நன்றிகள்

தேன்கூட்டின் இன்றைய வலைப்பதிவில் கண்ணோட்டம் குறித்தும், என்னைக் குறித்தும்எழுதப்பட்டுள்ளது.பரிந்துரைத்த வாசகருக்கும், அக்குறிப்பினை எழுதியவ்ருக்கும், வெளியிட்டதேன்கூட்டிற்கும் என் நன்றிகள்.

ரீடிபில் இருந்த பதிவினைப் படிப்பதில் சிரமம் ஏற்பட்டதால்பிளாக்கருக்கு மாறினேன். கண்ணோட்டம் அப்பதிவின் தொடர்ச்சிதான். அங்கு உள்ளவற்றைமறுபடியும் இங்கு பதிய விருப்பம் இல்லாததால் அதை அப்படியே விட்டு வைத்துள்ளேன். சிந்தனைஎன்ற பதிவில் தொடர்ந்து பதிவுகளை இடவில்லை. மேய்ச்சல் என்ற பெயரில் கண்ணோட்டம் பதிவில்சுட்டிகளை குறிப்பிட்டு வருகிறேன். இது தவிர கட்டுரைகள்,நூல்கள் குறித்து தனிப்பதிவுகளும்இட்டு வருகிறேன். சிந்தனை வலைப்பதிவினை தூசி தட்டி அதில் அதிகம் இட முயற்சிக்கிறேன்.

2 மறுமொழிகள்:

Blogger ravi srinivas மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

8:00 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

மூன்றாண்டுகளாகத் தமிழ்ப்பதிவுகளில் எழுதி வருபவர். அவ்வப்போது தமிழிணையத்தில் இருந்து ஒதுங்குவதாக எத்தனித்தாலும் தொடர்ச்சியாக முக்கியமான கட்டுரைகளை, ஜர்னல்களை அறிமுகம் செய்கிறார். சமூக அறிவியல், மானுடவியல், சூழலியல் போன்ற தமிழில் அதிகம் காணக் கிடைக்காத துறைகளில் தன் கண்ணோட்டத்தைக் கொடுக்கிறார். மூத்த தமிழ் இலக்கியவாதிகளுடனான சந்திப்புகளையும் நெருங்கியத் தொடர்புகளையும் பட்டியலிடாமல், இஸங்களைப் போட்டுத் தாக்காமல், அடிப்படைக் கேள்விகளை இலகுவாக எழுப்புபவர். பல இணையதளங்களை மேய்ந்து தொடர்புடையச் சுட்டிகளை வழங்குபவர்.
ஆழமாக பிரச்சினையின் ஆணிவேர் வரை அலசி சரித்திரத் தகவல்களுடன் சிந்தையைக் கிளறி, விவாதத்தைக் கிளப்பி, தகவல்களை நிரப்பி, செய்திகளைத் தெளிய வைப்பது இவருடைய தனிச்சிறப்பு.

வெளிப்படையாகப் பேசுவதால் சில சமயம் ஒத்த கருத்துள்ளவர்களையே மிரளவும் வைப்பார். எளிமையாக அனைத்து வலைப்பதிவிலும் நறுக் வெளிப்பாடுகள் மூலம் ஆச்சரியப்படவும் வைப்பார். உலகப் பயணங்கள், கேசரி உருவான கதை, காதலரின் முத்தம் என்று ஜனரஞ்சகமும் யதார்த்தமாய் தென்படும்.

Rhizomes & nodes மற்றும் சிந்தனையில் தேக்க நிலை காணப்பட்டாலும் கண்ணோட்டத்தில் கலக்கி வருகிறார், தமிழிணையத்தின் தவிர்க்க இயலாத வலைப்பதிவர், ரவி ஸ்ரீனிவாஸ். படிக்க:
கண்ணோட்டம்- KANNOTTAM

8:00 AM  

Post a Comment

<< முகப்பு