ஐ.ஐ.டி களில் 27% இட ஒதுக்கீடு ?

ஐ.ஐ.டி உட்பட பல உயர்கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவில் ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யும் பரிந்துரைக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்த இட ஒதுக்கீடு தேவையற்றது, ஆபத்தானது, எதிர்க்கப்பட வேண்டியது. இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா, நியு இண்டியன் எக்ஸ்பிரஸ் இதழ்களில் வெளியாகியுள்ள செய்திகள் கல்வியாளர்கள் உட்பட பலர் இந்த பரிந்துரையினை எதிர்த்துள்ளதாகவும், இன்போஸிஸ் நாராயணமூர்த்தி (ஐ.ஐ.எம் அகமதாபாத்தின் நிர்வாகக் குழுவின் தலைவர்) இதை எதிர்த்திருப்பதாகவும் அறிகிறேன். இந்த எதிர்ப்பு நியாயமானதே. ஜவகர்லால் பல்கலைகழகம், தில்லி பல்கலைகழகம் உட்பட பல கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு இப்போது தலித்,பழங்குடியினருக்குஇருக்கிறது. பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவில் 27% ஒதுக்கீடு செய்யும் போது இட ஒதுக்கீடு 49.5 % ஆகிவிடுகிறது. சில கல்வி நிலையங்களில் வேறு சில இட ஒதுக்கீடுகளையும் சேர்த்தால் இது 50%க்கும் மேலாகிவிடுகிறது.

ஐஐடிகளிலும், ஐஐம்களிலும் சேர்வதற்காக சில ஆண்டுகள் கடின உழைப்பினை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஐஐஎம்களும், ஐஐடிகளும் இன்று உலக அளவில் மதிக்கப்பட முக்கிய காரணம் இவை மிகக் கடினமான நுழைவுத்தேர்விற்குப் பின் தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் சாதனைகளால். இட ஒதுக்கீடு என்ற பெயரில் பிற்பட்டோர் என்ற காரணத்தில் சிலருக்கு இட ஒதுக்கீடு செய்வது அவை பெற்றுள்ள மதிப்பினை குறைக்கவே உதவும். ஒருவரின் உழைப்பு,அறிவாற்றல் ஆகியவற்றை விட ஜாதியே முக்கியம் என்றாகிவிடும்.இன்று இடது சாரிகள் உட்பட எந்த அரசியல் கட்சியும் இந்த இட ஒதுக்கீட்டினைஎதிர்க்குமா என்பது சந்தேகமே. ஆனால் தொழிற் துறையினர், கல்வியாளர்கள் தங்கள் எதிர்ப்பினை வலுப்படுத்தி, ஆதரவு திரட்டினால் இந்த தேவையற்ற, ஆபத்தான இட ஒதுக்கீட்டினை தடுக்க முடியும். தேவைப்பட்டால் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரலாம்.
பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டினை தொடர்ந்து சிறுபான்மையினருக்கும் இட ஒதுக்கீடு தர அரசுமுயலாம். இந்த இரண்டையும் போலி மதச்சார்பின்மை வாதிகளும், போலி பகுத்தறிவாளர்களும்வரவேற்பார்கள். சமூக நீதி என்ற பெயரில் சில ஜாதிகளின் மேலாண்மையினை சமூகத்தில் உறுதிசெய்வதும், அந்த ஜாதிக்களில் உள்ள வசதி படைத்தோர், பணக்காரர்கள் நலனை பாதுக்காப்பதுமே அவர்களின் பிரதான நோக்கம். இந்த புதிய வருணாஸ்திர தர்மத்திற்கு சமூக நீதி என்று அவர்கள் பெயர் சூட்டியிருக்கிறார்கள். இது சமூக அநீதியே அன்றி வேறில்லை.
ஏற்கனவே இட ஒதுக்கீடு என்ற பெயரில் செய்யப்படும் அநியாயங்கள் ஏராளம். இப்போது இதையும் சேர்த்தால் இந்தியாவில் அரசினைப் பொறுத்தவரை உன் ஜாதிதான் முக்கியம், உன் படிப்பு, திறமை,உழைப்பு ஆகியவை முக்கியமில்லை என்றாகிவிடும். இனி அரசினை நம்பிப் புண்ணியமில்லை என்றநிலையில் வஞ்சிக்கப்பட்ட ஜாதிகள் தங்கள் நலனைப் பாதுகாத்துக் கொள்ள ஒன்று திரள்வதும்,போராடுவதும் தவிர்க்க இயலாததாகிவிடும். ஜாதிய அடிப்படையினை வலுப்படுத்தவே அரசின்கொள்கை உதவுவதால் இந்திய சமூகத்தில் ஜாதியின் முக்கியத்துவம் அதிகரிக்கும். நவீன மனுக்கள்பிற்பட்டோரும் சிறுபான்மையினரும் பிறரை விட அதிக சமமானவர்கள், ஜாதி,மத அடிப்படையில்அனைத்து சலுகைகளும் பெற உரிமை பெற்றவர்கள், அவர்களுக்கு கிட்டியது போக எஞ்சியிருப்பது(ஏதாவது இருந்தால்) பிறருக்கு கிடைத்தால் போதும் என்பதை எழுதா விதியாக ஆக்க முயல்கிறார்கள். சமத்துவம், அனைவருக்கும் வாய்ப்பு போன்றவற்றை உறுதி செய்ய இந்த நவீன மனுவாதிகளின் திட்டங்களை எதிர்ப்பது அவசியம்.

4 மறுமொழிகள்:

Blogger சன்னாசி மொழிந்தது...

பள்ளி அளவிலான அடிப்படைக் கல்வியில் ஒரு சிறு சதவீதம் மட்டுமன்றிப் பெரும்பாலானோர் சம அளவில் பயனடையும் வகையில் சீர்திருத்தங்கள் செய்தாலன்றி இந்த ரீதியான பிரச்னைகள் தீரப்போவதில்லை.

9:46 AM  
Blogger KARTHIKRAMAS மொழிந்தது...

ரவி இந்த எதிர்ப்பு நியாயமானது நியாயமற்றது என்று நாரயணமூர்த்தி அல்ல நாராயணன் கூட குத்துமதிப்பாக கோசம் போடமுடியாது. அது மண்டலை அவமதிப்பது போன்றது. உயர்பிரிவினர் எத்தனை சதவீதம் என்று ஏதாவது தரவுகளின் அடிப்படையில் பேசினால் எல்லோருக்கும் நல்லது. அதுதவிர, இப்போது +27% இல்லாதபோதுகூட எத்தனைபேர் அந்தப்பிரிவிலிருந்து சேர்ந்து கல்விகற்கின்றனர் என்பதும் முக்கியம். நிறையபேர் அந்தப்பிரிவிலிருந்துதான் இருக்கின்றனர் என்று பெரும்பாலும் சொல்லமுடியும்.

4:07 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

Due to some problems in blogger I could not post any new post. If you have put a comment and if you beleive that it is lost please post it again. I am sorry for the
inconvenience caused, if any.

1:37 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

இட ஒதுக்கீடு எதிர்ப்பு வலைப்பூ
http://i.am/thamizhan
TAMIL ANTI-RESERVATION BLOG

8:32 AM  

Post a Comment

<< முகப்பு