சமீரா முனிர்

சமீரா முனிரின் மரணம் (அது தற்கொலையா, கொலையா அல்லது விபத்தா ?) சில கேள்விகளைஎழுப்புகிறது. ஒரு பெண் தன் உடை குறித்த நிலைப்பாட்டினை தெளிவாக எடுத்தத்ற்காக தொந்தரவு செய்யப்படுகிறார், அவரது குடும்பம் அச்சுறுத்தப்படுகிறது. இது நார்வேயில் நடந்தாலும் மத அடிப்படைவாதம் எப்படி ஒரு நாகரிக சமூகத்திற்கு அச்சுறுத்தலாக எங்குமே இருக்கக் கூடும் என்பதற்கு ஒரு உதாரணம். இந்த அடிப்படைவாதத்தினையும் மீறி ஐரோப்பாவில் புது வரலாறு படைத்து வருகிறார்கள் பெண்கள். ஐரோப்பிய அரசுகள் இந்த அடிப்படைவாதத்தினை ஒடுக்காவிட்டால் ஐரோப்பாவில் உள்ள அனைவருக்குமே இவர்களால் ஆபத்து ஏற்படும். ஏனெனில் இவர்கள் தனி மனித சுதந்திரம், விருப்பம், மனித உரிமைகளை மதிப்பவர்கள் அல்லர். இந்த அடிப்படைவாதிகள் ஐரோப்பிய சமூகமும், அரசுகளும் தரும் அனைத்து உரிமைகளையும், சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டு அவற்றின் மூலமே அடிப்படைவாதத்தினை, தனிமனித உரிமை மறுப்பினை நிலைநாட்ட முயல்கிறார்கள்.

ஆனால் இத்தகையவர்கள் ஐரோப்பாவில் மட்டும் இல்லை. இந்தியாவிலும் இருக்கிறார்கள். இந்திய அரசியல் சட்டத்தின் கீழ் உரிமைகள் கோருவார்கள், அதே சமயம் அவற்றை பெண்களுக்கு மத நம்பிக்கையை காரணம் காட்டி மறுப்பார்கள். உலகெங்கும் மத அடிப்படைவாதம் மனித உரிமைகளுக்கும், நாகரிகமடைந்த சமூகங்களின் விழுமியங்களுக்கும் இன்று ஒரு பெரும் சவலாகஉள்ளது. இந்த உண்மையை நாம் மறந்து விடக் கூடாது.

4 மறுமொழிகள்:

Blogger ravi srinivas மொழிந்தது...

Test

8:19 PM  
Blogger நேச குமார் மொழிந்தது...

தகவலுக்கு நன்றி ரவிஸ்ரீநிவாஸ்.

உங்களது பல கருத்துக்களில் எனக்கு கருத்து வேறுபாடு உண்டு. கருத்துக்கள் ஒரு புறமிருந்தாலும் நீங்கள் ரியாக்ட் செய்யும் விதம்/எதிர்கொள்ளல் குறித்து அதிகமாகவே மனவித்தியாசங்கள் உண்டு.

அவை ஒரு புறமிருக்க, உங்களின் இத்தகைய எழுத்துக்கள் உங்களின் மீது மதிப்பு கொள்ள வைக்கின்றன.

இந்து அடிப்படைவாதிகளின், தமிழ் அடிப்படைவாதிகளின் பெண்ணுரிமை மறுப்பு, ஒழுக்கம் சார்ந்த அறிவுறுத்தல்கள் ஆகியவற்றை கண்டிக்கும் நமது அறிவுஜீவி வர்க்கம் இது போன்ற விஷயங்கள் குறித்துப் பேசுவது/கருத்து/கண்டனம் தெரிவிப்பது இல்லை.

பேசினால், உடனடியாக அவர்கள் சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள், பெரும்பான்மை மதத்தவருக்கு ஆதரவாக செயல்படுபவர்கள், பிறரது மத சுதந்திரத்தில் தலையிடுபவர்கள், மத வெறுப்பாளர்கள்,முற்போக்குக் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்ட நவீன-பிற்போக்கு வாதிகள் என்றெல்லாம் முத்திரை குத்தப் படுவார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் நீங்கள், தொடர்ந்து இஸ்லாமிய அடிப்படைவாதத்தையும் பாசிஸத்தையும் கண்டித்து வருவது வரவேற்கத்தக்கது. இத்தனைக்கும் இஸ்லாமிஸ்டுகளின் வன்முறைகள் பற்றி நீங்கள் எழுத ஆரம்பித்ததிலிருந்து உங்களுக்கு எதிராக வரும் கணைகளை, உள ரீதியான தாக்குதல்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். உங்களது மன உறுதியும், தொடர்ந்த பணியும் பாராட்டுக்குரியது.

12:49 AM  
Blogger Thangamani மொழிந்தது...

Thanks for the post Ravi. The links are interesting.

4:19 AM  
Blogger சுதர்சன் மொழிந்தது...

ரவி, நீங்கள் சொல்லியிருப்பது 200% உண்மை. இந்த அடிப்படைவாதிகளின் கையில் சிக்கி ஐரோப்பா படும், படப் போகும், பாட்டை நினைத்தால் கிலேசமாக இருக்கிறது.

4:01 PM  

Post a Comment

<< முகப்பு