2006 - ஆருடங்களும், நம்பிக்கைகளும் - 1

2006 குறித்து ஒபன் டெமகாரஸியில் தங்களது நம்பிக்கைகளையும், ஆருடங்களையும் எரிக் கோப்ஸ்வாம், கோபால் பாலகிருஷ்ணன் உட்பட பலர் பகிர்ந்து கொண்டுள்ளனர்
2006

சக வலைப்பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தொடரும் .... ?

இந்திய அறிவியற் கழகத்தில் செய்யப்பட்ட படுகொலையை தீவிரவாதத்தின் தொடர்ச்சியானதாக்குதலின் ஒரு பகுதியாகத்தான் பார்க்க வேண்டும். எல்லைதாண்டிய இந்த தீவிரவாதத்தினைபாகிஸ்தான் எளிதில் கைவிடும் என்று தோன்றவில்லை. இஸ்லாமிய அடிப்படைவாதம், இஸ்லாமியபயங்கரவாதம் இவற்றின் ஒரு பரிமாணம்தான் இது. இன்னும் எத்தனை நாள்தான் இந்தியா பதிலடிகொடுக்க தயங்க வேண்டும் என்ற கேள்வி இந்திய மக்கள் மனதில் எழும் போது, அதன் விளைவாக உள் நாட்டில் உள்ள தேசிய சக்திகள் நெருக்குதல் தரும் போது இந்திய அரசு இஸ்ரேல் கடைப்பிடிக்கும் போக்கினை பின்பற்ற வேண்டிய நிலை எழும் என்று தோன்றுகிறது. அதாவதுபயங்கரவாத்தினை எதிர்கொள்வது என்ற பெயரில் வெளிப்படையாக எதிரி என்று அறிவித்துதாக்குவது, பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் முகாம் இருக்குமானால்அதை தகர்ப்பது என்று பல வழிகளில் எதிரிக்கு புரிகிற மொழியில் பதில் சொல்வது. பெங்களூரில்நடத்தப்பட்ட தாக்குதல் இந்தியாவின் பொருளாதார பலத்தினை குறைக்கிற முயற்சி. பெங்களூரும்,இந்தியாவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களும் இன்று இந்தியா உலக அளவில் கவனம் பெற,அந்நிய முதலீட்டினை ஈர்க்க முக்கியமானவை. கணினி மென் பொருள் உட்பட பல துறைகளில்இந்தியா இன்று உலகில் குறிப்பிட இடம் வகிப்பதை குலைக்க, இந்தியாவில் பாதுகாப்பு இல்லைஎன்ற பிரமையை உருவாக்க செய்யப்படும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இதைப் பார்க்க வேண்டும்.

2006ல் இந்த தீவிரவாதச் செயல்கள் குறைந்து விடும் என்று எதிர்பார்க்க சாத்திய கூறுகள் இல்லை, மாறாக அதிகரிக்கவே சாத்திய கூறுகள் அதிகம் உள்ளன.

ஈரானிய அதிபரின் சமீபத்திய பேச்சுகள் முஸ்லீம்கள் இஸ்ரேலையையும், யூதர்களையும் இன்னும் அதிகம் வெறுக்க தூண்டுகின்றனவாக உள்ளன. இதற்கு முஸ்லீம்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது, சான்று 1, சான்று 2. இஸ்ரேல் சும்மாஇருக்கப் போவதில்லை. அது ஈரான் மீதான தாக்குதலை தொடங்க விரும்புகிறது, அமெரிக்காவைஇதற்காக அது பயன்படுத்த தயங்காது. ஈரான் அணு ஆற்றலை தன் தேவைகளுக்காக பயன்படுத்துவதை அமெரிக்கா எதிர்ப்பதில் நியாயமில்லை. இந்த விஷயத்தில் அமெரிக்கா, இஸ்ரேல்போக்கு கண்டிக்கப்பட வேண்டியது, ஆனால் ஈரான் யூத வெறுப்பு, இஸ்ரேலையை ஒழிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தும் போது இன்று ஒரளவேனும் ஈரானுக்கு ஆதராக உள்ள ஐரோப்பியஒன்றியம் போன்றவைக் கூட ஈரானின் அணுத்திட்டங்கள் மீது கட்டுப்பாடு விதிப்பதை ஆதரிக்க நேரிடும். ஈரான் அதிபர யூத இனப்படுகொலை குறித்து தெரிவித்துள்ள கருத்துக்களை ஐரோப்பியநாடுகள் வண்மையாக கண்டித்துள்ளன. இதில் வியப்படைய ஒன்றுமில்லை.

இன்னொரு நாட்டினை உலக வரைப்படத்திலிருந்து அழிக்க வேண்டும் என்று விரும்பும் ஒரு நாடு அணு ஆற்றலை அமைதியான செயல்பாடுகளுக்கே பயன்படுத்தும் என்று எப்படி எதிர்பார்ப்பது. யூதர்கள் மீது வெறுப்பினை அவர் கக்கியிருப்பது யூதர்களில் உள்ள அராபிய எதிர்ப்பு நிலைபாடு எடுப்பவர்கள்கை ஒங்கவே பயன்படுகிறது. ஈராக்கில் உள் நாட்டுச் சண்டைகள் ஒரளவு குறைந்தாலும், அமைதி நிலவும் என்று கூற முடியாது. எகிப்தில் முஸ்லீம் சகோதரத்துவ இயக்கம் தேர்தலில் குறிப்பிடதக்கஅளவில் இடங்களை வென்றிருப்பது, பிற இஸ்லாமிய நாடுகளில் ஜனநாயக முறைப்படி தேர்தல்நடந்தால் அடிப்படைவாதிகள், ஆளுவோருக்கு எதிரான சக்திகள் பலம் பெற அதிக வாய்ப்புகள்இருப்பதை காட்டியிருக்கிறது. அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ள ஆப்பிரிக்க, வளைகுடாபகுதி நாடுகளில் உண்மையான ஜனநாயகம் என்ற பெயரில் அமெரிக்க, மேற்கத்திய உலகைஎதிர்க்கும் சக்திகள் பலம் பெறுவதை, ஆட்சிக்கு வருவதை அமெரிக்கா விரும்பாது, ஐரோப்பியஒன்றியமும் அடிப்படைவாத சக்திகள், தீவிரவாத சக்திகள் மக்கள் விருப்பம, மக்கள் ஆட்சி என்றபெயரில் இன்னும் பல கட்டுப்பாடுகளை விதிப்பது, ஒரளவாவது உள்ள மனித உரிமைகளை இல்லாமல் ஆக்குவது, தலிபான்கள் போல் பெண்கள் உரிமைகளை நசுக்குவது போன்றவற்றைசெய்யக்கூடும் என்பதால் இருக்கிற நிலையே பரவாயில்லை என்று கருதக் கூடும். எனவே இந்நாடுகளில் ஆள்வோருக்கு எதிரான தீவிரவாத சக்திகள் இன்னும் அதிக வன்செயல்களில் ஈடுபடக்கூடும்.

காஷ்மீர் பிரச்சினை இந்த ஒராண்டில் தீர்ந்து விடும் என்றோ அல்லது காஷ்மீரில் உள்ள தீவிரவாதம் முற்றிலுமாக துடைத்தொழிக்கப்பட்டுவிடும் என்றோ எதிர்பார்க்க முடியாது. இஸ்லாமிய நாடுகள் அமைப்பு என்ற பெயரில் இஸ்லாமிய நாடுகள் காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டினை எடுத்து வருகின்றன, ஒரு நடுநிலையான போக்கினைக் கூட அவர்கள் எடுக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது.

The resolution express deep concern at the prevailing tension that threatens the security and peace in the region as a result of large scale deployment of Indian troops in the Indian held Jammu & Kashmir. They also request the Secretary General OIC to appoint a Special Representative on Jammu & Kashmir and to send a fact finding mission to Jammu & Kashmir. The resolutions appeal to the member states, Islamic Development Bank, Islamic Solidarity Fund and other philanthropist Organizations to mobilize funds and contribute generously towards providing humanitarian assistance to the Kashmiri people. The resolutions provide for the invitation to the Kashmiri leaders to all OIC Conferences.

EMPHASIS,ITALICS ADDED.

ஜிகாதி சக்திகள் காஷ்மீர் பிரச்சினையில் காட்டும் ஈடுபாட்டினையும். அவர்களின் இந்திய வெறுப்பினையும் கருத்தில் கொண்டால் காஷ்மீர் தீவிரவாதிகளை அவர்கள் தொடர்ந்துஆதரிப்பார்கள் என்பது சிறு குழந்தைக்கும் புரியும். பேச்சுவார்த்தை மூலமான தீர்வினை நோக்கி பாக்கிஸ்தான் செல்லவேண்டும், எல்லை கடந்த தீவிரவாதத்தினை முற்றிலுமாக கைவிட வேண்டும்என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டால் ஒழிய பாகிஸ்தான் எல்லை கடந்த தீவிரவாத்தினை கைவிடும் என்றுதோன்ற வில்லை. ஆனால் அப்படிப்பட்ட நிர்ப்பந்தம் ஏற்பட வாய்ப்புகள் குறைவு.
எனவே மேற்கூறியவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது 2006ல் இந்தியாவில் தீவிரவாதிகளின்தாக்குதல் முயற்சிகள் குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை. அல் கொய்தா இன்னும் பலவீனமடைந்தாலும் பிற இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் கிட்டதட்ட அதே செயலை செய்யதயாராக இருக்கும் போது அல் கொய்தாவின் வீழ்ச்சி, பின் லாடென் பிடிபடுதல் போன்றவை நடந்தால்கூட இஸ்லாமிய தீவிர வாதம் பெருமளவில் வலுவற்றுப் போகும் என்று கருத முடியாது. இந்தியாவைப் பொறுத்தவரை பங்களா தேஷ் இந்திய எதிர்ப்பு சக்திகளுக்கு சரணாலயமாக உள்ளது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

ஆகவே 2006ல் இந்தியா தீவிரவாதிகளின் தாக்குதல் முயற்சிகள் அதிகரிக்கும் என்று கருதியே உள்நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக்க வேண்டும்,இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களை,அவைகளின் நேரடி, மறைமுக ஆதரவாளர்களை வலுவிழக்க அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும். இதில் இஸ்ரேலிடம் நாம் சிலவற்றை கற்க வேண்டிய தேவை ஏற்படும் என்றே தோன்றுகிறது.
மீண்டும்


சோ குறித்து மிக விரிவாக எழுத இயலும், இப்போது நேரமில்லை. என்றேனும் ஒரு நாள் தனிப்பதிவாக அவரைப் பற்றி எழுதுகிறேன். இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு தமிழ் வலைப்பதிவுகள் பக்கம் வர இயலாது.மீண்டும் 2006 துவக்கத்தில் வலைப்பதிவுகளில் சந்திப்போம்.
இன்னும் சில

பசுமை மார்கஸ்- தினமணி கட்டுரை

இந்தியாவில் பொது சுகாதாரம்- மோனிகா
தாஸ்குப்தாவின் கட்டுரை

நரேந்திர ஜாதவுடன் ஒரு உரையாடல்

சோசலிஸ்ட் ரிஜிஸ்டர் 2006
சில குறிப்புகள்

கருணாநிதிக்கு ராஜாஜி நினைவு விருது வழங்குவது விசித்திரமாக இருக்கிறது. பொது நலம் கருதி சேவை செய்கின்ற, கட்சி சார்பற்ற பலர் இருக்கும் போது கருணாநிதியை எப்படிதேர்ந்தெடுத்தார்கள். ராஜாஜி மதுவிலக்கினை நீக்க வேண்டாம் என்று கோரிய போது அதைநிராகரித்தவர் கருணாநிதி. மேலும் பல விஷயங்களில் இருவரும் எதிரெதிர் கொள்கைகள்கொண்டிருந்தனர். முதன் முறையாக இவ்விருது வழங்கப்படும் போது ஒரு அரசியல்வாதிக்குகொடுப்பது சரியான முன்னுதாரணமாக இராது. ஜெகந்நாதன் -கிருஷ்ணம்மாள தம்பதியினர்,அல்லது உந்துனர் அறக்கட்டளை போன்ற அமைப்புகளுக்கு வழங்குவது பொருத்தமாயிருக்கும்.ராஜாஜியை திராவிட இயக்கங்கள் மூதறிஞர் என்று கூறியதும்,குல்லுக பட்டர் என்று கூறியதும்அரசியல் காரணங்களுக்காகவே. அதற்கு அப்பாற்பட்டு அவர்கள் ராஜாஜியை, அவர் கூறியகருத்துக்களை தீவிரமாக ஆய்ந்து விமர்சித்ததாகத் தெரியவில்லை. ராஜாஜியின் அரசியல் கோட்பாடு குறித்து வசந்தி சீனிவாசன் என்பவர் நூல் எழுதவிருக்கிறார்.இது போன்ற முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவை.

2, கண்ணுக்குக் கண்,பல்லுக்குப் பல் போன்ற தண்டனைகள் எந்தப் பெயரில் வழங்கப்பட்டாலும்கண்டிக்க்ப்பட வேண்டியவை. அப்படி ஒரு தண்டனைக்கு இடமளித்துவிட்டு மன்னிப்பு வழங்கி அதைரத்து செய்ய இடமிருப்பதனாலேயே இதை நியாயப்படுத்த முடியாது. வலைப்பதிவாளர்கள் சிலர்சானியாவின் உடை, பெண்களின் கண்ணியமான உடை குறித்து எழுதினார்கள். இது குறித்து அவர்கள் கருத்து என்ன.

3, தொழிலாளர்கள் சட்டத் திருத்தங்கள் குறித்து பிரதமர் பேசியிருக்கிறார். இந்த வார இ.பி.டபிள்யுவில் பிரணாப் பர்தன் கட்டுரையில் தொழிலாளர் சட்டங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது.புதிய பொருளாதாரக் கொள்கை அமுலான பின் ஒரு நிறுவனத்தில் தொழிலாளர்கள் நிலை, அவர்கள்சந்தித்த சவால்கள் குறித்து இந்தக் கட்டுரை கூறுகிறது.