கொற்றவை- குமரிக் கண்டம்

திண்ணையில் வெளியாகியுள்ள நூல் மதிப்புரையில் கரு.ஆறுமுகத் தமிழன்

"தொன்மொழியான தென்மொழி தோன்றிய குமரிக்கண்டத்தைக் கடல்கொண்ட காலம் தொடங்கி, கன்னியாகுமரிவரை மட்டுமாகத் தமிழ்நிலம் குறுகிப்போய்விட்ட இன்றைய காலம்வரையிலான பல்லாயிரம் ஆண்டுகளின் பரப்பைக் களமாகக் கொண்டிருக்கிறது 'கொற்றவை.' "

என்று எழுதியிருக்கிறார்.

குமரிக் கண்டம் என்பது ஒரு கற்பனை.விக்டோரியா காலத்தில் அறிவியலாளர்கள் சிலர்முன்வைத்த கருதுகோள்கள், அனுமானங்களின் அடிப்படையில் எழுந்த புனைவு அது. அந்தஅனுமானங்களும், கருதுகோள்களும் நிராகரிக்கப்பட்டுவிட்ட பின்னும் கூட குமரிக் கண்டம்என்று ஒன்று இருந்ததாக எழுதப்படுவது தொடர்கிறது. இதில் நூலாசிரியர் நிலைபாடு என்ன என்பதை நானறியேன். நூல்
மதிப்புரையாளரின் கருத்துடன் நான் மாறுபடுகிறேன். புனைவுஒரு புதினத்தினை அல்லது கதையை எழுத அடித்தளமாக பயன்படலாம்.
ஆனால் அது புனைவுஎன்பதை தெளிவாக்கிவிட்டு மதிப்புரை எழுதுவதே பொருத்தமானது. மதிப்புரை எழுதியவர் இன்னும் குமரிக் கண்ட புனைவுகளை மெய் என்று நம்பிக் கொண்டிருக்கலாம். ஆனால் உண்மை வேறானது.இன்று அந்த நம்பிக்கையின் அடித்தளம் நொறுக்கப்பட்டுவிட்டது. நானறிந்த வரையில் இன்று குமரிக் கண்டம் என்பது ஒரு புனைவு, வெறும் கற்பனை என்று நிறுவப்பட்டிருக்கிறது.

இவர் தமிழ்ப் பேராசிரியர்என்று தினமணியில் வெளியாகியுள்ள மதிப்புரையிலிருந்து அறிகிறேன். பாட நூல்களில் இன்னும்குமரிக் கண்டம் இருந்தது என்று இருக்கிறதா என்ன?.

சமூக அறிவியல் நிராகரித்த ஏங்கெல்ஸின் ஆதி தாய் வழிச் சமூகம் குறித்த கருத்து இங்கு பெற்றுள்ள செல்வாக்கு, குமரிக் கண்டம் உண்மை என்று இன்னும் நம்பிக்கொண்டிருப்பது , இவற்றை வைத்துப் பார்த்தால் அறிவியலும், சமூக அறிவியலும் புறந் தள்ளி, குப்பைத் தொட்டியில் போட்ட கோட்பாடுகள் இறுதியாக புகலிடம் பெறும் இடம் தமிழ் நாடு, தமிழ் அறிவுச்சூழல் தானா என்றுக் கேட்கத் தோன்றுகிறது.

2 மறுமொழிகள்:

Blogger ravi srinivas மொழிந்தது...

The comment posted in the name of Kasi has been rejected for obvious reasons.I guess someone is indulging in some dirty tricks.

12:02 AM  
Blogger மஞ்சூர் ராசா மொழிந்தது...

செல்வனின் வலைப்பதிவிலிருந்து:

குமரிக்கண்ட வரலாறு

லெமூரிய தேடலின் வரலாறு:

லெமூரியா என்ற சொல்லை முதல் முதலில் உருவாக்கியவர் பிலிப் லட்லி ஸ்காட்லர் (1864) என்ற வெள்ளையராவார்.லேமூரியாவை கோன்ட்வானாலாந்து,இந்தோ-ஆப்பிரிக்க கண்டம் என்று பல பெயரால் 19ம் நூற்றாண்டின் ஐரொப்பிய ஆராச்சியாளர்கள் அழைத்தனர்.

லெமூரியா என்பது கண்டமா என்று பலத்த விவாதம் நடைபெற்றது. அது ஒரு பாலம் என்று வாதிட்டவர் உண்டு.கண்டம் என்று வாதிட்டவர் உண்டு.நிலப்பாலம் என்று கூறியவர் உண்டு.

அன்றைய தமிழறிகர்கள் தமிழ் பெயரை லெமூரியக்கண்டதுக்கு இட்டனர்.சூரியநாராயன சாஸ்திரியார் 1903'ல் 'குமரி கண்டம்" என அதை அழைத்தார்.'குமரி நாடு' 'குமரி தேசம்' என்று பல பெயர்கள் லெமூரியாவுக்கு அன்று இடப்பட்டன.

லெமூரியா என்ற பெயர் ஏன் வந்தது என்று கேட்டால் தமிழர் கொதித்துபோவோம்.பிலிப் ஸ்காட்லர் ஒரு விலங்கியல் துறை நிபுணர்.லெமூரியகண்டத்தில் லெமூர் என்ற குரங்கினம் வாழ்ந்ததாக கருதி அப்பெயரை அவர் இட்டார்.அன்றைய தமிழறிஙர்களுக்கு அப்பெயர் பிடிக்காதது போனதற்கு இது தான் காரணம்.பெரும்பாலான தமிழ் பெயர்கள் 'குமரி' என்றே துவஙி இடப்பட்டன.

லெமூரிய கண்டத்து தமிழர்களை பற்றி அன்றைய ஐரோப்பியரிடையே பல கீழான கருத்துக்கள் நிலவின.அவர்கள் குரங்கு மனிதர்கள்,நியாண்டர்தால்கள் என்று ஐரோப்பியர் கருதினர்.

யாழ்பாணத்தை சேர்ந்த தமிழறிங்கர் முத்தாம்பி பிள்ளை 1902'லேயே இந்த கருத்தை மறுத்தார்.லெமூரியா என்ற பெயரயே ஒதுக்கிவிட்டு குமரி நாடு என்று அதற்கு பெயர் சூட்டினார்.

சமஸ்கிருத புராணங்களில் லெமூரியா:

வடமொழி புரானங்களில் லெமூரியா "குமாரிகா கண்டம்" என்று அழைக்கபட்டது.குமரித்திவீபம் என்றும் சொன்னார்கள்.
பாரத வர்ஷம் என்று இந்தியா 9 பிரிவுகளாக ஸ்கந்தபுரானத்தில் பிரிக்கபட்டுள்ளது.அதில் குமரித்தீவிபம் பற்றி சொல்லிவிட்டு பாரதநாட்டில் நாகரிக மனிதர்கள் வாழ்ந்த ஒரே பிரதேசம் குமரித்திவீபம் தான் என்று சொலியிருப்பதாக ஆறுமுக நாவலனார் கூறுகிறார்.
சிவன்கோயில்களும்,சைவத்தலங்களும்,பிராமண குடியிருப்புகளும் லெமூரியாவில் நிரம்பியிருந்ததாக ஆறுமுக நாவலனார் கூறுகிறார்.("கந்த புராண வசனம்" 1981-கொழும்பு-வெளியீடு ஆறுமுகநாவலனார் சபை)

http://holyox.blogspot.com/2006/01/blog-post_22.html

8:20 AM  

Post a Comment

<< முகப்பு