் பெற்றார். தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. அதற்கு தேர்தலில் பாமகவை விட அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்புக்கள் அதிகம்.வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் காங்கிரஸ் இதன் மூலம் மத்திய அரசுக்கு திமுக நெருக்கடிகள்
தர முடியாதபடி செய்யலாம். இந்த வாய்ப்பினை காங்கிரஸ் புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொண்டு ஐந்து ஆண்டுகளில் கட்சியினை வளர்த்தால் நல்லது.

மேற்கு வங்கம், கேரளம் போல் தமிழ் நாட்டிலும் கூட்டணி ஆட்சி என்பது திராவிட கட்சிகளின்மேலாண்மையினை கட்டுப்படுத்த/குறைக்க உதவும். அந்த விதத்தில் கூட்டணி ஆட்சி வரவேற்கப்பட வேண்டியதே. கலைஞர் எவ்வளவு லாவகமாக இதைக் கையாள்கிறார், எதிர்காலத்திலும் கூட்டணி ஆட்சிக்கு திமுக தயாராக இருக்குமா என்று பல கேள்விகள்இருக்கின்றன. ஐந்து ஆண்டுகள் கூட்டணி ஆட்சி தொடர்ந்தால் தமிழக அரசியல் வரலாற்றில்அது ஒரு புதிய திருப்பு முனையாக இருக்கும். 2006 தேர்தல் ஒரு புதிய துவக்கமாகஇருக்கும் என்றே தோன்றுகிறது.

1 மறுமொழிகள்:

Blogger சின்ன பிள்ளை மொழிந்தது...

"விஜயகாந்த் கட்சி 10% ஒட்டுக்களைபெறாவிட்டாலும் 6% ஒட்டுக்களைப் பெற்றால் கூட அது சாதனைதான்"
இல்லைங்க, இனியும் ஐந்து வருசம் கட்சியை நடத்தி சென்றால்தாங்க சாதனை.
முதல் தேர்தலில் சொல்லிக் கொள்ளும்படியான ஸீட்களை பெறவில்லை என்றால் சிவாஜி,பாக்யராஜ், ராஜேந்தர் கட்சிகளின் கதிதான் ஏற்படும்.ஒரு MLA கூட சட்டசபையில் இல்லாமல் ஐந்து வருடம் கைகாசை போட்டு கட்சியை உயிரோடு வைத்திருப்பது
ரொம்ப ரொம்ப கஷ்டம்ங்க.

12:52 AM  

Post a Comment

<< முகப்பு