இரண்டு கட்டுரைகள்

சுந்தர வடிவேல் தன் வலைப்பதிவில் எழுதிய கட்டுரை இப்போது கீற்று இணையதளத்திலும் இருக்கிறது.இக்கட்டுரையாளர் அமெரிக்காவில் இருக்கும் பன்முகத்தன்மை குறித்தவற்றைசரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே கூறுவேன்.முதலில் அமெரிக்காவில் இந்த பன்முகத்தன்மை, அப்பர்மெடிவ் ஆக் ஷன் போன்றவை எல்லா நிறுவனங்களிலும் இல்லை.உதாரணமாக கலிபோர்னியா பல்கலைகழகத்தில் இது இல்லை. இன்னும் சில மாநிலங்களில்இல்லை.இதற்கு காரணம் இங்கெல்லாம் பொது வாக்கெடுப்பில் இன ரீதியாக,பாலின ரீதியாகமுன்னுரிமை கொடுப்பதை தடை செய்து விட்டார்கள். ஆனால் அமெரிக்க அரசின் அமைப்புகளின்நிதி உதவி பெறும் திட்டங்களில் அவை இருக்கின்றன. மேலோட்டமாகப் பார்த்தால் அமெரிக்காவில்இருக்கின்றன முறை(கள்) எளிதாகத் தோன்றும்.ஆனால் அப்படியல்ல. உதாரணமாக சிறுபான்மைகுறித்த வரையரை. ஆசிய அமெரிக்கர்கள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சிறுபான்மையினர் எனக்கருதப்படுவதில்லை.வடிவேலின் கட்டுரை இவற்றையெல்லாம் கருத்தில் கொள்வதில்லை. மேலும்அவர் முன்வைக்கும் வெளியேற்றும் திட்டம் குறித்து எனக்கு விமர்சனங்கள் உண்டு.

ஒரு அமைப்பில்இருக்கிறவர்களை வெளியேற்றி பன்முகத்தன்மையினைக் கொண்டு வருவேன் என்பது கேலிக்கூத்து.சட்ட ரீதியாக அது சாத்தியமில்லை என்று நினைக்கிறேன். பாரபட்சங்களை நீக்குவது என்பதுவேறு, அதற்காக இருக்கிறவர்களை வெளியேற்றுவது என்பது வேறு. மேலும் இன்னார் இந்த வேலையை செய்தால் என்ன என்பதெல்லாம் எழுத சுவாரசியமாக இருக்கலாம், நடைமுறையில் சாத்தியமில்லை. நீ முனைவர் பட்டம் பெற்றிருக்கிறாய், துரதிருஷ்டவசமாக உன்னுடையஇனப்பிரிவினர் இங்கு துணைப் பேராசிரியர்கள்/ பேராசிரியர்கள்/ஆய்வாளர்கள் என்ற நிலைகளில் மிக அதிகமாக இருப்பதால் உனக்கு அலுவலக உதவியாளர் வேலைதான் தருவேன் என்றால் எத்தனை பேர் அதை ஏற்பார்கள்.
ஒருவர் தன் வீட்டுக் கழிப்பறையை, குளியலறையைக் கழுவுவது என்பதற்கும், வேறு வேலை கிடைக்காவிட்டால் நீ என்ன படித்திருந்தாலும், அனுபவம் பெற்றிருந்தால் அதை வேலையாகக்செய்ய வேண்டும் என்பதற்கும் வேறுபாடு உண்டு. இங்கு இந்த வேலைதான் கிடைக்குமென்றால்எங்கு நல்ல வேலை கிடைக்குமோ அங்கு இடம் பெயர்கிறேன் என்று ஒருவர் முடிவெடுக்கலாம். ராமகிருஷ்ண பரமகம்சர் நிலை வேறு, சாதாரண மனிதர் நிலை வேறு. ராமகிருஷ்ணர் போல் எல்லாரும் இருக்க முடியாது, தேவையும் இல்லை. படிக்கும் போது பகுதி நேரத் தொழிலாகமாணவர்கள் முடி திருத்துவது உண்டு. சிலர் முடி திருத்துவதை வீட்டில் குடும்பனத்திருக்குசெய்வதுண்டு. அப்படி செய்பவரிடம் நீ ஏன் அதை தொழிலாகக் செய்யக் கூடாது, ஆராய்ச்சிக்கூடத்தில் வேலை செய்கிறாய் என்றா கேட்க முடியும். சுந்தர வடிவேல் இன்னும் மாவோயிசகலாச்சாரப் புரட்சி காலத்தில் இருக்கிறார் போலும். கலாச்சாரப் புரட்சியும், ராமகிருஷணரின்ஆன்மிகமும் சேர்ந்த வினோதமான கலவை படிக்க சுவாரசியமாக இருக்கலாம், நடைமுறையில்சாத்தியமில்லை.

கட்டுரையாளரின் அணுகுமுறை இடஒதுக்கீடு என்பதன் மூலம் எது சாத்தியம், எது சாத்தியமில்லை என்பதை கருத்தில் கொள்ளவில்லை.சிலவற்றை இட ஒதுக்கீடு இல்லாமல் செய்ய முடியும். சிலவற்றிற்கு இட ஒதுக்கீடு பயன்படாது. பன்முகத்தன்மைக்கு இட ஒதுக்கீடு மட்டும்தான் ஒரே தீர்வல்ல. அனைவருக்கும் கல்வி, சமவாய்ப்புகள், சமூகத்தில் உள்ள பாரபட்சங்களைக் குறைத்த்ல் போன்றவை மூலமும் பன்முகத்த்னமையினை அதிகரிக்க முடியும். அமெரிக்க நிறுவனங்கள் ஆப்பிரிக்க அமெரிக்கர்களிடமிருந்து உதிரி பாகங்கள், சேவைகள் போன்றவற்றை பெறுவதற்குஊக்கம், முன்னுரிமை தருகின்றன. திக் விஜய் சிங் மத்திய பிரதேசத்தில் இது போல் ஒரு திட்டத்தினைஅறிமுகம் செய்தார். அரசு நிறைவேற்றும் திட்டங்களில் தலித்கள் ஒப்பந்தக்காரர்களாகஇருப்பது, அரசு உதவியுடன் தொழில் முனைவோராக மாறுவது என்று தலித் சிந்தனையாளர்கள் பேசுகிறார்கள். வெறும் இட ஒதுக்கீடு போதும் என்று அவர்கள் நின்றுவிடுவதில்லை.. இவற்றில்எனக்கு உடன்பட பல அம்சங்கள் உண்டு.
இங்கும் நாம் அமெரிக்க உதாரணங்களை கருத்தில் கொள்ள முடியும். தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்பதை மட்டும் வலியுறுத்தாமல் இது போன்றவற்றையும் முன்னிறுத்துவது வரவேற்கத்தக்கது.அரசு வேலைகள் குறைந்து வரும் போது, தனியார் வேலைகளில் இடஒதுக்க்கீட்டினை கோரினாலும் நீண்ட காலப் போக்கில் தலித்கள் பொருளாதார ரீதியாகபலம் பெற இட இதுக்கீடு மட்டும் போதாது. தொழில், வர்த்தகம், சேவை என்று பல்துறைகளிலும்தலித்கள் ஈடுபட்டால்தான் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னேறுவது சாத்தியம்.வெறும் இட ஒதுக்கீடு ஒரளவே உதவும். இது தலித்களில் சிலருக்காவது தெளிவாகியிருப்பதுவரவேற்க்கத்தக்க மாற்றம். ஆனால் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாகப் பேசும் பலர் இவை குறித்து எதுவும் சொல்வதில்லை. விரிவஞ்சி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

ஆனந்த விகடனில் ஞாநி கேள்வி -பதில் முறையில் எழுதியுள்ளது அப்பட்டமான பிரச்சாரம்.ஒரு மூன்றாம் தரப் பிரச்சரகர் போல் எழுதியிருக்கிறார். தகவல் பிழைகள் இருக்கின்றன.மேலும் அவருக்கு பிரச்சினையைக் குறித்து போதுமான அறிவு இல்லை. 93ம் சட்டதிருத்தம் பற்றி அவர்குறிப்பிடுவதில்லை, பழைய மண்டல் புராணத்தினையே பாடுகிறார். 'மண்டல்கமிஷன் பரிந்துரையை ஏற்று வி.பி.சிங் ஆட்சி, 16 வருடங்களுக்கு முன்மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அறிவித்த போது, அதன் விளைவாக அவரது ஆட்சியே கவிழ்க்கப்பட்டது' என்று புளுகுகிறார்.ஆட்சி கவிழக் காரணம் பா.ஜ.க ஆதரவினை விலக்கிக் கொண்டது. அத்வானியின் ரத யாத்திரைபீகாரில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.எனவே பா.ஜ.க ஆதரவை விலக்கிக் கொண்டது. ஞாநி எழுதியிருப்பதற்கு பதில் எழுதினாலும் அதை விகடன் பிரசுரிக்கும் என்று உத்தரவாதம் இல்லை.
உச்ச நீதி மன்றத்தில் வழக்கு

27% இட ஒதுக்கீட்டினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் மத்திய அரசிற்கு பதில் தாக்கல் செய்ய 8 வார கால அவகாசம்கொடுத்துள்ளனர்.உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீடு குறித்த வழக்கை ஏற்றுள்ளதால் மாணவர்கள்போராட்டத்தினை கைவிட வாய்ப்புகள் இருக்கின்றன. உச்ச நீதிமன்றத்தில் இந்த வாரம் வழக்குத் தொடரப்பட உள்ளது என்று போன வாரமே செய்திகள் வந்தன.

இது அரசியல் சட்டம் தொடர்பான வழக்கு என்பதால் இதை விசாரிக்க ஒரு பெஞ்ச் அமைக்கப்படும் என எதிர்பார்க்கலாம். மனுதாரர் என்ன கோரியிருக்கிறார், 93வது சட்டத் திருத்தமே செல்லாது என்று அறிவிக்குமாறு கோரியிருக்கிறாரா என்பது செய்திகளில் தெளிவாக இல்லை.மனுதாரர்(கள்) தவிர பிறரும் தங்களையும் இவ்வழக்கில் மனுதாரர்களாக சேர்க்குமாறு கோரலாம். 93ம் சட்டத்திருத்தம், 27% இட ஒதுக்கீடு குறித்து வேறு சிலர் தனியாக வழக்குத் தொடரலாம். அப்படித் தொடரப்பட்டால் இந்த வழக்குகள் அனைத்தையும் ஒரே பெஞ்ச விசாரிக்கலாம்.

அரசு 27% இட ஒதுக்கீடு குறித்து தனியாக சட்டமோ அல்லது ஆணையோ பிறக்கப்பிக்கவில்லை.அதை நடைமுறைப்படுத்துவது குறித்து சில குழுக்களை அமைத்திருக்கிறது. உச்ச நீதிமன்றம் இன்று சில கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அரசு இது குறித்த கொள்கைமுடிவினை தன் பதில் மனுவில் எப்படி நியாயப்படுத்தப் போகிறது என்பதை பார்க்க வேண்டும். 93வதுசட்டத் திருத்தமே செல்லாது என்று மனுத்தாக்கல் செய்யவும் வாய்ப்பிருக்கிறது. அரசு 93வது ச்ட்டத்திருத்ததில் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு அளித்திருப்பது அரசுக்குஉண்மையான அக்கறை இல்லை, பாரபட்சம் காட்டுகிறது என்ற வாதங்களுக்கு வலுச்சேர்க்கும்.

இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு அடுத்த ஜுனுக்குள் தீர்ப்பு வருவதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு, கிட்டதட்ட இல்லை என்றே சொல்லலாம். எனவே இட ஒதுக்கீடு அடுத்த கல்வியாண்டில் அமுல் செய்யப்படுமா என்பது கேள்விக்குறிதான்.
சோதனைப் பதிவு
விகிதாசார பிரதிநிதித்துவம்

பிற்பட்ட மக்கள் மக்கள் தொகையில் இத்தனை சதவீதம் இருக்கிறார்கள். நாங்கள் அத்தனை சதவீதம் கேட்கவில்லை, 27% தானே கேட்கிறோம், எங்களுக்கு விகிதாசார பிரதிநிதித்துவம் வேண்டாமா என்று கேட்கிறார்கள்.

விகிதாசார பிரதிநித்த்துவத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பெண்களுக்கு முதலில் 50% இட ஒதுக்கீடு தர வேண்டும். அதற்கு ஒத்துக்கொள்வீர்களா. பிற்பட்டோர் ஒதுக்கீடில் பெண்களுக்கு பிற்பட்ட ஜாதிகளைச் சேர்ந்த பெண்களுக்கு 50% தர நீங்கள் தயாரா?.

மத்திய அரசு வேலைகள் மாநிலங்களின் மக்கள் தொகைக்கேற்ப விகிதாசாரத்தின் படி தரப்பட வேண்டும். அதாவது தமிழ் நாட்டின் பங்கு 7%க்கும் குறைவாக இருக்கும்.

இதையே மத்தியஅரசின் பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டிலும் (27%) கடைப்பிடிக்க வேண்டும். ஒட்டுமொத்த பிற்பட்டோர் எண்ணிக்கையில் தமிழ் நாட்டு பிற்பட்டோர் சதவீதம் எவ்வளவோ அவ்வளவே ஒதுக்கப்பட வேண்டும்.

இந்திய மக்களவையில் உறுப்பினர் எண்ணிக்கை 544, இதில் தமிழ்நாடு, புதுவை யில் இருந்து40 பேர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மத்திய அமைச்சரவையில் தமிழ் நாட்டிலிருந்துஇப்போது 13 பேர் அமைச்சர்கள்.

விகிதாச்சார முறைப்படி அமைச்சரவையில் இட்ங்களைப் பெற திமுகவோ, பாமாகவோ தயாராக இருக்கிறார்களா. இருக்கிற எண்ணிக்கைக்கும், இவர்கள் பெற்றிருக்கும் அமைச்சர்கள் எண்ணிக்கைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா. தங்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், சூழ்நிலையைப் பயன்படுத்தி மிக அதிகமாக பயன்களைப் பெறுகிறீர்களே. அதை முதலில் குறைத்துக் கொண்டு விகிதாச்சார பிரதிநிதித்துவம்பற்றிப் பேசுங்கள்.

இட ஒதுக்கீட்டினை ஆதரிப்போரே என் கேள்விகளுக்கு பதில் உண்டா ?
மேய்ச்சல்

இட ஒதுக்கீடு குறித்து மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன்

காந்தி,வர்ணாஸ்ரம தர்மமும், ஜாதியும்- அனில் நூரியா

பள்ளிகளில் கோலா பானங்கள் தடை நியாயமே - டேரில் டி மான்டே

இந்தியா-அமெரிக்கா உறவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்- செமினார்

வலைப்பதிவில் மாற்றங்கள் செய்யவிருப்பதாலும், புதிய வலைப்பதிவினை துவங்க இருப்பதாலும்ஜுன் 1ம் தேதி வரை புதிய பதிவுகள் இடுவது இயன்ற வரை தவிர்க்கப்படும்.
இட ஒதுக்கீடு - இன்றைய பதிவு

ஐஐஎம் களின் மாணவர் சங்கங்கள் இட ஒதுக்கீடு குறித்த முடிவினை விமர்சித்துள்ளன, அதுதேவையற்றது என்று கண்டித்துள்ளன. டைம்ஸ் ஆப் இந்தியாவில் செய்தி வெளியாகியுள்ளது.அவர்கள் பத்திரிகைகளுக்கு விடுத்த அறிக்கையிம் பிரதியை இணையத்தில் இட முயற்சிக்கிறேன்.ஆறு ஐஐஎம்களின் மாணவர் சங்கங்களின் தலைவர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை இது.

வீரமணி அமெரிக்காவிலும் இட ஒதுக்கீடு இருக்கிறது. காண்டி ரைஸ் அதால் பயன் பெற்றார்என்று பேசியிருக்கிறார். அமெரிக்காவில் ஜாதி ரீதியான இட ஒதுக்கீடு இல்லை. இருப்பது பல்வேறு தரப்பாருக்கும் உரிய இடம் கிடைக்க வகை செய்யும் திட்டம். இதில் பெண்களுக்கும்இடம் உண்டு. ஜாதி ரீதியாகவே இட ஒதுக்கீடு கோரும் வீரமணியோ அல்லது இட ஒதுக்கீட்டிற்குஆதரவாக குரல் எழுப்புவோரோ பெண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று எழுப்பவில்லையே,அது ஏன். லாலு, முலாயம், வீரமணி மற்றும் ஜாதி ரீதியாக இட ஒதுக்கீடு கோருவோர் பெண்கள்இட ஒதுக்கீடு தங்களின் ஆதிக்கத்தினை பாதிக்கும் என்பதை அறிந்தே ஜாதி ஜாதி என்றுகூறுகின்றனர். முதல் பிற்பட்டோர் கமிஷன் பெண்களுக்கும் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்றுகூறியது. அரசு அதன் அறிக்கையை ஏற்கவில்லை. இட ஒதுக்கீட்டிற்காக போராடியவர்கள்பிற்பட்ட ஜாதிகளுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடினார்கள். பெண்களுக்கானஇட ஒதுக்கீடு வெறும் கனவானது. இன்றும் கூட மத ரீதியாக இட ஒதுக்கீடு கோருகிறார்களேஒழிய பெண்களுக்கு இட ஒதுக்கீடு கோருவதில்லையே, ஏன். ஏனென்றால் எல்லாப் பெண்களுக்கும்இட ஒதுக்கீடு என்று வந்துவிட்டால், பெண்களும் சம வாய்ப்பு பெற்று விடுவார்கள், ஆணாதிக்கம் அடிப்பட்டுவிடும். அதானால் தான் ஜாதியை முன் வைக்கிறார்கள். எத்தனை ஆண்டுகளாக சட்டசபைகளிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு திட்டம் வெறும்பேச்சளவில் இருக்கிறது. அதில் உள் இட ஒதுக்கீடு கேட்டு அதை தடுத்திருப்பது யார், யார்-பிற்பட்ட ஜாதிகளின் தலைவர்களாக தங்களைக் காட்டிக் கொள்வோர் என் உள் ஒதுக்கீட்டினைகோருகிறார்கள். அவர்களுக்கு பெண்கள் மூன்றில் ஒரு பங்கு இடம் பெறுவது அச்சம் தருகிறது.27% ஒதுக்கீட்டிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் அதற்கு ஏன் தரப்படுவதில்லை.இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி என்றால் பெண்களுக்கு என்று வரும் போது அது ஏன்தவிர்க்கப்படுகிறது அல்லது மறைமுகமாக எதிர்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஒராண்டு என்று காலக்கெடு விதித்திருந்தாலும் அதற்குள் என்ன நடக்கும்என்பதைப் பார்க்கலாம். அதிக நிதியை இப்போது ஒதுக்கும் அரசு இட ஒதுக்கீடு இல்லாமல்இடங்களைக் கூட்டியிருக்கலாமே. மூன்று , நான்கு ஆண்டுகளில் வசதிகளையும் அதிகப்படுத்தி,இடங்களையும் கூட்டியிருக்கலாமே.ஐஐடி,ஐஐம் போன்றவற்றில் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டினை மொத்தமாக நிராகரிக்க வேண்டும். இடங்களைக் கூட்டுவது, அதுவும் இப்படிஅவசர அவசரமாகக் கூட்டுவது சரியல்ல. அது ஒரு கண் துடைப்பு.

தமிழ் நாட்டில் மத ரீதியான சிறுபான்மையினருக்கும் இட ஒதுக்கீடு என்று அறிவிக்கப்பட்டு:ள்ளது.இதை எப்படி செய்கிறார்கள் என்று பார்க்கலாம். கிறித்துவர்களை எந்த அடிப்படையில் கல்வி,மற்றும் சமூக ரீதியாகப் பின் தங்கியவர்கள் என்று ஒட்டுமொத்தமாக கூறுவார்கள் என்று தெரியவில்லை.கல்வி ரீதியாக அவர்கள் பின் தங்கியவர்கள் கிடையாது, சமூக ரீதியில் அவர்க்ள்எப்படி பின் தங்கியவர்கள் ஆவர்கள்.
அவர்கள் சமூகத்தில் எந்த விதத்திலும் பார்பட்சமாக நடத்தப்படுவதில்லை.கிறிஸ்துவர்களும் பின் தங்கியவர்கள் என்றால் அனைத்து இந்து ஜாதிகளும்பின் தங்கியவை என்று அறிவிப்பது பொருத்தமாக இருக்கும்.

சிறுபான்மையினருக்கும் இட ஒதுக்கீடு என்றால் தமிழக மக்கள் தொகையில் கிட்டதட்ட 90%பின் தங்கிய வகுப்புகளைச் சேர்ந்தவர்கள். 10% பேர்தான் முற்பட்டோர். அதாவது 90% மக்கள்கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பிற்பட்டவர்கள், அரசின் இட ஒதுக்கீட்டின் படி.அப்படியானால் தமிழ் நாட்டை மிகவும் பின் தங்கிய மாநிலம் என்று அறிவித்து விடலாமே.

ஒரு வலைப்பதிவில் கடந்த இரண்டு நாட்களாக என்னுடைய பின்னூட்டங்க்ள் இடம் பெறவில்லை.நான் பின்னூட்டம் இட்ட பின் இடப்பட்டவை இடம் பெற்றுள்ளன.ஏன் இடம் பெறவில்லை என்றுஇட்ட பின்னூட்டங்களுக்கு இதுவரை பதில் இல்லை.இன்னும் இரண்டு நாட்களுக்குள் இதற்குசரியான விடை கிடைக்காவிட்டால் இனி அந்த வலைப்பதிவில் பின்னூட்டம் இடப் போவதில்லை.
மேய்ச்சல் - இட ஒதுக்கீடு

பிரதாப் மேத்தாவின் விலகல் கடிதம்

அந்த்ரெ பெத்தலின் விலகல் கடிதம்

மேத்தாவிற்க்ய் யோகேந்தர் யாதவின் கடிதம்

மேத்தாவின் பதில்

சாம் பித்ரோதாவுடன் ஒரு பேட்டி
இட ஒதுக்கீடு எதிர்ப்பு மனு

இந்த இணைய முகவரியில் உள்ள மனுவைப் படித்து உங்கள் ஆதரவினை அதற்கு தருமாறுகேட்டுக் கொள்கிறேன்.பலருக்கு மின்னஞ்சலும் அனுப்பி வருகிறேன். நீங்களும் ஆதரவுதிரட்ட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு பழைய பதிவு - மீண்டும்

உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பும்

உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பும்....{ இது போன்ற பிரச்சினைகளில் ஒரே கட்டுரையில் ஒருவர் தன் அனைத்துக் கருத்துக்களையும் விளக்கி எழுதி விட முடியாது. என் நோக்கங்களில் ஒன்று இப்பிரச்சினையில் கவனம் பெறாத ஆனால் முக்கியமான விஷயங்களையும் வாசகர் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என்பது. நான் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவன் அல்ல.ஆனால் அதை ஒரு புனிதப் பசுவாக கருதுவதில், இட ஒதுக்கீடே சமூக நீதி என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.இன்றுள்ள நிலையில் அதை எந்த அளவிற்கு ஒரு தீர்வாகக் கொள்ள முடியும் என்பதை விவாதிக்க வேண்டும். அது குறித்த புள்ளி விபரங்கள் அடிப்படையில் காத்திரமான ஆய்வுகள், சமூக அறிவியல் ரீதியாக ஆய்வுகள் தேவை என்று கருதுகிறேன். உங்கள் கருத்துக்களை பின்னூட்டங்களாக இடுங்கள். இக்கட்டுரையை ஒரு இறுகிய நிலைப்பாடு என்று கொள்வதை விட ஒரு புரிதலுக்கான முயற்சி மற்றும் ஒரு விவாததிற்கான துவக்கப் புள்ளி என்று கொள்ள வேண்டும் என்று கருதுகிறேன் }

திண்ணையில் வெளியான கட்டுரை இங்கு தரப்படுகிறது

அரசு உதவி பெறாத் தனியார் கல்லூரிகள்/உயர் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை, கட்டண நிர்யணம், இட ஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் அண்மையில் கொடுத்துள்ள தீர்ப்பு மிக முக்கியமானது(1). முந்தைய தீர்ப்புகளில் (T.M.A Pai Foundation V. State of Karnatka (2002) 8 SCC 481, Islamic Academy of Education &Anr.V. State of Karnataka & Ors. 2003 6 SCC 697 ) கூறப்பட்டவைகளுக்கு விளக்கம் தரும் இத்தீர்ப்பு தனியார் கல்வியின் மீதான அரசின் உரிமைகளை பாதிப்பதாக அமைந்துள்ளது. இது ஒரு விரிவான அலசலுக்கு உட்படுத்தப்பட வேண்டிய தீர்ப்பு. இத்தீர்ப்புடன் உச்சநீதிமன்றத்தின் வேறு சில தீர்ப்புகளையும் , குறிப்பாக ஆந்திர பிரதேசத்தில் தலித்களில் உட்பிரிவு ரீதியாக இட ஒதுக்கீடு குறித்த தீர்ப்பு, சேர்த்து படித்தால் நீதிபதிகளின் கருத்துக்களைத் தௌ¤வாகப் புரிந்துகொள்ள முடியும். (2)தனியார் கல்வி நிலையங்கள் நடத்துவதை அடிப்படை உரிமைகளுடன் தொடர்புபடுத்தியிருக்கும் இத்தீர்ப்பு அரசு மாணவர் சேர்க்கையில் எந்த அளவு தலையிடமுடியும் என்பதை தௌ¤வாக்கியிருக்கிறது. .அரசு நிர்வாகங்களிடம் தான் நிரப்புவதெற்கென்று ஒரு இடத்தைக் கூட இதன் கோரமுடியாது.மாணவர் சேர்க்கை குறித்தும், கல்விக்கட்டணம் குறித்தும் குழுக்கள் அமைத்து ஒழுங்குபடுத்தலாம். ஆனால் குழுக்களின் பணி குறித்தும் இத்தீர்ப்பும், பிற தீர்ப்புகளும் வரையரைகளைக் குறிப்பிட்டுள்ளன. இக்குழுக்களின் பரிந்துரைகளை எதிர்த்து நிர்வாகங்கள் முறையீடு செய்ய முடியும். அரசின் உரிமைகளைக் குறுக்கி, நிர்வாகங்களின் உரிமைகளை அங்கீகரித்திருக்கும் இத்தீர்ப்பு கல்வி இன்னும் அதிகமாக வணிகமயமாவதற்கு உதவும்.இதுநாள் வரை கல்வியில் தனியார் மயம் குறித்து கவலைப்படாமல் இட ஒதுக்கீடு என்பதை வைத்து அரசியல் நடத்தியவர்களுக்கு இத்தீர்ப்பு பல சங்கடங்களைத் தோற்றுவித்துள்ளது. இப்போது கூக்குரல் எழுப்பும் கட்சிகள் இதற்கு முந்தைய தீர்ப்புகள் வெளியான போதே மத்திய அரசு ஒரு சட்டம் மூலம் மாணவர் சேர்க்கை, கல்வி கட்டணம் போன்றவற்றை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று கோரி அதை சாதித்திருக்க வேண்டும். முந்தைய தீர்ப்பு(கள்) வந்த போது ஆட்சியில் பங்கு வகித்த கட்சிகள் (பா.ம.க, தி.மு.க, ம.தி.மு.க) அக்கறை காட்டி ஒரு சட்டத்தினை நிறைவேற்றியிருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது. அல்லது குறைந்தபட்சம் அரசு சட்டத்தின் கீழ் நாடெங்கும் ஒரு ஒழுங்குமுறையை ஏற்படுத்தியுள்ளது என்ற வாதத்தினையாவது முன் வைத்திருக்கலாம். அவ்வாறு செய்யாமல் இப்போது கூக்குரலிட்டு பயனில்லை. 2002 ல் கூறப்பட்ட தீர்ப்பிலேயே இட ஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் தன் கருத்துக்களை கூறியிருக்கிறது . அப்போதெல்லாம் இது குறித்து விவாதிக்காமல், இப்போது சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறுவது வேடிக்கை. ஆனால் இது போன்ற ஒன்றை நான் எதிர்பார்த்தேன்.கடந்த ஆண்டி டிசம்பர் 1ம் தேதி என் வலைப்பதிவில் நான் இட்டது.----------------------------------------------------------------------------------------------இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து ?பா.ம.க தலைவர ராமதாஸ் இட ஒதுக்கிட்டிற்கு ஆபத்து என்று கூறியுள்ளார். கடந்த சில வருடங்களில்உச்ச நீதிமன்றம் தந்துள்ள தீர்ப்புகள் பொறியியல் கல்லூரிகள் உட்பட தனியார் நடத்தும் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் அரசின் எந்த அளவு தலையிட முடியும் என்பதை தௌ¤வு படுத்தியுள்ளன. இருப்பினும் இதில் குழப்பம் நிலவுகிறது, குறிப்பாக மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில். இந்த தீர்ப்புகள் வெளிவந்த போது மத்தியில் அரசாண்ட தே.ஜ.கூ வில் உறுப்பினராக இருந்த பா.ம.க இத்தீர்ப்புகளின் விளைவு குறித்து கவலைப்பட்டதாகவோ அல்லது இட ஒதுக்கீட்டிற்கு இடையூறு வரா வண்ணம் அரசுஎன்ன செய்ய வேண்டுமென்பது குறித்து அக்கறை காட்டியதாகவே தெரியவில்லை. பா.ம.க மட்டுமல்ல பிறகட்சிகள், இடதுசாரிகட்சிகள் நீங்கலாக, கல்வியில் தனியார்மயத்தினை ஒரு பிரச்சினையாகவே கருதியதில்லை. பா.ம.க, தி.க அவ்வப்போது இட ஒதுக்கீடு, சமூக நீதி என்று அறிக்கை விடுவார்கள், கூட்டம், மாநாடு நடத்துவார்கள்.இவர்கள் யாரும் உயர்கல்வியில் தனியார்மயத்தின் விளைவுகள் குறித்து அக்கறை காட்டியதில்லை. இடதுசாரிகள் ஒரளவிற்கு இதில் அக்கறை காட்டியதுடன், கேரளாவில் ஆட்சியில் இருக்கும் வரை தனியார்மயத்தினை எதிர்த்தே செயல்பட்டனர்.உச்ச நீதிமன்றம் உன்னிகிருஷ்ணன் வழக்கில் கொடுத்த தீர்ப்பினை நிராகரித்து கொடுத்த தீர்ப்பில்தனியார் கல்வி நிறுவனங்களில் அரசு தலையீடு குறித்து சிலவற்றை தௌ¤வுபடுத்தியது.அது போல்சிறுபான்மையோர் நடத்தும் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கையில் அரசின் பங்கு எது என்பதையும்தௌ¤வுபடுத்தியது. இப்போது தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள நிலைப்பாடு உச்ச நீதிமன்றம்கொடுத்த தீர்ப்புகளின் அடிப்படையிலேயே உள்ளது. மேலும் அரசு நிதி உதவி அல்லது மான்யம் அல்லது வேறு உதவி தராத போது முழுக்க முழுக்க தனியார் முதலீட்டில் நிறுவப்படும் கல்வி நிலையங்கள் பிற வணிக,தொழிற்சாலைகள் போன்றவைதான். மாணவர் சேர்க்கை, பல்கலைகழக அங்கீகாரம் போன்றவை குறித்து அரசு சில விதிகளை வகுக்ககலாம். ஆனால் இட ஒதுக்கீட்டினை நிர்வாக ஒதுக்கீட்டிற்கும் பொருந்தும் என்று வலியுறுத்த முடியாது.எனவே ராமதாஸ் இப்படி கூறியிருப்பது இன்னொரு அரசியல் ஸ்டண்ட் என்றுதான் சொல்வேன்.-----------------------------------------------------------------------------------------------இப்போது கூறப்பட்டுள்ள தீர்ப்பு ஏற்கனவே கூறப்பட்டுள்ள தீர்ப்புகள் குறித்து சில தௌ¤வுகளைத் தருகிறது. இதில் உள்ள பல கருத்துக்கள் ஏற்கனவே கூறப்பட்டுள்ளவை. இத்தீர்ப்புகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட சிரமங்கள், குழப்பங்கள் காரணமாக ஏழு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் ஒரு தீர்ப்பினை இப்போது கொடுத்துள்ளது. நானும் கிட்டதட்ட இத்தகைய தீர்ப்பினைத்தான் எதிர்பார்த்தேன். இது தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கிறது என்றால், அதற்கான அடிப்படை முந்தைய தீர்ப்புகளில் இருக்கிறது. இதுதான் உண்மை. இருப்பினும் இன்னும் விடை காண வேண்டிய, தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் இருக்கின்றன. அடுத்த கல்வியாண்டு துவங்கும் முன் இவற்றில் முக்கியமானவற்றிற்கு தீர்வு காணப்படுமானால் தேவையற்ற குழப்பங்கள் தவிர்க்கப்படலாம்.இந்த தீர்ப்பின்படி மாணவர் சேர்க்கை, இட ஒதுக்கீடு குறித்த ஒரு புரிதலுக்கு ஒரு உதாரணம் தரலாம். தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் 70,000 மாணவர்களைச் சேர்க்க முடியும் என்றால் அரசு கல்லூரிகள், அரசு இட ஒதுக்கீட்டினை அமுல் செய்ய இயலும் கல்லூரிகள் போன்றவற்றில் 7,000 இடங்கள் இருக்கின்றன என்று கொண்டால் . இத்தீர்ப்பின்படி 63,000 (அதாவது 70,000 - 7000) இடங்களில் அரசு எந்த இட ஒதுக்கீட்டினையும் செய்ய முடியாது. 7,000 இடங்களில் அரசு இட ஒதுக்கீட்டினை செய்யலாம். இதுவும் உச்சநீதி மன்றம் 69% இட ஒதுக்கீடு குறித்து பிறப்பித்த இடைக்கால உத்தரவின் அடிப்படையில்தான் செய்ய முடியும். 63,000 இடங்களை நிரப்ப தனியார் கல்லூரி நிர்வாகங்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு எந்தவிதமான இட ஒதுக்கீட்டினையும் செய்ய வேண்டியதில்லை. ஆனால் மாணவர் சேர்க்கையில் தகுதிக்கு முதலிடம் தரத்தக்க வகையில் நுழைவுத்தேர்வு அல்லது வேறுவிதங்களில் மாணவர் சேர்க்கை நடத்தலாம்.இத்தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்தாலும் பெரிதாக பயன் இராது. ஏனெனில் 11 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் வழங்கிய தீர்ப்பினை தௌ¤வுபடுத்தியிருக்கும் இந்த தீர்ப்பு ஏகமனதாகக் கூறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதி உட்பட ஏழு பேர் கொண்ட பெஞ்ச் தந்துள்ள தீர்ப்பு. மேல்முறையீட்டில் இதற்கு நேர்மாறான தீர்ப்பு வர வாய்ப்பே இல்லை என்று கூறலாம். மேல் முறையீட்டில் இன்னும் சில அம்சங்கள் தௌ¤வுபடுத்தப்படலாம், ஆனால் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் அப்படியே நீடிக்கும் என்றே கருதுகிறேன்.மத்திய அரசு இட ஒதுக்கீடு, மாணவர் சேர்க்கை குறித்து ஒரு புதிய ஒருங்கிணைந்த சட்டத்தினைக் கொண்டு வரலாம். ஆனால் அதுவும் நீதிமன்றத்தின் முன் ஒரு வழக்கின் மூலம் கேள்விக்குட்படுத்தப்படலாம். அப்போது இட ஒதுக்கீட்டினை நீதிமன்றம் ஏற்கும் என்று உத்தரவாதமில்லை.இத்தீர்ப்பு சில வரைநெறிகளை முன் வைத்துள்ளது. அதற்கு முரணாக இருக்கும் சட்டப்பிரிவுகளை உச்ச நீதிமன்றம் ஏற்க வேண்டிய கட்டாயமில்லை.. மாறாக இத்தீர்ப்பினை வழிகாட்டியாகக் கொண்டு மாணவர் சேர்க்கை குறித்து அரசு சட்டம் இயற்ற முடியும், ஆனால் அதில் இட ஒதுக்கீட்டிற்கு இடமிருக்க முடியாது. அப்படியே இடம் இருந்தாலும் உச்ச நீதிமன்றம் அச்சட்டத்தினை அமுல் செய்ய இடைக்கால தடை விதித்து வழக்கினை விசாரிக்கலாம். எனவே இட ஒதுக்கீட்டினை சட்டம் மூலம் எந்த அளவு பாதுகாக்க முடியும் என்பது கேள்விக்குறிதான். அது போல் ஒரு சட்டம் கொண்டு வந்து அதை நீதிமன்றங்களின் பரீசலனைக்கு அப்பாற்பட்டது என்ற பிரிவில் சேர்த்துவிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது சாத்தியம் என்று தோன்றவில்லை. ஏனெனில் அப்படிச் செய்வதையே கேள்விக்குள்ளக்க முடியும். குறிப்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சிலவற்றை தௌ¤வுபடுத்தும் போது அரசு அதில் உள்ளவற்றிற்கு முரணாக தன்னிச்சையாக இட ஒதுக்கீட்டிற்கு வழி வகுக்கும் சட்டத்தினைக் கொண்டு வந்து அதை நீதிமன்றங்களின் பரீசலனைக்கு அப்பாற்பட்டது என்று செய்ய முனைந்தால் அதை உச்ச நீதி மன்றத்தின் முன் கேள்விக்குட்படுத்த முடியும்.உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு குறித்து பலவேறு விதமான கருத்துக்கள் வெளியாகியுள்ளன.மத்திய அரசு ஒரு சட்டத்தினை கொண்டு வர முயல்கிறது. இத்தீர்ப்பு, அதில் கூறப்பட்டுள்ள சில கருத்துக்கள், மத்திய, மாநில அரசுகளின் நிலைப்பாடுகள் குறித்து விரிவாக எழுதும் எண்ணமுண்டு. (இப்போது எழுத இயலாது.) உதாரணமாக இத்தீர்ப்பு உன்னி கிருஷ்ணன் வழக்கில் கூறப்பட்ட தீர்ப்பினை நிராகரித்து, அதில் ஆரம்பக் கல்வி பெறுவது அடிப்படை உரிமை என்பதை மட்டும் ஏற்கிறது. அதே சமயம் உயர்கல்வியைப் பொறுத்த வரை இத்தீர்ப்பில்It is well established all over the world that those who seek professional education must pay for itஎன்று கூறப்பட்டுள்ளது.இதை ஏற்றால் பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளவர்களால் கட்டணம் கட்ட இயலாது என்றால் அவர்கள் அத்தகைய கல்வியை பெற 'தகுதி' அற்றவர்கள் என்றால் அவர்களுக்கு அதைக் கிடைக்கச் செய்வது எப்படி என்ற கேள்வி எழுகிறது. இத்தீர்ப்பின் படி ஆரம்பக்கல்வியைத்தான் அடிப்படை உரிமை என்று கோர முடியும். அப்படியானால் அரசிற்கு ஏழைகள் உயர் கல்வி பெறுவதில் என்ன பங்கு அல்லது பொறுப்பருக்க வேண்டும் அல்லது இருக்க முடியும். அரசு எந்த அளவிற்கு இந்த பொறுப்பினை ஏற்க வேண்டும். ஏழை மாணவர்களுக்கு உதவுவதில் கல்வி நிறுவனங்களுக்கு என்ன பங்கிருக்க வேண்டும் அல்லது இருக்க முடியும். இப்படி பல கேள்விகள் எழுகின்றன. இத்தகைய கேள்விகளை எழுப்பும் போது உயர் கல்வியில் அரசின் பங்கு, மான்யம் போன்றவை குறித்தும் கேள்விகள் எழும். கடந்த காலத்திலும், இப்போதும் அரசுகள் கல்விக்காக ஒதுக்கும் தொகைகள் போதுமானவையா? ஆரம்பக்கல்வி அடிப்படை உரிமை என்றால் அனைவருக்கும் ஆரம்பக் கல்வி என்றக் குறிக்கோள் எப்போது நிறைவேறும். அரசு ஆரம்பக் கல்வி, பள்ளிக்க்கல்வியில் மட்டும் அதிக கவனம் செலுத்தி உயர்கல்வியில் தொழில் நுட்ப, தொழில்சார்ந்த கல்வியை பெருமளவுக்கு தனியார்,சந்தைச் சக்திகள் தீர்மானிக்கட்டும் என்று விட்டுவிட முடியுமா, அப்படி விட்டுவிட்டால் அதன் விளைவுகள் என்னென்ன-இப்படி பலவற்றை விவாதிக்க வேண்டும். ஆனால் இங்கு என்ன நடக்கிறது. இட ஒதுக்கீடு குறித்து கூச்சல்கள் இருக்கின்றன. எழுப்பபட வேண்டிய கேள்விகள் கேட்கப்படுவதில்லை.உயர்கல்வி அடிப்படை உரிமை இல்லையா, இந்தியா போன்ற சமூகங்களில் அதை ஏழைக்களுக்கு கிடைக்கச் செய்வது அரசின் குறிக்கோளாக இருக்க வேண்டாமா என்பதை விவாதிப்பதற்குப் பதிலாக தீர்ப்பில் இட ஒதுக்கீடு குறித்து கூறப்பட்டுள்ளதே முக்கியத்துவம் பெறுகிறது. இடஒதுக்கீடு மட்டுமே சமூக நீதியாக குறுக்கப்பட்டதன் விளைவு இது. ஆனால் இப்போதுள்ள இட ஒதுக்கீடு முறை பொருளாதார ரீதியாக பிற்பட்டோருக்கு எதிரானதாக இருக்கிறது. இதை மாற்ற வேண்டும். அரசுகள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை மேலும் இப்போதுள்ள இட ஒதுக்கீட்டினால் யார் அதிகம் பலன் பெறுகிறார்கள், உண்மையிலேயே பிற்பட்டவர்கள் இதனால் பெரும் பயனடைகிறார்களா என்பதைக் கண்டறிய வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை இடதுசாரிகள் கூட முன் வைப்பதில்லை. உண்மையிலேயே இட ஒதுக்கீடு ஒரு புனிதப் பசுதான், ஒட்டு வங்கி அரசியலில் காமதேனுதான்.உயர் கல்வியில் இன்று அரசு நடத்தும் கல்வி நிலையங்களில் இருக்கும் இடங்கள் குறைவு, தனியார் நடத்தும் கல்வி நிலையங்களில் இருக்கும் இடங்கள் அதிகம். மாணவர் சேர்க்கை, கட்டணம் போன்றவை ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். capitation fee போன்றவை தடுக்கப்பட வேண்டும். ஏழை என்பதாலேயே தகுதி உடைய மாணவர்கள், மாணவிகளுக்கு உயர் கல்வி எட்டாக் கனியாக இருக்கக் கூடாது. உயர் கல்வி வணிக நோக்கில் மட்டும் நடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும். இதையெல்லாம் எப்படிச் செய்வது என்பதுதான் முக்கியமான கேள்வி, இட ஒதுக்கீடு அல்ல.இக்கருத்தினை முன் வைத்து கட்சிகள் பேசுவதில்லை, இட ஒதுக்கீட்டினை மட்டுமே பெரிய பிரச்சினையாகச் சித்தரிக்கின்றனர். இதை நான் ஏற்க மறுக்கிறேன். இவ்விஷயத்தில் ஒரு முழுமையான கண்ணோட்டம் வேண்டும். இட ஒதுக்கீடு உறுதிச் செய்யப்பட்டாலும் பிற பிரச்சினைகள் நீடிக்கும். அவை ஏற்கனவே இருந்தவைதான். அவற்றைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளாமல் இட ஒதுக்கீட்டிற்கு மட்டும் வழி செய்யும் சட்டம் கொண்டு வரப்பட்டால் பிரச்சினை தீர்ந்து விடப் போவதில்லை. மத்திய மாநில அரசுகளும், கட்சிகளும் உச்ச நீதி மன்றம் தீர்ப்புக் கூறுமுன்னரே 1990களிலேயே இப்பிரச்சினைகளைத் தீர்க்க வழிகாண முயன்றிருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது. அதைப் பற்றி இப்போது பேசி பயனில்லை என்றாலும் இப்போதும் பிரச்சினையை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் இட ஒதுக்கீடு என்ற ஒன்றே பிரதானப்படுத்தப்படுவதால் நிரந்தரத் தீர்வு ஏற்ப்படப் போவதில்லை. 69% இட ஒதுக்கீடு குறித்த இறுதித் தீர்ப்பு இன்னும் வரவில்லை என்பதை இங்கு நினைவு கொள்ள வேண்டும்.என்னுடைய கருத்து என்னவெனில் இட ஒதுக்கீட்டினை அரசு கோருவதற்குப் பதிலாக தனியார் உயர் கல்வி நிலையங்களில் பயிலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள மாணவர்களுக்கு கல்வி பெற உதவும் திட்டங்களை வகுக்கலாம். கல்விக் கடன் பெறுவதை எளிதாக்கலாம். இது போன்ற பலவற்றைச் செய்யல்லாம். உதாரணமாக தகுதி அடிப்படையில் அரசு தனியார் உயர் கல்வி நிலையங்களில் உள்ள பொருளாதார ரீதியாக வறிய நிலையில் கல்விக்கட்டணங்கள் செலுத்த இயலாத நிலையில்,இதர செலவுகளை ஏற்க இயலாத நிலையில் உள்ள மாணவர்களில்20% - 25% த்தினருக்கான செலவினை முழுமையாக ஏற்கலாம்25% த்தினருக்கு ஆகும் செலவில் 50% முதல் 70% வரை அவர்களின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு மான்யமாகவும் ,மீதியை திருப்பிததர வேண்டிய கடனாகவும் தரலாம்50% த்தினருக்கு 40% முதல் 50% த்தினை மானியமாகத் தரலாம், மீதி 60% முதல் 50% த்தினை அவர்கள் வங்கிக் கடன் மூலம் பெற உதவலாம் அல்லது அரசே திருப்பித்தர வேண்டிய கடனாகத் தரலாம்.இங்கு ஜாதி,மதப் பாகுபாடுகள் காட்டப்படக்கூடாது.பொருளாதார நிலையே முக்கியத்துவம் பெற வேண்டும். இது போன்றவற்றை நிறைவேற்ற அரசு நிதி ஒதுக்க வேண்டியிருக்கும். ஆனால் உயர்கல்வியில் அரசு செலவிடும் தொகையில் கடந்த 10 ஆண்டுகளில் எத்தகைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிரவீன் ஜா எழுதுகிறார்" Compression of public expenditure on higher education has been quite sharp, if we look at the trend in per student expenditure, from the early 1990s onwards, at constant (1993-94) prices the magnitude of decline between 1990-91 and 2001-02 was almost 25% and such a drastic fall has affected almost every aspect of the educational infrastructure." (3)அரசுகள் பணம் செலவழிக்க விரும்பாமால் இட ஒதுக்கீடு என்பதை முன் வைக்கின்றன. இந்த மோசடியைப் மக்கள் புரிந்து கொள்ளா வண்ணம் அரசியல் கட்சிகளும் ஆதரிக்கின்றன. இதைப் புரிந்து கொள்ள சில உண்மைகளை அறிய வேண்டும், அரசுகள் கல்விக்காக ஒதுக்கும் தொகை போதுமா என்ற கேள்வியை எழுப்ப வேண்டும். ஜாவின் கட்டுரை சிலவற்றைச் சுட்டிக்காட்டுகிறது. உயர்கல்வியில் அரசின் பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்பதை விவாதிக்காமல் இட ஒதுக்கீட்டினை மட்டும் முன் வைப்பது எப்படி சரியான அணுகுமுறையாக இருக்க முடியும். ஒருபுறம் தனியார் கல்வி நிலையங்களைத் துவங்க அனுமதித்துவிட்டு அவற்றில் மாணவர் சேர்க்கை, கட்டணம் போன்றவற்றை ஒழுங்குபடுத்தவும், capitation fee போன்றவற்றைத் தடுக்கவும் போதுமான முயற்சிகளை மத்திய மாநில அரசுகள் செய்யாததால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளே முக்கிய வழி காட்டும் நெறிகளாக இருக்கின்ற நிலை, இன்னொரு புறம் உயர்கல்வியில் அரசு போதுமான முதலீட்டினை செய்யாதது. இதன் விளைவாக உயர்கல்வியில் தனியாரே தீர்மானகரமான சக்திகள் என்ற நிலை உருவாவது. இதற்கு யார் பொறுப்பு. அரசுகள் தங்கள் கடமைகளை செய்தனவா. உச்ச நீதிமன்ற பெஞ்ச கூறுகிறதுIt is for the Central Government, or for the State Governments, in the absence of a Central legislation, to come out with a detailed well thought out legislation on the subject. Such a legislation is long awaited. States must act towards this direction. Judicial wing of the State is called upon to act when the other two wings, the Legislature and the Executive, do not act. ( emphasis added)உயர் கல்வியில், குறிப்பாக தொழில் நுட்ப, மருத்துவக் கல்வியில் தனியார் கல்வி நிறுவனங்கள் பல ஆண்டுகளாக இருந்தாலும், அரசு நிதி உதவி பெறாத நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது 1980களில் மத்தியில் துவங்கியது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பபின்னும் இவற்றில் மாணவர் சேர்க்கை, கட்டணம் போன்றவற்றை ஒழுங்குபடுத்த அகில இந்திய அளவில் ஒரு சட்டம் இல்லை, பல மாநிலங்களில் சட்டங்கள் இல்லை, மாறாக உச்ச நீதி மன்றம், உயர் நீதி மன்ற தீர்ப்புகளின் அடிப்படியில் ஆணைகள் பிறப்பிக்கப்படுகின்றன, விதிகள் வகுக்கப்படுகின்றன என்று சொன்னால் அது மிகையாகாது. ஏன் இருபதாண்டுகளுக்குப் பின்னும் ஒரு தௌ¤வான நடைமுறைப் படுத்தக்தக்க கொள்கையோ அல்லது சட்டங்கள், விதிகள் இல்லை. இத்தகைய நிலைக்கு யார் பொறுப்பு. உண்மை கசப்பானது, இதை மூடி மறைக்க இட ஒதுக்கீடு பயன்படுகிறது. கனம் கோர்ட்டார் அவர்களே என்று கேட்கும் முன் கேட்க்கப்பட வேண்டிய கேள்விகள் பல. (4)இவற்றைக் கேட்காமாலும், பிரச்சினையின் பல பரிமாணங்களைக் புரிந்து கொள்ளாமலும் நீதி மன்றத் தீர்ப்பு ஏதோ சமூக நீதிக்கு எதிரானது என்று பேசுவதும், எழுதுவதும் வாடிக்கையாகிவிட்டது. உண்மையை விளக்கி எழுத வேண்டிய அறிவு ஜீவிகளும் கூட இட ஒதுக்கீட்டிற்கு அப்பாற்பட்டு சிந்திக்க மறுக்கிறார்களோ என்ற ஐயம் எழுகிறது.அரசின் இட ஒதுக்கீட்டினை எதிர்க்கும் தனியார் கல்வி நிலையங்களில் மிகப் பெரும்பான்மையானவை சிறுபான்மையோர் மற்றும் பிறபடுத்தப்பட்ட ஜாதிகள் பட்டியலில் இருப்பவர்கள் அல்லது ஜாதி சங்கங்கள் அல்லது மத அமைப்புகள் அல்லது அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் அமைப்புகள், அறக்கட்டளைகள் நடத்துபவை. இவற்றை எதிர்த்து அரசியல் கட்சிகள் எதுவும் பேசுவதில்லை. ஏன் நீங்கள் சமூக நீதிக்கு எதிராக இருக்கிறீர்கள் என்று கேட்பதில்லை. யார் வழக்குத் தொடந்தது, யார் இட ஒதுக்கீடு கூடாது, மாணவர் சேர்க்கையை நாங்களே தீர்மானிக்கும் முழு உரிமை வேண்டும் என்று வாதிட்டது. ஏன் இந்தக் கல்வி நிலையங்களின் நிர்வாகங்களை அரசியல் கட்சிகள் கண்டிக்காமல் உச்ச நீதி மன்றத் தீர்ப்பு மட்டுமே இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உள்ளது என்று பேசுகின்றன. உண்மை என்ன - சிறுபான்மையோர், பிற்படுத்தப்படுத்தோர் என்ற ஒட்டு வங்கியைய் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், அவற்றில் கல்வி நிலையங்கள் நடத்துவோரை நேரடியாக விமர்சிக்கக் கூடாது அதே சமயம் சமூக நீதி என்றப் போலிக்கண்ணீரும் வடிக்க வேண்டும் என்பதால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக நீதிக்கு ஆபத்தானது என்ற பிரச்சாரத்தினை அரசியல் கட்சிகள் செய்கின்றன.அரசு நிதி உதவி 100% இருந்தாலும் சிறுபான்மையோர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் அரசு அனைத்து விஷயங்களிலும் தலையிட்டு தீர்மானிக்க முடியாது. ஆசிரியர் நியமனம் போன்றவற்றில் அரசு அங்கு செலுத்தக்கூடிய அதிகாரம் குறைவானது, பலவற்றில் அரசுக்கு அதிகாரமே இல்லை என்றுதான் கூற வேண்டும். நிலைமை இப்படி இருக்க அரசு நிதி உதவி அல்லது வேறு உதவிபெறாத கல்வி நிறுவனங்களில் அரசு எப்படி தனக்கென்று மாணவர் சேர்க்கையில் இத்தனை சதவீதம் வேண்டும், இதில் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவேன், அதைஅவை ஏற்க வேண்டும் என்று ஒரு உரிமையைக் கோர முடியும். சட்ட ரீதியாக இக்கோரிக்கைக்கு அடிப்படை இல்லை. இத்தீர்ப்பு இதை மிகத் தௌ¤வாகக் கூறுகிறது. அப்படி ஒரு உரிமை இருக்கிறது என்பதை நிலைநாட்ட அரசியல் சட்டத்தில் அதற்கு இடமளிக்கும் விதிகளும் இல்லை. இட ஒதுக்கீட்டினை அரசியல் சட்டம் அங்கீகரிக்கிறது, ஆனால் அந்த அங்கீகாரம் வரையறைகளுக்கு உட்பட்டது. உதாரணமாக தனியார் துறையில் இட ஒதுக்கீட்டினை ஒரு அடிப்படை உரிமையாகக் கோர முடியாது, அவ்வாறு கோர அரசியல் சட்டத்தில் இடமில்லை. எனவே இத்தீர்ப்பு குறித்த பல கருத்துக்கள் போதுமான புரிதல் இன்றி வெறும் உணர்ச்சி பூர்வமான அணுகுமுறையின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன என்பது என் கருத்து.சில உண்மைகள் கசப்பானவை. அவற்றை நாம் ஏற்க மறுக்கிறோம் என்பதாலேயே அவை இல்லாதவை என்று ஆகி விடாது. இட ஒதுக்கீடு மட்டுமே தகுதியானவர் அனைவருக்கும் உயர் கல்வி கிடைப்பதை உறுதி செய்து விடாது. இட ஒதுக்கீடு ஒரு பரந்த குறிக்கோளினை நிறைவேற்ற பயன்படுததக்கூடிய ஒரு கருவி அல்லது வழி. அதுவே போதும் என்றோ அல்லது அது இருந்தால் அக்குறிக்கோள் நிறைவேறிவிடும் என்றோ கருதிவிட முடியாது. இட ஒதுக்கீட்டினை அனுபவிக்க முடியாமல் கல்வியை பாதியில் கைவிட்டு உடலுழைப்பில் ஈடுபட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோர் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். அது போல் குடும்பச் சூழல், வறுமைக் காரணமாக உயர் நிலைப்பள்ளிக்கு மேல் தொடர முடியாமல் இருப்பவர்கள் இட ஒதுக்கீட்டினால் பயன் பெறுவதில்லை.இவர்களின் பிரச்சினைகளுக்கு இட ஒதுக்கீடு எப்படித் தீர்வாகும். இங்கு தலைமுறை தலைமுறையாக இட ஒதுக்கீட்டினால் பயன் பெறுபவர்களும் இருக்கிறார்கள், பயன் பெறாதவர்களும்இருக்கிறார்கள். இது தவிர இட ஒதுக்கீட்டின் கீழ் வராத ஏழைகளும் இருக்கிறார்கள். இத்தகைய சூழலில் இட ஒதுக்கீடு என்பதே சமூக நீதி என்பதாக சித்தரிப்பது மோசடியன்றி வேறென்ன. இதில் உச்ச நீதிமன்றம் முன் வைத்த creamy layer என்பதை ஏற்காத அரசியல் கட்சிகள் பெண்கள் இட ஒதுக்கீடு என்று வரும் போது அதில் சாதி ரீதியாக இட ஒதுக்கீடு கோருகின்றன. பிற்படுத்தப்படுத்தவர்களில் பணக்காரர்கள், முன்னேறியவர்கள் என்ற பாகுபாடு காட்டக் கூடாது, அனைவருக்கும் சலுகை வேண்டும் என்றால், பெண்களில் மட்டும் ஏன் பாகுபாடு காட்ட வேண்டும், அனைத்துப் பெண்களுக்கும் இட ஒதுக்கீடு என்பது பொதுவானதாகத்தானே இருக்க வேண்டும். இது போன்ற கேள்விகளை 'பகுத்தறிவாளர்கள்' கேட்பதில்லை,பிறர் கேட்பதையும் அவர்கள் விரும்புவதில்லை. ஒட்டுமொத்தமாக இட ஒதுக்கீடு என்ற சொல்லாடலை கட்டுடைக்காத வரை, அதற்கு ஜே என்று கோஷம் எழுப்பும் வரை நீங்கள் முற்போக்கானவர், கட்டுடைத்தால் நீங்கள் பிற்போக்காளர் என்று முத்திரைக் குத்தப்படுவீர்கள் என்ற நிலைதான் இங்கு இருக்கிறது. உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு குறித்த பல கருத்துக்கள் ஏன் இட ஒதுக்கீட்டினை மட்டுமே முன்னிலைப்படுத்துகின்றன என்பதற்கான விடையை இப்போது கண்டுபிடிப்பது எளிது.இத்தீர்ப்பினை அரசுகள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றன என்பது இன்னும் தௌ¤வாகவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் , இட ஒதுக்கீடு என்பதை மட்டும் உறுதி செய்ய முய்ன்றுவிட்டு பிறவற்றில் அரசுகள் போதுமான அக்கறை காட்டாமல் தங்கள் கடமையைச் செய்து விட்டோம் என்ற நிலையை ஏற்படுத்த முயலும். ஆனால் தீர்வு காண்பது அவ்வளவு எளிதல்ல.1
, http://www.hindu.com/thehindu/nic/scorder.htm
2, Justice for Dalits among Dalits : All the Ghosts Resurface - K.Balagopal - EPW- July 16,2005 www.epw.org.in
3, Withering Committments and Weakening Progress : State and Education in the Ear of Neoliberal Reforms - Praveen Jha-EPW August 13 2005 www.epw.org.in
4, http://www.keetru.com/literature/essays/aadhavan.html

வியாழன், செப்டம்பர் 15, 2005
இட ஒதுக்கீட்டின் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி

நீரஜா செளெத்ரி (From www.dinamani.com)

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு உயர் கல்வி நிறுவனங்களில் வழங்கப்பட உள்ள 27 சதவீத இட ஒதுக்கீடானது, படிப்படியாக செயல்படுத்தப்படும்; அதே நேரத்தில், போராடிக்கொண்டு இருக்கும் மாணவர்களை சமாதானப்படுத்தும் வகையில், அந்தக் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் இடங்கள் அதிகரிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரணப் முகர்ஜி யோசனை கூறியிருக்கிறார். அதன் மூலம், இட ஒதுக்கீட்டுச் சர்ச்சை முடிவுக்கு வரக்கூடிய அறிகுறி தெரிகிறது.
நேர்மையாகக் கூறுவதென்றால், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் மீதுள்ள பாசத்தினாலோ அல்லது இட ஒதுக்கீட்டின் மூலம் அவர்களுக்கு நல்வாழ்வை வழங்கிவிட வேண்டும் என்ற அக்கறையினாலோ எழுந்ததல்ல இந்தச் சர்ச்சை. அது உண்மையான நோக்கமாக இருந்திருந்தால், அரசு வேறு மாதிரியாக அதைக் கையாண்டிருக்கும்.
பிரதமர் தனது அமைச்சரவை சகாக்களுடன் விவாதிப்பதில் இருந்து அது தொடங்கி இருக்கும்; அர்ஜுன் சிங் அதை முதலில் அறிவித்து, அதனால் பெரும் மோதல் வெடித்துவிட்ட பிறகு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுடன் விவாதம், இடதுசாரிக் கட்சிகளுடன் விவாதம் என்றெல்லாம் நடத்துவதற்குப் பதிலாக, முதலிலேயே அக் கட்சிகளுடன் அரசு இப் பிரச்சினை குறித்து விவாதித்திருக்கும். ஆனால், அர்ஜுன் சிங்கின் கைங்கர்யத்தால் எல்லாம் நடந்து முடிந்துவிட்டன.
மன்மோகன் சிங்கை வீழ்த்துவதற்கு அர்ஜுன் சிங் மேற்கொண்ட நடவடிக்கைதான், "மண்டல்~2'-ன் கதை. மிகத் திறமையான அரசியல் சூழ்ச்சி என்றும் அதைக் கூறலாம். மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைப்பது உறுதியானதும் காய்களை நகர்த்தினார் அர்ஜுன். சில கல்வித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் முறை குறித்து தனது அதிருப்தியைத் தெரிவித்து இருந்தாராம் சோனியா காந்தி. எனவே அதைக் காரணமாகக் கொண்டு, அமைச்சரவையில் இருந்து அவரை நீக்குவது அல்லது அவரது இலாகாவைப் பறிப்பது போன்ற எந்த நடவடிக்கையையும் மன்மோகன் எடுப்பதற்குமுன், முந்திக்கொண்டு நடவடிக்கையில் இறங்கிவிட்டார் அர்ஜுன். இனிமேல், அத்தகைய நடவடிக்கை எதையும் பிரதமர் எடுத்தால், "பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு எதிரானவர்' என்ற குற்றச்சாட்டிலிருந்து அவரால் தப்ப முடியாது. கடந்த இரு ஆண்டுகளாகவே, தனிக்காட்டு ராஜாவாக தனது இலாகாவை நடத்திவந்துள்ளார் அர்ஜுன் சிங்.
கடந்த ஆண்டு, நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 93-வது அரசியல் சட்டத் திருத்தத்தின் நீட்சிதான், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் இப்போதைய நடவடிக்கை என்று அர்ஜுன் சிங் கூறுகிறார். அந்தச் சட்டத்துக்கு பிரதமர் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார் என்று அவர் கூறுவது சரிதான். ஆனால், அரசு உதவி பெறாத தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டு அளவானது 50 சதவீதத்தை மிகக் கூடாது என்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பைச் செல்லாதது ஆக்குவதற்காக நிறைவேற்றப்பட்டதுதான் அச் சட்டத் திருத்தம் என்று மற்றொரு வாதத்தை முன்வைக்கின்றனர் பிரதமர் அலுவலக அதிகாரிகள். மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் எல்லாம், அரசு விரும்பினால், இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்துவதற்கான அதிகாரம் அதற்கு ஏற்கெனவே இருக்கத்தான் செய்கிறது. அதை நியாயப்படுத்துவதற்கு 93-வது திருத்தச் சட்டம் தேவையில்லை. ஆனால், அதை எப்போது செயல்படுத்துவது, எப்படிச் செயல்படுத்துவது என்பது பற்றியெல்லாம் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் அரசுக்குள்ளும் விவாதிப்பதுடன், இடதுசாரிக் கட்சிகளுடனும் கலந்து பேசி செயல்படுத்துவதுதான் முறையாக இருந்திருக்கும்; அதுதான் வழக்கமான நடைமுறையுமாகும்.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பான சட்ட முன்வடிவை அமைச்சரவைச் செயலகத்துக்கு அனுப்பினார் அர்ஜுன் சிங். பிறகு அதைப் பகிரங்கமாகத் தெரிவித்தும் விட்டார். 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கான நடைமுறைகள் தொடங்கிவிட்ட பிறகு அந்த அறிவிப்பை வெளியிட்டதற்காக தனது எதிர்ப்பைத் தெரிவித்தது தேர்தல் ஆணையம். உடனே அமைச்சரவைச் செயலகம் அந்தச் சட்டமுன்வடிவை மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சருக்குத் திருப்பி அனுப்பியது. அதை அவர் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சூசகமாக அவருக்குப் பல முறை தெரிவிக்கப்பட்ட பிறகும், தேர்தல் முடிந்தவுடன், ஓர் எழுத்துகூட மாறாமல் அதே சட்ட முன்வடிவை மீண்டும் அமைச்சரவைச் செயலகத்துக்கு அனுப்பினார் அர்ஜுன் சிங்.
அடுத்து நடக்கப் போவது என்ன என்பதை மீண்டும் ஒருமுறை அனுமானிக்கத் தவறியிருக்கிறார் பிரதமர். அமைச்சரவைச் செயலகம் அந்தச் சட்ட முன்வடிவை சிறிது காலத்துக்குக் கிடப்பில் போட்டு இருந்திருக்கலாம்.... அல்லது, நிலைமை தன் கையை மீறிச் சென்று, அர்ஜுன் சிங் மீது எவ்வித நடவடிக்கையையும் எடுக்க முடியாத அளவுக்கு நிலைமை சிக்கலாகும் வரை காத்திருந்திருக்காமல், தொடக்கத்திலேயே இதில் சோனியா காந்தி தலையிடுமாறு மன்மோகன் சிங் கோரியிருக்கலாம்.
தற்போது வில்லில் இருந்து அம்பு புறப்பட்டுச் சென்றுவிட்டது. மக்கள்தொகையில் கணிசமானவர்கள் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். போட்டி மிகுந்த நமது ஜனநாய முறையில், சாதிக் கணக்குகள் மிக முக்கியமானவை ஆகும். எனவே, இப்போது தொடங்கப்பட்டுவிட்ட இட ஒதுக்கீட்டு நடவடிக்கையை சோனியாவாக இருந்தாலும் சரி, வேறு எந்த அரசியல்வாதியாக இருந்தாலும் சரி, எதிர்க்கத் துணிய மாட்டார்கள். கடந்த வாரம் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசும்போதுகூட இப் பிரச்சினையைத் தவிர்த்துவிட்டார் சோனியா காந்தி. இட ஒதுக்கீடு எந்த அரசியல்வாதியும் கொள்கையை எதிர்க்கவில்லை.
இதில் சிக்கல் என்னவென்றால், அரசியல் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு பிரதமருக்கு உதவியாளர் யாருமில்லை. அவர் பெருமளவில் அதிகாரிகளையே சார்ந்திருக்கிறார்; அரசியல்வாதிகளுடன் இணைந்து பணியாற்றுவதைவிட, அதிகாரிகளுடன் சேர்ந்து பணியாற்றுவது அவருக்கு செüகரியமாக இருக்கிறது. பிரச்சினைகள் வரும் பொழுதெல்லாம், தொலைபேசியில் நேரடியாக சோனியாவுடன் தொடர்பு கொண்டு பேசுவதும் அவருக்கு சங்கடமாக இருக்கிறது. அரசியல் பிரச்சினைகளையெல்லாம் கவனிப்பதற்கு, சமாளிப்பதற்கு சோனியா இருக்கிறார் என்ற உணர்வு அவருக்கு எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கிறது. அவருக்குப் பதிலாக வேறு யாரையும் கொண்டுவருவது தொடர்பான அறிகுறி எதையும் சோனியா வெளிப்படுத்தவில்லை; அவ்வாறு அவர் விரும்பினாலும்கூட மாற்று ஏற்பாட்டுக்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன.
இட ஒதுக்கீட்டு விவகாரமானது மன்மோகன் சிங்குக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தி இருப்பதோடல்லாமல், காங்கிரஸ் கட்சிக்கும் பெரிதாகப் பலனளிக்கப் போவதில்லை. அர்ஜுன் சிங்கின் சொந்த மாநிலமான மத்தியப் பிரதேசத்தை மட்டும் வேண்டுமானால் விதிவிலக்காகக் கூறலாம். ஏனென்றால், அங்குள்ள மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகிய சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். அர்ஜுன் சிங்கின் நடவடிக்கையால் பயன் பெறவிருக்கும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரோ லாலு பிரசாத், நிதீஷ் குமார், முலாயம் சிங், மாயாவதி, தேவெ கெüட, திமுக போன்றவர்களையே ஆதரிப்பவர்கள். காங்கிரûஸ அவர்கள் ஆதரிக்கப் போவதில்லை. உண்மையில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுத் தளமான நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தினர் அல்லது மேல்சாதியினர் ஆகியோரை விரோதித்துக் கொள்வதற்குத்தான் அது வழிவகுக்கும். 2004-ல் பெருநகரங்களில் அக் கட்சி அமோக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத் தக்கது.
"மண்டல்~2' கொள்கையை நியாயப்படுத்தி என்னதான் பேசினாலும் சரி; நடந்திருப்பது என்னவோ, நமது கல்வி முறைக்கும் மாணவர்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பற்றி துளியும் கவலைப்படாமல், அரசியல் அதிகாரக் களத்தில் அரங்கேற்றப்பட்ட அவநம்பிக்கை நாடகம்தான். யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தமது சுய ஆதாயத்துக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள்தான் நமது அரசியல்வாதிகள் என்பதற்கு இது இன்னுமோர் எடுத்துக்காட்டு. அரசியல்வாதிகளே இப்படித்தான் இருப்பார்கள் என்னும் அவர்கள் மீதான மக்களின் அவநம்பிக்கையை அது மீண்டும் உறுதி செய்துள்ளது; இது ஜனநாயகத்துக்கு ஆபத்தானதும்கூட.
தமிழில்: லியோ ரொட்ரிகோ
இட ஒதுக்கீடு இன்றைய பதிவு

அரசு அமைத்த அறிவுக் கமிஷனின் இரண்டு உறுப்பினர்கள் விலகிவிட்டனர். 8 உறுப்பினர்களில்இருவர் மட்டுமே இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக இருக்கின்றனர்.இருவர் விலகிய பின் கமிஷனின்உறுப்பினர் எண்ணிக்கை ஆறாக குறைந்து விட்டது. விலகி இருக்கும் இருவரும் கூறியிருக்கும்காரணங்கள் முக்கியமானவை. இட ஒதுக்கீட்டினை ஜாதி அடிப்படையில் செய்வதை இருவரும்ஏற்கவில்லை. அந்தேரே பெத்ல் இந்தியாவின் தலை சிறந்த் சமூகவியலாளர்களில் ஒருவர்.சமூக சமச்சீர்யின்மை குறித்து எழுதியிருக்கிறார். பானு மேத்தா பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருந்தவர்.கமிஷனின் தலைவர் சாம் பித்ரோதா 80களில் இந்தியாவின்தகவல் தொலைதொடர்பு புரட்சிக்கு அடிகோலியவர். இட ஒதுக்கீட்டினை ஆதரிக்கும்புஷ்பா பார்கவாவும் அதை நிரந்தரத் தீர்வாக, கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை. இட ஒதுக்கீட்டினை ஒரு மீள்பார்வை செய்வது அவசியம் என்பதைக் கூட அர்ஜூன் சிங்ஏற்கத் தயாரில்லை.

தலித் முரசில் ரவீந்தர நாத் என்பவர் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாகவழக்கமான வாதங்களையே வைத்துள்ளார். தமிழ் நாட்டில் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்செய்திருக்கிறார்கள் தங்கள் நலன்களுக்கு பாதிப்பு வரும் என்று அவர்கள் கருதிய போதெல்லாம்.மருத்துவக் கல்லூரிகளை தனியார் ஆரம்பித்தது குறித்து நானறிந்த வரையில் இரண்டு முறைவேலை செய்திருக்கிறார்கள். குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்யப்பட்ட ஒருவர் மரணமடைந்ததால் அரசு மருத்துவர்களின் பொறுப்பு குறித்து விதிகளை கொண்டுவரக் கூடும் என்று தெரிந்த உடன் மருத்துவர்கள் எதிர்த்து வேலை நிறுத்தம் செய்தனர். தனியார் மருத்துவ நிலையங்களை அரசு நெறிப்படுத்த திட்டமிடுகிறது என்ற அறிவிப்பு வந்தவுடன் கடும் எதிர்ப்பு வந்தது, மருத்துவர்களிடமிருந்து. இவைதான் இவர்களுக்கு சமூக அக்கறைக்கு சில எடுத்துக்காட்டுக்கள்.Correct me, If I am wrong.

தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டால் பிற்பட்ட ஜாதியினர்தான் மருத்துவக் கல்லூரிகளில் மிகப்பெரும்பான்மையான இடங்களைப் பிடிக்கின்றனர்.அப்படிப்பட்டவர்கள் இட ஒதுக்கீட்டினைஆதரிப்பது சுய நலம்தானே ஒழிய சமூக நீதி குறித்த அக்கறையினால் அல்ல. இங்கு சமூகநீதி என்பது இட ஒதுக்கீடு என்று அர்த்தப்படுத்தப்பட்ட பின் இந்த ஆதரவினை நியாயப்படுத்துவதா கடினம்.

அர்ஜூன் சிங்குடனான இந்த உரையாடலைப் படியுங்கள். அவரால் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடிவதில்லை, எது சரியான தகவல் என்பதைக் கூட அறுதியிட்டுக் கூற முடியவில்லை. இன்றையதினமணியில் வெளியாயிருக்கும் நீரஜா செளத்ரியின் கட்டுரையையும் படியுங்கள்.

இரண்டு பதிவுகளை இட்டேன். இட ஒதுக்கீடு ஆதரவாளர்கள் அறிவார்ந்த விவாதத்திற்குதயாராக இருப்பார்கள் என்று நினைத்தேன். அவர்களால் அதைச் செய்ய முடியாது என்பதற்கு ஒரு உதாரணம் இது. சுந்தரமூர்த்தி நான் என்ன எழுதியிருக்கிறேன்என்பதை புரிந்து கொள்ளாமல் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறேன் என்கிறார்.

அரசியல் சட்டம் இணையத்தில் இருக்கிறது. அதன் ஷரத்துக்களைப் புரிந்து கொள்ள நீதிமன்றங்கள், குறிப்பாக உச்ச நீதிமன்றம் அவற்றை இப்படி அர்த்தப்படுத்திக் கொண்டுள்ளன,அரசியல் சட்டத்தின் ஆதார அம்சங்கள் என்ன, அரசியல் சட்டம் முன்னிறுத்தும் விழுமியங்கள்என்ன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் குருடர்கள் யானையைப்பார்த்த கதை போலாகி விடும். சுருக்கமாகச் சொன்னால் இட ஒதுக்கீடு ஒரு விதிவிலக்கு,அது விதியல்ல, கட்டுப்படுத்தும் ஆதார விதியாகவோ, கோட்பாடாகவோ இருக்க முடியாது.

பாராளுமன்றம் அரசியல சட்டத்தினை அடிப்படையை மாற்ற முடியாது, அதற்கான உரிமைஇல்லை என்று கேசவானந்த பாரதி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது.அதாவது இட ஒதுக்கீட்டினைப் பொறுத்த வரை அந்த விதி விலக்கினை விதியாக மாற்றமுயல்வது அரசியல் சட்டத்தின் அடிப்படையை மாற்றுவதாக அமையும்.

பாராளுமன்றத்திற்குஅதற்கு அதிகாரம் இல்லை. இதற்கு காரணம் அண்ணல் அம்பேத்கர். அவர் முன்னின்றுஉருவாக்கிய அரசியல் சட்டம்தான் பாராளுமன்றத்திற்கு வரம்பற்ற அதிகாரம் தரவில்லை,உச்ச நீதிமன்றத்திற்கு முக்கியமான அதிகாரங்களையும், பொறுப்புகளையும் தந்துள்ளது.
எனவே திட்டுவதானால் அவரைத் திட்டுங்கள்.
இட ஒதுக்கீடு -1
இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டம் சரியானதுதானா ?

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டினை எதிர்த்து மாணவர்கள், மருத்துவர்கள் உட்பட பலதரப்பினர் போராடுகின்றனர். இதை ஆதரிப்பவர்களும் உள்ளனர். இந்த இட ஒதுக்கீட்டிற்கு வழி வகுப்பதாகக் கூறப்படும் 93ம் அரசியல் சாசன திருத்தம் இனாம்தார் வழக்கில் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு நடைமுறையில் அமுலாவதை தவிர்க்கவே செய்யப்பட்டது. அரசு உதவி பெறாத கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கோர அரசுக்கு உரிமையில்லை என்றது அந்தத் தீர்ப்பு. சட்டத் திருத்தம் என்ன சொல்கிறது (இத்தீர்ப்பினை குறித்து நான் திண்னையில் எழுதியிருக்கிறேன்).

THE CONSTITUTION (NINETY-THIRD AMENDMENT) ACT, 2005NO. 93 OF 2005[20th January, 2006.]
An Act further to amend the Constitution of India.BE it enacted by Parliament in the Fifty-sixth Year of the Republic ofIndia as follows:-

1.Short title and commencement.1. Short title and commencement.-(1) This Act may be called theConstitution (Ninety-third Amendment) Act, 2005.(2) It shall come into force on such date as the Central Governmentmay, by notification in the Official Gazette, appoint.2.Amendment of article 15.2.
Amendment of article 15.-In article 15 of the Constitution, afterclause (4), the following clause shall be inserted, namely:-"(5) Nothing in this article or in sub-clause (g) of clause (1) ofarticle 19 shall prevent the State from making any special provision,by law, for the advancement of any socially and educationally backward classes of citizens or for the Scheduled Castes or the Scheduled Tribes in so far as such special provisions relate to their admission to educational institutions including private educational institutions, whether aided or unaided by the State, other than the minority educational institutions referred to in clause (1) of article 30.".

இதில் பிற்பட்ட ஜாதி என்ற சொல் இல்லை, 27% இட ஒதுக்கீடு என்பதும் இல்லை. மேலும் மத்திய அரசிற்கு இட ஒதுக்கீட்டில் அக்கறை இருந்தால் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு இட ஒதுக்கீட்டிலிருந்து விலக்கு அளித்திருக்க கூடாது. இந்த சட்ட திருத்தம் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி காரே பிற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான கேள்வி சமீபத்திய முக்கியமான மூன்று வழக்குகளில் எழவில்லை. பிற பிற்பட்ட ஜாதியினர் என்பது அரசின் விளக்கம். இது சரிதானா என்பதை வழக்குத் தொடர்பட்டால் உச்ச நீதிமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். (1).

ஆனால் இந்த விஷயம் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாளர்களால் சுட்டிக்காட்டப் படுவதில்லை. இந்த திருத்தம் இட ஒதுக்கீட்டிற்கு வகை செய்கிறது, அதை கட்டாயமாக்கவில்லை. அதாவது அரசு மாணவர் சேர்க்கையில் சிறப்பு விதிகளை செய்ய உரிமை தருகிறது. அரசு கட்டாயம் செய்ய வேண்டும் என்றோ, இட ஒதுக்கீடு 27% இருக்க வேண்டும் என்றோ அது கூறவில்லை. இந்த 27% என்பது மண்டல் கமிஷன் சிபாரிசு செய்தது.

மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் பிற்பட்ட வகுப்பினருக்கு எதிரான அல்லது தடையாக ஏதேனும் உள்ளது என்று யாரும் கூறவில்லை. விடைத்தாள் திருத்தம், தேர்வு முறை யில் அவர்களுக்கு எதிரான பாரபட்சம் நிலவுவதாகவும் புகார் இல்லை. அப்படி இருக்கும் போது திடீரென ஏன் இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும், அதுவும் 27%. இவற்றில் பிற்பட்ட மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள், தேர்ச்சி பெறுகிறார்கள். பாரபட்சம் இல்லாத போது எதற்காக 27% இட ஒதுக்கீடு தேவை. உச்ச நீதிமன்ற வழக்குகளில் OBC மாணவர் சேர்க்கை ஒரு பிரச்சினையாகப் பார்க்கப்பட வில்லை. இது வழக்கில் இடம் பெறவே இல்லை. ஆனால் இதையெல்லாம் இட ஒதுக்கீடு ஆதரவாளர்கள் பொருட்படுத்துவதில்லை. இட ஒதுக்கீட்டினை எப்படி நுழைப்பது என்றுதான் பார்க்கிறார்கள்.

49.5% இட ஒதுக்கீடு என்பது கிட்டதட்ட 50% இட ஒதுக்கீடு. அதாவது இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில்50% ஜாதி அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என்றால் இது அனைவருக்கும் சம வாய்ப்பு என்பதையே கேலிக் கூத்தாக்குகிறது.அரசே இப்படி ஜாதி அடிப்படையில் பாரபட்சங்களை, சமநிலைசீர்குலைவினை செய்தால் ஜாதி அடிப்படையில் சமூகம் செயல்படுவதைஅரசு ஊக்குவிக்கிறது, ஜாதிய கட்டுமானத்தினை இன்னும் வலுவாக்குகிறது என்றுதான் பொருள். ஜாதிதான் தீர்மானிக்குமெனில் ஜனநாயகம், சம உரிமை, பாரபட்சமின்மை, ஜாதிய பாகுபாடுகளை ஒழிப்பது போன்றவற்றை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு ஜாதிதான்பிரதானம், இதில் முதலிடத்தில் பிற்பட்டோர், பின் தலித்கள்,பழங்குடியினர், பின்னர் முற்பட்ட ஜாதிகள் என்று அறிவித்து விடலாம். தி.க போன்ற கட்சிகளின் அறிவிக்கப்படாத செயல்திட்டம் இதுதான். இதை அரசுகள் இட ஒதுக்கீட்டினை சகட்டு மேனிக்குஅதிகரிப்பது, விரிவாக்குவது மூலம் மறைமுகமாக ஆதரிக்கின்றன. பாதிக்கப்படுவோர் இதை எத்தனை காலம்தான் பொறுத்துக்கொள்ள வேண்டும்.
அம்பேத்கார் இட ஒதுக்கீடு என்பது குறைந்த அளவிலேயே இருக்க வேண்டும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார். இப்போதுஉள்ள 69% இட ஒதுக்கீடு 50% ஒதுக்கீடு போன்றவை அவர் கருத்திற்கு முரணாக உள்ளன.

அம்பேத்கரும், அரசியல் சட்டத்தினைஉருவாக்கியவர்களும் இட ஒதுக்கீட்டினை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான தீர்வாகவே கண்டனர். இட ஒதுக்கீட்டின் பெயரில்ஜாதி வேறுபாடுகளை உருவாக்குவதோ அல்லது அதிகரிப்பதோ அல்லது சமூகத்தில் பிளவு ஏற்படுத்துவதோ அவர்கள் நோக்கம்இல்லை. ஆனால் இப்போது அவர்கள் கருத்துக்கள் மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு ஜாதி ரீதியினால இட ஒதுக்கீடு எங்கும் வேண்டும்,எதிலும் வேண்டும், எப்போதும் வேண்டும் என்ற நிலைப்பாடே சரியானது என்று வாதிடப்படுகிறது. இது தொடருமானால் ஒரு நாள் இட ஒதுக்கீட்டினால் பாதிக்கப்பாடுவோர் பொறுமை இழந்து விடுவர். தாங்கள் இரண்டாம் தர குடிமக்களா என்று கேட்பதுடன்நின்று விட மாட்டார்கள். இந்த ஏற்றதாழ்வினை மாற்ற கடுமையான போராட்டங்களை துவங்குவார்கள்.
உயர் கல்வியில் போட்டி போடும் மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட சமமான தகுதியைப் பெற்றிருப்பர். உதாரணமாக மருத்துவத்தில்முது நிலை, பொறியியலில் முது நிலை போன்றவற்றைப் படிக்க அடிப்படை தகுதி உள்ளது. அத்தகுதியை எட்டிய பின் யார்பிற்பட்டோர் யார் முற்பட்டோர் இருவரும் ஒருவர்தான். பிற்பட்டோர் என்பதால் இட ஒதுக்கீடு ஆரம்பக் கல்வியுடன்நின்றுவிடுவதில்லையே. BE, MBBS,BTECH என்ற அளவிலும் இருக்கிறது. இதற்கு அப்புறமும் இட ஒதுக்கீடு வேண்டும்என்பது என்ன நியாயம். உயர் ஜாதி மாணவர், பிற்பட்ட ஜாதி மாணவர் இருவரும் ஒரே படிப்படைப் படித்து ஒரே பட்டத்தினைபெற்றிருக்கும் போது அவர்களிடையே ஒருவருக்கு மட்டும் ஜாதி அடிப்படையில் முன்னுரிமை, சலுகை தருவது என்னநியாயம்.IIM களில் மேலாண்மை முதுகலை படிப்பிற்கான நுழைவுத் தேர்வு எழுதுவோரில் பலர் BE/BTECH படித்தவர்கள்,வேலை அனுபவம் கொண்டவர்களும் உண்டு. இங்கு ஜாதி ரீதியில் பாகுபடுத்துவது எப்படி சரியான தேர்வு முறையாகஇருக்க முடியும். வேலை அனுபவம், மற்றும் படிப்பு உள்ள முற்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஒருவரை விட படிப்பு மட்டுமேஉள்ள ஒருவர் பிற்பட்ட ஜாதி என்ற ஒரே காரனத்திற்காக முன்னுரிமை பெறுவது என்பது சரியானதல்ல.

மருத்துவ உயர் படிப்புகளில் இடங்கள் மிகவும் குறைவு.சில பிரிவுகளில் ஒரு கல்லூரியில் 20 இடங்கள் இருக்கும், மாநிலம்முழுவதும் 100 இடங்கள் இருந்தால் அதிகம். இதில் 50% இடஒதுக்கீடு அடிப்படையில் மட்டும் ஒதுக்கப்படும் என்பதுஎன்ன நியாயம். மீதி 50% இடங்களுக்கும் பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட ஜாதியினர் போட்டி போடலாம் என்று இருக்கும்போது இட ஒதுக்கீட்டினால் பாதிக்கப்படுவர்களுக்கு என்ன கிடைக்கும், கிட்டதட்ட பூஜ்யம். தமிழ் நாட்டில் இப்படித்தான் நிலைமை இருக்கிறது.முற்பட்ட வகுப்பினர் MS, MD போன்றவற்றில் சேர்வது மிகமிக கடினமாக இருக்கிறது. இதால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரே நம்பிக்கை மத்திய அரசின் கீழ் இருக்கும் மருத்துவ ஆராய்ச்சி,கல்வி நிறுவனங்கள். அங்கும் 50% இடஒதுக்கீடு என்றால் அவர்கள் எங்கு போவார்கள், என்ன செய்வார்கள். ஒரே குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் பிற்பட்டஜாதி என்பதால் தாத்தா, மகன்/மகள், பேரன்/பேத்தி என்று தொடர்ந்து சலுகை அனுபவிப்பார்கள். ஆனால் முற்பட்ட ஜாதிஎன்றே ஒரே காரணத்திற்காக ஒருவருக்கு இடம் கிடைக்காது. இதுதான் சமூக நீதி என்றால் அந்த சமூக நீதி இன வெறுப்புக் கோட்பாட்டிற்கு ஒப்பானதுதான்.

ஒரு புறம் தமிழ் நாடு முன்னேறிய மாநிலம் என்கிறோம். ஆனால் தமிழக மக்கள் தொகையில் இட ஒதுக்கீட்டினால் பயன் பெறுவோர் மொத்த மக்கள் தொகையில் 87%. (BC-46.14%, MBC-17.43%, Denotified Communities 3.44%, SC- 19% ST1.04%) (2) .அப்படியானால் தமிழ்நாட்டில் மக்கள் தொகையில் 87% socially and educationally backward ஆக இருக்கிறார்களா. 1947 முதல் முன்னேற்றமே இல்லையா.நீதிக்கட்சி காலத்திலிருந்தே பிற்பட்ட ஜாதிகள் அதே நிலையில்தான் உள்ளனவா. socially and educationally backward என்ற நிலையிலிருந்து எந்த ஜாதியும், முன்னோக்கி நகரவே இல்லையா. இப்போதும் இட ஒதுக்கீடு கட்டாயம் தேவை என்ற நிலையிலா எல்லா பிற்பட்ட ஜாதிகளும் உள்ளன.

இப்போதுள்ள இட ஒதுக்கீடு கொள்கையும், முறையும் மூன்று அடிப்படையான விஷயங்களை கருத்தில் கொள்வதில்லை. ஒன்று ஒரேஜாதிக்குள் உள்ள குடும்பங்கள், நபர்களுக்கிடையே கல்வி, சொத்து, நில உரிமை, போன்றவற்றில் உள்ள வேறுபாடுகள், ஜாதிகளிடையேசமூக பொருளாதார நிலையில் உள்ள வேறுபாடுகள், ஒரு ஜாதிக்கும், ஒட்டுமொத்த சமூகத்திற்கும் சமூக பொருளாதார நிலையில்உள்ள வேறுபாடுகள். மிகவும் பிற்பட்ட என்ற பிரிவு ஏற்படுத்தப்பட்டாலும் அதிலும் இந்த மூன்று விதமான வேறுபாடுகள் கணக்கில்கொள்ளப்படுவதில்லை. இதனால் பிற்பட்ட ஜாதிகளில் முன்னேற்றம் கண்டோர், கண்ட ஜாதிகள் தொடர்ந்து அதிக அளவில்பயன்பெற்று வருகின்றன. இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்ட போது பிற்பட்ட ஜாதிகள் என்று கருதப்பட்டவை எல்லாம்ஒரே சமூக பொருளாதார நிலையில் இல்லை. காலப் போக்கில் சில ஜாதிகள் வேறு சில ஜாதிகளை விட அதிக முன்னேற்றம்கண்டிருந்தன. அவை சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்பட்ட நிலையிலிருந்து ஒரு கட்டத்தில் வெளியே வந்திருக்கும். அப்படி எந்தஜாதியும் முன்னேறவில்லை என்றால் தமிழ் நாட்டில் சமூக முன்னேற்றம் ஏற்படவே இல்லை என்று பொருள். .ஜாதிகள் இருக்கும் உண்மையான நிலை கண்டறியப்பட்டு இட ஒதுக்கீடு உண்மையிலேயே பிற்பட்ட ஜாதிகளுக்கு பயன் தரும் வகையில் மாற்றப்பட வேண்டும்.பொருளாதார ரீதியாக பின் தங்கியோர், பெண்கள் - இவர்களும் இட ஒதுக்கீட்டால் பயன் பெற வேண்டும்.

இட ஒதுக்கீடு என்பது 1950களில் முன் வைக்கப்பட்ட போது இருந்த நிலை வேறு, இப்போது உள்ள நிலை வேறு. சமூக மாற்றத்தினையும் கருத்தில் கொண்டு இட ஒதுக்கீடு கொள்கை, நடைமுறை மாற்றப்பட வேண்டும். இன்னும் சொல்லப்ப் போனால் 15 அல்லது பத்தாண்டுகளுக்குப் பின் இட ஒதுக்கீடு தேவையில்லை என்ற நிலைக்கு அனைத்து பிரிவினரும் முன்னேறும் வண்ணம் அரசு செயல்பட வேண்டும். முதலில் இட ஒதுக்கீட்டின் பயன்கள், சாதக,பாதக விளைவுகளைக் குறித்து ஒரு விரிவான ஆய்வு தேவை. பிற்பட்ட சாதிகளின்பட்டியலும் ஒரு சமூக-பொருளாதார ரீதியான கணக்கெடுப்பிற்கு பிறகு மாற்றப்பட வேண்டும். இப்போது பிற்பட்டஜாதிகளில் எல்லா ஜாதிகளும் ஒரே மாதிரி முன்னேற்றம் காணவில்லை என்பதால் இட ஒதுக்கீட்டால் அதிக பயன்பெற்ற, வெகுவாக முன்னேறிய ஜாதிகளுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட வேண்டும். உண்மையாகவே பின் தங்கியுள்ளஜாதிகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும். தேவை ஒரு மறு சிந்தனை, அவ்வாறின்றி இட ஒதுக்கீட்டினை நீட்டிப்பது அது ஏற்படுத்தும் பாதகமான விளைவுகளையே அதிகப்படுத்தும். சமூகத்தில் பிரிவினயை அதிகப்படுத்தி, ஜாதி ரீதியான விருப்பு,வெறுப்புகளை அதிகப்படுத்தும். பிற்பட்ட ஜாதிகள், முன்னேறியுள்ள/முற்பட்ட ஜாதிகளுடன் சமமாக போட்டியிட்டு வெற்றி பெறும் நிலையில்தான் தமிழ்நாட்டில் இன்று இருக்கிறார்கள். பொறியியல், மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளில் அனைவருக்குமான இடங்களுக்கும், இட ஒதுக்கீட்டின்வரும் இடங்களுக்கும் போட்டியிட எடுக்க வேண்டிய cut-off மதிப்பெண்களில் மிகக்குறைவான, புறக்கணிக்கதக்க அளவிலானவித்தியாசமே உள்ளது. எனவே பிற்பட்ட ஜாதிகள் இட ஒதுக்கீடு இல்லாவிட்டால் இடம் கிடைக்காமல் பாதிக்கப்படுவர் என்பதுகட்டுக்கதை. உண்மையில் இது 1947க்குப் பின் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் சாதகமான விளைவு, சமூக முன்னேற்றத்திற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இப்படிப்பட்ட நிலையில் இட ஒதுக்கீட்டு கொள்கையில் மறு பரீசலனை செய்வதும், தேவையான மாற்றங்கள்கொண்டு வருவதும் அக்கொள்கையில் உண்மையான குறிக்கோள்களை எட்ட உதவும்.
எனவே இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டத்தினை நான் 100% ஆதரிக்கிறேன். வேலை நிறுத்தம் செய்வது குறித்து எனக்குமாறுபட்ட கருத்து உண்டு. ஆனால் வேலை நிறுத்தம் செய்ததால்தான் மத்திய அரசு ஒரளவாவது எதிர்ப்பினை கருத்தில் கொள்கிறது.வெறும் மனுக்கள், ஊர்வலங்கள் என்று இருந்தால் அது அவற்றை கணக்கில் கொள்ளாது. தமிழ் நாட்டில் 1980களில் இறுதியில் இடஒதுக்கீட்டிற்காக எத்தகைய 'அமைதியான' போராட்டங்களை நடத்தப்பட்டன என்பதை மக்கள் அறிவர். இன்று இட ஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டத்தினை விமர்சிக்கும் சிலர் கடந்த காலத்தில் தாங்கள் நடத்திய போராட்டங்களை நினைத்துப் பார்க்கட்டும்.தமிழ் நாடில் 69% இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக அரசு செய்தது போல் பந்த் தினை இப்போது இட ஒதுக்கீட்டினை எதிர்ப்பவர்கள் திணிக்க வில்லை.
முற்பட்ட ஜாதிகள், பிற்பட்ட ஜாதிகள் என்று எழுதுவதை தவிர்க்க விரும்புகிறேன். முற்பட்ட என்று கருதப்படும், பிற்பட்ட என்று கருதப்படும் என்று எழுதுவதே சரியாக இருக்கும். இக்கட்டுரையில் நான் அந்த அர்த்தத்தில்தான் இச்சொற்களைப் பயன்படுத்தியுள்ளேன்.

(1) New Indian Express 10th April -Arjun rushes in where SC didn't tread
The phrase, "socially and educationally backward classes," has been twisted by Arjun Singh to mean OBCs. This is significant given that, as Justice Khare says, not one of the three key Supreme Court rulings on the subject, Pai, Islamic Academy and Inamdar, mentioned OBCs as a target group for reservations in educational institutions.
Justice Khare, who presided over the bench in both Pai and Islamic Academy case, made it clear: "The interpretation of Pai judgment means there can be reservation fixed for the weaker sections but never was there any mention of OBC. The Constitution doesn't define or recognise OBC, it's a government interpretation." Consider the key SC rulings on the subject:
• T M A Pai Foundation case (Oct 31, 2002): The main question was whether quotas could be fixed in government-aided and unaided minority institutions. The majority judgment of the 11-judge bench was that there could be reservation for "weaker sections" of society but there was no reference to OBCs.
• Islamic Academy case (Aug 14, 2003 ): To dispel "confusion" over the Pai ruling, a five-judge bench was set up for an "explanation." This bench said that as per Pai, criteria could be fixed for reservations in unaided and aided minority institutions. Once again, no reference to OBCs.
• Inamdar (Aug 12, 2005 ): A seven-judge bench was formed to explain the earlier two rulings. It ruled that "neither the policy of reservation can be enforced by the State nor any quota or percentage of admissions can be carved out to be appropriated by the State in a minority or non-minority unaided educational institution". It also made it clear that the state "cannot insist on private educational institutions which receive no aid from the State to implement State's policy on reservation for granting admission on lesser percentage of marks, i.e. on any criterion except merit."
It was to rollback this ruling that the amendment was made in January, the amendment which Arjun Singh is now using. Asked what would happen if this amendment is challenged, Justice Khare said: "Another 11-judge bench has to hear the challenge and will decide the validity of this amended provision."

(2) http://www.tn.gov.in/policynotes/bc_mbc_welfare.htm
இட ஒதுக்கீடு - 2

எழுதப்பட்ட இரண்டு கட்டுரைகளில் இரண்டாவது இது. முதலில் எழுதியதை வெட்டி, ஒட்டி,ஒருங்குறிக்கு மாற்றுவதில் உள்ள பிரச்சினைகளால் அதை இங்கு இப்போது இடமுடியவில்லை. பின்னர் இட முயற்சிக்கிறேன்.

1,அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டுமென்று ராமதாஸ் கூறியிருக்கிறார்.மத்திய அரசின் கட்டுப்பாட்டில், நிதி உதவி பெறும் பல உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை பல்வேறு கட்டங்களில் இருக்கிறது. இப்போது அவசரச் சட்டம் கொண்டு வந்தால் குழப்பம் மிஞ்சும்.மாணவர்கள் நீதிமன்றங்களை நாடுவர், இடைக்காலத் தடை பெறுவர்.தமிழ் நாட்டில் பாமக தேர்தலில் பெரும் வெற்றி பெறவில்லை. அதை மறைக்க இட ஒதுக்கீடுப் பிரச்சினை முன்னிறுத்தி தன்னை பிற்பட்ட ஜாதிகளின் காவலனாக காட்டிக் கொள்ள அவர் செய்யும் முயற்சிதான் இது.
2,அவசர சட்டமோ அல்லது சட்டமோ கொண்டு வந்தாலும் வேறு சில அம்சங்கள் இருக்கின்றன.உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி பிற்பட்டோரில் முற்பட்டோர் (creamy layer) என்ற கொள்கையின் படி இட ஒதுக்கீடு பெற யார் யார் தகுதியுடையவர்கள் என்பதை அறிவிக்க வேண்டும். மத்திய அரசின் பிற்பட்ட ஜாதிகளின் பட்டியலும், மாநில அரசின் பட்டியல்களும் ஒன்றல்ல. இதில் எதை எடுத்துக்கொள்வது, இல்லை இரண்டையும் சேர்த்து ஒரு பட்டியலாகவா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு விடை கண்டாக வேண்டும்.ஒரு ஜாதி ஒரு மாநிலத்தில் பிற்பட்டோர் பட்டியலில் இருக்கிறது, இன்னொரு மாநிலத்தில் இல்லை என்பது போன்றவற்றை எப்படி கையாள்வது என்பதையும் அரசு முடிவு செய்ய வேண்டும். இதையெல்லாம் முடிவு செய்ய அவகாசம் தேவை. எனவே எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அரசு செயல்பட முடியாது.
3, இப்போது மத ரீதியான இட ஒதுக்கீடு இல்லை. இதை தரப்போவதாக கட்சிகள் கூறியுள்ளன.அது உறுதியாகத போது இருக்கிற ஜாதிகள் பட்டியலின்படி இட ஒதுக்கீடு என்றால், மத ரீதியானசிறுபான்மையோர் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எங்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுத்த பின்இந்த இட ஒதுக்கீட்டினை அமுல் செய்ய வேண்டும் என்று கோரலாம். அவர்கள் கோரிக்கையை ஏற்றால் உடனே இட ஒதுக்கீடு செய்ய முடியாது. குறைந்தது அடுத்த கல்வியாண்டு வரை காத்திருக்க வேண்டும்.
4, பேராசிரியர் ஏ.வைத்தியநாதன் சில யோசனைகளைக் கூறியிருக்கிறார்.(ஹிந்து 18.5.2006). அவைகவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியவை. இது போல் வேறு சில யோசனைகளும் கூறப்பட்டுள்ளன.அவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
5, இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (CPI(M) ) திடீரென creamy layer, முற்பட்ட ஜாதியில் பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ளோருக்கு இட ஒதுக்கீடு என்றெல்லாம் கூறியிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு முரட்டுத்தனமாக ஆதரவு தெரிவித்த போது இதெல்லாம் தோன்றவில்லையா. எப்படியாயினும் இட ஒதுக்கீடு 50%க்கு மேல் போக முடியாது. அதற்குள் இப்படி பிற்பட்டோருக்கு தனியாக, முற்பட்டோரில் ஒரு பிரிவினருக்காக தனியாக எப்படி எந்த விகிதத்தில் ஒதுக்குவது என்பதயும் அவர்கள் சொல்லியிருக்கலாம். சிக்கல் என்னவென்றால் பிற்பட்டோருக்கு 27% என்று மீண்டும் மீண்டும் கூறிவிட்டு இப்போது குறைக்கிறோம் என்றால் பிற்பட்டோர் அதை எதிர்ப்பர். அதிக பட்சம் 27.5% தான் ஒதுக்க முடியும்.
6, ஸ்வாமி அக்னிவேஷ்,வல்சன் தம்பு கட்டுரை இட ஒதுக்கீட்டினை முழுமையாகவரவேற்று எதிர்க்கு மருத்துவர்கள் மீது கடும் விமர்சனம் வைக்கிறது. இந்த விமர்சனம் முட்டாள்த்தனமாக உள்ளது.மாணவர்கள் தங்கள் எதிர்கால நலனுக்காகப் போராடுகிறார்கள், உரிமைகளுக்காக, சம வாய்ப்பிற்காக போராடுகிறார்கள். அதனால் பொது மக்கள் சிரமப்படுவது உண்மை. அதற்கு பொறுப்பு அரசுதான். இட ஒதுக்கீடு கொண்டு வர எண்ணியுள்ளோம், உங்கள் நலன்களை பாதிக்க விரும்பவில்லை, எனவே உங்கள் ஆலோசனைகளைக் கோருகிறோம் என்று மாணவர்களிடம் கூறி, அறிவிப்பு வெளியிடும் முன்னர் பேச்சு வார்த்தைகள் நடத்தியிருக்கலாமே.மத்திய அரசு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர்கள், ஆசிரியர்கள், தொழிற் துறை. கல்வியாளர்களை கலந்தாலோசிக்காமல் ஒரு அறிவிப்பினை வெளியிட அவசியம் என்ன. இத்தகைய ஒரு மாற்றம் ஒரு பெரும் மாற்றம் என்பதால் அதற்கு தேவையான கால அவகாசத்தினை யோசித்திருக்க வேண்டும். இட ஒதுக்கீடு தர நினைக்கிறோம், அதே சமயம் தகுதி,திறமை உடையவர்கள் நலனும் பாதிக்கக்கூடாது என்று விரும்புகிறோம். எனவே நாடு தழுவிய ஒரு விவாதம் ஏற்பட்டு, பல்வேறு தரப்பினர் கருத்தினை ஆய்ந்த பின் கருத்தொற்றுமை ஏற்பட வழி செய்வோம் என்று அரசு முடிவு செய்திருக்கலாமே. அரசு தன் முடிவினை ஒரு தலைபட்சமாக திணிக்க முயன்றது. இதற்கு எதற்கு மாணவர்களை குறை சொல்ல வேண்டும்.
7, மத்திய அரசு அமைத்துள்ள கமிட்டியில் இருவர் வெளிப்படையாக இட ஒதுக்கீட்டினை ஆதரிப்பவர்கள்.எனவே அந்த கமிட்டி எத்தகைய முடிபுகளை எடுக்கும் என்பது வெளிப்படை.மாணவர்கள் கூறிவது போல் ஒரு கமிஷம் அமைக்க வேண்டும். இந்த கமிட்டி என்ற கண்துடைப்பினை மாணவர்கள் நமப்த்தயாரில்லை என்பது நியாயமானதே.
8. இடங்களை அதிகரிப்பது என்பதை உடனே செய்ய முடியாது. ஆய்வுக்கூடங்கள், கட்டிடங்கள், விடுதிகள் கட்ட குறைந்தது ஒராண்டாகும். ஆசிரியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் காலம் தேவை. மேலும் கூட்டப்படும் இடங்களுக்கு தக்காற்போல் அடிப்படை வசதிகளை கூட்ட வேண்டும். இப்போது ஐஐடி, ஐஐஎம் களில் ஆசிரியர் எண்ணிக்கை இருக்க வேண்டியதை விட குறைவாக இருக்கிறது. தகுதியான, திறமையான பலர் தனியார் துறைக்கு சென்றுவிடுகிறார்கள் அல்லது வெளிநாடுகளுக்கு சென்று விடுகிறார்கள் .ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கவும் அவகாசம் தேவை. அமெரிக்காவில் ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து, அவர்கள் பணியில் சேர 9 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை ஆகிறது. இந்தியாவிலும் கிட்டதட்ட இதே நிலைதான். எனவே இடங்களை கூட்டுவது என்பது அவ்வளவு எளிதல்ல.
இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது.இடங்களைக்கூட்டுவதால் தரம் பாதிக்கபடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு தகுந்தாற் போல் வசதிகளை பெருக்குவது, ஆசிரியர் எண்ணிக்கையை கூட்டுவது என்பதை அவசரக் கோலமாக செய்ய முடியாது.

9, அரசு உயர்கல்வியில் எந்த அளவு, எதில் தலையிட வேண்டும் என்பதை விவாதிக்க வேண்டும். இந்த 93ம் சட்டத் திருத்தம் அரசுக்கு மட்டற்ற அதிகாரத்தினைத் தருகிறது. இது சரியல்ல. அரசு இந்த அளவுதான், இதுவரைதான் தலையிட வேண்டும் என்பதை நிர்ணயம் செய்ய வேண்டும். இட ஒதுக்கீடு என்பதை பயன்படுத்திக் கொண்டு அரசு எப்படி வேண்டுமானாலும் தலையிடலாம், கட்டளை இடலாம் என்பதை முதலில் மாற்ற வேண்டும்.
10, ஐஐடி, ஐஐஎம். ஐஐஎஸ்ஸி போன்றவற்றை அரசின் தலையீடு இல்லாத தன்னாட்சி கொண்ட அமைப்புகளாக மாற்ற வேண்டும். அமெரிக்காவில் ஹார்வார்ட், ஸ்டான்போர்ட்., கொலம்பியா பல்கலைகழகங்கள் இயங்குவது போல் இவையும் மாற்றப்பட வேண்டும். அரசு நிதி உதவி தருகிறது என்பதற்காக சகட்டு மேனிக்கு தலையிட அனுமதிக்கக் கூடாது.
11, மேல்நாட்டுப் பல்கலைகழகங்கள் இங்கு வளாகங்கள் துவங்க, ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்க அனுமதிக்கப்பட வேண்டும். அரசு அவை லாப நோக்கில் மட்டும் செயல்படாவண்ணம் கட்டுப்பாடுகள் விதிக்கலாம். மற்றப்படி மாணவர் சேர்க்கை, ஆசிரியர் நியமனம் போன்றவற்றில் தலையிடக் கூடாது. அவை அதிக கட்டணம் வசூலிக்கும் என்பது உண்மை. ஏழைகளுக்கு கல்விக்கடன்கள், உபகாரச் சம்பளங்கள், மான்யங்கள் தந்து ஏழைகளும் அவற்றில் படிக்க வகை செய்யமுடியும். அமெரிக்கா, ஐரோப்பாவில் உயர்கல்வி நிறுவனங்கள் இந்தப் பிரச்சினையை எப்படி கையாள்கின்றன என்பதை ஆராய்ந்து சில தீர்வுகளைக் காணலாம். மேல் நாட்டுப் பல்கலைகழகங்கள் இங்கு வருவது இட ஒதுக்கீட்டால் ஏற்படும் பாதகமான விளைவுகளை குறைக்க உதவும். எனவே அவற்றின் தேவை இங்கு இப்போது மிகவும் அவசியமாகிறது.
12, இந்த இட ஒதுக்கீடு சர்ச்சை நமக்கு உணர்த்து என்னவென்றால் அரசுக்கும், அனைத்து கட்சிகளுக்கும் வாக்கு வங்கிகள், ஜாதி அரசியலுக்கு அப்பாற்பட்டு சிந்திக்க தெரியாது. இட ஒதுக்கீடு என்ற பெயரிலும், சமூக நீதி என்ற பெயரிலும் கல்வித்துறையில், உயர்கல்வியில் உள்ள பிரச்சினைகளை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள்.
13, இந்த இட ஒதுக்கீடு என்ற சொல்லாடல் இந்த சர்ச்சையில் கொஞசமேனும் கட்டுடைக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள இட ஒதுக்கீடு கொள்கை, முறை சரியல்ல என்ற புரிதல் முன்பை விட பரவலாக இருக்கிறது. ஆனால் இட ஒதுக்கீடு குறித்த மாயை இன்னும் அதிகமாக இருக்கிறது. இச்சொல்லாடல் முழுமையாகக் கட்டுடைக்கப்பட்டு இட ஒதுக்கீடு என்பது முதலில் சரியாகவும், பின்னர் மோசமான விளைவுகளை ஏற்படுத்திய தீர்வு, அதன் போதாமைகள் அதிகம், இதை சமூக நீதி என்று எண்ணி மயங்குதல் கூடாது என்பவற்றை பரவலாக எடுத்துச் செல்ல வேண்டும்.
14, தமிழக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்த போது ஜெயலலிதா அரசு அவர்களை பணி நீக்கம் செய்தது. இப்போது மத்திய அரசும் போராடும் மருத்துவர்களை அவ்வாறு செய்யப் போவதாகக் கூறியுள்ளது. ஜெயலலிதா செய்தது தவறென்றால் இது மட்டும் சரியா. இல்லை இட ஒதுக்கீட்டினை எதிர்த்து போராடுவது பணி நீக்கம் என்ற தண்டனையை ஒரு தலை பட்சமாக, விசாரணையின்றி தரும் அளவிற்கு அவ்வளவு பெரிய குற்றமா. அன்புமணி ராமதாஸின் கண்ணோட்டத்திற்கும், ஜெயலலிதாவின் கண்ணோட்டத்திற்கும் என்ன பெரிய வேறுபாடு.ஒரு வேளை இப்படி பணி நீக்கம் செய்வதும் சமூக நீதியின் ஒரு பகுதியோ. வீரமணியைக் கேட்டால் ஆம் என்று சொன்னாலும் சொல்லுவார்.
15, பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளோருக்கு இட ஒதுக்கீடு தர அரசியல் சட்டத்தில் இடமில்லை. இட ஒதுக்கீடு என்பது கல்விரீதியாக, சமூகரீதியாக பின் தங்கியுள்ள வகுப்புகளுக்கு என்றே அரசியல் சட்டம் கூறுகிறது.நரசிம்ம ராவ் அரசு பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளோருக்கு ஒரு குறிப்பிட்ட சதவீத இட ஒதுக்கீடு தரும் ஆணையைப் பிறப்பித்தது. பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு குறித்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற பெஞ்ச் அந்த ஆணை செல்லத்தக்கது அல்ல என்று நிராகரித்துவிட்டது. ஏனெனில் அரசியல் சட்டத்தில் அப்படி இட ஒதுக்கீடு தர இடமில்லை. இட ஒதுக்கீடு என்பது வறியவர்களை முன்னேற்றும் திட்டம் அல்ல. பின் தங்கிய வகுப்புகள் சமூக ரீதியாக,கல்வி ரீதியாக முன்னேறவும், அந்த முன்னேற்றம் காரணமாக அரசு வேலைகள் போன்றவற்றில் உரிய இடங்களைப் பெற உதவும் ஒரு கருவி. பொருளாதார முன்னேற்றம் அதன் மூலம் ஏற்பட்டாலும் இட ஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல. எனவே அரசியல் சட்டத்தில் மாற்றம் செய்யாமல் அத்தகைய இட ஒதுக்கீடு செய்ய முடியாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு இந்த விஷயத்தினை விலாவாரியாக அலசுகிறது. விரிவஞ்சி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

16, இறுதியாக, இன்றைய பிஸினஸ் லைனில் பேராசிரியர் வைத்தியனாதன், ஐஐஎம், பெங்களூர் ஒருசிறப்பான
அர்ச்சகர்-அரசு முடிவு- ஒரு அவசரப் பதிவு

இன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகர ஆக வழி செய்யும் ஆணைப் பிறப்பிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வலைப்பதிவுகளிலும் இது பற்றி விவாதம் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து நான் பல இடங்களில் எழுதியிருக்கிறேன். 2002ல் உச்ச நீதிமன்றம் அளித்ததீர்ப்பு இந்த உரிமையை தந்துள்ளது என்பதையும் குறிப்பிட்டிருக்கிறேன். 1970களில் கருணாநிதிமுதல்வராக இருந்த போது இதற்கான முயற்சியை எடுத்தார்.ஆனால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அதை செயல்படுத்த முடியாதபடி செய்துவிட்டது. ஆணை செல்லாது என்று அது சொல்லவில்லை, ஆனால் ஆகம விதிகளின்படித்தான் பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.ஆகம விதிகளும், காலங்காலமாக பின்பற்றப்பட்ட விதிமுறைகளும், (சைவ, வைணவ கோயில்களில்) அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை சாத்தியமற்றதாக்கிவிட்டிருந்தன. இதனால் அரசின் முயற்சிதோற்றது. அதற்குப் பின்னர் இன்று வரை என்ன நடந்தது என்பது பெரிய கதை, சுவாரசியமான'கதை

இதை விரிவாக எழுத இப்போது இயலாது.இந்த வார இறுதிக்குள் எழுத முயல்கிறேன்.ஒருவேளைஅடுத்த வாரம் எழுதலாம். பெரியாரின் கடைசி ஆசைகளில் ஒன்று இப்போதுநிறைவேறியிருக்கிறது. இது முன்னரே நிறைவேறியிருக்கும் அவரது சீடர்கள் முயன்றிருந்தால்.இதை சாத்தியமாக்கியிருப்பது, தி.கவும், பெரியார் திகவும் வசை பாடும் உச்ச நீதிமன்றம்.ஆம் 'இந்த நீதிமன்றங் களில் பார்ப்பனர்களும், உயர்சாதிக் காரர்களுமே நீதிபதிகளாக இருப்பதால் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்' அந்த உயர் நீதிமன்றம்(கேரளா),உச்ச நீதிமன்றம்தான் இதை சாத்தியமாக்கியிருக்கிறது. எந்த அரசியல் சட்டத்தினை இவர்கள் எதிர்தார்களோ, எதை பெரியார் தன் ஆயுள் முழுதும் வசை பாடினாரோ அதன் பிரிவுகளின் அடிப்படையில்தான் இது இன்று சாத்தியமாயிருக்கிறது. 1970 களில் சாத்தியமில்லாத ஒன்று பின்னர் எப்படி சாத்தியமாயிற்று -விரிவாக விளக்குகிறேன், எழுதவுள்ள கட்டுரையில்

கலைஞர் 1970களில் செய்த முயற்சிகளுக்காக அவரைப் பாராட்டுகிறேன். ஆனால் அவர் மீண்டும்ஆட்சியில் இருந்த காலங்களில் (1989- 91, 1996 - 2001) இது குறித்து அவர் ஒன்றும் செய்த மாதிரித் தெரியவில்லை.1972ல் தீர்ப்பு வந்த போது மேல் முறையீடும் செய்யப்படவில்லை. இவற்றையும் கருத்தில் கொள்வது அவசியம். கருணாநிதியைப் பாராட்டுகின்றன அதே வேளையில் உண்மையில் என்ன நடந்தது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஜெயலலிதா அரசிற்கு பெண்களையும் அர்ச்சகர் ஆக்கும் எண்ணம் இருந்திருக்கிறது என்பதையும்இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தூரப்பார்வையும்

சுந்தரமூர்த்தி தன் வலைப்பதிவில் நான் எழுதிய ஒரு பதிவினை முன் வைத்து சிலவற்றை எழுதியிருக்கிறார். என் பதிவிற்கு அந்தளவு முக்கியத்துவம் தந்ததற்கு என் நன்றிகள்.என் எதிர்வினையை பின்னூட்டமாக இட்டிருக்கிறேன். இதை இன்னும் விரிவாக இங்குபேச விரும்பவில்லை. அதற்குத் தேவையுமில்லை என்று நினைக்கிறேன்.

சில நாட்கள் இடைவெளிக்குப் பின் சந்திப்போம்
இட ஒதுக்கீடு எதிர்ப்பும்

இட ஒதுக்கீட்டிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள் மீது வன்முறைத் தாக்குதலை ஏவி விட்டிருப்பது கண்டிக்கதக்கது. எதிர்ப்பவர்கள் வேலை நிறுத்தம் செய்வதால் பொதுமக்கள் பாதிக்கபடுவதால் எதிர்ப்பாளர்களின் கோரிக்கையில் உள்ள நியாயங்கள் புரிந்து கொள்ளப்படாமல்போகலாம். பொதுமக்கள் அதிருப்தி அவர்கள் மீதான் எதிர்ப்பாக மாறலாம். எனவே காலவரையற்றவேலை நிறுத்தம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

அர்ஜுன் சிங் அறிவு கமிஷன் அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்டது அல்ல என்று கூறியிருக்கிறார்.அவரும் அப்பாற்பட்டவர் அல்ல என்பதை அவர் நினைவில் கொள்வது நல்லது. அரசியல் சட்டத்தினை உருவக்கியவர்கள் முதலில் தாழ்த்தப்பட்ட, ப்ழங்குடியினருக்குத் தான் இட ஒதுக்கீடுசெய்தனர். பின்னர் ஒரு திருத்தம்தான் பிற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு செய்ய வழி வகுத்தது. இப்போது அண்மையில் செய்யப்பட்ட அரசியல் சட்ட திருத்தம் இதற்கு வழி வகுப்பதாக கூறப்பட்டாலும், சமீபத்திய திருத்தம் உச்ச நீதிமன்ற தீர்ப்பு செல்லாது என்று கூறியதை நிராகரித்து இட ஒதுக்கீட்டிற்கு வகை செய்யவே கொண்டு வரப்பட்டது. எனவே இதைக் காட்டி பிரச்சினையை திசை திருப்புகிறார்கள். இந்தத் திருத்தமும் கூட உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ப்பட்டால் செல்லுமா என்பது கேள்விக்குறி.

இது போன்ற கேள்விகளைத் தவிர்க்கத்தான் நீதிமன்றங்கள் இட ஒதுக்கீட்டில் தலையிடக் கூடாது என்று சில புதுமனு வாதிகள் கோரிக்கை வைக்கிறார்கள். அம்பேதக்ர் பெயரைக் சொல்லிக் கொண்டே அவர் உருவாக்க உதவிய அரசியல் சட்டத்தின் அடிப்படைகளான சம வாய்ப்பு, பாரபட்சமினை, பிறப்படிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது போன்றவற்றை குழி தோண்டிபுதைக்க முயலும் யாரும் எதிர்க்கப்பட வேண்டியவர்கள்.

நீதிமன்றங்கள் பாராளுமன்றம் அரசியல்சட்டத்தின் அடிப்படை அமைப்பினை மாற்ற முடியாது, அதற்கான உரிமை இல்லை என்பதைதெளிவாகச் சொல்லுகின்றன. இட ஒதுக்கீடு ஒரு விதிவிலக்குதான், அதுவே பிரதான விதியாகமுடியாது. ஜாதிய அடிப்படையில் சமூகத்தில்பிளவு உருவாக்கி சிறுபான்மையோர், பிற்பட்ட ஜாதிகள் கூட்டணி கொண்டு பிறர் உரிமைகளைப்பறிக்க நினைக்கும் கும்பல் ஒன்றினை புரிந்து கொள்ள வேண்டும்.1990ல் இருந்த நிலை வேறு, இப்போதைய நிலை வேறு.

இட ஒதுக்கீடு என்ற பெயரில் அரசு எதைச் செய்தாலும் பார்த்துக் கொண்டிருப்பார்கள், அதிக பட்சம்பத்திரிகைகளில் எழுதுவார்கள்,புத்தகம் எழுதுவார்கள் என்று நினைக்க வேண்டாம். இட ஒதுக்கீடு என்ற பெயரில் ஏற்றதாழ்வுகளை அதிகரிக்கும் முயற்சிகளுக்கான எதிர்ப்பு அரசியல் சட்டம் தந்துள்ள உரிமைகளையும், அதன் அடிப்படைக் கோட்பாடுகளையும் பாதுகாக்கும் முயற்சியும்கூட. எனவே இது வெறும் இட ஒதுக்கீடு மட்டும் குறித்த பிரச்சினை அல்ல. தனியார் துறையில் இட ஒதுக்கீடு, நீதிமன்றங்களில் (உயர்,உச்ச) ஜாதி ரீதியாக ஒதுக்கீடு என்று இட ஒதுக்கீட்டினை நீட்டித்து சமூகத்தினை ஜாதி ரீதியாக பிரித்து சிலரை அதிக சமம் ஆக்கும் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும். இவை எல்லாம் அதிகாரம் பிற்பட்ட ஜாதிகளிடம் மட்டுமே என்பதை நிறுவச் செய்யப்படும் முயற்சிகள். அரசு எல்லா இடங்களிலும் தலையிட்டு நாட்டாமை செய்ய வழிவகுக்க உதவும் முயற்சிகள். தனி நபர் உரிமைகள், அரசியல் சட்டம் தரும் உரிமைகளைகுறைக்க, நிராகரிக்க செய்யப்படும் இம்முயற்சிகள் எந்தப் பெயரில், எந்த வடிவில் வந்தாலும்எதிர்க்கப்பட வேண்டியவையே.
மாற்றமும், ஒரு அறிவிப்பும்

இவ்வலைப்பதிவின் முகப்பில் This is a 'Politically Incorrect' Blog, not a blog that reflects the bland 'left', 'secular' and 'progressive' views and cliches என்பதைச் சேர்த்திருக்கிறேன்.
' பொலிடிகலி கரெக்ட்' பதிவுகளை எதிர்பார்த்து யாரும் ஏமாந்துவிட வேண்டாம் என்பதை தெளிவாக்கவே இதைச் செய்திருக்கிறேன். பொலிடிகலி கரெக்ட் என்ற பெயரில் வழக்கமானஇடதுசாரி, முற்போக்கு என்று அறியப்படும் கருத்துக்களை பதிவு செய்ய விரும்பவில்லை.அந்தப் பெயர்களில் முன் வைக்கப்படும் கருத்துக்களை விமர்சிக்கவும், கேள்விக்குட்படுத்தவும்விரும்புகிறேன்.

உதாரணமாக அமெரிக்க வெறுப்பு என்பது கண்மூடித்தனமாக பலரால் முன் வைக்கபடுகிறது.இதற்கு ஒரு உதாரணம் எஸ்.வி.ராஜதுரை எழுதியுள்ள கட்டுரை. எனக்கு இத்தகைய கண்மூடித்தனமான வெறுப்ப்டன் உடன்பாடு இல்லை. கடுமையான விமர்சனம் என்பதுவேறு, சகட்டுமேனிக்கு எதிர்ப்பது, மிகைப்படுத்தி எழுதுவது என்பது வேறு. இன்னொருஉதாரணம் உலக வர்த்தக அமைப்பு. இங்கு பலரும் (இடதுசாரிகள், வலதுசாரிகள்) இதைமிக கடுமையாக விமர்சிக்கிறார்கள், சிலர் இதை ஏகாதிபத்தியத்தின் கருவி என்று கூடஎழுதுகிறார்கள். அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாமல் சேவைகள் குறித்த பொதுஒப்பந்தம், வர்த்தகம் தொடர்புடைய அறிவுசார் சொத்துரிமைகள் குறித்த ஒப்பந்தங்கள்மீது விமர்சனங்கள் வைக்கபடுகின்றன. இவற்றின் மீது எனக்கும் விமர்சனம் உண்டு. ஆனால்அது வெறும் எதிர்ப்பல்ல, ஆதாரமற்ற வெறுப்பல்ல.

உதாரணமாக இங்கு வெளி நாட்டு கல்விநிறுவனங்கள்,பல்கலைகழகங்கள் வளாகங்கள் அமைப்பதை, கிளைகள் ஏற்படுத்துவதைஇடதுசாரிகள் உட்பட பலர் எதிர்க்கின்றனர். இந்த எதிர்ப்பு ஒரளவு நியாயமானதே,அதே சமயம் அந்த எதிர்ப்பு இதில் உள்ள சாதகங்களை கருத்தில் கொள்வதில்லை அல்லதுகுறைத்து மதிப்பிடுகிறது. நிபந்தனைகளுக்கு உட்பட்டு, சில ஒழுங்கு முறைகளின் அடிப்படையில்அவை இங்கு செயல்படுவதை நான் வரவேற்ப்பேன்.சேவைகள் குறித்த பொதுஒப்பந்தம் நமக்கு சில அனுகூலங்களைத் தருகிறது, சில துறைகளில் இந்தியா உலகவர்த்தகத்தில் இதை மிக சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் இதற்குவிலையாக நாம் சில துறைகளில் அந்நிய முதலீட்டினை, நிறுவனங்களை அனுமதிக்கவேண்டியிருக்கும். அது சில எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். அவற்றைகுறைக்க அரசு சிலவற்றை செய்ய வேண்டியிருக்கும். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது நமக்கு நன்மைகள் விளையும் என்றால் இவ்வொப்பந்தத்தினை அதற்கு உதவிடும்வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது என் கருதுகோள்.

உதாரணமாகஉயர் கல்வியில் அந்நிய நாட்டுப் பல்கலைகழகங்கள் இங்கு வளாகங்களை அமைத்து,ஆராய்ச்சிக்கும், பயிற்சிக்கும் முக்கியத்துவம் தரும் போது அது பல நல்ல விளைவுகளைஏற்படுத்தும். இங்குள்ள மானுட ஆற்றலை இன்னும் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளமுடியும். அமெரிக்காவில் மின்னணுவியல், உயிரியல் தொழில்நுட்பம்,அதி நுண் தொழில் நுட்பம்,தகவல் தொடர்பு போன்ற துறைகளில் பல்கலைகழகங்கள், ஆய்வு நிலையங்களில் செய்யப்பட்டகண்டுபிடிப்புகள், புதியன உருவாக்கம் மிகப் பெரும்பங்காற்றியுள்ளன. இதை இந்தியாவில்செய்ய முடியுமா, அதற்கு பிற நாட்டுப் பல்கலைகழகங்களுடான கூட்டு ஆய்வுகள், அவைஇங்கு வளாகம் அமைப்பது உதவுமா என்பது போன்ற கேள்விகள் இருக்கின்றன. ஆனால்கண்மூடித்தனமான எதிர்ப்பு என்ற நிலைப்பாடு எடுக்கும் போது இந்த சாத்தியப்பாடுகள் குறித்துநாம் யோசிப்பதில்லை. இங்கு அயல்நாட்டுப் பல்கலைகழகங்கள் வந்தால் அவற்றை எப்படிநெறிப்படுத்துவது , எப்படி பயன்படுத்திக் கொள்வது என்று யோசிக்காமல் அந்த ஒப்பந்தமேநமக்கு எதிரானது என்ற நிலைப்பாட்டினைத் தான் இங்கு பலர் முன் வைக்கின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில் ஒருவன் வழக்கமான இடதுசாரி, முற்போக்கு என்று சொல்லப்படுகின்றநிலைப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு யோசிக்க வேண்டியிருக்கிறது. எது பிரச்சாரம். எது உண்மைஎன்பதை அறிய வேண்டியிருக்கிறது.

எப்போதும் நான் கிட்டதட்ட அப்படித்தான் யோசித்தும்,எழுதியும் வந்துள்ளேன். உதாரணமாக 2004ல் உலக வர்த்தக அமைப்பு குறித்து நான் எழுதியசிறு நூலில் கூட இதை எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதுதான் நம் முன் உள்ள சவால்,இதிலிருந்து விலகுவது என்பது பதில் அல்ல என்ற ரீதியில் எழுதியிருந்தேன்.

பெரியார் ஆகட்டும், உலகமயமாக்கலாகட்டும், இட ஒதுக்கீடாகட்டும் என்னுடைய கருத்துக்கள்,கருதுகோள்கள், நிலைப்பாடுகள் வித்தியாசமாக இருப்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஒரளவேனும் அறிந்து கொண்டு, படித்துக் தெரிந்து கொண்டு, யோசித்து, தகவல்களைச் சேகரித்தபின்னரே நான் எழுதுகிறேன், அல்லது குறைந்தபட்சம் இதுதான் நான் சொல்ல வருவது என்றாவதுகுறிப்பிடுகிறேன். பல நேரங்களில் விரிவாக எழுத நேரமில்லாத போது நான் இதைப் படித்தேன், நீங்களும் படித்துப் பாருங்கள் என்று சுட்டிகளைத் தந்து விடுகிறேன். இதுதான் என்னால் செய்ய முடிகிறது. இதுதான் முடிந்த முடிபு, மாறாதது என்று ஒரே கருத்தினை காலாகாலத்திற்கும் கொண்டிருப்பதை விட முடிந்த அளவு திறந்த மனதுடன் அணுகுவது, தன் நிலைப்பாடுகளைசுய விமர்சனத்திற்கு உட்படுத்தி போன்றவை தேவையான அணுகுமுறைகள் என்று கருதுகிறேன்.

மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமுல்படுத்துவது குறித்த சர்ச்சை எழுந்த போது அவ்வாறுசெய்வதை நான் ஆதரித்தேன். ஆனால் கடந்த பத்தாண்டுகளில் இட ஒதுக்கீடு குறித்த என்கண்ணோட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன. இதற்கு காரணம் நான் இது குறித்து தொடர்ந்துபடித்ததும், இது நடைமுறையில் எப்படி செயல்படுகிறது என்பதை அறிய முயன்றதும்தான்.இன்னும் அறிய வேண்டியவை பல உண்டு என்பது எனக்குத் தெரியும். எந்த ஒரு புள்ளியிலும்நான் இது போதும், இதற்கு மேல் இதில் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை என்று நினைத்ததில்லை. ஆகவே ஒரு மீள் பார்வையில் பார்க்கும் போது இட ஒதுக்கீடு குறித்துமுன்பு போல் ஒரு ஆதரவான நிலைப்பாட்டினை எடுக்க முடியவில்லை. இட ஒதுக்கீடுதான்ஒரே வழியா, இந்தியச் சூழலில் ஜாதி ஒன்றினை மட்டுமே அளவுகோலாக வைக்க முடியுமா,அமெரிக்க உதாரணங்கள் இங்கு எந்த அளவு பொருந்தும் என்றெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கிறது.

எனவே இனி வரும் பதிவுகள் மிகவும் வித்தியசமான, 'பொலிடிகலி இன்கரெக்ட்' நிலைப்பாடுகளை முன் வைத்தால் அதிர்ச்சி அடையாதீர்கள், கொஞ்சமேனும் வழக்கமான இடது சாரி, முற்போக்குநிலைப்பாடுகளுக்கு அப்பாற்பாட்டு சிந்திப்பது அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
சல்மா, பதர் சயீத்

இந்தத் தேர்தலில் சல்மா தோற்றுள்ளார்.பதர் சயீத் வென்றுள்ளார். வென்றுள்ளனர். சல்மா வெற்றி பெறுவார் என்று நினைத்தேன். அவர் மருங்காபுரியில் 2532 வாக்குள் வித்தியாசத்தில் தோற்றுள்ளார்.

சல்மா, பதர் சயீத் இருவருக்கும் எதிராக செய்யப்பட்ட எதிர்மறைப் பிரச்சாரம் அவர்கள் போட்டியிட்ட கட்சியின் கொள்கைகள் என்பதற்கு அப்பாற்பட்டு அவர்கள் மீதான தனி நபர் எதிர்ப்பு பிரச்சாரமாக இருந்திருக்கிறது. இதையும் மீறி பதர் சயீத் வென்றுள்ளார். சல்மாதோற்க இந்த எதிர்மறைப் பிரச்சராமும் ஒரு காரணம் என்று தோன்றுகிறது, இருவரும் இங்கு வரம்பு மீறியவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

சல்மாவின் எழுத்துக்கள் சிலருக்கு அதிர்ச்சிஅளித்திருக்கலாம், அவர் எழுதியது இலக்கியமல்ல என்று கூட சிலர் கருதலாம். ஆனால் இந்தப்பிரச்சாரம் அவரை இஸ்லாத்தின் எதிரியாக, இஸ்லாத்தின் எதிரிகளின் கைக்கூலியாக சித்தரித்துசெய்யபட்டுள்ளது. இது எந்த அளவு கேவலமாக செய்யப்படுள்ளது, கீழ்த்தரமான தனி நபர்தாக்குதலாக என்பதை படிப்பவர்கள் முடிவு செய்து கொள்ளலாம். மத அடிப்படைவாதிகள்எந்தக் காரணங்களுக்காக தஸ்லீம நஸ்ரீனை வெறுக்கிறார்களோ அதே காரணங்களின் அடிப்படையில் சல்மா மீதும் வெறுப்புக் காட்டப்பட்டுள்ளது. சல்மா எழுதுவது இலக்கியமாஇல்லையா என்ற கேள்விக்கு அப்பால் இந்த வெறுப்பு கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது.பெண்கள் எதை எழுதலாம், எப்போது எழுதலாம், எங்கு எழுதலாம் என்பதை நாங்கள்தான்தீர்மானித்து தீர்ப்பளிப்போம் என்று கொக்கரிக்கும் மத அடிப்படைவாதிகளின் எதிர்ப்பினையும்மீறி சல்மா தொடர்ந்து எழுத வேண்டும், செயல்பட வேண்டும். அவர் தேர்தலுக்காக சமரசம்செய்து கொண்டாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. எது எப்படியாயினும் அவர்தொடர்ந்து எழுதுவார், அரசியலிலும் தொடர்வார் என்று எதிர்பார்க்கிறேன்.

பதர் சயீத் மத அடிப்படவாதிகளுக்கு எரிச்சலூட்டுகின்றன. அவர் தலைக்கு முக்காடு அணிவதில்லை என்பதில் துவங்கி அவர் மீதான எதிர்மறைப் பிரச்சாரம் அவரையும் ஒரு மார்க்க நெறிகளை மீறிய பெண்ணாகசித்தரிக்க முயல்கிறது. பொது வாழ்வில் பெண்கள் எத்தனையோ விமர்சனங்களை சந்திக்க நேர்ந்தாலும் இது போன்ற விமர்சனங்களின் ஒரு நோக்கம் பிற பெண்கள் இத்தகைய பெண்களைஆதரிக்கக் கூடாது என்பது. இங்கு தனிப்பட்ட நபர் தவிர, அவரது பெண்ணியமே மார்க்கத்திற்குவிரோதமாக சித்தரிக்கப்படுகிறது. அணியும் உடை கூட விமர்சனத்திற்கு தப்பவில்லை. 'பொது இடங்களில் அநாகரிகமாக உடையணிந்து' என்று விமர்சனம் செய்யப்படுகிறது. இந்த விமர்சனம்வைப்பவர்கள் அவர் வக்பு வாரியத் தலைவராக இருந்து என்ன செய்தார், முறையாக செயல்பட்டாராஇல்லையா என்பதைக் கூறுவதில்லை. பொது வாழ்வில் செயல்படும் பெண்களின் செயல்பாட்டினைவிட அவர்களின் உடைக்கும், அவர்கள் கூறும் கருத்துக்களின் அடிப்படையில் அவர்களை விரோதிகளாக சித்தரிப்பது எளிது. ஜெயலலிதா ஆட்சியில் இவர் கூடுதல் அட்வகேட் ஜெனரலாகஇருந்திருக்கிறார். இப்படி ஒரு முக்கியமான பொறுப்பினை இவருக்கு தரப்பட்டுள்ளதும், வக்புவாரியத்தின் தலைமைப் பொறுப்பில் இவரை ஜெயலலிதா நியமித்ததும் ஜெயலலிதா இவர்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு சான்று என்று கொள்ள முடியும். இத்தகைய எதிர் பிரச்சாரத்தினையும் மீறி இவர் சுமார் 2700 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது. இது அதிமுகவின் வெற்றி மட்டுமல்ல, மத அடிப்படைவாதிகளின் விமர்சனத்திற்கு உள்ளான ஒரு பெண்ணின் வெற்றியும் கூட. அந்த அளவில் இது மகிழச்சிதருகிறது, வரவேற்க்கப்பட வேண்டியது.
தேர்தல் முடிவுகள், ஆட்சி, சவால்கள்

திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிப் பெற்றுள்ள போதிலும், திமுகவினால் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலை, இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். கூட்டணி ஆட்சியா இல்லை திமுகஆட்சிக்கு வெளியிலிருந்து பிற கட்சி(கள்) ஆதரவா என்பது ஒரிரு நாளில் தெளிவாகி விடும். ஐந்து முறை முதல்வராக கருணாநிதி வரலாற்றுச் சாதனைப் படைத்திருக்கிறார். கூட்டணி ஆட்சியானாலும், தனி ஆட்சியானாலும் அவர் முன் உள்ள சவால்கள் பல. காவிரி நீர்ப் பங்கீடு,முல்லைப் பெரியாறு அணை, பாலாற்றின் குறுக்கே கட்டப்பட உள்ள அணை என்று அண்டை மாநிலங்களுடன் நீர் பங்கீடு, பயன்பாடு குறித்த பிரச்சினைகளை அவர் எதிர்கொண்டேயாகவேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை எந்த அளவு நிறைவேற்றப் போகிறார், நிதி ஆதாரங்களைஎப்படித் திரட்டப் போகிறார் என்பதை மக்கள் உன்னிப்பாக கவனிப்பார்கள். வாக்குறுதிகளைநிறைவேற்ற வரிகளை விதித்தால் அல்லது கட்டணங்களை உயர்த்தினால் அது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும்.பல் வேறு தரப்பினருக்கும் அவர் தந்துள்ள வாக்குறுதிகளில் எவற்றிற்குமுன்னுரிமை கொடுத்து எப்படி நிறைவேற்றுவார் என்பதும் கவனிக்கப்படும்.கூட்டுறவு கடன் ரத்தினை அவர் தள்ளிப் போட முடியாது. ஜூனில் சமர்ப்பிக்கப்படு வரவு- செலவு திட்டத்தில் அஅதற்கு நிதி ஒதுக்கியாக வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு பஸ் கட்டண உயர்வினைதவிர்க்க இயலாத ஒன்றாக ஆக்கிவிடும். இப்போது நிதி நிலைமை மோசமாக இல்லை என்றாலும்வருவாயைப் பெருக்காமல் அவர் அறிவித்த திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாது. அரசுசிக்கன நடவடிக்கைகள் மூலம் செலவுகளை குறைக்க முடியும். அரசு ஊழியர் சம்பளம்,ஒய்வுதியம்போன்றவற்றிற்கு அரசின் வருவாயில் மிகப் பெரும்பானமையான தொகை ஒதுக்க வேண்டிய நிலையில்வளர்ச்சி, அடிப்படை கட்டுமானத்திற்கு நிதி ஒதுக்குவது சிரமம்தான். இலவச திட்டங்கள், கடன் ரத்து ஆகியவற்றையும் இத்துடன் சேர்த்தால் வளர்ச்சிக்கு மிஞ்சும் நிதி வெகுவாக குறைந்து விடும்.இதை கலைஞர் எப்படி சமாளிப்பார் என்பது ஒரு முக்கியமான கேள்வி.

வாக்கு சதவீதம் போன்ற தகவல்கள் இப்போது முழுமையாகக் கிடைக்கவில்லை. பல தொகுதிகளில்வெற்றிக்கும் தோல்விக்குமான இடைவெளி குறைவாகவே உள்ளது. பலமான கூட்டணி இருந்தும் திமுக கூட்டணிக்கு அதிமுக கூட்டணி பெரும் சவாலாகவே இருந்திருக்கிறது. விஜயகாந்த கட்சி யாரைபாதித்திருக்கிறது என்பது தெரியவில்லை. மத்தியில் திமுக ஆட்சியில் பங்கேற்றிருப்பது பலம்தான். இதன் மூலம் கலைஞர் தமிழ் நாட்டிற்கு என்னச் செய்யப் போகிறார். பொருளாதார வளர்ச்சியினை துரிதப்படுத்த, வேலைவாய்ப்புகளைப் பெருக்க, முதலீடுகள் இங்கு அதிகரிக்க என்ன செய்யப் போகிறார். மத்திய அரசு எடுக்கும் முடிவுகள் மக்களை பாதிக்கும் போது ஏற்படும் அதிருப்தி திமுகவையும் பாதிக்கும்.இன்னும் மூன்று ஆண்டுகள் மத்தியில் ஆட்சி நீடித்தால் அது கலைஞருக்கு உதவியாக இருக்கும்.அதே சமயம் அந்த ஆட்சி சரியாக செயல்படவில்லையென்றால் அதன் எதிர்மறை விளைவுகள்திமுக, அதன் தலைமையிலுள்ள கூட்டணியின் செல்வாக்கில் பாதிப்பு ஏற்படுத்தும்.

எனவே வெற்றி பெற்றாலும் கலைஞர் முன் உள்ள சவால்கள் பல. அவற்றை அவர் தன் அனுபவம்,ஆற்றல், மத்திய அரசில் உள்ள செல்வாக்கு கொண்டு எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பதை நாடே உன்னிப்பாக கவனிக்கும்.
தேர்தல் கணிப்புகள்-கூட்டணி ஆட்சி நோக்கி?

இப்போது வெளியாகியுள்ள கணிப்புகள் திமுக கூட்டணி பெரும் வெற்றி பெறும் என்று கூறிகின்றன.ஆனால் திமுகவிற்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்கிறது இந்து-ஐபின் கணிப்பு.இது விஜயகாந்த் கட்சி 10% ஒட்டுக்களைப் பெறும் என்கிறது. மே 11 அன்றுஇவையெல்லாம் எந்த அளவு உண்மை என்பது தெரிந்து விடும்.

விஜயகாந்த் கட்சி 10% ஒட்டுக்களைபெறாவிட்டாலும் 6% ஒட்டுக்களைப் பெற்றால் கூட அது சாதனைதான். கூட்டணி அரசு ஏற்படுமாஇல்லை பிற கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு தர திமுக ஆட்சி அமைக்குமா என்பது தெரியவில்லை. தேர்தல் கூட்டணிக்கும் ஆளும் கூட்டணிக்கும் வேறுபாடு உண்டு. ஆட்சியில்பங்கேற்காவிட்டாலும் ஆதரவு காண்பித்து வேண்டியதைப் பெறும் திறன் பெற்ற கட்சிகள்எப்படி நடந்து கொள்ளும் என்பதைப் பார்க்க வேண்டும். சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் ஆட்சியில் பங்கு பெறவில்லை, ஆனால் பாஜக கூட்டணியில் அதற்கு முக்கியமானஇடம் இருந்தது, பெரும் செல்வாக்கு இருந்தது. இதை பயன்படுத்தி அவர் ஆந்திராவிற்குமத்திய அரசிடமிருந்து நிதி உதவி, நிவாரண உதவிகளை பெருமளவில் பெற்றார். தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. அதற்கு தேர்தலில் பாமகவை விட அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்புக்கள் அதிகம்.வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் காங்கிரஸ் இதன் மூலம் மத்திய அரசுக்கு திமுக நெருக்கடிகள்
தர முடியாதபடி செய்யலாம். இந்த வாய்ப்பினை காங்கிரஸ் புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொண்டு ஐந்து ஆண்டுகளில் கட்சியினை வளர்த்தால் நல்லது.

மேற்கு வங்கம், கேரளம் போல் தமிழ் நாட்டிலும் கூட்டணி ஆட்சி என்பது திராவிட கட்சிகளின்மேலாண்மையினை கட்டுப்படுத்த/குறைக்க உதவும். அந்த விதத்தில் கூட்டணி ஆட்சி வரவேற்கப்பட வேண்டியதே. கலைஞர் எவ்வளவு லாவகமாக இதைக் கையாள்கிறார், எதிர்காலத்திலும் கூட்டணி ஆட்சிக்கு திமுக தயாராக இருக்குமா என்று பல கேள்விகள்இருக்கின்றன. ஐந்து ஆண்டுகள் கூட்டணி ஆட்சி தொடர்ந்தால் தமிழக அரசியல் வரலாற்றில்அது ஒரு புதிய திருப்பு முனையாக இருக்கும். 2006 தேர்தல் ஒரு புதிய துவக்கமாகஇருக்கும் என்றே தோன்றுகிறது.
மேய்ச்சல்

இட ஒதுக்கீடு-ஜாதிக்கு அப்பால்

'வரலாற்றின் முடிவு' - ஒரு மீள்பார்வை,விவாதம்

எழுதுவதற்கான சுதந்திரம்- ஒர்கன் பமுக்

விவசாயிகள் தற்கொலை - கட்டுரைகள்- EPW ஏப்ரல் 22,2006
பிராமணர்கள், பிராமண சங்கம், தேர்தல்

தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 3% இருக்கும் பிராமணர்களில் எத்தனை பேர் ஒட்டுப் போடுவார்கள், அவர்களது ஒட்டுக்கள் தேர்தலில் எத்தகைய பாதிப்பினை ஏற்படுத்தும். 3% ஒட்டுகள் ஒட்டு மொத்தமாக ஒரு அணிக்கோ அல்லது கட்சிககோ கிடைத்தால் அது சில இடங்களில் தீர்மானகரமாக இருக்கலாம். ஆனால் பிராமணர்களின் ஒட்டு அப்படி ஒட்டுமொத்தமாக யாருக்காவது ஆதரவாக விழும் என்பது சந்தேகமே. தமிழ்நாடு பிராமணர் சங்கம் வலுவானசங்கம் அல்ல. பிற பல ஜாதிகளுடன் ஒப்பிடுகையில் பிராமணர்கள் ஜாதி ரீதியாக ஒரு அமைப்பினுள் திரண்டுவிடவில்லை. பிராமண சங்கமும் பிற ஜாதிச் சங்களுடன் ஒப்பிடுகையில் ஒரு பெரிய அமைப்பல்ல. எனவே அது தேர்தலில் யாரை ஆதரித்தாலும் அதனால் பெரிய தாக்கத்தினைஏற்படுத்த முடியாது. இந்நிலையில் அது பா.ஜ.கவை ஆதரிக்க முடிவு செய்திருப்பது பா.ஜ,கவிற்கு பெரும்பலனைத் தந்துவிடாது.

ஜெயெந்திரர் கைதினை பிராமணர் சங்கம் கண்டித்திருந்தாலும்தேர்தலில் ஜெயலலிதாவிற்கே ஆதரவு தெரிவித்திருக்க வேண்டும்.ஏனெனில் ஒரு பார்பனத்தி ஒருதிராவிட இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பதும், இரண்டு முறை முதல்வாரகியிருப்பதும்பார்ப்பனர்களின் எதிரியான வீரமணி போன்றவர்களுக்கு எரிச்சல் தருகிறது. இதே எரிச்சல் கருணாநிதிக்கும் இருக்கிறது. ஏனென்றால் அவர் முதல்வாராகவும், ஸ்டாலின் முதல்வராகவும் இருக்கும் பெரிய தடை ஜெயலலிதா. எம்.ஜி.ஆர் எழுப்பிய ஒட்டு வங்கியை அவர் இன்னும் கட்டிக்காத்து வருகிறார்.அதிமுக் பிளவு பட்டாலும், மீண்டும் வலிமையுடன் அவர் தலைமையில் எழுந்துவிட்டது. அதிமுக இப்படி பலத்துடன் இருப்பது திமுக வின் ஆட்சிக்கனவுகளுக்கு எப்போதுமே ஒரு சவால்தான். எம்.ஜி.ஆருக்கு எதிராக எழுப்பபப்ட்ட மலையாளி என்ற வாதமும் எடுபடவில்லை, ஜெயலலிதா ஒரு பார்ப்பனர் என்ற வாதமும் எடுபடவில்லை. 1989 தேர்தலில் திமுக ஜெயிக்க காரணம் அதிமுக அப்போது இரு அணிகளாக பிரிந்திருந்ததே.

1967 ல் திமுக ஆட்சிக்கு வந்த பின் தமிழக அரசியலில் பிராமணர் செல்வாக்கு குறைந்துவிட்டது,1970 களில் அது கிட்டதட்ட பூஜ்யம் என்ற நிலைக்கு வந்தது. 3% பிராமணர்கள் சட்டமன்றத்தில்அதிக பட்சம் ஒன்று அல்லது இரண்டு இடங்களையே பெற முடிந்தது. சில தேர்தல்களில் அதுகூட இல்லை என்று நினைக்கிறேன். 1980களில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை கட்சியில் சேர்த்து,அவரை முன்னிறுத்தினார். அவர் கருணாநிதிக்கு சரியான போட்டியாக இருப்பார், தனக்குப் பின் கட்சியை முன்னின்று நடத்துவார் என்ற எதிர்பார்ப்பு அவருக்கு இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது.

அந்த விதத்தில் ஜெயலலிதா கருணாநிதிக்கு சரியான போட்டியாளர்தான். மேலும் அவர் தன் ஆன்மிக ஈடுபாடுகளை பொதுவில் வைத்தவர். மதச்சார்பற்ற என்றால் இந்து மதத்தினை கிண்டல் செய்வது, பிராமணர்களை இழிவாகப் பேசுவது, சிறுபான்மையினருடன் கொஞ்சிக் குலாவுவது என்ற வரையறையை நிராகரித்தவர்.அது மட்டுமல்ல குடுமி வைத்திருக்கும் ஒருவருக்கு தேர்தலில் வாய்ப்பளித்து அவரை சட்டமன்ற உறுப்பினரும் ஆக்கியவர். இத்தனைக்குப் பிறகும் மக்கள் அவரைவெறுக்கவில்லை. தேர்தலில் வெற்றி தோல்விகள் இருந்தாலும் அவரது இடத்திற்கு இன்னொருவர்வரமுடியவில்லை, கட்சியும் வலுவிழக்கவில்லை. எம்.ஜி.ஆர் அதிகரித்த 50% இட ஒதுக்கீட்டினால் பிராமணர்கள் பாதிக்கப்பட்டாலும் எம்.ஜி.ஆருக்கு பிரமாண வெறுப்பு கிடையாது. அண்டேயினை அமைச்சராக வைத்திருந்தார். ஒருவர் எத்தகைய திறமைசாலியாக இருந்தாலும் அவர் பிராமணர் என்றால் அவரை சட்ட சபை உறுப்பினர் ஆக்கவோ அல்லது அமைச்சரவையில் இடம் தரவோ கருணாநிதி துணிய மாட்டார். அதே சமயம் தனிப்பட்ட முறையில் தேசிகாச்சாரியர்( யோகம் பயிற்றுவிக்க), மருத்துவர் ராமமூர்த்தி(நரம்பியல்) போன்ற பிராமணரின் நிபுணத்துவத்தினை பயன்படுத்த அவர் தயங்கமாட்டார்.கருணாநிதி ஜெயேந்திரரை கைது செய்வதை தவிர்த்திருப்பார். ஏனெனில் அவர் பா.ஜ.கவை பகைத்துக்கொள்ள விரும்பமாட்டார். ஜெயலலிதா அப்படி இல்லை.அவருக்கு தான் செய்வது சரி என்று தோன்றினால் துணிந்து இறங்கி விடுவார். விளைவுகளை பின்னர் சமாளித்துக் கொள்ளலாம் என்று தைரியமாக இருப்பார். எனவே ஜெயேந்திரர் கைதினை மட்டும்வைத்து ஜெயலலிதாவை எடை போட்டு பிராமண சங்கம் முடிவெடுத்திருப்பது தவறு. ஜெயலலிதா பிராமணர்களுக்கென்று தனியாக எதையும் செய்ய மாட்டார். அவரால் நன்மை இல்லாவிட்டாலும்தீமை இராது. கருணாநிதியைப் பொறுத்தவரை அவ்வாறு கூற முடியாது, அவரது தேவைகளுக்கு ஒரு சில பிராமணர்களைப் பயன்படுத்திக் கொண்டாலும், ஒட்டுமொத்த பிராமணர்களை அவர் நண்பர்களாகக் கருதியதில்லை. மாறாக அவர்கள் எதிரானவர்கள் என்ற எண்ணமே அவரிடம்இருக்கிறது. பேட்டியில் அவர் கூறியுள்ள கருத்திலும் இதுதான் வெளிப்படுகிறது.

Q: Who is supporting Jayalalitha?

A: Brahmins of this state want her to come back. They are solidly behind her.

Q: Where are the Brahmins? Most of them have left the state and are living aboard?

A: The Brahmins still have an influence and they think if Jayalalitha comes back they will rule.

இது எவ்வளவு அபத்தமானது என்பதை விளக்கத் தேவையில்லை.பிராமணர்கள் தவிர வேறு யாருமே ஜெயலலிதாவை ஆதரிக்கவில்லையா. வேறு யாரையும் குறிப்பிடாமல் பிராமணர்களை மட்டும் குறிப்பிடுவதேன்.ஜெ மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் எப்படி ஆள முடியும்.100% பிராமண ஆதரவு இருந்தாலும் ஜெ 69% இட ஒதுக்கீட்டினை நிராகரிக்கமாட்டார், அவர் அவர்களது ஆதரவை நம்பி இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். இருந்தும் கருணாநிதி இப்படி கூறியிருப்பது அவர் அடி மனதில் பிராமண வெறுப்பு இருப்பதைக் காட்டுகிறது. ஒருவேளை தேர்தலில் தோற்றால் பிராமணர்கள் சதி செய்து தோற்கடித்து விட்டார்கள் என்று அறிக்கை விட நினைக்கிறாரோ.

தமிழ்நாட்டில் பா.ஜ.க பெரிய கட்சி அல்ல. அதை பிராமணர் சங்கம் ஆதரித்தாலும் அதானல்பா.ஜ.க ஒரு தொகுதியிலாவது வெற்றி பெறும் என்று சொல்ல முடியாது. மாறாக ஜெயலலிதாவைஆதரித்தால் தேர்தலில் வெற்றியோ, தோல்வியோ ஒரு பிராமணப் பெண்ணுக்கு உதவினோம் என்பதாவது மிஞ்சும்.

எல்லா ஜாதிச் சங்களும் எப்படி செயல்படுகின்றன- தங்கள் ஜாதிக்கு சலுகைவேண்டும், தங்களுக்கு சட்டப்பேரவையில்,அமைச்சரவையில் இடம் பெற வேண்டும், இதை யார்ஏற்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவு என்ற ரீதியில்தான் செயல்படுகின்றன. பிராமண சங்கம் அப்படி எதையும் கூறத் தேவையில்லை. தங்களை கருணாநிதியும், வீரமணியும் எதிர்மறை சக்திகளாக நினைக்கும் போது ஜெயலலிதா பார்ப்பனர் ,ஆன்மிகத்தில் ஈடுபாடுள்ளவர், எங்களுக்கு தீமை செய்யமாட்டார், குறைந்தபட்சம் எங்களை இழிவாகப் பேசமாட்டார் , ஆகையால் அதிமுகஅணிக்கே எங்கள் ஒட்டு என்று தீர்மானித்திருக்க வேண்டும். அதுதான் ச்ரியான முடிவாக இருந்திருக்கும்.

என்னைக் கேட்டால் பிராமண சங்கம் அரசியல் நிலைப்படுகள் எடுப்பதை விட பிராமண சமூகத்தின்முன்னேற்றத்தில் அதிக அக்கறை காண்பிக்கலாம், கல்வி நிறுவனங்கள் அமைப்பது, ஏழை பிராமணர்களுக்கு உதவுவது, இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்படும் பிற ஜாதியினருடன் கூட்டாகஇட ஒதுக்கீட்டிற்கு எதிராகப் போராடுவது போன்றவற்றிற்கு முன்னுரிமை தர வேண்டும்.

ஜாதி சங்கங்களுக்குத் தேவை இல்லை என்பது என் கருத்து. ஆனால் அனைத்து ஜாதிகளும் சங்கங்கள்,அமைப்புகள் வைத்து தங்களை ஒரு சக்தியாக காட்டிக் கொள்ள முயலும் போது,நேரடியாகவும்,மறைமுகமாகவும் அரசியலில் ஈடுபடும் போது இந்த ஜாதி மட்டும் சங்கம் வைத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்ல முடியாது. பிராமணர்கள் இட ஒதுக்கீடு போன்றவற்றால் பாதிப்படையும் போது தங்கள் நலன்களை பாதுக்காக்க, உரிமைகளை முன்னிறுத்த ஜாதி அமைப்பு தேவையாகிறது. ஜாதி அமைப்பினை நிராகரிப்பவர்களைக் கூட நீ இந்த ஜாதியில் பிறந்ததால் உனக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்று அரசு கூறும் போது நான் ஜாதி அமைப்பில் சேர மாட்டேன், அதே சமயம் ஜாதி அமைப்பு கூடாது என்றும் கூற மாட்டேன் என்ற நிலைப்பாடே சரியான நிலைப்பாடாக இருக்க முடியும்.

மேலும் அரசு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டிற்கு இடமேயில்லாமல், வெறும் ஜாதியடைப்படையில் மட்டும் அதை செய்யும் போது பாதிக்கப்படும், பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளோருக்கு உதவ ஜாதி சங்கம் போன்றவை தேவையாகிறது. அரசு பிற்பட்டோர் நலனுக்காக துறை அமைத்து பல உதவிகளைச் செய்கிறது. ஆனால் முன்னேறிய ஜாதிகளில் உள்ளஏழைகளுக்கு அது போல் உதவ முன் வருவதில்லை. இத்தகைய சூழலில் விரும்பாவிட்டாலும் ஜாதிசங்கத்திற்கு தேவை ஏற்பட்டு விடுகிறது. எனவே பிராமணர்கள் ஜாதி சங்கம் அமைப்பதில் சில் நியாயங்கள் இருக்கின்றன.

தமிழ்நாடு பிராமண சங்கம் தாங்கள் அனைவரையும் சமம் என்று கருதுகிறோம், பிறப்பு, பாலின அடிப்படையிலான உயர்வு தாழ்வுகளில் எங்களுக்கு உடன்பாடில்லை என்று அறிவிக்க வேண்டும்.அதே போல் பிற ஜாதியினர் அர்ச்சகர் ஆவதில், வேதம் போன்றவற்றை கற்பதில், சடங்குகளைசெய்விப்பதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றும் நிலைப்பாடு எடுக்க வேண்டும். கடந்தகாலத்தில் பிறப்பினடிப்படையில் செய்யப்பட்ட பாகுபாடுகளை நாங்கள் நியாயப்படுத்த வில்லைஎன்றும், அதனால் பாதிக்கப்பட்டவர்களிடம் எங்கள் முன்னோர் செய்த தவறுகளுக்காக மன்னிப்புகேட்கிறோம், அனைத்து ஜாதி,மதங்களுடன் சுமுகமான உறவினையும், நல்லிணக்கத்தினையும்நாங்கள் விரும்புகிறோம் என்று அறிவித்து விட வேண்டும். இப்படி செய்தால் பிறர் பிராமணர் சங்கம்தங்கள் எதிரி அல்ல என்பதை உணர்வார்கள். பார்ப்பன எதிர்ப்பு அரசியலும் வலுவிழக்க இது உதவும்.

பிற்குறிப்புக்கள்

1,ஒரு முதல்வர் வெளிப்படையாக தன் மதப்பற்றை வெளிப்படுத்தலாமா , அது சரியா என்ற கேள்வியை வேறொரு சந்தர்ப்பத்தில் அலசுகிறேன். ஜெயின் இந்த்துவ சார்பை, கொள்கைகளை நான் விமர்சித்திருக்கிறேன். உதாரணமாக கோயில்களில் மிருகங்களை பலியிடல். இது குறித்துதிண்ணையில் எழுதியிருப்பதால் அதை இங்கு குறிப்பிட விரும்பவில்லை.

2,சிலர் பிராமணர்கள் ஆதிக்க ஜாதியினர், அவர்கள் ஜாதி சங்கம் வைப்பது சரியல்ல என்று கருதலாம். நான் அவ்வாறு கருதவில்லை. தமிழ்நாட்டில் பிராமணர்கள் ஆதிக்க ஜாதியினர் அல்ல என்பதே என் கருத்து.

3,, தமிழ்நாடு பிராமண சங்கம் எடுத்திருக்கும் முடிவுகளை நான் ஆதரிக்கிறேன் என்று பொருள்படுத்த வேண்டாம்.அவர்கள் என்னென்ன நிலைப்பாடுகள் எடுத்திருக்கிறார்கள் என்பது எனக்கு சரியாகத் தெரியாது.
அக், யாத்ரா

தீராநதியில் அக் பரந்தாமன் எழுதியிருக்கும் கட்டுரை வெளியாகியிருக்கிறது. அக் தொகுப்பு நூல்வெளியாவது மகிழ்சசி தருகிறது. எனக்கு சிறு பத்திரிகைகள் அறிமுகமான போது அக் இதழ்களைபார்க்க, படிக்க விரும்பினேன். நண்பர் ஒருவர் வசம் சில் இதழ்கள் இருந்தன. வேறொரு நண்பரிடம்வேறு சில இதழ்களை கண்டேன். தருமு சிவராமுவின் கவிதைகளைத் தொகுத்து ஒரு சிறு வெளியீடாக அக் பரந்தாமன் கொண்டு வந்தார். அதையும் பார்த்திருக்கிறேன். சிவராமு கொடுத்தபிரதி யாருக்கோ படிக்க கொடுத்தது திரும்பி வரவேயில்லை. கலைக்க முடியாத ஒப்பனைகள் என்ற வண்ணதாசன் சிறுகதைத் தொகுப்பினை அக் வெளியீடாக பரந்தாமன் கொண்டுவந்தார். அதுவும்எனக்கு கைக்கு கிடைக்கவில்லை.மிக அற்புதமான வடிவமைப்பு, செய்நேர்த்தி கொண்ட நூல் எனபலரும் சொல்லிக் கேட்டிருந்தேன்.ஆனால் அதைப் பார்த்தவர்களை விட அதைப் பற்றிப் பேசியவர்களே அதிகம் :). தற்செயலாக ஒரு நாள் ஒரு நடைபாதைக் கடையில் அதைப் பார்த்தேன்,பேரம் பேசாமல் உடனே வாங்கிவிட்டேன். நான் கேள்விப்பட்டது உண்மைதான்.கெட்டி அட்டை,அற்புதமான வடிவமைப்பு, எழுத்துருக்கள், தமிழ் நூல்களில் காணக்கிடைக்காத தரமான காகிதம். இப்போது அந்தப் பிரதி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் அந்த நூலின்இறுதியில் அந்த நூல் வெளியீடு குறித்து வண்ணதாசனுக்கும், பரந்தமானுக்கும் நடந்த கடிதப்போக்குவரத்து பதிவாயிருந்தது என் மனதில் இப்போது நிழலாடுகிறது. ஈரம் கசியும் வார்த்தைகளுடன் ஒரு நூலினை சிறப்பாக கொண்டுவர அவர் பட்ட சிரமங்களை பரந்தாமன்எழுதியிருப்பார். தன் அச்சகத்தினை விற்றே அவர் அதைக் கொண்டு வந்தார் என்று நினைக்கிறேன்.லினோகட் போன்றவற்றை சிறு பத்திரிகைகளில் முதன் முதலில் பயன்படுத்தியவர்அவர்தான் என்று நினைக்கிறேன், தேசிய அளவில் அச்சுத் தொழிலுக்கான பரிசினை அவர் பெற்றிருக்கிறார்.

பல சிறுபத்திரிகைகள் போல் அக் தொடர்ந்து வெளிவரவில்லை.இப்போது அக்கை அடிப்படையாக ஒரு தொகுப்பு நூல் வருவது காலத்தின் தேவையும் கூட.அப்படி அற்புதமாக வடிவமைக்கப்பட்ட நூலை யார் நடைபாதைக் கடையில் கிடைக்கும்வண்ணம்விற்றிருப்பார்கள். எனக்கு கிடைத்த பிரதி அந் நூல் ஒரு பரிசிற்கு தேர்வுக் குழுவிற்கு அனுப்பட்டபிரதி.

வெ.சாவின் கட்டுரை தொகுப்புகளை படிக்கும் போதுதான் யாத்ரா என்று ஒரு சிற்றிதழ் வந்ததையும்அறிந்தேன். அதன் சில இதழ்களைப் பார்த்திருக்கிறேன். யாத்ராவும் ஒரு முக்கியமான சிறு பத்திரிகைதான்.அது பெரும்பாலும் கலை, இலக்கியம் சார்ந்தவற்றையே வெளியிட்டது. அதில் சுஜாதாவின் பல நூல்களின் மூலம் எவையெவை என்று சுட்டிக்காட்டும் ஒரு கட்டுரையைப் படித்ததாக நினைவு. இத்தொகுப்பில் அதுவும் இடம் பெற்றிருக்கிறதா.

இப்படி பழைய சிறு பத்திரிகைகளிலிருந்து தொகுப்பு நூல்கள் வெளிவருவது இன்றைக்குத்தேவை.70 களிலும் 80 களிலும் பல சிரமங்களுக்கிடையே வெளியான சிறுபத்திரிகைகளில்அன்று இலக்கியம் பிரதான கவனம் பெற்றாலும் இலக்கியத்திற்கு அப்பாற்பட்ட துறைகளைப்பற்றியும் கட்டுரைகள், விவாதங்கள் இடம் பெற்றுள்ளன. இவை மீண்டும் பார்வைக்கு வரும்போது சிறு பத்திரிகை என்றால் அதில் இல்க்கியம், கலை சார்ந்தவையே இடம் பெற்றன என்றஎண்ணம் வலுவற்றுப் போகும். மேலும் இன்றைக்கு ஜெயமோகன் போன்றவர்கள் எழுதுபவை எத்தகையகுப்பைகள் என்பதை அன்று வெளியான, சான்றுகளுடன் எழுதப்பட்ட காத்திரமான கட்டுரைகளைப் படிக்கும் போது அறிந்து கொள்ள முடியும். .
------------------------------------------------------------------------------------------------
தீராநதியில் பரந்தாமன்

எனக்குத் தொழில் கவிதை. தாமரை, தீபம், கண்ணதாசன் கவிதை, வானம்பாடி, ஞானரதம் ஆகிய சிறுபத்திரிகைகளில் நான் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்த காலத்தில், அப்பத்திரிகைகளில் படைப்புகளை வெறும் எழுத்துக்களாக மட்டுமே அச்சிட்டு வந்தார்கள். வடிவமைப்பைக் கோட்டை விட்டுவிட்டார்கள். சாதாரண வியாபார பத்திரிகைகளிடமே வடிவமைப்பில் அவைகள் தோற்றுப்போனது. இது எனக்கு அவமானமாக இருந்தது. எனக்குத் தெரிந்த சில சிறு பத்திரிகையாளர்களிடம் சொல்லிப் பார்த்தேன். யாருமே பொருட்படுத்தவில்லை. தரத்தோடு, வடிவமைப்போடு, ‘நானே பத்திரிகை செய்து காட்டுகிறேன்’ என்றுதான் ‘அஃக்’ சிறுபத்திரிகையைத் தொடங்கினேன்.
‘அஃக்’, பதிப்புக்கும் அச்சுக்கும் தேசிய விருதுகள் பெற்றது. அதற்குப் பிறகு வெளிவந்த சிறுபத்திரிகைகளும், இன்றைய சிறுபத்திரிகைகளும் இதுவரைக்குமே விருதுகள் எதுவும் பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தமிழ் நெடுங்கணக்கின் மூலக்கூறுகளான உயிரும் மெய்யும், உயிர்மெய்யாகி ஆய்த எழுத்தை மையமாக வைத்து உச்சரிக்கும்போது ‘அஃக்’ என்ற பெயர்ச்சொல் உருவாகிறது. தமிழே ‘அஃக்’ பத்திரிகையின் பெயராக ஆகியிருக்கிறது. ‘அஃக்’கை முதலில் வெளியார் அச்சகங்களில் அச்சிடப் போனேன். கல்யாணப் பத்திரிகைகளை இரவு பகலாக அச்சிட்டுக்கொண்டு, ‘அஃக்’ பத்திரிகையை அச்சிட்டுத் தர காலதாமதம் செய்தார்கள். சரியான தேதிக்கு ‘அஃக்’கைக் கொண்டுவர முடியவில்லை. எனவே, சரியான தேதிக்கு ‘அஃக்’ பத்திரிகையைக் கொண்டு வர ‘பிருந்தாவனம் பிரிண்டர்ஸ்’ என்ற பெயரில் என் வீட்டிலேயே ஓர் அச்சகத்தை ‘அஃக்’குக்காகவே நிறுவினேன். பஞ்சாலையில் இரும்பு ராட்டை இழுத்து வேலை செய்த என் அம்மா தான் வட்டிக்கு வாங்கிய பணத்தை, அச்சகம் வைக்கவும் ‘அஃக்’ பத்திரிகையை நடத்த ‘பிராவிடண்ட் ஃபண்டு’ பணத்தையும் தந்தார்கள். ‘அஃக்’குக்காகத்தான் ‘பிருந்தாவனம் பிரிண்டர்ஸ்’. கல்யாணப் பத்திரிகையும் பில் புக்கும் நோட்டீசும் அடித்து, வியாபாரம் செய்ய அல்ல. ஆள்வைத்துக் கூலி கொடுக்க முடியாததால் நானே அச்சுக் கோர்க்கக் கற்றுக்கொண்டேன். என் மனைவி சத்திய பாமாவுக்கும் கற்றுக் கொடுத்தேன். கையால் அச்சுக்கோர்த்து, காலால் ட்ரெடிலை மிதித்து ‘அஃக்’ பத்திரிகையையும், ‘கூட்டுப் புழுக்கள்’, ‘பால் வீதி’, ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’ ஆகிய புத்தகங்களையும் அச்சிட்டேன். தொடர்ந்து நடத்த பணம் இல்லாததால் ‘அஃக்’ பத்திரிகையை நிறுத்திவிட்டேன். அச்சகத்தை விற்றுவிட்டேன்.
கொஞ்சமும் மனம் தளர்ந்து போகாமல் பிடிவாதமாக ‘அஃக்’ பத்திரிகையை அச்சிட்ட சரித்திரம், புதிய தலைமுறை வாசகர்களுக்கும் தெரியவேண்டும். பசி, பட்டினி, தீராத தாகம், பொருள் இழப்புகளோடு இரவு பகலாகத் தூக்கமின்றி எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு, என்னால் ஒரு நாளைக்கு ஒரு பக்கம் மட்டுமே அச்சிட முடிந்தது. ஆனால், அந்தப் பக்கத்தை அச்சிட அக்கறை காட்டிய வைராக்கியத்தைச் சொல்லத்தான் வேண்டும்.
‘அஃக்’ பதிவு செய்யப்பட்ட சிறுபத்திரிகையாக, மாத இதழாக மலர்ந்தது. தரமான எழுத்துக்களை வியாபாரப் பத்திரிகைகள் போட மறுத்த காலத்தில்தான், எழுத்தாளர்கள் சுதந்திரமாக எழுத ‘அஃக்’ இடம் கொடுத்தது. வித்தியாசமான எழுத்துக்களுக்கு வாய்ப்பளித்து கௌரவித்தது. எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் வாசகர்களையும் கவர்ந்து இழுக்கிற காந்தசக்தி ஒரு பத்திரிகையின் எழுத்தின் தரத்திலும் வடிவமைப்பின் நேர்த்தியிலும்தான் இருக்கிறது. அட்டை ஓவியம், வடிவமைப்பு, எழுத்து என்று சிறுபத்திரிகையின் சகல அம்சங்களிலும் ஒரு தரமும் தகுதியும் தனித்தன்மையும் இருக்கவேண்டும். இந்த சிறப்புகள் அனைத்தும் ‘அஃக்’இல் இருந்ததால்தான் இன்றும் வாசகர்களால், எழுத்தாளர்களால், ஓவியர்களால் அது பேசப்படுகிறது.
சுந்தர ராமசாமியை அவருடைய மௌனத்திற்குப் பின் மீண்டும் எழுத உற்சாகப்படுத்தியது ‘அஃக்’ பத்திரிகைதான். இதை ‘அஃக்’குக்கு எழுதிய கடிதத்தில் அவரே சொல்லியிருக்கிறார். அதைப்போலவே, ‘நான் ‘அஃக்’இல் எழுத விரும்புகிறேன்’ என்று கடிதம் எழுதி தெரிவித்துவிட்டுத்தான் அரூப் சீவராம், தன்னிச்சையாக ‘அஃக்’இல் எழுத வந்தார். அரூப் சீவராமின் ‘கண்ணாடியுள்ளிருந்து’ கவிதைகள் முப்பத்தெட்டை தனியரு சிறப்பிதழாகவே ‘அஃக்’ வெளியிட்டதன் மூலம், அரூப்சீவராம் இலக்கிய உலகுக்குப் பரவலாகத் தெரிய வந்தார். ‘அஃக்’கைப் பிடிக்காதவர்களும்கூட ‘அஃக்’இல் எழுத விரும்பினார்கள். அந்த அளவுக்கு கலை இலக்கியத் தரத்தோடும் வடிவமைப்போடும் எழுத்தாளர்களைக் காந்த சக்தியாய் கவர்ந்து இழுத்தது ‘அஃக்’. தாமாகவே முன்வந்து இயல்பாக எழுதுகிற உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தரக்கூடியதாக, ‘அஃக்’, கலை இலக்கியத் தரமும் வடிவமைப்பும் வித்தியாசமான கலைப்பார்வையும் கொண்டு முதல் இடத்தைக் குறிவைத்து பயணித்தது. எனக்கு முன்பின் பழக்கமில்லாத நல்ல எழுத்தாளர்களையும் ஓவியர்களையும் நேரிலும் கடிதம் மூலமும் அறிமுகம் செய்து வைத்தார்கள் வெங்கட் சாமிநாதனும், ‘கூத்துப்பட்டறை’ ந. முத்துசாமியும். இவ்வாறுதான் இன்னும் சில குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களும் ‘அஃக்’இல் எழுதினார்கள்.
அலியான்ஸ் பிரான்சைஸில், முக்கியமான இலக்கியவாதிகளும், ஓவியர்களும், கலைஞர்களும் கூடியிருந்த கூட்டத்தில், ‘‘பரந்தாமன் மாதிரி கலாபூர்வமாக பத்திரிகை நடத்த மற்றவர்களால் முடியாது’’ என்று ஆத்மாநாம் பகிரங்கமாகச் சொன்னார். அப்போது ‘கசடதபற’ பொறுப்பாளர்களும் அங்கே இருந்தனர்.
கலை இலக்கிய வரலாற்றைப் புனர்ஜென்மம் எடுத்துவந்து புனருத்தாரணம் செய்யப்போகிற ‘அஃக்’ நிரந்தரத்தின் அமிர்தம். கூர்ந்த பார்வையும், மறுபரிசீலனையும் கலை இலக்கியத்தின் ஆரோக்கியத்துக்கான ஜீவ தாதுக்கள். புதுமையையும் படைப்பையும் இலட்சியமாக, அளவுகோலாக, தொலைநோக்காக, தூரத்துப் பார்வையாக வைத்துக் கொண்டு யுக சந்தியின் விளிம்பில் நிற்பவனுக்கு கால மாற்றங்கள், கலை இலக்கியப் போக்குகள் தடையாக இருக்க முடியாது. அவன் நேற்றிலிருந்து இன்றைக்கும் இன்றிலிருந்து நாளைக்கும் ஊடுருவிச் சென்றுவிடுவான். அப்படியே ‘அஃக்’ பத்திரிகை இதழ்களை ஃபோட்டோ காப்பி எடுத்து அச்சிட்டுத் தொகுத்துக் கொடுக்கவே நான் விரும்பினேன். ஆனால் என்னிடம் பணவசதி இல்லாததால் அப்படித் தொகுத்துத்தர முடியவில்லை. ஒரு புத்தக வடிவத்துக்குள் பத்திரிகையின் வடிவமைப்பைப் பறிகொடுக்க நேர்ந்துவிட்டது. புத்தகச் சந்தையின் வியாபார நடைமுறைகள் தடைப்படுத்திவிட்டன. அன்று தொடங்கிய அந்த யாகத்தின் தீ நாக்குகள் சடசடவென்ற சப்தத்தோடு இன்றும் எனக்குள் பொறி பறக்க, அதே கதியில் எரிந்து கொண்டிருக்கின்றன. எனக்குள் அணையாமல் எரிகின்ற அந்த நீறுபூக்காத நெருப்பின் ஜுவாலைகள் தகிப்பதை இந்தப் புத்தகத்தைப் புரட்டும்போது நீங்களும் உணர்வீர்கள்.
ஒரு சாதாரண ‘ட்ரெடில்’ மிஷின் மூலமே தேசிய விருதுகள் பெற முடிந்தது; என்றால், உலகத்தின் வேகத்துக்கும் தேவைக்கும் ஏற்றபடி எளிமைப்படுத்தப்பட்ட கணினியின் துணைகொண்டு, இந்த உலகையே விருதாகப் பெறமுடியும். இத்தனை வசதிகளும், வாய்ப்புகளும் இந்தக் கணினி யுகத்தில் இருந்தும்கூட, கலை இலக்கிய உலகம் தழுவிய ஒரு சிறுபத்திரிகையை, தமிழில் உலக சாதனையாக நாம் படைக்க முன்வராவிட்டால் வேறு எந்த யுகத்தில் முன்வரப் போகிறோம்?
(சந்தியா பதிப்பகம் வெளியீடாக வரவுள்ள, தேசிய விருதுபெற்ற கலை இலக்கிய சிற்றிதழான ‘அஃக்’ இதழ் தொகுப்புக்கு எழுதப்பட்ட தொகுப்புரை. சுருக்கப்பட்டது)