கருணாநிதி,பிராமணர் - பிராமணர்ல்லாதோர்

சுகாசினி கூறிய கருத்திற்கு ஆட்சேபம் தெரிவித்திருக்கும் கருணாநிதி இது எங்கு போய் முடியும்என்றால் மீண்டும் பிராமணர் - பிராமணர்ல்லாதோர் என்ற இயக்கத்தை வளர்க்க எங்களுக்கு பயன்படும் என்று கூறியிருக்கிறார். மார்க்சிஸ்ட் கட்சி இதை விமர்சித்திருக்கிறது.

கருணாநிதியின் கருத்து விஷமத்தனமானது. இந்த விவகாரத்தில் தந்தை பெரியார் திராவிட கழகம்,அ.மார்க்ஸ் போன்றவர்களும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். பெரியார் எழுதியதற்கு தன் விளக்கம் மட்டுமே சரி என்று கருணாநிதி வாதிட முடியாது. எவ்வளவு மோசமான கருத்து என்று ஒன்றை கருதினாலும் அதற்கு பதில் தரும் போது அநாகரிகமாக நடந்து கொள்வது சரியாகாது.

இதில் பிராமணர்- பிராமணரல்லாதோர் எங்கு வந்தது. சுகாசினி பிராமணர் அவர் தமிழர்களுக்கு விரோதி, தமிழ்ப் பண்பாட்டிற்கு விரோதி என்று கருணாநிதி பிரச்சாரம் செய்யப்பபோகிறாரா. குஷ்பு கூறியதைப் போன்ற கருத்துக்களை கூறிய சுகிர்தராணியும் பிராமணரா என்பதை அவர் கூறட்டும்.

1950களில்,1940களில் செய்தது போல் இன்று பிராமணர் - பிராமணரல்லாதோர் இயக்கம் நடத்த முடியாது. காலம் மாறிவிட்டது. பிராமணர் மீது வெறுப்பினைத் தூண்ட முயற்சித்தால் சட்ட ரீதியாக அவரும் ,அவரது கட்சியும் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பா.ஜ.க வுடன் ஐந்து ஆண்டுகள் கூட்டணி வைத்திருந்து ஆட்சியைப் பகிர்ந்து கொண்ட கருணாநிதி எப்படிப்பட்டவர் என்று தமிழ் நாட்டு மக்களுக்குத் தெரியும். இனியும் பழைய பி பிராமணர்- பிராமணரல்லாதோர் பல்லவி எடுபடாது.

1970 களில் எம்.ஜி.ஆரை கழகத்திலிருந்து நீக்கிய பின் அவர் தனிக்கட்சி தொடங்கிய பின்அவரை மலையாளி என்று பிரச்சாரம் செய்து அவர் மீது வெறுப்பினை ஊட்ட முயற்சி செய்தீர்கள்.தமிழர் படை என்ற பெயரில் இயக்கம் ஆரம்பித்து
முண்டு கட்டி வந்தவன்
உண்டு கொழுத்து வாழ்கிறான்அவனை
வண்டி ஏற்றி அனுப்புவோம்
என்றெல்லாம் முழக்கமிட்டு செய்த முயற்சிகளை தமிழக மக்கள் நிராகரித்துவிட்டனர்.

மு.க.முத்துவை எம்.ஜி.ஆருக்கு மாற்றாக சினிமாவில் கொண்டுவர செய்த முயற்சிகள், எம்,ஜி.ஆர்படங்களுக்கு எதிரான முயற்சிகள் படு தோல்வியில் முடிந்தன. எம்.ஜி.ஆர் உயிருடன் இருக்கும்வரை உங்களால் மீண்டும் முதல்வர் ஆக முடியவில்லை. எம்.ஜி.ஆர் இறந்த பின்னும் அதிமுக்உடைந்தாலும் அது மீண்டும் ஆட்சிக்கு வந்தது, இரு முறை. எனவே தமிழ் நாட்டில் தி.மு.கஎதிர்ப்பு பலமாக இருக்கிறது.. தனித்து நின்று தி,மு.க வால் ஆட்சி அமைக்க முடியாது என்று எல்லோருக்கும் தெரியும். வேறு வார்த்தைகளில் சொன்னால் தி.மு.க வால் 30 முதல் 33 சத ஒட்டுகளையே பெற முடியும். மீதி 70 முதல் 67 சத ஒட்டுகள் பிற கட்சிகளிடம். இதைஅறியாது 2001ல் நீங்கள் அமைத்த கூட்டணி படு தோல்வி கண்டது. 2004ல் உங்கள் கூட்டணிக்குவிழுந்த ஒட்டுகளில் பெரும்பான்மை அதிமுக ஆட்சிக்கு எதிரான ஒட்டுகளே தவிர, உங்கள்கூட்டணிக்கு முழு மனதுடன் அளிக்கப்பட்ட ஒட்டுகள் அல்ல. இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது தமிழ் நாட்டில் உங்கள் கட்சியின் பலமும், செல்வாக்கும். 1971 - 1976ல் நீங்கள்ஆடிய ஆட்டங்களுக்கும், பேசிய வார்த்தைகளுக்கும் 1977ல் பதில் கிடைத்தது - அதிமுகஆட்சி அமைந்தது. அவசர கால கொடுமைகளை தி,மு.க சந்தித்த போதும் திமுக அனுதாபஅலை உருவாகவில்லை.

இப்போது மீண்டும் பிராமணர் - பிராமணர்ல்லாதோர் என்ற இயக்கத்தை நீங்கள் முன்னிறுத்தினால்,தி.மு.க அதில் ஈடுபட்டால் அது தி.மு.க விற்கு நீங்கள் அடிக்கும் சாவுமணியாக இருக்கும். ஏனெனில் 1950களில் சொல்லப்பட்ட வாதங்கள் இன்று எடுபடாது. தலித்கள் உங்களுடன் சேரமாட்டார்கள். கீரிப்பட்டி-பாப்பாபட்டி தேர்தல் குறித்து உங்கள் நிலைப்பட்டினை அவர்கள்அறிவார்கள். தலித்-பிராமணர் - பிற ஜாதியினர் என்றுதான் அவர்கள் பார்ப்பார்கள். அன்று பெரியார்இருந்தார், அண்ணா இருந்தார். அவர்கள் மீது மக்களுக்கு இருந்த மரியாதையும், நம்பிக்கையும் முறையே வீரமணி, கருணாநிதி மீது கிடையாது. எனவே 21ம் நூற்றாண்டிலும் மீண்டும் பிராமணர் - பிராமணர்ல்லாதோர் என்று பாகுபாடு செய்து அரசியல் செய்ய முடியாது.

அப்படி செய்ய முயண்றால் அத்துடன் உங்கள் அரசியல் வாழ்வு மீள முடியாத படு குழியில் விழுந்து விடும். இனக்கலவரத்தினை தூண்டியதற்காக நீங்கள் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும். எதற்கும் மத்திய அரசு கொண்டுவரவிருக்கும் இனக்கலவர தடுப்பு சட்ட முன்வடிவைப் படித்துப் பார்த்துவிட்டு இனிப் பேசுங்கள்.

32 மறுமொழிகள்:

Blogger அடி ஆத்தி மொழிந்தது...

பிராமணர்க்கு ஆப்பு வைக்கும் நேரம் வந்துடிச்சுடுடோ....

5:23 AM  
Blogger Vaa.Manikandan மொழிந்தது...

மூர்க்கத்தனமாக எதிர்க்கிறீர் என்றுபடுகிறது. உங்களின் முந்தைய கட்டுரைகளில் தென்பட்ட அறிவார்ந்த ஆய்வு இதில் இல்லை.Emotional ஆக பாதிக்கப்பட்ட தனமை தெரிகிறது. தவறாக நினைக்க வேண்டாம். நீங்கள் பிராமணரோ?

5:46 AM  
Blogger தமிழரசன் மொழிந்தது...

பார்ப்பனர்களுக்கு எதிராகப் பேசும் கருணாநிதி, கீரிப்பட்டி, பாப்பாப்படி, கணடமங்கலம் ஆகிய ஊர்களில் வன்கொடுமை செய்யும் ஆதிக்கச் சாதி வெறியர்களுக்கு எதிராக எதுவும் பேசுவதில்லையே? அவர் கூட்டணியில் இருக்கும் ஒரு சாதிக்கட்சி தாழ்த்தப்பட்டோருக்கு இழைத்த கொடுமைகள் என்ன கொஞ்சமா? சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன.

5:46 AM  
Blogger சுட்டிப் பையன் மொழிந்தது...

அய்யா தமிழரசனே! உங்கள் தலைவர் திருமாவளவனும் தி.மு.க கூட்டணியில் இருந்தவர் தானே? இப்போது மீண்டும் சேரப்போகிறவர் தானே? நீங்கள் சாதிக்கட்சி என்று கூறும் பா.ம.கவின் நிறுவனர் டாக்டர் ராமதாஸுடன் சேர்ந்து தமிழ் உரிமைப் போராட்டங்கள் நடத்துகிறாரே? உங்கள் தலைவர் திருமாவளவன், அவரை தமிழ் குடிதாங்கி என அழைக்கவில்லையா? இதையெல்லாம் விட உங்கள் தலைவர் திருமாவளவன் தேவர் ஜெயந்தியன்று பசும்பொன் பொன்முத்து முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கும், சமாதிக்கும் மாலை அணிவித்து வழிபாடு செய்யவில்லையா? உங்கள் தலைவர் சாதி ஆதிக்கச் சக்திகளுடன் உறவாடுகிறார். அத்துடன் ஒடுக்கப் பட்ட மக்களுக்காகவே வாழ்ந்த் பெரியாரை அவதூறு செய்யும் ரவிக்குமாரை அரவணைக்கிறார். இரட்டை வேடத்தில் சேரிப்புயலை விஞ்ச தமிழ் நாட்டில் ஆளே கிடையாது.

6:00 AM  
Blogger முத்துகுமரன் மொழிந்தது...

கலைஞரின் பதில் பிரச்சனை எந்த திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை தெளிவு படுத்தி இருக்கிறது. கற்பு பற்றிய சர்ச்சையில் பெரியாரை மையப்படுத்தி அறிவுஜீவுகள் அரசியல் பண்ணிய போதே தெளிவாகிவிட்டது அவர்களின் ஆதரவு குஷ்புவுக்கோ அல்லது கருத்து சுதந்திரத்திற்கோ அன்று. மற்றபடி கட்டுரையில் உங்கள் ஆதங்கங்களை பொறுமித் தீர்த்துவிட்டதாகத்தான் தோன்றுகிறது.

6:17 AM  
Blogger ROSAVASANTH மொழிந்தது...

//இதையெல்லாம் விட உங்கள் தலைவர் திருமாவளவன் தேவர் ஜெயந்தியன்று பசும்பொன் பொன்முத்து முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கும், சமாதிக்கும் மாலை அணிவித்து வழிபாடு செய்யவில்லையா? //

இன்னும் இந்த அளவிற்கு திருமா கேவலப்படவில்லை என்று நம்புகிறேன். நான் பார்த்த அளவில் பாமக மட்டுமே தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்டது. ஒருவேளை சுட்டிபையன் சொல்வது உண்மையெனில் ஏதேனும் ஆதாரம் தரமுடியுமா-ஒரு செய்தியாக?

6:23 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

Chuttippaiyan is right. Thirumavalavan went to Dhevar Jeyanthi when he allied with DMK. Dr. Sethuraman accompanied his visit on that day. But I think Devar community stopped him.

6:59 AM  
Blogger மயிலாடுதுறை சிவா மொழிந்தது...

என்ன ரவி
மனதில் உள்ள கோபத்தை, ஆதங்கத்தை கலைஞர் மீது காட்டியுள்ளீர்கள்.
நீங்கள் சொன்னாலும் சொல்லவிட்டாலும் தன்னுடைய அயராத உழைப்பினால்
கலைஞர் தனக்கென ஓர் இடத்தை ஏற்படுத்தி கொண்டவர். எந்த கட்சி கூட்டணி
இல்லாமல் திமுக, அதிமுக நின்னறால் நிச்சயம் திமுகதான் அதிக வாக்குகளை
பெறும். கலைஞர் மீது சில குறைகள் நிச்சயம் இருக்கலாம், ஆனால் நிச்சயம்
ஒதுக்க முடியுமா? பெரியாருக்கு பிறகு அண்ணாவிற்கு பிறகு, நிச்சயம் கலைஞர்
மீது சராசரி மக்கள் கலைஞருக்கு ஓர் இடத்தை கொடுத்துதான் உள்ளார்கள்.
விருப்பு வெறுபிறகு அப்பாற்பட்டு தமிழ் ஆர்வம் உள்ளவர்கள் கலைஞரின் அயராத
உழைப்பை மறுக்க மாட்டார்கள்.
நன்றி
மயிலாடுதுறை சிவா...

8:28 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

இன்று தமிழ் நாட்டில் பிராமணர்-பிராமணல்லாதோர் என்று எந்த அடிப்படையில் இயக்கம் ஆரம்பிக்க
முடியும். அரசியல் ரீதியாக பிராமணர்கள் ஒரங்கட்டப்பட்டு வெகு காலமாகிறது. பெரும் நிலச்சுவாந்தார்களாக பிராமணர்கள் இல்லை.அதே சமயம் தலித்கள் -பிராமணர்ல்லாத
ஜாதிகள் என்ற முரண் கூர்மையடைந்திருக்கிறது.

இன்றைய நிலையில் குஷ்பு,சுகாசினி சர்ச்சையை முன்னிறுத்து பிராமணர்-பிராமணரல்லாதோர் இயக்கம் ஆரம்பித்தால் அது அபத்தமாக இருக்கும்.கருணாநிதியின் நிலைப்பாட்டினை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரிக்கமாட்டா, கூட்டணியில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். ஜெயலலிதா இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கருணாநிதி இன வெறியை தூண்டுகிறார், ஜாதி ரீதியாக துவேஷம் வளர்க்கிறார் என்று குற்றம்சாட்டி சட்ட ரீதியாக
கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க முயல்வார், மத்தியில் உள்ள அரசுக்கும் நெருக்கடி
ஏற்படும், கருணாநிதியை ஆதரிக்க முடியாது என்ற நிலை உருவாகும். இது கூட்டணி அரசில்
சிக்கல் ஏற்படுத்தும். சட்டசபை தேர்தலுக்கு ஒராண்டு கூட இல்லாத நிலையில் கருணாநிதி
கூட்டணி கட்சிகளுடன் உள்ள உறவினை தேவையற்ற சர்ச்சைகள் மூலம் கெடுத்துக்கொள்ளக்
கூடாது. கடந்த காலங்களில் கருணாநிதியும், தி.மு.க வும் தவறான முடிவுகள் எடுத்திருந்த போதும் அவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை எனில் யார் என்ன செய்யமுடியும்.


எழுதி வெட்டி ஒட்டு இடுகையில் மேலே உள்ளது விடுபட்டுப்போனது.
-----------------------------------
நான் மூர்க்கதனமாக எதிர்க்கவில்லை. கடந்த காலத்தில் தமிழர்-மலையாளி என்று பாகுபடுத்திப் பேசியதை மக்கள் நிராகரித்தார்கள். தி.மு.க பெரிய கட்சி, ஆனால் அதால் தனியே நின்று இப்போது ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதையெல்லாம் சுட்டிக்காட்டியிருக்கிறேன். மேலும் இந்த சர்ச்சையில் ஜாதி பிரச்சினையாக இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

8:33 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

பழைய நெனப்புடா பேராண்டின்னு பெருசின் டங்கு சிலிப்பு ஆயிச்சுங்க. மலையாளத்தாரு, அய்யிரூங்க வூட்டுல பொண்ணு எடுத்திருக்காருல!

8:39 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

மயிலாடுதுறை சிவாவின் கருத்தை படித்தால் சிரிப்பு தான் வருகிறது. இப்படி கண்மூடித்தனமாக ஒருவரை ஆதரிக்கிறார். அவரை சொல்லி குற்றமில்லை. இருக்கிறது தானே வெளில வரும். தி.மு.க. தனியாக தேர்தலில் போட்டியிட்டால் அதிக இடங்களை பெரும் என்பதெல்லாம் பூனை கண்ணை மூடிக் கொள்ளும் விஷயம். அ.தி.மு.க.வாவது தனியாக தேர்தலில் நின்று நிருபித்திருக்கின்றன. ஆனால் தி.மு.க. அப்படி சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டியது தான். ஒருவேளை அப்படி நின்று டப்பா டான்ஸ் ஆடிவிட்டால் அப்போது தெரியும் மேட்டர். அது வரைக்கும் பெரிய இது மாதிரி பேசிக்கொண்டிருக்க வேண்டியது தான்.

8:47 AM  
Blogger enRenRum-anbudan.BALA மொழிந்தது...

ரவி,
இப்பதிவுக்கு நன்றி. கலைஞர் தேவையில்லாமல், பிரச்சினையை வேறு தளத்திற்கு எடுத்துச் செல்ல முயற்சிப்பது ஏன் என்று விளங்கவில்லை. எதையாவது பேசி, தினமும் செய்தியில் இருக்க வேண்டியது, இப்போது சிலருக்கு வியாதி போல் ஆகி விட்டது.

10:22 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

சிவா, தமிழ்நாட்டில் ஒட்டு சதவீததில் அதிமுக, திமுகவிடையே வித்தியாசம் மிகக்குறைவு.
எப்பொதெல்லாம் அதிமுக ஒரு வலுவான கூட்டணியை அமைத்துள்ளதோ அப்போதெல்லாம்
அதுவே வென்றுள்ளது. 2001ல் கருணாநிதி மதிமுக,பாமக வை நடத்திய விதம் யாருக்கு
உதவியது. கருணாநிதி அயராது உழைக்கலாம், ஆனால் முடிவெடுக்கும் போது புத்திசாலித்தனமாக
செயல்படாவிட்டால் என்ன பயன். இந்த சர்ச்சையில் அவர் ஒரு பண்புமிக்க அரசியல்வாதி போலவா
நடந்து கொள்கிறார். எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதா அவர் வேலை. தேர்தலில் இதுவா
மக்கள் முன் எடுபடும். யோசித்துப் பாருங்கள்.

10:43 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

http://www.hindu.com/2005/11/28/stories/2005112806240400.htm

3:04 PM  
Anonymous எசக்கிமுத்து மொழிந்தது...

ரவி,

உமக்கு மண்டை ஓடிட்டா என்ன? தமிழ்நாட்டில் எந்த பாப்பாரப் பயலாவது குஸ்பு சொன்னது தவறு என்று சொல்கிறானா? குஸ்பு சொன்னதுச் அரி, சுகாசினி கிழித்திருப்பேன் என்று சொன்னது சரி என்கிறார்கள் எல்லோருமே. சுகா கிழித்திருப்பேன் என்று எதனைச் சொன்னார் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். எல்லா பார்ப்பனர்களும் குஸ்பு ஆதரவு நிலையை எடுத்ததால் கருணா இவ்வாறு சொல்லி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

8:23 PM  
Blogger முத்து(தமிழினி) மொழிந்தது...

பலர் மனதில் ஓடிக்கொண்டிருந்த ஆனால் வெளியே சொல்ல தயங்கிக்கொண்டிருந்த ஒரு விஷயத்தை கலைஞர் போட்டு உடைத்துவிட்டார்.

இதில் பிராமணர், பிராமணர் அல்லாதோர் மாற்று நிலைப்பாடு எடுத்துள்ளனர் என்பது
கண்கூடு.(விதிவிலக்குகளை விட்டுத்தள்ளுங்கள்) திரு. ரோஸா வஸந்த என்றோ சொன்னது போல இணைய அம்பிகள்(?) அனைவரும் எடுத்த நிலைப்பாட்டினை பாருங்கள்.

இதே எதிர்ப்பு (குஷ்பு பேச்சிற்கு) திருமாவளவனிடம் இருந்தோ ராமதாஸிடமோ இருந்து வராமல் ஜெயேந்திரரிடம் இருந்து வந்திருந்தால் இணைய அம்பிகளின் கருத்து என்னவாக இருந்திருக்கும் என்பதும் புரிந்துக்கொள்ளகூடியதே.

மற்றபடி மற்ற உங்கள் கட்டுரைகளில் உள்ள அறிவார்ந்த அலசல் இதில் இல்லை என்று ஒரு நண்பர் கூறியதை நான் வழிமொழிகிறேன். (கோர்ட் கேஸ் என்றெல்லாம் தட்டப்பட்டிருக்கிறீர்கள்)

11:23 PM  
Anonymous கலாச்சார குண்டாந்தடி மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

12:13 AM  
Blogger முத்து(தமிழினி) மொழிந்தது...

திரு கலாச்சார குண்டாந்தடி

கருத்துக்களை ஆக்கபூர்வமாக விவாதிப்போம். பெயர்களை உபயோகப்படுத்தவேண்டாம்.நன்றி.

1:03 AM  
Blogger முத்து(தமிழினி) மொழிந்தது...

தயவுசெய்து ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தவேண்டாம்.அவதூறாகவும் பேச வேண்டாம்.

1:09 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

வா. மணிகண்டன் கேட்டது:
"மூர்க்கத்தனமாக எதிர்க்கிறீர்... Emotional ஆக பாதிக்கப்பட்ட தனமை தெரிகிறது. தவறாக நினைக்க வேண்டாம். நீங்கள் பிராமணரோ?"
ஆம்மாம், ரவி ஸ்ரீநிவாஸ் அய்யங்கார் ஒரு பார்ப்பனர் தான். ஆனால் அவர் ஒரு நல்ல பார்ப்பனர், பார்ப்பனீயக் கொள்கைகளில் ஈடுபாடற்றவர். என்றாலும் இப்பதிவு அவர் ஆழ்மனத்துச் சாதியுணர்வை வெளிக்காடுகிறது.

ரவி சொன்னது:
"எனவே 21ம் நூற்றாண்டிலும் மீண்டும் பிராமணர் - பிராமணர்ல்லாதோர் என்று பாகுபாடு செய்து அரசியல் செய்ய முடியாது."

அப்படியானால் ஏன் இந்தப் படபடப்பு, நீங்கள் உட்பட இணையத்து அம்பிகளெல்லாம் ஏன் எகிறவேணும். உங்கள் கூற்றில் உங்களுக்கே நம்பிக்கையில்லைப் போல உள்ளது.

2:00 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

அ.மார்க்ஸ், பெரியார் தி.க எப்போது பார்ப்பனர்கள் ஆனார்கள்.குஷ்புவிற்கு ஆதரவாகப் பேசுவோர் எல்லோரும் பார்ப்பனர் என்றால் கனிமொழி கருத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் வன்முறை வேண்டாம் என்று கார்திக் சிதம்பரத்துடன் சேர்ந்து கூறுகிறாரே அவரும் பார்ப்பனரா, கார்த்திக்கும் பார்ப்பனரா.சுகிர்தராணி பார்ப்பனரா

3:25 AM  
Blogger ராம்கி மொழிந்தது...

//2004ல் உங்கள் கூட்டணிக்குவிழுந்த ஒட்டுகளில் பெரும்பான்மை அதிமுக ஆட்சிக்கு எதிரான ஒட்டுகளே தவிர, உங்கள்கூட்டணிக்கு முழு மனதுடன் அளிக்கப்பட்ட ஒட்டுகள் அல்ல.

No second opinion! :-)

3:50 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

தனிப்பட்ட நபர்களின் மீதான அநாகரிகமான வசைகளை இப்பதிவின் பின்னூட்டங்களில் அனுமதிக்க இயலாது.அப்படிப்பட்ட பின்னூட்டங்கள் நீக்கப்படும்

கருணாநிதி பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதோர் இயக்கம் என்று ஒன்றை ஆரம்பித்தால் அது
அவருக்கே எதிராக முடியும் என்பதை விளக்கி இருக்கிறேன். இன்று பார்ப்பனர் எதிர்ப்பு
என்பதை இந்த சர்ச்சையை வைத்து எழுப்ப முடியாது ஏனெனில் குஷ்பு,சுகாசினி கூறியது
ஒரு ஜாதி சார்பாக அல்ல. இப்பதிவில் பல விஷயங்களை நான் தொட்டுப் பேசியிருந்தாலும்
நான் ஏதோ ஒரு குறிப்பிட்ட ஜாதி சார்பாக பேசியிருப்பதாக புரிந்து கொண்டால் நான்
என்ன செய்ய முடியும்.ஜயேந்திரர கைது ஆன போது அவருக்கு எதிராக எத்தனை
வலைப்பதிவாளர்கள் எழுதினார்கள் என்பதையும், அவருக்கு ஆதரவாக பிராமணர்கள்
ஒட்டு மொத்தமாக திரளவில்லை என்பதையும் யோசித்துப் பாருங்கள். இன்னும் சிலர்
எதையும் ஜாதி என்னும் குழி ஆடி அதாவது லென்ஸ் வழியே பார்ப்பதுதான் விசித்திரமாக
இருக்கிறது. இவர்களுக்கு சொல்லப்படும் கருத்தினை விட சொல்பவரின் ஜாதிதான் முக்கியமாக இருக்கிறது. இது எத்தனை அபத்தம் என்பதைக் கூட இவர்கள் உணரவில்லை. இப்படிப் பார்ப்பதுதான் பகுத்தறிவின் வீழ்ச்சி,வளர்ச்சி அல்ல.

4:19 AM  
Blogger முத்து(தமிழினி) மொழிந்தது...

கருத்தை ஆதரிக்கிறவர்களையும் கருத்து சுதந்திரத்தை ஆதரிக்கிறவர்களையும் ஒரே தட்டில் வைத்து எடைபோட வேண்டாம் என்பது என் எளிய கருத்து.

4:22 AM  
Blogger G.Ragavan மொழிந்தது...

கருணாநிதி ஒரு தலைவரா அல்ல என்பது பிரச்சனை. அவர் சொன்னது சரியா தவறா என்பதே பிரச்சனை. என் கருத்தைக் கேட்டால் அவர் கருத்து சரியல்ல என்றுதான் சொல்வேன். பொறுப்புக் குறைந்த பேச்சாகவே படுகிறது.

சினிமா நடிகைகளுக்கும் பொறுப்பு வேண்டும் என்று சொல்கின்றவர்கள் அரசியல்வாதிகளுக்கு இல்லையா என்றும் சொல்ல வேண்டும்.

5:15 AM  
Blogger G.Ragavan மொழிந்தது...

மேலும் நமது மக்களுக்குத் தனிநபர், மொழி, மத, இனத் தாக்குதல்களில் உள்ள ஆர்வம் தெரிகிறது. புகுந்து விளையாடுங்கள். அடுத்தவர் உங்களை அடிக்கும் வரையில்.

5:16 AM  
Blogger முத்து(தமிழினி) மொழிந்தது...

ராகவா தலைவா சேம் சைட் கோல் போடாதீங்க....யாராவது அடிக்க வந்தா உங்க அட்ரஸ் தான் கொடுப்பேன். mangalore and bangalore are nearby.

5:20 AM  
Blogger G.Ragavan மொழிந்தது...

முத்து குடுங்க. பெங்களூருக்கும் மங்களூருக்கும் ஒரு எழுத்து தான வித்தியாசம். ஹா ஹா ஹா

7:05 AM  
Blogger Srimangai(K.Sudhakar) மொழிந்தது...

அன்பின் ரவி,
கருணாநிதி இந்த விசயத்தை அரசியலாக்கியிருக்கவேண்டாம் என்பது என் கருத்து. நீங்கள் எழுதியது கழகமூஉ முன்னிலையாக இருப்பதால் உணர்ச்சிவசப்பட்டதாகப் படிக்கையில் தோன்றுகிறது. படர்க்கையாக எழுதியிருந்தால் வெறும் objective ஆகப் போயிருக்கும்.
அன்புடன்
க.சுதாகர்

7:26 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

Thanks Sudhakar.I agree with you.

9:14 AM  
Blogger Thangavel மொழிந்தது...

கருணாநிதி எப்போதுமே மேம்போக்காகச் சிந்திக்கக் கூடியவர் என்பதை மீண்டும், மீண்டும் நிரூபித்து வருகிறார். தற்போதையத் தமிழக அரசியல்வாதிகள் அனைவருமே சிந்திப்பதில் இப்படித்தானோ என நினைக்கத் தோன்றுகிறது. (திருமா உட்பட)

1:35 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

http://thatstamil.indiainfo.com/news/2005/11/29/karuna.html

8:00 AM  

Post a Comment

<< முகப்பு