கருத்து இணையதளமும், இந்தியாவின் வரைபடமும்

கருத்து என்ற அமைப்பு புதிதாகத் துவங்கப்பட்டுள்ளது. அவர்களது இணையதளத்தில் உள்ளஇந்தியாவின் வரைபடம் பிழையானது.

உதாரணமாக மத்திய பிரதேசம் , மத்திய பிரதேசம்,சட்டிஸ்கார் என்று இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவ்வரைப்படத்தில் மத்திய பிரதேசம் ஒரே மாநிலமாக காட்டப்பட்டுள்ளது, வட கிழக்கில் உள்ள மாநிலங்கள்இவ்வரைப்படத்தில் எங்கே இருக்கின்றன என்பது தெளிவாக இல்லை,அந்தமான, நிக்கோபார்தீவுகள் வரைபடத்தில் இல்லை. புவியியல் ரீதியாகவும் இவ்வரைபடம் தவறான சித்திரத்தினைத்தருகிறது.கருத்து சுதந்திரம் என்பது தவறான வரைப்படத்தினை இணையதளத்தில் இடுவது என்பதையும் உள்ளடக்கியது என்று நினைத்து விட்டார்கள் போலும். மத்திய அமைச்சர் ஒருவரின் மகன்நிறுவனராக உள்ள ஒரு அமைப்பின் இணையதளத்தில் இப்படி ஒரு பிழையான வரைபடம்இடம் பெறுவது தவறான முன்னுதாரணமாக அமையும்.

வெளிநாட்டுப் பத்திரிகைகள், வெளியீடுகளில் இந்தியாவின் வரைபடம் தவறாக தரப்பட்டிருந்தால் மத்திய அரசு அதை ஆட்சேபிக்கும் அல்லது அதை பறிமுதல் செய்யும் அல்லது இந்தியாவில்பிழையான வரைபடத்துடன் விற்க அனுமதிக்காது. ஒரு முறை ஐ. நாவின் அமைப்பு ஒன்று வெளியிட்டஒரு அறிக்கையினை ஒட்டி ஒரு விவாத நிகழச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது,அதில் கருத்துரைவழங்க அழைக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். நான் அந்த வெளியீட்டினைப் பார்க்கவில்லை. அது அன்றுதான் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. அக்கூட்டத்தில் பேசியவர்கள் கூறியது குறித்து என் கருத்துக்களைக் கூறினேன். அக்கூட்டத்தில்இந்திய அரசின் உயர் அலுவலர்கள் சிலர் கலந்து கொள்வதாகக் இருந்தது.ஆனால் அவர்கள் வரவில்லை. கூட்டம் முடிந்த பின் ஏன் அவர்கள் வரவில்லை என்று கேட்ட போது அவ்வறிக்கையில்உள்ள இந்தியாவின் வரைபடம் பிழையாக இருந்ததால் அவர்கள் கூட்டத்தில் பங்கேற்க்கவில்லைஎன்று கூறினார்கள். அவ்வறிக்கையை நான் முன்னரே பார்த்திருந்தால் கூட்டத்தில் அதை தெரிவித்து வெளிநடப்பு செய்திருப்பேன்.

எனவே ஒரு தேசத்தின் வரைபடத்தினை இணையதளத்திலோ அல்லது வெளியீடுகளிலோ இடும் போது மிகுந்த கவனம் தேவை. ஆனால் கருத்து இணையதளத்தில் இக்கவனம் வெளிப்படவில்லை.
இதனைச் சுட்டிக்காட்டி அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். சரியான வரைப்படத்தினை விரைவில் இடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

5 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

karuthu kandasamys of the world
unite

4:26 PM  
Blogger Voice on Wings மொழிந்தது...

//கூட்டம் முடிந்த பின் ஏன் அவர்கள் வரவில்லை என்று கேட்ட போது அவ்வறிக்கையில்உள்ள இந்தியாவின் வரைபடம் பிழையாக இருந்ததால் அவர்கள் கூட்டத்தில் பங்கேற்க்கவில்லைஎன்று கூறினார்கள். அவ்வறிக்கையை நான் முன்னரே பார்த்திருந்தால் கூட்டத்தில் அதை தெரிவித்து வெளிநடப்பு செய்திருப்பேன்.//

I find it childish when Indian authorities insist that the PoK region be shown as a part of India in maps, when the whole world knows that it is not so. I'm not sure if that was the flaw which prompted the Indian authorities to boycott the above occassion (whose action you have also supported).

7:58 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

10:34 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

Comments will be read and removed if they are not relevant to the topic or are abusive in nature.

1:26 PM  
Blogger Srimangai(K.Sudhakar) மொழிந்தது...

தேச வரைபடம் தவறாக இருப்பதைக் கண்டித்து அடையாள எதிர்ப்பு தெரிவிப்பது முற்றிலும் சரியானதே. வேறு நாடுகளின் தேச வரைபடத்தில் ஏதாவது பிழை வரட்டும்... என்னமாய் மக்கள் குதிக்கிறார்கள் என்பதை நம்மக்கள் உணர்வர். pok நமது ஆதிக்கத்தில் இல்லை என்பதால் நமது உரிமையே இல்லை என ஆகிவிடுமா? காஷ்மீரப் பிரச்சனை ஒரு பிராந்தியப் பிரச்சனையா?
இதுபோல ஆசிப் மீரானின் வலைப்பதிவில் வைத்திருக்கும் counter காட்டும் தேச வரைபடத்தில் p.o.k துண்டாடப்பட்டிருக்கிறது என்பதை அவருக்கும் சொன்னேன். அவரது தவறு இல்லை எனினும், மைக்ரோசாப்ட் நிறுவனம் இதுபோல வரைபடம் இட்டதில் காஷ்மீர் தவறாக இருப்பதைக் காட்டியபோது, மரியாதைக்கு அது திருத்திக்கொண்டது என ஞாபகம்.
அன்புடன்
க.சுதாகர்

6:01 AM  

Post a Comment

<< முகப்பு