ஒரு பழைய செய்தி

திண்ணையில் 2003ல் குறிப்புகள் சில என்ற பெயரில் ஒரு பத்தி எழுதினேன்.அதில் வெளியான குறிப்பு ஒன்று உங்கள் பார்வைக்கு இப்போது மீண்டும் தரப்படுகிறது.

தேகம் என்ற மொழிமாற்று திரைப்படம் மீண்டும் திரையிடப்பட உள்ளது.கடந்த மாதம் இது திரையிடப்பட்ட போது காங்கிரஸ்காரர்கள் ஆர்ப்பாட்டம் செய்து, ஆட்சேபம் தெரிவித்த்தால் இது திரையிடப்படுவது நிறுத்தப்பட்டது. காங்கிரஸ்கார்கள் ஆட்சேபிக்க காரணம்- படத்தில் சோனியா, பிரியங்கா, கமல் நாத் என்ற பெயர்கள் பாத்திரங்களுக்கு இருந்த்து. வில்லி பாத்திரத்திற்கு சோனியா அல்லது பிரியங்கா என்று பெயர் இருந்தால் அதை தடுத்து நேரு பரம்பரையின் புகழைக் காக்க வேண்டியது காங்கிரஸ்காரர்கள் கடமையல்லவா.அன்று இதை ஆதரித்தவர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் சோ.பாலகிருஷ்ணன். அவர்தான் சில வாரங்கள் கழிந்த பின்னர் ஹிந்துப் பத்திரிகை விவகாரத்தில் கருத்து சுதந்திரம் குறித்து அறிக்கை விட்டவர். பாய்ஸ் படத்தை தடை செய்யக் கூடாது, அது கலைஞர்களின் சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்று தெரிவித்த ப.சிதம்பரம் தேகம் படம் காங்கிரஸ்காரர்கள் காட்டிய எதிர்ப்பால் திரையரங்குகளிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது குறித்து எதிர்ப்புத் தெரிவித்ததாகத் தெரியவில்லை.இப்படத்திற்கு விளம்பரம் கிடைக்க காங்கிரஸ்காரர்கள் உதவி செய்துள்ளனர். இப்போது பாத்திரங்களுக்கு என்ன பெயர்கள் வைத்துள்ளார்கள் என்பதை நானறியேன். ஆனால் பிபாஷா பாசு என்ற அழகுப்பிசாசின் (வார்த்தை உபயம் தமிழ் நாளேடு ஒன்று) தேகம் காரணமாக பிரபலமடைந்த ஜிஷ்ம் என்ற இந்திப் படத்தின் தமிழ் மொழிமாற்றுப்படம் தேகம். இந்த ஒரு விஷயத்திலாவது காங்கிரஸ்காரர்கள் ஒற்றுமையாக செயல்படுகிறார்களே என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது :).

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு