சுதர்சனும், ஜுனியர் விகடனும்

சமீபத்திய ஜூனியர் விகடனில் ஆர்.எஸ்.எஸ் ஸில் முக்கியப் பொறுப்பில் இருக்கும்சுதர்சன் இந்துக்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும், இல்லாவிட்டால்எதிர்காலத்தில் இந்துக்கள் சிறுபான்மையினர் ஆகி விடுவார்கள் என்று பேசியிருப்பதையொட்டிஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் மற்றுன் விஸ்வ இந்துப் பரிஷத் ஆதாரம்காட்டும் ஆய்வினை செய்திருப்பது சென்னையில் தலைமையகத்தையும், தில்லியில் கிளைஒன்றினையும் கொண்டுள்ள சென்டர் பார் பாலிசி ஸ்டடீஸ் என்ற அமைப்பு. இதன் இணையதளத்தினை பார்த்தாலே தெரியும் இது இந்த்துவ அமைப்புகளுடன் தொடர்புடையதுஎன்று. இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நூலாக வெளிவந்தது 2003ல், இதை வெளியிட்டுமுன்னுரையும் எழுதியிருப்பவர் அப்போதைய உள்துறை அமைச்சர், துணைப் பிரதமர்எல்.கே.அத்வானி. இந்த நூல் உருவாக்கத்திற்கு நிதி வழங்கியது இந்திய சமூக அறிவியல்ஆய்வுகளுக்கான கவுன்சில். பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்ட்டணிஆட்சியில் இருந்த போது கல்வி மற்றும் அறிவியல் தொழில் நுட்பத்துறைக்கானஅமைச்சராக இருந்தவர் முனைவர் முரளி மனோகர் ஜோஷி. இவர் இந்த அமைப்பிற்குநெருக்கமானவர் என்பதை இந்த அமைப்பில் இணைய தளத்திலிருந்தே அறிந்து கொள்ளமுடியும். ஆனால் பஜாஜ் இதையெல்லாம் கூறவில்லை, ஜுனியர் விகடன் நிருபரும் அறிந்துகொள்ளவில்லை.

இந்த ஆய்வின் முடிவுகள் ஒரு நூலாக வெளியான பின் அதை விமர்சித்து, அந்த முடிவுகளைசர்ச்சித்து எக்னாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லியில் ஒரு நீண்ட கட்டுரை வெளியானது,அதை ஏற்காமல் நூலாசிரியர்கள் ஒரு சிறு மறுப்புரையினை எழுதினர், அதுவும் பிரசுரமானது,இந்துவில் இந்த ஆய்வினை குறித்து ராம் மனோகர் ரெட்டி ஒரு கட்டுரை எழுதினார். ஜூனியர்விகடன் கட்டுரை இதையெல்லாம் குறிப்பிடவில்லை. எழுதியவருக்குத் தெரியவில்லை என்றே நினைக்கிறேன்.

ஜூனீயர் விகடன் அ.மார்க்ஸிடம் கருத்துக் கேட்டிருக்கிறது. அதை விட மக்கள் தொகைகுறித்த ஆய்வில் ஈடுபட்டிருக்கும் சிலரிடம் கருத்துக் கேட்டிருக்கலாம். ஏனெனில் அ.மார்க்ஸ்இந்த்துவ அமைப்புகளின் கருத்துக்களுடன் முரண்படுபவர் என்பது தெரிந்ததுதான். எனவேதுறை சார்ந்த நிபுணர்களின் கருத்துக்கள் வெளியாவது முக்கியம். ஆனால் ஜூனியர் விகடனுக்குஇது தெரியவில்லை. அதாவது பரவாயில்லை, குறைந்தபட்சம் இந்த ஆய்வின் முடிவுகள் சர்ச்சிக்கப்பட்டுள்ளன, இந்த அமைப்பு இந்த்துவ சக்திகளுடன் தொடர்புடையது, இதன்அறங்காவலர் குழுவில் கோவிந்த்சார்யா, பல்பீர் புஞ்ச், குருமூர்த்தி ஆகியோரும் இருக்கிறார்கள்என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கலாம். மாறாக பஜாஜ் கூறியிருப்பதை அப்படியே வெளியிட்டுள்ளது.

பொதுவாகவே தமிழில் இதழியலில் தொழில் நுட்ப வளர்ச்சி இருக்கிறது, உள்ளடக்க ரீதியாகவரவேற்கத்தக்க போக்குகள் இல்லை. தகவல் பிழைகள் மிகவும் சாதரணமாக இருக்கின்றன.சில சமயங்களில் முக்கியமான தகவல்கள் இடம் பெறுவதில்லை. கருத்துக் கூறும் பலர்ஒரு குறைந்த பட்ச ஆய்வினை,தகவல் சேகரிப்பினைக் கூட மேற்கொள்வதில்லை.

தமிழில் பத்திரிகைகளில் பரபரப்பான தலைப்பு கொடுத்து, இரண்டு பேரை சந்தித்து கருத்து வாங்கி வெளியிடுவதுதான் நிருபரின் அல்லது பத்திரிகையாளரின் வேலை என்ற போக்கு பரவலாக இருக்கிறது. இதன் விளைவாக வாசகர்களுக்கு போதுமான, தேவையான தகவல்கள், பாரபட்சமற்ற கருத்துரைகள் கிடைப்பதில்லை. இதானால் விபரம் தெரிந்தவர்கள் தமிழில் வெளியாகும் பத்திரிகைகளை பொருட்படுத்த தேவையில்லை என்று நினைத்தால் அதை தவறு என்றுகூற முடியாது.

12 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

ஐயா அதி புத்திசாலியே, சுஜாதா மேட்டரில் உங்கள் கருத்தை விகடன் கண்டு கொள்ளவில்லை என்ற காழ்ப்புணர்ச்சியில் தொடர்ந்து விகடனை தாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. அப்படியாவது பெயரை பிரபலமாக்க விரும்புகிறீர்கள். வாழ்த்துக்கள். ஏனைய பத்திரிகைகள் கண்டு கொள்ளாத மேட்டரை கூட விகடன் எழுதுவதை பாராட்ட வேண்டாம். இப்படி காழ்ப்புணர்ச்சியுடன் குறை கூறுவது தவறு.

5:05 AM  
Blogger சந்திப்பு மொழிந்தது...

“எதைத் தின்றால் பித்தம்” தெளியும் என்பார்கள். அதுபோல் ஆர்.எ°.எ°. தலைவர் சுதர்சன் தற்போது கையில் எடுத்திருக்கும் புது ஆயுதம் இந்துக்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது. மக்களை மதரீதியில் பிளவுபடுத்தி அதன் மூலம் அரசியல் - அதிகாரத்தை பெறலாம் என்பதைத் தவிர இவர்களிடம் வேறு என்ன இருக்கிறது? இவர்களது பா.ஜ.க. ஆட்சியில் மனித உயிர்களை மலிவாகக் கொன்றதைத் தவிர வேறு என்ன சாதித்தார்கள்? விகடன்களின் நோக்கம் வியாபரமே தவிர, ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்குவது என்பதல்ல. எனவே இவர்களின் சிந்தனைகள் செயல்படாமல், முடங்கி இருப்பதையெல்லாம் நாம் கண்டு கொள்ளக்கூடாது? தங்களது பதிவு மிக அருமையானது. இதை அனைத்துபகுதி மக்களிடமும் கொண்டுச் செல்ல வேண்டும்.
கே. செல்வப்பெருமாள்

5:22 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

//விகடன்களின் நோக்கம் வியாபரமே தவிர, ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்குவது என்பதல்ல.எனவே இவர்களின் சிந்தனைகள் செயல்படாமல், முடங்கி இருப்பதையெல் //

சாத்தான் வேதம் ஓதக்கூடாது. அடுத்தவரை குறை கூறும் முன் தான் என்னத்த கிழித்தோம் என்று பார்க்க வேண்டும். புதிதாக துவங்கப்பட்டுள்ள உங்கள் வலைப்பதிவில் பஸிட்டிவாக ஏதேனும் ஒரு பதிவாவது வெளியிட்டுள்ளீற்களா? எல்லாவற்றையும் நெகட்டிவ் அப்ரோச்சாக அணுகி விட்டு அடுத்தவரை குறை கூறும் உங்களைப் போன்றவர்களை திருத்த முடியாது பெருமாள்.

5:39 AM  
Blogger அடி ஆத்தி மொழிந்தது...

At 1:11 PM, ravi srinivas said...
Why cant you leave it to her to decide.Why do you want to impose your convictions on her.In Iran
there is no cultural freedom worth
the name. Why should other countries follow Iran in that.

*********

At 1:20 AM, ravi srinivas said...
இஸ்லாம் என்பது நம்பிக்கை சார்ந்த வழிபாட்டு முறை மட்டுமன்று. அஃது ஒரு வாழ்க்கை நெறி.

in that name you fellows want to impose irrational restrictions on
women.and the irony is you justify that.Whether she plays well or not
is the issue.why create trobule
by raking up irrelevant issues.

************

At 8:19 AM, ravi srinivas said...
Purdah is not in tamil or indian tradition or culture.it was brought in by muslims.So if you are talking of culture purdah is
alien to indian culture or tradition.
If you want to know what is meant by cultural freedom ask muslims
in countries like
canada,netherlands and switzerland.
the idea of cultural freedom may be too alien to muslims with closed minds to understand what it is.

****************

இப்படியே இங்கிலீசுல பின்னூட்டம் இட்டுக்கிட்டு அலைஞ்சு, இப்ப மட்டுமென்னய்யா தமிழ்ல பினாத்துரே?

6:02 AM  
Blogger -/பெயரிலி. மொழிந்தது...

ரவி ஸ்ரீனிவாஸ், ஜூவி கட்டுரையை வாசிக்கவில்லை. ஆனால், இந்த சனத்தொகை பெருக்குதல் முஸ்லீங்களுடன் போட்டிக்கான விஷயமாகத்தான் தோன்றுகிறது. மதத்தினை முன்வைத்து குடும்பக்கட்டுப்பாட்டினை முஸ்லீங்களிலே ஒரு சாரார் இந்தியாவிலே எதிர்க்கின்றனர் என்று வாசித்ததுண்டு. இது காலப்போக்கிலே, நாட்டின் சனத்தொகை விகிதாசாரத்தினை மாற்றிவிடுமென்பதும் ஆர்எஸ்எஸ்ஸின் கருத்தாகவிருக்கலாம். அவர்களின் பயத்தினை இவ்விதத்திலே ஓரளவுக்கு நியாயப்படுத்தலாம். அரசு சனத்தொகைக்கட்டுப்பாட்டினை வற்புறுத்த நேரின் மதத்தினைத் தள்ளிவைத்துவிட்டு, வற்புறுத்தவேண்டும்.

6:24 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

அடி ஆத்தி. நீயும் தான் வூட்டுலே உருதுலே பேசிட்டு இங்க தமிழிலே பெனாத்துறே. கேட்டா ஆதி தமிழன்னு பீலா வுடுறே. அதையெல்லாம் கேட்டோமா?

8:28 AM  
Blogger Narain மொழிந்தது...

இந்த பதிவின் சாராம்சத்திற்கான என் பதில் ஆர்.எஸ்.எஸ்ஸின் முட்டாள்தனத்திற்கு எதிரானது. ஆனால் இங்கே சொல்ல நினைப்பது, ஒரு தமிழ் பத்திரிக்கையின் நிருபரின் நிலைதான். சமீபத்தில் தினமலரிலிருந்து என்னிடம் சில கேள்விகள் கேட்டு பதில் வாங்கினார்கள். ப.சிதம்பரத்தின் மாணவர்கள் செல்போன் வைத்திருப்பதால் அவர்கள் மீதும் வருமான வரி விதிக்க வேண்டும் என்கிற முட்டாள்தனமான வாதமது. அந்த பிரச்சனையை விடுங்கள். என்னிடம் பேட்டிக் கண்ட நிருபருக்கு, வருமானவரியின் கீழ் யார் யார் வருவார்கள் என்கிற அடிப்படை விஷயம் தெரியவில்லை. இப்படிதான் இங்கே பத்திரிக்கைகள் நடந்துக் கொண்டிருக்கின்றன.

தமிழ் பத்திரிக்கையுலகத்தின் வெளியுலக, துறை சார்ந்த அறிவு என்பது என்னளவில் ஸீரோ. ஏனைய பத்திரிகைகள் கண்டு கொள்ளாத விஷயம் என்பதால், அரைகுறையாக ஒரு விதயத்தினை பேசலாமா ? அது பத்திரிக்கை தர்மமா? நடுநிலை, ஐந்தாவது தூண் என்றெல்லாம் ஜல்லியடிக்கும் பத்திரிக்கைகள் ஒரு விஷயத்தினைப் பற்றி எழுதும்போது தீர விசாரித்து எழுத வேண்டாமா?

இங்கே பத்திரிக்கைகளும், நிருபர்களும் "Press" என்று தங்கள் வண்டியில் போட்டுக்கொண்டு, நடு ராத்திரி குடித்துவிட்டு போலிஸ் மறித்தால் பயமுறுத்த மட்டுமே. அதை தவிர ஆழ்ந்த திறனாய்வு என்பதெல்லாம் ஏதோ ஒரு மூலையில் வேண்டுமானால் நடக்கலாம். என் கேள்வி ரவி, ஜூனியர் விகடனையெல்லாமா மெனக்கெட்டு படிக்கிறீர்கள்?

2:55 PM  
Anonymous narain மொழிந்தது...

//ஜூனியர் விகடனையெல்லாமா மெனக்கெட்டு படிக்கிறீர்கள்//

என்னைப் போல தமிழ் முரசு படித்து அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

5:53 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

Mr.Narain, if you read both JV and TM you will become 'too' intelligent
like Mr.Ravi Srinivas.

6:53 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

தர்சன் அடிக்கும் எச்சரிக்கை மணி!

இனி... ‘‘இந்துக்களே இல்லாமல் போவார்கள்!’’


Ôஒரு தம்பதிக்கு பன்னிரண்டு ஆண் குழந்தை கள் பிறந்தால், நூற்று இருபது
சுதர்சன்

வருடங்களுக்குப் பிறகு அந்தக் குடும்பத்தில் ஆயிரத்து இருநூறு பேர் இருப்பார்கள். ஆனால், ஒரு குழந்தை மட்டுமே பிறந்திருந்தால், அந்தக் குடும்பத்துக்கு வாரிசே இல்லாமல் போய்விடும்’ &இது ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சனத்தின் அதிர்ச்சி ஸ்டேட்மென்ட். கூடவே, Ôஇந்துக்கள் குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்கக் கூடாது. நிறைய குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்’ என சுதர்சன் ஓர் அதிர்ச்சிக் குண்டை வீசியெறிய, அது இப்போது அகில இந்திய அளவில், அரசியல் வட் டாரத்திலும் அறிவுஜீவிகள் மட்டத்திலும் பெரும் சலசலப்பைக் கிளப்பி யிருக்கிறது.

கடந்த 17&ம் தேதி டெல்லி இந்தி பவனில் Ôரிலிஜியஸ் டெமோகிரபி ஆஃப் இண்டியாÕ (ஸிமீறீவீரீவீஷீus ஞிமீனீஷீரீக்ஷீணீஜீலீஹ் ஷீயீ மிஸீபீவீணீ) என்ற இந்தி மற்றும் ஆங்கிலப் புத்தகம் வெளியிடப்பட்டது. ‘சென்டர் ஃபார் பாலிஸி ஸ்டடீஸ்’ என்ற அமைப்பின் சார்பில் மூவர் குழு தயாரித்த இந்தப் புத்தகத்தில், ‘இந்தியாவில் கடந்த நூறு ஆண்டுகளில் இந்துக்களின் மக்கள்தொகை விகிதம் எவ்வளவு குறைந்துள்ளது... அதேசமயம் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு அதிகரித்திருக்கிறது’ என்பது பற்றிய ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை வெளியிட்டபோதுதான் சலசலப்புக்கு அடிபோட்டிருக்கிறார் சுதர்சன்.

‘‘இந்து தம்பதிகள் அனைவரும் குறைந்த பட்சம் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந் தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நாம் இருவர் நமக்கு இருவர், ஒருவர் என்று சொல்லி இந்துக்கள் மோசம் போக வேண்டாம். இந்தப் புத்தகத்தின் ஆய்வில், மதரீதியாக மக்கள்தொகை எப்படி அதிகரித்திருக்கிறது என்ற கணக்கெடுப்பு அடித்திருக்கும் எச்சரிக்கை மணியை, இந்துக்கள் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும். பரிசீலித்து அதை சரிசெய்ய வேண்டும். மக்கள்தொகை அதிகரித்துவிட்டால், வேலை வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்று சொல்வதெல்லாம் நொண்டிச் சாக்கு. சுயவேலை வாய்ப்புகள் மூலம் எல்லோருக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும்.
புத்தக வெளியீட்டு விழாவில்...


இந்து மதத்திலிருந்து மாறி மற்ற மதங்களுக்கு சென்றவர்கள், மீண்டும் இந்து மதத்துக்குத் திரும்பவேண்டும். கிறிஸ்தவ மதத்துக்குப் பெரு மளவில் மாறி சென்றிருக்கும் தலித்களும் இந்து மதத்துக்குத் திரும்பி வரவேண்டும். அப்படி வரா விட்டால், அவர்களுக்கு இடஒதுக்கீடு செய்யக் கூடாது’’ என்று சுதர்சன் பேசிக் கொண்டே போனார்.

சுதர்சனத்தின் பேச்சு மட்டுமல்ல, அவர் வெளியிட்ட புத்தகமும் சர்ச்சைக்குள்ளாகிவிட, இந்தப் புத்தகத்தின் பதிப்பாளரும் ஆசிரியர்களில் ஒருவருமான டாக்டர் ஜே.கே.பஜாஜை சந்தித்துப் பேசினோம்.

‘‘பழைய இந்திய வரைபடத்திலிருந்து பல் வேறு பகுதிகள் பிரிந்து விட்டன. வடக்கே பாகிஸ்தான், வடகிழக்கில் பங்களாதேஷ் ஆகியவை மதரீதியாகவே பிரிக்கப்பட்டுவிட்டன. இதேபோன்ற மதரீதியான ஆபத்துகள் இப்போதும் பெருகி வருவதால், நம் நாட்டின் வரைபடம் இன்னும் சுருங்கிவிடும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் நாம் ‘மொகலாயர் காலத்தில் இந்தியா எப்படி இருந்தது? ஆங்கிலேயர்கள் வந்தபோது இந்தியாவில் என்ன
பஜாஜ்

நிலைமை?’ என்ற ஆராய்ச்சிகளைச் செய்ய வேண்டாம். கடந்த நூறு வருடத்தை எடுத்துக்கொண்டாலே போதும்... இந்தியா எப்படி மாறியுள்ளது என்பது தெரியவரும். அதுமட்டுமல்ல, இனி அடுத்த ஐம்பது வருடங்களில் இந்தியா எப்படி மாறும் என்ற கேள்வியும் உண்டு. இதற்கான பதிலைதான் புத்தகத்தில் சொல்லியிருக்கிறோம். இந்தப் புத்தகம் வெளியிட்டதில் மதவெறி கிடையாது. இந்தியாவுக்கென ஒரு அடையாளம் உண்டு. அது இந்து, புத்த, ஜைன மதங்களின் அடிப்படையிலானது. இந்த மூன்றையும் இந்திய மதங்கள் என்று சொல்வோம். இவை நம்முடைய கலாசார பண்பாடுகள் சம்பந்தப்பட்டவை.

இந்தப் புத்தகத்தில் நாங்கள் தெரிவித்துள்ள விஷயங்கள், மத்திய அரசின் ‘சென்சஸ்’ புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டே சொல்லப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் எதையும் தவறுதலாகக் குறிப்பிடவும் வாய்ப்புகள் இல்லை. 1881&ம் ஆண்டு மக்கள்தொகை கணக் கெடுப்பின்போது& இந்தியாவில் இந்திய மதத்தினரின் (இந்து, ஜெயின், புத்த) எண்ணிகை எழுபத்தொன்பது சதவிகிதம். முஸ்லிம்கள் பத்தொன்பதரை சதவிகிதம். கிறிஸ்தவர்கள் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்தனர். இப்போது 2001&ல் எடுக்கப்பட்ட சர்வேயின்படி, இந்திய மதங்கள் அறுபத்து ஏழரை சதவிகிதம் மட்டுமே. ஆனால், முஸ்லிம்கள் முப்பது சதவிகிதமாகவும், கிறிஸ்தவர்கள் இரண்டு சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளனர். முஸ்லிம்களின் வளர்ச்சி விகிதம் அதிகரிப்பது, அதிகக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதால்தான். வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமல்ல, தெற்கேயும் முஸ்லிம் மக்கள்தொகை வளர்ச்சி அதிகமாகவே உள்ளது. வடக்கைவிட மத்திய பிரதேசத்தில் இருந்து கேரளா வரை முஸ்லிம் பெண்கள் அதிகமாகப் படித்துள்ளனர். ஆனால், முஸ்லிம் மக்கள்தொகை வளர்ச்சியில் இவர்களுக்கும் கணிசமான பங்கு இருக்கிறது. இதுவும் லேட்டஸ்ட் சென்சஸில் தெரிகிறது.

கிறிஸ்தவர்களின் கதை வேறு. சொல்லப்போனால், குழந்தைகள் பிறப்பு விகிதம்கூட கிறிஸ்தவர்கள் மத்தியில் மற்ற மதத்தினரைவிடக் குறைவாக இருக்கிறது. இப்படி மற்ற மதத்தினரைவிட இவர்களுக் குக் குறைவாகக் குழந்தைகள் பிறந்தாலும், இவர்களுடைய மக்கள் தொகை எப்படி அதிகரித்தது? அதற்கு விடை, மதமாற்றம்! கடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வடகிழக்கு மாநிலங் களான அருணாசல பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், நாகலாந்து, மிஸோராம், திரிபுரா மாநிலங்களில் நாற்பத்தாறு சதவிகிதம் பேர்கள் கிறிஸ்தவர்களாகி விட்டனர். இதற்கு முக்கியக் காரணம், இங்குள்ள மலைவாழ் மக்களை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றியுள்ளனர்.

தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாற்பத்தேழு சதவிகிதம் கிறிஸ்தவர்கள். தமிழ்நாட்டில் செங்கற்பட்டு, திருவள்ளூர் போன்ற வட மாவட்டங்களிலும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஆக, இதேமாதிரி வளர்ச்சி விகிதம் சென்றால்... இந்தியாவின் நான்கு முனைகளிலும் இந்துக்களும் மற்ற இந்திய மதத்தினரும் மைனாரிட்டிகளாக மட்டுமல்ல, அறவே இல்லாமலேயே போய்விடுவார்கள்! இதைப்பற்றி எல்லாம் ஆராய்ச்சி செய்துதான் புத்தகத்தை வெளியிட்டோம். இதை உணர்ந்துதான் ஆர்.எஸ்.எஸ் தலைவரும் பேசினார். அவர் பேசியது உண்மையே...’’ என்றார் பஜாஜ்.

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் பேச்சு, பி.ஜே.பி ஆட்சி செய்யும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களையும் தர்ம சங்கடத்தில் தள்ளியிருக்கிறது. மத்தியப் பிரதேச முதல்வர் பாபுலால் கௌர், ‘பஞ்சாயத்துத் தேர்தல்களில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பிறந்திருந்தால் அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது’ என்று அறிவித்திருந்தார். ஆனால், பதவி நாற்காலி ஆட்டம் கண்டுகொண்டிருக்கும் நிலையில் இருக்கும் கௌர்... சுதர்சனத்தின் பேச்சைக் கேட்டு ஆடிப்போய், மறுநாளே அந்த உத்தரவை வாபஸ் வாங்கிவிட்டார்! அபத்தமான குற்றச்சாட்டு!

இந்த விவகாரம் குறித்து தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அ. மார்க்ஸிடம் கருத்துக்
மார்க்ஸ்

கேட்டோம். ‘‘அவர்களின் பேச்சுகள் அத்தனையும் அபத்தம். நம்பகத்தன்மை இல்லாத அந்தப் புள்ளிவிவரங்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை’’ என்று எடுத்தஎடுப்பிலேயே அவற்றை நிராகரித்த மார்க்ஸ், தொடர்ந்து சில விஷயங்களைச் சொன்னார்.

‘‘இந்தியாவைப் பொறுத்தவரை, கிறிஸ்தவர்களின் ஜனத்தொகை குறைந்துகொண்டே வருகிறது என்பதுதான் உண்மை. ஆரம்பத்தில் 2.6 சதவிகிதமாக இருந்த கிறிஸ்தவர்கள், தற்போது 2.3, 2.2 என்று குறைந்துகொண்டே வருகின்றனர்.

முஸ்லிம் மக்களின் ஜனத்தொகை சிறு அளவு அதிகரித்திருந்த போதிலும், கடந்த காலத்துடன் அந்த வளர்ச்சியை ஒப்பிடும்போது அதிகரிப்பு சதவிகிதம் குறைந்துகொண்டுதான் வருகிறது. இதற்குக் காரணம், அந்த மக்களிடையே பெருகியிருக்கும் கல்வி வளர்ச்சியும், புதிய சிந்தனைகளும்தான். இதையெல்லாம் மறைத்துவிட்டு ‘முஸ்லிம்கள் அதிகரித்துவிட்டதாக’ ஆர்.எஸ்.எஸ் பிலாக்கணம் பாடுவது, சுத்த அபத்தம்! ஒரு வாதத்துக்காக அவர்கள் சொல்வதை உண்மை என்று வைத்துக் கொண்டாலும், அவர்கள் கணக்குப்படி இந்து மக்களின் எண்ணிக்கை குறைந்து முஸ்லிம்கள் அதிகரித்து, இந்தியா முஸ்லிம் நாடாக மாற ஆயிரம் வருடங்களாவது ஆகும்.

நம் இந்திய அரசியல் சாசனத்திலேயே சிறுபான்மையினருக்கு ஒரு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. இந்துக்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு சலுகை தரப்பட்டுள்ளது. இதை எதிர்த்துப் போராட்டங்கள் செய்தபிறகே புத்த, சீக்கிய மதங்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை, கிறிஸ்தவ மத்தைத் தழுவியவர்களில் பெரும்பாலானவர்கள் தலித்கள். ஆனால், இவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை. இதனால், இப்போது இவர்கள் மீண்டும் இந்து மதத்துக்கே திரும்பிப் போகிறார்கள் என்பதுதான் உண்மை. அதிலும் ஆதிவாசிகள், மலைவாழ் மக்கள் ஆகியோரைத் திரும்பவும் இந்து மதத்துக்குக் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ் கோடிக் கணக்கில் பணத்தை செலவிடுகிறது. இதற்காக வெளிநாடுகளில் உள்ள ‘ஹிந்து ஸ்வயம் சேவக்’, ‘ஓவர்சீஸ் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் பி.ஜே.பி’ ஆகிய அமைப்புக்கள் பெருமளவில் நிதி திரட்டி அளிக்கின்றன. நிஜம் இப்படியிருக்க, கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் அதிகரிப்பதாக அந்த அமைப்பினர் சொல்வது, கலப்படமில்லாத பொய்!

குழந்தைகள் பெற்றுக்கொள்வது, தனிப்பட்டவர்களின் விருப்பம் சார்ந்தது, அவர்களின் பொருளாதாரம் சார்ந்தது. அப்படியிருக்கும்போது, ‘பத்துப் பிள்ளைகள் பெற்றுக்கொள், பதினேழு பிள்ளைகள் பெற்றுக்கொள்’ என்று சுதர்சன் சொல்வது, மிகவும் வன்முறையான கருத்து. குடும்ப நன்மை, நாட்டு நன்மை ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது இப்படி பேசுவது விரும்பத்தக்கது அல்ல’’ என்றார்.
JV 30-11-05

11:53 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

Dear Ravi,

A.Marx argues foolishly. Christian population is not decreasing ...their percentage is only decreasing. Nor Dalits form the highest propotion of converts. This apart it is a well known fact that Hindus have been completely eliminated in Afghanistan and effectively in Pakistan and totally in Kashmir and humiliatingly in Bangladesh. In Bangladesh most Hindus thus suffering religious gharassment are Dalits and Buddhist tribals. A.Marx says Buddhist and Sikhs were given Dalit reservation after bitter fights. You being a legal professional, can u shed some light as to the veracity of the statement.

Thank u.

-a friend

4:58 PM  
Blogger நண்பன் மொழிந்தது...

ரவி,

பத்திரிக்கைத் தர்மங்களை விட்டு விட்டு கட்டுரையின் பின்னூட்டத்திற்கு வருவோம் -

மக்கள் விகிதாச்சார முறையில் இஸ்லாமிய மக்கள் தொகை அதிகரித்திருக்கிறது என்ற ஆர்.எஸ்.எஸ்-ன் கூற்று தவறு என்று அரசே விளக்கம் அளித்து விட்டது.

விகிதாச்சார கணக்கை ஒப்பிடும் பொழுது - தற்போதைய கணக்கெடுப்பும், அதற்கு முந்தைய கணக்கெடுப்பும் ஒப்பிடப் படுகின்றன.

தற்போதைய கணக்கெடுப்பு தான் முழுமையான இந்தியாவிற்கான கணக்கெடுப்பாக அமைந்தது. அதற்கு முந்தைய கணக்கெடுப்பு என்பதில் காஷ்மீரம் விடப்பட்டது. அங்கு நிகழும் insurgency பிரச்சினையால் கணக்கெடுப்பு நிகழவில்லை. (1991)

அதற்கும் முந்தைய கணக்கெடுப்பு - 1981ல் - விடப்பட்ட மாநிலம் - அஸாம். போராட்டங்களினால் அங்கும் கணக்கெடுப்பு நிகழவில்லை.

இதனால், நமக்கு ஒரு முழுமையான கணக்கெடுப்பு கிட்டவில்லை. 2001ல் தான் அந்தக் கணக்கெடுப்பு முழுமையடைந்தது.

2001ன் கணக்கெடுப்பை - 1991டன் ஒப்பிடும் பொழுதோ, அல்லது 1981டன் ஒப்பிடும் பொழுதோ, ஒரு சிறிய adjustment செய்து கொள்ள வேண்டும். அதாவது - எந்த வருடத்துடன் ஒப்பிடுகிறோமோ, அந்த வருடத்தில் விடுபட்டுப் போன மாநிலத்தை, இப்பொழுது நீக்கி விட்டு, ஒப்பீடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது, கிடைக்கின்ற வளர்ச்சி விகிதம் - முந்தைய வளர்ச்சி விகிதங்களை விட குறைவானது. அதாவது - மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறையத் தொடங்கி உள்ளது. முஸ்லிம்களும் குடும்பக் கட்டுப்பாட்டை அனுசரிக்கத் தொடங்கி உள்ளனர் என்பதே உண்மை. இதற்குக் காரணம் இஸ்லாமியப் பெண்களிடையே கல்வி பெறுவது கூடியிருக்கிறது - குறிப்பாக தெற்கே உள்ள மாநிலங்களில்.

ஆர் எஸ் எஸ்-ன் தலைவர் இந்துக்களை அதிக குழந்தைகள் பெற்றுக் கொள் என்று இந்த புள்ளி விவர அடிப்படையில் பேசியிருந்தால், அந்த தவறைச் சுட்டிக்காட்டி, திருத்தி இருக்கலாம். ஆனால், அவர் பேசியது இதன் அடிப்படையில் இருக்காது. அவருடைய மூளை வேலை செய்வது வேறு வகையில்.

மதமாற்றத்தை இந்து மதம் அனுமதிக்கவில்லை. அதனால், தங்களுக்கு மத மாற்றத்தினால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை உணர்ந்தவர் - வேண்டுகோள் வைக்கிறார் - அதிகக் குழந்தைகள் பெற்றுக் கொள்ளுங்கள் என்று. எந்த அளவிற்கு அவர் ஒரு அடிப்படைவாதி என்று அறிந்து கொள்ள இது ஒன்றே போதும்.

மத மாற்றங்களைத் தடுத்து நிறுத்தவும் இயலாது என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். அதனால், மாற்றாக அவர் முன் வைக்கும் வழி தான் - உற்பத்தி செய்யுங்கள்.

உண்மையில், அதிக குழந்தைகள், பொருளாதார சுபிட்சத்திற்கு இடையூறாக இருக்கும் என்பதை உணர்ந்து இஸ்லாமியர்கள் உட்பட அனைவரும் இன்று குடும்பக் கட்டுப்பாட்டு முறையை ஏற்றுக் கொண்டுள்ளனர் (- என்ன ஒரு முரண்பாடென்றால், அதை அமல் படுத்தும் பொறுப்பை பெண்களிடத்திலே கொடுத்து விட்டனர். )

மக்கள் வளர்ச்சி விகிதம் கட்டுப்பட்டால் மட்டுமே, சரியான வளர்ச்சிப் பாதையில் போக இயலும் என்று அனைவரும் உணர்ந்துள்ள வேளையில், இந்த நாட்டையே பல நூற்றாண்டுகள் பின் தள்ளும் கொள்கையை அவர் கொண்டிருக்கிறார்.

பிற்போக்குவாதியிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

12:05 AM  

Post a Comment

<< முகப்பு