சில குறிப்புகள்

கருணாநிதிக்கு ராஜாஜி நினைவு விருது வழங்குவது விசித்திரமாக இருக்கிறது. பொது நலம் கருதி சேவை செய்கின்ற, கட்சி சார்பற்ற பலர் இருக்கும் போது கருணாநிதியை எப்படிதேர்ந்தெடுத்தார்கள். ராஜாஜி மதுவிலக்கினை நீக்க வேண்டாம் என்று கோரிய போது அதைநிராகரித்தவர் கருணாநிதி. மேலும் பல விஷயங்களில் இருவரும் எதிரெதிர் கொள்கைகள்கொண்டிருந்தனர். முதன் முறையாக இவ்விருது வழங்கப்படும் போது ஒரு அரசியல்வாதிக்குகொடுப்பது சரியான முன்னுதாரணமாக இராது. ஜெகந்நாதன் -கிருஷ்ணம்மாள தம்பதியினர்,அல்லது உந்துனர் அறக்கட்டளை போன்ற அமைப்புகளுக்கு வழங்குவது பொருத்தமாயிருக்கும்.ராஜாஜியை திராவிட இயக்கங்கள் மூதறிஞர் என்று கூறியதும்,குல்லுக பட்டர் என்று கூறியதும்அரசியல் காரணங்களுக்காகவே. அதற்கு அப்பாற்பட்டு அவர்கள் ராஜாஜியை, அவர் கூறியகருத்துக்களை தீவிரமாக ஆய்ந்து விமர்சித்ததாகத் தெரியவில்லை. ராஜாஜியின் அரசியல் கோட்பாடு குறித்து வசந்தி சீனிவாசன் என்பவர் நூல் எழுதவிருக்கிறார்.இது போன்ற முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவை.

2, கண்ணுக்குக் கண்,பல்லுக்குப் பல் போன்ற தண்டனைகள் எந்தப் பெயரில் வழங்கப்பட்டாலும்கண்டிக்க்ப்பட வேண்டியவை. அப்படி ஒரு தண்டனைக்கு இடமளித்துவிட்டு மன்னிப்பு வழங்கி அதைரத்து செய்ய இடமிருப்பதனாலேயே இதை நியாயப்படுத்த முடியாது. வலைப்பதிவாளர்கள் சிலர்சானியாவின் உடை, பெண்களின் கண்ணியமான உடை குறித்து எழுதினார்கள். இது குறித்து அவர்கள் கருத்து என்ன.

3, தொழிலாளர்கள் சட்டத் திருத்தங்கள் குறித்து பிரதமர் பேசியிருக்கிறார். இந்த வார இ.பி.டபிள்யுவில் பிரணாப் பர்தன் கட்டுரையில் தொழிலாளர் சட்டங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது.புதிய பொருளாதாரக் கொள்கை அமுலான பின் ஒரு நிறுவனத்தில் தொழிலாளர்கள் நிலை, அவர்கள்சந்தித்த சவால்கள் குறித்து இந்தக் கட்டுரை கூறுகிறது.

1 மறுமொழிகள்:

Blogger மத்தளராயன் மொழிந்தது...

சுப்பிரமணியசாமி என்ற கேடுகெட்ட அரசியல் தலைவருடன் ஒப்பிடுகையில் திருமாவும், ராமதாசும் எவ்வளவோ தேவலாம் எனலாம். சுப்பிரமணியசாமியை அமெரிக்காவில் பேட்டி கண்டு அதனை கட்டுரையாக்கி 'அவர் ஒப்பற்ற தலைவர்" எனப் பிதற்றியது ச.திருமலை என்ற நாய் முன்னர் தமிழோவியத்தில். சோனியா இலங்கை சென்று பிரபாகரனிடம் காசு கொடுத்து ராஜீவைக் கொன்றதாகவும், சோனியா படிக்கவே இல்லை, அவர் கொடுத்தது போலி சர்டிபிகேட்டு என்றெல்லாம் பீலா விட்ட அந்த மிருகம் இப்போது அருண் என்ற பிராமனரின் வலைப்பதிவில் சோ பற்றிய பதிவுக்கு சூப்பர், பெண்டாஸ்டிக்,, பின்னீட்டீங்கோ என அய்யங்கார் பாஷையில் குலைத்திருக்கிறது! எனக்குத் தெரிந்து சுப்பிரமணிய சாமியை சிறந்த தலைவன் எனக் கூறுபவன் உலகிலேயே திருமலை ஒருவன்தான்!

8:34 PM  

Post a Comment

<< முகப்பு