எக்ஸிஸ்டென்ஷியலிசம்-எஸ்.வி.ராஜதுரை- ஒரு பதில்

எஸ்.வி.ராஜதுரை எழுதிய எக்ஸிஸ்டென்ஷியலிசம் நூல் எங்கு கிடைக்கும் என்று ஒரு வாசகர் கேட்டிருந்தார். க்ரியா வெளியிட்ட அந்த நூல் இப்போது கிடைக்கிறதா என்று தெரியவில்லை. புத்தக கண்காட்சியில் க்ரியாவின் நூல்கள் கிடைக்கும் புத்தக விற்பனை நிலையங்களில் கிடைக்கவாய்ப்பிருக்கிறது. இதே போல் அவர் எழுதிய அந்நியமாதல் நூலும் முக்கியமான ஒன்று.இதுவும்க்ரியா வெளியீடு. க்ரியா அதிக அளவில் நூற்களை வெளியிடுவதில்லை என்று அறிகிறேன். இவ்விரு நூற்களும் எளிதில் கிடைக்கும் வண்ணம் மறு பதிப்புகள் வெளியானால்இன்னும் பல வாசகர்கள் பயன் பெற முடியும்.

ரவி சிரிநிவாஸின் இஸ்லாமிய தீவிரவாதம்- ஒரு பார்வை என்ற தலைப்பில் ஒரு வலைப்பதிவில் ஒருபதிவு இருப்பதை கவனித்தேன். இதை எழுதியவர் என்னுடைய பதிவினை படித்துப் புரிந்து கொள்ளாமல் தனக்குத் தோன்றியதையெல்லாம் என் கருத்துக்களாக முன் வைக்கிறார். என் பதிவில் இஸ்ரேல்.அமெரிக்கா மீது விமர்சனமும் இருக்கிறது. ஈரானிய குடியரசுதலைவர் கூறியது குறித்த விமர்சனமும் இருக்கிறது. நாசிகள் நடத்திய யூத இனப்படுகொலையை சோம்ஸ்கி போன்றவர்களும் மறுக்கவில்லை என்பது உட்பட வேறு சில கருத்துக்களை ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தேன்.நண்பனால் அதை ஏற்க முடியவில்லை.பின்னூட்டத்தினை நீக்கிவிட்டார். இவர் எழுதும் பொய்களை அம்பலப்படுத்தினால் அதை எதிர்கொள்ள முடியாமல் இவ்வாறு செய்துவிட்டார்.

சில வலைப்பதிவாளர்களுக்கு ரவி சிரிநிவாஸ் அரவிந்தன் நீலகண்டனை, இந்த்துவ அமைப்புகளை விமர்சிப்பது பிடிக்கும், இஸ்லாமிய அடிப்படைவாதம், அவர்களின் வாதங்களை கேள்விக்குட்படுத்தினால் பிடிக்காது, அதுவும் சான்றுகளை கொடுத்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.அந்த கும்பலில் ஒருவர்தான் நண்பன. நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதை படிக்க மாட்டர், புரிந்து கொள்ள முயற்சி செய்ய மாட்டார். ஆனால் பொய்களை அள்ளி வீசுவார், பெரியார் பெயரை பயன்படுத்திக் கொள்வார்.

நான் சொல்லிக் கொள்வது இதுதான் -இந்த்துவத்தினைஎதிர்ப்பது என்ற பெயரில் இஸ்லாமிய அடிப்படை வாதத்திற்கோ அல்லது இஸ்லாம்,கிறித்துவம் குறித்து கண்ணை மூடிக் கொண்டு ஆதரவாக எழுத மாட்டேன். அ.மார்க்ஸ் வேண்டுமானால் இந்த்துவ எதிர்ப்பு என்ற பெயரில் இஸ்லாத்தினை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கலாம். அது ஆபத்தானதுஎன்பது என் கருத்து. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற நிலைப்பாடு பல சமயங்களில் மிகவும் அபத்தமான நிலைப்பாடுகளுக்கு இட்டுச்செல்லும் என்பதை நான் நன்கறிவேன். உங்களது திரித்தல்கள், புளுகு மூட்டைகளைக் கண்டு நான் பயப்படமாட்டேன்.

சவுதி அரேபியாவில் உள்ள கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் என்ற ' நீதி' யை விமர்சிக்கும் மனித உரிமை அமைப்புகள் புஷ்ஷின்செயல்பாடுகளை, டோனி பிளேயரை, இந்தியாவில் இந்த்துவ அமைப்புகளின் செயல்களை விமர்சித்திருகின்றன, கண்டித்திருக்கின்றன. என் நிலைப்பாடும் அது போன்றதுதான். அத்தகையதண்டனைகளை இன்று எத்தனை நாடுகள் நியாயப்படுத்துகின்றன. இன்னும் எத்தனை நாடுகளில்பழைய ஏற்பாட்டிம் அடிப்படையில் நீதி வழங்கப்படுகிறது. அத்தகைய தண்டனைகள் உலக மனித உரிமை பிரகடனம், சித்திரவதைக்கு எதிரான பிரகடனம் போன்றவற்றிற்கு விரோதமானவை என்பதையாவது நீங்கள் அறிவீர்களா. மரண தண்டனை அமுலில் உள்ள பல நாடுகளில் கூட கல்லாலஅடித்து கொல்லுதல் போன்றவை நடைமுறையில் இல்லை.இன்றும் இஸ்லாமிய நீதிமுறை என்று இதை அமுல்படுத்தும் நாடுகள் உள்ளனவே. இன்னும் சொல்லப்போனால் பிரிட்டன்.அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகளில் குற்றவியல் சட்டம் மத அடிப்படையில் இல்லை. அது இருந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு உதாரணம் சவுதி அரேபியா. இந்தியாவில் இந்த்துவ அமைப்புகள் இந்து நீதி நூல்களின் படி குற்றவியல் சட்டம் அமைய வேண்டும் என்று கோருவதில்லை. இந்த உண்மைகளை நீங்கள் ஏற்க மறுப்பதால் அவை இல்லாமல் போய் விடாது. உங்களது திரித்தல்கள், புளுகு மூட்டைகளைக் கண்டு நான் பயப்படமாட்டேன்.

எனவே உங்களால் எதிர்ப்பு வாதங்களை ஏற்க முடியாத போல் குறைந்த ப்ட்சம் கூறாததை கூறியதாக திரித்து எழுதாதீர்கள். அப்படி எழுதினால் உங்கள் நம்பகத்தன்மைதான் கேள்விக்குள்ளாகும். ஒரு நரேந்திர மோதியை காரணம் காட்டி உங்கள் தரப்பில் வைக்கபடும் பொய்களை,பலவீனமான வாதங்களை எப்போதும் நியாயப்படுத்த முடியாது.

9 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

ஆரம்பிச்சுட்டான்யா அடுத்த ரவுண்ட் சண்டையை

6:23 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

test

11:04 PM  
Blogger ROSAVASANTH மொழிந்தது...

ரவி ஸ்ரீநிவாஸ் பல வருடங்களாய் இந்துத்வ சக்திகள், குறிப்பாய் அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்களை கடுமையாய் எதிர்த்து வருகிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால் யாருக்கு அதிக பயன் என்ற கேள்விக்குள் போகாமல், இந்த உண்மையை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அதனால் 'மஞ்சள் அரைத்து கொடுத்தாயா' என்ற ஸ்டைலில் நண்பன் கேட்பது மிகவும் அபத்தம். மேலும் அதற்கான தகுதியும் அவருக்கு கிடையாது. நண்பன் போன்ற எவரும் சின்ன முனகலை கூட வெளிப்படுத்தாத (அல்லது அந்த சமயத்தில் இணையத்தில் உலாவவே தொடங்காத சமயத்தில்) ரவி போன்றவர்கள் கடுமையாய் இந்துத்வ எழுத்துக்களை எதிர்த்திருக்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆசாரகீனன், நேசக்குமா போன்றவர்களை கூட ரவி விமர்சித்து எழுதியுள்ளார். ரவியை ஏதோ இந்துத்வவாதி போல நண்பன் திரித்து எழுதியுள்ளது அபத்தமானது மட்டுமல்ல, அயோக்கியதனமானதும் ஆகும்.

ஆனாலும் கூட ரவியின் மேற்படி (iisc தாக்குதலை முன்வைத்த) பதிவு மோசமானது. இந்தியா இஸ்ரேலிடம் இருந்து பாடம் கற்கவேண்டும் என்ற தொனிப்பட எழுதியுள்ளது, ஒரு தீவிரவாத தாக்குதலை மட்டும் முன்வைத்து, அவசர குடுக்கைதனமாய் எழுதியுள்ள, ஒரு பொதுபுத்தி சார்ந்த ஒரு எதிர்வினை மட்டுமே. அதில் விவேகமோ, அரசியல் நேர்மையோ கூட இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இது தவிரவும் முழுமையாய் வேறுபட்டு அந்த பதிவு மீது கடுமையான விமர்சனம் எனக்கு உண்டு. ஆனால் இந்த பின்னூட்டத்தை இங்கே எழுதுவதன் முக்கிய காரணம் நண்பனின் நேர்மையற்ற தாக்குதலுக்கும், ரவியின் கருத்தை நேர்மையாய் எதிர்கொள்ளாதற்கும் (அதை நீக்கியதற்கும்) எதிராக ரவிக்கு ஆதரவாக எழுதுவது மட்டுமே. அது தவிர அ.மார்க்ஸின் கண்மூடித்தனமான விமர்சனமற்ற, (இந்துத்வத்தின் மீதான அவரது விமர்சனங்களை முன்வைத்து ஒப்பிடும்போது)நகைப்பிற்கு உரிய இஸ்லாமிய ஆதரவை பற்றி ரவி சொல்வதையும் ஏற்றுகொள்கிறேன்.

2:19 AM  
Blogger neo மொழிந்தது...

ரோசாவசந்த் அவர்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது. பல வருடங்களாய் ரவி அவர்கள் இந்துத்வ வெறியர்களுக்கு எதிரான பல பதிவுகளை கட்டுரைகளை எழுதி வந்திருக்கிறார்.

அந்த 'இஸ்ரேல்' போன்ற எதிர்வினை செய்யவேண்டும் இந்தியா என்கிற கருத்தைத்தான் நான் ஆதரிக்கவில்லை.

12:07 PM  
Blogger neo மொழிந்தது...

>> அ.மார்க்ஸ் வேண்டுமானால் இந்த்துவ எதிர்ப்பு என்ற பெயரில் இஸ்லாத்தினை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கலாம். அது ஆபத்தானதுஎன்பது என் கருத்து. >>

இதை இந்தப் பதிவில் சொல்லலாமா என்று தெரியவில்லை. ஆனால் 'கவிஞர்' மனுஷ்யபுத்தி்ரன் குறித்து அ. மார்க்ஸ் எழூதிய 'பார்ப்பனர்களின் கோவணம்' கட்டுரை இங்கே தருகிறேன்.

1:44 PM  
Blogger PKS மொழிந்தது...

Ravi,

Please ignore the provoking comments that come as anonymous telling you to stop writing in Tamil. Whether I agreed with your views or not, I always wanted you to keep writing. So, keep writing.

I also record here that you have always voiced against Hindu fundamentalism. In fact, sometimes you have gone overboard in it too :-) Oflate, you have started voicing against fundamentalism in other religions too. I welcome both.

In my opinion, Fundamentalism and Terrorism cannot be justified for any reasons. I am glad to see more writings from you that express the similar sentiments.

Thanks and regards, PK Sivakumar

3:22 PM  
Blogger Thangamani மொழிந்தது...

I completly agree with Rosavasanth. Thanks.

7:24 PM  
Blogger அருள் செல்வன் கந்தசுவாமி மொழிந்தது...

i just want to record here that "nanban" is not reading many posts right - his way of understanding ravi's and badri's positions are strage. he should first realise that a stand against nationwide majority terror will naturally translate as opposition to other global terror networks.
arul

5:58 AM  
Blogger மு. சுந்தரமூர்த்தி மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

11:57 AM  

Post a Comment

<< முகப்பு