நுழைவுத் தேர்வு ரத்தும்....

பிளஸ் 2 படித்த பின் பொறியியல்,மருத்துவம் போன்றவற்றைப் படிப்பதற்கு நுழைவுத் தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட ஒரு காரணம் அனைத்து மாணவர்களும் ஒரே பாடத்திட்டத்தின் கீழ்படிப்பதில்லை.கேந்திரிய வித்தியாலயா என்ற பெயரில் மத்திய அரசின் மானுடவள மேம்பாட்டுஅமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி பெற்ற அமைப்பினால நடத்தப்படும் பள்ளிகள் உட்படபல பள்ளிகள் சென்டர் போர்ட் ஆப் செகன்டரி எடுகேஷன் (CBSE) நடத்தும் தேர்வுகளுக்கு மாணவர்களைதயார் செய்கின்றன.இது தவிர ICSE நடத்தும் தேர்வுகளுக்கும் மாணவர்களை தயார் செய்யும்பள்ளிகளும் இருக்கின்றன. இப்ப்டி மூன்று அமைப்புகள் நடத்தும் தேர்வுகளின் அடிப்படையில்மாணவர்கள் தேர்வு எழுதும் போது ஒரே பாடத்திட்டம் இல்லாததால் நுழைவுத் தேர்வு அவசியமாகிறது. பொறியியல் படிப்புகளுக்கு மாநில அரசு நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று முடிவு செய்திருக்கிறது.

மருத்துவ படிப்பிற்கு நுழைவுத் தேர்வு தேவை என்று மெடிக்கல் கவுன்சில்ஆப் இந்தியா விதிகள் கூறுகின்றன. இதை தமிழ் நாட்டிற்கு மட்டும் தேவையில்லை என்று தளர்த்தஇயலாது.அதே சமயம் பொறியியல் கல்லூரிகளில் பல ஆயிரம் இடங்கள் காலியாக கடந்த ஆண்டு இருந்ததால், நுழைவுத் தேர்வினால் பாதிக்கப்பட்டு யாருக்கும் இடம் கிடைக்காமால போயிற்றுஎன்று கூற முடியாது. குறிப்பிட்ட பிரிவு, குறிப்பிட்ட கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லைஎன்று வேண்டுமானால் கூறலாம். ஆனால் மருத்துவ கல்லூரிகளும், இடங்களும் மிகவும்குறைவு. மருத்துவ படிப்பிற்கு கடும் போட்டி நிலவுகிறது, மாணவர் செலுத்த வேண்டியகட்டணமும் அதிகம். எனவே பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்களை மட்டும் வைத்து தேர்வு செய்வதை விட நுழைவுத் தேர்வு வைத்து தேர்ந்தெடுப்பது சரியானதாக இருக்கும். ஆனால் நுழைவுத் தேர்வினை வைத்து அரசியல் நடத்தும் அனைத்து கட்சிகளும் இந்த உண்மைகளை மக்களிடம் கூற விரும்புவதில்லை.

மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா அன்புமணி சொல்வதைஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எனவே நுழைவுத் தேர்வினை ரத்து செய்ய வேண்டும்என்ற கோரிக்கையை கவுன்சில் நிரகாரித்தால் அதை காரணம் காட்டி அன்புமணி, பா.ம.கவிற்கு எதிராக பிரச்சாரம் செய்ய ஆளும் கட்சி முயலக்கூடும்.

பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கு சிபிஎஸ் இ,ஐசிஎஸ் இ தேர்வு எழுதும் மாணவர்கள்பெறும் மதிப்பெண்களை எப்படி கணக்கில் கொள்வது என்பதை அரசு இன்னும் தெள்ளத் தெளிவாககூறவில்லை.மாநில அரசின் கீழ் உள்ள ஒரு அமைப்பு ஒரு தேர்வு நடத்தும் போது நுழைவுத்தேர்வு மூலம் அனைவருக்கும் பொதுவான ஒரு தேர்வினை வைக்கும் போது இந்த பிரச்சினைஎழாது.ஆனால் அவ்வாறில்லாத போது மாநில அரசின் கணக்கீட்டு முறை தங்களுக்கு பாதகமாகஇருக்கிறது என்ற அச்சம் சிபிஎஸ் இ,ஐசிஎஸ் இ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏற்பட்டு அவர்கள் நீதிமன்றத்தினை நாடக்கூடும். அப்போது நீதிமன்றம் நுழைவுத்தேர்வுதான் சரியானவழி என்ற தீர்வினை வைக்கலாம். அல்லது அது வேறொரு கணக்கீட்டு முறையை பின்பற்றுமாறுஆணையிடலாம். எது எப்படியாயினும் இந்த ஆண்டு தேர்தல் நடக்கவிருப்பதால் நுழைவுத் தேர்வினை முன் வைத்து அரசியல் செய்யும் கட்சிகள் தாங்கள் கிராமப்புற,பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட்மாணவர்களுக்காக போராடுகிறோம் என்றத் தோற்றத்தினை உருவாக்க அனைத்து முயற்சிகளையும்செய்வார்கள். நுழைவுத்தேர்வினை நடத்த வேண்டும் என்று நீதிமன்றங்கள், மெடிக்கல் கவுன்சில்உத்தரவிட்டால் பழியை அவர்கள் மீது போடுவது எளிது.

ஆனால் இந்த அரசியல் இத்துடன் நின்றுவிடாது. ஏனெனில் மத்திய அரசு கொண்டு வந்துள்ளஅரசியல் சட்டத் திருத்தம் குளறுபடிகள் நிறைந்தது. அதை நீதிமன்றங்கள் ஏற்குமா என்பதுசந்தேகம். எனவே இந்த ஆண்டும் நுழைவுத்தேர்வு-இட ஒதுக்கீட்டினை முன் வைத்து பல நாடகங்கள் அரங்கேறும்.பாதிக்கப்படப் போவது மாணவர்களும், பெற்றோர்களும்.

1 மறுமொழிகள்:

Blogger neo மொழிந்தது...

முந்தைய திமுக ஆட்சியில கிராமப்புற மாணவர்களுக்கென்று 15% விழுக்காடு தனியே ஒதுக்கீடு கொண்டு வந்த்தார்கள், தொழிற்கல்வி சேர்ப்பில்; இந்த ம்மையார் வந்ததும் முதலில் அதை வீசி எறிந்தார் - 4 வருடம் கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டு சென்ற வருடம் நுழைவுத் தேர்வு ரத்து - கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி - என்று முதலைக் கண்ணீர் வடித்தார்.

இப்போ உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா என்கிற ரீதியில் நுழைவுத்தேர்வையும், தொழிற்படிப்பையும் ஒரு வழி படுத்தி எடுத்துவிட்டு - பழியை நீதிமன்றங்கள், மருத்துவ கவுன்சில் மீது போட்டு, மாணவர்கள் பாடு பரிதாபமாகும்.

ஏப்ரலுக்குள் தேர்தல் நடந்து முடிந்துவிட்டாலும் நல்லது. அடூத்த ஆட்சியிலாவது மாணவர்களுக்கு தொல்லை இல்லாமலிருக்க நடவடிக்ககை எடுக்க வேண்டும்.

5:22 PM  

Post a Comment

<< முகப்பு