சம்ஸ்கிருதமும், சில ஆய்வுகளும்

இது ஆர்.எஸ்.எஸ் வலைத்தளத்தில் உள்ள செய்தி. இச்செய்தி குறிப்பிடும் இந்த ஆய்வுக்கட்டுரை 2001ல் வெளியானது. இவர் இந்த ஆய்வு குறித்து பல கேள்விகளை எழுப்பியிருக்கிறார். இந்த ஆய்வு வெளியான இன்டரநேஷனல் ஜர்னல் ஆப் நியுரோசைன்ஸ் குறித்து அதன் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது கீழே.

The Institute of Scientific Information Journal Citations Report for 2003 ranks The International Journal of Neuroscience 175th out of 198 journals in Neurosciences (Science),
with an impact factor of 0.579.

இந்த ஆய்வினை செய்தவர் மகரிஷி வேத அறிவியலில் இணைப்பேராசிரியராக பணிபுரிபவர்.இந்தப் பல்கலைகழகத்தில் உள்ள ஆசிரியர்களும்,மாணவர்களும் ஆழ்நிலைத் தியானம்பயிற்சி செய்பவர்கள். ஆர்.எஸ்.எஸ் வலைத்தளத்தில் பல்கலைகழகத்தின் பெயரும், கட்டுரை வெளியான ஆண்டும் குறிப்பிடப்படவில்லை. இந்தக் கட்டுரையை வெளியாகி நான்கு ஆண்டுகளுக்குப்பின் இப்பொது குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை.

இதன் அடிப்படையில் தினமலர் முதல் திண்ணை வரை சம்ஸ்கிருதம் பயில்வது உடல்நலத்திற்கு நல்லது என்று செய்திகள், கட்டுரைகள் வெளியாகலாம். ஆனால் எனக்கென்னவோ இப்படி ஆய்வுகள் செய்வதற்கு பதிலாக சம்ஸ்கிருதம் பயில்வதற்கும் அல்லது பகவத்கீதை படிப்பதற்கும் பாலுறவுசெயல்பாட்டிற்கும் இருக்கும் தொடர்பினை ஆராயலாம். அது போல் சம்ஸ்கிருதம் பயில்வதற்கும்அல்லது பகவத் கீதை படிப்பதற்கும் பங்குச்சந்தைக் குறியீட்டிற்கும் உள்ள தொடர்பினைஆராயலாம். அப்புறம் கீழ்கண்ட முடிவுகளை அறிவிக்கலாம்

சம்ஸ்கிருத உச்சரிப்பு பாலுறவு செயல்பாட்டினை மேம்படுத்துகிறது. அர்த்தம் புரிந்து படிக்கவேண்டும் என்பதில்லை. சம்ஸ்கிருத நூல்களை வாய்விட்டு படித்தாலே பாலுறவில் விரும்பத்தக்கமாற்றம் ஏற்படுகிறது, உச்ச இன்பம் எளிதாக கிடைக்கிறது, நீண்ட நேரம் நீடிக்கிறது, முக்கியமாக சம்ஸ்கிருதம் நூல்களைப் படிப்பதும், வாய்விட்டு படிப்பதும் கருத்தரித்தலை எளிதாக்குகின்றன,பிரசவ காலத்தில் சம்ஸ்கிருத மந்திரங்களைக் கேட்டால் கூட பிரசவம் சுகப்பிரசவமாக அமைகிறது.

இந்துக்கள் அதிகமாக குழந்தைகள் பெற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் விரும்புவதால் இந்த முடிவு சம்ஸ்கிருதத்தினைப் பரப்பவும், இந்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் உதவும்.

சம்ஸ்கிருதம் பயில்வோர் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அல்லது தினமும் சம்ஸ்கிருதநூல்களை வாய்விட்டுப் படிப்போர் எண்ணிக்கை கூடினால் அதற்கேற்றார்ப் போல் பங்குச்சந்தைகுறியீட்டு எண்ணும் அதிகரிக்கிறது. (இதற்கு எகனாமிக் டைம்ஸ் எப்படி தலைப்பிடும் என்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்).

இப்படி ஆய்வுகள் செய்தால் நிஜமாகவே வீட்டிற்கும் நாட்டிற்கும், ஏன் உலகிற்கே நல்லது. அதை விடுத்து யாருக்கும் எளிதில் விளங்காத ஆய்வுகளை செய்ய வேண்டாம் என்று மகரிஷி பல்கலைகழகத்தில் உள்ள ஆய்வாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

6 மறுமொழிகள்:

Blogger Samudra மொழிந்தது...

//
இந்துக்கள் அதிகமாக குழந்தைகள் பெற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் விரும்புவதால் இந்த முடிவு சம்ஸ்கிருதத்தினைப் பரப்பவும், இந்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் உதவும்.//

ஹாஹாஹஹ!

1:04 AM  
Blogger Thangamani மொழிந்தது...

//சம்ஸ்கிருத உச்சரிப்பு பாலுறவு செயல்பாட்டினை மேம்படுத்துகிறது. அர்த்தம் புரிந்து படிக்கவேண்டும் என்பதில்லை. சம்ஸ்கிருத நூல்களை வாய்விட்டு படித்தாலே பாலுறவில் விரும்பத்தக்கமாற்றம் ஏற்படுகிறது, உச்ச இன்பம் எளிதாக கிடைக்கிறது, நீண்ட நேரம் நீடிக்கிறது, முக்கியமாக சம்ஸ்கிருதம் நூல்களைப் படிப்பதும், வாய்விட்டு படிப்பதும் கருத்தரித்தலை எளிதாக்குகின்றன,பிரசவ காலத்தில் சம்ஸ்கிருத மந்திரங்களைக் கேட்டால் கூட பிரசவம் சுகப்பிரசவமாக அமைகிறது.//

ரவி இதெல்லாம் ஏற்கனவே நிரூபிக்கப்படவில்லை என நினைக்கிறீர்களா!!

2:05 AM  
Blogger KARTHIKRAMAS மொழிந்தது...

/சம்ஸ்கிருத உச்சரிப்பு பாலுறவு செயல்பாட்டினை மேம்படுத்துகிறது. அர்த்தம் புரிந்து படிக்கவேண்டும் என்பதில்லை. சம்ஸ்கிருத நூல்களை வாய்விட்டு படித்தாலே பாலுறவில் விரும்பத்தக்கமாற்றம் ஏற்படுகிறது, உச்ச இன்பம் எளிதாக கிடைக்கிறது, நீண்ட நேரம் நீடிக்கிறது, முக்கியமாக சம்ஸ்கிருதம் நூல்களைப் படிப்பதும், வாய்விட்டு படிப்பதும் கருத்தரித்தலை எளிதாக்குகின்றன,பிரசவ காலத்தில் சம்ஸ்கிருத மந்திரங்களைக் கேட்டால் கூட பிரசவம் சுகப்பிரசவமாக அமைகிறது.
/

:))

9:32 AM  
Blogger முத்து(தமிழினி) மொழிந்தது...

//தினமலர் முதல் திண்ணை வரை சம்ஸ்கிருதம் பயில்வது உடல்நலத்திற்கு நல்லது என்று செய்திகள், கட்டுரைகள் வெளியாகலாம்.//

//சம்ஸ்கிருத நூல்களை வாய்விட்டு படித்தாலே பாலுறவில் விரும்பத்தக்கமாற்றம் ஏற்படுகிறது//

நல்ல நக்கல்

6:44 PM  
Anonymous பத்மகுமார் மொழிந்தது...

கொடுமை...

பேரறிஞர் சார்லஸ் டார்வினின் "சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட்" கொள்கைப்படி.. வடமொழி அழிந்துவிட்டது... டைனசார் மாதிரி.. "ஜுராசிக் பார்க்" முயர்ச்சி எல்லாம் விபரீதம்...

4:27 AM  
Anonymous குமார் மொழிந்தது...

பேரறிஞர் சார்லஸ் டார்வினின் "சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட்" கொள்கைப்படி.. வடமொழி அழிந்துவிட்டது.. இப்போது அது வேறுவேறு வடிவம் பெற்றுவிட்டது அல்லது மணுக்குள் "டைனசார்" போல் எலும்புக்கூடாய் கிடக்கிறது.. தோண்டி எடுத்து காட்சியகத்தில் வைக்கலாம்..

"ஜுராசிக் பார்க்" முயர்ச்சி எல்லாம் விபரீதம்..

மு.கு: மேலும் "தமிழ்"/"தென்மொழி"க்கு ஒத்துவராத மொழி..

4:41 AM  

Post a Comment

<< முகப்பு