200+22+? = ??

பிளாக்கர் கணக்கின்படி இது வரை (இந்த பதிவினைச் சேர்க்காமல்) கண்ணோட்டம் என்ற பெயரில்இருக்கும் வலைப்பதிவில் 199 பதிவுகள் இடப்பட்டுள்ளன. சிந்தனை என்ற பெயரில் இருக்கும் வலைப்பதிவில் 22 பதிவுகள் இடப்பட்டுள்ளன. பழைய பதிவில் கிட்டதட்ட 150 பதிவுகள் இருக்கும்என்று நினைக்கிறேன்.நவம்பர் 2003 முதல் தமிழில் வலைப்பதிந்து வருகிறேன். என் பதிவுகளைப்படித்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள்.
உங்களின் தொடர்ந்த ஆதரவை கோரும் அதே நேரத்தில்
இந்த ஆண்டிலிருந்து தமிழில் வலைப்பதிவு செய்வதைக் குறைத்துக் கொண்டு ஆங்கிலத்தில் வலைப்பதிவு செய்வதில் அதிக கவனம் செலுத்தவிருக்கிறேன் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

எனவே தமிழ் வலைப்பதிவுகளைப் படிப்பதில், பின்னூட்டம் இடுவதில் செலவழிக்கும் நேரத்தினைக்குறைத்துக் கொள்ளவிருக்கிறேன். இதே போல் தமிழில் எழுதுவதை,படிப்பதை,விவாதிப்பதை இந்த ஆண்டு குறைத்துக் கொண்டு வேறு சிலவற்றில் அதிக கவனம் செலுத்தவிருக்கிறேன்.

இதை பதுங்கல் என்றோ அல்லது பின்வாங்கல் என்றோ அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம் :)

6 மறுமொழிகள்:

Blogger icarus prakash மொழிந்தது...

//இந்த ஆண்டிலிருந்து தமிழில் வலைப்பதிவு செய்வதைக் குறைத்துக் கொண்டு ஆங்கிலத்தில் வலைப்பதிவு செய்வதில் அதிக கவனம் செலுத்தவிருக்கிறேன் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.//

ஹ¥ம்ம்ம்... இப்ப இதல்லாம் ஒரு fashion ஆ பூட்சி...

12:09 PM  
Blogger KARTHIKRAMAS மொழிந்தது...

போன வருடம் இதே போல் அறிவிப்பு (மட்டும்) கொடுத்துவிட்டு, ஆனாலும் தொடர்ந்து தமிழில்
எழுதியது போல செய்வீர்கள் என்று நம்புகிறோம். :-)

1:51 PM  
Blogger Boston Bala மொழிந்தது...

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்... எதற்காக கேசரி கிண்டப்பட்டது ;-))

1. தமிழ் வலைப்பதிவுகளைப் படிப்பதில், பின்னூட்டம் இடுவதில் செலவழிக்கும் நேரத்தினைக்குறைத்துக் கொள்ளவிருக்கிறேன்

2. 200+22

3. ஆங்கிலத்தில் வலைப்பதிவு செய்வதில் அதிக கவனம் செலுத்தவிருக்கிறேன்

2:20 PM  
Blogger Thangamani மொழிந்தது...

கேசரிக்கும், இந்த அறிவுப்புக்குமான தொடர்பு என்ன? டீ-பார்ட்டி மாதிரி கேசரி பார்ட்டி எதுவும் நடந்ததா?

4:19 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

அய்யோ,
தமிழ் அன்னையின் தலைமகன் இப்படி பண்ணிட்டாரே, சும்மா பிலிம் விட்டுட்டு கிளம்புபா காத்து வரட்டும்.

5:22 PM  
Anonymous இடிச்சபுளி மொழிந்தது...

ரவிசீனிவாசு,

போகாதீங்கய்யா.. வேண்டாம்யா.. ஆங்கில வலைப்பதிவுகளாவது பொழைச்சுப் போகட்டும்யா!

7:52 PM  

Post a Comment

<< முகப்பு