திண்ணையில் வெளியான கடிதம்

இந்த வாரத் திண்ணையில் வெளியான என் கடிதம்.

திண்ணை ஆசிரியருக்கு

கடந்த இதழில் மலர்மன்னன் எழுதிய கட்டுரை சிலருக்கு அதிர்ச்சி தந்திருக்கலாம்.ஹிந்த்துவ பிரச்சாரத்தினை தொடர்ந்து கவனித்து வரும் எனக்கு அது வியப்பை அளிக்கவில்லை. ஹிந்த்துவவாதிகள் பலர் இதே கருத்தினை கொண்டிருந்தாலும் அதை வெளிப்படையாக சொல்லமாட்டார்கள் அல்லது பூசி மெழுகுவார்கள். மலர்மன்னன் சற்று வெளிப்படையாக எழுதியிருக்கிறார். தலைப்பே (மோகன் தாஸ் கொலையும், அதற்கு நாதுராம் நிறுவிய நியாயங்களும்) அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை எடுத்துரைக்கிறது. ஒரு கொலையை நியாயப்படுத்த எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சி செய்திருக்கும் அவர் மிக வெளிப்படையாக ஆம், கொலை செய்தது சரிதான், அதற்காக அவரும் வருந்தவில்லை, அதை நியாயப்படுத்தும் நானும் வருந்தவில்லை, ஹிந்து சமூகத்தின் நலனுக்காக கொலைகள் உட்பட எதை செய்தாலும் சரிதான் என்றே எழுதியிருக்கலாம்.
பல ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆர்.எஸ்.எஸ் ஊழியரிடம் காந்தி கொலை செய்யப்பட்டதை விரிவாக விவாதித்த பின் ஒரு கேள்வி கேட்டேன், ஆர்.எஸ்.எஸ்காரர்களில் எத்தனை சதவீதம் பேர் இந்த கொலை நியாயமானது என்று நினைக்கிறார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்கள். 75% பேர் என்பது அவர் பதில். ஆனால் காந்தியை மிகவும் வெளிப்படையாக ஹிந்து விரோதி என்று சித்தரிப்பது தங்களுக்கு எதிராகப் போய்விடுமோ என்பதால்தான் ஆர்.எஸ்.எஸ் மிகவும் வெளிப்படையாக காந்தியை அவ்வாறு சித்தரிப்பதையும், கொலையை நியாயப்படுத்துவதையும் தவிர்க்கிறதா என்று கேட்ட போது அவரிடமிருந்து ஒரு புன்னகைதான் பதில். நான் சொன்னேன், உங்களால் பெரியாரை இந்து விரோதி, நாத்திகர் என்று பிரச்சாரம் செய்வது எளிது ஆனால் காந்தியை விமர்சிப்பவர்கள் கூட அவரை வெறுப்பதில்லை, கொலையை நியாயப்படுத்தமாட்டார்கள். மேலும் காந்தியை மகான், உதாரண புருஷர், ராம பக்தர் என்று இந்துக்கள் கருதுவதும் உங்களுக்கு இடையூறாக இருக்கிறது. இது உண்மைதானே என்று கேட்டேன். ஆம் என்று ஒத்துக்கொண்டார்.
ஹிந்த்துவ்வாதிகளுக்கு 1948ல் கொலை செய்யப்பட்டபின்னும் காந்தி தலைவலியாக, தொந்தரவாக இருக்கிறார் என்பதற்கு ஒரு உதாரணம்தான் மலர்மன்னன் கட்டுரை. காந்தியை மிக கடுமையாகவிமர்சித்த அம்பேத்காரும், பெரியாரும் அவரை ஒழித்துக்கட்டப்பட வேண்டிய விரோதி என்று ஒருபோதும் கருதியதில்லை. ஆனால் இன்றும் கூட காந்தியை பற்றிய ஹிந்த்துவவாதிகளின் சித்தரிப்பும்,கண்ணோட்டமும் எப்படி இருக்கிறது என்பதற்கு மலர்மன்னன் கட்டுரை உட்பட பல உதாரணங்கள்தரமுடியும். மலர்மன்னன் திண்ணையில் எழுதத்துவங்கிய போது அதை வரவேற்றவர்கள் இக்கட்டுரைகுறித்து என்ன கருதுகிறார்கள் என்பதை எழுத வேண்டும். திண்ணையில் கிட்டதட்ட தனி ஆவர்த்தனமாக ஹிந்த்துவ கச்சேரி செய்து கொண்டிருந்தார் ஒருவர், இப்போது மலர்மன்னன் வேறு. கச்சேரி நன்றாக களை கட்டியிருக்கிறது. அடுத்து 2002ல் குஜராத்தில் நடந்த படுகொலைகளை நியாயப்படுத்தியும், நரேந்திரா ஒரு அவதார புருஷர், கர்ம் யோகி, கீதையின் படி நடந்தார் என்று மலர்மன்னன் கட்டுரை எழுதினால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.
மலர்மன்னன் உட்பட பல ஹிந்த்துவவாதிகளின் சொல்லாடல்களில் பரிச்சயம் உடையவர்களுக்கு ஹிந்த்துவவாதிகள் உண்மைக்கு கொடுக்கும் மதிப்பு என்ன என்பது நன்றாகவே தெரியும். இதில்சுப்பிரமண்யன் சுவாமிக்கும், சந்தியா ஜெயினுக்கும், மலர் மன்னனுக்கு பெரிய வேறுபாடு இல்லை.நடையில்தான் மாற்றம் இருக்கும். அதிலும் சந்தியா ஜெயினின் (கு)தர்க்கத்தினை குறிப்பிட்டுச்சொல்ல வேண்டும்.இவர்களுடைய எழுத்திற்கும் ஹிட்லரின் இனவெறிக்கு ஆதரவளித்து எழுதியJulius Streicherன் எழுத்திற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.
நியுரெம்பெர்க் விசாரணையின் போது ஒரு நாசி கூறியது "I think you can score many more successes when you want to lead someone if you dont tell them the truth than if you tell them the truth". மலர்மன்னனின் கட்டுரைகளை படிக்கும் போது இது என் நினைவிற்கு வருகிறது. மலர்மன்னனின் கட்டுரையை படிக்கும் வாசகர்கள் ஆர்கனைசரின் தலையங்கங்களையும் படிக்க வேண்டும், குறிப்பாக கீழ்கண்ட தலையங்கத்தினை
http://www.organiser.org/dynamic/modules.php?name=Content&pa=showpage&pid=109&page=6
அதில் The poor MPs, mostly back benchers did not get even the usual chance that our democracy generously grants to even the most despicable criminals like Abu Salem or Shahabuddin.என்று குறிப்பிப்படுகிறது.இது எந்த அளவு உண்மை என்பதை வாசகர்களே தீர்மானித்துக்கொள்ளட்டும்.

அயோத்திதாசரை இப்போது சிலர் புகழ ஆரம்பித்திருக்கிறார்கள், பெரியாரை திட்டிக்கொண்டே. இவர்கள் அயோத்திதாசர் குறித்து அலேஷியஸ் வைத்துள்ள விமர்சனங்களையும்,அயோத்திதாசர் குறித்து எழுந்துள்ள விமர்சனங்க¨,விவாதங்களை பிறர் படிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்வது நல்லது. போகிற போக்கில் அவர்களுடைய இந்த பட்டியலில் அயோத்திதாசருக்கு அடுத்து ரவிக்குமார் இடம் பெற்றால் வியப்பில்லை.

10 மறுமொழிகள்:

Blogger மு. சுந்தரமூர்த்தி மொழிந்தது...

ரவி,
முன்பு ஒரு பதிவில் நான் எழுதியிருந்த பின்னூட்டத்தின் பிழைத்திருத்திய வடிவம் கிடைத்ததா? முதலில் பிழையுடன் அனுப்பிய பின்னூட்டம் வெளியானதால்(மலர் மன்னன் என்ற பெயரில் இருந்த பிழை வேறொரு பொருளைக் கொடுத்ததால், தவறாக புரிந்துகொள்ள வாய்ப்புண்டு என்று)அழித்துவிட்டேன்.

மற்றபடி இந்த கடிதத்திற்கு நன்றி. இதில்லுள்ள ஒரு கேள்வியையே அந்த பின்னூட்டத்தில் நானும் எழுப்பியிருந்தேன்.

8:15 PM  
Blogger dondu(#4800161) மொழிந்தது...

"மேலும் காந்தியை மகான், உதாரண புருஷர், ராம பக்தர் என்று இந்துக்கள் கருதுவதும் உங்களுக்கு இடையூறாக இருக்கிறது. இது உண்மைதானே என்று கேட்டேன். ஆம் என்று ஒத்துக்கொண்டார்."

இப்போது நான் கூறுகிறேன். அதே போல வெள்ளம், சுனாமி, ரயில் விபத்துகள், புயல் ஆகிய பேரிழிவுகள் வரும்போதும் உள்ளூர் ஆர்.எஸ்.எஸ்ஸை கலெக்டர் உட்பட அரசு அதிகாரிகள் உதவி செய்யுமாறு அழைப்பது நிற்கவில்லை, அழைக்காவிட்டாலும் ஆர்.எஸ்.எஸும் வந்து ஜாதி மதம் பாராது எல்லோருக்கும் உதவி செய்து, மற்றவர் தொடக் கூசும் அழுகிய பிணங்களை அப்புறப்படுத்தல் ஆகிய வேலை செய்வதும் நிற்கவில்லை. அந்த சேவைகளையெல்லாம் அரசு எந்திரங்களும், ஊடகங்களும் இருட்டடிப்பு செய்வதும் நிற்கவில்லை. ஏன் இவ்வாறு என்று சம்பந்தப்பட்ட ஒரு கலெக்டரிடம் கேட்ட போது அவர் அது மேலிடத்து உத்திரவு என்று கூறினார்.

இது பல வருடங்களாகவே நடைப் பெற்று வருகிறது.

நெருக்கடி நிலையின் உச்சக் கட்டத்தில் விசாகப் பட்டினத்தில் புயல். அதிலும் இத்தொண்டர்கள் அரும்பணியாற்றினர். நியூஸ் ரீல் காட்சி பிரேமில் ஒரு சில நிமிடங்கள் ஆர்.எஸ்.எஸ் சேவா மண்டல் என்ற பேனரை அரங்கில் இருந்த நான் காணக் கிடைத்தது. அதற்காக சம்பந்தப்பட்ட கேமரா மேன் சஸ்பெண்ட் செய்யப் பட்டார் என்பதைப் பற்றிப் பிறகுப் படித்தேன்.

இப்பின்னூட்டம் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

9:12 PM  
Blogger மு மாலிக் மொழிந்தது...

//முன்பு ஒரு பதிவில் நான் எழுதியிருந்த பின்னூட்டத்தின் பிழைத்திருத்திய வடிவம் கிடைத்ததா? முதலில் பிழையுடன் அனுப்பிய பின்னூட்டம் வெளியானதால்(மலர் மன்னன் என்ற பெயரில் இருந்த பிழை வேறொரு பொருளைக் கொடுத்ததால், தவறாக புரிந்துகொள்ள வாய்ப்புண்டு என்று)அழித்துவிட்டேன்.// மு சுந்தரமூர்த்தி

சுந்தரமூர்த்தி அவர்களே அருமை. பொருப்புள்ளவர் நீங்கள். நானாக இருந்திருந்தால் சோம்பேறித்தனமாக அப்படியே விட்டுவிட்டு இருப்பேன்.

1:52 PM  
Blogger மு மாலிக் மொழிந்தது...

ரவி,

நல்ல கடிதம் எழுதியுள்ளீர்கள். வெளிப்படையான கருத்துக்கள். நன்றி

2:51 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

//அழைக்காவிட்டாலும் ஆர்.எஸ்.எஸும் வந்து ஜாதி மதம் பாராது எல்லோருக்கும் உதவி செய்து, மற்றவர் தொடக் கூசும் அழுகிய பிணங்களை அப்புறப்படுத்தல் ஆகிய வேலை செய்வதும் //

இதை படித்த பொழுது சுனாமி மீட்பு பணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் நடந்த சம்பவம் நினைவு வருகிறது. இந்த வாக்கியத்தை மறந்தும் குளச்சல் மக்களின் முன் போய் கூறி விட வேண்டாம். பிறகு "தன் பல்லை தானே குத்தி நாற்றிய" கதையாக ஆகி விடப் போகிறது.

அன்புடன்
இறைநேசன்

12:57 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

I have no idea about what had happened in Kulachel. I have not come across any such complaint against RSS. I disagree with RSS on many issues and I do respect their services during natural calamities.

2:51 PM  
Blogger Thangamani மொழிந்தது...

//"I think you can score many more successes when you want to lead someone if you dont tell them the truth than if you tell them the truth". //

ஆர்.எஸ்.எஸ் இந்த வகைத்தந்திரத்தைப் பயன்படுத்துவது ஒரு மக்கள் குழுவிடம். மாறாக காந்தியைப் புகழ்வதையும் அது வேறொரு மக்கள் குழுவிடம் செய்யும். எப்படியாயினும் அதன் நோக்கம் ஒன்றே. காந்தி கொல்லப்பட்டது இந்துக்களுக்கு எதிராக அவர் செயல்பட்டார் என்று ஆர்.எஸ்.எஸ் சொன்னாலும், உண்மையான காரணம் அவர் சாதியைப்பற்றிய புரிதல் கூர்மையடைந்ததும், அதனால் பிராமணியத்துக்கு எதிரான போக்குகளைத் தீவிரமாகக் கடைப்பிடித்ததுமே ஆகும். இன்று இந்துதீவிரவாத இயக்கங்கள் இஸ்லாமிய மக்களை தாக்குவதும், குஜராத்தில் கொன்றொழித்ததும், தாழ்த்தப்பட்ட மக்கள் இஸ்லாமுக்குச் சென்றாலும் பாதுகாப்பில்லை என்ற எச்சரிக்கையை தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சொல்வதற்குத்தான். சாதியமைப்பைக் காப்பாற்றும் இந்துத்துவாவைப் பாதுகாப்பதுதான் ஆர்.எஸ்.எஸின் உண்மையான நோக்கம்.

காந்தியும் பெரியாரும் இரண்டாம் முறை சந்தித்துக்கொண்டபோது, பெரியார் காந்தியை சாதியைக்குறித்து அவர் அடைந்துவரும் புரிதல் அவரைச் சார்ந்த பிராமணீய நம்பிக்கைக்கொண்டவர்களையும் அவருக்கு எதிரிகளாக்கும் என்பதையும் அதனால் அவர் கொல்லப்படவும் கூடும் என்று எச்சரித்திருப்பார். அதை காந்தியும் மறுக்காமல், அவருக்கு அப்பாடியான எதிர்ப்பு வலுத்துவருவது உண்மைதான் என்றும் குறிப்பிட்டு இருப்பார்.

காந்தி கொலை என்பது சாதியமைப்பக் காப்பாற்ற நிகழ்ந்த இன்னொரு சம்பூகவதம்தான்.

உங்கள் பதிவுக்கு நன்றி ரவி!

5:48 PM  
Blogger நண்பன் மொழிந்தது...

ரவி,

உங்களுடைய இந்தக் கடிதத்திற்கு நன்றி.

பாராட்டுகள்.

நண்பன்.

5:54 PM  
Blogger aathirai மொழிந்தது...

பாராளுமன்றத்தில கோட்சே படம் தெறக்காம் இருந்தா சரி.

பிஜெபி எம்பிக்கள்
“He that is without sin among you, let him cast the first stone"
- இது நல்ல தமாசு

In US, Lobbying is not the same as bribing. Otherwise Abramoff will not
be in Jail.

9:46 AM  
Blogger மு மாலிக் மொழிந்தது...

ரவி,

RSS-ன் தொண்டு நிறுவனங்கள் மீதான உங்களுடைய எண்ணத்தினைப் பற்றிய விமர்சனம் இது.

RSS-ன் தொண்டு நிறுவனங்களின் செயல்கள் உள்நோக்கம் உடையவை.

1) 'இந்தியாவின் முன்னேற்றத்திற்காகவும் நிவாரணத்திற்காகவும்' என்ற பெயரில் மதக் கலவரங்களுக்காக வெளிநாடுகளில் மிகப் பெரிய அளவில் வசூலிக்கப்படும் தொகைகளுக்கு கணக்கு எழுத இந்த 'மீட்புப் பணிகளும்', வளர்ச்சிப் பணிகளும் பயன்படுகின்றன.

2) மேலும் கலவரங்களின் போது இறங்கி ஈடுபட சமூகத்தின் கிழ்மட்டத்தில் இருப்பவர்களின் ஆதரவைப் பெறவும் இந்த தொண்டு நிறுவனங்கள் பயன்படுகின்றன. RSS-ன் முக்கிய பதவிகளில் இருப்பவர்களும், பெரும்பான்மையான உறுப்பினர்களும் ஜாதி மற்றும் வாழ்க்கைத் தரம் அடிப்படையில் உயர்ந்த மட்டத்தைச் சேர்ந்தவர்கள். எனவே அழிப்புப் பணிக்கு உடல் ரீதியான பங்களிப்பு இவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. எனவேதான் வாழ்க்கைத் தரத்தில் கீழ்மட்டத்தில் இருப்பவர்களின் ஆதரவு அவசியமாகிறது.

இது பற்றிய ஆவணத்திற்கு
இங்கே சொடுக்கவும்.

(வலதுசாரி தளமான ரெடிஃப் இடமிருந்து ஆச்சரியப்படத்தக்க கட்டுரை இது)

ஆனால் தொண்டு பணிகள் ஒரு சார்புடையவையாக இருந்தாலும் அது சென்றடைவதில் மகிழ்ச்சியுடவன் நான். தொண்டினைப் பெறுபவர்கள் அதன் நோக்கங்களைப் பற்றி கவனமாக இருந்துவிட்டால் போதுமானது.

இத் தொண்டின் நோக்கங்களுக்கும் ஏனைய தொண்டு நிறுவனங்களான செஞ்சிலுவை (Red Cross / Red Crescent/ Red Crystal), கிரீன் பீஸ் (Green peace), ஆக்ஸ்ஃபாம்(Oxfam) போன்ற நிறுவனங்களின் நோக்கத்திற்கும் வேறுபாடு உண்டு.

இது, இந்திய சுதந்திர நோக்கத்தில், சவர்காரின் நோக்கமும், மற்ற தலைவர்களான நேரு, காந்தி, பெரியார் போன்றவர்களின் நோக்கமும் வேறுபடுவதை ஒத்தது.

நன்றி ரவி

10:16 AM  

Post a Comment

<< முகப்பு