காதலர் தினம் - சிறப்பு புகைப்படத்துடன்

அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள்.

இந்த தினத்தினை மனமுவந்து, மகிழ்ச்சியுடன் நேசத்துடன் கொண்டாடுங்கள்.வணிகமயமாக்கப்பட்டாலும் இது போன்ற தினங்கள் தனி நபர் சுதந்திரம், தெரிவின் வெளிப்பாடுகள், ஆகவே முக்கியமானவை. சிலர் அர்த்தமற்று இதை எதிர்பார்ப்பார்கள்.மதம், பண்பாடு என்ற பெயரில் புலம்புவார்கள். அவற்றைப் புறந்தள்ளி இத்தினத்தினை கொண்டாடுங்கள்.


இப்புகைப்படம் சுவிஸ் ரயில்வே அனுப்பிய ஒரு உறையில் இருந்து எடுக்கப்பட்டது. இதில் டெபு என்ற ஊரில் உள்ள ரயில் நிலையத்தில் ஒரு ஜோடி முத்தமிட்டுக் கொண்டிருப்பது தெரிகிறது.இங்கு ரயிலில் பயணம் செய்கையில் இருவர் முத்தமிட்டுக் கொண்டாலும் பிறர் முகம் சுளிப்பதில்லை, அதை கண்டிப்பதில்லை. பேருந்துகளிலும், பொது இடங்களிலும் இதே நிலைதான். ஏரிக்கரைகளிலும் இப்படி ஜோடி
ஜோடியாக காதலர்களை, தம்பதிகளைப் பார்க்க முடியும்.

அது மட்டுமல்ல, நள்ளிரவிலும் பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியும்.உடை இப்படித்தான்இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு இல்லை. ஆணும், பெண்ணும் தழுவிக் கொள்வதும் மிகஇயல்பாக கருதப்படுகிறது.

இங்கு வாருங்கள், பயணியுங்கள், வாழ்வை, காதலைக் கொண்டாடுங்கள் என்று சொல்லாமல் சொல்கிறது இப்படம்.

காதல் செய்வீர், காதலை கொண்டாடுவீர்,வாழ்வினைக் கொண்டாடுவீர், இன்றும், என்றும்.

7 மறுமொழிகள்:

Blogger ravi srinivas மொழிந்தது...

test

10:35 PM  
Blogger மணியன் மொழிந்தது...

காதலர்தின வாழ்த்துக்கள் !!

11:43 PM  
Blogger Voice on Wings மொழிந்தது...

//இந்த தினத்தினை மனமுவந்து, மகிழ்ச்சியுடன் நேசத்துடன் கொண்டாடுங்கள். வணிகமயமாக்கப்பட்டாலும் இது போன்ற தினங்கள் தனி நபர் சுதந்திரம், தெரிவின் வெளிப்பாடுகள், ஆகவே முக்கியமானவை. சிலர் அர்த்தமற்று இதை எதிர்ப்பார்கள்.மதம், பண்பாடு என்ற பெயரில் புலம்புவார்கள். அவற்றைப் புறந்தள்ளி இத்தினத்தினை கொண்டாடுங்கள்.//

Hip, hip, hurrah!

3:48 AM  
Blogger Thangamani மொழிந்தது...

ரவி!

எல்லா பண்டிகைகளும் வணிக நோக்கில் அணுகப்பட்டு சந்தைப்படுத்தப்படுவது இயல்பானதாகிவிட்டது; முதலில் சந்தை என்பது பண்டிகைக் கொண்டாட்டங்களோடு தவிர்க்கமுடியாத தொடர்புடையதுதான். இப்போது சந்தை உலகளாவியதாக மாறிவிட்டது என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் இந்தப்பண்பாட்டு காவலர்கள் திடீரென சந்தைப்படுத்தப்படுத்தப்பட்ட கதையெல்லாம் இப்போது சொல்வது, இவர்களது வாழ்க்கைக்கு எதிரான (காதலுக்கு) எதிரான போக்கையே காட்டுகிறது; வேண்டுமானால் அவர்கள் உள்ளூர் பூவையும், வாழ்த்து அட்டைகளையும் பயன்படுத்தலாம் அல்லது விரும்புகிறமாதிரி கொண்டாட வேண்டியதுதானே!

நல்ல பதிவு. நன்றி!

4:20 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

what a shame you support vulgarity -:(

9:49 AM  
Blogger டிசே தமிழன் மொழிந்தது...

விரைவில் சுவிஸ் போக இருக்கின்றேன். உற்சாகப்படுத்தும் இந்தப்பதிவுக்கு நன்றி.
.....
பெங்குவின்களும் பெப்ரவரி 14லிலா காதலர் தினத்தை கொண்டாடுகின்றன :-)?

11:28 AM  
Blogger நேச குமார் மொழிந்தது...

நல்ல பதிவு, நல்ல தருணத்தில். நன்றி.

12:01 PM  

Post a Comment

<< முகப்பு