பிராமணர்கள், பிராமண சங்கம், தேர்தல்

தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 3% இருக்கும் பிராமணர்களில் எத்தனை பேர் ஒட்டுப் போடுவார்கள், அவர்களது ஒட்டுக்கள் தேர்தலில் எத்தகைய பாதிப்பினை ஏற்படுத்தும். 3% ஒட்டுகள் ஒட்டு மொத்தமாக ஒரு அணிக்கோ அல்லது கட்சிககோ கிடைத்தால் அது சில இடங்களில் தீர்மானகரமாக இருக்கலாம். ஆனால் பிராமணர்களின் ஒட்டு அப்படி ஒட்டுமொத்தமாக யாருக்காவது ஆதரவாக விழும் என்பது சந்தேகமே. தமிழ்நாடு பிராமணர் சங்கம் வலுவானசங்கம் அல்ல. பிற பல ஜாதிகளுடன் ஒப்பிடுகையில் பிராமணர்கள் ஜாதி ரீதியாக ஒரு அமைப்பினுள் திரண்டுவிடவில்லை. பிராமண சங்கமும் பிற ஜாதிச் சங்களுடன் ஒப்பிடுகையில் ஒரு பெரிய அமைப்பல்ல. எனவே அது தேர்தலில் யாரை ஆதரித்தாலும் அதனால் பெரிய தாக்கத்தினைஏற்படுத்த முடியாது. இந்நிலையில் அது பா.ஜ.கவை ஆதரிக்க முடிவு செய்திருப்பது பா.ஜ,கவிற்கு பெரும்பலனைத் தந்துவிடாது.

ஜெயெந்திரர் கைதினை பிராமணர் சங்கம் கண்டித்திருந்தாலும்தேர்தலில் ஜெயலலிதாவிற்கே ஆதரவு தெரிவித்திருக்க வேண்டும்.ஏனெனில் ஒரு பார்பனத்தி ஒருதிராவிட இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பதும், இரண்டு முறை முதல்வாரகியிருப்பதும்பார்ப்பனர்களின் எதிரியான வீரமணி போன்றவர்களுக்கு எரிச்சல் தருகிறது. இதே எரிச்சல் கருணாநிதிக்கும் இருக்கிறது. ஏனென்றால் அவர் முதல்வாராகவும், ஸ்டாலின் முதல்வராகவும் இருக்கும் பெரிய தடை ஜெயலலிதா. எம்.ஜி.ஆர் எழுப்பிய ஒட்டு வங்கியை அவர் இன்னும் கட்டிக்காத்து வருகிறார்.அதிமுக் பிளவு பட்டாலும், மீண்டும் வலிமையுடன் அவர் தலைமையில் எழுந்துவிட்டது. அதிமுக இப்படி பலத்துடன் இருப்பது திமுக வின் ஆட்சிக்கனவுகளுக்கு எப்போதுமே ஒரு சவால்தான். எம்.ஜி.ஆருக்கு எதிராக எழுப்பபப்ட்ட மலையாளி என்ற வாதமும் எடுபடவில்லை, ஜெயலலிதா ஒரு பார்ப்பனர் என்ற வாதமும் எடுபடவில்லை. 1989 தேர்தலில் திமுக ஜெயிக்க காரணம் அதிமுக அப்போது இரு அணிகளாக பிரிந்திருந்ததே.

1967 ல் திமுக ஆட்சிக்கு வந்த பின் தமிழக அரசியலில் பிராமணர் செல்வாக்கு குறைந்துவிட்டது,1970 களில் அது கிட்டதட்ட பூஜ்யம் என்ற நிலைக்கு வந்தது. 3% பிராமணர்கள் சட்டமன்றத்தில்அதிக பட்சம் ஒன்று அல்லது இரண்டு இடங்களையே பெற முடிந்தது. சில தேர்தல்களில் அதுகூட இல்லை என்று நினைக்கிறேன். 1980களில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை கட்சியில் சேர்த்து,அவரை முன்னிறுத்தினார். அவர் கருணாநிதிக்கு சரியான போட்டியாக இருப்பார், தனக்குப் பின் கட்சியை முன்னின்று நடத்துவார் என்ற எதிர்பார்ப்பு அவருக்கு இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது.

அந்த விதத்தில் ஜெயலலிதா கருணாநிதிக்கு சரியான போட்டியாளர்தான். மேலும் அவர் தன் ஆன்மிக ஈடுபாடுகளை பொதுவில் வைத்தவர். மதச்சார்பற்ற என்றால் இந்து மதத்தினை கிண்டல் செய்வது, பிராமணர்களை இழிவாகப் பேசுவது, சிறுபான்மையினருடன் கொஞ்சிக் குலாவுவது என்ற வரையறையை நிராகரித்தவர்.அது மட்டுமல்ல குடுமி வைத்திருக்கும் ஒருவருக்கு தேர்தலில் வாய்ப்பளித்து அவரை சட்டமன்ற உறுப்பினரும் ஆக்கியவர். இத்தனைக்குப் பிறகும் மக்கள் அவரைவெறுக்கவில்லை. தேர்தலில் வெற்றி தோல்விகள் இருந்தாலும் அவரது இடத்திற்கு இன்னொருவர்வரமுடியவில்லை, கட்சியும் வலுவிழக்கவில்லை. எம்.ஜி.ஆர் அதிகரித்த 50% இட ஒதுக்கீட்டினால் பிராமணர்கள் பாதிக்கப்பட்டாலும் எம்.ஜி.ஆருக்கு பிரமாண வெறுப்பு கிடையாது. அண்டேயினை அமைச்சராக வைத்திருந்தார். ஒருவர் எத்தகைய திறமைசாலியாக இருந்தாலும் அவர் பிராமணர் என்றால் அவரை சட்ட சபை உறுப்பினர் ஆக்கவோ அல்லது அமைச்சரவையில் இடம் தரவோ கருணாநிதி துணிய மாட்டார். அதே சமயம் தனிப்பட்ட முறையில் தேசிகாச்சாரியர்( யோகம் பயிற்றுவிக்க), மருத்துவர் ராமமூர்த்தி(நரம்பியல்) போன்ற பிராமணரின் நிபுணத்துவத்தினை பயன்படுத்த அவர் தயங்கமாட்டார்.கருணாநிதி ஜெயேந்திரரை கைது செய்வதை தவிர்த்திருப்பார். ஏனெனில் அவர் பா.ஜ.கவை பகைத்துக்கொள்ள விரும்பமாட்டார். ஜெயலலிதா அப்படி இல்லை.அவருக்கு தான் செய்வது சரி என்று தோன்றினால் துணிந்து இறங்கி விடுவார். விளைவுகளை பின்னர் சமாளித்துக் கொள்ளலாம் என்று தைரியமாக இருப்பார். எனவே ஜெயேந்திரர் கைதினை மட்டும்வைத்து ஜெயலலிதாவை எடை போட்டு பிராமண சங்கம் முடிவெடுத்திருப்பது தவறு. ஜெயலலிதா பிராமணர்களுக்கென்று தனியாக எதையும் செய்ய மாட்டார். அவரால் நன்மை இல்லாவிட்டாலும்தீமை இராது. கருணாநிதியைப் பொறுத்தவரை அவ்வாறு கூற முடியாது, அவரது தேவைகளுக்கு ஒரு சில பிராமணர்களைப் பயன்படுத்திக் கொண்டாலும், ஒட்டுமொத்த பிராமணர்களை அவர் நண்பர்களாகக் கருதியதில்லை. மாறாக அவர்கள் எதிரானவர்கள் என்ற எண்ணமே அவரிடம்இருக்கிறது. பேட்டியில் அவர் கூறியுள்ள கருத்திலும் இதுதான் வெளிப்படுகிறது.

Q: Who is supporting Jayalalitha?

A: Brahmins of this state want her to come back. They are solidly behind her.

Q: Where are the Brahmins? Most of them have left the state and are living aboard?

A: The Brahmins still have an influence and they think if Jayalalitha comes back they will rule.

இது எவ்வளவு அபத்தமானது என்பதை விளக்கத் தேவையில்லை.பிராமணர்கள் தவிர வேறு யாருமே ஜெயலலிதாவை ஆதரிக்கவில்லையா. வேறு யாரையும் குறிப்பிடாமல் பிராமணர்களை மட்டும் குறிப்பிடுவதேன்.ஜெ மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் எப்படி ஆள முடியும்.100% பிராமண ஆதரவு இருந்தாலும் ஜெ 69% இட ஒதுக்கீட்டினை நிராகரிக்கமாட்டார், அவர் அவர்களது ஆதரவை நம்பி இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். இருந்தும் கருணாநிதி இப்படி கூறியிருப்பது அவர் அடி மனதில் பிராமண வெறுப்பு இருப்பதைக் காட்டுகிறது. ஒருவேளை தேர்தலில் தோற்றால் பிராமணர்கள் சதி செய்து தோற்கடித்து விட்டார்கள் என்று அறிக்கை விட நினைக்கிறாரோ.

தமிழ்நாட்டில் பா.ஜ.க பெரிய கட்சி அல்ல. அதை பிராமணர் சங்கம் ஆதரித்தாலும் அதானல்பா.ஜ.க ஒரு தொகுதியிலாவது வெற்றி பெறும் என்று சொல்ல முடியாது. மாறாக ஜெயலலிதாவைஆதரித்தால் தேர்தலில் வெற்றியோ, தோல்வியோ ஒரு பிராமணப் பெண்ணுக்கு உதவினோம் என்பதாவது மிஞ்சும்.

எல்லா ஜாதிச் சங்களும் எப்படி செயல்படுகின்றன- தங்கள் ஜாதிக்கு சலுகைவேண்டும், தங்களுக்கு சட்டப்பேரவையில்,அமைச்சரவையில் இடம் பெற வேண்டும், இதை யார்ஏற்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவு என்ற ரீதியில்தான் செயல்படுகின்றன. பிராமண சங்கம் அப்படி எதையும் கூறத் தேவையில்லை. தங்களை கருணாநிதியும், வீரமணியும் எதிர்மறை சக்திகளாக நினைக்கும் போது ஜெயலலிதா பார்ப்பனர் ,ஆன்மிகத்தில் ஈடுபாடுள்ளவர், எங்களுக்கு தீமை செய்யமாட்டார், குறைந்தபட்சம் எங்களை இழிவாகப் பேசமாட்டார் , ஆகையால் அதிமுகஅணிக்கே எங்கள் ஒட்டு என்று தீர்மானித்திருக்க வேண்டும். அதுதான் ச்ரியான முடிவாக இருந்திருக்கும்.

என்னைக் கேட்டால் பிராமண சங்கம் அரசியல் நிலைப்படுகள் எடுப்பதை விட பிராமண சமூகத்தின்முன்னேற்றத்தில் அதிக அக்கறை காண்பிக்கலாம், கல்வி நிறுவனங்கள் அமைப்பது, ஏழை பிராமணர்களுக்கு உதவுவது, இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்படும் பிற ஜாதியினருடன் கூட்டாகஇட ஒதுக்கீட்டிற்கு எதிராகப் போராடுவது போன்றவற்றிற்கு முன்னுரிமை தர வேண்டும்.

ஜாதி சங்கங்களுக்குத் தேவை இல்லை என்பது என் கருத்து. ஆனால் அனைத்து ஜாதிகளும் சங்கங்கள்,அமைப்புகள் வைத்து தங்களை ஒரு சக்தியாக காட்டிக் கொள்ள முயலும் போது,நேரடியாகவும்,மறைமுகமாகவும் அரசியலில் ஈடுபடும் போது இந்த ஜாதி மட்டும் சங்கம் வைத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்ல முடியாது. பிராமணர்கள் இட ஒதுக்கீடு போன்றவற்றால் பாதிப்படையும் போது தங்கள் நலன்களை பாதுக்காக்க, உரிமைகளை முன்னிறுத்த ஜாதி அமைப்பு தேவையாகிறது. ஜாதி அமைப்பினை நிராகரிப்பவர்களைக் கூட நீ இந்த ஜாதியில் பிறந்ததால் உனக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்று அரசு கூறும் போது நான் ஜாதி அமைப்பில் சேர மாட்டேன், அதே சமயம் ஜாதி அமைப்பு கூடாது என்றும் கூற மாட்டேன் என்ற நிலைப்பாடே சரியான நிலைப்பாடாக இருக்க முடியும்.

மேலும் அரசு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டிற்கு இடமேயில்லாமல், வெறும் ஜாதியடைப்படையில் மட்டும் அதை செய்யும் போது பாதிக்கப்படும், பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளோருக்கு உதவ ஜாதி சங்கம் போன்றவை தேவையாகிறது. அரசு பிற்பட்டோர் நலனுக்காக துறை அமைத்து பல உதவிகளைச் செய்கிறது. ஆனால் முன்னேறிய ஜாதிகளில் உள்ளஏழைகளுக்கு அது போல் உதவ முன் வருவதில்லை. இத்தகைய சூழலில் விரும்பாவிட்டாலும் ஜாதிசங்கத்திற்கு தேவை ஏற்பட்டு விடுகிறது. எனவே பிராமணர்கள் ஜாதி சங்கம் அமைப்பதில் சில் நியாயங்கள் இருக்கின்றன.

தமிழ்நாடு பிராமண சங்கம் தாங்கள் அனைவரையும் சமம் என்று கருதுகிறோம், பிறப்பு, பாலின அடிப்படையிலான உயர்வு தாழ்வுகளில் எங்களுக்கு உடன்பாடில்லை என்று அறிவிக்க வேண்டும்.அதே போல் பிற ஜாதியினர் அர்ச்சகர் ஆவதில், வேதம் போன்றவற்றை கற்பதில், சடங்குகளைசெய்விப்பதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றும் நிலைப்பாடு எடுக்க வேண்டும். கடந்தகாலத்தில் பிறப்பினடிப்படையில் செய்யப்பட்ட பாகுபாடுகளை நாங்கள் நியாயப்படுத்த வில்லைஎன்றும், அதனால் பாதிக்கப்பட்டவர்களிடம் எங்கள் முன்னோர் செய்த தவறுகளுக்காக மன்னிப்புகேட்கிறோம், அனைத்து ஜாதி,மதங்களுடன் சுமுகமான உறவினையும், நல்லிணக்கத்தினையும்நாங்கள் விரும்புகிறோம் என்று அறிவித்து விட வேண்டும். இப்படி செய்தால் பிறர் பிராமணர் சங்கம்தங்கள் எதிரி அல்ல என்பதை உணர்வார்கள். பார்ப்பன எதிர்ப்பு அரசியலும் வலுவிழக்க இது உதவும்.

பிற்குறிப்புக்கள்

1,ஒரு முதல்வர் வெளிப்படையாக தன் மதப்பற்றை வெளிப்படுத்தலாமா , அது சரியா என்ற கேள்வியை வேறொரு சந்தர்ப்பத்தில் அலசுகிறேன். ஜெயின் இந்த்துவ சார்பை, கொள்கைகளை நான் விமர்சித்திருக்கிறேன். உதாரணமாக கோயில்களில் மிருகங்களை பலியிடல். இது குறித்துதிண்ணையில் எழுதியிருப்பதால் அதை இங்கு குறிப்பிட விரும்பவில்லை.

2,சிலர் பிராமணர்கள் ஆதிக்க ஜாதியினர், அவர்கள் ஜாதி சங்கம் வைப்பது சரியல்ல என்று கருதலாம். நான் அவ்வாறு கருதவில்லை. தமிழ்நாட்டில் பிராமணர்கள் ஆதிக்க ஜாதியினர் அல்ல என்பதே என் கருத்து.

3,, தமிழ்நாடு பிராமண சங்கம் எடுத்திருக்கும் முடிவுகளை நான் ஆதரிக்கிறேன் என்று பொருள்படுத்த வேண்டாம்.அவர்கள் என்னென்ன நிலைப்பாடுகள் எடுத்திருக்கிறார்கள் என்பது எனக்கு சரியாகத் தெரியாது.

18 மறுமொழிகள்:

Blogger ravi srinivas மொழிந்தது...

test 1 2 3

1:05 PM  
Blogger SK மொழிந்தது...

வழக்கம் போலவே, சற்றும் நடுநிலை குறையாத தங்களின் கணிப்பு, நியாயத்தின் பால் சார்ந்திருப்பினும், பிறர் உணரவேண்டி அளித்திருக்கும் ஆலோசனைகள் சற்று மிகையோ எனக் கருதுகிறேன்.

ஆலோசனைகள் தவறில்லை.

ஆனால், தான் முன்னேறும் வழியை விட்டு விட்டு, பிராமணரை குறைத்துப் பேசியே தான் வளர வேண்டும் என எண்ணுபவர் இடையே, இவை எடுபடுமா என்பது கேள்விக்குறியே!

தமிழகத்தில் "ஆதிக்க சக்தி அல்ல" என்பது மட்டுமல்ல;
மற்றவர்களுடன் ஒத்துப் போகவே பிராமணன் விரும்புகிறான் என்பதே உண்மை.

பிராமணர்கள் என்றால், உடனே ஜெயேந்திரரைப் பின்பற்றுபவர் மட்டுமே என்ற மாயத்தோற்றத்தைப் பற்றியும் எழுதியிருக்கலாம்.

ஐயர், ஐயங்கார், காஞ்சி, சிருங்கேரி, வடகலை, தென்கலை, மத்வராயர் எனப் பல உட்பிரிவுகள் இருப்பதும், ஒவ்வொருவருக்கும் தனிக்கருத்து, கோட்பாடுகள் இருப்பதும் அறிவீர்கள் என நம்புகிறேன்.

எழுத்துக்கு நன்றி!

1:27 PM  
Blogger குழலி / Kuzhali மொழிந்தது...

ரவி உயிர் பலி பற்றிய திண்ணை சுட்டி முடிந்தால் தாருங்கள் , தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை, நன்றி

9:34 PM  
Blogger Bharateeyamodernprince மொழிந்தது...

இன்றுள்ள சூழலில், பாஜகவும், காங்கிரஸ் மாதிரிதான் என்பதை வடநாட்டு பிராமணர்கள் புரிந்துகொண்டு, சிலர் சமாஜ்வாதி கட்சிக்கும், ஏன் சிலர், பகுஜன் சமாஜ் கட்சிக்கும் ஓட்டுப்போட்டதை 2004 பாராளுமன்றத் தேர்தலில் பார்த்தோம்.

தமிழக பிராமணர், காலம் முழுவதும், திமுகவைத் திட்டித்தீர்த்துவந்தாலும், வேறு சூழ்நிலையின்றி, 1989 தேர்தலில், கலைஞரை ஆதரித்ததும் ஞாபகத்தில் கொள்ளவேண்டும்.

தவிர, 1996 சட்டமன்றத் தேர்தலில், தாம்பிராஸ் எந்த முடிவெடுத்த போதிலும், தமிழக பிராமணர்களில் பெரும்பான்மையோர், தமாகவிற்கும் திமுகவிற்கும் தான் ஓட்டுப் போட்டார்கள்.

கும்பகோணத்திலேயேகூட இராம. இராமநாதனுக்குத்தான் பிராமணர்கள் அத்தனைபேரும் ஒட்டுமொத்தமாக ஓட்டுப் போடுவார்கள் என்று சொல்லமுடியாது. காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட்டுகளின் கூட்டணியுடன் களம் காணும் திமுகவை ஒரு பிராமண எதிர்ப்புச் சக்தியாகப் பிராமணர்கள் பார்ப்பதில்லை.

இருந்தாலும், இந்தத் தேர்தல் 2006ல், பிராமணர் சங்கம், பாஜகவை ஆதரித்தது இயல்பான ஒன்று.

பொதுவாகவே, உயர்ஜாதி என்றழைக்கப்படும் வகுப்பினர் மத்தியில் பாஜக-நேசம், ஜனசங்கம் காலந்தொட்டே இருந்துவந்தாலும், மண்டல் பரிந்துரையின் மீதெழுந்த வாதவிவாத சமயத்தில் அது உறுதியானது.

தமிழக பிராமணர்கள் மத்தியில், அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டுவதில் சிரத்தை, முஸ்லீம்-எதிர்ப்பு உணர்வு, மதவாத கண்ணோட்டம், இட ஒதுக்கீட்டுக் கொள்கையினால் பாதிப்பு ஏற்பட்ட உணர்வு... போன்ற எதுவுமே இல்லாமற் போனாலும்கூட, தமிழக பிராமணர்களைப் பொறுத்தவரை, பாஜகவை ஆதரிக்கவேண்டிய அவசியம் துளிகூட இல்லாத சூழலிலும், தாம்பிராஸ் பாஜகவைத்தான் ஆதரிக்க முடியும். காரணம், blood is thicker than water தான்.

ஜனா கிருஷ்ணமூர்த்தி, இல. கணேசன், ஹெச். ராஜா, சுகுமாரன் நம்பியார், இராம.கோபாலன்...போன்றவர்கள், பிராமணர்களுக்கு ஒன்றும் பெரிதாக நல்லது செய்ய முடியாதென்றாலும், எந்தச் சூழ்நிலையிலும் சாதி பெயரைச் சொல்லித் திட்டமாட்டார்கள் என்ற ஒரு அற்ப ஆசைதான்.

நீங்களே சொல்லுங்கள், ஊரே திரண்டு வந்து, பார்ப்பானை உதைக்கணும் என்று சொன்னால்கூட, பாஜகவினர் அப்படிச் சொல்வார்களா? அம்பேத்கரை ஏற்றுக் கொண்டாலும் இன்றுவரை, எந்தச் சூழலிலும், பெரியாரை அங்கீகரிக்காதவர்கள் சங்பரிவாரினர்.

ஒருவகையில், இந்தப் பிராமண எதிர்ப்பு, பிராமணருக்கு நன்மை பயத்துள்ளது. தாம்பிராஸால் முடியாத காரியத்தை அது செய்துள்ளது. இந்த பிராமண எதிர்ப்பு என்பது, ஸ்மார்த்தர், வடமர், வாத்திமர், பிரஹசரணம், வடகலை, தெங்கலை, சோழியர், தெலுங்கர், மாத்வர்..........அது, இது என்ற எண்ணிலடங்கா உட்பிரிவினரை ஒரே குடையின் கீழ் கொண்டுவரச் செய்துள்ளது; காலங்காலமாக பிராமணருள் தாழ்ந்தவராகக் கருதப்பட்டு வந்த சிவாச்சாரியார், கோயில் குருக்கள்...போன்றோரையும், `ப்ராமின்ஸ்’ என்ற அடையாள வட்டதிற்குள் கொண்டுவந்துள்ளது.

ஒரு சமயம், நான் ஒரு ‘ஐயர்’ நண்பரோடு சாதி, பிராமணர், கட்சிகள், என அரசியல் சூழல் பற்றி ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கும் போது, அவர் சொன்னார் - ‘எங்களவாள்ளாம் பெரிசா ஒண்ணும் எதிர்பார்க்கிறதில்லை; பொருளாதார அடிப்படையிலோ சாதி அடிப்படையிலோ எந்த இடஒதுக்கீடும் எங்களுக்கு வேண்டாம் ஸ்வாமி; கல்வி, வேலைவாய்பிற்கான வழியெல்லாம்கூட நாங்களே பார்த்துக்கறோம். சாதிபேரைச் சொல்லித் திட்டாமலிருந்தால் அது போதும்” என்று அழாத குறையாகச் சொன்னார்.

‘உள்ளதுக்குள்ளேயே, கவர்ச்சியான ஜாதி எது தெரியுமா?’ என்று கேட்டுக்கொண்டு, அதற்கு, ‘ப்ரா’மின்ஸ் என்று பதில் சொல்லி வெள்ளெந்தியாய் சிரிக்கும் நகர்புற பிராமண இளைஞர்/இளைஞிகள் மத்தியில் ஜாதி பற்றிய பிடிப்பு அவ்வளவாக இல்லாமற் போனாலும், எப்போதாவது இட ஒதுக்கீடு பற்றி செய்திவரும் போது ‘நாடு குட்டிச் சுவராப் போயிண்டிருக்கு’ என்று லேசாக டென்ஷன் ஆகி சமாதானம் ஆகாமலே அமைதியாகிறார்கள் சிலர். பாவம், அவர்களால் வேறு என்னதான் செய்யமுடியும்...

11:21 AM  
Blogger Prabu Karthik மொழிந்தது...

>>தமிழ்நாடு பிராமண சங்கம் தாங்கள் அனைவரையும் சமம் என்று கருதுகிறோம், பிறப்பு, பாலின அடிப்படையிலான உயர்வு தாழ்வுகளில் எங்களுக்கு உடன்பாடில்லை என்று அறிவிக்க வேண்டும்.

idhai mudalile pannunga ppa..
oru non-brahmin aana ennoda adharavu kooda ungalukku dhaan...

aprom innoru vishayam..

indha jeyendrar matterai vechu vote podadheenga...

nobody knows what was the murky deal between jeyendrar and jayalalitha...

ungalukku jayalalitha voda 5 yr rule pidichirundha vote podunga..

adai vittu avar barhmin nu base panni ellam support panninaal, aprom mitha jaadhiyum idhey yardstick base panninaal velaiku avadhu...

12:17 AM  
Blogger Kanagavelan மொழிந்தது...

//மாறாக ஜெயலலிதாவைஆதரித்தால் தேர்தலில் வெற்றியோ, தோல்வியோ ஒரு பிராமணப் பெண்ணுக்கு உதவினோம் என்பதாவது மிஞ்சும்.//

Is this your opinion?
or
Is this what you think Tambras should think?
Or
Is this a correct approach to elections?
Or
Is this the way all people should think?

10:02 AM  
Blogger -/சுடலை மாடன்/- மொழிந்தது...

இப்பதிவைப் படித்தபின் உங்களுடைய சிந்தனை/கண்ணோட்ட அடிப்படைப் பற்றிய முழுமையான தெளிவு கிடைத்தது, எதிர்காலத்தில் பலருக்கு நேர விரயத்தை தவிர்க்க உதவும். நன்றி.

சொ. சங்கரபாண்டி

10:12 AM  
Blogger முத்துகுமரன் மொழிந்தது...

//இப்பதிவைப் படித்தபின் உங்களுடைய சிந்தனை/கண்ணோட்ட அடிப்படைப் பற்றிய முழுமையான தெளிவு கிடைத்தது, எதிர்காலத்தில் பலருக்கு நேர விரயத்தை தவிர்க்க உதவும். நன்றி.

சொ. சங்கரபாண்டி//

ரெம்பத் தாமதமான தெளிவு திரு.சங்கரபாண்டி...

11:02 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

இந்தப் பதிவு சிலருக்கு குழப்பத்தினை, ஏமாற்றத்தினை தந்திருக்கலாம்.இப்படித்தான் பிராமண சங்கம் சிந்திக்க வேண்டும் என்று சொல்வதை விட இந்த நிலையில் என்ன நிலைபாடு எடுக்கலாம் என்று ஒரு வெளி நபர் சிலவற்றை கருத்தில் கொண்டு சொல்லும் கருத்து இது.பாஜக வினை ஆதரிப்பது எந்த விதத்திலும் சரியல்ல.இட ஒதுக்கீட்டில் அது பிற கட்சிகள் போலவே நடந்து கொண்டுள்ளது. மேலும் பாஜகவை ஆதரிப்பது இந்த்துவ முத்திரையை பிராமணர் சங்கம் மீது
குத்தவே உதவும்.அரசியல் நிலைப்பாடு எடுப்பதை தவிர்க்கவும், அப்படித் தேவையானால் தமிழ்நாட்டில் யாரை ஆதரிக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டுள்ளேன். திகவின் பிராமண
வெறுப்பினை யாரும் மறுக்க முடியாது. அது போல் சில யதார்த்தாமன நிலைகளை கருத்தில்
கொண்டு எழுதப்பட்ட பதிவிது.அதற்கு மேல் இதில் ஏதுமில்லை. உண்மையில் 3% பிராமாணர்
ஒட்டிற்காக தினமலரும், தினகரனும் இப்படி மோதிக் கொள்ளத் தேவையில்லை. தமிழ் நாட்டில்
பிராமணர்களுக்கு தேவையற்ற முக்கியத்துவம் தரப்படுகிறது.. தாம்பிராஸும் பிற ஜாதிச் சங்கங்கள் போன்றதுதான். அது வேறு விதமாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஜாதி சங்கங்கள் தேவையில்லை என்று வீரமணியோ திமுகவோ கூறுவதில்லை. மாறாக ஜாதி சங்க மாநாடுகளில் இடது சாரிகள் தவிர பிற கட்சியினர் கலந்து கொள்கிறார்கள். இதற்கு தி.கவும் விதிவிலக்கல்ல. பிராமணர்கள் ஜாதி சங்கம் அமைக்கக்கூடாது, பிராமணர்கள் ஒழிக என்று எழுதியிருந்தால் அது
சிலருக்கு பிடித்திருக்கலாம். ஆனால் என் நிலைப்பாடுகள் வித்தியாசமாகவே இருக்கின்றன. திக
மிருகபலி தடைச் சட்டத்தினை ஆதரித்தது, நான் அதை எதிர்த்தேன். எதிலும் என் நிலைப்பாட்டிற்க்கான காரணத்தினை சொல்லிவிடுகிறேன்.

பிராமணர்களுக்குள் பிரிவுகள் இருப்பதால் ஒத்த கருத்து இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை.இந்தப் பிரிவுகளுக்கு அப்பாற்ப்பட்டு பொதுவான சில நிலைப்பாடுகளை
எடுக்க முடியுமா என்பதே கேள்வி. சில முற்போக்கான நிலைப்பாடுகளை எடுத்தால் அது நல்லிணக்கம் வளர் உதவும், கசப்புணர்ச்சி மறைய உதவும். இந்துக்கள் அனைவரும் சமம்,
முப்புரி நூல் அணியலாம் என்று ராதாகிருஷ்ணன் எழுதினார். இந்து மத சடங்குகளை பயிற்சி
பெற்ற யார் வேண்டுமானாலும் செய்ய வழி வகுக்க வேண்டும் என்று அம்பேத்கர் கருதினார்.
பெண்கள் வேதம் கற்க, முப்புரி நூல் அணிய உரிமை வேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள்.
சாஸ்திராஸ் என்ற இணைய தளத்தில் இந்து மடாதிபதிகளுக்கு சில வேண்டுகோள்கள் உள்ளன.
இப்படி பல்வேறு தரப்பிலும் பல்வேறு கருத்துக்கள் உள்ளன. 3% பேர் 97% பேருக்கு எதிரி
என்ற கருத்தினை பரப்பிக்கொண்டிருப்பதிலும், பார்ப்பனியத்தினை எதிர்க்கிறோம் என்ற பெயரில் ஒரு ஜாதியை மட்டும் எதிர்ப்பதில் எந்த வித பகுத்தறிவும் இல்லை. பிராமணர்களை பிறர் the other ஆகவோ, பிராமணர்கள் பிறரை the other ஆகவோ பார்க்கத் தேவையில்லை.இதைப் புரிந்து கொண்ட பல பிரச்சினைகளுக்கு (நிஜ, கற்பனை) தீர்வு காண முடியும்.

11:16 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

இந்தத் தேர்தலில் பிராமணர்களின் ஓட்டு கண்டிப்பாக ஜெயலலிதாவிற்குக் கிடைக்காது. மாயவரத்தானைப் போல, எஸ்விசேகர், விசுவைப் போல சந்தர்ப்பவாத மற்றும் விவரம் கெட்ட பிராமணர்கள் சிலபேர் துணை நிற்கலாம். ஆனால் ஜெயேந்தரர் கைதை விட, ஒரு பாவமும் அறியாத அந்த முதியவர் சுந்தரேச அய்யரை கஞ்சா வழக்கில் போட்டதை நான் பேசிப்பார்த்தவரை எந்த பிராமணரும் மறக்கவில்லை. அவர்கள் நல்ல பாடம் கற்பிப்பார்கள் என்றே நம்புகிறேன்.

11:18 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

http://www.shastras.org/

1:20 PM  
Blogger ROSAVASANTH மொழிந்தது...

Eventhough I do not respect Ravi for any of his views, I never experienced the nausea, this post has created. Horrible, couldn't read this shit completely!

3:33 AM  
Blogger முத்து(தமிழினி) மொழிந்தது...

சில நாட்களாக ரவிசீனிவாஸ் என்ற பெயரில் வேறு யாரோ வந்து வலைபதிவதாக எனக்கு சந்தேகம் வருகிறது.

ரவியின் பழைய திண்ணை வாசகன்

8:02 AM  
Blogger Muse (# 5279076) மொழிந்தது...

>>>>>கடந்தகாலத்தில் பிறப்பினடிப்படையில் செய்யப்பட்ட பாகுபாடுகளை நாங்கள் நியாயப்படுத்த வில்லைஎன்றும், அதனால் பாதிக்கப்பட்டவர்களிடம் எங்கள் முன்னோர் செய்த தவறுகளுக்காக மன்னிப்புகேட்கிறோம்......... என்று அறிவித்து விட வேண்டும். <<<<

ரவி, இதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

எந்த அமைப்பும் தன்னுடைய தவறுகளை ஒத்துக்கொள்ளாது. உதாரணமாக திகவினர் என்றும் தாங்கள் பிராமணர்களுக்கு செய்த கொடுமைகளுக்காக மன்னிப்பு கேட்க மாட்டார்கள். அதே போல ஹிந்துத்துவ வன்முறையாளர்களோ, மதச்சார்பற்ற சிறுபான்மையாளர்களோ இங்கனம் செய்யப் போவதில்லை.

அதிகபக்ஷம் தானைத்தலைவர், தமிழக முதல்வர், கேப்டன், சோல்ட்ஜர், டாக்டர், கம்பவுண்டர் விஜயகாந்தை போல இப்படி சொல்லலாம்:

"முதலில் அவனை மன்னிப்பு கேட்கச்சொல்லு, அப்புறம் நான் கேட்கிறேன்"

போப்பாண்டவரை உதாரணம் காட்டி நீங்கள் மறுதலிக்கலாம். அன்னிகழ்வுக்கு அந்த அமைப்பிற்குள்ளேயே எழுந்துவரும் எதிர்ப்புகளின் பலம்தான் காரணம். அது போன்ற ஒன்று நிகழாதவரை எந்த அமைப்பும் நீங்கள் கூறியவாறு செய்யாது.

அப்படியே பிராமண சங்கம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்குமானால் அதை தற்போதுள்ள பிராமண எதிர்ப்பு சக்திகள் ஒரு ஒப்புதல் வாக்குமூலமாகவே கருதி தங்களுடைய மரண தன்டணை கோரிக்கையை தீவிரப்படுத்துவார்கள். எனவே தங்களுடைய கருத்து கொள்கை ரீதியாக நன்றாகவிருந்தாலும் கண்டிப்பாக நடைமுறைக்குவராது.

>>>>Eventhough I do not respect Ravi for any of his views, I never experienced the nausea, this post has created. Horrible, couldn't read this shit completely! <<<<

வாந்தி வருகிறது, வயிறு வலிக்கிறது, உருப்படாத எழுத்து என்று ஒவ்வொரு முறையும் கூறுவதற்காகவே ரோஸா வஸந்த் மீண்டும் மீண்டும் தங்கள் பதிவைப் படிக்க வருகிறார். அவருக்கு வாந்தி எடுப்பது மிகவும் பிடித்த விஷயம் போலும்.

8:59 AM  
Blogger Muse (# 5279076) மொழிந்தது...

>>>>>>>>...அதனால் பாதிக்கப்பட்டவர்களிடம் எங்கள் முன்னோர் செய்த தவறுகளுக்காக
மன்னிப்புகேட்கிறோம்......... என்று அறிவித்து விட வேண்டும். <<<<<<<

ஒரு சந்தேகம் ரவி. இந்த ஏற்றத்தாழ்விற்கு பிராமணர்கள் மட்டுமே முழுக்க முழுக்கக் காரணமா?

எல்ல உயர்சாதியினருக்கும் இந்த கிறுக்குத்தனத்தில் சம பங்கு இருப்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.

9:08 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

கட்டுரை= கட்டுக்கதை?

http://ravisrinivas.blogspot.com/2006/05/3.html

ஜெயலலிதா சங்கராச்சாரியை கைது செய்தது தமிழ்நாட்டில் நடுநிலையை நிலைநாட்டவா? அபடியெனில் அந்த நடுநிலைநாயகிக்கு அரசு ஊழியர்களை ஒரே இரவில் டிஸ்மிஸ் செய்தபோது எங்கே போச்சு நடுநிலைமை? மக்களுக்காக அரசா அரசு முதல்வருக்காக மக்களா?
கருணாநிதி கைது செய்திருக்கமாட்டார் என்பது அனுமானம் மட்டுமே என்றால், கருணாநிதி அப்படி ஒரே இரவில் டிஸ்மிஸ் செய்யும் சர்வாதிகாரியுமல்லா என்று எழுதியிருந்தால் கட்டுரைக்கு ஒரு நம்பகத்தனமை உண்டாகியிருக்குமே?

அதை விட்டுவிட்டு, கருணாநிதி கைது செய்திருக்கமாட்டார் , ஏனென்றால் அவருக்கு ஓட்டுவங்கி பிரச்சினை என்று ஒரு அனுமானத்தை கொண்டு வாதிப்பது எப்படி நம்பக்கூடிய கட்டுரையாய் இருக்கு.

பார்ப்பன சாதிச் சங்கம் வலுவாக இல்லையென்ற கவலைப்படுகிற ரவி சீனிவாசுக்கு, சிறுபான்மையினரோடு கருணாநிதி "கொஞ்சிக் குலவினால்" பிடிக்கவில்லையென்றால் அதில் என்ன ஆச்சரியம்?


//ஜெயெந்திரர் கைதினை பிராமணர் சங்கம் கண்டித்திருந்தாலும்தேர்தலில் ஜெயலலிதாவிற்கே ஆதரவு தெரிவித்திருக்க வேண்டும்//

அப்படியென்றால் சங்காராச்சாரியை கைது செய்யாமல் விடக்கூடிய கருணாநிதியை முஸ்லீம்கள் ஆதரிக்கவேண்டும் என்றால் அதில் என்ன பிரச்சினை ரவி ச்ரீனிவாசுக்கு?

// எம்.ஜி.ஆர் அதிகரித்த 50% இட ஒதுக்கீட்டினால் பிராமணர்கள் பாதிக்கப்பட்டாலும் எம்.ஜி.ஆருக்கு பிரமாண வெறுப்பு கிடையாது. அண்டேயினை அமைச்சராக வைத்திருந்தார். //

அதே சமயம் தனிப்பட்ட முறையில் தேசிகாச்சாரியர்( யோகம் பயிற்றுவிக்க), மருத்துவர் ராமமூர்த்தி(நரம்பியல்) போன்ற பிராமணரின் நிபுணத்துவத்தினை பயன்படுத்தினால் மட்டும் கருணாநிதிக்கு பார்ப்பனர்கள் மேல் வெறுப்பு இல்லை என்று ஆகாதா ரவி ச்ரீனிவாசு?

//அதிமுக இப்படி பலத்துடன் இருப்பது திமுக வின் ஆட்சிக்கனவுகளுக்கு எப்போதுமே ஒரு சவால்தான். //

//1980களில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை கட்சியில் சேர்த்து,அவரை முன்னிறுத்தினார். அவர் கருணாநிதிக்கு சரியான போட்டியாக இருப்பார், தனக்குப் பின் கட்சியை முன்னின்று நடத்துவார் என்ற எதிர்பார்ப்பு அவருக்கு இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது.//

எம்ஜியார் இறந்தபோது அவரது உடலை பார்க்கக் கூட அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு தடை இருந்தது. பிறகு அவருக்கு சாதகமானவர்களின் உதவியோடு கூடவே உட்கார்ந்து இருந்து இறுதிச்சடங்கு வரை டிவியில் ஷோ காட்டினார் ஜெயலலிதா. பிறகும்கூட அவர் கட்சித்தலைமை ஏற்கு போது கடும் எதிர்ப்பு இருந்தது அதிகமுகவில். அந்த எதிர்ப்பின் காரணமாகத்தான் , ஜானகி அணி உருவானது? எம்.ஜி.ஆரே , ஜெயல்லிதா அதன்க்குப்பின் கட்சித் தலை ஏற்பார் என்று எதிர்பார்த்திருந்தால் ஏன் அதிமுக உடைந்து இரண்டு கட்சிகள் உருவாகவேண்டும்? அதுவும் தவிர அதிமுகவில் எம்.ஜி ஆருக்கு அடுத்த நிலையில் பல மூத்த தலைவர்கள் இருந்தனர்(ஆர் எம் வீ உட்பட).
இனி இரவு ரவி ச்ரினிவாசு உட்பட எல்லா அதிமுக ஆதரவாளர்களும் நிம்மதியாக உறங்கபோகலாம். எனிவே, பார்ப்பனர்கள் வாசித்தால் புளகாங்கிதம் அடையாக்கூடிய கட்டுரைக்கு நன்றி.

12:04 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

யாரையும் திருப்திப்படுத்த நான் எழுதவில்லை.என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன், அவ்வளவுதான். முற்போக்கு, இடதுசாரி என்ற முத்திரைகளை நான் எதிர்பார்த்து எழுதுவதில்லை.
அப்படி எழுதுவதில் அர்த்தமுமில்லை.

என் பதிவினை படிப்பது கால விரயம் என்று யாரேனும் கருதினால் அது அவரவர் விருப்பம்.எதையும் காரணம் கூறித்தான் நான் விளக்குகிறேன். உன் காரணம் சரியில்லை என்று நான் எழுதியதை திரித்துப் பொருள் கொள்ளாமல் விவாதிக்க முன் வந்தால் நான் தயார்.இட ஒதுக்கீடோ இன்ற பிற பிரச்சினைகளோ நான் எழுதும் முன் யோசித்து ஒரளவாது விஷயங்களை சேகரித்து, அலசி எழுதுகிறேன். இயன்றவரை ஆதாரங்கள் காட்டுகிறேன்.

இங்கு உள்ள விவாத மொழிக்கும், நடைக்கும் எனது விவாத மொழி நடைக்கும் வேறுபாடுகள் இருக்கலாம்.என் கருத்தினை உலகில் என்னைத் தவிர யாருமே ஏற்கவில்லை என்றாலும் கூட கருத்தினை வெளிப்படுத்தவே விரும்புவேன். முடிந்தால் ஆதாரங்களுடன் முறையாக வாதிடுங்கள், கருத்துப் பரிமாற்றம் சாத்தியம். அதை விடுத்து முத்திரை குத்தி விட்டு, நேர விரயம் என்று கருதி விட்டுப் போவதும் உங்கள் விருப்பம்.

சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு குறித்து திண்ணையில் விரிவாக எழுதினேன், வலைப்பதிவில் இட்டேன்.என் கருத்து தவறு நான் முன் வைத்த ஆதாரங்கள் சரியில்லை, நான் சட்ட்த்தினை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று யாரேனும் விவாதிக்க முன் வந்தால் நான் தயார். என்னால் அ.மார்க்ஸ், சோலை போல் எழுத முடியாது. எதையும் விவாதிக்க விருப்பமின்றி அல்லது படித்துப் புரிந்து கொள்ள அக்கறையின்றி ஜல்லியடித்துக் கொண்டிருப்பவர்கள் ஒரு சில வார்த்தைகளில் அல்லது வரிகளில் என் எழுத்தை நிராகரித்துவிட்டுப் போகலாம். அது பற்றி நான் கவலைப்படவில்லை.

பிராமண சங்கம் அப்படி வருத்தம் தெரிவித்தால் அது பிராமணர்கள் மீதான கசப்புணர்வினை வளர்க்கும் பிரச்சாரத்தின் செல்வாக்கினைக் குறைக்கும்.அப்படி தெரிவிப்பது நியாயமானதுமாகும்.திருச்சபை அவ்வாறு வருத்தம் தெரிவித்தது திருச்சபையின் மீதான மதிப்பினை
அதிகரிக்க உதவியது. என் யோசனையை பிராமண சங்கம் ஏற்குமா ஏற்காதா என்பது வேறு கேள்வி. இப்பதிவு என் மீது முத்திரை குத்த சிலருக்கு உதவும் என்பதும் எனக்குத் தெரியும். என் கருத்துக்கள் பிராமணர்களுக்கு உவப்பாக இராது, பார்ப்பனியத்தினை எதிர்க்கிறேன் என்று பிராமணர்களை எதிர்ப்பவர்களுக்கும் உவப்பாக இராது. அதற்காக நான் கருத்தினை கூறாமல் இருக்க முடியாது.

12:49 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

கட்டுரை= கட்டுக்கதை?

இதை எழுதியவர் தன் கருத்துக்களை என் கருத்துக்களாக முன் வைக்கிறார்.ஜெ நடுநிலையாளர் என்று நான் எழுதவில்லையே. எம்ஜிஆர் உயிருடன் இருக்கும் போது என்ன நடந்தது என்பதை
அறிந்தவர்களுக்கு அவரது மறைவிற்குப் பின் நடந்த அதிகாரப் போட்டியின் காரணங்களும் தெரியும். பிராமண சங்கம் வ்லிமை குன்றியிருக்கிறது, அது வலுவடைய வேண்டும் என்று நான் எழுதவில்லை. கருணாநிதி கொடுத்த பேட்டியையும் ஆதாரமாகக் கொடுத்திருந்தேன். நான் அதிமுக ஆதரவாளனுமில்லை, திமுக ஆதரவாளனுமில்லை.

12:55 PM  

Post a Comment

<< முகப்பு