சுந்தர ராமசாமி,ஜெயமோகன் குறித்து சாரு நிவேதிதா

கோணல் பக்கங்களில் சாரு எழுதியிருக்கும் கட்டுரை. சு.ரா வும்,பிரமீளும் நெருங்கி இருந்த காலமும் உண்டு. சு.ரா வின் கவிதையைப் புகழ்ந்து தருமு சிவராமு எழுதிய கட்டுரை வானமற்ற வெளி கட்டுரைத் தொகுப்பில் இருக்கிறது. ஒரு காலத்தில் சு.ரா,பிரமீள்,வெங்கட் சாமிநாதன் மூவரும் பல விஷயங்களில் ஒத்த கருத்துடையவர்களாக இருந்தார்கள். பின்னர்பிரமீள் வெ.சா, சு.ரா இருவரையும் கடுமையாக விமர்சிக்கத் துவங்கினார். பிரமீளை நகுலன்பள்ளியைச் சேர்ந்தவராக கருதுவது சரியல்ல என்பது என் கருத்து. சு.ரா, பிரமீள்,வெ.சாமூவருக்கும் பொதுவான ஒன்று என்னவென்றால் மூவரும் தமிழில் எழுதிய முற்போக்கு, இடதுசாரிஇலக்கியவாதிகள் மீது கடும் விமர்சனம் வைத்ததுதான். ஆனால் மூவரும் மார்க்சியம் குறித்து ஆழ்ந்த புரிதல் பெற்றிருந்தார்கள் என்று சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன்.

இக்கட்டுரையில் ஜெயமோகனை கிண்டல் செய்து சாரு எழுதியிருப்பதை நான் ரசித்தேன் என்று சொல்லவும் வேண்டுமா. ஜெயமோகன் எழுதுவதை வார்த்தைகளின் வாந்திபேதி என்று ஒரு முறைஎழுதியிருக்கிறேன். சு.ரா பற்றி ஜெயமோகன் அவசர அவசரமாக புத்தகம் எழுதுவது சு.ரா வினைவிற்பனை சரக்காக மாற்றுவதற்கான முயற்சிதான், காலச்சுவடு நூல் வெளியிடும் முன் சந்தையில்இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படும் செயல் இது. சு.ரா இறந்த பின் அவருக்குகிடைத்திருக்கும் கவனத்தினை பயன்படுத்திக் கொண்டு வாசகர் மனதில் தன் கருத்துக்களைநிலை நிறுத்த ஜெயமோகன் செய்யும் இழிவான முயற்சி இது. உண்மையில் பலர் சு.ரா குறித்துஎழுதிய ஒரு நினைவு மலர் முதலில் வெளியானால் பலதரப்பட்ட கருத்துக்கள் வெளியாகவாய்ப்புண்டு. ஜெயமோகன் இப்படி செய்வதும், அதற்கு சிலர் உடந்தையாக இருப்பதும்வெட்கக்கேடான செயல்கள்

18 மறுமொழிகள்:

Blogger முத்து(தமிழினி) மொழிந்தது...

திரு ரவி சீனிவாஸ்

வியாபார நோக்கங்கள் ஒரு புறம் இந்த நூலை ஜெயமோகன் சுவையாகவே எழுதியுள்ளார் என்று கூறலாம்(உயிர்மை கட்டுரை) இந்த நூலை எழுத அவருக்கு முழு தகுதியும் உண்டு).அவருடன் பல தளங்களில் கருத்து வேறுபாடு கொண்டவர். நெருங்கி பழகியவர்.பல வாக்குவாதங்களும் நடந்திருக்கும்.

தன்னை முன்னிலைப்படுத்தியும் தன் செயல்பாடுகளும் கருத்துக்களுமே சரி என்ற பொருள் தொனிக்க ஜெயமோகன் எழுதினாலும் சு.ரா வையும் அவரது படைப்புகளையும் நன்கு அறிந்த ஒருவர் அதிலிருந்து சு.ராவின் பல பரிமாணங்களை
தெரிந்துக்கொள்ளலாம். (சிறிது அன்னப்பறவை வேலை செய்யவேண்டி இருக்கும்)

4:00 AM  
Anonymous சிவா மொழிந்தது...

ஆம், சில நேரங்களில் நாம் அன்ன பறவையாக நடந்துக் கொள்ள வேண்டியுள்ளது. அல்லாது தூய இலக்கியம் மட்டுமே என்ற நிலை எடுத்தால் சரக்கடித்து விட்டு வந்து
சச்சரவு இடுபவர்களையே சந்திக்க வேண்டி வருகிறது.

5:14 AM  
Blogger Thangamani மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

6:08 AM  
Blogger Thangamani மொழிந்தது...

Thanks Ravi for the link.

6:09 AM  
Blogger Vaa.Manikandan மொழிந்தது...

//தன் கருத்துக்களைநிலை நிறுத்த ஜெயமோகன் செய்யும் இழிவான முயற்சி இது//

இப்படி நீங்கள் எண்ணுவதுதான் இழிவானது. ஒரு நல்ல படைப்பாளி குறித்து எழுத யாருக்காகவும் காத்திருக்கத்தேவயில்லை என்றே நினைக்கிறேன்.எனக்கு சு.ரா பற்றி தெரிந்திருந்தால் நான் கூட எழுதலாம்.

11:16 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

Mr.Manikandan
He has written about Su.Raa
before. Where is the need to
rush to the market with a book
now.Why this book is released
within 60 days of his death
and that too with so much
publicity. Is this not an attempt to cash in on the attention Su.Raa
got posthumously. And for the past few years Jayamohan has been villifying Su.Raa questioning his
integrity.When such a person writes
a book in such a haste i have every
reason to criticise and condemn it.

11:28 AM  
Blogger Narain மொழிந்தது...

நச்!!

ஜெ.மோகன் பற்றிய என்னுடைய அபிப்ராயங்கள் அனைத்துமே எதிர்மறையானவை. ஒவ்வொரு காலக்கட்டத்திலும், அதனை ஜெ.மோகன் நிருபித்து என் எண்ணத்தினை பலப்படுத்தியிருக்கிறார். இப்போதும் அவ்வளவே!

சு.ராவின் இறப்பினை விற்பனைப் பொருளாக மாற்றி புத்தகமாக்கும் தந்திரத்தினை ஜெ.மோ அழகாக செய்வார். முத்துவின் கருத்துக்களிலிருந்து மாறுபடுகிறேன். உயிர்மை கட்டுரையினை நானும் படித்தேன். சு.ராவினை புகழ்வதுப் போல, சுயபுகழ்மாலையினை உருவாக்கிக் கொண்டு, தனக்குத் தானே போட்டுக் கொண்டு, சுராவின் "எலக்கிய வாரிசாகும்" முயற்சியினை முழுமையாக செய்திருக்கிறார்.

இப்போது தான் நூலின் அழைப்பிதழைப் பார்த்தேன். நூல் வெளீயிடு - ஜெயகாந்தன். பெற்றுக் கொள்பவர் - பாலு மகேந்திரா [விஆரெஸ் வகையறாக்கள் ;)]

12:55 PM  
Blogger முத்து(தமிழினி) மொழிந்தது...

நாராயண்,

நீங்க சொன்னதைதான் நானும் சொல்றேன்.

அவர் எழுதினதில சு.ரா தந்திரசாலி, இந்திய தத்துவங்களிலேயோ அல்லது
மேலை நாட்டு தத்துவங்களிலேயோ அவருக்கு படிப்பு பத்தாது என்பது போல
பல கருத்துக்களையும் கூறி செல்கிறார்.

தன்னை அங்கங்கே முன்னிலைபடுத்துகிறார். ஆனால் சு.ரா வின் எழுத்துக்களை படித்தவர்கள் இந்த நுண்ணிய அரசியலை புரிந்துக்கொள்ளமுடியும் என்றே நான்
கூறி உள்ளேன்.

11:21 PM  
Anonymous பொற்கோ மொழிந்தது...

மணிகண்டன், ஜெயமோகன் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்வதும் உயிர்மையில் அவர் புத்தகம் அவர் இறந்து சில நாட்களே ஆகியுள்ளன என்கிற courtesy கூட இல்லாமல் வியாபார நோக்கில் எழுதப்பட்டது என்பதும் வெளிப்படையாகத் தெரிபவை. உங்களுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை? ரவி ஸ்ரிநிவாஸ் சந்தேகத்திற்கு இடம் வைக்காமல் தெளிவாகவே எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். ஜெயமோகனைத் தொடர்ந்து கவனியுங்கள். சுவாரசி்யமாக இருக்கும்.

1:27 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

/பிரமீளை நகுலன்பள்ளியைச் சேர்ந்தவராக கருதுவது சரியல்ல என்பது என் கருத்து//

பிரமிளும் , நகுலனும் சுராவின் கவிதைகள் மேல் நல்ல அபிப்ராயம் வைத்திருந்தார்கள் .
ஆனால் சு.ராவின் புளியமரத்தின் கதை மற்றும் ஜே.ஜே வையும் மற்றவர்கள் தலையில்
தூக்கிக் கொண்டு ஆடிய பொழுது பிரமிளும் , நகுலனும் அடத்தூ என்று துப்பினார்கள்.

ஜெயமோகனைக் கூட பிரமிள் திட்டியிருக்கிறார். எனினும் ஜெயமோகனுக்கு
பிரமிளின் ஆரம்ப கால படைப்புகள் மீதும் , விமர்சனக் கட்டுரைகள்
மீதும் மேல் நல்ல அபிப்ராயம் உண்டு . பிரமிளின் ஆரம்ப கால விமர்சனக் கட்டுரைகள்
நல்ல தரம்வாய்ந்தவை .ஆனால் பிரமிள் தனது அந்திம காலத்தில் படைப்போடு ,
படைப்பாளியையும் வசை பாடத்(பெரும்பாலும் ஜாதி துவேஷத்துடன்) தொடங்கிவிட்டார்

******************

சாருநிவேதிதா ஆனந்தவிகடன் நேர்காணலில், ரூசோ சொன்னதாக இந்த பொன்மொழியை
குறிப்பிட்டிருக்கிறார்.

"உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது, ஆனால் அந்தக் கருத்தை
நீங்கள் சொல்கிற உரிமைக்காக என் உயிரையும் கொடுப்பேன்"

இதைச் சொன்னது வால்டேர் அல்லவா ?
I disapprove of what you say, but I will defend to the death your right to
say it. - Voltair

ஆனந்தவிகடன் ஆசிரியருக்கு ஒரு கடிதம் என்று நானும் ஒரு பதிவு போட்டிருக்கலாம் :-)

5:24 AM  
Blogger Thangavel மொழிந்தது...

நானும் முத்துவின் கருத்துடன் உடன்படுகிறேன். ஜெயமோகனின் எழுத்து சு.ரா வினிலிருந்து மாறுபட்டிருக்கிறது. ஜெ.மோ, சு.ரா வின் சிஷ்யர் என்று அறியப்பட்டாலும், அவரை அப்படியே பின்பற்றாமல், தனக்கென ஒரு தனிப்பாணியை வளர்த்துக் கொண்டமை, ஜெ.மோ வின் தனித்துவத்த்கைக் காட்டுகிறது. அதற்காகவே அவரை பாராட்டலாம். ஜெயமோகனின் எழுத்துக்களில் எனக்கு விமரிசனங்கள் உண்டு; ஆயினும், அவரது சு. ரா வைப்பற்றிய உயிர்மைக் கட்டுரை, சு.ராவின் மேல் என்னுடைய ஈடுபாட்டை அதிகரித்தது என்றே சொல்வேன்.

6:13 AM  
Blogger சுரேஷ் கண்ணன் மொழிந்தது...

ரவி,

சாருவின் வழக்கமான பாணியிலான நக்கலும் நையாண்டியுமான அந்தக் கட்டுரையைப் படித்தேன். ஆனால் அவருடன் என்னால் ஒத்துப் போக முடியவில்லை. அவரின் வெளிப்படையாக எழுத்தை எப்போதும் ரசிப்பவன் நான். இருந்தாலும் சாரு முற்றியதொரு 'சினிக்'காக மாறியிருக்கிறாரோ என்று ஐயமாக இருக்கிறது.

சு.ராவின் மறைவை ஒரு எழுத்தாளராக வேண்டாம், ஒரு சக மனிதனின் மறைவாக கூட அணுகாமல் மாறாக வருந்துபவர்களை கூட குரூரமான நகைச்சுவையால் கிண்டலடித்திருப்பது அருவருப்பின் உச்சம். ஒரு மனிதனிடம் பல்வேறு முரண்கள், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவரின் மறைவிற்கு அனுதாபம் தெரிவிப்பதுதான் அடிப்படை நாகரிகம். இதற்காக அவரின் மீதான விமர்சனங்களை விலக்கிக் கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. இருக்கும் வரை திட்டித் தீர்த்து விட்டு ஒருவர் இறந்தவுடனேயே திருவுருவாக்கிவிடுவதுதான் நம்முடைய பழக்கம். அதைக்கூட சாரு செய்ய வேண்டாம். நாகரிகத்தின் சிகரமான பிரான்ஸ் நாட்டில் பிறந்திருக்க விரும்புகிறேன் என்று தன்னை கூறிக் கொள்கிற சாரு இந்த அடிப்படை நாகரிகத்தையாவது பின்பற்றியிருக்கலாம்.

சாரு வைக்கும் இன்னொரு குற்றச்சாட்டு, ஊரில் ஆயிரம் மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்க தமிழ் எழுத்தாளர்கள் அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சு.ராவின் மரணத்திற்கு இப்படியாக மிகப் பெரிய அளவில் எதிர்வினையாற்ற வேண்டுமா? அந்த நிகழ்வையெல்லாம் சாரு எப்படி எதிர்கொண்டிருக்கிறார்? சம்பந்தப்பட்ட இடத்திற்கே சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியிருக்கிறாரா? உழைக்கும் மக்களின் போராட்டத்திற்காக அவரும் தெருவில் இறங்கி இதுவரை போராடியிருக்கிறாரா என்று அறிய விரும்புகிறேன். அவரால் முடிந்ததெல்லாம் ஏதாவது பாரில் இதற்காக ஒரு பெக் அதிகம் குடிக்க முடியும். அவ்வளவுதான்.

அவர் மேலும் சொல்வது: வெள்ளையாக இருக்கிறவர்கள் மட்டும் பொதுவாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள். உளவியல் ரீதியில் இது பெரும்பாலும் உண்மை என்றாலும் எல்லா சமயங்களிலும் இது சாத்தியமில்லை. அரசியல் துறையிலே மக்கள் ஏற்றுக் கொண்ட காமராஜ், அழகான நடிகர்கள் போல் வெள்ளையானவரா? இசைத் துறையிலே மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற இளையராஜா என்ன பெரும் அழகனா? யுவன் இயல்பாக கூறியிருக்கிற கமெண்ட்டை கூட சாரு பெரிதுபடுத்தும் போது அவரைக் கண்டால் எனக்கு பரிதாபமாக இருக்கிறது.

ஜெயமோகன் எழுதியிருக்கிற சு.ரா நினைவுகள் குறித்தான நூல் வெளியீடு குறித்து எனக்கும் நெருடல் ஏற்பட்டிருக்கிறது. உடனே இது நிகழ்வதுதான் இந்த நெருடலை ஏற்படுத்துகிறது என்று நினைக்கிறேன். ஒரு எழுத்தாளனிடம் நெருக்கமாக பழகியவர் என்ற முறையில் ஜெயமோகன் நூல் எழுதி வெளியிடுவதில் எவ்வித தப்பிதமும் இருக்க முடியாது. சு.ரா கூட அவருடன் நெருக்கமாக பழகிய நண்பர்கள் குறித்து நினைவோடை புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.

நீங்களே குறிப்பிட்டது போல பெரும்பாலான எழுத்தாளர்கள் இணைந்து ஒரு நினைவு மலர் கொண்டு வருவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று நானும் நம்புகிறேன். சு.ராவின் இலக்கியப்பயணமும் இம்மாதிரியான புதுமைப்பித்தனின் நினைவு மலரோடுதான் தொடங்கியது.


- Suresh Kannan

6:19 AM  
Blogger முத்து(தமிழினி) மொழிந்தது...

என் மனதில் ஏற்பட்ட அதே எண்ணங்களை சாருவை பற்றி சுரேஷ் கண்ணன் குறிப்பிட்டு விட்டார்.

தன்னை பற்றி சுந்தர ராமசாமி நல்லவிதமாக கூறவில்லை என்பதும் அவரின்
கோபத்திற்கு ஒரு காரணம்.

6:31 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

சு.ரா பற்றி நான் வலைப்பதிவில் எழுதியிருக்கிறேன்.எனவே சாருவின் கருத்துக்களுடன் நான் மாறுபடுவதை மீண்டும் சுட்டிக்காட்டத் தேவையில்லை என்று நினைக்கிறேன். பிரச்சினை என்னவெனில் சாரு தான் ஏதோ வேறொரு தளத்தில் இருப்பதாக நினைத்துக்கொண்டு பிற எழுத்தாளர்களை மதிப்பிட முயல்கிறார். எல்லா எழுத்தாளர்களும் எல்லா விஷயங்கள் குறித்தும் எழுத வேண்டும், கருத்து சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல.ஒரு விதத்தில் பார்த்தால் எழுதுவது,படிப்பதை விட முக்கியமான பணிகள் இருக்கின்றன என்று சொல்லிக்கொண்டு அனைவரும் களப்பணி,திட்டமிடலில் ஈடுபட வேண்டும்.தமிழ் சமூகத்தில் நிறம் குறித்து சாரு
கூறுவது சரியன்று. சு.ராவின் அழகை வர்ணிப்பது அவருக்கு எரிச்சல் தந்திருக்கும். அத்தகைய
வர்ணனைகள் தேவையில்லை என்பது என் கருத்து.ரஜினிகாந்தை தமிழ் சமூகம் எங்கு வைத்திருக்கிறது.
தமிழ் சிறுபத்திரிகை சூழலில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் அபிப்பிராயங்கள் உதிர்க்கப்படுகின்றன.இத்தகைய அபிப்பிராயங்களுக்கு வாசகர்கள் முக்கியத்துவம் கொடுக்கத்
தேவையில்லை.

7:14 AM  
Anonymous பொற்கோ மொழிந்தது...

"அவரது சு. ரா வைப்பற்றிய உயிர்மைக் கட்டுரை, சு.ராவின் மேல் என்னுடைய ஈடுபாட்டை அதிகரித்தது என்றே சொல்வேன்."

ஓ! அந்தக் கட்டுரை உங்களுக்கு சுத்தமாகப் புரியவில்லையா?!

7:55 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

ayyaa

commentil Quote seythu ezuthappadum paguthi sariyaagath theriya maattuthu

muthalil athai thiruththungkaL

padippathaRku kastamaaga irukkiRathu

8:30 AM  
Blogger டிசே தமிழன் மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

9:58 AM  
Blogger டிசே தமிழன் மொழிந்தது...

ஜெயமோகன் எல்லா அ-புனைவுகளிலும் தன்னையோ தனது படைப்புக்களையோ எந்த ஒரு புள்ளியிலாவது நிலைநிறுத்தாமல் விடுவதேயில்லை (உதாரணம், 'நாவல்' பற்றி எழுதிய நூல் மற்றும் இலக்கியவாதிகள் பற்றி எழுதிய சில புத்தகங்கள்). அண்மைக்காலங்களில் ஜெயமோகனுக்கு இருந்த முக்கிய பிரச்சினை, தன்னை சு.ராவுக்கு மேலாக நிறுவுவது. ஆனால் அதேசமயம் சு.ராவிற்கு எதிரான திசையில் (சு.ராவின் நவீனத்துப் படைப்பு மனதுக்குப்பின் சம்பிரதாயமான , மரபு சார்ந்த இன்னொரு மனது ஊசலாடிக்கொண்டிருப்பதைப் போல) தன்னை நிலைநிறுத்துவ்து கடினம் என்பது தெளிவாக ஜெயமோகனுக்குத் தெரிந்ததால், சு.ராவை வைத்துக்கொண்டே தன்னை நிலைநிறுத்தவேண்டிய நிலை இருந்தது. அவரது, சு.ராவை விமர்சிக்கும் கட்டுரைகளைக் கவனமாகப்பார்க்கும் ஒருவர், சு.ரா தனக்கு குரு என்பதை மறக்காமல் ஜெயமோகன் ஒவ்வொருபொழுதும் குறிப்பிடுவதை அறிந்துகொள்ளலாம்

எனவே சு.ராவைப் பற்றி ஜெயமோகன் புத்தகம் ஒன்று வெளியிடுவதும் தன்னைச் சு.ராவுக்கு மேலாக நிலைநிறுத்த முயல்வதும் புரிதுகொள்ளக்கூடியதே. இதற்கு முன்பு இருந்தமாதிரி, ஜெயமோகனின் அபத்தக் கருத்துக்களை நிராகரிக்க சுராவின் வெளி இல்லை என்பதை மட்டும் புரிந்துகொண்டு ஒருமுறை அந்த நூலைவாசிக்கலாம் போலத்தான் எனக்குத் தோன்றுகின்றது (உயிர்மைக்கட்டுரை இன்னும் நான் வாசிக்கவில்லை). அண்மையில் கூட ஏதோ ஒரு பத்திரிகையில் வந்த ஜெயமோகனின் கட்டுரைக்கு சு.ரா அமெரிக்காவில் இருந்து ஒரு மறுப்புக்கடிதம் எழுதியிருந்ததை வாசித்தது நினைவு.

ஜெயமோகன் நாற்பது பக்கங்களில் கட்டுரை எழுதுவதோ நூல் எழுதுவதோ பெரிய பிரச்சினையில்லை. சாரு குறிப்பிட்டமாதிரி எனக்குத் தெரிந்த சிலருக்கும் அவர்கள் சின்னதாய்க் கடிதம்போட்டால்கூட, எண்ணற்ற பக்கங்களில் எழுதும் பழக்கம் ஜெயமோகனுக்கு இருக்கிறது என்பது அறிவேன்; அது தவறும் இல்லை. ஆனால் இதே ஜெயமோகன் தான், தி.க.சி, வல்லிக்கண்ணன் போன்றவர்களை போஸ்ட்கார்ட் ஆசாமிகள் என்று கிண்டலததை மறந்துவிடக்கூடாது. போஸ்ட் கார்ட்டில் பாராட்டி எழுதி புதியவர்களை உற்சாகப்படுத்டுவதில் என்ன தவறை ஜெயமோகன் கண்டுபிடித்தாரோ தெரியாது. அவர் அதைக் கிண்டலடித்தால், சாரு ஜெயமோகனின் முடிவிலிப்பகங்களில் எழுதும் கடிதங்களை கிண்டலடித்தாலும் ஜெயமோகன்ன் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஜெயமோகன், சு.ராவை இறுதிச்சடங்கில் பிராமணர் மாதிரி வீட்டில் கிடத்தவில்லை (நன்றி: மரத்தின் பதிவு) என்று புளங்காகிதம் அடைகின்றார். நானறிந்தவரையில் இயன்றவரை சு.ரா, பிராமணிய அடையாளங்களின்றித்தான் வாழ்ந்தவர் என்றுதான் அறிந்துவைத்திருக்கின்றேன். எனவே இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது? குரு என்று சு.ராவைப் போற்றுபவருக்கு, குருவோடு பல வருடங்கள் கழித்தவருக்கு இது கூடத் தெரியாதா?
.....
பழைய பிணக்குகளை மறந்துவிட்டு, உயிர்மையில் உறவாடுவதைப்போல, விரைவில் காலச்சுவடுடன் ஜெயமோகன் சமரச உடன்படிக்கைக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
...
கடிதங்கள் எழுதும்போது கூடாத விசயங்களை முதலில் எழுதி இறுதியில் நல்ல விசயங்களைக் எழுதவேண்டும் என்று சொல்வார்கள். அதுபோல, நேற்றிரவு பார்த்த 'கஸ்தூரி மான்' படத்துக்கு ஜெயமோகன் தான் வசனம் எழுதியிருக்கின்றார். எஸ்.ரா போன்றவர்கள் சறுக்கிய இடத்தில் ஜெயமோகன் வெற்றி பெற்றிருப்பதாகவே எனக்குத் தோன்றியது. முக்கியமாய் அதிகம் ஆங்கிலச்சொற்றொடர்களைப் பயன்படுத்தாமல் இயன்றவரை தமிழில் உரையாடலை ஜெயமோகன் அமைத்தற்குப் பாராட்டலாம் :-).

p.s: I have removed my above comment to correct spelling mistakes. Thankx.

10:06 AM  

Post a Comment

<< முகப்பு