வதந்தி = செய்தி

நியு இன்டியஸ் எக்ஸ்பிரஸின் 'புலனாய்வு' செய்தி பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.தயாநிதி மாறன மான நட்ட வழக்குப் போடப்போவதாகக் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்தியைப் படித்தால் அதில் ஒரு உருப்படியான தகவல் கூட இல்லை. டாட்டாகளுக்கு எப்போது DTH உரிமம்கிடைதத்து, டாட்டா தவிர வேறு யாருக்கெல்லாம் கிடைத்திருக்கிறது, இதில் டாடா குழுமமும்,முர்டோக்கும் எவ்வளவு முதலீடு செய்கிறார்கள், நிபந்தனைகள் என்ன என்று ஒரு விபரமும் கிடையாது. சரி தயாநிதி மாறன் எப்போது இதில் தலையிட்டார், மிரட்டினார், தேதி வேண்டாம்,மாதம் கூட கிடையாது. அதுதான் போகட்டும் சன் டி,வி தாங்கள் டாடா, முர்டோக்குடன் கூட்டுச்சேரப் போவதாக எப்போதாவது அறிவித்ததா, அதை டாடாவோ அல்லது முர்டோக் தரப்பு எப்போதாவது மறுத்ததா, சன் டி.வி யில் முதல் பொதுப்பங்கு விற்பனை குறித்த தகவல் அறிக்கையில் DTH குறித்து ஏதேனும் தகவல் உள்ளதா. இப்படி ஒரு தகவலும் இல்லாமல், சில பெயர்களையும், சிலவார்த்தைகளையும் வைத்துக் கொண்டு 'புலனாய்வு' செய்திருக்கிறார்கள். நக்கீரன், ஜூனியர் விகடன்பரவாயில்லை. மிஸ்டர் மியாவ் கிசுகிசு இதைவிட பல மடங்கு மேல். ஒரு மோசமான கிசுகிசுவைசெய்தியாக ஜோடித்திருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் கேள்விகள் வேறு.

டாட்டாவைச் சந்தித்தபோது மாறன் நீலக்கலர் சட்டை போட்டிருந்தாரா, நோக்கியா செல்பேசி வைத்திருந்தாரா,முஷ்டியை உயர்த்தி, குரலை உயர்த்தி ஐ வில் பினிஷ் யூ என்று மிரட்டினாரா என்று கேட்டிருக்கலாம்.

ஆயிரம் அனுமானங்களுடன் கேட்க்கப்படும் கேள்விகளுகெல்லாம் எந்த நிறுவனமும் பதில் சொல்லவேண்டும் என்று கட்டாயம் இல்லை. காவல் துறை விசாரணையின் போதும் ஒருவர் கருத்து சொல்லவிரும்பவில்லை என்று கூறலாம் அல்லது மெளனம் சாதிக்கலாம். யாரையும் தனக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க அல்லது சாட்சி சொல்ல கட்டாயப்படுத்தப் முடியாது.அதாவது ஒருவர் பதில் அளித்தால் அப்பதில் தனக்கு எதிரான சாட்சியமாக திருப்பப்படும் என்று கருதினால்மெளனம் சாதிக்கலாம் அல்லது பதில் அளிப்பதை தவிர்க்கலாம். இது ஒரு பொது விதி.

எனவே நீ கருத்துக் கூறவில்லை என்றால் நான் சொன்னதைப் நீ ஒப்புக் கொண்டாய் என்று அர்த்தமாகாது. அப்படி அரத்தப்படுத்திக் கொண்டால் அது சட்டப்படி செல்லாது. 'புலனாய்வு'செய்தவர்களுக்கு இந்த அடிப்படை கூட தெரியவில்லை. பின்னூட்டங்களிட்டவர்கள் பலர் இந்த அடிப்படை விதியைக் கூட அறிந்திருக்கவில்லை என்றே கருத இடமுள்ளது.


ஆகையால் டாடா குழுமம் கருத்துசொல்ல விரும்பவில்லை என்றால் அவர்கள் உங்கள் கேள்விகளுக்கு பதில் கூற விரும்பவில்லை என்றுதான் பொருள்.

பொதுவாக வணிக நிறுவனங்கள் ஊடகங்களில் வெளியாகும் அனைத்துசெய்திகளுக்கும் பதில் தருவதில்லை. 'இது குறித்து இப்போது கருத்து சொல்ல விரும்பவில்லை' என்று செவ்விகளில் கூறப்படும் பதில் நமக்குப் பரிச்சயமான ஒன்று. அதே போல் நீதிமன்ற தீர்ப்புகள்குறித்து கருத்து சொல்லாமல், முழுத் தீர்ப்பினையும் படித்த பின்னரே கருத்து சொல்ல முடியும்என்று சொல்வதும் உண்டு. ஏன் இப்படி சொல்கிறார்கள், யோசித்துப் பாருங்கள்.

டாடா குழுமம் சார்பில் சன் டிவி குழுமம் அல்லது அமைச்சர் தலையிடவில்லை என்று பதில்சொல்லியிருந்தால் அமைச்சர் மிரட்டல் காரணமாக டாடா குழுமம் அவ்வாறு கூறுகிறது என்றுஅடுத்த 'செய்தி' வெளியாகும். அல்லது அப்படியானால் அவர்கள் சார்பாக வேறு யாரேனும்மிரட்டினார்களா என்று இன்னும் பல கேள்விகள் வரும். இது போன்ற கேள்விகளைத் தவிர்க்கவேடாடா குழுமம் அவ்வாறு பதில் சொல்லியிருக்கக் கூடும். மேலும் வணிக நிறுவனங்கள் ஒரு திட்டம்குறித்து எப்போது என்ன சொல்ல வேண்டும், எங்கு சொல்ல வேண்டும், எப்படி சொல்ல வேண்டும் என்பதை யோசிக்காது சகட்டு மேனிக்கு கேட்கிறவர்களுக்கெல்லாம் பதில் சொல்வதில்லை.

இப்போது டாடா குழுமம் ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்தால் கூட ஊடகங்கள் அதிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொண்டு தங்கள் ஊகங்களையும், வதந்திகளையும் சேர்த்து செய்திகளைவெளியிட ஆரம்பித்துவிடும். இது இந்த கூட்டுத்திட்டம் குறித்த தேவையற்ற ஐயங்களையும்,சர்ச்சைகளையும் எழுப்பும். ஆகவே டாடா குழுமம் கூறியிருப்பது நியாயமானது, முறையானது.

இதே கேள்விகளை நீதிமன்றத்தில் கேட்டால் கூட நீதிபதி(கள்) அவற்றை அனுமதிக்க வேண்டும்என்ற கட்டாயம் இல்லை. குறுக்கு விசாரணை என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் கேட்கநீதிமன்றம்/ங்கள் அனுமதிப்பதில்லை.

மேலும் ஒருவர் மீது குற்றம் சாட்டினால் அதை நீருபிக்கவேண்டியது குற்றம் சாட்டுபவர் பொறுப்பு (இதற்கு சில விதிவிலக்குகள் உண்டு). குற்றம் நீருபணம்ஆகாத வரை குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதி என்றே கருதப்படுவேண்டும் என்று கோர முடியும்.

இப்போது குற்றம் சாட்டும் வைகோ, நியு இண்டியன் எக்ஸ்பிரஸ் ஆதாரங்களை முன் வைக்கட்டும்.குறைந்த பட்சம் எப்போது சன் டிவி சார்பில் டாடா குழுமத்திடம் பேசப்பட்டது, தயாநிதி மாறன் எந்த கட்டத்தில் தலையிட்டார், எப்போது இந்த தலையீடு மிரட்டலாம மாறியது என்பதையாவது, அதாவது எந்த ஆண்டு,எந்த மாதம் என்பதையாவது அவர்கள் தெரிவிக்கட்டும்.

வலைப்பதிவாளர்கள் இந்த 'செய்தி'யை பொதுப் புத்தி கொண்டு அணுகியிருந்தால் இதிலிருக்கும்ஒட்டைகள் எவை என்பது புரிந்திருக்கும். இங்கு பலருக்கு சன் டிவி, மாறன் சகோதர்கள் மீது இருக்கும் கோபம், எரிச்சலில் சிந்திக்க மறந்து கண்டிக்கவே தோன்றுகிறது. இதற்கு ஒரு காரணம்பலர் தினமணி நடுநிலை நாளிதழ், வதந்திகளைப் பரப்பாது என்று நினைப்பதே.

ஆனால் இந்த 'செய்தி'யை மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கும் தினமணி விஷயத்தை திரித்துவெளியிட்டிருக்கிறது. இது ஒன்றே அதற்கு இதில் உள் நோக்கம் இருக்கிறதோ என்ற சந்தேகத்தினை எழுப்பும், யோசித்தால். இங்கு யோசிப்பதை விட உடனே ஒழிக என்று கோஷம் எழுப்பவே பலர் தயாராக இருக்கிறார்கள்.

இப்படி ஊடகங்களுக்கேற்ற நுகர்வோரும், நுகர்வோருக்கேற்ற ஊடகங்களும் இருப்பது நல்ல அறிகுறி அல்ல.

6 மறுமொழிகள்:

Blogger Srikanth மொழிந்தது...

You are right, what IE and Dinamani have put forth are insinuations, not fact-based accusations. While I am inclined to believe them since I think the likelihood of the report being true are high, the report itself is without the needed gravity of substance.

9:17 PM  
Blogger ROSAVASANTH மொழிந்தது...

மிக தெளிவான கறாரான கேள்விகள் கேட்கும் முக்கிய பதிவு. (எந்த கிண்டலும் இல்லை!)

2:47 AM  
Blogger ப்ரியன் மொழிந்தது...

நடுநிலைமையாக இருந்து செய்தியை ஆய்ந்திருக்கிறீர்கள்..நன்றி

3:54 AM  
Blogger neo மொழிந்தது...

>> ஆனால் இந்த 'செய்தி'யை மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கும் தினமணி விஷயத்தை திரித்துவெளியிட்டிருக்கிறது. இது ஒன்றே அதற்கு இதில் உள் நோக்கம் இருக்கிறதோ என்ற சந்தேகத்தினை எழுப்பும >>

Thank you for your views, restoring sanity among tons of propaganda material published here!

7:05 AM  
Anonymous prakash மொழிந்தது...

ரவி, நீங்க கேட்கிற கேள்விகள் எல்லாம் சரிதான். ஆனால், தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆதாரங்கள் தரவில்லை என்பதாலேயே, தயாநிதி மாறன், டாடாவை மிரட்டவில்லை என்று சொல்ல முடியாது. [ ஆனால், செய்தித்தாள்கள், அந்த விவரங்கள் தந்திருக்க வேண்டும் என்பதையும் ஒத்துக் கொள்கிறேன்]

இந்த செய்திக்கு மாறன், ரீயாக்ட் செய்த விதம் அவர் மீது சந்தேகம் வர வழைக்கிறது. அவர் மீது தவறு இல்லை என்கிற பட்சத்தில், நீங்கள் கேட்கிற கேள்விகளை எல்லாம் அவர் கேட்டிருக்க வேண்டுமே? நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடுக்கப் போகிறேன் என்று சொல்வது ஒரு பதிலா?

சன்டீவி யின் arm twisting நடவடிக்கைகள் பரவலாக வெளியே தெரிந்ததே. அவர்கள், தன் சகோதரர் மாறன் மூலம் இப்படி மிரட்டலை விடுத்திருக்க, prima facie உண்டு, அதிலும், டாடா நிறுவனம் மறுக்கவில்லை என்கிற பட்சத்தில்.

8:47 AM  
Blogger Pot"tea" kadai மொழிந்தது...

"நியோ"வின் இதே செய்தியை குறித்தப் பதிவில் நான் எழுதிய பின்னூட்டம்.

"இச்செய்தியில் எமக்குத் துளியும் நம்பிக்கையில்லை. நான் அறிந்த வரையில் தொழிலதிபர்கள் தான் "அரசாங்கத்தை" மிரட்ட முடியுமேயொழிய அரசுப் பதவியிலிருப்பவர் "டாடா" போன்ற நிறுவனத்தை மிரட்ட முடியுமா என்பது கேள்விக்குறியே!உதாரணத்திற்கு காலஞ்சென்ற அம்பானி அவர்கள் இந்திராகாந்தியை மிரட்டி எரிவாயுவைத் தனியார்மயமாக்கியது.,தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரே அனிள் அம்பானி சோனியாவை சந்தித்தது..,
***
டாடா நிறுவனம் ஒரு "பழம்பெரும் நிறுவனம்". அதனோடு சன் தொகா வினால் போட்டி போடவே முடியாது. அப்படியே அதிகாரத்தைப் பயன்படுத்தி டாடாவை வளைக்க முயன்றால் அதைத் தேர்தல் நேரத்தில் செய்யுமளவிற்கு முட்டாளல்லவே, தயா மாறன்.மேலும் தயாவிற்கு அந்தளவுக்கு செல்வாக்கு இருக்கிறதா என்றும் தெரியவில்லை.

ஆக இது நடந்து குறைந்தது ஒரு 6 மாத காலம் ஆகியிருந்ததாக ஊகித்துக் கொண்டாலும் அதைத் தேர்தல் நேரத்தில் வெளியிட வேண்டிய கட்டாயம் தினமணி போன்ற நடுநிலையான?!, சனநாயகத்தின் நாண்காவது தூணுக்கு வரவேண்டிய நிலை ஏன்?"

உங்களுடைய கருத்தில் ஒத்துப் போவதைத் தவிர வேறேதும் சொல்வதற்கில்லை.

12:10 PM  

Post a Comment

<< முகப்பு