இந்திய கம்யுனிஸ்ட் கட்சி(மண்டல்)

இந்தப் பெயரில் ஒரு கம்யுனிஸ்ட் கட்சி இல்லை. ஆனால் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி(மார்க்ஸிஸ்ட்) யை இப்படி அழைப்பது பொருந்தும் என நினைக்கிறேன். இட ஒதுக்கீட்டிற்குஆதரவாக தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையையும் இவர்கள்ஆதரிப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இவர்கள்என்னதான் மண்டலிஸ்ட்களாக மாறினாலும் பிற்பட்டோர் ஒட்டு வங்கியின் ஒரு சிறு பகுதி கூடஇவர்களுக்குக் கிடைக்காது. மாறாக இன்று ஒரளவேனும் ஆதரவாக உள்ள மத்திய வர்க்கத்தின்ஒரு பகுதி இவர்க்ளை ஆதரிப்பதை நிறுத்தி விடும் அல்லது குறைத்துக் கொண்டுவிடும். இன்றைய நிலையில் இட ஒதுக்கீட்டினை கண்மூடித்தனமாக ஆதரிப்பதன் மூலம் இடதுசாரிகள்ஒரு பெருந்தவற்றை இழைக்கின்றனர். இதன் விளைவுகளை அவர்கள் விரைவில் உணர்வார்கள்.

2 மறுமொழிகள்:

Blogger மா சிவகுமார் மொழிந்தது...

ஐயா,

மண்டல் கம்யூனிஸ்டு கட்சி மட்டுமின்றி இந்தியாவின் எல்லா கட்சிகளும் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறார்கள். பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை அறியாத, மேல் தட்டு மக்களில் ஒரு சிலர் மட்டுமே, தொலைக்காட்சி கூடங்களிலும், தில்லி சாலைகளிலும், தமது உரத்த எதிர்ப்பைக் காட்டுகிறார்கள்.

11:38 AM  
Blogger மு மாலிக் மொழிந்தது...

பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீடு தவிர்க்கப் படவேண்டும். உங்கள் விரிவான (வேறொரு பதிவில் கூறியிருந்த) கட்டுரையைப் படித்தேன். நமது இந்திய சமூகத்தில் மக்கள் மத்தியில் ஏற்றத் தாழ்வு உள்ளது மறுக்க முடியாத ஒன்றுதான். ஆனால் அந்த ஏற்றத் தாழ்வுகள் பாரபட்சமான கலாச்சாரத்தினால் நிகழ்வது. அந்த பாரபட்சமான கலாச்சாரங்கள் சட்டத்திற்குப் புறம்பானவை. அவைகளைப் பிரச்சாரங்களைக் கொண்டும் விழிப்புணர்வினை ஏற்படுத்தியுமே ஒழிக்கவேண்டும். பாரபட்சமான கலாச்சாரத்தினால் ஏற்படும் ஏற்றத் தாழ்வினை பாரபட்சமான சட்டத்தினைக் கொண்டு களைய முற்பட்டால், அப்பாவிகளும் பாதிக்கப்படும் கொடுமையுள்ளது. கலாச்சாரத்தினாலும் அப்பாவிகள் பாதிக்கப்பட்டாலும், சட்டத்தினால் பாதிக்கப் படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது.

இடஒதுக்கீட்டிற்காகப் போராடுபவர்களும், அதனை எதிர்த்துப் போராடுபவர்களும் தன் முயற்சிகளை பிரச்சனையின் மூலத்தினை நோக்கித் திருப்பினால் சிறப்பானதாக இருக்கும்.

(1) சமூகத்திலிருக்கும் ஏற்றத்தாழ்வினைப் பாதுகாக்கும் சட்ட அம்சங்களை நீக்குதல். மக்களின் சாதிகளை பதிய வைக்க அனுமதிக்காமல் இருத்தல்.

(2) சாதிகளின் பெயரையோ, 'குடும்ப பெயர்'களையோ பெயருக்குப் பின்னால் அனுமதிக்காமல் இருத்தல்.

(3) குழந்தைகளுக்குப் பெயரிடும்போது அவர்களது சாதி வெளிப்படாதவாறு அனைவரையும் அவரவர்களின் தாய்மொழியிலிருந்து அல்லது அவர்கள் வாழும் மாநிலத்தின் மொழியிருந்து பெயரினைத் தேர்ந்தெடுக்கக் கட்டாயப்படுத்துவது (சட்டத்தின் மூலமாக). உதாரணத்திற்கு, நடராசன், அப்துல்லாஹ், தாம்சன் போன்ற பெயர்களில் அவர்களின் மதம் வெளிப்படுகிறது. மேலும் கருப்பையா, சாரங்கபானி போன்ற பெயர்களில் அவர்களின் சாதி சிறிதளவாவது வெளிப்படுகிறது. தமிழக மக்கள் அனைவரும் சாதி மத்திற்கு அப்பாற்பட்ட பெயர்களான கருப்பையா, முத்தழகு, பாரி இளம்வழுதி, பெருவழுதி போன்ற தமிழ் பெயர்களை முயற்சிக்கலாம்.

(4) பிரான்ஸினைப் பின்பற்றி, ஒருவரது பிரிவினை வெளிப்படுத்தும் எந்தவித அடையாளங்களையும் அணிய அனுமதி மறுக்கவேண்டும். ஃபிரான்ஸ் ஓரளவிற்கு அதனை அனுமதிக்கிறது. உதாரணத்திற்கு தனது சட்டைக்குள் அவர்கள் எதனையும் அணியலாம். ஆனால் நாம் அதையும் தடை செய்யவேண்டும். அந்த அடையளங்கள் இருப்பது தெரிந்துவிட்டால் அவர்கள் தனது இனத்தவரை அடையாளங்கண்டு ஒருசார்பாக நடந்து கொள்ள வாய்ப்பு உண்டு. உதாரணத்திற்கு நெற்றியில் எந்த அடையாளத்தையும் அணியாதிருத்தல், கழுத்தில் எந்த விதமான தாயத்து, முதலிய அடையாளங்களை அணியாதிருத்தல், பூணூல் அணிதல், ஆண்களுக்கு காது குத்துதல் முதலிய அடையாளங்களையும் தவிர்த்தல், பெண்கள் பர்தா அணியாதிருத்தல், மெட்டி, தாலி, கரியமணி முதலியவைகளையும் தவிர்த்தல் போன்றவைகளை சட்டத்தினைக் கொண்டு அமலுக்குக் கொண்டுவரலாம்.

(5) ஒருவர் பேசும் பேச்சிலும் எந்தவிதமான சாதி, மத, தொனியுடன் கூடிய பேச்சு வழக்கினை அனுமதிக்காமல் இருக்கலாம். உதாரணத்திற்கு ஐயர் பாஷை, உர்து தொனியுடன் கூடிய தமிழ், திருநெல்வேலி தமிழ், கொங்கு தொனி தமிழ், மதுரை தொனி தமிழ் ஆகியவைகளைத் தவிர்த்தல். (மேலும் தெரியாதவர்களை யெல்லாம், தனது ஜாதி என்ற காரனத்திற்காக, மாமி, மாமா என்று அழைத்தலையும் தவிர்த்தல்) போன்றவைகளையும் அமலுக்குக் கொண்டுவரலாம். (அவரவர்கள் வீட்டில், விருந்தினர்கள் மற்றும் நண்பர்கள் வந்திராத போது தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்குள் எப்படியும் பேசிக் கொள்ள உரிமையுண்டு).

(6) மேலும் ஒருவர் பகிரங்கமாக தன் வழிபாட்டு முறைகளைத் தான் வேலை செய்யும் இடங்கள், பள்ளிகள் ஆகிய இடங்களில் வெளிப் படுத்துதலைத் தவிர்த்தல், அது சம்மதமான சடங்குளை அனைவரும் அறியும் வண்ணம் செய்யாதிருத்தல் ஆகியவைகளையும் அமலுக்குக் கொண்டு வரலாம்.

(7) மேல் கண்ட, தடை செய்யத் தக்க செயல்களை எனது பிறப்புரிமை, அடிப்படை உரிமை என கூறுபவர்களுக்கு கடுமையான தண்டணைகளை விதித்தல்.

போன்ற சீர்திருத்தங்கள் உதவலாம்.

1:29 PM  

Post a Comment

<< முகப்பு