தொடரும் .... ?

இந்திய அறிவியற் கழகத்தில் செய்யப்பட்ட படுகொலையை தீவிரவாதத்தின் தொடர்ச்சியானதாக்குதலின் ஒரு பகுதியாகத்தான் பார்க்க வேண்டும். எல்லைதாண்டிய இந்த தீவிரவாதத்தினைபாகிஸ்தான் எளிதில் கைவிடும் என்று தோன்றவில்லை. இஸ்லாமிய அடிப்படைவாதம், இஸ்லாமியபயங்கரவாதம் இவற்றின் ஒரு பரிமாணம்தான் இது. இன்னும் எத்தனை நாள்தான் இந்தியா பதிலடிகொடுக்க தயங்க வேண்டும் என்ற கேள்வி இந்திய மக்கள் மனதில் எழும் போது, அதன் விளைவாக உள் நாட்டில் உள்ள தேசிய சக்திகள் நெருக்குதல் தரும் போது இந்திய அரசு இஸ்ரேல் கடைப்பிடிக்கும் போக்கினை பின்பற்ற வேண்டிய நிலை எழும் என்று தோன்றுகிறது. அதாவதுபயங்கரவாத்தினை எதிர்கொள்வது என்ற பெயரில் வெளிப்படையாக எதிரி என்று அறிவித்துதாக்குவது, பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் முகாம் இருக்குமானால்அதை தகர்ப்பது என்று பல வழிகளில் எதிரிக்கு புரிகிற மொழியில் பதில் சொல்வது. பெங்களூரில்நடத்தப்பட்ட தாக்குதல் இந்தியாவின் பொருளாதார பலத்தினை குறைக்கிற முயற்சி. பெங்களூரும்,இந்தியாவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களும் இன்று இந்தியா உலக அளவில் கவனம் பெற,அந்நிய முதலீட்டினை ஈர்க்க முக்கியமானவை. கணினி மென் பொருள் உட்பட பல துறைகளில்இந்தியா இன்று உலகில் குறிப்பிட இடம் வகிப்பதை குலைக்க, இந்தியாவில் பாதுகாப்பு இல்லைஎன்ற பிரமையை உருவாக்க செய்யப்படும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இதைப் பார்க்க வேண்டும்.

2006ல் இந்த தீவிரவாதச் செயல்கள் குறைந்து விடும் என்று எதிர்பார்க்க சாத்திய கூறுகள் இல்லை, மாறாக அதிகரிக்கவே சாத்திய கூறுகள் அதிகம் உள்ளன.

ஈரானிய அதிபரின் சமீபத்திய பேச்சுகள் முஸ்லீம்கள் இஸ்ரேலையையும், யூதர்களையும் இன்னும் அதிகம் வெறுக்க தூண்டுகின்றனவாக உள்ளன. இதற்கு முஸ்லீம்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது, சான்று 1, சான்று 2. இஸ்ரேல் சும்மாஇருக்கப் போவதில்லை. அது ஈரான் மீதான தாக்குதலை தொடங்க விரும்புகிறது, அமெரிக்காவைஇதற்காக அது பயன்படுத்த தயங்காது. ஈரான் அணு ஆற்றலை தன் தேவைகளுக்காக பயன்படுத்துவதை அமெரிக்கா எதிர்ப்பதில் நியாயமில்லை. இந்த விஷயத்தில் அமெரிக்கா, இஸ்ரேல்போக்கு கண்டிக்கப்பட வேண்டியது, ஆனால் ஈரான் யூத வெறுப்பு, இஸ்ரேலையை ஒழிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தும் போது இன்று ஒரளவேனும் ஈரானுக்கு ஆதராக உள்ள ஐரோப்பியஒன்றியம் போன்றவைக் கூட ஈரானின் அணுத்திட்டங்கள் மீது கட்டுப்பாடு விதிப்பதை ஆதரிக்க நேரிடும். ஈரான் அதிபர யூத இனப்படுகொலை குறித்து தெரிவித்துள்ள கருத்துக்களை ஐரோப்பியநாடுகள் வண்மையாக கண்டித்துள்ளன. இதில் வியப்படைய ஒன்றுமில்லை.

இன்னொரு நாட்டினை உலக வரைப்படத்திலிருந்து அழிக்க வேண்டும் என்று விரும்பும் ஒரு நாடு அணு ஆற்றலை அமைதியான செயல்பாடுகளுக்கே பயன்படுத்தும் என்று எப்படி எதிர்பார்ப்பது. யூதர்கள் மீது வெறுப்பினை அவர் கக்கியிருப்பது யூதர்களில் உள்ள அராபிய எதிர்ப்பு நிலைபாடு எடுப்பவர்கள்கை ஒங்கவே பயன்படுகிறது. ஈராக்கில் உள் நாட்டுச் சண்டைகள் ஒரளவு குறைந்தாலும், அமைதி நிலவும் என்று கூற முடியாது. எகிப்தில் முஸ்லீம் சகோதரத்துவ இயக்கம் தேர்தலில் குறிப்பிடதக்கஅளவில் இடங்களை வென்றிருப்பது, பிற இஸ்லாமிய நாடுகளில் ஜனநாயக முறைப்படி தேர்தல்நடந்தால் அடிப்படைவாதிகள், ஆளுவோருக்கு எதிரான சக்திகள் பலம் பெற அதிக வாய்ப்புகள்இருப்பதை காட்டியிருக்கிறது. அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ள ஆப்பிரிக்க, வளைகுடாபகுதி நாடுகளில் உண்மையான ஜனநாயகம் என்ற பெயரில் அமெரிக்க, மேற்கத்திய உலகைஎதிர்க்கும் சக்திகள் பலம் பெறுவதை, ஆட்சிக்கு வருவதை அமெரிக்கா விரும்பாது, ஐரோப்பியஒன்றியமும் அடிப்படைவாத சக்திகள், தீவிரவாத சக்திகள் மக்கள் விருப்பம, மக்கள் ஆட்சி என்றபெயரில் இன்னும் பல கட்டுப்பாடுகளை விதிப்பது, ஒரளவாவது உள்ள மனித உரிமைகளை இல்லாமல் ஆக்குவது, தலிபான்கள் போல் பெண்கள் உரிமைகளை நசுக்குவது போன்றவற்றைசெய்யக்கூடும் என்பதால் இருக்கிற நிலையே பரவாயில்லை என்று கருதக் கூடும். எனவே இந்நாடுகளில் ஆள்வோருக்கு எதிரான தீவிரவாத சக்திகள் இன்னும் அதிக வன்செயல்களில் ஈடுபடக்கூடும்.

காஷ்மீர் பிரச்சினை இந்த ஒராண்டில் தீர்ந்து விடும் என்றோ அல்லது காஷ்மீரில் உள்ள தீவிரவாதம் முற்றிலுமாக துடைத்தொழிக்கப்பட்டுவிடும் என்றோ எதிர்பார்க்க முடியாது. இஸ்லாமிய நாடுகள் அமைப்பு என்ற பெயரில் இஸ்லாமிய நாடுகள் காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டினை எடுத்து வருகின்றன, ஒரு நடுநிலையான போக்கினைக் கூட அவர்கள் எடுக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது.

The resolution express deep concern at the prevailing tension that threatens the security and peace in the region as a result of large scale deployment of Indian troops in the Indian held Jammu & Kashmir. They also request the Secretary General OIC to appoint a Special Representative on Jammu & Kashmir and to send a fact finding mission to Jammu & Kashmir. The resolutions appeal to the member states, Islamic Development Bank, Islamic Solidarity Fund and other philanthropist Organizations to mobilize funds and contribute generously towards providing humanitarian assistance to the Kashmiri people. The resolutions provide for the invitation to the Kashmiri leaders to all OIC Conferences.

EMPHASIS,ITALICS ADDED.

ஜிகாதி சக்திகள் காஷ்மீர் பிரச்சினையில் காட்டும் ஈடுபாட்டினையும். அவர்களின் இந்திய வெறுப்பினையும் கருத்தில் கொண்டால் காஷ்மீர் தீவிரவாதிகளை அவர்கள் தொடர்ந்துஆதரிப்பார்கள் என்பது சிறு குழந்தைக்கும் புரியும். பேச்சுவார்த்தை மூலமான தீர்வினை நோக்கி பாக்கிஸ்தான் செல்லவேண்டும், எல்லை கடந்த தீவிரவாதத்தினை முற்றிலுமாக கைவிட வேண்டும்என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டால் ஒழிய பாகிஸ்தான் எல்லை கடந்த தீவிரவாத்தினை கைவிடும் என்றுதோன்ற வில்லை. ஆனால் அப்படிப்பட்ட நிர்ப்பந்தம் ஏற்பட வாய்ப்புகள் குறைவு.
எனவே மேற்கூறியவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது 2006ல் இந்தியாவில் தீவிரவாதிகளின்தாக்குதல் முயற்சிகள் குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை. அல் கொய்தா இன்னும் பலவீனமடைந்தாலும் பிற இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் கிட்டதட்ட அதே செயலை செய்யதயாராக இருக்கும் போது அல் கொய்தாவின் வீழ்ச்சி, பின் லாடென் பிடிபடுதல் போன்றவை நடந்தால்கூட இஸ்லாமிய தீவிர வாதம் பெருமளவில் வலுவற்றுப் போகும் என்று கருத முடியாது. இந்தியாவைப் பொறுத்தவரை பங்களா தேஷ் இந்திய எதிர்ப்பு சக்திகளுக்கு சரணாலயமாக உள்ளது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

ஆகவே 2006ல் இந்தியா தீவிரவாதிகளின் தாக்குதல் முயற்சிகள் அதிகரிக்கும் என்று கருதியே உள்நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக்க வேண்டும்,இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களை,அவைகளின் நேரடி, மறைமுக ஆதரவாளர்களை வலுவிழக்க அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும். இதில் இஸ்ரேலிடம் நாம் சிலவற்றை கற்க வேண்டிய தேவை ஏற்படும் என்றே தோன்றுகிறது.

7 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

பாரபட்சமில்லாமல் மிக நடுநிலை எடுத்து எழுதியிருக்கிறீர்கள் இரவிசிரினிவாசு அவர்களே. ஆனால் இதெல்லாம் "செக்குயுலர்" என்று சொல்லி கொள்ளும் மக்களுக்கு இன்றைக்குப் புரியாது. அவர்கள் 'ஈஸ்வர அல்லா தேரே நாம்' என்று தொண்டை கிழியப் பாடிக் கொண்டுதானிருப்பார்கள், தொண்டையில் கத்தி வைக்க மதவெறியன்கள் வரும் வரை. இந்த வலைப்பூக்களில் பிரபலமான செக்குயுலர் தாரகை ஒருவர் IISc.-ல்தான் பணிபுரிகிறார். இந்தக் கொடுமையைக் கண்டித்து வாய் திறந்தாரா பார்த்தீர்களா? இதையே ஹிந்துக்கள் யாராவது செய்திருந்தால் (அப்படி நடக்க வாய்ப்பே இல்லா என்றாலும், சும்மா பேச்சுக்குச் சொல்கிறேன்) இந்த இரண்டு நாட்களில் இவரும், பத்திரி, கார்த்திக்ராமாசு மற்ற இவர் பொடியாட்களும் என்ன கூச்சல் போட்டிருப்பார்கள்! ஆரோக்கியம் போன்றவர்கள் எழுதும் கட்டுரைகள் வெறித்தனமாய் வெறுப்பைக் கக்குவதாய்த் தோன்றினாலும், அவர் சொல்வதிலும் உண்மை இருக்கிறது என்பது நிரூபணம் ஆகி வருகிறது.
இது ஜீரணிக்க முடியா விட்டாலும், கண்ணை மூடிக் கொண்டாலும், சூரியனைப் போன்ற நிதர்சனம்.
அன்புடன்
தமிழ்ச்செல்வன்

1:11 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

Thanks.I disagree with your views on bloggers.

12:55 PM  
Anonymous arokyam மொழிந்தது...

//ஆரோக்கியம் போன்றவர்கள் எழுதும் கட்டுரைகள் வெறித்தனமாய் வெறுப்பைக் கக்குவதாய்த் தோன்றினாலும்,//

எந்த இடத்தில் வெறித்தனமாகவோ வெறுப்பை கக்குவதாகவோ எழுதியிருக்கிறேன் என்று காட்ட முடியுமா? என்னை ஆதரிப்பதாக சொல்லும் இந்த மாதிரி எழுத்துக்களில் இருக்கும் விஷமத்தை நான் நன்றாகவே கண்டுகொள்வேன்.

முகம்மது பின் அப்தல்லா என்ற ஒரு அரேபிய கொள்ளைக்காரனை அவன், இவன் என்று நான் எழுதுகிறேன். அது உங்களுக்கு வெறித்தனமான வெறுப்பு என்று தோன்றுகிறதா? வேண்டுமென்றால் நீங்களும் ஹிட்லரையும் போல்பாட்டையும் நபிகள் நாயகம் என்று அழைத்துக்கொள்ளுங்கள். நான் தடுக்கிறேனா? ஆனால் என்னை இது போன்றவர்களை "நபிகள் நாயகம்" என்று அழைத்தே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தாதீர்கள். அப்படி நான் அழைக்கவில்லை என்றால் வெறுப்பை கக்கும் எழுத்தாகிவிடுமா? கிரிஸ்துவரோ இந்துவோ அவர் முகம்மதை நபிகள் நாயகம் என்று ஒத்துக்கொள்ளாதனால்தானே அவர் கிரிஸ்துவராகவும் இந்துவாகவும் இருக்கிறார்? ஒத்துக்கொண்டால் முஸ்லீம் ஆகிவிடவேண்டியதுதானே?

நான் சுமார் 70 பதிவுகள் எழுதியிருக்கிறேன். எந்த இடத்தில் நான் வெறித்தனமான வெறுப்பை காட்டியிருக்கிறேன் என்று காட்ட முடியுமா? அத்தனை பதிவுகளும் இதுவரை ஒரு முஸ்லீம் முல்லா கூட மறுக்க முடியவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறேன். அத்தனையும் முஸ்லீம் முல்லாக்களாலேயே ஆதாரப்பூர்வமானவை என்று அங்கீகரித்தவைகளிலிருந்து எடுத்துக்காட்டியிருக்கிறேன்.

இவற்றை எதிர்கொள்ளமுடியவில்லை என்பதற்காக இப்படி என் எழுத்தைப் பற்றி "வெறுப்புகக்கும் எழுத்து" என்று புரளியை கிளப்பிவிடுகிறார்கள்.

இந்த மாதிரி என் எழுத்தை ஆதரிப்பவர்களுக்கு, எதிர்ப்பவர்களே மேல்.

ennamopo.BLOGSOME.com

4:36 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

One issue bothers me. Is any concrete evidence out there for specifically saying this was done by Islamic terrorists? Or, is it simply like some people in tamil blogs hitting Malaysia Murthy for every obscene comments without submitting any proof?

8:48 PM  
Blogger Srimangai(K.Sudhakar) மொழிந்தது...

ரவி,
எல்லை தாண்டிய தீவிரவாதத்தை அடக்குவதென்பதற்கு surgical operations தேவைப்படும். இதனை பாராளுமன்றத்தில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து இராணுவத்தினர் இதனை அறிவுறுத்தியபோது தயக்கம் காட்டியது அரசு. மிரட்டியே பார்த்தார் முஷரஃப் -அவரது தொலைக்காட்சிப் பேச்சினில். என்ன செய்துவிட்டோ ம் நாம் இதுவரை?
இஸ்ரேலிய தாக்குதல்களையும் அதன் விளைவுகளையும் காலம்காலமாக அறிந்திருக்கிறோம். காஸா (gaaza strip) ஆக்ரமிப்பின் எதிர்ப்பு என்னும் பெயரில் பாலஸ்தீன இயக்கம் செய்த தாக்குதல்களும், அரபு நாடுகளின் பாரபட்சமான கொள்கைகளும் பகிரங்கமான பாகிஸ்தானிய ஆதரவும் இந்த கொலைவெறித்தாக்குதல்களுக்கு தூபம் போட்டுவளர்த்துவருகின்றன. அமெரிக்கா, ஐரோப்பா முதலியன இவற்றை எதிர்ப்பதுபோலத் தோன்றினாலும், இவற்றை வளர்த்துவிட்டதே இவர்களின் உளவு அமைப்புகள்தானே? வினை விதைத்தவன் வினையறுப்பான் என்றாலும், இந்தியா தீவிரவாதத்தில் அடிவாங்குவது பாகிஸ்தானின் மதவெறியும், இந்திய துவேஷமுமே. பங்களாதேஷ் என்னும் குண்டு புகைந்துகொண்டிருப்பது இன்னும் கவலைதருவதாக இருக்கிறது.

பொருளாதாரத்தில் சீர்குலைந்த அண்டைநாடுகள் இந்தியாவின் பெரும் கவலை. மதத்திற்கும் இப்பொருளாதாரச் சீர்குலைவிற்கும் இருக்கும் அடியோடுகின்ற காரணங்களை அவர்கள் உணரும்வரை நமக்கு பிரச்சனை தீராது.

நடுநிலைப்பேச்சிலேயே காலம் கழிக்கும் போலிகள் இந்தியாவில் இருக்கும்வரையில் இந்நாட்டவர்கள் முறையின்றி இந்தியாவில் வருவதும் வளர்வதும் தவிர்க்கமுடியாதவை. தேவை.. உறுதியான தெளிவான அரசியல் இராணுவ முடிவுகளும் செயல்பாடுகளும்.

10:09 PM  
Blogger neo மொழிந்தது...

>> நடுநிலைப்பேச்சிலேயே காலம் கழிக்கும் போலிகள் இந்தியாவில் இருக்கும்வரையில் >>

சுதாகர் அவர்களே,

நீங்கள் சொல்ல வருவதை முழுமையாகப் புரிந்து கொள்ள இயலவில்லை.

டிசம்பர் 13, 2001 - அன்று நடைபெற்ற சம்பவத்தின் போது நடுவண் அரசு 'நடுநிலையாகப் பேசாத உண்மையான இந்தியர்களிடம்' அல்லவா இருந்தது?!

அவர்கள் என்னத்தைச் செய்து கிழித்து விட்டார்கள்?

அமெரிக்கா 'பாகிஸ்தானை இப்போது தாக்காதே' என்று காலால் இட்ட கட்டளையை சிரமேற் கொண்டு தாங்கி நடந்தார்கள் என்பதை உலகம் கண்டதே அப்போது!

காஷ்மீர் தீவிரவாதிகளிடம் காட்ட வேண்டிய வீரத்தை - குஜராத் இசுலாமியப் பெண்களிடம் "காட்டி" தங்களின் 'உண்மையான இந்தியத்தனத்தை' நிரூபித்து விட்டார்கள் அந்த 'போலித்தனம் அற்ற்வர்கள்'!

'இஸ்ரேல்' செய்வதை நாமும் செய்யவேண்டும் என்பது பேச்சுக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். ஆனால், அப்படி முற்பட்டால் அமெரிக்காவின் வலையில் விழுந்து விடும் ஆபத்து இருப்பதை சர்வதேச அரசியற் பார்வையாளர் எளிதில் புரிந்து கொள்வர்.

காஷ்மீர் பிரச்சனை ஒரு இடியாப்பச் சிக்கலே. உடனடித் தீர்வுகள் ஏதும் இருப்பதற்கு வாய்ப்பில்லை. நீண்டகாலத் தீர்வு 'இஸ்ரேல்' அடியொற்றினால் கிடைக்க வாய்ப்பு மிக அருகி விடும்; அல்லது, அதன் பின் விளைவுகள் வேறு சில சிக்கல்களை உருவாக்கும்.

இஸ்ரேல் பாணியில் அணுகினால் - உடனடியாக பாகிஸ்தான் இப்பிரச்சினைய்யின் மீது - UNSC-இன் கவனத்துக்குக் கொண்டு செல்லும்.

ஐ.நா.பாதுகாப்பச் சபை தீர்மானம் போட்டாக வேணிடிய்தாகி விட்டால் - அது இந்தியாவுக்குத்தான் புதிய நெருக்கடிகளை உருவாக்கும் என்பதை விஷயம் தெரிந்தவர்களும் சிந்திக்காமல் இருப்பது ஏனோ?

ஆக - நீண்டகாலத்தில் அமெரிக்காவின் பகைமையை எதிர்கொள்ளத் தயாராய் இருந்தாலோ, அல்லது அமெரிக்காவின் 'அடியாளாய்' மாறத் தயாராய் இருந்தாலோ மட்டுமே - இந்தியா அதிரடி ஆட்டம் ஆடமுடியும்.

7% காஷ்மீரத்துப் பார்ப்பனர்களின் கருத்தை மட்டும் கேட்டுக்கொண்டு - 93% இசுலாமியர்களின் கருத்தை துச்சமாக நினைத்த "சங்கப் பரிவாரங்களின்" அபிமானத் தலைவர் - வல்லபாய் பட்டேலின் அதிரடி - குடிபோதையிலிருந்த அன்றைய காஷ்மீர மன்னர் அரிசிங்கிடம் "இந்திய இணைப்புக்கு" உடன்பட வைத்ததின் பலனை - இன்றளவும் இந்தியா அனுபவித்து வருகிறது.

எத்தனை Liberalism, முற்போக்கு, வெங்காயம் பேசினாலும் - "தேசீயவாதம்" என்கிற மாயமான் மனிதர்களி எப்படியெல்லாம் பேசவைக்கிறது?!

3:55 PM  
Anonymous Thambi மொழிந்தது...

Dear Neo,

http://news.bbc.co.uk/1/shared/spl/hi/south_asia/03/kashmir_future/html/default.stm

In 1941 the Hindus represented 15 % of the population. In 1991 they only represented 0.1 % of Kashmir's population, after ethnic cleansing. This is in Kashmir valley alone.

In Ladakh muslims constitute only 46 percent (even after forced conversion of Buddhists)

IN Jammu Muslims constitute only 30 percent.

Can you tell me where do you get the 93-7 percentages?

Thanks

10:56 PM  

Post a Comment

<< முகப்பு