முதல் பனியே

இந்தப் பருவத்தின் முதல் பனி நேற்றிரவு பெய்தது. நான் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும்போது பன்னீர்த்துளிகள் போல் விழுந்தது. காலையில் பார்த்தால் பனி படர்ந்திருந்தது பலஇடங்களில். மேகம் மூட்டத்துடன் இருக்க சூரியன் கராத்தே தியாகராஜன் போல் பதுங்கிவிட்டார் என்று நினைத்தேன். நண்பகலில் சூரியன் ஒளிர பனி படர்ந்த இடங்கள்வெண்பட்டுப் போல் தகதகவேன பிரகாசித்தன. இந்த ஆண்டு குளிர் கடுமையாக இருக்கும்என்று சொல்லுகிறார்கள். எது எப்படியோ தொல்லைகள் இருந்தாலும் எனக்குப் பனிபிடிக்கும், பனி விழுவதை பார்க்கப் பிடிக்கும், பனியில் நனைவதும், நடக்கவும் பிடிக்கும்.பனி ஒர் அழகுதான்.

என் அலுவலகத்தின் பின்புறத்தின் சில பகுதிகளை இப்புகைப்படங்கள் காட்டுகின்றன.இதைப் பார்த்துவிட்டு டி.ஜே , ரவி சீனிவாசெல்லாம் புகைப்படம் எடுத்துப் போட்டால்நான் மட்டும் ஏன் கவிதை எழுதக்கூடாது என்று நினைத்து வலைப்பதிவுகளில் கவிதைகளைகவி காளமேகம் போல் பொழியத்துவங்கினால் அதற்கு நான் பொறுப்பில்லை :).

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

டி.ஜே , ரவி சீனிவாசெல்லாம் புகைப்படம் எடுத்துப் போட்டால்நான் மட்டும் ஏன் கவிதை எழுதக்கூடாது என்று நினைத்து வலைப்பதிவுகளில் கவிதைகளைகவி காளமேகம் போல் பொழியத்துவங்கினால் அதற்கு நான் பொறுப்பில்லை :).

:))))))

12:31 PM  

Post a Comment

<< முகப்பு